Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஆணுறுப்பை காட்டிய அதிகாரி சிக்கினார்
ஆணுறுப்பை காட்டிய அதிகாரி சிக்கினார்
குடும்ப பெண் ஒருவருக்கு ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக காட்டி தையல் இயந்திரம் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதி ஒன்றில் வசிக்கின்ற 2 பிள்ளைகளின் தாயான குடும்ப பெண்ணிடம் பல சலுகைகளை பெற்று தருவதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
தனது ஆணுறுப்பை புகைப்படம் எடுத்து குடும்ப பெண்ணின் வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணின் கைத்தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அனுப்பி பாலியல் சேட்டை செய்து வந்த சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தொடர்பான முறைப்பாடு ஒன்று திங்கட்கிழமை (07) கிடைக்கப்பெற்றிருந்தது.
ஆணுறுப்பை காட்டிய அதிகாரி சிக்கினார்
இதற்கமைய சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எல். சம்சுதீன் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பல்வேறு குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஐயூப் தலைமையிலான பொலிஸார் விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரான 41 வயது மதிக்கத்தக்க சாய்ந்தமருது பிரதேச செயலக சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.
மேலும் சந்தேக நபரான சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் பல்வேறு திருமணங்கள் மேற்கொண்டுள்ளதுடன் இவ்வாறு பல்வேறு கணவன் அற்ற பெண்கள் மற்றும் தனிமையில் உள்ள பெண்களை நாடி தனது இச்சைக்காக ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் இலஞ்சம் பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைதான சந்தேக நபரை நாளை (08) கல்முனை நீதிவான் நீதிமன்றில் சட்ட நடவடிக்கைக்காக ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலிby நிருபர் காவலன்
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதிby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்கள்
கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்கள்
வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய வரலாற்றிலேயே பெருந்தொகை கஞ்சாவை கடத்தலை முறியடித்து பெரும் குற்றச் செயல் ஒன்றைத் தடுத்து நிறுத்தியவர்கள் பொன்னாலை இளைஞர்கள் என வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார தெரிவித்தார்.
இதற்காக பொன்னாலை இளைஞர்களையும் பொதுமக்களையும் வட்டுக்கோட்டை பொலிஸ் பொறுப்பதிகாரி பாராட்டியுள்ளார்.
பொன்னாலையில் இடம்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கஞ்சா கடத்தலை முறியடித்த வட்டுக்கோட்டை இளைஞர்கள்
இங்கு மேலும் கருத்து தெரிவித்த உப பொலிஸ் பரிசோதகர் ஹேரத் பண்டார, இலங்கையில் கஞ்சா, ஹெரோயின் என்பன பாரியளவில் வியாபாரமாக நடைபெறுகின்றது. இதை பொலிஸாரால் மட்டும் கட்டுப்படுத்த முடியாது. பொதுமக்களின் ஒத்துழைப்புடனேயே இதை முறியடிக்க முடியும்.
வட்டுக்கோட்டை பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் கஞ்சா கடத்தலை முறியடித்து நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய குற்றச்செயலைக் கட்டுப்படுத்த உதவியவர்கள் பொன்னாலை இளைஞர்கள். இதற்காக பொன்னாலை மக்களையும் இளைஞர்களையும் வட்டுக்கோட்டை பொறுப்பதிகாரி பாராட்டியிருக்கின்றார்.
இதேபோன்று, ஏனைய பிரதேச மக்களும் இளைஞர்களும் செயற்படுவார்களாயின் இயன்றவரை போதைப்பொருள் கடத்தலை முறியடித்து குற்றச்செயல்களைக் குறைக்க முடியும் – எனத் தெரிவித்தார்
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
by நிருபர் காவலன் - பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
by நிருபர் காவலன் - எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
by நிருபர் காவலன் - எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன்
நுவரெலிய துப்பாக்கி சூட்டில் ஜோடி பலி
நுவரெலிய துப்பாக்கி சூட்டில் ஜோடி பலி
நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுவடைந்ததை அடுத்து, கணவரினால் மனைவி சூட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
நுவரெலிய துப்பாக்கி சூட்டில் ஜோடி பலி
சம்பவத்தில் திருமணமாகி எட்டே மாதங்களான இளம் கணவன்,மனைவியான
எண்டன் தாஸ் (வயது 32) மற்றும் நாதன் ரீட்டா (வயது 32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை பயன்படுத்தியே இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி பிரயோகம் தொடர்பான நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம்
மத்திய வங்கி வளாகத்தில் பதற்றம்
மத்திய வங்கி வளாகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தவர்களில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவொன்று பஸ்ஸில் வந்து இலங்கை மத்திய வங்கியின் வளாகத்திற்குள் பிரவேசித்தது.
இதனால், அதனைச் சுற்றி பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது, இந்நிலையில். பெண்ணொரவர் உட்பட 8 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
பஸ்களில் E- ticketing
பஸ்களில் E- ticketing
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாக 2048 ஆம் ஆண்டளவில் பொதுப் பயணிகள் போக்குவரத்து சேவையில் மின்சாரப் பேருந்துகளை இணைக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், அது தொடர்பான பூர்வாங்க நடவடிக்கைகள் அடுத்த சில மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி, தேசிய போக்குவரத்துக் கொள்கையொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், பொதுப் போக்குவரத்து சேவையில் ஒருங்கிணைந்த நேர அட்டவணைகள் மற்றும் இலத்திரனியல் பயணச்சீட்டுகளை அறிமுகப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (07) இடம்பெற்றது.
பஸ்களில் E- ticketing
பயணிகள் போக்குவரத்து துறையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் செயற்திறனின்மையால் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயணிகள் போக்குவரத்துத் துறையில் உயர் தரத்தை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
பயணிகள், பயணச்சீட்டு கொள்வனவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்கும் வகையில் E- E- ticketing முறை முன்மொழியப்பட்டுள்ளதாகவும், இதற்கு நிதியமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாகவும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
7 தேசிய பேருந்து சங்கங்களும் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அது தொடர்பில் மாகாண மட்டத்தில் கூடிய விரைவில் கருத்துக்கள் பெறப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.
மேலும் 09 மாகாணங்கள் தொடர்பில் 09 பிரதிநிதிகளை நியமித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்குமாறும் இராஜாங்க அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.
பஸ்களில் E- ticketing
எதிர்காலத்தில் பேருந்துகளுக்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் GPS தொழில்நுட்பம் மற்றும் E- ticketing சேவை முக்கிய அளவுகோலாகக் கருதப்படும் என்றும், கொட்டாவ பேருந்து நிலையம் மற்றும் மாகும்புர பல்நோக்கு பயணிகள் போக்குவரத்து நிலையத்தை ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொள்ளவும் பரிந்துரைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் சஷி வெல்கம மற்றும் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
by நிருபர் காவலன் - எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
by நிருபர் காவலன் - மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
by நிருபர் காவலன்
19 வயது யுவதியுடன் காதல் 54 வயது குடும்பஸ்தர் மரணம்
19 வயது யுவதியுடன் காதல் 54 வயது குடும்பஸ்தர் மரணம்
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்றைய தினம் (07) ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
19 வயது யுவதியுடன் காதல் 54 வயது குடும்பஸ்தர் மரணம்
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவரது உயிர் இடைவழியில் பிரிந்தது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
இந்தியாவின் அபிவிருத்திகளுக்கு தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல முதலில் நிரந்தரமாக தமிழர்கள் இந்த மண்ணில் வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியா உருவாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.
நேற்றைய தினம் (05) யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும் போதே அவர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையிலே புதிய பாலம் அமைப்பது தொடர்பாக அண்மையில் ரணில் விக்கிரமசிங்க இந்தியா சென்ற போது அது பற்றி ஆராயப்பட்டதாகவும், அது தொடர்பான தொழில்நுட்ப பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று வருவதாகவும் செய்திகள் வெளி வருகின்றது.
அந்த விடயத்திலே எங்களுக்கு எந்த விதமான எதிர் மனப்பாங்குகளும் இல்லை அப்படி ஒரு பாலம் அமைக்கப்படுகிறது என்றால் அதுவும் தலைமன்னாருக்கும் ராமேஸ்வரத்துக்கும் இடையில் நாங்கள் அதனை வரவேற்கிறோம்.
ஆனால் ஒரு விடயத்தை தெளிவாக இந்தியாவும் புரிந்து கொள்ள வேண்டும் இந்தியா தமிழர்கள் சார்பாக தமிழர்களுடைய பிரதிநிதியாக 1987 ஆம் ஆண்டிலே இலங்கை இந்தியா ஒப்பந்தத்திலேயே கையொப்பமிட்டு இருந்தது.
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
தமிழர் தரப்பாகத்தான் அவர்கள் அதில் கையொப்பமிட்டு இருந்தார்கள். அந்த காலகட்டத்திலேயே 13 ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டது, அல்லது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக கொண்டு வரப்பட்ட பேச்சு வார்த்தைகள் தீர்வுகள் என்பது சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை,
ஆகவே பொறுப்பு வாய்ந்த ஒரு தரப்பு என்ற வகையில் இந்தியாவினால் நேர்மையாக இதய சுத்தியோடு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்கின்ற ஆதங்கமும் கேள்வியும் தமிழ் மக்களிடையே நீண்ட காலமாக இருக்கிறது.
புதிதாக நாங்கள் பாலம் அமைக்கிறோம் அல்லது எண்ணை குழாய்களை கொண்டு வருகிறோம் என்பது தமிழர்களுக்கான அரசியல் தீர்வை தருவதாக அமையாது, ஆகவே முதலில் 35 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக வடக்கு கிழக்கிலே போலீஸ் காணி
அதிகாரங்கள் உட்பட்ட ஒரு அதிகாரப் பகிர்வின் அடிப்படையாகக் கொண்டு வரப்பட்ட அந்த ஒப்பந்தத்தின் ஊடான திருத்தம் என்பதை இந்தியா ஏன் இவ்வளவு காலமும் நடைமுறைப்படுத்தவில்லை,
இப்பொழுதும் கூட 13 மைனசுக்கு போய் இருக்கிறது அதில் பொலிஸ் கூட இல்லை ஆகவே இந்த காலகட்டங்களை எல்லாம் விட்டு, இவற்றையெல்லாம்
தொலைத்து விட்டு இந்தியா ஒரு புதிய பாலம் அமைத்தல் எண்ணை குழாய்களை செய்வதன் ஊடாக தமிழ் மக்களுக்கான ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் என்று நாங்கள் நம்பவில்லை,
தமிழ் மக்கள் எதிரானவர்கள் அல்ல
ஆகவே நாங்கள் தெளிவாக ஒன்றை இந்தியாவிலே இருக்கின்ற நிபுணர்கள் அரசியல் ஆய்வாளர்கள், இந்தியாவில் இருக்கின்ற தலைவர்களை நாங்கள் வினையமாக கேட்பது நாங்கள் என்று மெல்ல மெல்ல இங்கு வாழ முடியாமல் இடத்தை விட்டு நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
முதலில் நிரந்தரமாக நாங்கள் இந்த மண்ணிலே வாழக்கூடிய ஒரு சூழலை இந்தியா உருவாக்கினால் நாங்கள் அடுத்த கட்ட அந்த எண்ணங்களுக்கு எதிர்பு மன பாங்கோடு இல்லை என்பதை தெளிவுபடுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார்
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
இலங்கைக்கு 450 மில்லியன் ரூபா வழங்கிய இந்தியா
இலங்கைக்கு 450 மில்லியன் ரூபா வழங்கிய இந்தியா
நாட்டில் டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய – இலங்கை திட்டக் கண்காணிப்பு குழு தீர்மானித்துள்ளது.
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே,
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் எம். எல்டோஸ் மெதிவ், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் பேராசிரியர் எம்.டி. குணவர்தன, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க,
ஜனாதிபதி செயலக மேலதிக செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன ஆகியோர் அடங்கிய இந்த மேற்பார்வைக் குழு ஜனாதிபதி அலுவலகத்தில் கூடி இது தொடர்பில் விரிவாக கலந்துரையாடியது.
இலங்கைக்கு 450 மில்லியன் ரூபா வழங்கிய இந்தியா
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கேள்விப்பத்திரம் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், உரிய கால வரையறையின் படி அவை பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.
இதன்படி, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக முற்பணமாக இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட தொகையில் 15% சதவீதமான,
அதாவது 450 மில்லியன் இந்திய ரூபா பெறுமதியான காசோலையை, இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்திடம் கையளித்தார்.
உரிய கால வரையறைக்கமைய இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், வாரத்திற்கு ஒருமுறை கூடி அதன் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யுமாறும் சாகல ரத்நாயக்க, அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.
இந்திய – இலங்கை ஒத்துழைப்பின் கீழ் செயற்படுத்தப்படும் இத்திட்டம், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்த சாகல ரத்நாயக்க, இதற்காக இந்திய அரசாங்கம் வழங்கும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்
கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்
தனியார் வகுப்புக்கு செல்வதற்காக, ரயில் கடவையில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனின் கழுத்தை வெட்டி காயப்படுத்திய இனந்தெரியாத நபர் அம்மாணவன் கொண்டுச் சென்ற பையை, அபகரித்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் மீரிகமவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில், கிரிஉல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மாணவனே பாதிக்கப்பட்டுள்ளார்.
மீரிகம பஸ் நிலையத்துக்கு பஸ்ஸில் வந்த இந்த மாணவன், மற்றுமொரு மாணவனுடன், ரயில் தண்டவாளத்தில் வில்வத்த திசையை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தார். அதன்போதே இவ்வனர்த்தத்துக்கு முகங்கொடுத்தார்.
கழுத்தை வெட்டி விட்டு தப்பியோட்டம்
அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவ்விரு மாணவர்களுக்கும் பின்னால் பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் அலைபேசியை பார்த்துக்கொண்டு பயணித்தமையால், நடந்த சம்பவத்தை காணவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
எனினும், முன்பாக பயணித்த இருவர் சத்தபோட்டதை அடுத்து திடீரென பார்த்தபோது, வில்வத்த ரயில் கடவை பக்கமாக ஒருவர் ஓடிகொண்டிருப்பதை கண்டுள்ளனர்.
அபகரிக்கப்பட்ட பை, அப்பிரதேசத்தில் உள்ள பற்றைக்காட்டுக்குள் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு
மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு
அனைத்து மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரமே இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3,000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.
எனவே, இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவே இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரியவருகின்றது.
மலையக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு
மலையகத்துக்கான முக்கியத்துவமிக்க அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது மக்கள் பிரதிநிதிகளை அரவணைத்துக்கொண்டு, அவர்களின் ஆலோசனைகளையும் உள்வாங்கி செயற்படவே அமைச்சர் ஜீவன் தொண்டமான் எதிர்பார்க்கின்றார். இதற்கான அழைப்பையும் அவர் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பாராளுமன்றத்தில் 9 தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலிby நிருபர் காவலன்
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதிby நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
கெமராவில் பதிவான கோர விபத்து
கெமராவில் பதிவான கோர விபத்து
பாணந்துறை நல்லுருவ பிரதேசத்தில் கெப் வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று (04) நள்ளிரவு 12 மணியளவில் காலி – கொழும்பு பிரதான வீதியில் நல்லுருவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து கெப் வண்டியின் முன்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கெமராவில் பதிவாகியுள்ளது.
களுத்துறையில் இருந்து பாணந்துறை நோக்கி பயணித்த கெப் வண்டி, முன்னால் பயணித்த டிப்பர் வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது, கெப் வண்டியின் அதிவேகத்தினால் வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் சேவை நிலையம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
கெமராவில் பதிவான கோர விபத்து
இந்த விபத்தில் மின்கம்பம் மற்றும் மின் கம்பிகள் பலத்த சேதமடைந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கும் பாரிய சொத்து சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கெப் வண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே விபத்திற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
by நிருபர் காவலன் - எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
by நிருபர் காவலன் - மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
by நிருபர் காவலன்
சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது
சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது
வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலிகம பேருந்து நிலையத்திற்கு அருகில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.
நேற்று (05) மாலை குறித்த அதிகாரி தனது கடமையை முடித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரி வீடு நோக்கி பேருந்தில் பயணித்த போது அதில் ஏறிய 05 பேர் கொண்ட கும்பல் அவரைத் தாக்கியுள்ளது.
சிறைச்சாலை அதிகாரி மீது தாக்குதல் ஐவர் கைது
தாக்குதலினால் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரி, மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த அதிகாரி நேற்று முன்தினம் (04) மாத்தறை சிறைச்சாலையிலிருந்து இடமாற்றம் பெற்று காலி சிறைச்சாலைக்கு கடமைக்காக நேற்றைய தினமே (5) சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவராத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- செங்கடலில் கப்பல் மீதான தாக்குதலில் மூன்று பாகிஸ்தான் நாட்டினர் பலி
by நிருபர் காவலன் - எண்ணெய் கப்பல்களை தாக்கிய ஹவுதி
by நிருபர் காவலன் - 24 லட்சம் பெண்களை பாடசாலை செல்ல தடை விதித்த தலிபான்கள்
by நிருபர் காவலன் - வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
by நிருபர் காவலன் - ஓமான் கடலில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
by நிருபர் காவலன்
மகிந்தா விமான நிலையத்தில் 4281 கோடி ரூபாய் நட்டம்
மகிந்தா விமான நிலையத்தில் 4281 கோடி ரூபாய் நட்டம்
2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு கடந்த வருடம் மாத்திரம் 2 ஆயிரத்து 221 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனத்தின் கணக்காய்வுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிந்தா விமான நிலையத்தில் 4281 கோடி ரூபாய் நட்டம்
2022 ஆம் ஆண்டில் விமான நிலையத்தின் செயல்பாட்டுச் செலவு 203 கோடி ரூபா என்றும், இது அதன் இயக்க வருமானத்தை விட 26 மடங்கு அதிகம் என்றும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வரிக்குப் பிந்திய நட்டம் 2,221 கோடி ரூபாவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது
சொக்லேட்டில் கட்டைவிரல்
சொக்லேட்டில் கட்டைவிரல்
கொள்வனவு செய்யப்பட்ட சொக்லேட்டில் “கட்டைவிரல்” பகுதி காணப்பட்டதையடுத்து, மஹியங்கனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு அறிவித்ததையடுத்து, மஹியங்கனை பொது சுகாதார பரிசோதகர் விசேட பரிசோதனையை மேற்கொண்டார்.
மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர், வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் இருந்து சொக்லேட்டை கொள்வனவு செய்துள்ளார்.
உணவகத்தை பரிசோதித்த பொது சுகாதார பரிசோதகர்கள் ஏனைய சொக்லேட் பொருட்களையும் கைப்பற்றினர், பின்னர் மஹியங்கனையில் உள்ள பல்பொருள் அங்காடியின் அலுமாரிகளை சோதனையிட்டதுடன் தொடர்புடைய வகையைச் சேர்ந்த சொக்லேட்டுகளையும் கைப்பற்றினர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு
விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு
விமான எதிர்ப்பு தோட்டாக்கள், கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுத பாகங்கள் என்பனவற்றை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு சோதனை செய்து கண்டெடுத்துள்ளது.
சீதுவ லியனகெமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள 8 ஏக்கர் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவை மீட்கப்பட்டுள்ளன.
விமான எதிர்ப்பு வெடிமருந்துகள் இரண்டு, ஒரு கைக்குண்டு, ஒரு எல்எம்ஜி தோட்டாக்கள், இரண்டு வகையான வெடிபொருட்கள், ஒரு சிறிய துப்பாக்கியின் 17 பாகங்கள், ஒரு டெட்டனேட்டர், இரண்டு வாட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் பத்து தோட்டாக்கள் அடங்கிய சரம் ஒன்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு
அனுலியனகேமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தோட்டத்தின் நிறைவின் போது மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனினால் இவற்றை கண்டுபிடிக்க முடிந்துள்ளது.
இவற்றை எடுத்துச் சென்று இந்தத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்தவர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இவற்றை மறைத்து வைத்தவர்கள் பற்றிய தகவல்களை வெளிக்கொண்டு வந்து அவர்களைக் கைது செய்ய களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
தொலைபேசி கம்பித் திருடர்கள் கைது
கிரிஉல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முதுகல சந்தியிலிருந்து பிஹல்பொல நோக்கி செல்லும் பிரதான வீதியில் உள்ள தொலைபேசி கம்பிகளை அறுத்துத் திருடிய இருவரை நேற்று (05) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 35 மற்றும் 59 வயதுடைய நாரம்மல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (06) குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கிரிஉல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்தது
by நிருபர் காவலன் - எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்
by நிருபர் காவலன் - சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
by நிருபர் காவலன் - யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்
by நிருபர் காவலன் - மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்
by நிருபர் காவலன்
வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு
வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு
வியப்பூட்டும் வகை புழுவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 46,000 ஆண்டுகள் பழமையான இந்த புழு இனத்தை விஞ்ஞானிகள் சைபீரியாவில் பனி மூடிய வனப்பகுதியில் மேற்கொண்ட ஆய்வின் போது கண்டுபிடித்தனர்.
இந்த உறங்கும் புழுக்களுக்கு விஞ்ஞானிகளால் தண்ணீர் மற்றும் உணவு வழங்கப்பட்டது, அதன் பிறகு அவை உறக்கநிலையிலிருந்து வெளியே வந்து விழித்திருந்தன
வியப்பூட்டும் வகை புழு கண்டுப்பிடிப்பு
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த புழு ப்ளீஸ்டோசீன் Pleistocene சகாப்தத்தின் கடைசி பாதியில் இருந்து ஒரு விலங்கு இனமாகும்.யானைகளைப் போன்ற கம்பளி மாமத்கள் இந்தக் காலத்தில் வாழ்ந்தன.
இந்த புழுக்களுக்கு விஞ்ஞானிகள் காலத்தை கடந்து செல்லக்கூடிய அற்புதமான புழுக்கள் என்று பெயரிட்டுள்ளனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
மர்ம காய்ச்சலால் பலர் மரணம்
மர்ம காய்ச்சலால் பலர் மரணம்
காய்ச்சல் காரணமாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் ஞாயிற்றுக்கிழமை (06) காலை உயிரிழந்துள்ளதாக மேற்படி மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார்.
அப்துல் அஸீஸ் என்ற பதின்மூன்று வயது சிறுவனே உயிரிழந்துள்ளார். இவர் நீர்கொழும்பு, நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயின்று வந்தார்.
மரணம் குறித்து தந்தை கருத்து தெரிவித்துள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, அவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. அவ்வப்போது காய்ச்சல் குறைந்து கொண்டே வந்தது. பின்னர் சனிக்கிழமை (05) இரவு எனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
மர்ம காய்ச்சலால் பலர் மரணம்
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக இரவு 10.30 மணியளவில் எமது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம்.
அங்கு மகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.டாக்டர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். என் மகன் இரவு உணவைக் கூட எடுத்துக்
கொண்டான். ஆனால் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனது மகன் ஞாயிற்றுக்கிழமை (06) அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
புகையிரதத்தில் மோதி பெண் பலி
புகையிரதத்தில் மோதி பெண் பலி
யாழ்ப்பாணம், புங்கன்குளம் புகையிரத நிலையத்துக்கு அருகில், புகையிரதத்தில் மோதுண்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று மதியம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற
புகையிரதத்தில் மோதியே குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.
- பாம்பைக் காப்பாற்றும் முயற்சி மூன்று வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் முடிந்ததுby நிருபர் காவலன்
- எரியும் தீப்பந்தங்களுடன் போராட்டம்by நிருபர் காவலன்
- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்by நிருபர் காவலன்
- யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையிலிருந்து வெளியேறினார்by நிருபர் காவலன்
- மரண தண்டனை விதிக்கப்பட்டால் வெலிக்கடை தூக்குமேடை தயார்by நிருபர் காவலன்
பிரான்சில் லட்சம் யூரோ வியாபாரமாகும் தமிழ் கடை video
பிரான்சில் லட்சம் யூரோ வியாபாரமாகும் தமிழ் கடை video
லட்சம் யூரோ வருமானமானமாக ஈட்டி கொள்ளும் தமிழர் பல் பொருள் மொத்த கொள்வனவு மையம்,
மலிந்த விலையில் தரமான உணவுகள் இன்றே நாடுங்கள்
Sas Roi Import Export
Distribution
5place henri moissan
94460 Valenton
Telphone 0033 98063 8942
mobile 0033 758 196129