கிளிநொச்சி மாவட்டத்தில் 107 வாக்களிப்பு நிலையங்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள 107 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் இன்று செவ்வாய் கிழமை (04.08.2020) கொண்டு செல்லப்பட்டன.
நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரச மற்றும் தனியார் பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்
பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் சென்றுள்ளனர் .கிளிநொச்சி மாவட்டத்தில் இம்முறை தேர்தல்
நடவடிக்கைகளுக்காக 1745 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் 92ஆயிரத்து 264 பேர்கள் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மாவட்டத்தின் அஞ்சல் மூல
வாக்காளர்களின் எண்ணிக்கை 3590.மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களின் எண்ணிக்கை 107. மாவட்டத்தின் வாக்கெண்ணும்
நிலையங்களின் எண்ணிக்கை 14 .மாவட்ட தேர்தல் பிரிவுகளின் எண்ணிக்கை 01.மாவட்டத்தில் போட்டியிடும் முழு வேட்பாளர்களின்
எண்ணிக்கை 330.மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேச்சை கட்சிகளின் எண்ணிக்கை 33. தேர்ந்தெடுக்கப்படவுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 07






