பொதுத் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதில் கண்காணிப்பு குழுவினர்

Spread the love

பொதுத் தேர்தல் வாக்களிப்பை கண்காணிப்பதில் கண்காணிப்பு குழுவினர்

2020 பொதுத் தேர்தல் வாக்களிப்பு கண்காணிப்பு பணியில் 2,200 நடமாடும் கண்காணிப்பாளர்கள் நாடு முழுவதிலும் செயற்பட்டு வருவதாக கெபே (CaFFE)அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் இது தொடர்பாக தெரிவிக்கையில் , அனைத்து மாவட்டங்களையும்

கண்காணிப்பதில் இக் குழுவினர் ஈடுபட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். இதற்காக 80 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமது அமைப்பு சுமார் 5,000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்தியுள்ளது. இவர்களுக்கு தேவையான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. தேர்தல் முறைப்பாடுகள் குறித்து

அறிவிப்பதற்கு 0702274501 , 070 2264502 என்ற விசேட தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 24 மணித்தியாலமும் முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.

வேட்புமனு பொறுப்பேற்க்கப்பட்ட நாள் முதல் இன்று வரையில் 1635 முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இந்த கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள மற்றுமொரு தேசிய கண்காணிப்பு மத்திய நிலையம் இந்த பணியில் சுமார் 2000 பேரை ஈடுபடுத்தியுள்ளது.

இந்த அமைப்பின் தேசிய அமைப்பாளர் ரசங்க ஹரிச்சந்திர இது தொடர்பாக எமது செய்தி பிரிவிற்கு தெரிவிக்கையில்

கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோரில் பெரும்பாலானோர் தொழிற்துறையைச் சேர்ந்தோர் ஆவர். சுமார் 50 நடமாடும் கண்காணிப்பு சேவைகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

      Leave a Reply