இலங்கை வந்தார் பிரபல நடிகர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்தார் பிரபல நடிகர்

இலங்கை வந்தார் பிரபல நடிகர்

இலங்கை வந்தார் பிரபல நடிகர் கன்னட நடிகர் யஷ் நடிப்பில் வெளியான மிகப்பெரிய சூப்பர் ஹிட் படமான KGF மூலம் கருடண் என அனைவராலும் அறியப்பட்ட பிரபல நடிகர் ராமச்சந்திர ராஜு இலங்கை வந்துள்ளார்.

இவர் கொழும்பிலிருந்து பெங்களூர் செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார்.

இது குறித்த புகைப்படங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ளது.

இயந்திரம் செயலிழப்பு;நோயாளிகள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

இயந்திரம் செயலிழப்பு நோயாளிகள் அவதி

இயந்திரம் செயலிழப்பு நோயாளிகள் அவதி

இயந்திரம் செயலிழப்பு நோயாளிகள் அவதி ,கராப்பிட்டிய வைத்தியசாலையில் உள்ள எஞ்சியோகிராம் இயந்திரம் கிட்டத்தட்ட ஒரு மாதகாலமாக சேவையில்லாமலிருப்பதால், இதயநோயாளிகள் மிகவும்

ஆபத்தான நோயறிதல் நடைமுறைகளுக்கு ஆளாகியுள்ளதாக தெரிய வருகிறது.

இப் பிரச்சினை காரணமாக அத்தியாவசியப் பரிசோதனை தேவைப்படுகிறன்ற நோயாளிகள், அடுத்த ஆண்டு பரிசோதனையை மேற்கொள்ளும் படியாக நீண்ட தாமதங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள்ளாகியுள்ளனர்.

ஏற்கனவே திகதிகளைப் பெற்றவர்கள், செயலிழப்பு காரணமாக பரிசோதனையை மேற்கொள்ள முடியாமல் உள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சேவையைத் தனியார் வைத்தியசாலையில் அணுக அதிக செலவுகள் தேவைப்படுவதால், நோயாளிகளின் குடும்பத்தினர், இயந்திரத்தை விரைவாக சரி செய்ய வைத்தியசாலை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மற்றும் அதற்கு அப்பால் உள்ள மக்களும் கராப்பிட்டிய வைத்தியசாலையை அணுகுவதுடன், அங்கு செயற்படும் எஞ்சியோகிராம் இயந்திரம் இன்மையால் பெருமளவிலான நபர்கள் ஆபத்தில் உள்ளனர்.

குழாய் எரிந்ததால் இயந்திரம் செயல்படாமல் நின்றதாக வைத்தியசாலை இயக்குநர் வைத்தியர் எஸ்டியுஎம் ரங்கா தெரிவித்தார்.

மாற்று பாகம் அமைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது, விரைவில் பழுது நீக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம்

அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவர் நியமனம் ,அணுசக்தி அதிகார சபையின் புதிய தலைவராக கலாநிதி துஷாரா ரத்நாயக்க எரிசக்தி அமைச்சின் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற துஷாரா ரத்நாயக்க, அணு பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற ஒரே இலங்கையர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் மின் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய மீனவர்கள் மீண்டும் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்திய மீனவர்கள் மீண்டும் கைது

இந்திய மீனவர்கள் மீண்டும் கைது

இந்திய மீனவர்கள் மீண்டும் கைது ,எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இராமேஸ்வரம் மண்டபத்தைச் சேர்ந்த மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், அவர்களிடம் இருந்து ஒரு விசை படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மன்னார் கடற்பரப்பில் கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள மன்னார் கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீனவர்களை படகுடன் மன்னார் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க இருப்பதாக இலங்கை கடற்படை தகவல் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்
Posted in இலங்கை செய்திகள்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில்

பாகிஸ்தான் கடற்படைக் கப்பலான ASLAT கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது.

இலங்கை கடற்படையால் கடற்படை மரபுகளுக்கு இணங்க இந்த கப்பல் வரவேற்கப்பட்டது. PNS ASLAT கப்பல், முகமது அசார் அக்ரம் தலைமையிலான 123 மீட்டர் நீளமுள்ள ஒரு போர்க்கப்பலாகும்.

பயணப் பயிற்சி இந்தக் கப்பலில் 243 பேர் கொண்ட குழுவினர் பணியாற்றுகின்றனர். கொழும்பில் கப்பல் தங்கியிருக்கும் போது, அதன் பணியாளர்கள் நாட்டின் சில சுற்றுலா தலங்களைப் பார்வையிடுவார்கள் என்று இலங்கையின் கடற்படை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் பிஎன்எஸ் ASLAT 2025 பெப்ரவரி 4 ஆம் திகதியன்று இலங்கையை விட்டு புறப்படும் இதன்போது, கொழும்பு கடலில் இலங்கை கடற்படையின் ஒரு கப்பலுடன் ஒரு பயணப் பயிற்சியை பாகிஸ்தானிய கப்பல் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

மொட்டின் புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்,ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனது அடிமட்ட மக்களை நோக்கிச் செல்லும் வேலைத்திட்டமான “நமல் சமக கமின் கமட்ட” (நாமலுடன் கிராமம் கிராமமாக ) இன்று (01) ஆரம்பிக்கவுள்ளது.

இன்று காலை அனுராதபுரத்தில் உள்ள ஜய ஸ்ரீ மஹா போதியாவிற்கு அருகில் சமய அனுஷ்டானங்களுடன் இந்த முயற்சி ஆரம்பமாகவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து உத்தியோகபூர்வ பதவியேற்பு நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது பொது நிகழ்வு நொச்சியாகமவில் பிற்பகல் 2 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது, அங்கு தற்போதைய அரசியல் நிலைமைகள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அரசாங்க கொள்கைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறை நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட 14,000 கிராமங்களை உள்ளடக்கியதாக SLPP திட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை ,சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை அபகரிப்பதற்காக பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி வேவல்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி கைப்பற்றப்பட்டது.

இரத்தினபுரி பன்னில,நிரிஎல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட, இரண்டு பிள்ளைகளின் தாயான சுதுஹக்குருகே சோமாவதி (வயது 58) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களது மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கணவனும் மனைவியும் கலபட பகுதிக்கு வந்து தனியாருக்கு சொந்தமான காணியில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்கள்.

நாளாந்தம் மாலையில் அந்த பெண்ணின் கணவன் கலபட சந்தியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு சென்று வருவார்.

கடந்த 30 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் வழமை போல் கலபட பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு சென்று சில பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கணவர் அவரது மனைவியை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்து காவலாளியின் உதவியுடன் வீட்டை சுற்றி தேடியுள்ளார்.

வீட்டை சுற்றி தேடி கிடைக்காததால் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த பின்னர் வேவல்வத்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் அயலவர்களின் உதவியுடன் தேடி பார்த்த போது வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை கண்டுள்ளார்கள்.

கடந்த 31ஆம் திகதி காலை சம்பவ இடத்திற்கு வந்த இரத்தினபுரி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சோதனை செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டார்கள்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த பகுதியை சோதனை செய்ததுடன் சடலத்தை பரிசோதனை செய்தார்.

மேலும் இரத்தினபுரி நீதிமன்றத்தின் கடமை நேர நீதவான் வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

கடந்த 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவர் கசிப்பு தயாரிப்பில் ஈடுபடுபவர் என்றும் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி
Posted in இலங்கை செய்திகள்

காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி

காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி

காயமடைந்த சுற்றுலாப் பயணிக்கு STF படையினர் உதவி ,லோகந்தயா, மாஎலிய பகுதியில் நடைபயணம் மேற்கொண்டபோது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட சீனப் பிரஜை ஒருவருக்கு நுவரெலியா முகாமில் உள்ள விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் குழு இன்று உதவியது.

காயமடைந்த பெண்ணை கவனித்த STF அதிகாரிகள் உடனடியாக முதலுதவி அளித்தனர். கிடைக்கக்கூடிய உபகரணங்களைப் பயன்படுத்தி, அவர்கள் ஒரு

தற்காலிக ஸ்ட்ரெச்சரை மேம்படுத்தி, குறித்த பெண் மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்வதற்காக சவாலான நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 4 கிலோமீட்டர் தூரம் அப்பெண்ணைத் தூக்கிச் சென்றுள்ளனர்.

மாவை சேனாதிராஜாவுக்கு நாமல் இறுதி அஞ்சலி
Posted in இலங்கை செய்திகள்

மாவை சேனாதிராஜாவுக்கு நாமல் இறுதி அஞ்சலி

மாவை சேனாதிராஜாவுக்கு நாமல் இறுதி அஞ்சலி

மாவை சேனாதிராஜாவுக்கு நாமல் இறுதி அஞ்சலி ,இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மறைந்த மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இன்றைய தினம், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய

அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது, யாழ். மாவட்ட பிரதம அமைப்பாளர் கீதநாத், கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மதனவாசன் மற்றும் கட்சியின் வடமாகாண ஒருங்குணைப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்

மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம்

மாவையின் இறுதிக் கிரியைகள் ஆரம்பம் ,மறைந்த தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்று வருகின்றன.

அவரது புகழுடல் வைக்கப்பட்டுள்ள மாவிட்டப்புரம் இல்லத்தில் இன்று காலை 8.00 மணியளவில் இறுதிக் கிரியைகள் ஆரம்பமாகியுள்ளதுடன், 10.00 மணியளவில் அஞ்சலி உறைகள் இடம்பெறவுள்ளன.

அதனை தொடர்ந்து மாவிட்டப்புரம் இந்து மயானத்தில் மாவை சேனாதிராஜாவின் புகழுடல் தகனம் செய்யப்படவுள்ளது.

மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி
Posted in இலங்கை செய்திகள்

 மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி

 மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி

  மஹிந்தாவின் மகன் வைத்திருந்த 7துப்பாக்கி தற்பொழுது பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக  மஹிந்தாவின் மகன் யோசித்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 பாராளுமன்ற உறுப்பினர் அல்லாத ஒருவர் எப்படி ஏழு துப்பாக்கிகளை இலங்கையில் வைத்திருக்க முடியும் என்கின்ற கேள்வி இதன் மூலம் எழுப்பப்பட்டுள்ளது.

 சகோதரன் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்கின்ற காரணத்திற்கு அமைவாக வைத்து இவருக்கு எப்படி இந்த ஏழு துப்பாக்கிகள் வழங்கப்பட்டன எனவும் .

எப்படி அது வழங்க முடியும் என்று இந்த கேள்வியை இந்த விடயம் எழுப்பி இருக்கிறது.

 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்திருக்கிற சட்டம் இலங்கையில் இருக்கிறது .

அதன் அடிப்படையில் பாதுகாப்பு அமைக்க பதிவு செய்யப்பட்டு இவர்கள் துப்பாக்கியை பயன்படுத்தி வருகின்றனர்.

வீடியோ

 ஆனால் அரசியல்வாதியின் மகன் என்கின்ற காரணத்தினால் ,எந்த ஒரு பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக் கொள்ளாத ஒருவர் 7 துப்பாக்கிகள் வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் கொதிப்பையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கின்றது .

இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்
Posted in இலங்கை செய்திகள்

  இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்

  இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய்

  இலங்கையில் 40000 பேருக்கு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது ஆண்டுதோறும் இலங்கையில் 1000-க்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு புற்றுநோய் ஏற்பட்டு வருவதாக புற்றுநோய் அதிகார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இலங்கை சுகாதாரத் துறையின் கூற்று படி இந்த நாட்டில் ஆண்டுதோறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் .

 இவர்களில் 30 விதமானவருக்கு இரத்த புற்றுநோய் இருப்பதாகவும் 25 வீதமானருக்கு மத்திய நரம்பு மண்டலம் தொடர்பான புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் வருடாந்தம் சுமார் 40,000 புற்று நோயாளிகள் பதிவாகவும் அவர்கள் 4000 பேர் இனத்த புற்று நோய்களில் நோயாளிகள் என கண்டறியப்பட்டுள்ளது.

வீடியோ

 இலங்கையில் ஆண்டு தோறும் 40000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் பெரும அதிர்வல்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்த புற்றுநோய் காண காரணம் என்ன என்பதை கண்டறிந்து அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மட்டுமே மக்களை பேராபத்திலிருந்து தடுக்க முடியும் என அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

திருகோணமலையில் கோர விபத்து
Posted in இலங்கை செய்திகள்

திருகோணமலையில் கோர விபத்து

 திருகோணமலையில் கோர விபத்து

திருகோணமலையில் கோர விபத்து ,திருகோணமலை கபர்ண வீதியில் கல்மலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது 32 அதிகரித்துள்ளது,இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .இந்த விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் இதுபோன்று பலபல வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இதில் பலர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வீதி விதிமுறைகளை மதித்து வாகனங்களை செலுத்தி செல்ல மறந்தமையால் சாரதிகள் அயர்ந்து உடல் அசைவில் நித்திரை கொள்வதால் ,இந்த விபத்துக்கள் இடம் பெற்றுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டது.

 வாகன ஓட்டிகள் நான்கு மணி நேரத்திற்கு பின்னர் ஓய்வு எடுக்க வேண்டும் என்பது விதிமுறையாக இருக்கிறது .

வீடியோ

ஆனால் அதனை கடைபிடிக்காமல் வாகனங்களை செலுத்தி செல்வதாலேயே இந்த விபத்து ஏற்படுவதாகவும் பல அப்பாவி உயிர்கள் ஆவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இலங்கை போலீசார் உரிய முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறாத எனவும் அவற்றை தடுத்திருக்க முடியும் என்பது மக்கள் குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள்
Posted in இலங்கை செய்திகள்

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள்

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள்

வாகன இறக்குமதிக்கு விதித்துள்ள 9 நிபந்தனைகள் ,2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறையில் இருந்த தற்காலிக வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, வாகனங்களை இறக்குமதி செய்ய இன்று (01) முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ், 2025 ஜனவரி 31 ஆம் திகதியிட்ட அதிவிசேட வர்த்தமானியில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் கார்கள், வேன்கள், பேருந்துகள், பொருட்களை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் மோட்டார் வாகனங்கள்

, சிறப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் இயந்திரங்களைப் பயன்படுத்தாத பிற பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாத்தல், அந்நியச் செலாவணியை இழந்து அதிக அளவில் வாகனங்களை இறக்குமதி செய்வதை ஊக்கப்படுத்தாமல் இருத்தல், அரச வருவாயை அதிகரித்தல் போன்ற

நோக்கங்களுடன், நாட்டில் இயல்பான பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும்

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் பின்வரும் நிபந்தனைகளை அறிவித்துள்ளது.

வீடியோ

அதன்படி,

  1. மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் மற்றும் அரச நிறுவனங்களில் பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளர்கள் இதன் மூலம் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை இறக்குமதி செய்யலாம்.
  2. மேலே குறிப்பிடப்பட்டுள்ள இறக்குமதியாளர்கள் தவிர மற்ற
  3. இறக்குமதியாளர்கள் 12 மாத காலத்திற்குள் ஒரு மோட்டார் வாகனத்தை மட்டுமே இறக்குமதி செய்யலாம்.

  1. இறக்குமதி செய்யப்படும் எந்தவொரு மோட்டார் வாகனமும் கொள்வனவாளரின் பெயரில் (பதிவுசெய்யப்பட்ட இறக்குமதியாளரிடமிருந்து வாங்கினால்) அல்லது

  2. இறக்குமதியாளரின் பெயரில், குறிப்பிட்ட மோட்டார் வாகனம் தொடர்பான இறக்குமதி பில்லில்/சுங்கக் குறிப்பில் பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள், மோட்டார் வாகனம் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்.
  3. மோட்டார் வாகனங்களைப் பதிவு செய்வதற்கு, இறக்குமதியாளர் அல்லது கொள்வனவாளர் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தால் வழங்கப்பட்ட வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) அடங்கிய பிரமாணப் பத்திரத்தை, மற்ற அனைத்து தேவையான ஆவணங்களுடனும், மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், மேலே உள்ள பத்தி (1) இல் குறிப்பிடப்பட்டுள்ளவற்றைத் தவிர மற்ற இறக்குமதியாளர்கள், தங்கள் இரண்டாவது வாகனத்தை இறக்குமதி செய்யும்போது, ​​தங்கள் முதல் வாகனத்தை இறக்குமதி செய்த நாளிலிருந்து 12

மாத காலத்திற்குள் வேறு எந்த வாகனத்தையும் இறக்குமதி செய்யவில்லை என்றும் அந்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட வேண்டும். (சுங்கப் பதிவு திகதியிலிருந்து).

  1. ஒரு இறக்குமதியாளர் 90 நாட்களுக்குள் இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யத் தவறினால், குறிப்பிட்ட மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்யும் போது மோட்டார் வாகனத்தின் விலை,
  2. காப்பீடு மற்றும் கப்பல் கட்டண பெறுமதி (CIF மதிப்பு) அதிகபட்ச வரம்பு 45% க்கு உட்பட்டு, இறக்குமதியாளர் மாதாந்திர CIF மதிப்பில் 3% தாமதக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
  3. மாதாந்திர தாமதக் கட்டணத்தைச் செலுத்துவதற்கு எந்தச் சூழ்நிலையிலும் கட்டண விலக்கு அளிக்கப்படாது.

  1. ஒரு மோட்டார் வாகனத்தின் வயதை நிர்ணயிப்பதில், மோட்டார் வாகனம் தயாரிக்கப்பட்ட திகதிக்கும் சரக்குக் கட்டணம்/விமானப் பாதை மசோதா திகதிக்கும் இடைப்பட்ட காலம் கணக்கிடப்படும்

  1. சலுகை வரிச் சலுகைகளின் கீழ் மோட்டார் வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளைப் பயன்படுத்தி எந்தவொரு மோட்டார் வாகனத்தையும் இறக்குமதி செய்வதற்கு அல்லது அனுமதிப்பதற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது.

  1. ஏதேனும் மோட்டார் வாகனம் ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளை மீறி இறக்குமதி செய்யப்பட்டால், தொடர்புடைய இறக்குமதியாளர் சுங்கப் பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அந்த மோட்டார் வாகனத்தை(களை) மீண்டும் ஏற்றுமதி செய்ய வேண்டும்.
மகளைக் கொன்ற தாய்
Posted in இலங்கை செய்திகள்

மகளைக் கொன்ற தாய்

மகளைக் கொன்ற தாய்

 மகளைக் கொன்ற தாய் உள்ளிட்ட சகோதரர்கள் தற்பொழுது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்

கம்புறுபிட்டிய போலீஸ் பிரிவில் உள்ள வீடுகளில் இருந்து  சடலம் ஒன்று ஒடுக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது அந்த சடலம் தொடர்பாக அது யார் என்பது ஒரு பக்கமும் தாயார் அந்தக் கொலையை தடை செய்ததாக போலீசாருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

 அதிக பேராசை காரணமாக தனது மகள் தன்னை துன்புறுத்தி வந்ததாகவும் சொத்துக்களை தரும்படி கேட்டு வந்ததாகவும்

அதனால் சம்பவம் நடந்த பொழுது தனது கழுத்தை மகள் நெரித்ததாகவும் , அதனால் ஆத்திரம் கொண்டு அவரை இரும்பு கம்பியால் தாக்கி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று விசாரணைகளை ஆரம்பித்த பொழுது,

அங்கு தாயார் தற்கொலை செய்வதற்காக அதிக மாத்திரைகள் உட்கொண்டு நாற்காலியில் கிடந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வீடியோ

 மயக்க நிலையில் இருந்த தாயார் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சொத்து தகராறு காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் இரத்தக்கறை படிந்த கடிதமாக காணப்பட்டதால் ,போலீசார் உடனடியாக தீவிர விசாரணை ஆரம்பித்த பொழுது மேற்படி விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி வாகனம் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வாகனம் விபத்து

ஜனாதிபதியின் வாகனம் விபத்து

ஜனாதிபதி வாகனம் விபத்து வந்து சிக்கி சம்பவத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

தலைவா பகுதியில் இன்று அதிகாலை ஒரு பணியாளர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிப்பர் இரண்டாம் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 சாரதி நித்திரை தூக்கம் காரணமாக இந்த வாகனம் விபத்தில் சிக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

 கடந்த தினம் யாழ்ப்பாணத்திற்கு சென்றிருந்த ஜனாதிபதி வாகன பாதுகாப்பு பிரிவினரே திருப்பி தற்பொழுது தமது இருப்பிட நோக்கி சென்று கொண்டிருந்த பொழுது இந்த வாகனம் விபத்து சிக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 விபத்தில் சிக்கிய வாகனத்தில் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவாக விளங்கிய போலீஸ் அதிகாரிகள் இருந்ததாகவும் அவர்களே இதற்கு காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எந்த விபத்து குறித்து விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

 இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடும் என்கின்ற நிலை ஏற்பட்ட வருகின்ற நிலையில் அபரண பேச்சுக்கள் அடிபட்டு வருகின்ற நிலையில் அமெரிக்காவின் இலங்கை தூதர் இலங்கை உடைய பாராளுமன்ற சபாநாயகரை சந்தித்த சில நாட்களில் இந்த வாகன விபத்து இடம்பெற்றுள்ளது எங்கே காவடிக்கத்தக்கது.

 இந்த சம்பவம் ஆனது தற்பொழுது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வல்களையும் வியப்பையும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள்

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் 30000 வேலை வாய்ப்புக்கள் ,யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை பொது பயன்பாட்டிற்கு கையளிக்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கீரிமலை ஜனாதிபதி மாளிகை தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி மாளிகை அப்பகுதியில் உள்ள தனியார் காணிகளையும் கையகப்படுத்திய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு நஷ்ட ஈடுகளை, அல்லது காணிக்கான பெறுமதியை வழங்க முடியும்.

தொடர்ந்து சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கோ, சுற்றுலாத்துறைக்கோ ஜனாதிபதி மாளிகையை கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தையிட்டி விகாரை,

யாழ். மாவட்ட மற்றும் தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களின் தீர்மானங்களை புறம்தள்ளி தையிட்டியில் நிர்மாணிக்கப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

அதன் போது, தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியில் உள்ள தனியாருக்கு, அருகில் உள்ள விகாரை காணிகளை வழங்குவதற்கு, அல்லது அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியும் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.

ஜனாதிபதியும் அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறினார். அதனை பாராளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனும் ஏற்றுக்கொண்டார்.

இருந்த போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சட்டவிரோதமான முறையில் மதில் காட்டினாலே அகற்ற சட்டம் இருக்கையில், சட்டவிரோதமான முறையில், ஒருங்கிணைப்பு குழு தீர்மானங்களையும் மீறி அடாத்தாக கட்டப்பட்ட விகாரை அகற்றப்பட வேண்டும். அது எந்த விதத்திலும் இந நல்லிணக்கத்திற்கோ, மாற்றத்திற்கோ ஏற்றதல்ல என தெரிவித்தார்.

யாழில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள்,

யாழ்ப்பாணத்தில் 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன பிரதேச செயலக பிரிவுவாரியாக சாவகச்சேரியில் 14, நல்லூரில் 07, தெல்லிப்பழையில் 06, யாழ்ப்பாணத்தில் 03, உடுவிலில் 03 என 33 பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் காணப்படுகின்றன.

எனவே இந்த புகையிரத கடவைகளை பாதுகாப்பானதாக அமைக்க வேண்டும்.

அதேவேளை யாழில் நேர அட்டவணைக்கு ஏற்ப 38 புதிய பேருந்துகள் தேவையாக உள்ளன.

அந்தவகையில் யாழ்ப்பாணம் சாலைக்கு 23 பேருந்துகளும், பருத்தித்துறை சாலைக்கு 10 பேருந்துகளும், காரைநகர் சாலைக்கு 05 பேருந்துகளும் தேவையாக உள்ளன.

யாழ்ப்பாணத்தில் தற்போது வீதி விபத்துகள் அதிகரித்து காணப்படுகின்றன. யாழில் 06 வீதி சமிக்ஞை விளக்குகளே காணப்படுகின்றன.

எனவே வீதி விபத்துக்களை குறைக்க வீதி சமிக்ஞைகளை அமைக்க வேண்டும் என மாவட்ட செயலர் ம. பிரதீபன் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைத்தார்.

மாவட்ட செயலரினால் பேருந்து தொடர்பில் கூறப்பட்டதற்கு, மார்ச் மாதமளவில் 10 புதிய பேருந்துகள் வழங்கவும் மேலும் 10 திருத்தி அமைக்கப்பட்ட பேருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது.

30 ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் உள்ளன,

அரச வேலைக்கு 30 ஆயிரம் வெற்றிடங்கள் உள்ளன. குறிப்பாக பொலிஸ் திணைக்களத்தில் அதிகளவான வேலை வாய்ப்புகள் உள்ளன. தமிழ் மொழி மூல பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன. அதனால் பொலிஸ் வேலைக்கு இளையோர் இணைய முன் வர வேண்டும். தமிழ் இளைஞர் யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைய வந்தால் 9 ஆயிரம் பேர் வரை ஆட்சேர்ப்பு செய்ய நடவக்கை எடுக்க முடியும்.

அதற்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இளையோரை பொலிஸ் வேலையில் இணைய ஊக்கப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அச்சுவேலி – தொண்டமானாறு வீதி புனரமைக்க நடவடிக்கை,

அச்சுவேலி தொண்டமனாறு வீதியின் 7 கிலோ மீற்றர் வரையான தூரத்தை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிதியை சரியாக முழுமையாக செய்யாது திருப்பி அனுப்பப்படுவது வடக்கு மாகாணத்தில் அதிகமாக இருக்கின்றது. அதிகாரிகள் அரசியல் வாதிகளை கைகாட்டி நிதியை திருப்பியனுப்பும் நிலை கடந்த காலத்தில் இருந்தது. ஆனால் இனி அவ்வாறு இருக்க முடியாது.

எனவே யாழ். மாவட்டத்தில் உள்ள குறுக்கு வீதிகள் , புனரமைக்கப்படாமல் குறையில் காணப்படும் வீதிகள் என அனைத்து வீதிகளையும் புனரமைக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி அறிவுறுத்தினார். அத்துடன் மீன்பிடி இறங்கு துறைகளையும் புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இராணுவத்தின் பங்களிப்புடன் வீதி தடைகள்,

வடமராட்சி மற்றும் தென்மராட்சி பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதன் போது, பொலிஸார் அதனை கட்டுப்படுத்துவதற்கு தமக்கு வாகன வசதி இல்லை என குறிப்பிட்டனர்.

அதனை அடுத்து இராணுவத்தினரது பங்களிப்புடன் வீதித் தடை, காவலரண்கள் அமைத்து தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார்

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார்

யாழில் ஜனாதிபதி அனுரா அடித்துவிட்டார் ,யாழ். மக்களுக்கான மிக முக்கியமான திட்டங்களுக்காக யாழ். ஜனாதிபதி மாளிகையை முற்றாக விடுவிக்கத் தயாரெனவும், அதற்கான உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்கள் இன்னும் வடமாகாணத்தில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், இது குறித்து ஆராய்ந்து விரைவான தீர்மானங்களை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை வழங்கினார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுகாதாரம், கடற்றொழில், சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு, போக்குவரத்து பிரச்சினைகள், ஆளணி குறைபாடு, காணி விடுவிப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்டது.

யாழ் மாவட்டத்தில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை பாராளுமன்ற உறுப்பினர்களும் அதிகாரிகளும் ஜனாதிபதிக்கு முன்வைத்தனர்.

அதில் அநேக பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உடனுக்குடன் தீர்வு வழங்கியதோடு அவை தொடர்பில் கலந்து கொண்ட வடமாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி பணிப்புரைகளை வழங்கினார்.

பிரதமரின் செயலாளர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழு, அரச நிறுவனங்களை நடத்திச் செல்வதில் 30,000 வெற்றிடங்கள் காணப்படுவதாக அடையாளம்

கண்டுள்ளதென தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சேர்ப்பு நடைமுறைக்கு அமைய அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்பதோடு, பட்டதாரிகளுக்கும் இதன்போது வாய்ப்பு கிட்டும் என்றும் தெரிவித்தார்.

இதில், பொலிஸ் திணைக்களத்தில் உள்ள வெற்றிடங்களுக்கு தமிழ் பேசும் இளைஞர் யுவதிகளுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், விண்ணப்பிப்பதற்கு அவர்களை ஊக்குவிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

வடமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பரந்தன், மாங்குளம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் மூன்று புதிய கைத்தொழில் வலயங்களை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,

யுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கையர்களை முதலீடு செய்ய அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் மீது விசேட அக்கறை செலுத்தி அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

தீவுப் பகுதிகளில் போக்குவரத்து சீராக இல்லை எனவும் கிராமப் புறங்களில் சிறுவீதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் இங்கு தெரிவித்தார்.

கிராமப் புறங்களில் கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

வீதி அபிவிருத்தி தொடர்பாகவும் தீவுகளுக்கான போக்குவரத்து குறைபாடுகள் குறித்தும் படகு சேவைகள் ஆரம்பிப்பது பற்றியும் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டனர்.

தற்போதைய அரசாங்கம் வடக்கு மாகாணத்தில் போக்குவரத்து கட்டமைப்பை பலப்படுத்த வலுவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது.

அதன்படி இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பஸ்கள் இணைந்து செயற்படும் திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வட. மாகாணத்திற்கான புகையிரத சேவைகளை அதிகப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

அடுத்த வருடம் 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இந்த நாட்டிற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வடமாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய புதிய சுற்றுலாத் தலங்கள் இனங்காணப்பட்டு அவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

வடக்கில் சில துறைகளில் காணப்படும் ஆளணிக் குறைபாடு தொடர்பிலும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது. வடமாகாண அரச சேவைக்கான புதிய ஆட்சேர்ப்புகளை அரசியல் அதிகாரத்தின் தலையீடு இன்றி தீர்த்து வைக்க

நடவடிக்கை எடுப்பதாகவும், அரச சேவையை வடக்கில் மேலும் பலப்படுத்துவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்தார்.

கடற்றொழில் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டதோடு இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது குறித்தும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் குறிப்பிட்டார்.

மீன்பிடி பிரச்சினைக்கு தீர்வு காண இராஜதந்திர ரீதியில் அதிகபட்சமாக தலையீடு செய்வதாக ஜனாதிபதி இங்கு குறிப்பிட்டார்.

மீன்பிடித்துறைமுகம், மீனவர்களுக்கான வீட்டுத்திட்டம், தீவுகளுக்கான படகுச் சேவைகளில் உள்ள குறைபாடுகள் பற்றியும் இங்கு ஆராயப்பட்டது.

நீர்ப் பிரச்சினை தொடர்பில் மக்கள் பிரதிநிதிகள் கருத்து வெளியிட்டிருந்ததோடு நீர் விநியோக திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கி முன்னேடுப்பது குறித்து வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் கோரிக்கை முன்வைத்தார்.

நாட்டிலேயே மிகக் குறைந்த அளவு குழாய் நீரை பயன்படுத்தும் மாகாணமாக வடமாகாணம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது வரையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நீர் திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்பதுடன்,

இம்முறை வரவு செலவு திட்டத்தில் புதிய நீர் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மக்களுக்கு பாரிய பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஜனாதிபதி, வடக்கின் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம் உட்பட முழு அரச சேவையையும் மேலும் வலுப்படுத்துவது குறித்து விசேட கவனம் செலுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அரசியல் அதிகார தரப்பும் அரச பொறிமுறையும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பில் முக்கியமாக ஆராயப்பட்டதோடு தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலையில் காணப்படும் குறைபாடு குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து வெளியிட்டார்.

சீரீ ஸ்கேனிங் இயந்திரம் ,அவசர சிகிச்சைப் பிரிவு போன்ற குறைபாடுகள் தொடர்பில் அவர் உரையாற்றியதோடு அவை அவசர தேவையாக உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும், தமிழ் புற்றுநோயாளர் மகரகமையில் இருந்து இங்கு அனுப்புவதில் ஏற்படும் சில சிக்கல்கள் குறித்தும் சிறிய வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்வது தொடர்பாக வைத்தியர் இராமநாதன் அச்சுனா எம்.பி கருத்து முன்வைத்தார்.

வைத்தியர் இடமாற்றங்களினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து எஸ்.ஶ்ரீதரன் எம்.பி மற்றும் வைத்தியர் சரவணபவநந்தன் சண்முகநாதன் ஆகியோர் கருத்து வெளியிட்டனர்.

யாழ்ப்பாணத்திலுள்ள கிராமிய வீதிகளை புனரமைப்பது தொடர்பாக ஆராயப்பட்டதோடு 180 கிலோ மீட்டரை விட அதிக வீதிகளை திருத்த வேண்டியுள்ளதாகவும் தீவுகளில் உள்ள வீதிகளே அதிகம் சேதமடைந்துள்ளதாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர்.

வீதி அபிவிருத்தி தொடர்பில் வடமாகாண எம்.பிகள் சிலரும் கருத்து வெளியிட்டனர்.

வடக்கிலுள்ள கிராமிய வீதிகளை புனரமைக்க இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் 5 பில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் அதனை முழுமையாக பயன்படுத்துமாறும் ஜனாதிபதி தெரிவித்தார்.

யாழ் நகர மண்டப எஞ்சிய நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வது குறித்தும் ஆராயப்பட்டது. இதற்கான இந்த வருடம் 400 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதோடு கட்டடத்தை பயன்படுத்தக் கூடிய வகையில் அதனை அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

கடவுச் சீட்டு பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்த ஜனாதிபதி, யாழ் மாவட்டத்தில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதற்கான அலுவலகம் அமைப்பது தொடர்பில் மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு அரச நியமனம் வழங்குகையில் வாய்ப்பு வழங்க வேண்டும் என இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதேசவாசி ஒருவர் கோரினார்.

தொழில்வாய்ப்பு வழங்குகையில் மாற்றுத்திரனாளிகளுக்கு குறிப்பிட்ட ஒதுக்கீடொன்றை வழங்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

அதேநேரம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பங்கேற்றிருந்த யாழ். மாவட்ட சுகாதார, போக்குவரத்து, நீரியல் வளத்துறை, போக்குவரத்து துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்ததுடன் அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி சாதகமான தீர்வுகளை கூறினார்.

மர்மமான முறையில் பெண் கொலை
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் பெண் கொலை

மர்மமான முறையில் பெண் கொலை

மர்மமான முறையில் பெண் கொலை ,கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.

தற்போதைய விசாரணைகளில் இந்தக் கொலை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் கூறப்படுகிறது.

கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வௌியாகவில்லை.

இருப்பினும், கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

ஜனாதிபதி தலைமையில் ஆரம்பமான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ,யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (31) காலை 10 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு வகையான பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது ஆராயப்பட்டு வருகிறது.

வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், திணைக்கள தலைவர்கள், முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், துறைசார் அதிகாரிகள், என பலரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் வருகையை யோட்டி யாழ்ப்பாண மாவட்ட செயலக சுற்றுவட்டப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.