Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
சியான் 60 படத்தில் இருந்து அனிருத் திடீரென விலகியது ஏன் தெரியுமா?
சியான் 60 படத்தில் இருந்து அனிருத் திடீரென விலகியது ஏன் தெரியுமா?
கோப்ரா’, ‘துருவநட்சத்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம், தற்போது ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும்
இப்படத்தில் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார்.
இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அனிருத் விலகியதற்கான காரணம் வெளியாகாமல் இருந்தது.
துருவ், விக்ரம்
இந்நிலையில், அவர் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், பிஸியாக இருப்பதால், அவரால் ‘சியான்-60’ படத்தில்
பணிபுரிய முடியவில்லையாம். அதனால்தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா
பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா
பிரபல இந்தி நடிகரான அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அமீர்கானின் செய்தித்தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமீர்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை நடைமுறைகளை பின்பற்றி வருகிறார்.
அமீர்கான்
அவர் தற்போது நலமுடன் உள்ளார். சமீபத்தில் அமீர்கானை சந்தித்தவர்கள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அமீர்கான், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய ரசிகர்களும், திரைத்துறையினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

- கடற்படைத் தளபதி இந்திய உத்தியோகப்பூர்வ பயணத்தை நிறைவு செய்தார்

- நேபால் வெள்ளப் பெருக்கில் 762 பேர் பலி

தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்
தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்
உடல்நலக்குறைவு காரணமாக தீப்பெட்டி கணேசன் மரணமடைந்த நிலையில், அவரது குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
தீப்பெட்டி கணேசன் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற ராகவா லாரன்ஸ்
தீப்பெட்டி கணேசன், ராகவா லாரன்ஸ்
ரேணிகுண்டா படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் தீப்பெட்டி கணேசன். அதற்கு பிறகு அஜித்தின் பில்லா 2, விஜய் சேதுபதியின் தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட பல
படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். இதன்பின்னர், அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், பொருளாதாரத்தில் நலிவடைந்த தீப்பெட்டி கணேசன், பல்வேறு சிறு தொழில்களை செய்து வந்தார்.
கடந்தாண்டு, கொரோனா ஊரடங்கு காலத்தில், பால் வாங்கக் கூட காசு இல்லாமல் கஷ்டப்படுவதாக கூறி இவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து திரையுலகைச் சேர்ந்த சிலர் இவருக்கு உதவிக்கரம் நீட்டினர்.
இதனிடையே உடல்நலக்குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தீப்பெட்டி கணேசன், கடந்த திங்களன்று (மார்ச் 22) உயிரிழந்தார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
தீப்பெட்டி கணேசன்
மறைந்த தீப்பெட்டி கணேசனுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “நடிகர் ‘தீப்பெட்டி’ கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன்.
இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வறையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு
செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்”. இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
வெப் தொடரை தயாரிக்கும் ஏவிஎம் நிறுவனம்
வெப் தொடரை தயாரிக்கும் ஏவிஎம் நிறுவனம்
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், அடுத்ததாக திரில்லர் கதையம்சம் கொண்ட வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
வெப் தொடரை தயாரிக்கும் ஏவிஎம் நிறுவனம்
ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் அருணா, அபர்ணாவுடன் இயக்குனர் அறிவழகன்
75 ஆண்டுகளுக்கு மேலாக தரமான கதையம்சம் உள்ள படங்களை தயாரித்து, மக்களின் மனதில் நீங்காத இடம் பிடித்த, ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம், தனது அடுத்த தயாரிப்பை
அறிவித்துள்ளது. அதன்படி திரில்லர் கதையம்சம் கொண்ட “தமிழ் ஸ்டாக்கர்ஸ்” என்ற வெப்தொடரை அந்நிறுவனம் தயாரிக்க உள்ளது.
ஈரம், வல்லினம் போன்ற படங்களை இயக்கிய அறிவழகன் இப்படத்தை இயக்க உள்ளார். தமிழ் திரைப்பட உலகில் சமீப காலமாக நடக்கும் திரைப்பட திருட்டு கும்பலை மையமாகக் கொண்டு
‘தமிழ் ஸ்டாக்கர்ஸ்’ என்ற தொடர் உருவாகிறது. சோனி லிவ் ஓடிடி தளத்தில் இந்த தொடரை வெளியிட உள்ளனர். இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளிவர இருக்கிறது.
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்

- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா

- தேர்தலுக்கு முன்பு மேற்குக் கரையில் பதற்றத்தை நெதன்யாகு அதிகரிப்பது குறித்து இராணுவம் கவலை

- பல கடலோரப் பகுதிகளில் எச்சரிக்கை

- கிழக்கு மாகாணம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை

சடலமாக மீட்கப்பட்ட காதல் பட நடிகர்
சடலமாக மீட்கப்பட்ட காதல் பட நடிகர்
2004-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதல்’. பாலாஜி சக்திவேல் இயக்கிய இப்படத்தில் பரத் ஹீரோவாகவும்,
சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தார்கள். உண்மை கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த படத்தில் விருச்சிககாந்த் என்ற சிறிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. மேன்சனில் தங்கியிருக்கும் வருங்கால
இயக்குநரிடம், சான்ஸ் கேட்க போவதாக அவரின் கதாப்பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கும். மேலும் ’ஆனா டைரக்டா ஹீரோ தான்’ என்பார். சிறிய கதாப்பாத்திரம் என்றாலும் ரசிகர்களிடம் அதிகம் கவரப்பட்டது.
காதல் பாபு
இப்படத்திற்கு பிறகு பாபுவுக்கு சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தால், மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். சமீபத்தில் அவரது தாய், தந்தை இருவரும் மரணமடைந்ததால், மிகவும் மன
அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார். அவர் சாலைகளில் சுற்றித்திரியும் புகைப்படம் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, திரைத்துறையினர் சிலர் அவருக்கு உதவி செய்தனர்.
ஆனால் ஊரடங்குக்கு பிறகு பாபுவின் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. இந்நிலையில் சாலையோரம் நின்ற
ஆட்டோவில் படுத்து உறங்கிய அவர் காலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த விஷயம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை… கண்கலங்கிய கங்கனா ரணாவத்
பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பட விழாவில் விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை என்று பேசி இருக்கிறார்.
விஜய் அளவிற்கு யாரும் மரியாதையாக நடத்தவில்லை… கண்கலங்கிய கங்கனா ரணாவத்
கங்கனா ரணாவத்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி ‘தலைவி’ என்ற திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்துள்ளார். எம்ஜிஆராக அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும், சமுத்திரகனி, மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், ’தலைவி’ படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் பேசிய கங்கனா, ஏ.எல்.விஜய் அளவிற்கு தன்னை மரியாதையாக எந்த இயக்குநரும் நடத்தியதில்லை’ என்று கூறி கண் கலங்கினார்.
இயக்குனர் விஜய் – கங்கனா ரணாவத்
’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23-ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, நேற்று அறிவிக்கப்பட்ட 2019-ம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளில் நடிகை கங்கனா
ரணாவத்திற்கு ‘மணிகர்னிகா: ஜான்சி ராணி’ மற்றும் ‘பங்கா’ படங்களுக்காக சிறந்த நடிகை விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.
வில்லியாக நடிக்க ரெடி – காஜல் அகர்வால்
வில்லியாக நடிக்க ரெடி – காஜல் அகர்வால்
காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம் இருப்பதாக நடிகை காஜல் அகர்வால் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான காஜல் அகர்வால் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார்
அவர் அளித்த பேட்டி வருமாறு: “திருமணத்துக்கு பிறகு அதிக மரியாதை தருகிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
எனது அம்மாவின் கஷ்டம் என்ன என்பது திருமணம் செய்த பிறகுதான் எனக்கு தெரிய வந்தது. எனது காதல் திருமணத்தில் ஒரு சினிமா எடுக்கும் அளவுக்கு கதை உள்ளது.
எனது கணவரை பத்து வருடத்துக்கு முன்பே தெரியும். ஆரம்பத்தில் நட்பாகத்தான் பழகினோம். கொரோனா ஊரடங்கில்தான் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் வந்தது.
இதை ஊரடங்கு திருமணம் என்று சொல்லலாம். திருமணத்துக்கு பிறகு வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.
காஜல் அகர்வால்
கதை தேர்விலும் வித்தியாசம் பார்க்கவில்லை. எனக்கு காதல், சரித்திர, நகைச்சுவை கதைகளில் நடிக்க விருப்பம். வில்லியாக நடிப்பதிலும் பிரச்சினை இல்லை.
ஆனால் கதை பிடித்து இருக்க வேண்டும்”. இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது
67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, இதில் தனுஷ், விஜய் சேதுபதி, பார்த்திபன் ஆகியோருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதிக்கு தேசிய விருது அறிவிப்பு
தனுஷ், விஜய் சேதுபதி
67-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அசுரன் படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சூப்பர் டீலக்ஸ்
படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதும், விஸ்வாசம் படத்திற்காக டி இமானுக்கு, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் பார்த்திபன், தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு ஜூரி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒத்த செருப்பு படத்தில் பணியாற்றிய ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த
ஒலிப்பதிவாளருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த தமிழ் படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது ஏன்? – கங்கை அமரன்.
ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது ஏன்? – கங்கை அமரன்.
பார்த்திபன் தயாரித்து, இயக்கி, நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவிக்கப்பட்டது ஏன்? – கங்கை அமரன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்
ஒத்த செருப்பு பட போஸ்டர், கங்கை அமரன்
நடிகர் பார்த்திபன் தயாரித்து, இயக்கி, தனி ஒருவனாக நடித்த படம் ஒத்த செருப்பு சைஸ் 7. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்கு உயர்த்தினார் பார்த்திபன்.
இதில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் அவர்கள் குரல்கள் மட்டுமே திரையில் கேட்கும்.
பார்த்திபன் மட்டுமே எல்லோரிடமும் கலந்துரையாடுவார். இந்த படத்தை திரையுலகினர் பலரும் வியந்து பாராட்டினர்.
இந்நிலையில், ஒத்த செருப்பு படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்துள்ளன. சிறப்பு தேசிய
விருது, சிறந்த ஒலிப்பதிவு ஆகிய பிரிவுகளில் ஒத்தசெருப்பு படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
பார்த்திபன்
தேசிய விருது குழுவில் ஜூரியாக இருந்த கங்கை அமரன், ஒத்த செருப்பு படம் குறித்து சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ஒத்த செருப்பு படத்திற்கு எந்த பிரிவில் விருது கொடுப்பதென்று தெரியாமல் ஜூரிக்கள் குழம்பிப் போயினர்
. ஏனெனில் அந்த படத்தில் கதை, வசனம், நடிப்பு, திரைக்கதை, இயக்கம் என அனைத்தையும் பார்த்திபனே செய்திருந்தார்.
அவை அனைத்துமே சிறப்பாக இருந்ததால் ஜூரிக்கள் அனைவரும் முடிவு செய்து, அப்படத்திற்கு சிறப்பு தேசிய விருது அறிவித்ததாக” கங்கை அமரன் தெரிவித்தார்.
மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்
மலையாள படத்தில் நடிக்கும் ஏ.ஆர்.ரகுமான்
ரோஜா’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி திறமையை நிரூபித்தவர் ஏ.ஆர்.ரகுமான்.
இவர் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்திற்காக இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். இவரது இசைக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் கடந்த 2019-ம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘பிகில்’ படத்தில் இடம்பெறும் சிங்கப்பெண்ணே பாடல் காட்சியில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் படமும் இதுதான்.
ஏ.ஆர்.ரகுமான், உன்னிகிருஷ்ணன், மோகன்லால்
இந்நிலையில், தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகும் ‘ஆராட்டு’ எனும் மலையாள படத்திலும் ஏ.ஆர்.ரகுமான் நடித்து வருகிறார். உன்னிகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் இடம்பெறும் பாடல்
காட்சியில் ஏ.ஆர்.ரகுமான் நடிக்கிறாராம். படப்பிடிப்பு தளத்தில் மோகன்லாலுடன், ஏ.ஆர்.ரகுமான் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது
புதிய சாதனை படைத்த வாத்தி கம்மிங் பாடல்
புதிய சாதனை படைத்த வாத்தி கம்மிங் பாடல்
விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.
அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றன. குறிப்பாக இதில் இடம்பெறும் வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டைய கிளப்பி வருகிறது.
இந்நிலையில், வாத்தி கம்மிங் பாடல் வீடியோ, யூடியூபில் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக #VaathiComing100MViews என்ற ஹேஷ்டேக்கை
விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் டிரெண்டாக்கி உள்ளனர். ஏற்கனவே வாத்தி கம்மிங் பாடலின் லிரிக்கல் வீடியோவும் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
மாஸ்டர் பட போஸ்டர்
இதுவரை எந்த ஒரு பாடலின் லிரிக்கல் வீடியோவும், வீடியோ பாடலும் தனித்தனியே 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததில்லை.
தற்போது வாத்தி கம்மிங் பாடல் அந்த உச்சத்தை தொட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.
விஜய் சேதுபதி நழுவவிட்ட வில்லன்
விஜய் சேதுபதி நழுவவிட்ட வில்லன்
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் புஷ்பா. இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு
ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். செம்மரக்கடத்தலை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பஹத் பாசில், அல்லு அர்ஜுன்
இப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதி ஒப்பந்தமாகி இருந்தார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர் விலகினார்.
இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில், புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஒப்பந்தமாகி உள்ளார். அவர் தெலுங்கில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?
பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை கமலுக்கு பதில் தொகுத்து வழங்கப்போகும் பிரபல நடிகர்?
தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகின், நான்காவது சீசனில் ஆரி ஆகியோர் பிக்பாஸ் டைட்டிலை ஜெயித்தனர்.
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் மாதத்தில் தொடங்கி அக்டோபர் வரை நடத்தப்படும். ஆனால் கடந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டதால், பிக்பாஸ் 4 நிகழ்ச்சி திட்டமிட்டபடி ஜூன் மாதம் தொடங்கப்படவில்லை. பின்னர் அக்டோபர் மாதம் தொடங்கி இந்தாண்டு ஜனவரி 16-ந் தேதி வரை ‘பிக்பாஸ் 4’ நடைபெற்றது.
சிம்பு
ஆனால் இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சி வழக்கம்போல் ஜூன் மாதமே தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம்.
இந்நிலையில், இந்தாண்டுக்கான பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்க மாட்டார் என கூறப்படுகிறது. அவர் அரசியலில் பிசியாக உள்ளதால், அவருக்கு பதில் நடிகர் சிம்பு ‘பிக்பாஸ் 5’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி
அகரம் அறக்கட்டளையால் உயர்ந்த பெண்ணைக் கண்டு நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி
2012-ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுவில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்ற கோவை மாணவி ஒருவர், தீ விபத்தொன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார்
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் தொடர்ந்து படிக்க விரும்பியதை அறிந்த நடிகர் சூர்யா, அம்மாணவி தீ காயங்களில் இருந்து ஓரளவு குணமடைந்த பின், அகரம் அறக்கட்டளை
மூலம், சென்னையில் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியிலும், திருச்சியில் ஒரு தனியார் கல்லூரியிலும் பொறியியல் படிக்க வைத்துள்ளார்.
பொறியியல் படிப்பை நிறைவு செய்த அந்த பெண், தீக்காயங்களுக்கு சிகிச்சை பெற்ற மருத்துவமனையிலேயே பணியாற்றி வருகிறார். அந்த மருத்துவமனையில் கடந்த சில
தினங்களுக்கு முன் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக சூர்யாவின் தம்பியும், நடிகருமான கார்த்தி பங்கேற்றார்.
அவரை அகரம் அறக்கட்டளை மூலம் கல்வி பயின்ற பெண் வரவேற்றார். தங்கள் அறக்கட்டளை மூலம் படித்து உயர்ந்த அந்தப் பெண்ணை நடிகர் கார்த்தி நெகிழ்ந்து பாராட்டினார்.
காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா
காஞ்சனா’ பட நடிகைக்கு கொரோனா
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். ஏற்கனவே நடிகர்கள் அமிதாப்பச்சன், சூர்யா, சரத்குமார், விஷால், பிருதிவிராஜ், அபிஷேக் பச்சன், நடிகைகள்
ஐஸ்வர்யா ராய், தமன்னா, ராய் லட்சுமி, நிக்கி கல்ராணி, சுமலதா, ஐஸ்வர்யா அர்ஜுன், இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் குணமடைந்தனர்.
இந்நிலையில், ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிக்கி தம்போலி தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
நிக்கி தம்போலி
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, “எனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன்
தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மருத்துவரின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன். உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு
நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு
கொரோனா ஊரடங்கில் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து சர்ச்சையில் சிக்கிய நடிகை வனிதா விஜயகுமார், சில தினங்களிலேயே அவரை குடிகாரர் என்று உதறி தள்ளி மேலும் பரபரப்பு
ஏற்படுத்தினார். தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த வனிதா, தற்போது சினிமாவில் தீவிர கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
அனல் காற்று என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்துக்கான தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து ‘2 கே அழகானது காதல்’ என்ற
படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து பிரசாந்தின் அந்தகன் படத்திலும் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.
நடிகை வனிதாவுக்கு குவியும் பட வாய்ப்பு
அடுத்ததாக வசந்தபாலன் இயக்கும் படத்தில் நடிக்கவும் வனிதாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை வனிதா படங்களில் அடுத்தடுத்து நடிக்க தொடங்கி இருப்பது அவரது ரசிகர்களுக்கு
மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமூக வலைத்தளத்தில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
பிரபல நடிகைகளை சாடிய கங்கனா
பிரபல நடிகைகளை சாடிய கங்கனா
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி தீரத் சிங் ராவத் பெண்கள் கிழிந்த ஜீன்ஸ் அணிவதை விமர்சித்தது சர்ச்சையாகி உள்ளது.
அவர் பேசும்போது, “இளைய தலைமுறையினர் நாகரிகம் என்ற பெயரில் கிழிந்த ஜீன்ஸ் அணிகிறார்கள். இளம்பெண்களும் அணிகிறார்கள்.
நான் விமானத்தில் பயணித்தபோது தொண்டு நிறுவனம் நடத்தும் ஒரு பெண் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருந்தார். அவரால் சமூகத்தில் நல்ல தாக்கத்தை எப்படி உருவாக்க முடியும்’’ என்றார்.
அவரது பேச்சை கண்டிக்கும் வகையில் நடிகைகளும், இளம்பெண்களும் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நடிகை கங்கனா ரணாவத்தும் லேசாக கிழிந்த ஜீன்ஸ் அணிந்துள்ள தனது புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டு, “கிழிந்த ஜீன்ஸ் அணிய விரும்பினால் இந்த புகைப்படத்தில் குளிர்ச்சியாக இருப்பது போன்ற ஜீன்ஸை அணியுங்கள்.
அது ஸ்டைலாக தெரியும். அதற்கு மாறாக வீடு இல்லாத பிச்சைக்காரர்கள் போன்று கிழிந்த ஜீன்ஸை அணிய வேண்டாம். இளசுகள் பலர் தற்போது இப்படித்தான் அணிகிறார்கள்” என்றார்.
இந்த கருத்துக்கு சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கங்கனா அரைகுறை ஆடையில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இன்னும் சிலர் தீபிகா படுகோனே, சாரா அலிகான், டாப்சி, ஆலியா பட் உள்ளிட்டோரின் கிழிந்த
ஜீன்ஸ் புகைப்படங்களை வெளியிட்டு இவர்களைத்தான் கங்கனா ரணாவத் சாடி உள்ளார் என்று பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.
மாப்பிள்ளை தேடும் ஷெரின்
மாப்பிள்ளை தேடும் ஷெரின்
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின்
. தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3 சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் தற்போது 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது மண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘பொண்ணு ரெடி, மாப்பிள்ளை எங்கே?’ என்று பதிவு செய்திருக்கிறார்.
இதற்கு ரசிகர்கள் நான் இருக்கிறேன் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் சிலர், பொண்ணுக்கு பாட தெரியுமா? ஆட தெரியுமா? என்று கேள்வியும் கேட்டு வருகிறார்கள்.
கபிலன் வைரமுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
கபிலன் வைரமுத்துக்கு கிடைத்த அங்கீகாரம்
சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன் வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.
இது குறித்து வெளியாகியிருக்கும் பிரத்யேக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. உரைகள், பட்டறைகள் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் எளிமையான முறையிலும் புதுமையான வழிகளிலும் வாசிப்பை அறிமுகம் செய்ய முனைகிறது வாசிப்பு விழா.
கபிலன் வைரமுத்து
கலைச் சிற்பங்கள், விளையாட்டுகள், புதுமையான இலக்கியத் தடங்கள் போன்றவை அதில் அடங்கும்.
தேசிய வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வு வாசிப்பு விழா. இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும் அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும்
(இரண்டாவது), சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன.
நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன.
நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் எழுத்தாளர்கள் இருவரும் கெளரவிக்கப்பட விருக்கிறார்கள்.
அவர்மீது காதல் வர அந்த கதைதான் காரணம் நடிகை
அவர்மீது காதல் வர அந்த கதைதான் காரணம் நடிகை
காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்பில் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது.
இப்படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த செல்வராகவன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே ஆகிய படங்களை இயக்கினார்.
சமீபத்தில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்ததாக தனுஷை வைத்து நானே வருவேன் என்ற படத்தை இயக்க இருக்கிறார்.
மனைவியுடன் செல்வராகவன்
இந்நிலையில் இவரது மனைவி கீதாஞ்சலி செல்வராகவன் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், 2010ஆம் ஆண்டும் செல்வராகவன் உருவாக்கி கானல் நீர் என்ற கதையை படித்துதான் செல்வராகவன் மீது காதல் வயப்பட்டேன் என்று கூறுகிறார்.
மேலும் கானல் நீர் திரைப்படம் தான் ஆர்யா, அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.






