Tag: ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி
பொதுநலவாய நாடுகளின் செயலாளரை சந்தித்தார் ஜனாதிபதி
ஐக்கிய இராச்சியத்திற்கான தனது விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரீசியா
ஸ்கொட்லண்டை சந்தித்து பொதுநலவாய நாடுகளின் டிஜிட்டல் மயமாக்கல் வேலைத்திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடினார்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான அரசாங்கத்தின் மூலோபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு பொதுநலவாய நாடுகளின் ஒத்துழைப்பை எவ்வாறு பெற முடியும் என்பது குறித்தும் கருத்துப் பரிமாறப்பட்டது
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
நடைமுறை அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஏற்றவாறு காணிக் கட்டளைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பணிகளை துரிதப்படுத்துவதற்கு தகுதியான குழுவொன்றினை நியமிக்குமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
காணி முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனங்களின் சட்ட ஏற்பாடுகளில் திருத்தம்
மேற்கொள்வது மற்றும் புதிய சரத்துக்களை திருத்துவது உள்ளீடு செய்வது தொடர்பில் ஜனாதிபதி
அலுவலகத்தில் புதன்கிழமை (10) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார்.
காணி கட்டளைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள ஜனாதிபதி பணிப்புரை
காலணித்துவ ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட காணிச் சட்டங்களே இன்றும்
நடைமுறையில் உள்ளதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காணி பயன்பாடுகள் தொடர்பில்
பல்வேறு சந்தர்ப்பங்களில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் நடைமுறை அபிவிருத்திச்
செயற்பாடுகளுக்கு பொறுத்தமற்றதாக காணப்படுகிறது என்றும் தெரித்தார்.
அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பதில் காணப்படுகின்ற
சிக்கல்களை நீக்கி புதிய தேசிய காணிக் கொள்கை ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இங்கு
தீர்க்கமாக ஆராயப்பட்டது.
அதற்காக காணி ஆணைக்குழுவின் ஊடாக மாகாண சபை காணிகள் தொடர்பிலான
பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறும், கிராம சேவகர் பிரிவுகள் மட்டத்தில் காணப்படுகின்ற காணி
உரிமையாளர்களின் விவரம் மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள காணிகள் மற்றும்
பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்ற காணிகள் தொடர்பில் கண்டறிந்து பிரதேச
செயலாளர் பிரிவு மட்டத்தில் அறிக்கையொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி
வலியுறுத்தியுள்ளார்.
அரசாங்கத்தின் தேவைகளுக்காக கையகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற
காணிகளை உரிமையாளர்களுக்கு மீளக் கையளிக்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும்,
எதிர்காலத்தில் அரசாங்கத்தின் தேவைகளுக்காக காணிகளை கையகப்படுத்தும் போது சந்தை
பெறுமதியை செலுத்தி அவற்றை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதன்போது நில அளவைத் திணைக்களம் மற்றும் விலை மதிப்பீட்டுத் திணைக்களங்களில்
காணப்படும் தாமதங்களை நிவர்திப்பதற்காக அவற்றின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு
அவசியமான நடவடிக்கைகளை விரைந்து முன்னெடுக்குமாறும் ஜனாதிபதி அறிவுரை
வழங்கினார்
கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
கானா ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கானா நாட்டு ஜனாதிபதி நானா அட்டோ அக்குபோ – அட்டோவையும் லண்டனில் சந்தித்து கலந்துரையாடினார்.
இலங்கை மற்றும் கானாவுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், ருவண்டா ஜனாதிபதி பவுல் ககமேவையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து, கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கை மற்றும் ருவண்டா நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் ஆராயப்பட்டதோடு, குறிப்பாக விவசாயம் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்
4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், இன்னும் சில தினங்களில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய நேரிடும் என தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (06) இடம்பெற்ற வெசாக் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாணத்தில் இதுவே தனது கடைசி உரையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
4 மாகாணங்கள் குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 04 மாகாணங்களின் ஆளுநர்களை தமது பதவிகளை இராஜினாமா செய்யுமாறு அறிவித்துள்ளார்.
சப்ரகமுவ, ஊவா, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இது தொடர்பில் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மிலிடம் அத தெரண வினவியது.
இது குறித்து இதுவரை தமக்கு அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி அறிவித்தல் வழங்கினால் தனது பதவியை இராஜினாமா செய்யத்
தயார் எனவும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸ்ஸம்மில், தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி நன்கொடை
ஜனாதிபதி நிதியத்திற்கு நிதி நன்கொடை
கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் ஸ்தாபக தலைவரும் ஓய்வுபெற்ற வலயக் கல்வி பணிப்பாளருமான சரத் சேனநாயக்கவினால் தனது ஆவணப்படுத்தல் மற்றும் விரிவுரைகள் ஊடாக கிடைக்கப்பெற்ற வருமானத்தில் இருந்து ஜனாதிபதி
நிதியத்திற்கு வழங்குவதற்காக 2 மில்லியன் ரூபாவை இன்று (24) ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த தொகையை வடக்கு,கிழக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் அங்கவீனமடைந்தவர்களுக்கு செயற்கை கால்களை வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்ய உள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.
ஜனாதிபதி நிதியத்தின் செயலாளர்,ஜனாதிபதி அலுவலகத்தின் மேலதிகச் செயலாளர் டபிய்யூ. சரத் குமார,கிங்குசல ஆய்வுச் சங்கத்தின் செயலாளர்
ஏ.பி.விக்ரமசிங்க,கிங்குச சங்கத்தின் முன்னாள் இளைஞர் அலுவல்கள் செயலாளர் சட்டத்தரணி ஜயதிலக்க முதுகம உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும்
அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்திற்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஆதரவு
தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்சர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக தெரிவித்த
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத்
தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி: குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது எனும் தலைப்பில், தனியார் ஊடகமொன்றின் இணையத்தளத்தில் வெளியான செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
அந்த இணையளத்தள செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது,
இந்த நாட்டின் அரசியல் கட்சியுடன் தொடர்புடையவர்கள் வெளிநாடொன்றில் இன்றைக்கு சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சிகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர் என்றும் இணையத்தள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது என பொலிஸ் தலைமையக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி பொலிஸ் விளக்கம்| இலங்கை செய்திகள்
அத்துடன், இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதியை படுகொலைச் செய்வதற்காக அந்த குழு சூழ்ச்சிகளை செய்துள்ளது என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என்றும் ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதைப் போல, படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில் எந்தவொரு தகவலும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு கிடைக்கவில்லை. அதேபோல, செய்தியில் கூறப்பட்டுள்ளதைப் போல விசாரணைகளும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் ஆரம்பிக்கப்படவில்லை.
ஆகையால் அந்த இணையளத்தள செய்தியானது முழுமையாக பொய்யாக சித்திரிக்கப்பட்ட செய்தியாகும்
என்று பொலிஸ் தலைமையக ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்
தேர்தலுக்கு திகதி குறிக்கவில்லை ஜனாதிபதி|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பில் சட்டரீதியில் திகதி குறிக்கப்படவில்லை. தேர்தலை நடத்த நிதி இல்லை.
எனினும், நாங்கள் அனைவரும் கலந்துரையாடி ஒரு தீர்மானத்தை எடுப்போம். தேர்தல் நடத்த நிதி இல்லை. நிதி இருந்தாலும் தேர்தல் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவுக்குள் ஒற்றுமை இல்லை.
இருவர் இணைந்து தீர்மானத்தை எடுத்துவிட்டு.
அதற்கான அனுமதியை ஏனைய உறுப்பினர்களிடம் பெற்றுக்கொண்டனர் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்
ஜனாதிபதியை சந்தித்த பிரித்தானியா முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன்
தனிப்பட்ட விஜயமாக இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரன் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார்.
ஜனாதிபதியுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்ட கெமரன், ஜனாதிபதிக்கு புத்தாண்டு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க
மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி
இனப்பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண சகலரையும் அழைத்தார் ஜனாதிபதி
இலங்கையில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக வரவு-செலவுத் திட்டம் நிறைவடைந்த அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி பேச்சுவார்த்தை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற வரவு-செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அழைப்பு விடுத்தார்.
“அரசாங்கத்தைத் துரத்த இன்னோர் ‘அரகலயா’ ஏற்பாடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு நான் வாய்ப்பளிக்க மாட்டேன்.
இராணுவத்தையும் படைகளையும் பெற்றுக்கொண்டு அவசரச் சட்டம் போடுவேன்..
பொருளாதார நெருக்கடி தீரும் வரை பாராளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் என்றார்.
விவசாயத் துறையை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
விவசாயத் துறையை நவீனமயப்படுத்த கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையின் விவசாயத்தை நவீனப்படுத்தவும் புதிய விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை நிறுவவும் கலிபோர்னியா பல்கலைக்கழக கட்டமைப்புடன், இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்புடன் செயற்பட்டு
வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று (16) நடைபெற்ற, அமெரிக்க – இலங்கை ஃபுல்பிரைட் (Fulbright) ஆணைக்குழுவின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உணவைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான வளம் இல்லாத தீவு நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் உணவு வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிங்கப்பூர்
முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடியதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், அதற்குத் தேவையான காணிகளை
அடையாளங்கண்டு விவசாயத்தை நவீனமயப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
நவீன விவசாய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை தேயிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் (TRI) இணைப்பதன் மூலம் இலங்கையின் விவசாய
ஆராய்ச்சித் துறையை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைக் கண்டறிய பல அமெரிக்க நிறுவனங்களின் ஆதரவைப் பெற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
விவசாயத் துறையை நவீனமயப்படுத்துவதில் பேராசிரியர் பிரதீபா பண்டாரநாயக்க போன்ற ஃபுல்பிரைட் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பு அவசியமானது என்றும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.
எதிர்வரும் பத்து வருடங்களில் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாபெரும் திட்டத்தில் ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவிப்பதற்கு அமெரிக்காவின் ஆதரவைப் பெற எதிர்பார்த்துள்ளதாகவும்,
ஃபுல்பிரைட் புலமைப்பரிசில்கள் மற்றும் உதவிகள் மூலம் இலங்கைக்கு வளவாளர்களை அழைத்துவருவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,
ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக இலங்கை மற்றும் அமெரிக்காவிலிருந்து பல்வேறு துறைகளைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவு மற்றும் தொழிற்திறமையுள்ள சுமார் 3000 புலமைப்பரிசில் பெற்றுள்ளனர்.
அவர்கள் இலங்கையின் கல்வித் துறையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், அவர்கள் எமது சமூகத்தையும் போசித்துள்ளனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முறையான கல்விப் பரிமாற்றத்துக்கு 70 வருடங்கள் நிறைவடைந்துள்ளன.
அமெரிக்க மிஷனரிகளின் யாழ்ப்பாண வருகையுடன் இது ஆரம்பமானது. இரண்டாவது, கேர்ணல் ஹென்றி ஸ்டீல் ஒல்காட் இலங்கைக்கு வந்தபோது.
ஜனாதிபதி வூட்ரோ வில்சன் (Woodrow Wilson) காலனித்துவ நாடுகளுக்கு சுதந்திரத்தை உறுதிசெய்து 14 விடயங்களை அறிவித்தமை 20 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்ற மற்றொரு முக்கிய அம்சமாகும்.
இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் கல்வி மற்றும் கலாசாரம் என்பவற்றுக்கு வரையறுக்கப்படவில்லை. பொருளாதார உதவிகள், இரு நாடுகளுக்கும் சமமான நிலைப்பாட்டைக் கொண்ட அரசியல்
பிரச்சினைகள், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பல துறைகளில் இந்த உறவு வியாபித்துள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சன்ங் மற்றும் அமெரிக்காவின் இலங்கை ஃபுல்பிரைட் ஆணைக்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சந்தர்ஷி குணவர்தன ஆகியோரும் இங்கு உரையாற்றினர்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, பல்கலைக்கழக
மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க, வயம்ப பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உதித் ஜயசிங்க,
ஜயவர்தனபுர பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே மற்றும் ருஹுனு பல்கலைக்கழக
உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேன ஆகியோர் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை
ஜனாதிபதி மாளிகையில் காணமல் போன பொருட்கள் தொடர்பாக விசாரணை
இலங்கை ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகையில் காணாமல் போன பொருட்கள் தொடர்பான ஆய்வுகளை நடத்திட விசேட குழு நியமிக்க பட்டுள்ளது.
இந்த மாளிகையில் பழையகால புராதன ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுக்கள் என்பன பாதுகாக்க பட்டு வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது.
மிகவும் பெறுமதிமிக்க இந்த பொருட்களை திருடி சென்றவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு
எரிபொருள் விநியோகத்தை முறையாக முன்னெடுக்க ஜனாதிபதி உத்தரவு
இலங்கை ,கொழும்பு ; நாடுமுழுவதும் எரிபொருள் விநியோகத்தை விரைவாகவும் முறையாகவும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேபோன்று பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து பஸ்கள் மற்றும் வேன்களுக்கு ,நாடுமுழுவதும் உள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து
டிப்போக்கள் மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான வசதிகளை செய்யுமாறு ஜனாதிபதி போக்குவரத்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
எரிபொருள் பிரச்சினை மற்றும் அதன் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் பிரதமர் அலுவலகத்தில் இன்று (23)
இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த அறிவுறுத்தல்களை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடற்றொழில், சுற்றுலாத்துறை , உர விநியோகம் உள்ளிட்ட விவசாய நடவடிக்கைகளுக்காகவும், பொது போக்குவரத்து சேவைகளுக்காகவும்
முன்னைய முறைப்படி இலங்கை போக்குவரத்து டிப்போக்கள் மற்றும்
நாடளாவிய ரீதியில் உள்ள முப்படைத் தளங்களில் எரிபொருளை வழங்குவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணை
இலங்கை ; ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஸ்தல விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு
அதிகாரிகள் ((SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம், பிரதான நுழைவாயில் மற்றும் அண்மித்த பகுதிகளை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்றுவதற்காக
முப்படை மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) இணைந்து இன்று (22)அதிகாலை விசேட நடவடிக்கையொன்றை மேற்கொண்டதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் அலுவலகம வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் களனி, எம்பிலிபிட்டிய, ஜா-எல, இரத்தினபுரி, செவனகல, வெல்லம்பிட்டிய, பிடிகல, வாதுவ மற்றும் நுகேகொட ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
26 முதல் 58 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது..
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ
அமெரிக்கா ,நியூயோர்க் ; அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
70 வயதாகும் ஜோ பைடன் நித்திரை கொள்ள கடினப்படுகிறார் என அந்த குறிப்பில் தெரிவிக்க பட்டுள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கொரனோ தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என்கின்ற செய்தி ஊடாக அமெரிக்காவில் வேகமாக மீளவும் கொரனோ நோயானது பரவி வருகிறது என்பதை அமெரிக்கா தெரிவித்துள்ளது .
இவ்விதம் நோக்கின் விரைவில் அமெரிக்கா அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி
பிரேசில் நாட்டில் நாள் தோறும் முன்னூறுக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகிய வண்ணம் உள்ளனர் .
அவ்விதம் அமெரிக்காவில் ஏற்படலாம் என எதிர்பார்க்க படுகிறது .
.
இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது
இலங்கையில் ஜனாதிபதியாகும் பசில் – என்ன தான் நடக்கிறது
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் பசில் ராஜபக்ஷ
ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.
21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி
கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாது என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அமைச்சரவை கோட்டா உருவாக்கினார்
புதிய அமைச்சரவை கோட்டா உருவாக்கினார்
புதிய அமைச்சரவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில், இன்று (20) காலை, சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.
சுசில் பிரேமஜயந்த – கல்வி
விஜேதாச ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
டிரான் அலஸ் – பொது பாதுகாப்பு
ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி
மனுஷ நாணயக்கார – தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு
கெஹலிய ரம்புக்வெல்ல – சுகாதாரம்
ரமேஷ் பத்திரண– பெருந்தோட்டம்
நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து
நளின் பெர்னாண்டோ – வர்த்தகம்
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டபாயாவின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது ,
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா
அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு
பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ்
புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு
பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு
இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்
போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி
கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்
இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது
வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்
வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்
பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்க பட்டது ,அதே போன்று
எதிர்வரு வாரம் கோட்டாபய ஆட்சியும் கவிழ்க்க படும் என எதிர் பார்க்க படுகிறது
நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,பாரளுமன்றில்
நம்பிக்கையில்லா பிரேரணை நடத்த பட உள்ளநிலையிலும் பெரும்பான்மை பலத்தை
நிரூபிக்க முடியாது கோட்டா சிக்கி தவித்து வருகிறார்
இங்கு தோற்கடிக்க பட்டு அவர் ஆட்சி கவிழ்க்க படும் என எதிர்பார்க்க படுகிறது




















