Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை
323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி வீதிகளில் உலாவிய குற்ற சாட்டில் 323 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் முகமூடி மற்றும் மாகாண எல்லைகளை தாண்டினர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளராதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய
செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிலேயே 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும்
மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதம்
சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதம்
மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெலிகட சிறைச்சாலையின் கூரையில் மேல் ஏறி கைதிகள் சிலர் போராட்டம் நடத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு!
பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு!
நாடு முழுவதும் அமுல் நடத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் மூலமான பெறுபேறுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய
நிபுணர் அசேல குணவர்த்தன நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாள் தோறும் 2,000 மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள்.
இதன் காரணமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலையில் பாரிய இராணுவ போர் ஒத்திகை நடவடிக்கை
திருகோணமலையில் பாரிய இராணுவ போர் ஒத்திகை நடவடிக்கை
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் நேற்று (24) ஆரம்பமானது.
(Cooperation Afloat Readiness and Training Exercise-2021 (CARAT-21) “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு
மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது.
பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அமைப்பில் நடைபெறும் அதேவேளை, அதன்
கடல் சார்ந்த பயிற்சிகள் ஜூன் 26 முதல் 30 வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடல்சார் ஈடுபாடு மற்றும் இயங்குதளத்தை மேம்படுத்துதல், பகிரப்பட்ட கடல்சார் சவால்களில் மேலும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, செயல்பாட்டு சூழல், விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து நன்கு புரிந்துகொள்வது, கடல்சார் கூறுகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு
இடையிலான தொடர்புகளை எளிதாக்குதல், கடல்சார் பரஸ்பர திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப செயல்படுதல் என்பன பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் அடங்கும் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமம் மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை, இலங்கை கடற்படை ஆகியவற்றுக்கிடையில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம்,
கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் விமான போக்குவரத்து, கடலில் நிரப்புதல், மேற்பரப்பு டிராக்கெக்ஸ், வருகை வாரிய தேடல் மற்றும் பறிமுதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பல்வேறு கூட்டு பயிற்சி வாய்ப்புகள் இடம்பெறவுள்ளன.
இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பல்களான சயுரல, கஜபாஹு, ஆகிய கப்பல்களும் இலங்கை விமானப்படையின் பெல் 212, 412 ரக
ஹெலிகொப்டர்கள், B 200 ரக பீச் கிராப்ட் விமானம், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பல், பி-8 பொசிடன் போயிங் கடல் சார்
ரோந்து விமானம் மற்றும் எஸ்எச்-60 ரக ஹெலிகொப்டர் ஆகியவற்றுடன் ஜப்பான் கடற்படையின் ஜேடிஎஸ் யூகிரி நாசகாரி கப்பல் மற்றும் எம் எச் -60ஆர் ஹெலிகொப்டர் ஆகியன பங்கெடுக்கின்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சியின் அங்குரார்பன நிகழ்வில் இலங்கை கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் வை என் ஜயரட்ண,
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டெர் உட்பட உயர் அதிகாரிகள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கோட்டா இன்று மக்களுக்கு விசேட உரை
கோட்டா இன்று மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார்.
இன்றிரவு 8.30ற்கு அவர் உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
இந்த உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
743 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
743 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 743 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
அவர்களில் அதிகளவானோர் குளியாபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் கூறினார்.
கொரனோவுக்கு 45 பேர் மரணம் – உண்மை பேசும் அரசு
கொரனோவுக்கு 45 பேர் மரணம் – உண்மை பேசும் அரசு
இலங்கையில் நேற்றைய (23) தினம் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45.
சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடு மேலதிக நடவடிக்கை
பயணக் கட்டுப்பாடு மேலதிக நடவடிக்கை
பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக்குழுவினால்
நாளை தீர்மானிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நாளை விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
பயணக் கட்டுப்பாடுகள்- 20,000 பொலிசார் கடமையில்
பயணக் கட்டுப்பாடுகள்- 20,000 பொலிசார் கடமையில்
பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வருவதால் பொசன் போயா தினத்தில் 20,000 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர்
வீடுகளில் தங்கி இருந்து மத வழிபாடுகளை அனுஷ்டிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வாடிக்கையாளர் இடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் போன்ற பொது இடங்களில், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக சிவில் உடையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
துமிந்த சில்வா கோட்டா மன்னிப்பின் கீழ் விடுதலை
துமிந்த சில்வாகோட்டா மன்னிப்பின் கீழ் விடுதலை
இலங்கையில் முன்னாள் அமைச்சர் துமிந்த சில்வா சிறையில் அடைக்க பட்டார் ,இவர் ஆளும்
ஜனாதிபதி கோத்தபாயாவின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளார்
இவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிட தக்கது
தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?
தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?
இலங்கையில் போதி ராஜா மாவத்தை பகுதியில் இரு பல்பொருள் அங்காடிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளன
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவாவில்லை
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம் – மக்கள் அவதி
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மத்திய நிலையத்தில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி
சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் பத்தொன்பது பேர் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த நோயானது பரவி வரும் நிலையில் ,கைதிகள் பலரை அரசுகள் மன்னித்து விடுதலை
செய்து இருந்தது ,ஆனால் இலங்கையில் ஆளும் கோட்டா அதனை சையது கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.6.2021) மதியம் 1.00 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர், தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட விடுதியினை நிர்மாணிப்பதற்காக வருடாந்த திட்டத்தில் திறைசேரியினால் அனுமதிக்கப்பட்ட 60 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு
மேலதிகமாக, 180 மில்லியன் தொகைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதுடன் ஏற்கனவே தனக்கு விசேடமாக கிடைக்கப்பெற்ற வேண்டுகோளின்
அடிப்படையில் தான் குறிப்பிட்ட தெல்லிப்பழை வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதனை சில தரப்பினர் தவறாக புரிந்துகொண்டு ஊடகங்களில்
விமர்சனங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிழையான கருத்தை பரப்புவதாகவும் கவலை வெளியிட்டார்.
மேலும் செப்ரெம்பர் மாத முடிவுக்கு முன்னர் தேவையான அனைத்து ஒதுக்கீடுகளையும் பெற்று செயற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் 2022 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை ஒக்டோபர்
மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டதுடன் ஆரம்பிக்கும் அபிவிருத்தி திட்டங்களை 2 வருடங்களுக்குள் முடித்து அதனை பயன்பாட்டிற்குரியவாறு செயற்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மேலும் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக தேவையான மேலதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் எனவும்; வடமாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு அதிக
முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக ஓதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றிரவு பத்து மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு
இன்றிரவு பத்து மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு
கடந்த மூன்று தினங்கள் விலகிக் கொள்ளப்பட்ட பயணக்கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு பத்து மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுவ்படுத்தப்படவுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம்திகதி தொடக்கம் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நேற்று முன்தினம் அதிகாரை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது..
இதேவேளை ,தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பிலான குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் வழங்கப்படும்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் நேற்று (22) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் இதுதொடர்பில் 41, 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும்
நோய்த் தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும்,தண்டனைச் சட்டக்கோவையின் 264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குற்றம் உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் மற்றும் ஆறு மாதகால
சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – டக்ளஸ்
கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – டக்ளஸ்
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிதி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் லஞ்ச்ஷீட்ட்டுக்கு வருகிறது தடை
இலங்கையில் லஞ்ச்ஷீட்ட்டுக்கு வருகிறது தடை
நாட்டில் பாரியளவில் சுற்றாடல் பாதிப்புக்கு காரணமாக இருக்கும் அனைத்து வகையான லஞ்ச் ஷீட் பாவனையையும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (21) சுற்றாடல் அமைச்சில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
2016 ஆம் ஆண்டில் அப்போதைய சுற்றாடல் அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லஞ்ச் ஷீட் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார், ஆனால் சில நிறுவனங்கள் விரைவில் உக்கும் லஞ்ச் ஷீட்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தனர், ஆனால் அந்த தீர்மானம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உலகில் எந்தவொரு நாடும் லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்துவதில்லை. லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்தும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான்.
மேலும், தற்போதைய தகவல்களின்படி, நான்கு பெரிய நிறுவனங்களினால் மாதமொன்றிற்கு 07-08 தொன் லஞ்ச் ஷீட்களை உற்பத்தி செய்கின்றனர். இதற்கமைவாக இலங்கையில் வருடாந்தம் கிட்டத்தட்ட 106 டொன் லஞ்ச் ஷீட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கமைய, எமது நாட்டில் நாளொன்றிற்கு சூழலில் வெளியேற்றப்படும் லஞ்ச் ஷீட்களின் அளவு குறைந்தது 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த லஞ்ச் ஷீட்கள் மண்ணில் சிதைந்து உக்கிப்போவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் செல்லும். இருப்பினும், லஞ்ச் ஷீட்கள் காரணமாக மண்ணில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லஞ்ச் ஷீட் பயன்பாட்டிற்கு பதிலாக மாற்று வழிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அது தொடர்பாக இந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், சில நிறுவனங்கள் லஞ்ச் ஷீட் உற்பத்தி இயந்திரங்களை வீட்டுத் தொழிலாக ஊக்குவித்து வருவதால், இந்த நாட்டில் தயாரிக்கப்படும் லஞ்ச் ஷீட்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறுவது கடினமாகவுள்ளது.
இதற்கு முன்னர் சுற்றாடல் அமைச்சு லஞ்ச் ஷீட்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால், புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் கூறிய அமைச்சர், லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் சம்பந்தப்பட்ட பிரிவுகளையும் மேலும் அறிவுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜசிங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சட்டத்தை மீறிய 433 பேர் கைது
சட்டத்தை மீறிய 433 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
ஒரே நாளில் வீதி விபத்தில் 11 பேர் மரணம்
ஒரே நாளில் வீதி விபத்தில் 11 பேர் மரணம்
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் விபத்தில் சிக்கி 12 பேர் மரணமாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கோவிட் நோயானது மக்களை மிரட்டி கொன்று குவித்து வரும் நிலையில் இவ்வாறான
விபத்துக்களில் அதிக மக்கள் பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது











