ரஷ்யாவும் அமெரிக்காவும் இஸ்தான்புல்லில் புதிய சுற்று ஆலோசனைகளை நடத்த உள்ளன
Posted in இலங்கை செய்திகள்

ரஷ்யாவும் அமெரிக்காவும் இஸ்தான்புல்லில் புதிய சுற்று ஆலோசனைகளை நடத்த உள்ளன

ரஷ்யாவும் அமெரிக்காவும் இஸ்தான்புல்லில் புதிய சுற்று ஆலோசனைகளை நடத்த உள்ளன

ரஷ்யாவும் அமெரிக்காவும் இஸ்தான்புல்லில் புதிய சுற்று ஆலோசனைகளை நடத்த உள்ளன ,இரு நாடுகளின் இராஜதந்திர பணிகளின் செயல்பாட்டை இயல்பாக்குவது குறித்த ரஷ்ய-அமெரிக்க ஆலோசனைகளின் இரண்டாவது

சுற்று சில நாட்களுக்குள் நடைபெறும் என்று ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யா-அமெரிக்க ஆலோசனைகளின் புதிய சுற்று வரும் நாட்களில் இஸ்தான்புல்லில் நடைபெறும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி ரஷ்ய அரசு நடத்தும் TASS செய்தி நிறுவனம் செவ்வாயன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய தூதுக்குழுவை அமெரிக்காவிற்கான ரஷ்யாவின் தூதராக சமீபத்தில் நியமிக்கப்பட்ட அலெக்சாண்டர் டார்ச்சீவ் வழிநடத்துவார், அதே நேரத்தில் அமெரிக்க தூதுக்குழுவை துணை உதவி வெளியுறவு செயலாளர் சொனாட்டா கூல்டர் வழிநடத்துவார்.

இரண்டு பிரதிநிதிகளும் இராஜதந்திரிகளால் மட்டுமே உருவாக்கப்படுவார்கள், மேலும் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் இராஜதந்திர பணிகளின் செயல்பாடுகளை இயல்பாக்குவதில் கவனம் செலுத்தும் என்று அமைச்சகம் கூறியதாக மேற்கோள் காட்டப்பட்டது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு ,2025 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகளின் கல்விக் காலத்தின் முடிவு மற்றும் தொடக்கத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2025 அன்று முடிவடையும்.

முதல் தவணையின் மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி தொடங்கி 2025 மே 09 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம்

தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய மூவருக்கு 120 000 தண்டம் ,தேர்தல் சட்ட விதிகளை மீறி சுவரொட்டிகள் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூவருக்கும் ஒரு லட்சத்து இருபதாயிரம் ரூபாய் (120,000) தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் சட்ட விதிகளை மீறி மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தில் சுவரொட்டிகள் ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மூவர்,

செவ்வாய்க்கிழமை (08) அதிகாலை ஏறாவூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேக நபர்களை செவ்வாய்க்கிழமை (08) ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்த போது சந்தேக நபர்கள்

குற்றத்தை ஒப்புக் கொண்டதால் தலா நாற்பதாயிரம் வீதம் மூவரையும் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரூபாய் தண்ட பணம் செலுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அதிகாலை வேளையில் வீதியோர சுவர்களில் சுவரொட்டிகளை ஒட்டி கொண்டிருக்கும் போது இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர் அவர்களை கைது செய்தனர். குறித்த சந்தேக

நபர்களிடமிருந்து ஒரு தொகுதி சுவரொட்டிகள் கைப்பற்றப்பட்டன. இவற்றில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் வேட்பாளரின் படங்கள் அச்சிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அசோக விக்ரமசிங்க கைது
Posted in இலங்கை செய்திகள்

அசோக விக்ரமசிங்க கைது

அசோக விக்ரமசிங்க கைது

அசோக விக்ரமசிங்க கைது ,பிரதேச சபையின் முன்னாள் தலைவர் அசோக விக்ரமசிங்கவை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

கதிர்காமத்தில் உள்ள ராஜபக்ச குடும்பத்திற்குச் சொந்தமான வீடு தொடர்பில் ஆவணங்களைத் தயாரித்தக் குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம்

கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம்

கணேசபுரத்தில் எல்லை கல் நடுதல் இடைநிறுத்தம் ,வன இலாகா திணைக்களத்தால் வவுனியா கணேசபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட எல்லை கற்களை நடும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட

அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (09) ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பதிலளிக்கையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.

வன இலாக திணைக்களத்தால் அந்தப் பகுதியில் கல் நடப்படுவதாக தெரிவித்தே வவுனியா கணேசபுரம் மக்கள் தற்போது ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எடுக்கப்பட்ட பின்னர் அந்த விடயங்களை கையாளுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். எவருக்கும் கூறாது கல் நாட்டப்படக் கூடாது என்றே அபிவிருத்திக் குழுவில்

தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவருக்கும் கூறாது அது நடைபெறும் நிலையில் மக்கள் அங்கே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் உடனடிய அந்த நடவடிக்கைகளை நிறுத்த அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என செல்வம் எம்.பி, கோரிநின்றார்.

இதன்போது பதிலளித்த வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க கூறுகையில்,

இது தொடர்பில் காலையில் எங்களுக்கு அறியக் கிடைத்தது. அதனை அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதாவது தேர்தல் காலம் முடிவடையும் வரையிலும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி அதனை செயற்படுத்தும் வரையில் அந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

கோட்டை சுவரின் அருகே திடீரென தாழிறங்கிய வீதி
Posted in இலங்கை செய்திகள்

கோட்டை சுவரின் அருகே திடீரென தாழிறங்கிய வீதி

கோட்டை சுவரின் அருகே திடீரென தாழிறங்கிய வீதி

கோட்டை சுவரின் அருகே திடீரென தாழிறங்கிய வீதி
காலி – கோட்டை சுவரின் அருகே உள்ள வீதியின் ஒரு பகுதி நேற்று திடீரென தாழிறங்கியுள்ளது.

சுமார் 10 அடி நீளமுள்ள ஒரு பகுதி ஐந்து அடி ஆழத்திற்கு தாழிறங்கியதால் அங்கு பதற்றமான நிyலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பகுதியை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த இடத்தில் நிலச்சரிவுக்கான அறிகுறிகள் இருந்ததாகவும், இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்ததாகவும் மக்கள் கூறுகின்றனர்

பிள்ளையான் கைது
Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையான் கைது

பிள்ளையான் கைது

பிள்ளையான் கைது ,கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள்

விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பில் இருந்து வருகை தந்த கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு (சி​​ஐடி) யினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (08) இரவு கைதுள்ளனர்.

உபவேந்தர் பேராசிரியர் எஸ்.ரவீந்திரநாத், கடந்த 2006 டிசம்பர் 15 ம் திகதி கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வாகனத்தில் பிரயாணித்த நிலையில் அவர் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளார்

இந்த சம்பவம் தொடர்பாக சி​ஐடி யினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ள கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வியாழேந்திரனுக்கு பிணை அடுத்து என்ன
Posted in இலங்கை செய்திகள்

வியாழேந்திரனுக்கு பிணை அடுத்து என்ன

வியாழேந்திரனுக்கு பிணை அடுத்து என்ன

வியாழேந்திரனுக்கு பிணை அடுத்து என்ன ,மார்ச் 25ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (௦8) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 சரீரப் பிணைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபா ரொக்க பிணையில் வியாழேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், இன்று செவ்வாய்க்கிழமை (௦8) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரிடம் மணல் அகழ்வுக்கான அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்காக ரூ.1.5 மில்லியன் இலஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அவர் மார்ச் 25ஆம் திகதி அன்று மாலை கொழும்பு, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது ஏப்ரல் முதலாம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனையடுத்து அவர் சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தார்.

ஏப்ரல் 01ஆம் திகதி முன்னிலையாகிய போது எதிர்வரும் 08ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார்.

அத்துடன், சந்தேக நபருக்கு பயணத் தடையையும் நீதிமன்றம் விதித்தது.

இந்த நிலையில், எஸ்.வியாழேந்திரனை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (௦8) உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கு ஜூன் 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது

திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால் அவரும் விசாரிக்கப்படுவார்
Posted in இலங்கை செய்திகள்

திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால் அவரும் விசாரிக்கப்படுவார்

திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால் அவரும் விசாரிக்கப்படுவார்

திருடிய நிதி பாட்டியிடம் இருந்தால் அவரும் விசாரிக்கப்படுவார் ,பொது மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் வயதான பெண்மணி தொடர்பான விசாரணைகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பொது நிதி ஆபத்தில் இருந்தால், வயது யாரையும் சட்டப் பரிசோதனையிலிருந்து பாதுகாக்காது என்று கூறினார்.

காலியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, திருடப்பட்ட பொதுப் பணத்தை யார் வைத்திருந்தாலும் அதைக்

கண்டுபிடிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாகத் தெளிவுபடுத்தினார்.

“அந்த நபர் இளைஞரா அல்லது வயதானவரா என்பது எங்களுக்கு கவலையில்லை. ஆனால், மோசடி செய்த பேரக்குழந்தைகளால் தான் அவர் இந்த சூழ்நிலையில் உள்ளார்.

திருடப்பட்ட நிதி அவர்களின் பாட்டியிடம் இருந்தால், அவரும் விசாரிக்கப்படுவார். முழு குடும்பமும் இதில் ஈடுபட்டிருந்தால், அவர்கள்

அனைவரும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை

லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை

லண்டன் ஓம் சரவணபவா சிலேபி லீலை சாமியாருக்கு சிறை வாசம் அளிக்க பட்டுள்ளதாக பிரிட்டன் டெய்லி மெயில் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது .

லண்டனில் ஆலயத்தை நிறுவி அங்கு வரும் இலங்கை பெண்களை இலக்கு வைத்து ,பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாகவும் ,அத்துடன் அவர்களிடம் இருந்து 128.00 பவுண்டுகள் பெற்று சாமியார் ஏமாற்றியதாகவும் குற்றம் சுமத்த பட்டுள்ளது .

அந்த வழக்கு நீதிமன்றில் பல நீதிபதிகள் முன்பாக விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட பொழுது, சிலேபி சாமியார் முரளிகிரிஸ்னா லீலை சாமியார் என்ற விடயம் கண்டறிய பட்ட நிலையில் அவருக்கு ஏழு வருட சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவர் போன்ற சில சாமியார்கள் மக்களை ஏமாற்றி பண கொள்ளையில் ஈடுபட்டு வருகின்ற விடயம் மீளவும் ஒருமுறை இங்கு அம்பலமாகியுள்ளது,இது போலி சாமி மோசடியாளர்களுக்கு கொடுக்க பட்ட தக்க தண்டனையாக பார்க்க படுகிறது .

பிரபல உயர் சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆயராகி வாதாடியா நிலையில் , இந்த வழக்கில் ஒரு திருப்பமாக விளங்கியுள்ளதுடன் , அப்பாவி மக்களை காப்பாற்றியுள்ளனர் .

இந்த வழக்கு போலி சாமியார்களுக்கு சூத்து மாத்து போலிகளுக்கும் சாட்டையடி என தெரிவிக்க படுகிறது குறிப்பிட தக்கது .

இதில் அழுத்தி ஆங்கிலத்தில் உள்ள செய்திகளை பார்க்க

.

மாணவியின் கன்னத்தை பஸ்ஸில் பதம்பார்த்த ஆசிரியை
Posted in இலங்கை செய்திகள்

மாணவியின் கன்னத்தை பஸ்ஸில் பதம்பார்த்த ஆசிரியை

மாணவியின் கன்னத்தை பஸ்ஸில் பதம்பார்த்த ஆசிரியை

மாணவியின் கன்னத்தை பஸ்ஸில் பதம்பார்த்த ஆசிரியை ,தனியார் பஸ்ஸில் பயணித்து கொண்டிருந்த போது, மாணவியின் கன்னத்தில் அறைந்த ஆசிரியைக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் ஹட்டன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றின் ஆசிரியையே, மாணவியின் கன்னத்தில் பஸ்ஸில் வைத்து திங்கட்கிழமை (07) மாலை, டிக்கோயா பகுதியில் வைத்து அறைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாடசாலை நிறைவடைந்த பின் ஹட்டனில் இருந்து டிக்கோயா ஊடாக போடைஸ் நோக்கி பயணித்து

கொண்டிருந்த தனியார் பஸ்ஸில் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், பொதுமக்கள் என பலரும் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, மாணவியின் கால், ஆசிரியை ஒருவரின் சாரியில் மிதி பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த ஆசிரியை, பஸ்ஸில் வைத்தே, அந்த மாணவியின்

கன்னத்தில் பளார், பளார் என்று அறைந்துள்ளார். அத்துடன், தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

ஆசிரியைக்கு எதிராக, ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான மாணவி, டிக்கோயா-கிளங்கன்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முறைப்பாடு தொடர்பில், ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை
Posted in இலங்கை செய்திகள்

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை

தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை ,தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குமாறு தெரிவித்து 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு சபாநாயகருக்குப் பிரேரணை ஒன்றைச் சமர்ப்பித்தனர்.

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா மா அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று விவாதம் இன்றி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை மரணம்
Posted in இலங்கை செய்திகள்

தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை மரணம்

தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை மரணம்

தயிரும் தேன் வளையமும் சாப்பிட்ட குழந்தை மரணம் ,மொனராகலை, அத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விலாஓயா பகுதியைச் சேர்ந்த இரண்டு வயதும் ஆறு மாதங்களேயான பெண் குழந்தை கடந்த 7 ஆம் திகதி திடீரென உயிரிழந்ததாக அத்திமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அன்று மாலை தயிரும் தேன் வளையமும் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்ற அந்தப் பெண் குழந்தை எழுந்திருக்கவில்லை. அம்மா அவளை தூக்கிய போது, ​​அவள் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதைக் கண்டாள். அவர் பிராந்திய

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு சிறுமி இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையின் சிறப்பு தடயவியல் மருத்துவ அதிகாரி லக்மாலி. அத்திமலையின் பதில் பொலிஸ் மா அதிபர் எல்.ஏ. ஜினதாச விசாரணைகளை நடத்தி வருகின்றனர்

துப்பாக்கிச் சூடு மேலும் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச் சூடு மேலும் மூவர் கைது

துப்பாக்கிச் சூடு மேலும் மூவர் கைது

துப்பாக்கிச் சூடு மேலும் மூவர் கைது ,மாத்தறை – தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியில், மார்ச் 21ஆம் திகதி (21) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

அந்த சம்பவம் தொடர்பில், மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர், துப்பாக்கிதாரி என்றும் அவர், இராணுவத்தில் இருந்து தப்பியோடிய நபர் என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தர பொலிஸ் நிலையத்தில் இரண்டு சட்டத்தரணிகளுடன் திங்கட்கிழமை (07) ஆஜரான பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தர, தெவிநுவர பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 35 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில், ஏற்​கெனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், T-56

மற்றும் 9 மில்லிமீட்டர் வகை ஆயுதங்களைப் பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய பின்னர் தப்பிச் சென்றிருந்தனர்.

துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில், T-56 ஆயுதத்திற்கான 39 வெற்று தோட்டாக்கள், 2 தோட்டாக்கள், மற்றும் 9 மில்லிமீட்டர் ஆயுதத்திற்கான 2

வெற்று தோட்டாக்கள் மற்றும் 2 தோட்டாக்கள் ஆகியவை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

துப்பாக்கிக்காரர்கள் வந்ததாக சந்தேகிக்கப்படும் வேன், துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திலிருந்து சுமார் 800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிளை வீதியில் எரிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் அன்றையதினமே கண்டுபிடிக்கப்பட்டது.

அதிலிருந்து, T-56 ஆயுதத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு மெகசின் மற்றும்T-56 வெற்று​ தோட்டாக்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்த துப்பாக்கிச் சூட்டில் தெய்வேந்திரமுனை சிங்காசன வீதியை சேர்ந்த யோமேஷ் நதிஷான் மற்றும் பசிந்து தாருக என்ற 28 வயதான இரண்டு இளைஞர்களே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தப்பி ஓடிய இராணுவம் 1700 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய இராணுவம் 1700 பேர் கைது

தப்பி ஓடிய இராணுவம் 1700 பேர் கைது

தப்பி ஓடிய இராணுவம் 1700 பேர் கைது ,கடந்த இரண்டு மாதங்களில், ஆயுதப்படைகளை விட்டு வெளியேறி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 1,700 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இந்த கைதுகளுக்கு மேலதிகமாக, இந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் புழக்கத்தில் உள்ள 1,000க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்று அவர் மேலும் கூறினார்.

கண்டியில் உள்ள மகா நாயக்க தேரர்களைச் சந்தித்த அமைச்சர் விஜேபால, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஊடகங்களுக்குத் குறிப்பிட்டார்.

மேலும், முன்னாள் இராணுவ வீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறித்த அதிகரித்து வரும் கவலைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அதிகரித்து வரும்

அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாதுகாப்புப் படைகளில் இருந்து தப்பியோடியவர்களை உடனடியாகக் கைது செய்ய பாதுகாப்பு அமைச்சகம் முன்னதாக ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.

சமீபத்திய குற்றங்களுடன் தொடர்புடைய பலர் ஆயுதப் பயிற்சி பெற்ற பிறகு அதிகாரப்பூர்வமற்ற முறையில் இராணுவ சேவையை விட்டு வெளியேறி

விட்டனர் அல்லது பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துயகொண்டா முன்னதாகக் கூறினார்.

முந்தைய நாளில் சுமார் 500 சிறப்புப் பணிக்குழு (STF) வீரர்கள் மனமுடைந்து போனதாகவும், குற்றச் செயல்களுக்கு எதிரான முயற்சிகளை வலுப்படுத்த விரைவில் அவர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், படைகள் மற்றும் காவல்துறையின் சில உறுப்பினர்கள் பாதாள உலக மற்றும் போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டதாக

வெளியான தகவல்களுக்கு பதிலளித்த அமைச்சர், சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விசாரணைகள் நடந்து வருவதாகக் கூறினார்.

இது தொடர்பாக ஏற்கனவே பதில் ஐஜிபி மற்றும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

பாதாள உலக குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய பல காவல்துறை அதிகாரிகள் சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு

கேஸ் நிரப்பும் நிலையத்தில் தீ நால்வர் உயிரிழப்பு ,குருநாகல், வெஹராவில் உள்ள கேஸ் நிரப்பும் நிலையம் ஒன்றில் நேற்று இரவு (7) கேஸ் சிலிண்டர் வெடித்ததால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், நான்கு பேர் காயமடைந்து, குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாநகர சபையின் தீயணைப்புத் துறை தற்போது தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சடலங்கள் இனம் காண முடியாத அளவிற்கு உள்ளன.

மகன் தாக்கியதில் தாய் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

மகன் தாக்கியதில் தாய் மரணம்

மகன் தாக்கியதில் தாய் மரணம்

மகன் தாக்கியதில் தாய் மரணம் ,தனது தாயுடன் வாழ்ந்து வந்த மனநலம் பாதிக்கப்பட்ட46 வயதுடைய மகன் தாக்கியதில், யாசகம் பெற்று வாழ்ந்து வரும் 65 வயது மதிக்கத்தக்க தாய் மரணமடைந்துள்ளார்.

இந்த சம்பவம், வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடி – கேணி நகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை(06) இடம்பெற்றுள்ளது.

மகனை சந்தேகத்தில் கைது செய்த வாழைச்சேனை பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மூன்று கன்றுகளை ஈன்ற பசு
Posted in இலங்கை செய்திகள்

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

மூன்று கன்றுகளை ஈன்ற பசு

மூன்று கன்றுகளை ஈன்ற பசு ,பசுவொன்று மூன்று கன்றுகளை ஈன்ற அரிய சம்பவமொன்று யாழ். வடமராட்சியில் பதிவாகியுள்ளது.

வடமராட்சி – உடுப்பிட்டி இலக்கணாவத்தை விவசாயி ஒருவரின் பசுவே இவ்வாறு மூன்று கன்றுகளை சனிக்கிழமை (5) ஈன்றுள்ளது.
.
ஒரே தடவையில் மூன்று கன்றுகளைப் பிரசவிப்பதென்பது அபூர்வமான நிகழ்வாக கருதப்படுகின்றது.
இரண்டு நாம்பன், ஒரு பசுக் கன்று ஈன்றுள்ளது. மூன்று கன்றுக் குட்டிகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170

இலங்கையின் மக்கள் தொகை 2 763 170 என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கூறுகிறது.

2012 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை விட இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில்

1,403,731 பேர் அதிகரிப்பைக் காட்டுவதாகவும், 2012 மற்றும் 2014 க்கு இடையில் சராசரி ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி 0.5 சதவீதமாக இருந்ததாகவும் திணைக்களம் கூறுகிறது.

இலங்கையின் மக்கள்தொகையில் அதிகபட்சமாக 28.1 சதவீதம் பேர் மேல் மாகாணத்தில் வசிப்பதாகவும், மிகக் குறைந்த அளவில் 5.3 சதவீதம் பேர் வடக்கு மாகாணத்தில் வசிப்பதாகவும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கம்பஹா மாவட்டத்தில் 2,433,685 பேர் வசிக்கின்றனர், அதே நேரத்தில் கொழும்பு மாவட்டத்தின் மக்கள் தொகை 2,374,461 ஆகும்.

இலங்கையின் மக்கள் தொகை இவ்வாறு வெளிப்படுத்தப்பட்டதாகவும், திணைக்களத்தால் நடத்தப்பட்ட மக்கள் தொகை மற்றும் வீட்டுவசதி

கணக்கெடுப்பின் (2024) முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் திணைக்களம் மேலும் கூறுகிறது.

10 இலட்சம் பேரின் தொழிலுக்கு ஆபத்து
Posted in இலங்கை செய்திகள்

10 இலட்சம் பேரின் தொழிலுக்கு ஆபத்து

10 இலட்சம் பேரின் தொழிலுக்கு ஆபத்து

10 இலட்சம் பேரின் தொழிலுக்கு ஆபத்து ,ஜனாதிபதி ட்ரம்பின் வரி அமுல்படுத்தப்பட்டால் ஒரு வருடத்தின் பின்னர் ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களின் வேலைகள் ஆபத்தைச் சந்திக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியு்ளார்.

டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியினது அரசாங்கம் நமது நாட்டின் ஏற்றுமதிகள் மீது 44% பரஸ்பர வரி விதித்துள்ளது. நமது நாடு அமெரிக்க இறக்குமதிப்

பொருட்களுக்கு 88% வரி விதித்தமையே இதற்கு காரணமாகும். இதன் காரணமாக, நமது நாடு ஏற்றுமதி விலைக்கான போட்டித்தன்மையை இழந்துள்ளது.

நாட்டின் ஆடை ஏற்றுமதியில் 40% அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இது ஆபத்தான நிலைமைகளை தோற்றுவிக்கும் என்பதால், சில மாதங்களுக்கு முன்பே இது குறித்து அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தோம். டொனால்ட் ட்ரம்ப்

ஜனாதிபதி மகத்தான மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு அமெரிக்காவிற்கு வரும் பொருட்களுக்கு வரி விதிக்கப்போவதாக அறிவி

த்த சந்தர்ப்பத்தில், நான் பாராளுமன்றத்தில் இது தொடர்பில் சுட்டிக்காட்டி முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவித்தேன். அதனை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பாராளுமன்றத்தில் பிரச்சினைகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் இருந்த போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசுவதற்கான நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் தீர்வை வரி விதிக்கப்படலாம் என்பது குறித்து சுட்டிக்காட்டப்பட்ட போதும் அரசாங்கம் அதனை அலட்சியப்படுத்தி

வேடிக்கை பார்த்தது. தற்போது என்னதான் கூறினாலும் இந்த வரி விதிப்பு ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புத்தாண்டு விடுமுறைக்கு வீடுகளுக்குச் செல்லும் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் புத்தாண்டு விடுமுறையின் முடிவில் வேலை தொடர்பில் நிச்சயமற்ற நிலையை எதிர்கொள்வர்.

இதன் காரணமாக, தொழிற்சாலைகள் வீழ்ச்சி கண்டு, தொழிலாளர்களது தொழில்கள் இல்லாது போய், பொருளாதார வளர்ச்சி விகிதம் குறையும்.

இது ஒட்டுமொத்த மக்களையும் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கும். அந்நிய செலவாணி குறைவடையும்.

பொருளாதார வளர்ச்சி விகிதம் கீழ் நிலைக்கு வரும். அவசர மாற்றீடுகள் மூலம் இந்த வருமானத்தை எம்மால் ஈட்ட முடியாது போகும்.

ஆகையால் 2028 ஆம் ஆண்டு முதல் கடனை செலுத்துவதற்கு இது பெரும் தடையாக அமைந்து காணப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2033 இல் செலுத்த வேண்டிய கடனை 2028 இல் இருந்து அடைக்க வேண்டியுள்ளன. இதற்காக பேண வேண்டிய பொருளாதார வளர்ச்சி விகிதத்திற்கு இந்த வரி விதிப்பு மரண அடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கடுமையான பொருளாதார நெருக்கடியை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மீண்டுமொரு பொருளாதார சுனாமி நாட்டை தாக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் மக்கள் இது குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புத்தளம், நாத்தாண்டிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (06) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குழுக்களை நியமிப்பதால் எந்த பயனும் ஏற்படாது.

இது குறித்து கண்காணித்து ஆராய அரசாங்கம் இதுவரை ஒரு குழுவை நியமித்துள்ளது. இது போதாது.

இது தொடர்பில் திறமையான தூதுக்குழுவொன்றை அனுப்பி எமது நாட்டிலிருந்து பதிலை சரியாக முன்வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உலக நாடுகளுடன் இணைந்து பொதுவான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமானது என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

நமது நாட்டு ஆடை உற்ப்பத்திகளுக்கு இந்திய சந்தையில் அதிக வாய்ப்புகளைப் பெற்றுத் தாருங்கள்.

​​இலங்கை நாட்டின் ஆடைகள் மற்றும் இதர ஏற்றுமதிப் பொருட்களுக்கான இந்திய சந்தையை அணுகுவதற்கான வசதிகளை விரிவுபடுத்தித் தருமாறு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின் போது, நான் அவரிடம் கோரிக்கை விடுத்தேன் என என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.