Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மத்திய வங்கியை கிழித்து தொங்க விட்ட – பெரும் புள்ளி
மத்திய வங்கியை கிழித்து தொங்க விட்ட – பெரும் புள்ளி
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும்
நடவடிக்கையில் இலங்கை மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில்
செயற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித்
நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் சில சிரேஷ்ட அதிகாரிகள் தலைகணத்துடன்
நாட்டில் நிலவும் நிதிப் பிரச்சினைகளில் தலையிடாமல் முனிவர்கள் போல்
இருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ சிக்கலிற்கு
அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்
அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் மகிந்தா
அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் மகிந்தா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீரிகம பகுதியில் மத்திய அதிவேக
நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மகிந்தா அரசை காட்டி கொடுத்த கருணா -வீடியோ
மகிந்தா அரசை காட்டி கொடுத்த கருணா -வீடியோ
இலங்கையில் புலிகள் அமைப்பை உடைத்ததை போன்று
இலங்கைக்குள் உடைவுகளை ஏற்படுத்த கருணா சொன்ன விடயங்கள் சிலிர்க்க வைக்கிறது
தந்திரோபாய முறையில் தமிழர்களை காத்திடவும் ,அதே வேளையில்
சிங்களத்தை படுகுழியில் தள்ளிடவும் மிக நாசூக்காக வழங்கிய கேள்வி பதில்கள் இவை
சிங்கள உளவாளி ஒருவர் செவ்வி காண , நெத்தியடியாக இரு தரப்பையும்
சாடி ,அவர்களை மிக பெரும் பொறிக்குள் தள்ளிவிட்டுள்ள கருணாவின்
புத்திசாலித்தனம் அறிவாழ்ந்த செயல் இதில் வெளிச்சம் இடுகிறது
உடல் அசைவு மற்றும் ,உதடு அவிழ்ப்பு என்பன கருணா கருணா தான் எ
ன்பதை ,இன்றுவரை கருணாவின் வீரத்தை பறை சற்றும் போராளிகள் ,கூறுவது சரிதான் என்பதை இவை கட்டியம் இடுகிறது
எட்டப்பன் என கூறும் அதே போராளிகள் கருணாவின் மறுபக்க ஆற்றல்,
எப்படி இருக்கும் என்பதை கூறியது இதில் புரிந்து கொள்ள முடிகிறது
பிள்ளை பெற்ற 14 வயது சிறுமி – தந்தையால் நடந்த கொடூரம்,
பிள்ளை பெற்ற 14 வயது சிறுமி – தந்தையால் நடந்த கொடூரம்,
இலங்கை காம்பாக பகுதியில் இளம் 14 வயது சிறுமி ஒருத்தி வளர்ப்பு தந்தை ஒருவரால்
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் கர்ப்பமடைந்தார் .
தாயின் இரண்டாவது கணவனால் இவர் கற்பழிக்க பட்ட நிலையில்தற்போது சிறுமி கம்பகாவில் குழந்தையை பெற்று எடுத்துள்ளார்
இது தொடர்பான நிதி விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உளள்து ,நாடு போரை போக்கை பாரு செல்ல கண்ணு
நாட்டில் 90 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன-அரசாங்க அதிபர்
நாட்டில் 90 வீதமான கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன-அரசாங்க அதிபர்
திருகோணமலை மாவட்டத்தில் எஞ்சியுள்ள நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை அகற்றுவது தொடர்பான கலந்துரையாடல்
இன்று மாவட்ட செயலகத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்றது.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சின்
செயலாளர் டி.பி.ஜி.குமாரசிரி கருத்து தெரிவிக்கவயில் நாட்டில் 90 வீதமான பிரதேசங்களில் கண்ணிவெடி அகற்றப்பட்டுள்ளன. இன்னும் சி பகுதியிவுள்ள கண்ணிவெடிகள அகற்ற வேண்டும்.
திருகோணமலை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமாக 119.87 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகளை
அகற்றவேண்டிய நிலை முன்னர் காணப்பட்டது. இதில் 119.13 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பில் இவை அகற்றப்பட்டுள்ளன.
அதன்படி இன்னும் 0.74 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பு மாத்திரமே கண்ணி வெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளது.
எஞ்சியுள்ள பகுதியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணி மக் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அகற்ற
வேண்டிய நிலப்பரப்பின் உடமை யாருக்குறியது அகற்ற முன்னர் அப்பகுதியில் தொல்பொருளியல் சான்றுகள் உள்ள பிரதேசமா?
உள்ளிட்ட பல விடயங்களை துறைசார் திணைக்களங்களின் ஒருங்கிணைப்போடு ஆராய்ந்து தீர்க்கமான முடிவுக்கு வருவதுடன்
அது தொடர்பில் உரிய மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிக்கையிடல் வேண்டும்.
அத்துடன் பிரதேச காணி பயன்பாட்டுக்கூட்டத்தில் இவ்விடயங்களை ஆராய்வதுடன் தீர்வு காண முடியாத விடயங்களை மாவட்ட மட்ட கூட்டத்திற்கு கொண்டு வரல்
வேண்டும். குறிப்பாக பிரதேச செயலாளர்கள் தமது பிரதேசங்களில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டிய இடம் தொடர்பில் பூரண விபரங்களை அறிந்து கொள்வதுடன் குறித்த கிராம
உத்தியோகத்தரும் இதனை தெரிந்திருத்தல் இன்றியமையாயதது.
தொல்பொருளியல் சார் இடங்கள் காணப்படுமாயின் அதனது வரலாற்று முக்கியத்துவத்தினை உணர்ந்து உரிய தரப்பிற்கு
அதனை அறிவித்து அவற்றை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இன்றியமையாயதது. எனவே அகற்ற வேண்டிய பிரதேசம்
எந்நிறுவனத்திற்குரியது என்பதனை உரிய துறைசார் நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்று அறிந்து கொண்டு
முறையான அனுமதி மற்றும் பொறிமுறைக்கேற்ப உரிய முறைப்படி வெடிகள் அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க ,கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிர்வாகம்)
எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க ,திருகோணமலை மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், பிரதேச
செயலாளர்கள்,திணைக்கள தலைவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பம்
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதற்கமைவாக அதற்கான அழைப்பிதழை சம்பிரதாயபூர்வமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே தில்ருவன் ராஜபக்ஷ நேற்று கையளித்தார்..
இந்த நிகழ்வு நேற்றுக்காலை விஜேராமவிலுள்ள பிரதரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
கதிர்காம ஆலயத்தின் வருடாந்த எசல உற்சவம் எதிர்வரும் 21ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இலங்கை மேற்கொண்ட முயற்சிகள்
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் நிலையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தலைமையில்இ முப்படை மற்றும் சுகாதாரத்
துறை அதிகாரிகள் ஆகியோரினால் நாட்டில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக
வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம் (ஜூன் 15) இடம்பெற்றது.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் போது தாம் எதிர்கொண்ட கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தனிமைப்படுத்தல்
நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் நிலையங்களின் செயற்பாடுகள், முப்படை மருத்துவர்களின் பங்கு, வைரஸ்
தொற்றுக்குள்ளான வெளிநாட்டவர் மற்றும் வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையர்கள் மற்றும் எதிர்கால சவால்கள் உள்ளிட்ட தேசிய பணிகள் தொடர்பான பல்வேறு விடயங்களை
இலங்கையிலுள்ள எட்டு வெளிநாட்டு பணியகங்களின் பாதுகாப்பு ஆலோசகர்கள் குழுவினருக்கு அதன் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெளிவுபடுத்தினார்.
இதன்போது, இக்கொடிய நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் வழங்கிய அனைத்து சர்வதேச நாடுகளுக்கும் தமது நன்றியை தெரிவத்தார்.
இக்கலந்துரையாடலில், இலங்கைக்கான பங்களாதேஷ் உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் சிஎம்டிஈ செயத் எம்
ஹாகிம், இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர், கெப்டன் அசோக் ராவ், இந்திய உயர் ஸ்தானிகராலய உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் ஆர்.எஸ்.
மிஸ்ரா, ஜப்பான் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் காகு புகாஉரா, மாலத்தீவு உயர் ஸ்தானிகராலய ஆலோசகர்
லெப்டினன்ட் கேணல் இஸ்மாயில் நசீர், பாகிஸ்தான் பாதுகாப்பு உயர் ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சஜ்ஜாத் அலி, ரஷ்ய தூதரக இராணுவ, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய
கூட்டுப்படைகளுக்கான பாதுகாப்பு ஆலோசகர் கேணல் டெனிஸ் ஐ ஷ்கோடா, பாதுகாப்பு மற்றும் அமெரிக்க தூதரக இராணுவ
இணைப்பு பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேணல் டிராவிஸ் ரே கொக்ஸ், சீன மக்கள் குடியரசின் தூதரக இராணுவ இணைப்பு
பாதுகாப்பு ஆலோசகர் (பி.ஆர்.சி) சிரேஷ்ட கேணல் வான் டோங் மற்றும் சீன மக்கள் குடியரசின் தூதரக இராணுவ இணைப்பு
பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட். கேணல் சாங் கியான்ஜின் ஆகியி வெளிநாட்டு இராஜதந்திரிகள் கலந்துகொண்டனர்.
மகனை காட்டி கொடுத்த தாய் – கைது செய்த பொலிஸ்
மகனை காட்டி கொடுத்த தாய் – கைது செய்த பொலிஸ்
வீதியில் சென்றவர்களின் கைப்பேசிகளை பட்டப்பகலில் பறித்து சென்ற இரு இளைஞர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 1 ஆம் திகதி
வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 15 ஆம் திகதியன்று சம்மாந்துறை பொலிஸ் எல்லைக்குட்பட்ட காரைதீவு மற்றும் நிந்தவூர் பகுதியில்
பட்டப்பகலில் வீதியில் தனியாக சென்றவர்களின் பெறுமதியான கைப்பேசிகள் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பறித்து செல்லப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்து.
அதற்கமைய சுமார் ஒரு மாத காலமாக சம்மாந்துறை பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட விசேட பொலிஸ்
குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக சம்பவம் தொடர்பில் 2 சந்தேகநபர்கள் நேற்று (17) கைதாகினர்.
குறித்த கொள்ளையர்கள் கைப்பேசிகளை பறித்து செல்வதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டினை சிசிடிவி
காணொளி காட்சியினை அடிப்படையாக கொண்டு இனங்கண்ட பொலிஸார் பாலமுனை பகுதியை சேர்ந்த 20 மற்றும் 22 வயதுடைய உறவு முறை சகோதரர்களை தாயின் உதவியுடன் கைது செய்தனர்.
குறித்த கைது நடவடிக்கைக்கு பொலிஸாருக்கு கைதான சந்தேக நபரின் தாய் ஒருவர் ஒத்துழைப்பு வழங்கியதுடன்
கொள்ளையடிக்கப்பட்ட கைப்பேசிகளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1000 ரூபாய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி
1000 ரூபாய் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தை 25 ஆம் திகதி
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 1000 ரூபா வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ஆம் திகதி
நடைபெறும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் முன்னாள் மத்திய மாகாண அமைச்சரும்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமாகிய மருதபாண்டி ரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில்,
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களுக்கு இடையிலான கலந்துரையாடலொன்று அலரிமாளிகையில் (18) நடைபெற்றது.
பெருந்தோட்ட துறையின் முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட அமைச்சர் ரமேஸ் பத்திரண, முன்னாள் அமைச்சர் மஹிந்தாநந்த
அளுத்கமகே மற்றும் இ.தொ.காவின் உப தலைவர் செந்தில் தொண்டமான், புதிய பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,
சிரேஷ்ட உறுப்பினரும் சட்டத்தரணியுமான இராஜதுரை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாட் சம்பளம் 1000 ரூபா வழங்குவது தொடர்பாக இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தையில் ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
அடுத்தகட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 25 ம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளதாகவும்
அன்றையதினம் பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளம் தொடர்பான சாதகமான தீர்வு கிடைக்கும் என அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 பேர் கைது
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவில் நிறைவு செய்ய எதிர்ப்பார்ப்பதாக பொலிஸ் ஊடக
பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
குறித்த விசாரணைகளுக்கு அமைய மேலும் சில சந்தேகநபர்கள் கைது செய்யப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் 237 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நேற்று
(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார்.
பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு பதவியுயர்வு
பொலிஸ் ஊடக பேச்சாளருக்கு பதவியுயர்வு
பொலிஸ் மக்கள் தொடர்பு பிரிவு பணிப்பாளர் மற்றும் பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான டபிள்யூ.ஜே.எம்
சேனாரத்ன சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கத்துடன் இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2018-01-01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளது
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தபாலகங்கள் மூலம் விவசாய – கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியம்
எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தபாலகங்கள் மூலம் விவசாய – கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியம்
2020 ஜுன் மாதத்திற்கான விவசாய மற்றும் கடற்றொழில் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியகொடுப்பனவு எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தபாலகங்கள் மூலம் வழங்கப்படவுள்ளது.
இதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதிச் சபையிள் தலைவர் மகேந்திர ஹரிசந்திர தெரிவித்துளளார்
2020ஆம் ஆண்டு ஜுன் மாதத்திற்கான ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ளவுள்ள அனைத்து விவசாய ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதிய பயனாளிகள் மற்றும் கடற்றொழிலாளர்களில்
ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதிய பயனாளிகளுக்கான ஓய்வூதியத்தை செலுத்தவதற்குத் தேவையான மானியத்தை இந்த ஜூன் மாதம் 22ஆம் திகதி தொடக்கம் நாட்டில் உள்ள அனைத்து
தபால் அலுவலகங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி
சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர யாப்பா விசேட ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதற்கமைவாக விவசாய ஓய்வூதியம் மற்றும கடற்றொழில் ஓய்வூதியத்தை பெறும் ஓய்வூதியத்திற்கு உரித்தான அனைத்து
ஓய்வூதிய பயனாளிகளும் தமக்கு உரித்தான தபால் அலுவலகங்கள் மூலம் இந்த மாதம் 20ஆம் திகதியான திங்கட்கிழமை தொடக்கம் எந்தவித சிரமங்களுமின்றி சம்பந்தப்பட்ட ஓய்வூதியத்தை
பெற்றுக்கொள்ள முடியும் என்று பிரேமசந்திர யாப்பர் இந்த அறிக்கையின் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டம் இல்லை என அறிவித்து விட்டு இரகசியமாக கூட்டம் நடத்திய சத்தியலிங்கம்
தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுக்கு கூட்டம் இல்லை என அறிவித்து விட்டு இரகசியமாக கூட்டம் நடத்திய சத்தியலிங்கம்
வவுனியாவில் தமிழரசுக் கட்சியில் போட்டியிடுகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர்களுக்கு கூட்டம் ஒன்று நடைபெறவிருந்த நிலையில், இன்று கூட்டம் நடைபெறாது
என வேட்பாளர்களுக்கு தெரியப்படுத்தி விட்டு தனது ஆதரவாளர்களுக்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கூட்டம் நடத்தியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
குறிப்பாக தமிழரசுக் கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரின் பிரசன்னத்துடன் வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சி
அலுவலகத்தில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு ஒன்று ஏற்பாடாகியிருந்தது. குறித்த சந்திப்பில் எம்.ஏ.சுமந்திரன் கலந்து கொள்வதை முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்திருந்தார். இதனையடுத்து கூட்டம் நடைபெறாது என அனைத்து
வேட்பாளர்களுக்கும் தெரியப்படுத்தி விட்டு, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தமிழரசுக் கடடசியின் வவுனியா கிளையினரை அழைத்து கூட்டத்தை கூட்டியுள்ளார்.
இதில் மாவை சேனாதிராஜாவும், எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராஜா அவர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.
ஏனைய தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை புறக்கணித்து வவுனியா கிளையை அழைத்து கூட்டத்தை கூட்டியமை வடமாகாண சபை உறுப்பினர் சத்தியலிங்கம் அவர்கள் தனித்து தேர்தல் பிரச்சார
நடவடிக்கையில் ஈடுபட முனைப்பு காட்டுவதையும், கூட்டமைப்பு வேட்பாளர்கள் மத்தியில் குத்து வெட்டுக்கள் ஏற்பட்டுள்ளதையும்
வெளிப்படுத்துவதாக தமிழரசுக் கட்சி ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலுக்கு தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி ஒரு திட்டமிட்ட பொய்
ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து நான் விலகுகிறேன் என்ற செய்தி ஒரு திட்டமிட்ட பொய்
இதற்கு பின் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் இருவர் உள்ளார்கள் – மனோ கணேசன்
இன்றைய கொழும்பு மாவட்ட அமைச்சர் மற்றும் முன்னாள் கொழும்பு மாவட்ட அமைச்சர் ஆகியவர்களின் இரகசிய
கும்பல்களினால் நடத்தப்படும் வசையும், பொய்யும் மட்டும் பாடும் இணையத்தளங்களில், “மனோ கணேசன், சஜித்தை விட்டு விலகி
செல்கிறார்” என்ற ஒரு பொய் செய்தி சிங்களத்தில் சற்று முன் பிரசுரமாகியுள்ளது.
இது பொய். அப்பட்டமான பொய். இவர்களின் கையறு நிலையை இது காட்டுகிறது. திடீர் திடீர் என “அங்கிருந்து இங்கே, இங்கிருந்து அங்கே” பாயும் தவளை அரசியலை நான் ஒருபோதும்
செய்ததில்லை என்பதை மக்கள் அறிவார்கள். நான் எங்கே இருந்தாலும், எனது கட்சியிலேயே இருக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச மீது, நம்பிக்கை வைத்து, நான்
பயணிக்கிறேன். என்னுடன், எனது கட்சியும், எமது கூட்டணியும் உறுதியாக பயணிக்கின்றன என தமிழ் முற்போக்கு கூட்டணி
தலைவரும், முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,
புதிய தேசிய கூட்டணியில் சேரும் போது அல்லது விலகும்போது, கூட, “எடுத்தேன் கவிழ்த்தேன்” என ஒரேயொரு விடயத்தை
மாத்திரம் காரணமாக வைத்துகொண்டு, நான் சேருவதும் இல்லை. பிரிவதும் இல்லை. நாம் மிகவும் பொறுமையாக, நிதானமாகவே
எங்கள் முடிவுகளை எடுக்கிறோம். வேகம் இருப்பது போல் எமக்குள் விவேகமும் இருக்கிறது.
நான் நாளுக்கு ஒரு அணி மாறிக்கொண்டு இருந்தால், சிங்கள மக்கள் எம்மை சூழ்ந்து வாழும், இந்நாட்டின் இந்த பிரதேசத்தில்
எனக்கு மரியாதை இருக்காது. அதனால், நான் பிரதிநிதித்துவம் செய்யும் மக்களுக்கும் மரியாதை இருக்காது. தேர்தலை
எதிர்நோக்கும் இவ்வேளையில், இவர்கள் இந்த மரியாதையையே திட்டமிட்டு குழப்ப முயல்கின்றனர்.
இந்நாட்டில் செயற்படுகின்ற எந்தவொரு சிறுபான்மை கட்சி தலைவர்களையும் விடவும், எனக்கு அன்றே வந்த அமைச்சு பதவிகளையும் உதறி தள்ளிவிட்டு, ஐதேக தலைவர் ரணில்
விக்கிரமசிங்க எதிர்கட்சி தலைவராக இருக்கும் போது, அவருடன் மிகவும் பொறுமையுடன் பதினைந்து வருடங்கள் இருந்த ஒரே கூட்டு கட்சி தலைவர் நான்தான்.
இன்று எங்கள் பொறுமைக்கு முடிவு வந்து விட்டதால், நாங்கள் ஒரு கட்சியாக, கூட்டணியாக புதிய தேசிய கூட்டணியை ஸ்தாபித்து
அதில் அங்கம் வகிக்கிறோம். அதன் தலைவராக சஜித் பிரேமதாச அவர்கள் பதவி வகிக்கின்றார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது.
இன்று இந்நாட்டில் ஆளும் பொதுஜன முன்னணியும், ஐக்கிய தேசிய கட்சியும் பார்த்து பயப்படும் அணியாக எமது ஐக்கிய மக்கள் சக்தி நிலவுகிறது. அதனாலேயே நாள்தோறும் அவதூறுகளை இந்த
இரண்டு கட்சியினரும் எம்மீது எடுத்து வீசுகிறார்கள். ஐக்கிய தேசிய முன்னணியில் இருந்த வேளையில், கடந்த கொழும்பு மாநகரசபை
தேர்தலின் போது கூட இதே இணையதளம் என் மீது களங்கம் கற்பித்து அபாண்ட பொய் செய்திகளை எழுதியது.
நாமே உருவாக்கியுள்ள, புதிய தேசிய வெற்றிக்கூட்டணியின் ஸ்தாபகர்களில் நானும் ஒரு முதன்மையாளர். இதில் இருந்து
விலகும் தேவை எமக்கு இல்லை. எதிர்வரும் தேர்தலில், நாம் வெற்றி வாகை சூடுவோம்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – படுகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு அரசாங்க செலவில் தொடர்ந்து விசேட சிகிச்சை
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் – படுகாயங்களுக்கு உள்ளானவர்களுக்கு அரசாங்க செலவில் தொடர்ந்து விசேட சிகிச்சை
கடந்த வருடம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் அங்கவீனமடைந்துள்ளவர்கள் மற்றும்
படுகாயங்களுக்குள்ளானவர்களை அரசாங்கத்தின் செலவில் ஸ்ரீ ஜயவர்தனபுர
ஆஸ்பத்திரிய தொடர்ந்தும் சிகிச்சைகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த சிகிச்சைகளுக்கான அனைத்து செலவுகளையும் சுகாதார அமைச்சின்
கீழ் இயங்கும் சுகாதார அபிவிருத்தி நிதியின்ஊடாக செலவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
படுகாயங்களுக்கு உள்ளானவர்களில் 139 பேர் தற்போது மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 39 பேர் நீண்டகால
விஷேட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களென வைத்தியர்கள் சிபாரிசு செய்
துள்ளனர்.அவர்களுக்கு விசேட சிகிச்சைநடைமுறையொன்றை மேற்கொள்ள வேண்டுமென விசேட மருத்துவ நிபுணர்களும்
டாக்டர்களும் பேராயர் கர்தினால் மெல்கம்ரஞ்சித் ஆண்டகையிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக நேற்றைய தினம் சுகாதார அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சி பேராயரைச் சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தினார். அரசாங்கம் மேற்கொண்டுள்ள இந்த தீர்மானத்துக்காக பேராயர் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.
44 ஆயிரம் பேர் கைது
44 ஆயிரம் பேர் கைது
நாட்டில் கடந்த 7 மாத காலத்தில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய
சுமார் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இத்தகைய குற்றங்களைக் குறைப்பதற்கு, உரிய சட்டதிட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் தற்போது
கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும், சட்டங்களை இறுக்கமாக்குவதன் ஊடாக போதைப்பொருட்களற்ற ஒரு
இலங்கையைக் கட்டியெழுப்புவது இதன் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும், குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும்
முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் கொழும்பிலுள்ள பாதுகாப்பு
அமைச்சில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதில் கலந்துகொண்ட போதே பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைக் குறிப்பிட்டார்
இதொக வின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்
இதொக வின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன், கொட்டகல பகுதியில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கட்சி அலுவலகத்தில் இன்று (17) காலை கட்சியின் நிர்வாக சபை கூட்டம் இடம்பெற்றது.
இதன்போது ஜீவன் தொண்டமானை கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்க அனைவரும் ஏகமனதாக ஒத்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன் இதுவரையில் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த அனுஷா சிவராஜா கட்சியின் பிரதி தலைவராக நியமிக்கப்பட்டுளள்தாக தெரிவிக்கப்படுகின்றது.
போதையில் கிணற்றில் விழுந்து பலி
போதையில் கிணற்றில் விழுந்து பலி
வெலிமட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பில்லகடே, மல்பொத்த பகுதியில் கிணற்றில் விழுந்து நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மல்பொத்த, மீரகஹவத்த பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் குடிபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கிணற்றில் விழுந்த நபரை பிரதேசவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதா தெரிவிக்கப்படுகின்றது.
உமா ஓய பணிகளை நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 பேர் வருகை
உமா ஓய பணிகளை நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 பேர் வருகை
உமா ஓய பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பணிகளை
நிறைவுசெய்ய ஈரானிலிருந்து 85 தொழிநுட்பவியலாளர்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
இவர்கள் நேற்று முன்தினம் (15) பிற்பகல் 6.00 மணிக்கு நாட்டை வந்தடைந்தனர்.
உமா ஓய திட்டத்தின் சுமார் 95 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், எஞ்சியுள்ள வேலைகளை இவ் வருட
டிசம்பர் மாதத்திற்கு முன்னர் நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் ஊடாக 120 மெகா வோட் நீர் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ளது. வருகை தந்தவர்கள் PCR
பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் இராணுவத்தினரால் அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உற்படுத்தப்பட்டனர்.
தனிமைப்படுத்தல் காலப்பகுதிக்கு பின்னர் இரண்டாவது முறையாகவும்
PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் திட்டப் பணிகளில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..
பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் சுத்தம் செய்யப்பட வேண்டும்
பாடசாலைகளை ஆரம்பிக்க முன்னர் சுத்தம் செய்யப்பட வேண்டும்
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை தற்போது
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தினங்களில் கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளை சுத்தம் செய்து முடிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜூன் 29 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரையில் ஏனைய பாடசாலைகளை சுத்தம் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







