Tag: குடும்பஸ்தர் மரணம்
19 வயது யுவதியுடன் காதல் 54 வயது குடும்பஸ்தர் மரணம்
19 வயது யுவதியுடன் காதல் 54 வயது குடும்பஸ்தர் மரணம்
யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கும் 19 வயது யுவதி ஒருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு சென்றிருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறிய உறவினர்கள், அவர்களை ஊருக்கு வருமாறு கூறினர்.
இந்நிலையில் அவர்கள் இருவரும் இன்றைய தினம் (07) ஊருக்கு வந்தவேளை மக்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
19 வயது யுவதியுடன் காதல் 54 வயது குடும்பஸ்தர் மரணம்
இந்நிலையில் தாக்குதலுக்கு உள்ளான நபரை தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சுன்னாகம் பொலிஸார் அனுப்பி வைத்தவேளை, அவரது உயிர் இடைவழியில் பிரிந்தது.
சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த மரியதாஸ் ஜெகதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலிby நிருபர் காவலன்
- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைதுby நிருபர் காவலன்
- அமெரிக்க கூட்டாட்சி கடல்சார் ஆணைக்குழுவின் தலைவர் இலங்கைக்கு வருகைby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- கல்வி மற்றும் தொழிற்பயிற்சி ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கையும், பூட்டானும் உடன்பாடுby நிருபர் காவலன்













