Posted in இலங்கை செய்திகள்

ஒரே நேரத்தில் 20ஜோடிகளுக்குத் திருமணம்

ஒரே நேரத்தில் 20ஜோடிகளுக்குத் திருமணம்

ஒரே நேரத்தில் 20ஜோடிகளுக்குத் திருமணம் ஐக்கிய அரபு அமீரகத்தின் மறைந்த ஸ்தாபகத் தலைவர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான்

நினைவாக, ஒரே நேரத்தில் 20 ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைக்கும் நிகழ்வு புத்தளம், பாலாவி, நாகவில்லு

வைட் திருமண மண்டபத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி சலீம் மர்சூப் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் வேண்டுகோளின் பேரில், ஓ.எச்.ஆர்.டி (OHRD) அமைப்பு

ஏற்பாடு செய்த இந்த நிகழ்வுக்கு, ஷேக் முஹம்மது பதா அலி அப்துல்லா அல் காஜா அனுசரணை வழங்கினார்.

இந்நிகழ்வின் முக்கிய விருந்தினராக இலங்கைக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நாசர் அல் அமரி , பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கலந்துகொண்டனர்.

சிறப்பு விருந்தினர்களாக, பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எம். இல்லியாஸ், வர்த்தகப் பிரமுகர்களான டி.எல்.எம். நவாஸ், ஜவ்பர் அப்துல் சத்தார், முஹம்மத் இக்பால் சத்தார், இப்திகார் சாதிக், அமீன் பைலா,

பாராளுமன்ற உறுப்பினர் முத்து வாப்பா, புத்தளம் நகர சபை முதல்வர், மற்றும் வைத்தியர் மரீனா தாஹா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

திருமணத் தம்பதிகளுக்கான உதவிகள் திருமணச் செலவுகளுடன் சேர்த்து, ஒவ்வொரு தம்பதியினருக்கும் மூன்று இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

கொழும்பு மேமன் சங்க வர்த்தகப் பிரமுகர்கள், தொழிலதிபர் டி.எல்.எம். நவாஸ், மற்றும் ரிஷாத் பதியுதீனின் பாரியார் உட்படப் பலரும் தம்பதிகளுக்குப் பரிசுகளை வழங்கினர்.

திருமணப் பதிவாளர், தம்பதிகளின் குடும்பத்தினர்

இந்நிகழ்வில் 20 உலமாக்கள், திருமணப் பதிவாளர், தம்பதிகளின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

கலாநிதி அஷ்ஷெய்க் எம்.எல்.எம். முபாரக் மதனியின் திருமணத் தம்பதிகளுக்கான மார்க்கச் சொற்பொழிவும் அல்ஹாபிழ் ரியாஸின் சிறப்புப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

இந்த நிகழ்வின் ஏற்பாட்டுச் செயலாளராக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ அமைப்பின் முன்னாள் தேசியத் தலைவர் சஹீட் எம். ரிஸ்மி செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

கை நடுங்கியதால் ஸ்டொப் ஆகிய கல்யாணம்

கல்யாணத்தின் போது குங்குமம் வைக்கையில் கை நடுங்கியதால் உடனே நிறுத்தப்பட்ட திருமணத்தால் பரபரப்பாகியுள்ளது திருமண நிகழ்வு.

இந்தியா ,பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் நடந்த ஒரு ஆச்சரியமான சம்பவத்தில்,

குங்குமம் வைக்கும் விழாவின் போது மணமகனின் கை நடுங்குவதை மணமகள் கவனித்ததால் திருமணம் ரத்து செய்யப்பட்டது.

மணமகன் மனநிலை சரியில்லாதவர் என்று கூறி, மணமகள் திருமணத்தை தொடர மறுத்துவிட்டார்.

இந்த சம்பவம் பபுவா பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கத்ரா கிராமத்தில் நடந்தது.

செனாரி பகுதியில் உள்ள பகதி கிராமத்தைச் சேர்ந்த ஷிவ்பச்சன் பிந்தின் மகன் ஹீரா குமார் என்ற மணமகன் தனது திருமண ஊர்வலத்துடன் வந்தார், மேலும் அனைத்து ஆரம்ப சடங்குகளும் நிறைவடைந்தன.

இருப்பினும், முக்கியமான குங்குமம் வைக்கும் சடங்கின் போது, ​​மணமகனின் கை நடுங்கியதாகவும், அவரால் குங்குமத்தை சரியாகப் பூச முடியவில்லை என்றும் மணமகள் கூறினார்.

மணமகள் உடனடியாக திருமணத்திலிருந்து பின்வாங்கி, மணமகன் “பைத்தியம்” போல் இருப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள முடியாது என்றும் கூறினார்.

நிலைமை விரைவாக மோசமடைந்து உள்ளூர் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இரு குடும்பத்தினரும் பபுவா பொலிஸ் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. மணமகள் தனது முடிவில் உறுதியாக இருந்தார். இறுதியில், மணமகன் மணமகள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருந்தது.

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு
Posted in இலங்கை செய்திகள்

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு

ரணிலுக்கும் அநுரவுக்கும் அரசியல் திருமணம்! இன்று தேனிலவு ,நாட்டில் தற்பொழுது வன்முறையும் மிலேச்சத்தனமும் பயங்கரவாதமும் தலை தூக்கிக் கொண்டிருக்கின்றது. ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற வன்முறை காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டிருக்கின்றது.

பல சமூக அமைப்புக்களின் கலந்துரையாடல்கள் இடம் பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இந்த மிலேட்சத்தனமான தாக்குதல் இடம் பெற்றிருக்கின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரமும், தாம் விரும்பிய முறையில் அரசியல் செய்யவும் சுதந்திரம் இருக்கின்றது. இங்கு உருவெடுக்கின்ற கொடிய பாசிச வாதத்திற்கும், வன்முறைக்கும், மிலேட்சத்தனத்திற்கும் மக்கள் ஆதரவு

அளிக்கின்றார்களா என்று கேள்வி எழுப்புகின்றோம். பொது மக்களின் யுகத்திற்காக எந்த சந்தேகமும் இன்றி ஐக்கிய மக்கள் சக்திக்கு உந்து சக்தியைப் பெற்று தருமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 49 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 13 ஆம் திகதி தெபரவெவ நகரில் மிக

வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்பொழுது நாட்டை தீ மூட்டிய குழுவும், வங்குரோத்தடையைச் செய்த குழுவுக்கு பாதுகாப்பு வழங்குகின்றவர்களும் ஒன்றாக இணைந்துள்ளார்கள்.

ரணிலும் அநுரவும் அரசியல் திருமணம் செய்து கொண்டு இன்று தேனிலவை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தேனிலவுக் கொண்டாட்டத்தை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி விவசாய கடனை இரத்து செய்வதால் அநுரவும் ரணிலும் அதற்கு எதிராக ஒன்றிணைந்து இருக்கின்றார்கள்.

குறைந்த விலையில் உரம் வழங்குவதற்கும், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும், எரிபொருள் நிவாரணம் வழங்கப்படுவதற்கும், இவர்கள்

எதிராக இருக்கின்றனமையாலே தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு நாட்டை கட்டியெழுப்புவதற்கு எதிராக ரணிலும் அநுரவும் தற்பொழுது ஒன்றாக இணைந்து கொண்டிருக்கின்றார்கள்.

மக்கள் தொடர்ந்து அசௌகரியத்துடன் இருப்பதை அவர்கள் விரும்புகின்றார்கள்.

வேளாண்மை விவசாயிகளையும், பால் பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்கு இவர்கள் எதிராக இருக்கின்றார்கள் என
எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே இந்த ரணில் அநுர ஆகியோரின் தந்திரக் கூட்டைத் தோல்வி அடையச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகின்ற, ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொதுமக்களுடைய

யுகத்திற்கு பலத்தைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இன, மத, குல, பேதங்களை மறந்து ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற அனைவரையும் ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு விடுத்தார்.

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்
Posted in இலங்கை செய்திகள்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம்

பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் ,பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளின் குடும்பத்திற்கு மகளின் தந்தை கடும் அழுத்தத்தை கொடுத்த சம்பவம் ஒன்று பன்னிபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

திருமணத்தின் பின்னர் இருவரும் பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் உள்ள இளைஞனின் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதன்போது, தந்தையின் தொடர் அழுத்தங்களை தாங்க முடியாமல் இருவரும் துபாய் சென்றுள்ளனர்.

பெண்ணின் தந்தை மிரட்டல்

அந்த நாட்டுக்கும் வந்து பெண்ணின் தந்தை தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வந்ததாக அவர்கள் கூறுகின்றனர்.

பின்னர் இந்த இளம் தம்பதியினர் மீண்டும் நாட்டுக்கு வந்து வீரமாவத்தை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்தப் பின்னணியில் கடந்த 29ஆம் திகதி பிற்பகல் பன்னிப்பிட்டியவில் உள்ள இளைஞனின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் எனக் கூறிக்கொள்ளும் மூவர் வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போது வீட்டில் இருந்த தாயின் கையடக்கத் தொலைபேசியை சோதனையிட்டதாகவும், தாயாரை அச்சுறுத்தியதாகவும், அந்த இளைஞனின்

புகைப்படங்கள் சிலவற்றை தமது அலைபேசிக்கு அனுப்பி வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

அன்று பிற்பகல், அந்த இளைஞனின் தந்தை, அதிகாரிகள் என்று கூறிக்கொண்டவர்களின் தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பின்னர், மகளின் தந்தைக்கு சொந்தமானது என கூறப்படும் தலவத்துகொடையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மூவரும் மது அருந்தியுள்ளனர்.

காரில் தப்பிச் சென்ற அதிகாரிகள்

பின்னர் மூன்று அதிகாரிகளில் இருவர் ஹோட்டல் வளாகத்தில் மறைந்திருந்த நிலையில், மற்றைய நபர் காரில் தப்பிச் செல்லும்போது பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்டு மஹரகம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொண்ட குறித்த சந்தேகநபர் துறைமுகப் பணியாளர் எனவும், மற்றைய இருவரும்

பயங்கரவாத விசாரணைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
Posted in உலக செய்திகள்

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது ஒவ்வொரு மதங்களுக்கும் மத சடங்குகள் முக்கியமானவை. திருமணத்தின் போது, இந்த சடங்குகள் முக்கியமாக கடைப்பிடிக்கப்படும். சிலர், சடங்குகளைச் செய்யாது, பதிவு திருமணத்துடன் நிறைவு

செய்துகொள்கின்றனர். எனினும், சமய சடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருமணம் செல்லாது

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்து முறைப்படி திருமண சடங்குகள் எதுவும்

நடைபெறவில்லை எனவும் திருமண சான்றிதழ் பெற வேண்டி சிறிய விழா ஏற்பாடு செய்து உத்திரப் பிரதேச சட்டப்படி சான்றிதழ் பெற்றோம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்து திருமண சட்டங்களின் படி நடத்தப்படாத திருமணங்கள் குறித்தும், அதனை ஒழுங்குபடுத்த கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

இந்த வழக்குகள் மீதான விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான பல்வேறு உத்தரவுளை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு வெளியிட்டுள்ளது. இந்து திருமணத்தில் அக்னி சாட்சியாக நடைமுறையில் இருக்கும் சடங்குகள் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும் எனவும் இந்து திருமணம் சட்டம் பிரிவு 5இன் படி, திருமண விழா நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பிரிவு 7இன் படி இந்த சடங்குகள் நடைபெறவில்லை என்றால் திருமணம் செல்லாது. பிரிவு 8இன் படி இந்துமுறைப்படி சான்றிதழ் பெறுவது எளிது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அக்னி சாட்சி போன்ற இந்து சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அந்த திருமணம் இந்து திருமணமாக கருதப்படாது.

தேவையான சடங்குகள் செய்யப்படாத நிலையில், அது இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரு திருமணமாக அதனை கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமண விதிகளை பின்பற்றாமல்,

எந்த மதமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உரிய திருமண விதிகளை பின்பற்றாமல், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முடியாது எனவும் ஆண் பெண் என இருவரும்,

கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், திருமண சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும்படி திருமணவிழாவை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உறவை ஏற்படுத்தி, அவர்களை குடும்பமாக திகழ வைக்கும் ஒரு முக்கிய நிகழ்வு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 7 இன் கீழ், மத சடங்குகளுக்கு ஒரு சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி திருமண சான்றிதழ் வேண்டும் என்றால் அவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

Posted in இந்தியா செய்திகள்

இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்

இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்

india ;இந்தியாவில் 24 வயதுடைய Kshama Bindu என்ற இளம் பெண் தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ள விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இயல்பாக திருமணம் என்றால் ஆண் பெண் இணைவது திருமணமாகும் .

அது கடந்து ஓரினத் திருமணம் பெண்ணும் பெண்ணும் அல்லது ஆணும் ஆணும் செய்து கொள்ளவர்கள் .

பெண்ணை திருமணம் செய்ய வந்த பெண் கைது

பள்ளி மாணவனை அழைத்து சென்று ரகசிய திருமணம் செய்த ஆசிரியை

ஆனால் இங்கே யாவற்றுக்கும் முரணாக தன்னை தானே திருமணம் செய்து கொண்டுள்ளாராம் இந்த பெண் .

இந்தியாவில் தன்னை தானே திருமணம்  செய்த  பெண்
இந்தியாவில் தன்னை தானே திருமணம் செய்த பெண்

இது என்னங்கடா என்று நீங்கள் மட்டும் அல்ல இந்த உலகமே விசித்திரமாக பார்க்கிறது .


இந்த பெண் திருமணத்தை கேள்வியுற்ற நெட்டிசன்கள் கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர் .

என்னத்த சொல்ல எல்லாம் தனிமனித சுதந்திரம் சாமிகளா .கேள்வி கேட்கப்படாது

Posted in சினிமா

நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி

நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி

தமிழ் சினிமாவின் முன்னணி திரைபிரபலமான ஆதி-நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது.

நிக்கி கல்ராணியை திருமணம் செய்தார் ஆதி
ஆதி – நிக்கி கல்ராணி


தமிழில் டார்லிங் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து யாகாவா ராயினும் நாகாக்க, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்,

நெருப்புடா, கலகலப்பு-2, சார்லி சாப்ளின் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். நிக்கி கல்ராணியும், நடிகர் ஆதியும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் வந்தன.

இருவரும் யாகவா ராயினும் நாகாக்க படத்தில் இணைந்து நடித்தபோது காதல் வயபட்டதாக கூறப்பட்டது. இதனை அவர்கள் மறுக்கவில்லை.

ஆதி – நிக்கி கல்ராணி

ஆதி வீட்டில் நடந்த குடும்ப நிகழ்ச்சிகளில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகி நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. மிருகம் படத்தில் ஆதி

அறிமுகமாகி ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம், யு டர்ன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார்.

நிக்கி கல்ராணிக்கும், ஆதிக்கும் திருமண ஏற்பாடுகள் நடப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி பிறகு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக நிக்கி கல்ராணி கூறியிருந்தார்.

அதுகுறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில், ஆதி நிக்கி கல்ராணி ஜோடியின் திருமணம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் ஆர்யா – சாயிஷா, மெட்ரோ சிரீஷ் என ஏராளமான திரைபிரபலங்கள்

கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது

பெண்ணை திருமணம் செய்ய அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் கைது

இலங்கை பொலனறுவை பகுதியில் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்ள காவல்துறை

அதிகாரியாக நடித்த இராணுவ சிப்பாய் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்

கைதானவர் தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார்

    Posted in Uncategorized இலங்கை செய்திகள்

    ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்

    ஊரடங்கில் திருமணம் -திருமண தம்பதிகளை தூக்கி சென்று அடைத்த பொலிஸ்


    மதுரங்குளி பிரதேசத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறி திருமணம் நடத்திய

    மணமக்கள் உள்ளிட்ட 28 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்று முந்தல் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்தது.

    ஊரடங்கு உத்தரவின் போது, ​​மதுரங்குளிய – கனமுல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஊரடங்கு திருமணம் நடைபெறுவதாக பொது சுகாதார பரிசோதகர்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

    அந்த தகவலின் படி, பொது சுகாதார பரிசோதகர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்த போது ஒரு

    குழுவினர் தப்பி ஓடியுள்ளனர். அந்த இடத்தில் இருந்த 09 குடும்பங்களைச் சேர்ந்த 28 நபர்களை அந்த வீட்டில் தனிமைப்படுத்த பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

      Posted in Uncategorized

      சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்

      சிறுமியை கடத்தி திருமணம் செய்த வாலிபர்

      கோவையை அடுத்த சூலூர் நீலாம்பூர் பகுதியில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 21) என்பவர் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார். அவருடன் அவரது நண்பரான

      தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பூபதியும் தனியே வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வந்துள்ளார்.

      இந்த நிலையில் மணிகண்டனுக்கு, அதே பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர், அவரை கண்டித்துள்ளனர். எனவே

      மணிகண்டன் சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தர்மபுரிக்கு

      மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்று திருமணம் செய்துள்ளார். இதற்கு பூபதி தனது மோட்டார் சைக்கிளை கொடுத்து உதவியுள்ளார்.

      இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் சூலூர் பொலிஸார் தர்மபுரிக்கு சென்று சிறுமியை மீட்டனர். மணிகண்டனை மடக்கி பிடித்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

      இதை அடுத்து திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற

      மணிகண்டன் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பூபதி ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து பொலிஸார் கைது செய்தனர்.

        Posted in மருத்துவம்

        திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்வது இதுவாம்

        திருமணம் நடப்பதற்கு முன்பு பெண்கள் இதனை உடனே செய்ய வேண்டுமாம் .அப்படி செய்தால் அதற்கு நல்லதாம்

        நன்றாக சாப்பிடுவது, ஓய்வு என்ற பெயரில் அதிக நேரம் தூங்குவது, வேலை என்று வந்துவிட்டால் ஓய்வே எடுக்காமல் கடுமையாக உழைப்பது போன்றவை இளம்பெண்களின்

        வழக்கமாகிக்கொண்டிருக்கிறது. அதனால் அவர்கள் பெரும்பாலும் தங்கள் உடல் பராமரிப்பு பற்றி நினைத்துப்பார்ப்பதே இல்லை. ஆனால் திருமணம் நிச்சயமாகும்போது அவர்களுக்கு தங்கள்

        உடலை பற்றிய ஆர்வம் அதிகமாக வந்துவிடுகிறது. அப்போது அவர்கள் உடல் எடை அதிகமாக இருந்தால் ரொம்பவே கவலைப்படுகிறார்கள். ஜிம் எங்கே இருக்கிறது என்று

        தேடிப்போகிறார்கள். உணவுக் கட்டுப்பாட்டு நிபுணர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும், உடலை பராமரிக்கவும் திடீர் அக்கறை செலுத்துகிறார்கள்.

        திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டால், அடுத்து திருமணத்திற்கு மூன்றில் இருந்து ஆறு மாதங்கள் வரை இடைவேளை கிடைக்கிறது. அந்த காலகட்டத்தை அவர்கள் முழுமையாக உடலை பராமரிக்க

        ஒதுக்கிக்கொள்ளவேண்டும். முதலில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ளவேண்டும். அதற்காக பட்டினி கிடந்துவிடக்கூடாது. உடல் எடையை குறைப்பதற்காக பட்டினி கிடந்தவர்களின் உடல்

        பல்வேறு மோசமான பின்விளைவுகளை சந்தித்திருக்கிறது. பட்டினி கிடந்தால் தசை நெகிழ்ந்து, சருமமும் சுருங்கிவிடும். அதனால்

        முறையான உணவுக் கட்டுப்பாட்டோடு உடலுக்கு தேவையான சரியான உடற்பயிற்சியையும் மேற்கொள்ளவேண்டும்.

        திருமணத்திற்கு தயாராகும் இளம்பெண்கள் ஸ்டிரன்த்தனிங் டிரைனிங், கார்டியோ எக்ஸசைஸ் ஆகிய இருவகை பயிற்சிகளை பெறவேண்டும். ஸ்டிரன்த்தனிங் என்பது தசைகளை

        வலுப்படுத்துவதற்கான பயிற்சியாகும். கார்டியோ பயிற்சி என்பது உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைப்பதற்கானதாகும். ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல்

        போன்றவை கார்டியோ வகை பயிற்சிகள். உடற்பயிற்சி நிபுணர் ஒருவரின் ஆலோசனையோடு தினமும் இதனை செய்துவந்தால்

        உடலில் இருக்கும் கொழுப்பு குறைந்து, கட்டுடல் உருவாகும். உடலின் தேவைக்கு தக்கபடி இருவகை பயிற்சிகளையும் பெண்கள் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

        சில நாட்கள் இந்த பயிற்சியை பெற்றதும் பெண்களுக்குள் சோம்பேறித்தனம் எட்டிப்பார்க்கும். ‘இன்று வேண்டாம் நாளை

        உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்ற எண்ணம் தோன்றும். அதை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு அன்றாடம் பயிற்சி செய்தால் எடை குறைவதோடு, உடலும் கட்டுக்கோப்பாக மாறும்.

        ஜிம்முக்கு போய் உடற்பயிற்சியை மேற்கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்றவைகளுக்குரிய கருவிகளை வாங்கி வீட்டிலேவைத்து

        பயிற்சி மேற்கொள்ளலாம். மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் போன்றவைகளையும் செய்யலாம்.

        திருமணம் நிச்சயமான பின்பு மணமகனும், மணமகளும் பிசியாகிவிடுவார்கள். அதனால் அவர்கள் ‘காலை முழுவதும் மற்ற வேலைகள் இருக்கிறது. அதனால் எல்லா வேலைகளையும்

        முடித்துவிட்டு மாலையில் உடற்பயிற்சி செய்துகொள்ளலாம்’ என்று நினைத்து தள்ளிவைத்துவிடக் கூடாது. தள்ளிவைத்து விட்டால் அன்று பயிற்சி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும். புது

        மணத்தம்பதிகளுக்கு ஆரோக்கியம் மிக முக்கியம். அதனால் உடற்பயிற்சியை தள்ளிப்போடவேண்டாம். தினமும்

        அதிகாலையிலே அவர்கள் உடற்பயிற்சியை செய்துமுடித்துவிட வேண்டும். மணப்பெண்ணுக்கு மட்டுமல்ல, மணமகனுக்கும் உடற்பயிற்சி அவசியம்.

        Posted in சினிமா

        திடீர் திருமணம் ஏன்? – நடிகை விளக்கம்

        திடீர் திருமணம் ஏன்? – நடிகை விளக்கம்

        சினிமா உதவி இயக்குனரை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து நடிகை ஆனந்தி விளக்கம் அளித்துள்ளார்.

        திடீர் திருமணம் ஏன்? – நடிகை ஆனந்தி விளக்கம்
        சாக்ரடீஸ், ஆனந்தி


        உதவி இயக்குனர் சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

        ‘‘நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு

        எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.

        ஆனந்தி

        பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக

        மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன்

        பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.’’ இவ்வாறு ஆனந்தி கூறினார்.

        Posted in சினிமா

        2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்

        2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்

        தெலுங்கு படவுலகில் பல வெற்றிப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

        ஊரடங்கு நேரத்தில் 2-வது திருமணம் செய்து கொண்ட பிரபல தயாரிப்பாளர்


        தில் ராஜு மற்றும் அவரது மனைவி
        தெலுங்கு திரை உலகின் முன்னணி ஹீரோக்கள் பலர் நடித்த

        திரைப்படங்களை தயாரித்தவர் தில் ராஜு. இவர் நேற்று ஆந்திராவில் உள்ள கோவில் ஒன்றில் எளிமையாகத் திருமணம் செய்து கொண்டார்

        49 வயதான தில் ராஜு முதல் மனைவி அனிதா என்பவர் கடந்த 2017ஆம்

        ஆண்டு மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதனை அடுத்து

        அவரது மகள், தந்தையை இரண்டாவது திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார்.

        தில் ராஜு மற்றும் அவரது மனைவி

        இந்த நிலையில் மகளின் வற்புறுத்தல் காரணமாக நேற்று நிஜாமாபாத்

        பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் நடுத்தர வயது பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

        ஊரடங்கு நேரத்தில் இந்தத் திருமணம் நடந்ததால் இருவீட்டாரின் முக்கிய உறுப்பினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்

        2-வது திருமணம்
        2-வது திருமணம்
        Posted in சினிமா

        நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்

        நான் திருமணம் செய்யாதது ஏன் ..? நடிகை சித்தாரா விளக்கம்

        47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன் என்பது குறித்து நடிகை சித்தாரா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

        47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது ஏன்? – நடிகை சித்தாரா விளக்கம் சித்தாரா


        கே.பாலசந்தர் இயக்கிய ‘புதுப்புது அர்த்தங்கள்’ படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர், மலையாள நடிகை, சித்தாரா. இந்த படம் வெற்றி பெற்றதால், வாய்ப்புகள் குவிந்தன.

        இதைத் தொடர்ந்து விக்ரமன் இயக்கிய புது வசந்தம், கே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர், காவல் கீதம், என்றும் அன்புடன்,

        ரஜினியின் படையப்பா உட்பட ஏராளமான படங்களில் நடித்தார். மலையாளம், தமிழ் தவிர, கன்னடம், தெலுங்கு படங்களிலும் நடித்தார்.

        இப்போது வயதாகிவிட்டதால் தொடர்ந்து, அம்மா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார், சித்தாரா. தெலுங்கிலும்

        தொடர்ந்து நடித்து வரும் அவர், தமிழ், மலையாள சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வருகிறார். ஆனால், தான் இன்னும்

        திருமணம் செய்து கொள்ளவில்லை என்று தெரிவித்திருக்கிறார் .

        சித்தாரா

        இதுபற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், திருமணம் வேண்டாம் என்ற முடிவை நான்தான் எடுத்தேன். அதற்கு காரணம் என் வாழ்க்கையில் நான் முக்கிய நபரை இழந்துவிட்டேன்.

        அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை. அந்த முக்கிய நபர் என் தந்தை. அவர் இறந்த பிறகு, திருமணம் பற்றி நான் சிந்திக்கவில்லை என்று கூறியுள்ளார்.

        47 வயதான சித்தாரா இப்போது அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் திருமணம் செய்துகொள்வாரா என்று கேட்டதற்கு, அப்படி ஒரு

        எண்ணமே தனக்கு இல்லை என்று மறுத்துள்ளார். கூடவே, வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

        நான் திருமணம் செய்யாதது
        நான் திருமணம் செய்யாதது
        Posted in சினிமா

        எளிமையாக திருமணம் செய்து கொண்ட செல்வராகவனின் உதவி இயக்குனர்

        எளிமையாக திருமணம் செய்து கொண்ட செல்வராகவனின் உதவி இயக்குனர்

        இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுஜா, மிகவும் எளிமையாக திருமணம் செய்து கொண்டார்.

        எளிமையாக திருமணம் செய்து கொண்ட செல்வராகவனின் உதவி இயக்குனர்


          அரவிந்த் குமார், சுஜாவிற்கு நடைபெற்ற திருமணம்
          தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் செல்வராகவன்.

          இவர் சமீபத்தில் சூர்யாவை வைத்து என்.ஜி.கே என்ற படத்தை இயக்கினார்.

          இப்படம் உட்பட அவருடன் பல படங்களில் உதவி இயக்குனராக சுஜா என்பவர் பணியாற்றிய வந்தார்.

          அரவிந்த் குமார், சுஜா

          சுஜாவிற்கும் அரவிந்த் குமார் என்பவருக்கும் திருமணம் இன்று (27-04-2020, திங்கள் கிழமை) காலை சென்னை சூளைமேட்டில் உள்ள

          அவரது இல்லத்தில் நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோர் மட்டுமே கலந்து கொண்டு மிக எளிய முறையில் நடைபெற்றது.

          எளிமையாக திருமணம் செய்து
          எளிமையாக திருமணம் செய்து
              Posted in மருத்துவம்

              தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

              தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

              ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு.

              எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

              ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்


                ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்


                ஊரடங்கு உத்தரவால் வீட்டில் இருக்கும் கணவன், மனைவிக்குள் காதல் நெருக்கத்தை அதிகரிக்க இதுவே சரியான வாய்ப்பு. எந்தெந்த விஷயங்களை செய்தால் காதல் அதிகரிக்கும் என்று பார்க்கலாம்.

                சமையல் : இத்தனை நாள் வேலை என கூறி தப்பித்திருக்கலாம். தற்போது அது முடியாத காரியம். எனவே கணவன் மனைவி

                இருவரும் சேர்ந்து சமையல் வேலைகளைக் கவனிக்கலாம். இதனால் மனைவி தினமும் சமையலறையில் எவ்வளவு

                கஷ்டப்பருகிறாள் என்பதை கணவர் உணர்ந்து கொள்ளலாம். மேலும் மனைவிக்கு உதவி செய்வதன் மூலம் அன்பையும், நெருக்கத்தையும் அதிகரிக்கலாம்.

                விளையாட்டு : வேலை இருக்கும் போது மனைவியுடன் சேர்ந்து விளையாட நேரம் கிடைத்தாது. ஆனால் இப்போது அப்படியில்லை

                கிடைக்கும் நேரத்தில் மனையுடன் கேரம், செஸ் என இண்டோர் கேம்ஸ் விளையாடலாம். இதனால் உங்கள் மனைவிக்கு எந்த

                விளையாட்டில் ஆர்வம் உள்ளது, திறமை உள்ளது என்று அறிந்து கொள்ளலாம். மேலும் மனதை புரிந்து கொள்ளவும் முடியும்.

                ஊரடங்கில் தம்பதிகள் இந்த காரியங்களை சேர்ந்து செய்தால் நெருக்கம் அதிகரிக்கும்

                உடற்பயிற்சி : வீட்டில் இருவரும் இணைந்து உடற்பயிற்சி செய்யலாம். இருவரும் சேர்ந்து உடற்பயிற்சி செய்யும் போது இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகரிக்கும்.

                தோட்டக்கலை : செடி வளர்க்கிறீர்கள் என்றால் இருவரும் இணைந்து கலை எடுத்தல், தண்ணீர் ஊற்றுதல் என செடி

                  பராமரிப்பு வேலைகளில் ஈடுபடலாம். இதன் மூலம் நீங்கள் வேலைக்கு சென்ற பிறகு மனைவி எப்படி வீட்டையும், தோட்டத்தையும் பராமரிக்கிறார் என்று அறிந்து கொள்ளலாம்.

                  தம்ப்திகள் இருவரும் வேலைக்கும் போறவர்களாக இருந்தால் இந்த ஊரடங்கை தம்பதிகள் இணைந்து பல்வேறு வீட்டு வேலைகளை

                  செய்யவும், மனவிட்டு பேசவும், விளையாடவும், அன்பை பரிமாறி கொள்ளவும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த புரிதல் ஆரோக்கியமான தம்பத்தியத்திற்கு வழிவகுக்கும்.