Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது
புத்தாண்டில் -மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 பேர் கைது
ன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை
நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய 173 சாரதிகள் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கடந்த 20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த
சோதனை நடவடிக்கையின் போது, மதுபோதையில் வாகனம் செலுத்திய ஆயிரத்து 571 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
நேற்று இடம்பெற்ற நான்கு வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்தார்கள். 31 பேர் காயமடைந்தார்கள். கடந்த டிசெம்பர்
20ஆம் திகதியிலிருந்து இதுவரையில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 53 பேர் உயிரிழந்தார்கள். 136 பேர் காயமடைந்தார்கள்.
இதேவேளை, இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில்
முகக்கவசம் அணியாத, சமூக இடைவெளியை பேணாத 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..
இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு
இலங்கையில் திரையரங்குகள் மீண்டும் திறப்பு
கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இதன்போது திரையரங்களுகள் அதன் திறனில் 25 மாத்திரமே செயற்பட இடமளிக்க அனுமதிக்கப்படுள்ளது.
இதற்காக அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார
வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இன்று முதல் நாடளாவிய
ரீதியில் உள்ள திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்கத்கது
ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது
ஊரடங்கு சட்டத்தை மீறிய 25 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு
சட்டத்தை மீறிய 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை
தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்
ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 2021 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் 43 ஆயிரம் பேருக்கு கொரனோ
இலங்கையில் 43 ஆயிரம் பேருக்கு கொரனோ
நாட்டில் கொவிட் 19 தொற்றுக்குள்ளான 597 பேர் நேற்று(31) அடையாளம்
காணப்பட்டுள்ளதையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதற்கமைய, மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,299 ஆக
அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுடைய மேலும் 7,776 பேர் தொடர்ந்து
வைத்திய கண்காணிப்பின் கீழ் உள்ள நிலையில், 35,329 பேர் குணமடைந்துள்ளனர்.
முகக்கவசங்களால் கடலிலும் கொரோனா
முகக்கவசங்களால் கடலிலும் கொரோனா
பயன்படுத்தப்பட்ட பின்னர், பாதுகாப்பற்ற முறையில் வீசப்படும் முகக் கவசங்கள், ஆறுகள், நீரோடைகள் ஊடாகக் கடலில் கலப்பதால், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயநிலை
அதிகரிக்கலாம் என, கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
நாளொன்றுக்கு 50,000க்கும் அதிகமான முகக் கவசங்கள், கடலில் கலப்பதாகத் தெரிவித்துள்ள அதிகார சபை, இதனால் பொழுது
போக்குக்காகக் கடலுக்குச் செல்வோருக்கும் கொரோனா தொற்று ஏற்படும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரித்துள்ளது.
தினமும் 5 இலட்சம் முகக் கவசங்கள் இலங்கையில் பயன்படுத்தப்படும் அதேவேளை, பெருமளவு முகக் கவசங்கள்
தினமும் வீசப்படுவதாகவும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மேலும், கொழும்பு மாநகர சபையின் கீழ், வீதிகளைச் சுத்தம் செய்வதற்காக 2,000க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டு
வருவதுடன், முகக் கவசங்கள் உரியமுறையில் அகற்றப்படாமை காரணமாக, இத்தொழிலாளர்களும் கொரோனா அச்சுறுத்தலுக்கு
ஆளாகியுள்ளதாக, கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோசி சேனநாயக்க தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்
மட்டக்களப்பில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தல்
காத்தான்குடி பொலிஸ் பிரிவு மற்றும் கல்முனை பிரதேசத்தில் சில கிராம
உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை
கீழ் குறிப்பிடப்படும் பிரதேசங்கள் இத் தருணத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பெயரிடப்படுவதாக
கொவிட் – 19 தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
- காத்தான்குடி பொலிஸ் பிரிவு
- கல்முனை பிரதேசத்தில் கீழ் குறிப்பிடப்படும் கிராம உத்தியோகத்தர் பிரிவு
கல்முனை 1
கல்முனை 1 C
கல்முனை 1 E
கல்முனை 2
கல்முனை 2 A
கல்முனை 2 B
கல்முனை 3
கல்முனை 3 A
கல்முனை குடி 1 (KALMUNAI KUDI 1)
கல்முனை குடி 2 (KALMUNAI KUDI 2)
கல்முனை குடி 3 (மKALMUNAI KUDI3)
கொரனோ தாக்குதல் ஐவர் உயிரிழப்பு – மொத்த மரணம் 204 ஆக உயர்வு
கொரனோ தாக்குதல் ஐவர் உயிரிழப்பு – மொத்த மரணம் 204 ஆக உயர்வு
கொவிட் 19 வைரசு தொற்றுக்குள்ளான நோயாளர்களில் மேலும் ஐவர் (05) மரணமடைந்திருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இலங்கையில் பதிவான கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 204 ஆகும்.
அரசாங்க தகவல் திணைக்களம் நேற்று (31.12.2020) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது
- தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர்.. களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த வேளையில் 2020 டிசம்பர் 28ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் நீரிழிவு நோய் அதிகரித்தமையால் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமையுடன் கொவிட் 19 நோய் தொற்று நிலைமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான ஆண் ஒருவர்;. அம்பான்பொல மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர் என
- இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு (National Institute of Infectious Diseases (NIID) ) மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர்
- 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நிலையுடன் ஏற்பட்ட உக்கிரமான நுரையீரல் தொற்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொழும்பு 05 பிரதேசத்தைச் செர்ந்த 61 வயதான பெண் ஒருவர். கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீட வைத்தியசாலையிலிருந்து கொவிட் 19 நோய்
- தொற்றுக்குள்ளானவர் என இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலைக்கு ( National Institute of Infectious Diseases (NIID)) மாற்றப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020
- டிசம்பர் 31ஆம் திகதி மரணமானார். மரணத்திற்கான காரணம் ஈரல் தொற்று மற்றும் கொவிட்-19 நியூமோனியா நிலை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கலேவெல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர்.. கலேவெல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் 2020 டிசம்பர் 30 ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் ஏற்பட்ட நீரிழிவு சிக்கல் நிலையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெல்மதுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதான ஆண் நபர். இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 2020 டிசம்பர் 30ஆம் திகதி மரணமானார்.
- மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று இரத்தம் நஞ்சானமை மற்றும் நுரையீரல் நோய் நிலைமை என
- தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்
பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்
கடந்த இரவு மகர டவுன் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இதன் பொழுது சார்யன் தர அதிகாரி மீது நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில்
அவர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளன
காணாமல் போன விதானையார் சடலமாக மீட்பு
காணாமல் போன விதானையார் சடலமாக மீட்பு
அருவியாற்றில் குளிக்க சென்று காணாமல் போன கிராம உத்தியோகத்தரின் சடலம் அரிப்பு பகுதியில் கரை ஒதுங்கியது.
அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கடந்த 29 ஆம் திகதி மதியம்
ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள் அகப்பட்டு காணாமல் போன கிராம
அலுவலகர் இன்று (31) காலை அரிப்பு பழைய தோனித்துறை பகுதியில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளது.
காணாமல் போய் தற்போது சடலமாக மீட்கப்பட்ட கிராம அலுவலகர் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள
தோமஸ்புரி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம உத்தியோகத்தராக கடமையாற்றும் ஜனார்த்தனன் (வயது-26) என தெரிய வந்துள்ளது.
நான்கு கிராம உத்தியோகத்தர்கள் உள்ளடங்களாக 6 பேர் கடந்த 29 ஆம் திகதி
மதியம் அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆற்றில் குளிக்கும் போது போதையில் இருந்ததாகவும் குளித்த
இடத்தில் மதுப் போதத்தல்களும் சமைத்த உணவுகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் போது கிராம உத்தியோகத்தர்கள் ஆற்றில் குளித்த போது ஒரு கிராம உத்தியோகத்தர் காணாமல் போனதோடு, ஏனைய கிராம உத்தியோகத்தர்கள் மீட்கப்பட்டனர்.
சூறாவளியினால் 65 வீடுகள் சேதம்
சூறாவளியினால் 65 வீடுகள் சேதம்
மட்டக்களப்பு கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட சந்திவெளி பாலையடித்தோனா கிராமத்தில் உள்ள 65 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்து
உள்ளதாக அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
சேதமடைந்துள்ள வீடுகளை முழுமையாக புனரமைப்பு செய்வதற்கான நடவடிக்கையினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கான மதிப்பீட்டு அறிக்கையினை பெற்று நட்ட ஈட்டினை வழங்குவதற்கான நடவடிக்கையினை மிகவும் தீவிரமாக செய்து வருகின்றனர்.
நட்புறவு கிராமத்தில் கடந்த 28 ஆம் திகதி பெய்த கடும் சுழி காற்றுடன் கூடிய மழை இரவு 9 மணி முதல் 15 நிமிடங்களுக்கு
தொடர்ச்சியாக வீசியதன் காரணமாக பகுதியளவில் 65 வீடுகள் கோரளைப்பற்று தெற்கு பிரதேச செயலகபிரிவிலும்
கோரளைப்பற்று பிரதேச செயலகபிரிவின் கும்புறுமுலை கிராமத்தில் 2 வீடுகளும் சேதமடைந்துள்ளன.
சேதமடைந்த வீடுகளுக்கான நட்டஈடு வழங்கும் நடவடிக்கையில் மாவட்ட செயலகமும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரும்
இணைந்து பிரதேச செயலகங்களுக்கு வழங்க உள்ளதாக அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் தெரிவித்தனர்.
1000 தேசிய பாடசாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம்- கோட்டா அதிரடி
1000 தேசிய பாடசாலைகள் அமைக்கும் வேலைத்திட்டம்- கோட்டா அதிரடி
நாட்டில் சகல வசதிகளுடன் கூடிய ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் ஆரம்ப
வைபவம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தலைமையில் கோட்டை ஸ்ரீ ஜயவர்தனபுர கல்லூரியில் நேற்று இடம்பெற்றது.
வேலைத்திட்டத்தின் முதல் பாடசாலையாக சுமார் 200 வருடங்கள் பழைமைவாய்ந்த இந்த கல்லூரி தெரிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு முழுமையான கல்வியை வழங்கும் விடயத்தில்
கணினி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மொழிக்கல்வி உள்ளிட்ட வசதிகள் விருத்தி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நாட்டில் அமைக்கப்படும் புதிய தேசிய பாடசாலைகள் இந்த அனைத்து வசதிகளையும் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ், ஆயிரம் தேசிய பாடசாலைகளை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. பல கட்டங்களாக இந்த செயற்றிட்டம்
முன்னெடுக்கப்படும். முதலாம் கட்டத்தில் 123 பாடசாலைகளும், இரண்டாம் கட்டத்தில் 673 பாடசாலைகளும் தேசிய
பாடசாலைகளாக அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்
5 நாளுக்கு காத்தான்குடி தனிமைப்படுத்தல்- பீதியில் மக்கள்
5 நாளுக்கு காத்தான்குடி தனிமைப்படுத்தல்- பீதியில் மக்கள்
எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவு தனிமைப்படுத்தப்பபட்ட பிரதேசமாகஅறிவிக்கப்படுவதாக
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் இன்று (30) மாவட்ட அரசாங்க அதிபர் கருனாகரன் தலைமையில்
மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதனைத் தொர்ந்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மட்டக்களப்பு நகர்பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட 549 ரபிட் அன்டிஜன் பரிசோதனையின்போது 26
பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 23 நபர்களும், ஆரையம்பதி பிரதேசத்தைச் சேர்ந்த
ஒருவரும், மட்டக்களப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பிரதேசத்தின் பல பாகங்களிலும் மேற் கொள்ளப்பட்ட 665 ரபிட் அன்டிஜன் பரிசோதனைகளின் போது 27 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்விரு பிரதேசங்களிலுமாக காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 50 நபர்களும் ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த 9 நபர்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைவாக இத்தொற்றாளர்களும்,
இவர்களுடன் நேரடித் தொடர்புடையவர் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதேவேளை நாளைதினம் மட்டக்களப்பு நகரிலுள்ள சகல வர்த்தக நிறுவனங்களும் மூடப்பட்டு சுகாதார தொடர் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பலசரக்கு கடைகள் மற்றும் மருந்தகங்கள் மாத்திரம் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், மட்டக்களப்பு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபர் லக்சிறி விஜயசேன, பிராந்திய சுகாதார பணிப்பாளர் டாக்டர். எஸ்.
மயூரன்இ மட்டக்களப்பு மாநகர மேயர் தியாகராஜா சரவணபவான், காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், இரானுவ
உயர் அதிகாரி, மற்றும் சுகாதார திணைக்கள உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பல் கலந்துகொண்டனர்.
முல்லைத்தீவில் – கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்- அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவில் – கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்- அதிர்ச்சியில் மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை
என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை
அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு தகவல் வழங்கியுள்ளார்
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்
பொலிஸார் குறித்த இடத்தில் வருகைதந்து உடல் பாகங்களை
பார்வையிட்டதோடு சிவிலுடையில் குறித்த இடத்திற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்குகின்றனர்.
மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்
மத்திய மாகாணத்தில் 1,076 புதிய நோயாளிகள்
மத்திய மாகாணத்தில் இதுவரை 1,076 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் அறுவர்
மரணித்துள்ளனர் என்று, மத்திய மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில், இன்று (30) காலையுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 35 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் ஒருவர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளார் என்றும் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹத்தரலியத்த பொலிஸ் பிரிவு, தேதுனுப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரே, கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.
திடீர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் என்றும் பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது
உறுதியானதாகவும் மேற்படித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய மாகாணத்தில் கொரோனா வைரஸ்
தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் 535 தொற்றாளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 126 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்
இலங்கையில் கண்காணிக்க படும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கையில் கண்காணிக்க படும் சுற்றுலாப் பயணிகள்
நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் பொதுமக்களுடன் தொடர்புகளை
மேற்கொள்ள இடமளிக்கப்படமாட்டாதென, கொவிட் 19 ஒழிப்புக்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.
அத்துடன், சுற்றுலாப் பயணிகள் தங்கியிருக்கும் காலப்பகுதியில், அவர்களின்
செயற்பாடுகள் குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளே நாட்டுக்கு முதலில் வருகைதந்துள்ளனர்.
அந்நாட்டிலிருந்து இதுவரை 390 பேர் வருகைதந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு
வாகன விபத்துக்களால் 39 பேர் உயிரிழப்பு
கடந்த 20 ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள்
இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதியில் 527 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விபத்துக்களினால் 122 பேர் கடும் காயங்களுக்கு
உள்ளாகியுள்ளனர். 238 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். உயிரிழப்புக்கள் இல்லாத 130 வாகன விபத்துக்கள் இந்தக்
காலப்பகுதியில் இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண மேலும் குறிப்பிட்டார்.
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம்-விவசாயி ஆன கோட்டா
நாடளாவிய ரீதியில் 14 ஆயிரம் குளங்களை மறுசீரமைக்கும்
வேலைத்திட்டத்தின் கீழ் ஊவா மாகாணத்திற்கான நிகழ்வு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் இலக்கு என்ற
கொள்கைப் பிரகடனத்தின் கீழ் இந்தத் திட்டம் முன்
னெடுக்கப்பட்டுள்ளது. காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின்
ஒத்துழைப்புடன் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பரவிய கொரனோ – வீடுகளில் 78 பேர் மரணம்
பரவிய கொரனோ – வீடுகளில் 78 பேர் மரணம்
கொழும்பு நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில், கடந்த 6 மாதங்களுக்குள் 78 பேர், கொரோனா வைரஸ் தொற்றால்,
வீட்டுக்குள்ளேயே உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர் என, கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வீடுகளுக்குள் உயிரிழந்தவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது, 78
பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
வீடுகளில் உயிரிழப்பவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள், இவ்வருடம் ஜூன் மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டது. அதற்கமைய வீடுகளில் மரணமடைந்த முதலாவது கொரோனா
மரணம், ஒக்டோபர் 26ஆம் திகதி பதிவானது எனத் தெரிவித்துள்ள அவர், அன்றிலிருந்து டிசெம்பர் 27ஆம் திகதி வரை, 78 பேர்
கொரோனா வைரஸ் தொற்றால் வீடுகளிலேயே மரணமானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன், இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 25ஆம் திகதி வரை மாத்திரம், வீடுகளில் 130 பேர் உயிரிழந்தனர் என, கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது. அதில் 37 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம்- கம்பளையில் 100 கடைகள் பூட்டு
கொரோனா அச்சம்- கம்பளையில் 100 கடைகள் பூட்டு
கொரோனா அச்சம் காரணமாக கம்பளை நகரில் 100 இற்கும் மேற்பட்ட வர்த்தக நிலையங்கள் இன்று முதல் (29) மூடப்பட்டுள்ளன.
மேற்படி வர்த்தக நிலையங்களுக்கு வியாபார நிமித்தம் வந்துசென்ற பிஸ்கட் கம்பனியொன்றின் விற்பனை முகவருக்கு
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதனையடுத்தே,
அந்த பிரதிநிதி வந்துச் சென்றதாக தெரிவிக்கப்படும் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
அவ்வாறு இனங்காணப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும், அங்கு தொழில் புரிந்தவர்களும் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
பிஸ்கட் கம்பனியின் விற்பனை முகவர் காய்ச்சல் காரணமாக கடந்த 24 ஆம் திகதி கம்பளை வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
இதன்போது எழுமாறாக அவருக்கு பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் 26 ஆம் திகதி வெளியாகின. கம்பளை, பகுதியைச் சேர்ந்த 29 வயதான விற்பனை முகவருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே குறித்த விற்பனை முகவர், வியாபாரம் நிமித்தம் வந்துசென்ற வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
கம்பளை நகரப்பகுதியில் கொரோனா வைரஸ் அண்மைக்காலமாக வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது..
பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தளபதிக்கும் பதவி உயர்வு
பாதுகாப்புச் செயலாளருக்கும், இராணுவத் தளபதிக்கும் பதவி உயர்வு
பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவுக்கும்,
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர
சில்வாவுக்கும் ‘ஜெனரல்’ என்ற பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் சந்தண விக்ரமசிங்ஹ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவர்களுக்கான பதவியுயர்வை வழங்கியிருக்கியுள்ளார்.







