Posted in இலங்கை செய்திகள்

கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் முன்னறிவித்தல் இன்றி திடீரென நீர்வெட்டு

கொழும்பில் ஐந்து பிரதேசங்களில் முன்னறிவித்தல் இன்றி திடீரென நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.

சுமார் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இன்று (18) காலை 10 மணிமுதல் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்புக்கு நீர் விநியோகிக்கும் பிரதான நீர்குழாய் வெடித்துள்ளமையால், நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

அதன்பிரகாரம் கொழும்பு, 1, 7, 9, 10 மற்றும் கொழும்பு 12 ஆகிய பிரதேசங்களில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது, குறைந்த அழுத்தத்துடன் கொழும்பு -8க்கு நீர் விநியோகம் செய்யப்படுகின்றது

    Posted in இலங்கை செய்திகள்

    முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், -விடுதலை

    முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், ஈஸ்டர் தின தாக்குதல்கள்

    தொடர்பிலான வழக்கில் இருந்து முற்றாக விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்.

    கொழும்பு ​மேல் நீதிமன்றத்தில் டியரல் அட் பார் முறையில் முன்னெடுக்கப்பட்ட வழக்கு

    விசாரணையில், அவருக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த சகல குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவர் விடுதலைச் செய்யப்பட்டுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது

      சீனாவினால் முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது

      நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மற்றும் தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்ற சீனாவினால் இன்று முழு ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

      சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நிறைவையும், இரப்பர்-அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும் முன்னிட்டு தாமரை தடாக அரங்கில் நேற்று (17) பிற்பகல் நடைபெற்ற நிகழ்வின்போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

      சீன-இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65வது ஆண்டு நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு நூல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பதில் தலைவர் வீரசுமண வீரசிங்க அவர்களினால், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது.

      நான் எனது உரையை ஆரம்பிப்பதற்கு முன்னர், அனைத்து அன்பான வார்த்தைகள் மற்றும் அந்த வார்த்தைகளின் பின்னணியிலுள்ள செயல்பாடுகளுக்கு அதிமேதகு சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நமது மக்களிடையே நாம் பகிர்ந்து கொள்ளும் ஆழமான வேரூன்றிய நட்புறவால் நமது நாடுகளுக்கிடையேயான வலுவான பிணைப்புகள் மேலும் வலுப்பெறும் என்று நான் நம்புகிறேன்.

      சீனா நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு நாடு. மேலும் இது ஒரு பெரிய வரலாறு. அந்த மாபெரும் வரலாற்றுக்கு கொன்ஃபியுசியஸின் தத்துவம் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

      சீன வரலாற்றில் மற்றொரு முக்கியமான விடயம் என்னவென்றால், சீனா ஒரு பெரிய நாடாக இருந்த போதிலும் எந்த நாட்டையும் ஒருபோதும் ஆக்கிரமித்ததில்லை. அதேபோன்று தனது தாய்நாட்டை எந்த அந்நிய சக்திக்கும் அடிபணிய அனுமதிக்கவில்லை.

      கடந்த காலங்களில், சீனாவைக் கைப்பற்றும் உலக வல்லரசுகளின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. சீனா தொடர்ச்சியாக ஐக்கிய அமெரிக்காவாக இருப்பதற்கு இன்றுவரை முடிந்துள்ளது.

      இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் 2000 வருடங்களுக்கு முன்னிருந்தே காணப்படுவதாக வரலாறு கூறுகிறது. பௌத்தம், சர்வதேச வர்த்தகம் மற்றும் கலாசார உறவுகள் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு வளர்ந்துள்ளது.

      பல்வேறு படையெடுப்புகளைச் சந்தித்து 1949 இல் புதிய சீனா உதயமாகியது.

      சீனத் தலைவர்களுடன் அரசியல் ரீதியாக உறவுகளைப் பேணுவதற்கு கலாநிதி சுகீஸ்வர விக்கிரமசிங்க நடவடிக்கை மேற்கொண்டார். 1945 இல் உலக தொழிற்சங்க கூட்டமைப்பு நிறுவப்பட்ட தொடக்க விழாவில் கலந்து கொண்டார். அது பரிஸில் நடைபெற்றது. சீன தலைவர்களும் கலந்து கொண்டனர். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசியல் உறவு அங்கிருந்தே கட்டியெழுப்பப்பட்டது.

      சீனாவிற்கு விஜயம் செய்த முதலாவது அரசியல் பிரதிநிதிகள் குழுவில் பிலிப் குணவர்தன, எஸ்.டி.பண்டாரநாயக்க, எட்மன் சமரக்கொடி, எஸ்.ஜி.எஸ்.ரத்னவீர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

      அதன் பின்னர் இலங்கை – சீன நட்புறவு சங்கம் ஸ்தாபிக்கப்பட்டது. வண. உடகெந்தவல சிறி சரணங்கர தேரர், குசுமா குணவர்தன, தேஜா குணவர்தன, பீட்டர் கென்மன், எஸ்.டி. பண்டாரநாயக்க உள்ளிட்ட குழுவினரே இதற்கு தலைமை தாங்கினர்.

      இரப்பர் அரிசி ஒப்பந்தம் (1952) நட்பின் மற்றொரு மைல்கல் என்று கூறலாம். உண்மையில் 1956 ஆம் ஆண்டு பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் போதே நட்பிற்கு சிறந்த அடித்தளம் இடப்பட்டது. அமரர் திரு.பண்டாரநாயக்க அவர்கள் வெளியுறவுக் கொள்கையில் தெளிவான மாற்றத்தை ஏற்படுத்தினார். சோசலிச அரசுகளுடன் உறவுகளை ஏற்படுத்தினார்.

      இடதுசாரி இயக்கம், தொழிற்சங்க இயக்கம் மற்றும் இளம் மாணவர் இயக்கம் ஆகியவை சீனாவை அங்கீகரிப்பதற்காகவும், சீனாவுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்துவதற்காகவும் பாரிய போராட்டங்களை நடத்தின. நான் தர்ஸ்டன் கல்லூரியில் மாணவனாக இருந்தபோது அந்தப் பேரணிகளில் கலந்துகொண்டேன்.

      சீனாவுக்கான முதல் தூதுவர் வில்மட் ஏ பெரேரா என்பது எனக்கு நினைவிருக்கிறது. சூரியகாந்தி மலர் வியாபாரத்தில் முன்னோடியாக திகழ்ந்தார். அதன் பிறகு ஏ.பீ. பெரேரா, ரொபர்ட் குணவர்தன, வில்லியம் கொபல்லாவ ஆகியோர் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்தினர். இதன்போது டி.பீ.சுபசிங்க அவர்கள் விசேட பங்கு வகித்தார்.

      1978க்குப் பின்னர் சீனா புதிய பொருளாதார உத்திகளைக் கையிலெடுத்தது. 1978 மற்றும் 2010 க்கு இடையில் மிக விரைவான வளர்ச்சி ஏற்பட்டது. கடந்த தசாப்தத்தில் சீனா இரண்டு புதிய பொருளாதார திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. முதலில் புதிய பட்டுப்பாதை திட்டம் செயல்படுத்தப்பட்டது. இலங்கையும் அதன் ஒரு ஸ்தாபக உறுப்பினர். இரண்டாவது திட்டம் தீவிர வறுமை ஒழிப்பு திட்டம். இதனூடாக 800 மில்லியன் மக்களைக் கடுமையான வறுமையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது. உலக வரலாற்றில் இது ஒரு வரலாறு காணாத வெற்றியாகும்.

      இன்று உலகின் மிகப்பெரிய சந்தையாக சீனா உள்ளது. சீனா ஏற்கனவே உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாக மாறிவிட்டது. சீனாவினால் ஒட்டுமொத்த ஆசியாவும் மாற்றம் பெற்றுள்ளது. சீனா தன்னம்பிக்கையுடன் எழுச்சி பெற்றது. அதேபோன்று நாடுகளுக்கு இடையிலான நட்புறவுடன். சீனா நமது வரலாற்று நட்பு நாடு. அதை நான் இங்கே குறிப்பிட வேண்டும்.

      சீனாவின் தற்போதைய ஜனாதிபதி சீ ஜின்பிங் எமது தனிப்பட்ட நண்பரும், அதேவேளை இலங்கையின் நல்ல நண்பரும் ஆவார். இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் அவர் எமக்கு உதவுகிறார்.

      2012 ஆம் ஆண்டு முதல் சீனா அதிபர் சீ ஜின்பிங் அவர்களின் வலுவான தலைமையின் கீழ் புதிய சகாப்தத்தில் நுழைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

      சீனாவின் தலைவிதியை மாற்றியமைத்து, இன்று அனுபவிக்கும் வெற்றியை சீனாவுக்கு வழங்குவதற்கும் அவரது தலைமைத்துவம் முக்கிய காரணியாக இருந்தது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். இல்லையெனில் இன்று நாம் காணும் சீனா இருந்திருக்காது.

      சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 100வது ஆண்டை குறிக்கும் வகையிலான விழாவில் ஆன்லைனிலும் பங்கேற்றேன். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு 2022ல் நடைபெற உள்ளது. அது வெற்றியடைய வாழ்த்துவதற்கு இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

      சீன – இலங்கை இராஜதந்திர உறவுகளின் 65 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிட்டோம். எங்கள் நட்பின் அடையாளமாக அதைச் செய்தோம்.

      சீனா ஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் இலங்கையுடன் நட்புறவுடன் இருந்து வருகிறது. சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்துவது எமது எதிர்பார்ப்பும் பொறுப்புமாகும் என பிரதமர் தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று

      உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்: முன்னாள் பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் எதிரான் வழக்கின் தீர்ப்பு இன்று

      உயிர்த்த ஞாயிறுத்தாக்குதல் குறித்து உளவுத் துறைத் தகவல்கள் கிடைக்கப்பெற்றும் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று (18) அறிவிக்கப்படவுள்ளது.

      கொழும்பு புதுக்கடை மேல் நீதிமன்றத்தில் இன்று காலை 9 மணிக்கு இந்தத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. நீதிபதி நாமல் பலல்லே தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் கடந்த 3 மாதங்களாக இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. 855 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆயிரத்து 215 சாட்சியாளர்கள் பெயரிடப்பட்டிருந்தனர்.

      2019ஆம் ஆண்டு ஏப்பிரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ,சிறுவர்கள் உட்பட 275 பேர் உயிரிழந்தனர். 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

      Posted in இலங்கை செய்திகள்

      பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

      .பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து வேட்டை

      பயங்கரவாத தடைச் சட்டத்துக்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை

      இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது.

      யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நேற்றுக் காலை 9 மணியளவில்

      இடம்பெற்ற கையெழுத்துப் போராட்டத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார்.

      இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்களான சுகிர்தன், ஆர்னோல்ட், சயந்தன் ஆகியோரும் தமிழ்த் தேசியக்

      கூட்டமைப்பின் உள்ளுராட்சி சபைத் தவிசாளர்கள், உறுப்பினர்கள், யாழ்ப்பாணம் மாநகர சபைத் தலைவர் மணிவண்ணன் ஆதரவு உறுப்பினர்கள், சிவில் சமூக

      செயற்பாட்டாளர்கள், பொது மக்களும் கலந்து கொண்டு கையெழுத்துக்களை பதிவு செய்திருந்தனர்

      Posted in Uncategorized இலங்கை செய்திகள்

      பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா

      பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று

      இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

      கொரோனா அறிகுறிகளையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்

      அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறியுள்ளார்

      Posted in இலங்கை செய்திகள்

      யாழ்.பல்கலையில் பதற்றம்

      யாழ்.பல்கலையில் பதற்றம்

      யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.

      இதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள், மாணவர்கள் என எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர்.

      பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடந்த சில மாதங்களாக செயலிழந்து காணப்படுகின்றன.

      அதனை அங்கீகரிக்குமாறு கோரியே மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்திய சாலையில் சோதனை

      வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்திய சாலையில் சோதனை

      யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பி.சி.ஆர்

      பரிசோதனைகள் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.

      வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

      நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான

      பிசிஆர்பரிசோதனைகளை வைத்தியசாலையில் மேற்கொள்வதில் சிக்கல் காணப்பட்டமையால் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

      அந்நிலையில் இன்று முதல் மீளவும் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை

        அதிபரை மண்டியிட வைத்த பா.உறுப்பினர் விடுதலை

        பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக பதுளை – மகளிர் மகா வித்தியாலய

        அதிபரை முழங்கால் இட வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தொடரப்பட்டிருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

        குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, போதிய அளவு சாட்சியங்கள் இல்லாத காரணங்களினால் உயர்நீதிமன்றத்தினால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.‌

        ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமாகிய சாமர சம்பத் தசநாயக கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பதுளை

        மகளிர் மகா வித்தியாலய அதிபரை முழங்கால் இட வைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பதுளை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

        .

          கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
          Posted in இலங்கை செய்திகள்

          துப்பாக்கி சூடு – பெண் மரணம்

          துப்பாக்கி சூடு – பெண் மரணம்

          மத்துகமவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

          சந்தேக நபர்கள் உயிரிழந்த பெண்ணின் கணவரைக் கொலை செய்ய வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

          துப்பாக்கிச் சூடு நடந்த நேரத்தில் அவர் வீட்டிலிருந்தபோதிலும், உயிர்த்தப்பியுள்ளார்.

          சம்பவ இடத்திலிருந்து ஆறு T-56 துப்பாக்கி ரவைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

          கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மத்துகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

          முதற்கட்ட விசாரணைகளை மத்துகம நீதவான் மேற்கொண்டதுடன் பெண்ணின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          12 வருடங்களின் பின்னர் புலிகளுக்கு பணம் சேர்த்தவர் விடுதலை

          12 வருடங்களின் பின்னர் புலிகளுக்கு பணம் சேர்த்தவர் விடுதலை

          12 வருடஙக்ளுக்கு முனர்கொழும்பில் இருந்து புலிகளுக்கு நிதி சேகரித்த குற்ற சாட்டில்

          கைதான நபர் ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுவிக்க பட்டுள்ளார்

          சட்டத்தரணி தவராசாவின் வாத திறன் காரணமாக இவர் விடுவிக்க பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்

          வவுனியா – அனுராத புர ரயில் சேவைகள் 5 மதங்களுக்கு நிறுத்தம்

          இலங்கை வவுனியாவில் இருந்து அனுராத புரம் நோக்கி பயணிக்கும் ரயில் சேவைகள்

          எதிர்வரும் ஐந்து மாதங்களுக்கு தடை பட்டுள்ளது

          தண்டவாளத்தில் உள்ள திருத்த வேலைகள் காரணமாக இந்த சேவைகள் இடை நிறுத்த படுவதாக சுட்டி காட்ட பட்டுள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை

            அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி:நாடுகளுடன் பேச்சுவார்த்தை

            அத்தியாவசிய பொருட்களும், கைத்தொழில்சார்ந்த மூலப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படும் நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கென மூன்று அமைச்சரவை துணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

            சீனா, ஜப்பான், மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தையை நடத்துவதற்காக இந்தக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அத்தியாவசிய உணவுப் பொருட்கள், ஏற்றுமதி

            கைத்தொழிலுக்கான மூலப்பொருட்கள், கைத்தொழில்சார்ந்த பொருட்கள்

            என்பனவற்றை இறக்குமதி செய்வதற்கான மாற்று வழிமுறைகளை அடையாளம் காணும் நோக்கோடு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

            மூன்று துணைக்குழுக்களுக்கும் வெளிவிவகார அமைச்சர் தலைமை தாங்குகிறார். ஜப்பானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவில்

            வெளிவிவகாரம், சுகாதாரம், நெடுஞ்சாலைகள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

            வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் ஆகிய அமைச்சர்கள் சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கென நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

            மத்திய கிழக்கு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் அமைச்சர்களான அலிசப்ரி, நாமல் ராஜபக்க்ஷ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

              Posted in Uncategorized

              வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

              வெடித்து சிதறிய இராணுவ வண்டி – ஒருவர் மரணம் – 11 பேர் காயம்

              சிரியா டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினர் சென்ற வண்டி ஒன்றில் ஆயுதம் வெடித்து

              சிதறியதில் சம்பவ இடத்தில் ஒருவர் பலியானார் ,மேலும் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்

              இராணுவத்தினர் சென்ற வண்டி பலத்த சேதமடைந்துள்ளது

              குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                Posted in Uncategorized

                உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்

                உக்கிரேன் எல்லையில் ஒருலட்சம் ரசியா இராணுவம் தயார் நிலையில்

                உக்கிரேன் எல்லையில் ரசியாவின் ஒரு லட்சம் துருப்பினர் தாக்குதலை நடத்த தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்

                முக்கிய ஆயுத தளபாடங்களுடன் முக்கிய தாக்குதல் படை பிரிவுகள் குவிக்க பட்டுள்ளதால் அங்கு பெரும் பதட்டம் நிலை வருகிறது

                தமது நாட்டை ரசியவிடம் இருந்து பாதுகாக்க வயோதிபர்கள் முதல் உக்கிரேனில் அவசர இஇராணுவ பயிசிறை பெற்ற வண்ணம் உள்ளனர்

                  Posted in Uncategorized உலக செய்திகள்

                  பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்

                  பிரான்சில் பாரிய தீ – 7 பேர் மரணம்

                  பிரான்ஸ் Saint-Laurent-de-la-Salanque பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றில் இடம்பெற்ற தி விபத்தில் சிக்க ஏழு பேர் பலியாகினர்

                  மேலும் சிலர் தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                  மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

                    துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு

                    திருகோணமலை தலைமையை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில்

                    துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

                    திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும் தனிநபர் ஒருவரின் காணியிலிருந்து நீர் வடிந்தோடுவதற்க்காக குழாய் பொருத்தும் நோக்கில்

                    நேற்று (14) மாலை வெட்டப்பட்ட நிலத்திலிருந்தே குறித்த எஸ்.எம்.ஜி ரக துருப்பிடித்த துப்பாக்கி ஒன்றும் மூன்று மகசீன்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                    குறித்த நபர் அவ்வீட்டிற்க்கு வாடகைக்கு அமர்த்தப்பட்டதாகவும் குறித்த வீட்டின்

                    உரிமையாளர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                    இச் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்

                      தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 k கோதுமை மா நிவாரணம்

                      தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு கோதுமை மா நிவாரணமாக வழங்குதல் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்ககீகாரம் வழங்கியுள்ளது.

                      இது தொடர்பில் வர்த்தக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சவை இன்று அனுமதி வழங்கியுள்ளது.

                      இதன்படி, அடையாளம் காணப்பட்டுள்ள 115,867 பயனாளிக் குடும்பங்களுக்கு மாதாந்தம்
                      15 கிலோ கிராம் கோதுமை மா சலுகை விலையில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

                        Posted in இலங்கை செய்திகள்

                        சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

                        சிறுவனின் வாயில் சுட்டவர் கைது

                        கொஸ்லாந்த – கெனிபனாவல பிரதேசத்தில் 12 வயதான சிறுவனின் வாயில் வெடி

                        மருந்துகளைக் கொட்டி, துப்பாக்கியால் சுட்டமையால் கடும் காயங்களுக்கு உள்ளான சிறுவன், மேலதிக சிகிச்சைக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

                        கொஸ்லாந்த கெனிபனாவல பிரதேசத்தில் வீட்டு தோட்டத்தில் வைத்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

                        இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 21 வயதான இளைஞன், கைது செய்யப்பட்டுள்ளார்

                          Posted in Uncategorized

                          யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்

                          யாழில் டெங்கு நோயில் சிக்கி சிறுவன் மரணம்

                          யாழ் . மீசாலை வீரசிங்கம் ஆரம்ப பாடசாலை மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார்.

                          கொடிகாமம் மத்தி, கொடிகாமத்தைச் சேர்ந்த வ.அஜய் (வயது 11) என்ற மாணவனே உயிரிழந்துள்ளார்.

                          இவர் கடந்த வாரம் காச்சல் பீடிக்கப்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிந்துள்ளார்.

                          குறித்த மாணவன் டெங்கு தாக்கத்திற்குள்ளாகியே உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றது.

                          இம் மாணவன் 2021 ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய நிலையில், பரீட்சை முடிவுக்காக காந்திருந்த மிக திறமை வாய்ந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.