Posted in சினிமா

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு

இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
நயன்தாரா – விக்னேஷ் சிவன்


நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது

, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில்

ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.

நயன்தாரா – விக்னேஷ் சிவன்

இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது.


விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்.

    Posted in சினிமா

    கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை

    கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை


    தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்
    மாளவிகா மோகனன்


    கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

    பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.

    மாளவிகா மோகனன்

    இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர்

    தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது

    புதிய கவர்ச்சி புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற உடையில் இவர்
    கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

      Posted in சினிமா

      முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்

      முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்

      இரவின் நிழல் பட விழாவில் பார்த்திபன், மைக் வேலை செய்யாத்தால் அதனை தூக்கி எறிந்த சர்ச்சைக்கு முத்தமிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

      முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
      பார்த்திபன்


      இரவின் நிழல் பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் வேலை செய்யாத மைக்கை தூக்கி முன்வரிசையில் கோபத்தோடு

      எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களை கிளப்பின. இதற்கு பார்த்திபன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில்

      அவர் கூறும்போது, “மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன். இவ்வளவு அகங்காரம் தேவையா என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது. தூக்கிப்போட்டது

      மைக், ஆனால் உடைந்தது என்னவோ எனது மனது. வைரல் ஆக வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை.

      பார்த்திபன் பதிவு

      கடந்த சில நாட்களாக சரியான உறக்கம் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைப்பது பெரிய விஷயமாக இருந்தது. பெரிய பொருட்செலவில் விழா

      நடத்தினேன். ஏ.ஆர்.ரகுமானுக்கு அளித்த கேடயம் கீழே விழக்கூடாது என்ற பதற்றம். இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தின. பயம், படபடப்பு

      எல்லாம் சேர்ந்து உள்ளே பேய் புகுந்த மாதிரி ஆனது. வைரலாக்கும் நோக்கோடு இது நடக்கவில்லை. மேடைக்கு நாகரிகங்கள் இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமானிடம் மன்னிப்பு

      கேட்டு குரல் பதிவு அனுப்பினேன்.
      ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன்” என்றார்.

        Posted in சினிமா

        பிகினி உடையில் பூனம் பஜ்வா

        பிகினி உடையில் பூனம் பஜ்வா

        தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூனம் பஜ்வாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

        பிகினி உடையில் பூனம் பஜ்வா… லைக்குகளை குவித்த ரசிகர்கள்
        பூனம் பஜ்வா
        ‘சேவல்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானவர் பூனம் பஜ்வா. இதைத்தொடர்ந்து ஜீவாவின் ‘தெனவாட்டு’, ‘கச்சேரி ஆரம்பம்’ படங்களில் நடித்த இவர்,

        சுந்தர்.சி இயக்கிய ‘அரண்மனை 2’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். இதில் இவருடைய கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

        பூனம் பஜ்வா
        பூனம் பஜ்வா

        பின்னர் சுந்தர்.சி-யுடன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தில் நடித்தார். அதன்பின் முன்னணி நடிகர்களின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். படவாய்ப்பு

        குறைந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

        அந்த வகையில், தற்போது நீச்சல் உடையில் படுகவர்ச்சியாக நீச்சல் அடிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பூனம் பஜ்வா பதிவிட்டுள்ளார்.
        வைரலாகி வரும் இந்த புகைப்படங்களுக்கு லைக்குகளும் குவிந்து வருகிறது.

          Posted in சினிமா

          ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்

          ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்

          கே.ஆர்.வினோத் இயக்கத்தில் அமலா பால் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அதோ அந்த பறவை போல’ திரைப்படம் வெளியாக தயாராகி உள்ளது.

          ரிலீசுக்கு தயாரான அமலாபால் திரைப்படம்
          அமலாபால்


          செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் சார்பில் ஜோன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கே.ஆர்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அதோ அந்த பறவை போல

          ’. அமலா பால் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, சமீர் கோச்சார், பிரவீன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

          அமலாபால்
          அமலாபால்

          இளம் தொழிலதிபரான அமலாபால் அடர்ந்த காட்டுக்குள் சென்று, வெளிவர முடியாமல் தவிக்கிறார். காட்டுக்குள் சிக்கித் தவிக்கும் அமலாபால், என்னென்ன இன்னல்களை

          அனுபவிக்கிறார், வனப்பகுதிக்குள் இருக்கும் மிருகங்கள், காட்டுவாசிகளிடமிருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதை மையப்படுத்திய திரில்லர் கதையாக திரைக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் கே.ஆர்.வினோத்.

          பல எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இந்த படம் சில காரணங்களால் வெளிவராமல் இருந்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு இத்திரைப்படத்தை வி

          ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக வெளியிடுகின்றனர்.
          இப்படம் விரைவில் வெளியாகும் எனவும் படம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.

            Posted in சினிமா

            உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை- விசாரணை தீவிரம்

            உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை- விசாரணை தீவிரம்

            சுகேசிடம் இருந்து பரிசுப் பொருட்கள் பெற்றதை நடிகை ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒத்துக்கொண்டார்.

            உண்மையை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை.. வழக்கு விசாரணை தீவிரம்
            ஜாக்குலின் பெர்னான்டஸ்


            பிரபல இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்ததாக

            இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் மீது புகார்கள் எழுந்தன. இதையடுத்து நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல தடவை தீவிர விசாரணை

            நடத்தினார்கள். சுகேஷ் சந்திரசேகரின் பண பரிமாற்றங்கள் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

            இதைத் தொடர்ந்து கடந்த வாரம் நடிகை ஜாக்குலினின் சொத்துக்கள் முடக்கப்பட்டன. ரூ.7 கோடிக்கும் மேல் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.


            இந்த நிலையில் சுகேசின் மோசடிகள் குறித்து நடிகை ஜாக்குலின் பல்வேறு தகவல்களை விசாரணை குழுவிடம் கூறி இருப்பதாக தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு

            ஜூன் மாதம் முதன் முதலாக சுகேசை சந்தித்ததாகவும், அதன் பிறகு அவர் தனக்கு நிறைய பரிசுகள் தந்ததையும் அவர் விபரமாக விசாரணை குழுவிடம் கூறியுள்ளார்.

            நடிகை ஜாக்குலின் பயணம் செய்வதற்காக பல தடவை தனி விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுகேஷ் ஏற்பாடு செய்து கொடுத்தார். பல கோடி ரூபாய்

            மதிப்புள்ள கார்கள், குதிரைகள் மற்றும் நகைகளை சுகேஷ் பரிசாக கொடுத்துள்ளார். இவை அனைத்தையும் ஜாக்குலின் விசாரணை குழுவிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
            இதன்மூலம் சுகேஷ் மீதான பணப்பரிமாற்ற பிடி இறுகி உள்ளது.

              Posted in சினிமா

              மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்

              மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்

              நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘இரவின் நிழல்’ படத்தின் நிகழ்ச்சியில் பார்த்திபன் கோபத்தில் மைக்கை தூக்கி எறிந்தார்.

              மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்.. அதிர்ச்சியடைந்த ஏ.ஆர்.ரகுமான்
              பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான்


              1989-இல் வெளியான புதிய பாதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பார்த்திபன். இவர் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், கதை திரைக்கதை

              வசனம் போன்ற பல படங்களை இயக்கியிருந்தார். இவர் இயக்கிய ‘ஒத்த செருப்பு அளவு 7’ என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவின் கவனத்தை ஈர்த்து தேசிய விருதையும் இப்படம் தட்டிச் சென்றது.

              வித்தியாசமாக எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் பார்த்திபன் சில மாதங்களுக்கு முன்பு ஒரே ஷாட்டில் ஒரு படத்தை எடுக்க உள்ளதாகவும், அப்படத்திற்கு

              ‘இரவின் நிழல்’ என பெயர் வைத்துள்ளதாகவும் அறிவித்திருந்தார். கதையை தயார் செய்துவிட்டு நடிகர்களை அழைத்தபோது பலரும் பின் வாங்கினார்கள். சிலர்

              பார்த்திபன் சொன்ன யோசனைக்கு ஒத்துக்கொண்டு நடித்தார்கள். பார்த்திபன் தற்போது அந்த படத்தையே எடுத்து முடித்து விட்டார். இப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார்.

              பார்த்திபன் – ஏ.ஆர்.ரகுமான்

              இந்நிலையில், இந்த திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. பலர் கலந்துக்கொண்ட இவ்விழாவில் பார்த்திபனும் ஏ.ஆர்.ரகுமானும் உரையாடல் நிகழ்வு நடந்தது. அப்போது பார்த்திபன் கையில் இருந்த மைக் திடீரென

              வேலை செய்யவில்லை. இதனால் கோபமடைந்த பார்த்திபன் கையில் இருந்த மைக்கை தூக்கி எறிந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மேடையில் இருந்த ஏ.ஆர்.ரகுமான், பார்த்திபன் செயலை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

              அதன்பின் நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய பார்த்திபன் அங்கு நடந்த அந்த நிகழ்வுக்கு அவர் வருத்தம் தெரிவித்தார். நிகழ்ச்சியில் தான் உணர்ச்சிவசப்பட்டு விட்டதாகவும் தனது அநாகரீகமான செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.

              ஏ.ஆர்.ரகுமான் முன் பார்த்திபன் மைக்கை தூக்கி எறிந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                Posted in சினிமா

                கொரோனாவால் பல கோடி ரூபாய் வட்டி கட்டிய சிரஞ்சீவி

                கொரோனாவால் பல கோடி ரூபாய் வட்டி கட்டிய சிரஞ்சீவி

                தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படத்திற்காக சிரஞ்சீவி பல கோடி வட்டி கட்டியுள்ளார்.

                கொரோனாவால் பல கோடி ரூபாய் வட்டி கட்டிய சிரஞ்சீவி
                சிரஞ்சீவி


                தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, ராம் சரண் இருவரும் சேர்ந்து நடித்திருக்கும் படம் ஆச்சார்யா. கொரட்டால சிவா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

                இந்த படத்தை மேட்டினி என்டர்டெயின்மென்ட் மற்றும் கொனிடேலா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது .இந்த படத்தில் ராம் சரணும், நீலாம்பரியாக பூஜா ஹெக்டே

                மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணி சர்மா இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் இன்று (29.04.2022) வெளியாகியுள்ளது.

                ஆந்திராவின் மிகப்பெரிய ஸ்டாரான அவருக்கும் படத்தை வெளியிடுவதில் பல்வேறு சிக்கல் வந்திருக்கிறது. ஐதராபாத்தில் இந்த படத்தின் விழாவில் இது குறித்து பேசிய

                சிரஞ்சீவி ‘ஆச்சார்யா’ திரைப்படம் ஊரடங்கு காரணமாக பல மாதங்கள் தாமதம் ஆனது என்றும் அதனால் வட்டி மட்டுமே 50 கோடி ரூபாய் கட்டினேன் என்றும்,


                இந்த பணத்தில் ஒரு மீடியம் பட்ஜெட் படமே எடுத்து இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

                  Posted in சினிமா

                  வறுமையில் தவித்து வந்த ரெங்கம்மாள் பாட்டி

                  வறுமையில் தவித்து வந்த ரெங்கம்மாள் பாட்டி

                  பல படங்களில் முக்கிய காட்சிகளில் இடம் பெற்ற பழம்பெரும் நடிகை ரெங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

                  வறுமையில் தவித்து வந்த ரெங்கம்மாள் பாட்டி காலமானார்
                  ரெங்கம்மாள் பாட்டி


                  வடிவேலு நடித்த கி.மு. என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ‘போறது தான் போற அப்படியே அந்த நாய சூன்னு சொல்லிட்டு போப்பா’ என்ற காமெடி இடம் பெற்றிருக்கும். அந்த காமெடி இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

                  அந்த காமெடி காட்சியில் வடிவேலுவை நாயிடம் கடிவாங்க வைக்கும் பாட்டியின் பெயர் ரெங்கம்மாள். இவரது சொந்த ஊர் கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள

                  தெலுங்குபாளையம் ஆகும். சினிமா மீது ஏற்பட்ட ஈர்ப்பு காரணமாக சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடித்து சினிமாவிற்கு வந்தார். இவர் எம்.ஜி.ஆர் நடித்த விவசாயி

                  படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின்னர் அந்த காலகட்டத்தில் இருந்த முக்கிய நடிகர்கள் மற்றும் தற்போது முன்னணி நடிகர்களாக

                  இருக்கும் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்டோரின் படங்களிலும் குண சித்திரம், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் அடைந்தவர்.

                  ரெங்கம்மாள் பாட்டி

                  இதுவரை 500-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் பிற மொழி படங்களிலும் அவர் நடித்துள்ளார். குறிப்பாக இவர் குணச்சித்திர நடிப்பினை தான்டி காமெடியில் மிகவும்

                  பிரபலமடைந்தவர். வடிவேலுவுடன் இவர் நடித்த ஏராளமான படங்கள் மக்கள் மனதில் இடம் பெற்றிருந்தாலும் போறது தான் போற அந்த நாயை சூன்னு சொல்லிட்டு போ,

                  காஞ்சனா படத்தில் லாரன்ஸ் உடன் நடித்த காட்சிகள் மக்கள் மனதில் இடம் பிடித்த நீங்கா காட்சிகளாகும்.

                  இதுபோன்ற தனது நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த ரெங்கம்மாள் பாட்டி, சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு வறுமையில் தவிப்பதாக செய்திகள்

                  வெளியானது. இந்நிலையில், அன்னூரில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்துள்ளார்.
                  இவரது மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

                    Posted in சினிமா

                    திருப்பதியில் காதல் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா

                    திருப்பதியில் காதல் ஜோடி விக்னேஷ் சிவன் – நயன்தாரா

                    நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் திருப்பதிக்கு சென்று எடுத்துகொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

                    திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா
                    நயன்தாரா – விக்னேஷ் சிவன்


                    நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

                    இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6

                    ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

                    நயன்தாரா – விக்னேஷ் சிவன்

                    தற்போது விக்னேஷ் சிவன் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’

                    என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் இன்று (28.04.2022) அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நயன்தாரா, தனது காதலர்

                    விக்னேஷ் சிவனுடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து திருப்பதியிலிருந்து

                    அதிகாலை 2.22 மணிக்கு ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ இன்றிலிருந்து உங்களுடையது என்று குறிப்பிட்டுள்ளார். காத்துவாக்குல படம் வெற்றிபெற வேண்டி

                    இருவரும் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர்
                    என்று ரசிகர்கள் பதிவிட்டு, இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

                      Posted in சினிமா

                      ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் அந்த நடிகை

                      ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் அந்த நடிகை

                      ரஜினியின் 169-வது படத்தில் வில்லியாக நடிக்க பிரபல நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

                      ரஜினிக்கு மீண்டும் வில்லியாகும் பிரபல நடிகை
                      ரஜினி – தலைவர் 169


                      ரஜினிகாந்த் அடுத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நெல்சன் இதற்குமுன் கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட்

                      படங்களை இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் ரஜினியின் தலைவர் 169 படம்

                      குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதமாக மாறியிருந்தது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

                      இதில் கதாநாயகியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேசி வருவதாகவும், இன்னொரு

                      நாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. படப்பிடிப்பை ஓரிரு மாதங்களில் தொடங்க படக்குழு திட்டமிட்டு உள்ளனர்.

                      இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனையும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

                      ரஜினிகாந்த் நடிப்பில் 1999-ல் வெளியாகி வெற்றி பெற்ற படையப்பா படத்தில் ரம்யா

                      கிருஷ்ணன் நடித்து இருந்தார். அந்த படத்தில் அவரது நீலாம்பரி வில்லி கதாபாத்திரம்

                      பேசப்பட்டது. ரஜினியின் 169-வது படத்திலும் ரம்யா கிருஷ்ணன் வில்லியாகவே நடிக்க இருப்பதாக வெளியாகும் தகவல்கள் ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.


                      இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

                        Posted in சினிமா

                        நீச்சல் உடையில் அமீர்கான் மகள்

                        நீச்சல் உடையில் அமீர்கான் மகள்

                        பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகரான அமீர்கான், அவருடைய மகள் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

                        நீச்சல் உடையில் அமீர்கான் மகள்.. வலுக்கும் எதிர்ப்புகள்
                        ஈராகான்


                        பாலிவுட் நடிகர் அமீர்கான் ‘லால் சிங் சாட்டா’ படத்தில் நடித்து வருகிறார். அத்வைத் சந்தா இயக்கும் இந்தப் படம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்

                        படுகிறது. அமீர்கானுக்கு அவரது மகளால் தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது. மகள் ஈராகான் அவ்வப்போது சமூக ஊடகத்தில் அதிகமாக விமர்சிக்கப்படுவார்.

                        ஈராகான்
                        ஈராகான்

                        இந்த நிலையில் ஈராகான் தனது தோழி ஒருவருடன்
                        நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.


                        நீச்சல் உடையில் கிளாமராக இருக்கும் ஈரா கானை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.


                        வசதி படைத்தவராக இருந்தால் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமா என்று கேட்டு கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள்.

                          Posted in சினிமா

                          பண மோசடி வழக்கு.. விளக்கம் கொடுத்த நடிகை

                          பண மோசடி வழக்கு.. விளக்கம் கொடுத்த நடிகை

                          கருட வேகா சினிமாவை தயாரித்த ஜோஸ்டார் சினிமா தயாரிப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் காவல் நிலையத்தில் ஜீவிதா மீது பணமோசடி புகார் ஒன்றை அளித்தார். இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்துள்ளார்.

                          பண மோசடி வழக்கு.. விளக்கம் கொடுத்த நடிகை
                          ஜீவிதா


                          தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஜீவிதா, தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்துள்ளார்.

                          பின்னர், நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டு ஐதராபாத்தில் வசித்து வருகிறார்.

                          ராஜசேகர், பூஜா குமார் நடித்த கருட வேகா படம் 2017-ல் திரைக்கு வந்தது. இந்த படத்தை தயாரித்த கோட்டீஸ்வர ராஜூ தற்போது அளித்துள்ள பேட்டியில், “ஜீவிதாவும்

                          ராஜசேகரும் என்னிடம் ரூ.26 கோடி கடன் பெற்றனர். அதற்காக பூந்தமல்லி அருகே உள்ள 3 ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து காசோலை கொடுத்தனர்.

                          ஆனால், எனக்கு தெரியாமல் அந்த நிலத்தை வேறு ஒருவருக்கு ஜீவிதா விற்று விட்டார்.

                          இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன். நீதிமன்றம் ஜீவிதாவுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உள்ளது” என்றார்.

                          இதற்கு ஜீவிதா விளக்கம் அளித்து அவர் கூறும்போது, “கோட்டீஸ்வர ராஜூ தெரிவித்துள்ள கருத்தில் உண்மை இல்லை. கருடவேகா படத்துக்கு அவர்தான்

                          தயாரிப்பாளர். பிறகு எப்படி அவர் எங்களுக்கு கடன் கொடுத்திருக்க முடியும்? அவர் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்க நினைக்கிறார். அதில் நான் சிக்கமாட்டேன். நான் பலவீனமானவள் அல்ல.


                          வழக்கை சட்டப்படி சந்திப்பேன். யார் குற்றவாளி என்பது நீதிமன்றம் மூலம் தெரியவரும்” என்றார்.

                            Posted in சினிமா

                            சீண்டும் நெட்டிசன்கள்.. கோபமடைந்த சமந்தா

                            சீண்டும் நெட்டிசன்கள்.. கோபமடைந்த சமந்தா

                            நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள்ப் பக்கத்தில் காட்டமாக பதிவை வெளியிட்டு உள்ளார்.

                            சீண்டும் நெட்டிசன்கள்.. கோபமடைந்த சமந்தா
                            சமந்தா


                            நடிகை சமந்தா கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

                            விவாகரத்துக்கு சமந்தாவே காரணம் என்றும் குழந்தை பெற்றுக்கொள்ள சமந்தா மறுத்ததாலேயே

                            கணவர் பிரிந்தார் என்றும், தெலுங்கு இணைய தளங்களில் அவதூறு பரப்புவதாக கோர்ட்டுக்கும் சென்றார். ஆனாலும் சமந்தாவுக்கு எதிரான பதிவுகள் மற்றும் மீம்ஸ்கள்

                            தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடிக்கும் படத்தின் பூஜை நடந்தபோது, சமந்தா கலந்து கொள்ளாததை குறை கூறினர்.

                            நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்து இருப்பதை ஒப்பிட்டும் சமந்தாவை விமர்சித்தனர்.

                            இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் சமந்தா காட்டமாக புதிய பதிவை வெளியிட்டு உள்ளார். அதில் “என்னுடைய மவுனத்தை அறியாமை என்றும், எனது

                            அமைதியை ஏற்றுக்கொள்வது என்றும், எனது கருணையை பலவீனம் என்றும் நினைக்க வேண்டாம். கருணைக்கும் காலாவதி இருக்கலாம்” என்று குறிப்பிட்டுள்ளார்.


                            கேலி, மீம்ஸ்களால் கோபப்பட்டே இந்த பதிவை சமந்தா வெளியிட்டு இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

                              Posted in Uncategorized

                              பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து

                              பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து

                              சமீபத்தில் வெளியான ‘பீஸ்ட்’ படத்தின் வெற்றிக்கு அப்படக்குழுவினருக்கு நடிகர் விஜய் விருந்து கொடுத்துள்ளார்.

                              ‘பீஸ்ட்’ பட வெற்றி.. விஜய் கொடுத்த விருந்து
                              பீஸ்ட்


                              இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 13-ந்தேதி வெளியான திரைப்படம் ‘பீஸ்ட்’. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன்,

                              விடிவி கணேஷ், யோகிபாபு, அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

                              பீஸ்ட் திரைப்படம் நல்ல வசூலை குவித்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கவலையில் இருந்தனர். இந்த நிலையில் நடிகர் விஜய், பீஸ்ட் படக்குழுவினருக்கு விருந்து கொடுத்துள்ளார்.

                              அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள இயக்குனர் நெல்சன், நடிகர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி

                              தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் குறிப்பிட்டிருப்பது, ‘எங்களுக்கு இந்த விருந்து வழங்கியதற்கு நன்றி விஜய் சார். இது படக்குழுவுடன் வேடிக்கை நிறைந்த மற்றும் மறக்கமுடியாத மாலை நேரம்.

                              விஜய் கொடுத்த விருந்து
                              விஜய் கொடுத்த விருந்து

                              விஜய் சாரின் அன்புக்கும் ஆதரவுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடன் பணியாற்றியது சிறப்பான தருணம். நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். இந்த அனுபவத்தை என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான்

                              உண்மையாக மதித்திக்கிறேன். உங்களின் அழகும் கவர்ச்சியும், சூப்பர் ஸ்டார்டமும் இந்தப் படத்தை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன்

                              மற்றும் காவ்யா மாறன் ஆகியோருக்கு இந்த மிகப் பெரிய வாய்ப்பைக் கொடுத்ததற்கும் இந்தப் படத்தை ஒன்றிணைத்ததற்கும் நன்றி.

                              எங்களின் அற்புதமான நடிகர்கள் மற்றும் குழுவினர் இல்லாமல் இது சாத்தியமில்லை. தடைகளை தகர்த்தெறிந்து, அன்பையும் ஆதரவையும் பொழிந்த பார்வையாளர்கள்

                              அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் போல நீங்கள் அனைவரும் விஜய் மற்றும் படக்குழுவினருடன்


                              நின்று இந்தப் படத்தை மாபெரும் வெற்றியடையச் செய்திருக்கிறீர்கள். சியர்ஸ்’ என்று கூறியுள்ளார்.

                              Posted in சினிமா

                              விசிலடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை

                              விசிலடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை

                              தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி, மேடையிலேயே விசிலடித்து அசத்தினார்.

                              மேடையில் விசிலடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை
                              கீர்த்தி ஷெட்டி


                              தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர்

                              திரைப்படத்தில் சிலம்பரசன், ஹரிபிரியா பாடிய புல்லட் முதல் சிங்கிள் பாடலை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

                              கீர்த்தி ஷெட்டி
                              கீர்த்தி ஷெட்டி

                              இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகையான கீர்த்தி ஷெட்டியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இயக்குனர் லிங்குசாமிக்கும், திரைப்படத்தை

                              சேர்ந்தவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தமிழ் ரசிகர்கள் தனக்கு மிகுந்த ஆதரவினை அளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார். அப்போது படத்தில் நடிகை

                              விசில் அடிக்கும் காட்சிகள் இருப்பதை அறிந்த தொகுப்பாளர், ரசிகர்களுக்காக விசிலடிக்குமாறு கோரினார்


                              . இதையடுத்து இயக்குனரின் அனுமதியை பெற்ற கீர்த்தி ஷெட்டி, மேடையிலேயே விசிலடித்து அசத்தினார்.

                                Posted in சினிமா

                                நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்

                                நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்

                                நடிகை நயன்தாராவும் அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

                                நயன்தாரா – விக்னேஷ் சிவன் விரைவில் திருமணம்
                                நயன்தாரா – விக்னேஷ் சிவன்


                                நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது,

                                நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6

                                ஆண்டுகளாக நீடித்து வருகிறது. விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

                                தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா, ஆகியோர் நடிப்பில் ‘காத்து வாக்குல இரண்டு காதல்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் நடிகை நயன்தாரா,

                                தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்றார், அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படத்தில், நயன்தாரா நெற்றியில்

                                குங்குமத்துடன் இருப்பதை போன்று புகைப்படம் வெளியாகி இருவரும் திருமணம் செய்துக்கொண்டதாக பேசப்பட்டது.

                                இந்நிலையில், தற்போது அவர்களின் திருமணம் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. வருகிற ஜூன் மாதம் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம்

                                நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.
                                இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

                                  Posted in சினிமா

                                  விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்

                                  விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்

                                  விஜய் நடித்து வரும் ’தளபதி 66’ திரைப்படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

                                  விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்
                                  விஜய்


                                  பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன்

                                  இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்தது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

                                  இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக மோகன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இந்த படத்தில் நடிக்கவில்லை என்பதை மோகன் உறுதி

                                  செய்தார். இதனை அடுத்து தற்போது 2000ஆம் ஆண்டுகளில் பிரபல நடிகராக வலம்

                                  வந்த ஷாம் இந்த படத்தில் விஜய்யின் சகோதரராக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

                                  நடிகர் ஷாம், 12 பி, இயற்கை, தில்லாலங்கடி, உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.


                                  விஜய் நடித்த ‘குஷி’ படத்தில் விஜய்யின் நண்பர்களில் ஒருவராக ஷாம் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

                                    Posted in சினிமா

                                    நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை

                                    நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை

                                    ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் நடிகை மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் போலீசார் விசாரணை செய்துள்ளனர்.

                                    நடிகை பலாத்கார வழக்கு – மஞ்சுவாரியரிடம் பல மணி நேரம் விசாரணை
                                    மஞ்சு வாரியர்


                                    கேரளாவில் கடந்த 2017-ம் ஆண்டு ஓடும் காரில் பிரபல நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜெயிலில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் ஜாமீனில்

                                    விடுவிக்கப்பட்டார். ஜாமீனில் விடுதலையான திலீப், வழக்கின் விசாரணை அதிகாரிகளை மிரட்டியதாக புகார் எழுந்தது.

                                    மேலும் வழக்கின் சாட்சியங்களை அழித்ததாகவும், குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

                                    இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சில கருத்துக்களை நடிகை மஞ்சுவாரியர் கூறியிருந்தார். இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த குற்றப்பிரிவு போலீசார்

                                    முடிவு செய்தனர். கொச்சியில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று அவரிடம் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

                                    மஞ்சு வாரியர்

                                    நடிகை மஞ்சுவாரியரிடம் குற்றப்பிரிவு போலீசார் சுமார் 3½ மணிநேரம் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்களை நடிகை மஞ்சுவாரியர் தெரிவித்தார்.

                                    அவரது வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து கொண்டனர். மஞ்சுவாரியர்

                                    அளித்துள்ள தகவல்கள் மூலம் இந்த வழக்கில் மேலும்
                                    பல திடுக்கிடும் திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.

                                      Posted in சினிமா

                                      அனன்யாவின் கவர்ச்சி.. வைரலாகும் புகைப்படங்கள்

                                      அனன்யாவின் கவர்ச்சி.. வைரலாகும் புகைப்படங்கள்

                                      பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனன்யா பாண்டே, பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

                                      பிகினியில் அனன்யாவின் கவர்ச்சி.. வைரலாகும் புகைப்படங்கள்
                                      அனன்யா பாண்டே


                                      பிரபல இளம் நடிகை அனன்யா பாண்டே ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2 படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவ்வப்போது கிசுகிசுக்களில் சிக்கிக்கொள்ளும் அனன்யா, இஷான்

                                      கட்டருடன் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. தற்போது இவர் பூரி ஜெகன்னாத் இயக்கும் தெலுங்கு படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்து

                                      முடித்துள்ளார். சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை பயந்தாங்கொள்ளி நடிகர் என்று அனன்யா பாண்டே கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

                                      இதற்கிடையில் அனன்யா பாண்டே போதை பொருள் வழக்கில் சிக்கி ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் சிக்கிய போதைப்

                                      பொருள் வழக்கில் அவருடன் போதைப்பொருள் பற்றிய உரையாடலில் ஈடுப்பட்டதாக கூறி அனன்யா மீது வழக்கு பதியப்பட்டது. சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி உடையில்

                                      வலம் வந்து ரசிகர்களை கவரும் அனன்யா பாண்டே, தற்போது பிகினியில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


                                      பிகினி உடையில் கவர்ச்சியில் இருக்கும் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.