Posted in இலங்கை செய்திகள்

பளையில் வெடிகுண்டு மீட்பாம் – கதை விடும் இராணுவம்

பளையில் வெடிகுண்டு மீட்பாம் – கதை விடும் இராணுவம்

பளை பகுதியில் இரண்டரை கிலோ எடையுள்ள சி-4 வெடிமருந்து

இராணுவத்தினரால் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

பளை பகுதியில் உள்ள மிதிவெடி அகற்றும் நிறுவனத்திற்குள் புகுந்த இரண்டு சந்தேகநபர்கள் அங்கு இருந்த வெடி மருந்துகளை

திருடிக் கொண்டு வெளியில் வந்தபோது நிறுவனத்தின் காவலாளி கண்டதால்

குறித்த வெடிமருந்து மூட்டையைப் போட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கும் இராணுவத்துக்கும் தகவல் வழங்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினர் சோதனையிட்டனர். அப்போது குறித்த மூட்டைக்குள் இரண்டரை கிலோ சி-4 வெடிமருந்து மீட்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த இரு சந்தேக நபர்களையும் தேடும் நடவடிக்கையில் இராணுவம் மற்றும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

      Posted in இலங்கை செய்திகள்

      19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை- மகிந்த

      19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்ய பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை- மகிந்த

      19 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை இரத்து செய்வதாக இருந்தால் பலம்மிக்க பாராளுமன்றத்தின் அதிகாரம் தேவை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

      வாரியபொல பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே பிரதமர் இதனை கூறினார்.

      அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், ஜனாதிபதி பிரதிநித்துவப்படுத்தும் கட்சியினால் அரசாங்கம் ஒன்று அமைய

      வேண்டும். அரசியல் அமைப்பு மாற்றப்பட வேண்டியது அவசியம். புழிவாங்கும் நடவடிக்கையை முன்னெடுக்கவே அரசியல் அமைப்பு

      கொண்டுவரப்பட்டது. அதனை தயாரித்தவர்கள் இன்று அதை மாற்றுமாறு கூறுகின்றனர். ஆகவே பலமிக்கதொரு அரசாங்கம் அமைய உங்களுக்குள்ள பொறுப்பை நிறைவேற்றுங்கள்.

      அதேபோல் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் குருணாகல் பிரச்சார அலுவலகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

      மேலும் குருணாகல் பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் இளைஞர் மாநாடும் பிரதமர் தலைமையில் இடம்பெற்றது

          Posted in இலங்கை செய்திகள்

          வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு

          வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் நிறைவு

          18 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

          அதேபோல் இதுவரை 11 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

          எதிர்வரும் 25 ஆம் வீடுகளில் காட்சிப்படுத்தப்படும் பத்திரங்களை அச்சிட்டு முடிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

          இதேவேளை மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் வாக்களிக்க பிரத்தியோக

          வாக்களிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

          வடக்கில் தேர்தல் பணிகளில் ஈடுப்படவுள்ள ஊழியர்களை தெளிவுப்படுத்தும் சந்திப்பில் அவர் இதனை கூறினார்.

          வானொலிகள், தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் பணம் கொடுத்து செய்யப்படும் விளம்பரங்களை தனக்கு தடுக்க அதிகாரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

          எனவே வானொலிகள், தொலைக்காட்சிகள் போன்றவற்றில் ஒளி, ஒலிபரப்பாகும் செய்திகளில் வேட்பாளர்களுக்கு சம அந்தஸ்த்து வழங்குமாறும் கேட்டுள்ளார்.

          இதேவேளை, தேர்தலை நடத்துவதற்கான சுகாதார வழிமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை இன்று (22) நள்ளிரவு

          வெளியிடவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான நம்பிக்கை – வர்த்தக சம்மேளனம்

              இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான நம்பிக்கை – வர்த்தக சம்மேளனம்

              இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் புதிய சந்தை வாய்ப்புகள் பற்றி உறுதியான

              நம்பிக்கை கொண்டுள்ளார்கள் என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் அறிவித்துள்ளது.

              சம்மேளனம் யுஎஸ் எயிட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட கருத்து கணிப்பின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

              சிறிய மற்றும் நடுத்தர ஏற்றுமதிகளை விட பாரியளவிலான ஏற்றுமதிகளுக்கு எதிர்காலத்தில் கூடுதலான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  ஹெலிகொப்டரில் பயணம் செய்த எட்டு அடி புத்தர்

                  ஹெலிகொப்டரில் பயணம் செய்த எட்டு அடி புத்தர்

                  இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ – 17 ஹெலிகொப்டர் மூலம் 3.5 டொன் எடைகொண்ட எட்டு அடிகள்

                  உயரமான புத்தர் சிலையானதுஇ வீரகெட்டிய மந்தாதுவ விளையாட்டு

                  மைதானத்திலிருந்து முல்கிரிகல ரஜமகா விகாரைக்கு நேற்றுமுன்தினம் தினம் எடுத்துச்செல்லப்பட்டது.

                  சிலையை எடுத்துச் செல்வதற்காகவென விசேடமாக வடிவமைக்கப்பட்ட உபகரண தொகுதி மூலம் குறித்த சிலை

                  எடுத்துச்செல்லப்பட்டது. 270 அடி உயரத்திற்கு விமானம் மூலம் தூக்கப்பட்ட

                  சிலையானது சுமார் சுமார் மூன்று கடல் மைல் தூரம் வரை கொண்டு செல்லப்பட்டது.

                  இந்த வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையின் விமானப் படைத் தளபதி

                  எயார் மார்ஷல் சுமங்கல டயஸின் பணிப்புரைக்கமைய மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                      ராகி அப்பம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க சுவையே தனி
                      Posted in இலங்கை செய்திகள்

                      கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி

                      கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வர் பலி

                      கடலில் நீராடச் சென்ற 3 பெண்கள் உட்பட சிறுவன் ஒருவன் நீரில் மூழ்கி

                      உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

                      16, 20 மற்றும் 30 வயதுடைய மூன்று பெண்களும் 14 வயதுடைய சிறுவன் ஒருவனும் இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                      வத்தள திக்ஓவிட்ட கடலில் நேற்று (20) மாலை நீராடச் சென்றனர் நால்வரே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது

                          காவல்துறை சுற்றிவளைப்பில் 25,912 பேர் கைது

                          கடந்த 2 வார காலப்பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு

                          மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டமை தொடர்பில் 25,912 கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது

                              Posted in இலங்கை செய்திகள்

                              கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு

                              கொரோனா வைரஸ் – வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இழப்பீடு

                              கொரோனா வைரஸ் தாக்கத்தினால் வெளிநாடுகளில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு

                              இழப்பீடு வழங்கப்படும் என்று இலங்கை வெளிநாட்டுவேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

                              பணியகத்தின் காப்புறுதி நிதியத்தின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

                              கொரோனா நோயினால் வெளிநாடுகளில் பணியாற்றிய 23 தொழிலாளர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பிரிட்டனில் மக்களை குற்றிய நபர் – பயங்கரவாத தாக்குதல்

                                  பிரிட்டனில் மக்களை குற்றிய நபர் – பயங்கரவாத தாக்குதல்

                                  பிரிட்டன் busy Reading park. பகுதியில் அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் கத்தியுடன் புகுந்த நபர் திடீரென கத்தி குத்து தாக்குதலை நடத்தினார்

                                  இதில் இருவர் பலத்த காயமடைந்த நிலையில் அவசர காவு உலங்குவானூர்தி

                                  அம்புலன்ஸ் மூலம் எடுத்து செல்ல பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                                  கறுப்பின மக்களின் போராட்டத்தின் பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
                                  பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என நம்ப படுகிறது

                                  பிரிட்டனில் மக்களை
                                  பிரிட்டனில் மக்களை
                                      Posted in இலங்கை செய்திகள்

                                      பளை வாலிபனை சுட்டு கொன்ற சிங்கள இராணுவம் – மக்கள் மறியல்

                                      பளை வாலிபனை சுட்டு கொன்ற சிங்கள இராணுவம் – மக்கள் மறியல்

                                      வடக்கு தமிழர் தாயாக பகுதியான பளையை சேர்ந்த இருபத்தி

                                      நான்கு வயதுடைய வாலிபர் ஒருவர் சிங்கள இராணுவத்தால் சுட்டு

                                      படு கொலை செய்ய பட்டுளளார்

                                      மணல் ஏற்ற சென்ற பொழுது இவரை நோக்கி இராணுவம் சரமாரியான சூட்டு தாக்குதலை நடத்தியது ,இதிலேயே இவர் பலியாகியுள்ளார்

                                      இராணுவ புலனாய்வாளர்கள் வீதி விபத்து மற்றும் இவ்வாறான நேரடி

                                      சூட்டு தாக்குதல்கள் மூலம் தமிழர்களை இலக்கு வைத்து படுகொலை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                                      இந்த கொலையை கண்டித்து பளையில் மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

                                      பளை வாலிபனை சுட்டு கொன்ற
                                      பளை வாலிபனை சுட்டு கொன்ற
                                          Posted in இலங்கை செய்திகள்

                                          தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தார்-சி.சிவமோகன்

                                          தேர்தல் பிரச்சாரத்தினை ஆரம்பித்தார்-சி.சிவமோகன்

                                          19-6-2020 காலை 9.00 மணிக்கு முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ

                                          சி.சிவமோகன் அவர்கள் வவுனியாவில் அமைந்துள்ள கிடாச்சூரி கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து தனது

                                              Posted in இலங்கை செய்திகள்

                                              சிறிலங்காவின் தேர்தலில் யாரை தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும் ? – பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !

                                              சிறிலங்காவின் தேர்தலில் யாரை தமிழர்கள் தேர்வு செய்ய வேண்டும் ? – பிரதமர் வி.உருத்திரகுமாரன் பதில் !

                                              PM V.Rudrakumaran I Sri Lanka Elections I Tamil Leaders I Tamil Diaspora
                                              சிறிலங்காவின் தேர்தல்கள் தொடர்பிலும், தமிழ் அரசியல்

                                              தலைவர்கள் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் தொடர்பிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமா…
                                              youtu.be

                                              சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. எனினும் அத்தேர்தல்களை தமிழர்கள் தமது ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள

                                              நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், வரும் தேர்தலில் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச்

                                              செல்கின்றவர்களாக, மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமை தேர்வு செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

                                              சமூகவலைத்தளத்தின் ஊடாக இடம்பெற்ற இணையவழி மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இக்கருத்தினை அவர்

                                              தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் மேலும் தெரிவிக்கையில்,


                                              சிறிலங்காவின் தேர்தல் தொடர்பில் கொள்கை முடிவுகளே நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கடந்த பத்து ஆண்டுகளில் எடுத்து வருகின்றது.
                                              எம்மைப் பொறுத்தவரை சிறிலங்காவின்; தேர்தல் மூலம் தமிழ்மக்களுக்கு விடிவு கிடைக்கப்போவதில்லை. சிறிலங்காவின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பத்து வீதத்துக்கு

                                              குறைவானவர்களே தமிழர்கள் உள்ளனர். இதனால் சிறிலங்காவின் நாடாளுமன்றத்துக்கு சென்று எதனையும் சாதித்துவிடமுடியாது.

                                              கடந்த காலங்களை எடுத்துப்பார்த்தால் 1972ம் ஆண்டு அரசியலைமைப்பு சட்டம் கூட தமிழ்மக்களின் எதிர்ப்புக்கு

                                              மத்தியில் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது. 1978ம ஆண்டிலும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டது.

                                              https://youtu.be/Un_eEmcZ9Gw

                                              சிறிலங்காவின் அரசியல்வெளியில் என்பது தமிழர்களுக்கான பங்கெடுப்பு இடமில்லை. ஐ.நாவின் முன்னாள் பொதுச்செயலர் பான் கீ மூன் நியமித்த வல்லுனர் குழுவின் அறிக்கையும் கூட ‘ தமிழ்

                                              மக்கள் தமது இன அடையாளத்தின் அடிப்படையில் அரசியல், சமூக, பொருளாதார ரீதியாகப் புறந்தள்ளப் பட்டு வந்தமையே இனப்பிரச்சனையின் அடிப்படையாக இருந்துவந்த

                                              காரணத்தினால், இன்றும் தொடர்ந்து கொண்டு போகும் புறந்தள்ளல் வகையிலான கொள்கைகள் மிகவும் ஆபத்தானவை

                                              என சிறிலங்காவின் அரசியல் நீரோடையில் தமிழர்களின் பங்களிப்புக்கான காத்திரமான இடம்இல்லை தெரிவித்துள்ளது.

                                              காரணம் சிறிலங்கா ஒரு பௌத்த இனவாத இறுகிய இனவாத கட்டமைப்பாகும். அதற்குள் தமிழர்களுக்கான அரசியல் வெளியே

                                              இல்லை. இதன் காரணமாகத்தான் ஆயுதப் போராட்டமே தொடங்கியது. அதனால்தான் நிகழ்வுபூர்வமான ஒர் அரசினை நிறுவினோம்.

                                              அதேசமயம் சிறிலங்காவின் தேர்தல்களை நாம் பயன்படுத்த வேண்டும். எமது நிகழ்ச்சி நிரலுக்கு அமைய அதனை ஒரு கருவியாக கையாளவேண்டும். இந்த தேர்தல்களில்

                                              பங்கெடுக்கின்ற தமிழர்கள் தமிழ்தேசியத்தை முன்னெடுத்துச் செல்கின்றவர்களாக இருக்க வேண்டும்.


                                              மக்களை நேரடிப்போராட்டத்தில் ஈடுபடுத்தக்கூடிய தலைமையினைத்தான் தேர்வு செய்ய வேண்டும்.

                                              புலம்பெயர் தேசங்களில் நாம் பல இராஜதந்திரிகளைச் சந்திக்கும் போது, தாயக இருந்து வருகின்ற தலைவர்கள் ஒன்றைச்

                                              சொல்கின்றார்கள், நீங்கள் இன்னொன்றைச் சொல்கின்றீர்கள் என இராஜதந்திரிகள் கூறுகின்றார்கள். தமிழர்களுடைய அடிப்படைக் கோரிக்கைகள் பலவீனப்படுகின்றது.

                                              தாயகத்தில் இருக்கின்ற தலைவர்கள் இனப்படுகொலை, சர்வதேச நீதிமன்றம், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு சிறிலங்காவை கொண்டு செல்வதற்கு வெளிப்படையாக

                                              ஈடுபாடுகாட்டவேண்டும். இதனைச் சொல்வதற்கும் சிறிலங்காவின் ஆறாவது திருத்தசட்டமோ, பயங்கரவாத தடைச்சட்டம் ஒரு தடையாக இல்லை. அதனை ஒரு சாட்டாக சொல்லமுடியாது.

                                              தமிழர்களுடைய அடிப்படை விடயங்களை சொல்லக்கூடிய தமிழ் தேசியத்தை முன்னெடுக்க கூடியவர்கள் தாயக மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என எதிர்பார்கின்றோம்.

                                              1986ம் ஆண்டு திம்புவில் பேச்சுவர்த்ததை தொடங்கியத்தில் இருந்தே எங்களுடைய தேசிய இனப்பிரச்சனை கொழும்பு

                                              எல்லையைத் தாண்டிவிட்டது. கொழும்புடன் கதைத்து நாங்கள் ஒன்றும் செய்யப் போவதில்லை. இந்த யதார்த்த்தினை தாயக தமிழ்அரசியல் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

                                              கொழும்புடன் பேசத் தொடங்கினால், இன்று சர்வதேசமயப்பட்டுள்ள எமது பிரச்சனைக்கும் சர்வதேச ஆதரவுக்கு பின்னடைவாகும். பௌத்த இனவாத கட்டமைப்பான

                                              சிறிலங்காவின் நாம் கதைத்து ஒன்றினையும் பெறமுடியாது. திம்பு முதல் தாய்லாந்து ஜெனீவா என்று எமது பிரச்சனைகளை

                                              சர்வதேமயப்படுத்திவிட்டுள்ள நிலையில், மீண்டும் கொழும்புக்குள் தமிழர் பிரச்சனையைக் தாயக தலைவர் கொண்டு செல்லக்கூடாது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் இடித்துரைத்தார்.

                                              மேலும் தமிழர் தாயகத்தின் தென்முனை நோக்கி சிறிலங்கா அரசாங்கம் நியமித்துள்ள தொல்பொருள் செயலணி குறித்து

                                              கருத்தினை தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழர் தேசத்தை கூறுபோடுகின்ற ஒரு அரசியல் யுத்தி இதுவெனத் சுட்டிக்காட்டியுள்ளார்.


                                              1948ம் ஆண்டு தென்தமிழீழத்தில் 1 வீதமாக இருந்த சிங்கள பரம்பல், இன்று 30 வீதமாகியுள்ளது. 1949ம் ஆண்டே

                                              டி.எஸ்.செனநாயக்கா சிங்கள மயமாக்கலைத் தொடங்கிவிட்டார். அதன் ஒரு தொடர்சியாகவே இன்றும் தொல்லியல் ஆய்வு என்ற பெயரில் செயலணியை சிறிலங்கா அமைத்துள்ளது.

                                              தமிழர் தேசத்தை கூறு போட்டு, தமிழர் தாயக அரசியலை பலவீனப்படுத்த முனைகின்ற சிறிலங்காவின் இந்த

                                              செயற்பாட்டுக்கு எதிராக மக்கள் நேரடி போராட்த்தில் ஈடுபட வேண்டும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்..

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  இன்று -கோட்டாவுக்கு 71 ஆவது பிறந்தநாள்

                                                  இன்று -கோட்டாவுக்கு 71 ஆவது பிறந்தநாள்

                                                  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்தநாள் இன்றாகும்.

                                                  1949 ஆண்டு ஜூன் மாதம் 20 ஆம் திகதி பிறந்த கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரராவார்.

                                                  இராணுவ அதிகாரியாக சேவையாற்றிய அவர் பின்னர் பாதுகாப்பு செயலாளராக

                                                  செயற்பட்டு 30 வருட கொடிய யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பிரதான பங்களிப்பை வழங்கியிருந்தார்.

                                                  பின்னர் பாதுகாப்பு செயலாளர் பதவிக்கு மேலதிகமாக நகரபுற அபிவிருத்தி

                                                  செயலாளர் பதவியை வகித்து யுத்தத்தின் பின்னர் நகர அலங்கார மற்றும்

                                                  நகர்புற அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை பெற்றுக் கொடுத்து சிறந்த சேவையை பெற்றுக் கொடுத்திருந்தார்.

                                                  கடந்த வருடத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாரிய வெற்றியை

                                                  பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ இந்நாட்டின் 8 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு இன்று ஆரம்பம்

                                                      மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை கொள்வனவு இன்று ஆரம்பம்

                                                      மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது சிறுபோக நெல் அறுவடை இடம்பெறுகிறது.

                                                      அறுவடை காலத்திலேயே நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கத்தின் அறிவுறுத்தலில் நெல் சந்தைப் படுத்தும் சபை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

                                                      மட்டக்களப்பு மாவட்டத்தில் முற்கூட்டியே நெல் விதைப்பு இடம் பெறுவதால் ஏனைய மாவட்ட விவசாயிகளுக்கு முன்னர் சிறுபோக நெல் அறுவடை தொடங்கியுள்ள காலத்திலேயே நெல்லை

                                                      கொள்ளவனவுக்கான நடவடிக்கை எடுக்குமாறு ,மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா அரசாங்கத்தின் கவனத்தை கொண்டுவந்தார். இதனைத்தொடர்ந்து இன்று (20) முதல் இந்த

                                                      மாவட்டத்தின் நெல் சந்தைப்படுத்தும் சபை கொள்வனவு செய்வதற்கு நெல் சந்தைப்படத்தும் சபையின் தலைவர் அனுமதி வழங்கியுள்ளது.


                                                      இதற்கமைய நெல் சந்தைப்படுத்தும் சபை களஞ்சியங்க்டாக நெல் கொள்வனவு செய்யப்படும் முள்ளா முனை, புலி பாய்ந்த கல், தும்பங்கேணி, கயுவத்தை ஆகிய நெல் களஞ்சியங்களிலும் இது

                                                      தவிர தூர விவசாயிகளின் நலன் கருதி மேலும் பல கேந்திரங்களில் உருவாக்கப்படும் நடமாடும் களஞ்சியங்கள் ஊடாகவும் நெல்லை

                                                      கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

                                                      இதன்படி இம் மாவட்ட விவசாயிகள் இன்று முதல் வெளி வியாபாரிகளுக்கு நெல்லை குறைந்த விலைக்கு கொடுப்பதை தவிர்த்து அரசாங்கத்தின் உத்தேச விலையான ஒரு கிலோ நன்கு

                                                      உலர்த்தப்பட்ட நெல்லை ஐம்பது ரூபாவிற்கும் போதியளவு உலர்த்தப்படாத நெல்லை நாற்பத்து நான்கு ரூபாவிற்கும் விற்பனை செய்யலாம் எனவும் வெளி வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு

                                                      நெல்லை விற்று நஷ்டமடைவதிலிருந்து விடுபட்டு உரிய பயனைப் பெறுமாறும் முடிந்த அளவு நெல்லை உலர்த்தி அதிகபட்ச விலையான ஒரு கிலோ ஐம்பது ரூபாவிற்கு விற்பனை செய்து

                                                      கொள்ள முயற்சிக்குமாறும் அரச அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.;.
                                                      இந்த நெல் கொள்வனவு ஏற்பாடு சம்பந்தமாக நெல் சந்தைப்படுத்தும் சபையினால் தமக்கு செய்யப்பட்டுள்ள

                                                      அறிவுறுத்தலில் மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதி நிதிகளுக்கு தெளிவு படுத்தும் விசேட கூட்டம் ஒன்று மட்டக்களப்பு

                                                      மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரசாங்க அதிபரின் தலைமையில் நேற்று (19) நடைபெற்றது.

                                                      ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவும் விவசாய உற்பத்தியிலும் விவசாய வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். இந்த அரசாங்கத்தின் மூலம் எதிர் காலத்தில்

                                                      விவசாயிகள் கூடுதல் நன்மை அடைய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நெல் உற்பத்தியிலும் பயிர் உற்பத்தியிலும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். நெல்

                                                      சந்தைப்படுத்தும் சபை நெல்லை கொள்வனவு செய்யும் பணியில் சுமார் 2,700 மெற்றிக் தொன் அதிகளவு நெல்லை மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் விற்பனை செய்துள்ளதாக மட்டக்களப்பு

                                                      மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
                                                      இந்த விசேட கூட்டத்தில் சிறுபோக நெல் கொள்வனவின் போது அமுல் நடத்தப்படும் விதி முறைகள் மற்றும் விவசாயிகளின்

                                                      எதிர்பார்ப்புகள் விரிவாக ஆராயப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான அறிவுரைகளும் சபை அதிகாரிகளுக்குத் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன. இங்கு விவசாய

                                                      அமைப்புக்களின் பிரதிநிதிகள் கருத்து வெளியிடுகையில் சிறுபோக நெல்லை சநைதைப்படுத்தும் சபையினால் சந்தைப்படுத்துவதற்கு ஏற்பாடு செய்து தந்தமைக்கு

                                                      அரசாங்கத்திற்கும் முயற்சிகளை மேற்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜாவிற்கும் நன்றி பாராட்டுதலை தெரிவித்தனர்.

                                                      இந்த விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீ காந், நெல் சந்தைப் படுத்தும் சபையின் கிழக்கு

                                                      பிராந்திய முகாமையாளர் நிமல் எகநாயக மற்றும் நெல் சந்தைப் படுத்தும் சபையின் உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புகளின்

                                                      பிரதிநிதிகள், விவசாய திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்..

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          14,966 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறல்

                                                          14,966 பேர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறல்

                                                          கொரோனா தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்த 153 பேர் தமது வீடுகளுக்கு திரும்பவிருப்பதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்

                                                          முப்படையினரின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் 40 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் 3970 பேர்

                                                          தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

                                                          இதுவரையில் 14,966 Nர் தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து வெளியேறியிருப்பதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          ஜரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு சாதகமாக பதில்

                                                          ஜரோப்பிய ஒன்றியம் ஜனாதிபதிக்கு சாதகமாக பதில்

                                                          கொவிட் 19 நோய்த் தொற்றுக்கு பின்னர் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின்

                                                          கொழும்பில் உள்ள தூதுவர்களை ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சந்தித்து கலந்துரையாடினார்.

                                                          தொற்று நோய் காரணமாக தோன்றிய சுகாதார ரீதியிலான சவால்களை முறியடிக்க பொதுமக்கள் சுகாதார சேவையை

                                                          உடனடியாக ஈடுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார். பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன்

                                                          சுகாதார பரிசோதகர்கள் மூலம் மிகச் சரியான முறையில் தொற்றுக்குள்ளானவர்கள் மட்டுமன்றி அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்களையும் அடையாளம் கண்டதுடன், அவர்கள்

                                                          தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கையில் வைரசை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு இந்நடவடிக்கையே காரணமாகியது.

                                                          நாடு எதிர்நோக்கும் அடுத்த சவால் பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அவர்கள்

                                                          , தற்போது பொருளாதார அபிவிருத்தி வேகம் மிக கீழ் மட்டத்தில் உள்ளதாகவும் தேசிய கடன் தொகை உயர்வடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

                                                          இந்நெருக்கடியான நிலையை வெற்றிகொள்வதற்கு இறக்குமதியை கண்டிப்பாக கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவ்வாறு

                                                          இருந்தாலும் இலங்கை மூடிய பொருளாதார நாடாக கருதப்பட மாட்டாது.

                                                          உள்நாட்டு கைத்தொழிலை மேம்படுத்தும் தமது நோக்கம் பற்றி குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், பல்வேறு உணவுப் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமென்பதையும்

                                                          சுட்டிக்காட்டினார். அதனால் இக்கைத்தொழில் துறையை நவீனமயப்படுத்துவதே இலங்கையின் தற்போதைய தேவையாகும். சேதனப் பசளை, தரமான விதைகள் மற்றும் முன்னேற்றகரமான

                                                          தொழிநுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் மேலும் தெளிவுபடுத்தினார்.

                                                          உரிய களஞ்சிய வசதிகள் இல்லாததன் காரணமாக விவசாய உற்பத்திகளில் 40% வீதம் அளவில் அழிவடைகின்றது. அதனால்

                                                          பதப்படுத்தல் மற்றும் புதிய உற்பத்திகளை உலர வைத்தல் முறைமைகளை முன்னேற்றும் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

                                                          தற்போதைய சூழ்நிலையில் கடன்களை அறவிடாமல் இருப்பது, இலங்கைக்கு நன்மைபயக்கக்கூடியதாக அமையுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்தும் கடன்களை

                                                          பெற்றுக்கொள்ளுதல் மாற்றீடாக அமையாதென சுட்டிக்காட்டியதுடன், இலங்கைக்கு தற்போது தேவைப்படுவது புதிய முதலீடுகள் எனவும் தெரிவித்தார்.

                                                          சூரிய சக்தி மற்றும் காற்றின் விசையை பயன்படுத்தி உருவாக்கப்படும் மீள்சுழற்சி எரிபொருள் செயற்திட்டம் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்கள் ஐரோப்பிய சங்க

                                                          தூதுக்குழுவின் அவதானத்திற்குட்படுத்தினார். நாட்டில் இளைஞர் சமுதாயத்திற்கு புதிய தொழிநுட்பத்திற்கான வாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் வகையிலான தகவல் தொழிநுட்பத்தை

                                                          அடிப்படையாகக்கொண்ட கல்வி முறைமையொன்றை ஏற்படுத்தும் தமது நோக்கம் பற்றியும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஒன்லைன் முறைமையில் கல்விகற்கும் மாணவர்களின்

                                                          எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளது. அதிகளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இலங்கையினுள் பிரவேசிக்கும்

                                                          சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதற்காக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தமது சட்ட வரைபுகளை தற்போது மறுசீரமைத்துக் கொண்டிருக்கிறது.

                                                          ஜனாதிபதி ராஜபக்ஷ அவர்களின் செயற்பாடுகளுக்கு சாதகமாக பதிலளித்த ஐரோப்பிய சங்க பிரதிநிதிகள், தமது நாடுகள்

                                                          இத்துறையில் இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடிய பல்வேறு முறைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடினர்

                                                          ஜரோப்பிய ஒன்றியம்
                                                          ஜரோப்பிய ஒன்றியம்
                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              இந்தியாவுடன் மகிந்தா பேச்சு

                                                              இந்தியாவுடன் மகிந்தா பேச்சு

                                                              இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் சந்திப்பு

                                                              இடம்பெற்றுள்ளது.

                                                              இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது.

                                                              இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  இலங்கையில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

                                                                  இலங்கையில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

                                                                  இலங்கையில் நேற்றைய தினம் 22 பேருக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

                                                                  மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து நாட்டில் இதுவரை 1947 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                                                                  இந்நிலையில் புதிதாக கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்றுக்கு இலக்காகியதாக இனம் காணப்பட்ட 22 பேரில் 18 பேர்

                                                                  டுபாய் நாட்டில் இருந்து வருகை தந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

                                                                  அத்துடன் ஏனையவர்களுள் கட்டாரில் இருந்து வருகை தந்த இருவர், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வருகை தந்த ஒருவர் மற்றும்

                                                                  ரஷ்யாவில் இருந்து வருகை தந்த ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

                                                                  இதுவரை 1421 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                                      சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

                                                                      சேவையில் இருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப்படை அதிகாரிகளை மீண்டும் சேவைக்கமர்த்த பாதுகாப்பு அமைச்சு தீர்மானம்

                                                                      சேவையிலிருந்து விலகிய பொலிஸ், விசேட அதிரடிப் படை வீரர்கள் உள்ளடங்கலான பொலிஸ் அதிகாரிகளை நாட்டில் சட்டம் ஒழுங்கை

                                                                      வலுப்படுத்தும் வகையில் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.

                                                                      இதற்காக மூவர் அடங்கிய குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அவர்களை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள பாதுகாப்பு

                                                                      அமைச்சுக்கு 2020 பெப்ரவரி மாதம் 19ம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

                                                                      இதற்கமைய 2009 ஜூன் 1ம் திகதிக்கு முன்னரும் பின்னரும் சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்களில் 2020 ஜனவரி 1ம் திகதியாகும் போது 50 வயதுக்குட்பட்டவர்களை

                                                                      மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கையானது முறையாக மற்றும் திறந்த செயற்றிட்டத்தின் மூலம் மூவர்

                                                                      அடங்கிய குழுவின் பரிந்துரைக்கேற்ப தேசிய பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் ஒப்புதலோடு மேற்கொள்ளப்படவுள்ளது.

                                                                      சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்களிடமிருந்து அமைச்சு பெறும் முறையீடுகளை கருத்தில் கொண்டு அவர்களை

                                                                      மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளும் வழிவகைகள் குறித்து ஆராயுமாறு பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல்

                                                                      குணரத்ன பணிப்புரைகளை வழங்கியுள்ளார். இந்தக் குழுவானது, 2009 ஜூன் 01க்கு முன்னரும் பின்னரும் சேவையில் இருந்து விலகிய

                                                                      அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட முறையீடுகள் குறித்து ஆராயவுள்ளது.

                                                                      2009 ஜூன் முதலாம் திகதிக்குப் பின்னர் சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீண்டும் சேவையில் இணைக்கப்படும் போது அவர்கள், பொலிஸ் மா அதிபரால்

                                                                      குறிப்பிடப்படும் பிரதேசத்தில் குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு திறன் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அமைய

                                                                      பணியாற்ற வேண்டும். இக்கால எல்லைக்குள் அவர்கள், இடமாற்றம் பெற்றுச் செல்ல எதிர்பார்ப்பதாயின் இது தொடர்பாக தேசிய பொலிஸ் ஆணைக் குழுவில் முறையீடு செய்தல் அவசியமாகும்.

                                                                      சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் சேவையில் இருந்து விலகியதற்கான பின்னணி குறித்து

                                                                      ஆராயப்பட்ட பின்னர் அவர்கள் மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட, உடல் மற்றும் உளரீதியாக தகுதியுள்ளவர்கள் என

                                                                      பொலிஸ் வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படுதல் வேண்டும்.

                                                                      2009 ஜூன் முதலாம் திகதிக்கு முன்னர் சேவையிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் சேவையில் இணைய முறையீடு

                                                                      மேற்கொள்ளும் அதிகாரிகள், சேவை காலத்தில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் (நடவடிக்கை வலயம்) ஒரு வருடம் பணியாற்றி இருத்தல் வேண்டும்.

                                                                      சேவையில் இருந்து விலகிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது முறையீடுகளை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ

                                                                      இணையத்தளமான www.defence.lk இல் அல்லது இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.police.lk இல் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி

                                                                      செய்வதன் மூலம் அளிக்க முடியும். மேலும் இதுதொடர்பான மேலதிக விபரங்களை 0112887884 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

                                                                      விண்ணப்பங்களை அனுப்பும் போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் ‘மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளல் 2020’ என குறிப்பிடல் அவசியமாகும். மீண்டும் சேவையில்

                                                                      இணைத்துக்கொள்ள பரிசீலனை செய்வதற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தை 2020 ஜூலை, 17ம் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ அனுப்பி வைத்தல் வேண்டும்.

                                                                      விண்ணப்பங்கள் அனுப்பப்படவேண்டிய முகவரி : மேலதிக செயலாளர், பாதுகாப்பு அமைச்சு, (சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு) 14ம் மாடி, சு{ஹருபாய, பத்தரமுல்ல.

                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                          யாழ் பறந்த பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர்

                                                                          யாழ் பறந்த பாதுகாப்பு பாதுகாப்பு அமைச்சர்

                                                                          வடக்கில் தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு படையிரால்

                                                                          மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தெடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழிற்கான விஜயம் ஒன்றினை 17.06.2020 மேற்கொண்டார்.

                                                                          கோவிட் -19 பரலைத் தடுக்கும் தேசிய மையத்தின் தலைவரும் பாதுகாப்பு அதிகாரிகாரிகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர

                                                                          சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, யாழ்ப்பாணம்,

                                                                          முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் தளபதிகள், பிரிவுகளின் கட்டளைத்தளபதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வட பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ்

                                                                          மா அதிபர், மேலும் சில அதிகாரிகள் உள்ளிட்ட உயர் மட்ட பாதுகாப்பு அதிதிகள், பாதுகாப்புச் செயலாளருடன் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

                                                                          கொழும்பிலிருந்து விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை சென்றடைந்த பாதுகாப்புச் செயலாளர்

                                                                          தலைமையிலான உயர்மட்ட தூதுக்குழுவை யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய வரவேற்றார்.

                                                                          இந்த விஜயத்தின் போது, யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, கொரோனா வைரஸ் பரவல்,

                                                                          போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை தடுத்தல், சுகாதார அதிகாரிகளுக்கு

                                                                          ஒத்துழைப்பளிப்பதில் பாதுகாப்புபடையினரின் பங்கு, தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தான களநிலவரம்

                                                                          என்பன தொடர்பாக முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளினால் பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

                                                                          யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பேண பாதுகாப்பினை

                                                                          வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேஜர் ஜெனரல் குணரத்ன முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார்.