Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வீதியில் மிதந்த இரு மனித சடலங்கள் மீட்பு – நடந்து என்ன ..?
வீதியில் மிதந்த இரு மனித சடலங்கள் மீட்பு – நடந்து என்ன ..?
இலங்கையில் தேர்தல் முடிவுற்ற நிகழ்வுடன் வீதிகளில் இருந்து இரு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன
மீட்க பட்ட இரு ஆண்களது சடலங்களும் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
குறித்த மரணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதுவரை இந்த சடலங்கள் யாருடையது என்பது அடையாளம் காணப்படவிலை
வாக்கு எண்ணும் பணிகள் விறு விறுப்பாக ஆரம்பிக்க பட்டுள்ளன
வாக்கு எண்ணும் பணிகள் விறு விறுப்பாக ஆரம்பிக்க பட்டுள்ளன
இலங்கையி ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்றது
தற்போது அந்த தேர்தல் மக்கள் வாக்கு அழிப்பு விகிதம் தற்போது
வேகமாக என்ன பட்டு கொண்டுள்ளது
விரைவில் இதன் முடிவுகள் விரைந்து அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
யாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்
யாழில் வீடோடு எரிந்து பலியான தமிழ் பெண்
கடந்த தினம் மாலை யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் வீட்டில்
திடீரென தீ பற்றி கொண்டதில் தமிழ் பெண்மணி ஒருவர் அந்த தீயில் சிக்கி எரிந்து பலியாகியுள்ளார்
மேற்படி தீ விபத்து தொடர்பில் குறித்த பகுதி காவல்துறையின் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அடித்த புயல் முறிந்த மரம் – ரயில் சேவை பாதிப்பு
அடித்த புயல் முறிந்த மரம் – ரயில் சேவை பாதிப்பு
இலங்கையில் பலமாகா வீசிய காற்றின் காரணமாக பெரும் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது
இதனால் களனி உள்ளிட்ட பகுதிகளுக்கான தொடரூந்து சேவைகள் பாதிக்க
பட்டுள்ளன ,மீட்பு பணிகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
விரைவில் சேவைகள் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்க பட்டுள்ளது
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கு தூதரகத்தின் விசேட தொலைபேசி இலக்கங்கள்
லெபனானில் உள்ள இலங்கையர்களுக்கு உதவுவதற்கு தூதரகத்தின் விசேட தொலைபேசி இலக்கங்கள்
பெலனான் பெய்ரூட்டில் இடம்பெற்றுள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தை
அடுத்து அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவைப்படும் எந்தவொரு கோரிக்கை
மற்றும் உதவிகளுகாக தொடர்புகொள்வதற்கு தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

தேர்தலில் பாரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை
தேர்தலில் பாரிய சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை
இன்று நடைபெற்ற தேர்தல் வாக்களிப்பு மிக அமைதியாக நடைபெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர் இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பாக தெரிவிக்கையில் பாரிய சம்பவங்கள் எதுவும் இதுவரையில் காணக்கூடியதாக இல்லை என்று தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பில் விசேட அறிக்கைகள் பல கோரப்பட்டிருப்பதாக தெரிவித்த அவர் ஏதேனும் அல்லது சிறிய சம்பவங்கள்
பதிவாகியிருந்தால் அது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலான
சுகாதார விதிமுறைகள் தீவிரமாக கடைப்படிக்கப்பட்டது. 70 சதவீதமானோர் வாக்களித்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என்றும் குறிப்பிட்டார்.
இதேவேளை இன்று மாலை நிறைவடைந்த வாக்களிப்பில் 17 மாவட்டங்களில் 70 சதவீத வாக்களிப்பு பதிவாகியுள்ளது. இவற்றில்
76 சதவீத வாக்களிப்பு ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்;களில் பதிவாகியுள்ளன.
இதற்கு மேலதிகமாக அநுராதபுரம், பதுளை, திஹாமடுல்ல, காலி, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, பொலன்னறுவை, இரத்தினபுரி, திருகோணமலை மற்றும் வன்னி ஆகிய
மாவட்டங்களில் 70 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 70 சதவீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
29 தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது
29 தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது
இன்று நடைபெற்ற வாக்களிப்பில் 29 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், வாக்குப்பெட்டிகளை
பாதுகாப்பாக கொண்டுசெல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தல் வாக்களிப்பு 70% – முதலாவது பெறுபேறு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு
பொதுத் தேர்தல் வாக்களிப்பு 70% – முதலாவது பெறுபேறு நாளை பிற்பகல் 3.00 மணிக்கு
ஒன்பதாவது பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தலின் வாக்களிப்பு இன்று மாலை நிறைவடைந்தது. இன்றைய தேர்தல் வாக்களிப்பு வீதம் 70 சதவீதமாக அமைந்திருந்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
நாளை பிற்பகல் 3.00 மணியளவில் முதலாவது பெறுபேற்றை வெளியிடக்கூடியதாக இருக்கும் என்றும், இறுதி பெறுபேறு நாளை நள்ளிரவு அளவில் வழங்கக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். வாக்களிப்பு இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5.00 மணிக்கு நிறைவடைந்தது. நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டிருந்த 12,885 மத்திய நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட 16,263,885 வாக்காளர்கள் இதில் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றிருந்தனர்.
நாட்டில் கொவிட் 19 வைரஸ் தொற்றின் காரணமாக சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடித்து தேர்தல் பணிகள் நடைபெற்றன. தற்பொழுது பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. நாளைய தினம் (6) இந்த வாக்கு பெட்டியில் உள்ள வாக்குகள் எண்ணும் நடவடிக்கை மத்திய நிலையங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்படவுள்ளன. இதற்கு அமைவாக, நாளைய தினம் வாக்கெண்ணும் பணி ஆரம்பிக்கப்படவுள்ளது.
வாக்கு பெட்டிகள், கடித ஆவணங்கள் உள்ளிட்டவை வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்ட மத்திய நிலையங்களுக்கு எடுத்துச்செல்லும் நடவடிக்கை தற்பொழுது இடம்பெறுகின்றது. அங்கு அவை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்க முடியும்.
வாக்குகள் எண்ணப்படும் மத்திய நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்படவிருப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்தார். வாக்குகள் எண்ணும் பணி நாளை காலை 7.00 மணிக்கும் 8 மணிக்கும் இடையில் ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்பு நடைபெற்ற தேர்தல்களிலும் பார்க்க இன்று நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தல் மிகவும் அமைதியாக இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுகாதார பாதுகாப்பு மற்றும் அமைதியான முறையில் வாக்களிப்பு நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாவட்ட ரீதியில் பதிவாகியுள்ள வாக்களிப்பு வீதங்கள் பின்வருமாறு அமைந்திருந்தது.
கொழும்பு மாவட்டம்- 72%
களுத்துறை மாவட்டம்- 70%
கண்டி மாவட்டம்- 72%
மாத்தளை மாவட்டம்- 72%
நுவரெலியா மாவட்டம்- 75%
காலி மாவட்டம் – 69%
மாத்தறை மாவட்டம்- 71%
ஹம்பாந்தோட்டை மாவட்டம்- 73%
யாழ்ப்பாணம் மாவட்டம்- 67.72%
வன்னி மாவட்டம்- 73%
மட்டக்களப்பு மாவட்டம்- 76%
திஹாமடுல்ல மாவட்டம்- 72%
திருகோணமலை மாவட்டம்- 74%
குருநாகல் மாவட்டம்- 60%
புத்தளம் மாவட்டம்- 64%
அனுராதபுரம் மாவட்டம்- 70%
பொலன்னறுவை மாவட்டம்- 72%
பதுளை மாவட்டம்- 74%
மொனராகலை மாவட்டம்- 74%
இரத்தினபுரி மாவட்டம்- 73%
கேகாலை மாவட்டம்- 71%
கிளிநொச்சி மாவட்டம்- 71.52%
மன்னார் மாவட்டம்- 79.49%
வவுனியா மாவட்டம்- 74%
முல்லைத்தீவு மாவட்டம்- 76.25%
கம்பஹா மாவட்டம்- 63%
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ சி.சிவமோகன் வாக்களித்தார் – படம் உள்ளே
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி கௌரவ சி.சிவமோகன் வாக்களித்தார் – படம் உள்ளே
இன்று இலங்கையில் இடம்பெறும் ஒன்பதவது பாராளுமன்ற தேர்தல்
சோகையிழந்து காணப்படுகிறது
எனினும் மக்கள் தமது கடமைகளை செய்த வண்ணம் உள்ளனர்
அவ்விதம் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய
கலாநிதி கௌரவ சி.சிவமோகன் அவர்கள் காலை 7.15 மணிக்கு வாக்களித்தார்

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

மக்கள் வாக்களிப்பு வீழ்ச்சி – வெறிச்சோடி கிடக்கும் சில வாக்கு சாவடிகள் photo
மக்கள் வாக்களிப்பு வீழ்ச்சி – வெறிச்சோடி கிடக்கும் சில வாக்கு சாவடிகள்
இலங்கையில் இன்று இடம்பெறும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் வாக்கு பதிவு பலமான வீழ்ச்சி காணப்படுகிறது
தமிழர் தேசத்தில் மக்கள் அதிக அக்ரரி காட்டாத நிலையே எங்கும் காணப்படுகிறது ,கொரனோ நோயினது தாக்குதல் அச்சமே இந்த நிலைக்கு காரணமாக மைந்துள்ளது
இவ்வேளை அளவும் அரசு கள்ள ஒட்டு பதிவிடும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,வாக்கு சாவடிக்கு வெளியில் வாக்கு பிரதிகள் விற்பனை செய்ய படுகிறது
என சில மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .கூட்டணி ஆட்சியே இடம்பெறும் என்ற நிலை காணப்படுகிறது

- வாகன எரிபொருள் முறைகேடு குற்றச்சாட்டுகளை முன்னாள் சபாநாயகர் மறுக்கிறார்

- நேபாள வெள்ளத்தில் 90 அமெரிக்கர்களை காணவில்லை

- 538 உடல்கள் மீட்கப்பட்டதாக நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்ளது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவிற்கு ஆதரவாக மற்றொரு மனு தாக்கல்

வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு
வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெறுவதாக பெப்ரல் அமைப்பு தெரிவிப்பு
இன்று காலை ஆரம்பமான பொதுத் தேர்தல் வாக்களிப்பு அமைதியான முறையில் நடைபெற்று வருவதாக தேர்தல்
கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள பெப்ரல் அமைப்பு சற்று முன்னர் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் அமைதியான முறையில் தேர்தல் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று
பணிப்பாளர் ரோஹண கெட்டியாராச்சி எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார். வாக்காளர்கள் வாக்களிப்பில் பங்குகொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தா

பொதுத் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதில் கண்காணிப்பு குழுவினர்
பொதுத் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதில் கண்காணிப்பு குழுவினர்
2020 பொதுத் தேர்தல் வாக்களிப்பு கண்காணிப்பு பணியில் 2,200 நடமாடும் கண்காணிப்பாளர்கள் நாடு முழுவதிலும் செயற்பட்டு வருவதாக கெபே (CaFFE)அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில் , அனைத்து மாவட்டங்களையும்
கண்காணிப்பதில் இக் குழுவினர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்காக 80 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தமது அமைப்பு சுமார் 5,000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைப்பாடுகள் குறித்து
அறிவிப்பதற்கு 0702274501 , 070 2264502 என்ற விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணித்தியாலமும் முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.
வேட்புமனு பொறுப்பேற்க்கப்பட்ட நாள் முதல் இன்று வரையில் 1635 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்றுமொரு தேசிய கண்காணிப்பு மத்திய நிலையம் இந்த பணியில் சுமார் 2000 பேரை ஈடுபடுத்தியுள்ளது.
இந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரசங்க ஹரிச்சந்திர இது தொடர்பாக எமது செய்தி பிரிவிற்கு தெரிவிக்கையில்
கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோரில் பெரும்பாலானோர் தொழிற்துறையைச் சேர்ந்தோர் ஆவர். சுமார் 50 நடமாடும் கண்காணிப்பு சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொரனோ வேளையில் -ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று
கொரனோ வேளையில் -ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தல் இன்று
ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கு 225 உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் பொதுதுத் தேர்தல் இன்று நடைபெறுகிறது.
வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை இடம்பெறவுள்ளது. தேர்தலுக்கான வாக்களிப்பு நாடு முழுவதும் 12,985 வாக்களிப்பு நிலையங்களில் நடைபெறவுள்ளது.
ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக ஒரு கோடியே 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
ஆகக் கூடுதலாக 17 இலட்சத்து 85 ஆயிரத்து 964 வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். 22 தேர்தல் மாவட்டங்களில் நடைபெறும் வாக்களிப்பில் 196
உறுப்பினர்கள் நேரடியாக தெரிவு செய்யப்படுவார்கள். மிகுதி 29 பேர் தேசியப்பட்டியல் மூலம் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்னர்.
அங்கீகரிக்கப்பட்ட 40 அரசியல் கட்சிகள் மற்றும் 313 சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் 7,452 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடுகின்றனர். முன்னைய தேர்தல்களில் போன்று
இல்லாமல் இம்முறை மாலை 05.00 மணி வரை வாக்களிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்களிப்பில் வைரஸ் பரவலுக்கு
வாய்ப்பில்லை. வாக்காளர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் நீலம்/கறுப்புப் பேனைகளை வாக்காளர்கள் கொண்டு செல்லவேண்டும்.
நாட்டின் அனைத்து தேர்தல் மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகளின் சார்பில் 3,652 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3,800 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்ட ணி ஐக்கிய தே சியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் பெரும்பாலான மாவட்ட ங்களில் போட்டியிடுகின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணி யாழ். மாவட்டம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் இம்முறை போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.நாட்டில் நிலவும்
கொரோனா வைரஸ் சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு சுகாதாரத்துறையினரின் ஆலோசனைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு
செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர் , கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறை மாவட்ட த்தில் 10, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 05, நுவரெலியா
மாவட்டத்தில் 08, காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்ட த்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07, யாழ். மாவட்டத்தில் 07, வன்னிமாவட்ட த்தில் 06, மட்டக்களப்பு மாவட்டத்தில் 05,
திகாமடுல்ல மாவட்ட த்தில் 07, திருகோணமலை மாவட்டத்தில் 04, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 08, அனுராதபுரம் மாவட்டத்தில் 09, பொலன்னறுவை மாவட்டத்தில் 05, பதுளை
மாவட்டத்தில் 09, மொனராகலை மாவட்டத்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இம்முறை அதிக வாக்காளர்கள் கம்பஹா மாவட்டத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாவட்டத்தில் 17,85,964 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். குருநாகல் மாவட்டத்தில் 13,48,787 பேரும், கண்டி மாவட்டத்தில் 11,29,100 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 17,09,209, களுத்துறை
9,72,319, மாத்தளை 4,07,569, நுவரெலியா 5,77,717, காலி 8,67,709, மாத்தறை 6,59,587, ஹம்பாந்தோட்டை 4,93,192, யாழ்ப்பாணம் 5,71,848, வன்னி 2,87,024 , மட்டக்களப்பு 4,09,808, திகாமடுல்ல 5,13,979, திருகோணமலை 2,88,868, புத்தளம் 6,14,370, அனுராதபுரம் 6,93,634,
பொலன்னறுவை 3,31,109, பதுளை 6,68,166, மொனராகலை 3,72,155, இரத்தினபுரி 8,77,582, கேகாலை 6,84,189 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இம்முறை அதிக வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். கொழும்பில் அரசியல் கட்சிகளின் சார்பில் 352 பேரும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து 572 பேரும்
போட்டியிடுகின்றனர். பொலன்னறுவை மாவட்டத்திலேயே குறைந்த வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 152 பேர் அங்கு
போட்டியிடுகின்றனர். வாக்களிப்பு நிலையங்களில் வைரஸ் பரவலுக்கு எவ்வித வாய்ப்பும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் மக்களுக்கு அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்-மக்கள் வரவு வீழ்ச்சி
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்-மக்கள் வரவு வீழ்ச்சி
இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவினர் 4 மணிக்கு பின்னர் தங்களுடைய தனிப்பட்ட போக்குவரத்து முறையை பயன்படுத்தி வாக்களிக்க வர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பேனா ஒன்று எடுத்து வர வேண்டும் எனவும் அவ்வாறு எடுத்து வராதவர்களுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்ட பேனா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் இம்முறை பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர்.
இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 1,785,964 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,709,209 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,129,100 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக 69,000 பொலிஸார் மற்றும் 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர், கம்பஹா மாவட்டத்தில் 18, களுத்துறை மாவட்டத்தில் 10, கண்டி மாவட்டத்தில் 12, மாத்தளை மாவட்டத்தில் 05, நுவரெலியா மாவட்டத்தில் 08, காலி மாவட்டத்தில் 09, மாத்தறை மாவட்டத்தில் 07, ஹம்பாந்தோட்டை மாவட்ட த்தில் 07, யாழ். மாவட்டத்தில் 07, வன்னி மாவட்டத்தில் 06, மட்டக்களப்பு மாவட்டத்தில் 05, திகாமடுல்ல மாவட்டத்தில் 07, திருகோணமலை மாவட்டத்தில் 04, குருநாகல் மாவட்டத்தில் 15, புத்தளம் மாவட்டத்தில் 08, அனுராதபுரம் மாவட்டத்தில் 09, பொலன்னறுவை மாவட்டத்தில் 05, பதுளை மாவட்டத்தில் 09, மொனராகலை மாவட்டத்தில் 06, இரத்தினபுரியில் 11, கேகாலை மாவட்டத்தில் 09 என 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது.
இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெறும்.
தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட மாட்டது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விஷேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை நிறைவு செய்த குழுவினர் 4 மணிக்கு பின்னர் தங்களுடைய தனிப்பட்ட போக்குவரத்து முறையை பயன்படுத்தி வாக்களிக்க வர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தவர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் பேனா ஒன்று எடுத்து வர வேண்டும் எனவும் அவ்வாறு எடுத்து வராதவர்களுக்கு கிருமி தொற்று நீக்கப்பட்ட பேனா வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மேலும் இம்முறை பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலுக்கமையவே இம்முறை தேர்தல் நடைபெறவுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவர்கள் நாடு முழுவதிலும் அமைக்கப்பட்டுள்ள 12,985 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்வுள்ளனர்.
இம்முறை அதிகளவான வேட்பாளர்கள் கம்பஹா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அடிப்படையில் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் 1,785,964 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,709,209 பேரும், குருணாகல் மாவட்டத்தில் 1,348,787 பேரும், கண்டி மாவட்டத்தில் 1,129,100 பேரும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
மேலும் மாலை வாக்களிப்புக்கள் நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கொடுப்பனவை செலுத்தி, பதிவு செய்து கொண்டுள்ள இலத்திரனியல் ஊடக நிறுவனங்களுக்கு மாத்திரமே 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகளை அறிவிப்பதற்கான அனுமதியை தேர்தல் ஆணைக்குழு வழங்கியுள்ளது.
அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்காக 69,000 பொலிஸார் மற்றும் 10,500 சிவில் பாதுகாப்பு ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் அந்தந்த மாவட்டங்களிலிருந்து 196 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 19 பேர், கம்பஹா மாவட்

வாக்களிக்க மக்களே வாருங்கள் தேர்தல் அணையாளர் கூவி அழைப்பு
வாக்களிக்க மக்களே வாருங்கள் தேர்தல் அணையாளர் கூவி அழைப்பு
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று நடைபெறும் 2020 பாராளுமன்ற பொதுத் தேர்தல் வாக்களிப்பில்
வழமை போன்று தமது ஜனநாயக உரிமையை பயன்படுத்துமாறும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
வாக்களிப்பு இன்று காலை 7.00 மணி தொடக்கம் தாலை 5.00 மணிவரை நடைபெறவுள்ளது.
சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பில்
தேவைப்படும் பட்சத்தில் மேலதிக பொலிசாரையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்களை உடனடியாக வீடியோ மூலம் பார்வையிடுவதற்கும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
அதற்கிணங்க சகல பொலிஸ் பிரிவுகளுக்கும் கெமராக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
69,000 காவல்துறையினர் தேர்தல் கடமையில் – பாதுகாப்பு இறுக்கமாம்
69,000 காவல்துறையினர் தேர்தல் கடமையில் – பாதுகாப்பு இறுக்கமாம்
தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் நடமாடும் சேவை நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3,069 பொலிஸ் நடமாடும் சேவைகளை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாப்பு
அதிகாரிகள் 10,500 பேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
வாக்களிப்பு நிலையங்களில் புகைத்தல், மதுபானம் போன்றவற்றுக்கு தடை
வாக்களிப்பு நிலையங்களில் புகைத்தல், மதுபானம் போன்றவற்றுக்கு தடை
வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இரவு வேளையில் தங்கியிருக்கும்
தேர்தல் அதிகாரிகள் புகைத்தல், மதுபானம் பாவித்தல் வேறு எந்தவித
போதைப் பொருட்கள் மற்றும் லைற்றர் முதலானவற்றை எடுத்துச்செல்லுதல்
முழுமையாக தடை செய்யப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தல் மத்திய நிலையங்களில் சுகாதார பாதுகாப்பு உறுதி
செய்யப்பட்டிருப்பதனால் தேர்தல் கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள்
மற்றும் வாக்காளர்கள் இது தொடர்பில் எந்தவித அச்சத்தையும்
ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 107 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் இன்று செவ்வாய் கிழமை (04.08.2020) கொண்டு செல்லப்பட்டன.
நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்
பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் .கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை தேர்தல்
நடவடிக்கைகளுக்காக 1745 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 92ஆயிரத்து 264 பேர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் அஞ்சல் மூல
வாக்காளர்களின் எண்ணிக்கை 3590.மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 107. மாவட்டத்தின் வாக்கெண்ணும்
நிலையங்களின் எண்ணிக்கை 14 .மாவட்ட தேர்தல் பிரிவுகளின் எண்ணிக்கை 01.மாவட்டத்தில் போட்டியிடும் முழு வேட்பாளர்களின்
எண்ணிக்கை 330.மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சை கட்சிகளின் எண்ணிக்கை 33. தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 07
கட்சி தாவிட தயராகும் அரசியவாதிகள் – கைமாற தயராகும் கோடிகள்
கட்சி தாவிட தயராகும் அரசியவாதிகள் – கைமாற தயராகும் கோடிகள்
இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தல் இம்முறை அதி சவால் நிறைந்த ஒன்றாக அனைத்து கட்சிகளுக்கும் உள்ளது
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரனோ வேளையில் தேர்தலை மூன்று காலில் நின்று கோட்டா ஆடம் பிடித்து நடத்துகிறார் ,
இதற்கு காரணம் வரும் மாதங்களில் ஐநாவில் வெளிவரவுள்ள மகிந்த தமிழ் இன படுகொலைகள் நிகழ்ச்சி நிரலாகும்
அதற்காக தற்போது மக்களின் அதி செல்வாக்கை பெற்றுள்ளதாக காண்பிக்கும் கோட்டபாய அதே மக்கள் ஆதரவுடன் ஆட்சியை தக்க வித்து கொள்ள நினைக்கின்றார்
அவரது இந்த சிந்தனையில் இம்முறை பெரும் இடிவிலும் நிலை உள்ளதாக கணிக்க முடிகிறது ,பலகோடிகளை செலவு செய்து
ஊடகங்கள் முதல் தேர்தல் பரப்புரையை புரிந்து வரும் மகிந்தா கட்சிகள்
தமது தனிப்பெரும்பனை ஆட்சியை தக்க வைத்து கொள்ள தீர்மானிக்க பட்டுள்ள வெற்றியார்களை விலைக்கு வாங்கும் நிலையில் உள்ளக நகர்வுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
முடிவுகள் எதிராக மாறும் பட்சத்தில் இரண்டாவது கட்சி தாவும் செயல் முறை திட்டத்தை நகர்த்தும் நிலையில் ஆளும் கோட்டா அரசு ஈடும் என்பதை அடித்து கூறலாம்
அமைச்சு பதவி மற்றும் ,பல கோடிகள் என பேரம் பேச படும் நிலை இங்கே தோற்றம் பெறுகிறது
அரசியல் வியாபாரிகளுக்கு இப்பொழுது நல்ல உழைப்பு ,இது அவர்கள் பணம் சம்பாதிக்கும் நேரமாகும் ,மக்களே கொரனோவில்
வாக்களிப்பு நிலையங்களுக்ஸ் செல்லாதீர்கள் உங்கள் ,உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்
- வன்னி மைந்தன் –
வென்ற பின்னர் கோட்டாவுக்கு எம் ஆதரவு – சுமந்திரன் சம்பந்தர் பேச்சு – கொதிப்பில் தமிழர்கள்
வென்ற பின்னர் கோட்டாவுக்கு எம் ஆதரவு – சுமந்திரன் சம்பந்தர் பேச்சு – கொதிப்பில் தமிழர்கள்
இலங்கையில் இடம்பெறவுள்ள பாரளுமன்ற தேர்தல் முடிவுற்றதும் ,அதன்
தமிழர் அரசியல் தீர்வு பிரச்சனையை முன் வைபத்தறகாக வெளியில்
இருந்து ஆளும் நல்லாட்சி மைந்தர் கோட்டாபாயவுக்கு ஆதரவை வழங்க உளளதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளனர்
இவர்கள் இருவரும் தமிழர் தேசிய அரசியலை முன்னிலை படுத்தி தொடர் கொச்சை படுத்தும் நிகழ்வுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
புலிகள் கேட்பதை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என மகிந்த பகிரங்கமாக
தெரிவித்த நிலையில் இவர்கள் தமது ஆதரவு மகிந்தஹா ,கோட்டாவுக்கே என அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
சம்பந்தன் ,சுமந்திரன் தொடர்ந்து தமிழ் தேசிய விடுதலையும் அவர்களை
நேசிக்கும் தமிழர்களையும் கொச்சை படுத்துவதில் முனைப்பு காட்டி நகர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது