செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in Uncategorized

யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

யாழில் மருத்துவ பீட மாணவி சடலமாக மீட்பு

யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்..

மருத்துவ பீடத்தை சேர்ந்த சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை

முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்..

    Posted in Uncategorized

    இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை

    இலங்கையில் உணவு நெருக்கடிக்கு இடமில்லை

    கொவிட் 19 வைரஸ் தொற்று பரவலினால் உலக நாடுகளைப் போன்று இலங்கையும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது.

    இலங்கையும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள போதிலும் இந்த வருட இறுதியில் 4 தசம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சி வேகத்தை எதிர்பார்ப்பதாக பிரதி நிதி அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

    பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் இது பற்றி மேலும் தெரிவிக்கையில், போதிய அளவிலான அத்தியாவசியப் பொருட்கள்

    களஞ்சியங்களில் காணப்படுகின்றன இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொருட்களை பதுக்கும்

    நடவடிக்கைகளில் சில வர்த்தகர்கள் ஈடுபட்டார்கள். ஆனால் இவ்வாறான முயற்சிகளை தடுக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் கூறினார்.

    அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்றும் ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்

      Posted in Uncategorized

      மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல்

      மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் நேற்று நடைபெற்றது!

      நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் நேற்று

      பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் இடம்பெற்றது

      குறித்த மயானத்தை அமைக்க 25 மில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது. அந்தத் தொகையில் ஒரு கோடி ரூபாவை (10 மில்லியன்) கிளிநொச்சியில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்க முன்வந்துள்ளார். புலம்பெயர் அமைப்பு ஒன்றும் உதவ முன்வந்துள்ளது.

      குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வைத்தியகலாநிதி மு. சிறீதர், அதிபர்கள் ஆசிரியர்கள் கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் .

      மின்மையானம் அமைப்பதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

      தலைவராக கிளிநொச்சி மாவட்ட முன்னாள் வர்த்தக சங்கத்தின் தலைவர் நவரட்ணராஜா செயலாளராக ஆசிரியரும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான சத்தியானந்தன்

      பொருளாளராக அதிபர் விக்கினராஜா உபதலைவராக வர்த்தக சங்கத்தின் பொருளாளர் ஆனந்த வடிவேல் உபசெயலாளராக ரவி அவர்களும் உறுப்பினர்களாக வைத்தியகலாநிதி மு. சிறீதர்

      கிளிநொச்சி சேவைச் சந்தையின் தலைவர் இரத்தினமணி மற்றும் ரவீந்திரன் ஆகியோரும் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

      சிவஞானம் சிறீதரன்
      சிவஞானம் சிறீதரன்
      Posted in Uncategorized

      கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

      கொரோனா மரண எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்தது

      நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 157 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

      குறித்த அனைவரும் நேற்றைய தினம் (10) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

      அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,152 ஆக அதிகரித்துள்ளது.

      இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 482,360 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

      மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 411,233 ஆக அதிகரித்துள்ளது.

        Posted in Uncategorized

        ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

        ஊரடங்கு உத்தரவை மீறிய 669 பேர் கைது

        இலங்கையில் பரவி வரும் கொரனோ நிகழ்வை அடுத்து பலத்த தடைகள் நடைமுறை படுத்த பட்டுள்ளன

        அத தடைகளை மீறி செயல்பட்ட 669 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

        தொடந்து தடைகள் விதிக்க பட்டுள்ளது

          Posted in Uncategorized

          லண்டன் மிச்சம் திருமண வீட்டில் ஒலித்த புலிகள் பாட்டு – வீடியோ

          லண்டன் மிச்சம் திருமண வீட்டில் ஒலித்த புலிகள் பாட்டு – வீடியோ

          லண்டன் மிச்சம் பகுதியில் நேற்று 10 ஆம் திகதி இடம்பெற்ற தமிழர்கள் திருமண நிகழ்வு ஒன்றில்
          தமிழீழ விடுதலை புலிகளின் பாடல்
          (தமிழீழத்தின் அழகு தனி அழகு ) ஒன்று மிக கம்பீரமாக முழங்கியது

          விடுதலை புலிகளின் செயல்பாடுகள் ,அவர் தம் எழுச்சி பாடல்களை முடங்க வைத்து ,எழுச்சிகளிற்கு தடை விதித்து வரும் சிங்கள அரச பயங்கவாதத்தினால் செயல் பாடுகள் முடக்கிவிட பட்டுள்ள நிலையிலும் ,

          சில ஈழ எழுச்சி கொண்ட தமிழ் இசை பாடகர்கள் துணிவுடன் விடுதலை புலிகள் ,தமிழ் எழுச்சி பாடல்களைப் பாடி வருவது மிக பாராட்டிட வேண்டியதும் ,இவ் வாறானவர்களை நாம் ஊக்குவிக்க வேண்டிய தேவைபாடும் சமகாலத்தில் உள்ளது

          ஐயா செல்லப்ப அவர்கள் உருகி உருகி பாடிய அந்த பாடலை அதே சுருதியுடன் இந்த பாடகர் திறனோடும்,உணர்வுடனும் பாடி அசத்தியுள்ளது எம்மை மெய் சிலிர்க்க வைத்துள்ளது ,மேலும் இந்த இசை ஒலிக்க

          பின் புலத்தில் உதவிய ஒலி அமைப்பாளருக்கும் இவ்வேளையில் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்

          தொடரட்டும் உங்கள் பணி இவ்வாறான இசை பாடல்களை நமக்கு தொடராக அனுப்பி வையுங்கள் என்றும் பிரசுரிக்க தயங்க மாட்டோம்

          • நிருபர் வன்னி மைந்தன் –

          தமிழீழத்தின் அழகு தனி அழகு video click here

          Posted in Uncategorized

          ஐ.நாவின் பொதுச் சபைக்கு கோட்டா பயணம்

          ஐ.நாவின் பொதுச் சபைக்கு கோட்டா பயணம்

          அமெரிக்க, நியூயோர்க்கில் செப்டெம்பர்21ஆம் திகதியன்று ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள்

          சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ முதன்முறையாக கலந்துகொள்ளவுள்ளார்.

          ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர், சர்வதேச கூட்டத் தொடர் ஒன்றில் பங்கேற்கும் முதல்
          சந்தர்ப்பமும் இதுவாகும். பல நாடுகளின் அரச தலைவர்களுடன், இரு தரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்

          அதன்​போது, பொருளாதாரம், கல்வி, விவசாயம் உள்ளிட்ட பல துறைகள் தொடர்பில்
          கலந்துரையாடுவர். ஜனாதிபதியுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர்

          ஜீ.எல்.பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொழம்பகே ஆகியோரும் செல்வர்.

          ஜனாதிபதியுடன் ஜனாதிபதியின் பாரியார் அயோமா ராஜபக்‌ஷவும் செல்லவுள்ளார். அவர்,


          தனது சொந்தச் செலவில் இந்த விஜயத்தில் கலந்துகொள்கிறார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு
          அறிவித்துள்ளது.

          Posted in Uncategorized இலங்கை செய்திகள்

          வௌிநாட்டு கப்பல் சுற்றிவளைப்பு

          வௌிநாட்டு கப்பல் சுற்றிவளைப்பு

          ஹெரோயின் போதைப்பொருள் தொகையை இலங்கைக்கு கடத்தி வந்த வௌிநாட்டு கப்பல் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

          நேற்றிரவு குறித்த கப்பல் சுற்றிவளைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதை தெரிவித்துள்ளார்.

          மட்டக்களப்பு தெற்கு கடலில் இலங்கை கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த போதைப்பொருள் தொகை மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

          இதன்போது கப்பலில் இருந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

          கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கப்பல் மற்றும் ஹெரோயின் தொகை இலங்கை கடற்பரப்புக்கு கடற்படையால் கொண்டு வரப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

          Posted in Uncategorized

          பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம்

          பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம்

          கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

          ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் காணொளி தொழில்நுடபம் ஊடாக நேற்று நடைபெற்ற

          கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

          அதன்படி, கிராமப்புறங்களில் உள்ள 100க்கும் குறைந்தளவான மாணவர்கள் எண்ணிக்கையை

          கொண்ட 3,000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

          இது தொடர்பில் பரிந்துரைகளை முன்வைப்பதற்கான பொறுப்பை சுகாதார மற்றும் கல்விதுறைசார் அதிகாரிகளைக் கொண்ட தொழிநுட்ப குழு ஒன்றிடம் ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

          2020 மற்றும் 2021 ஆகிய வருடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டதால், சுமார் 7 இலட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும், பல மாணவர்களுக்கு முன்பிள்ளை பருவ கல்வியும்

          கிடைக்காமல் போனதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது

          Posted in Uncategorized உலக செய்திகள்

          ஈராக்கில் இருந்த்து கட்டம் கட்டமாக விலக்க படும் அமெரிக்கா இராணுவம்

          ஈராக்கில் இருந்த்து கட்டம் கட்டமாக விலக்க படும் அமெரிக்கா இராணுவம்

          ஈராக்கிய நாட்டில் இருந்து அமெரிக்கா படைகள் கட்டம் கட்டமாக விலக்க படுகிறது

          இதற்கேற்ப கடந்த நகர்வில் பலநூறு இராணுவத்தினர் அங்கிருந்து அகற்ற பட்டுள்ளதாக சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன

            Posted in Uncategorized

            இரு பெண்களை கடித்து குதறிய நாய்

            இரு பெண்களை கடித்து குதறிய நாய்

            அவுஸ்ரேலியா தெற்கு சிட்னி பகுதியில் இரு பெண்களை நாய் ஒன்று கடித்து குதறியது


            மேற்படி நாயின் கடி காயங்களுக்கு உள்ளான அவர்கள் , அவசர உலங்கு வானூர்தி மூலம் அழைக்க பட்டு மருத்துவமனைக்கு மாற்றம் பெற்றனர்

            குறித்த சம்பவம் தொடர்ப்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

              Posted in Uncategorized

              நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

              நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு


              நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

              நடிகர் விவேக் மரணம் -விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு
              நடிகர் விவேக்

              நடிகர் விவேக் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தது தொடர்பாக விழுப்புரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.

              நடிகர் விவேக்கிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட விவகாரத்தில் உரிய விதிகள் பின்பற்றப்படவில்லை

              என்றும், எனவே இது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுகொண்டார்.

              இந்த புகார் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

              அதில், சமூக ஆர்வலரின் புகார் மனு மீது 8 வார காலத்திற்குள் விசாரணை நடத்தி, அது குறித்த

              அறிக்கையை புகார்தாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் கூறி உள்ளது.

              Posted in Uncategorized

              சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய இன்றைய ஊடக சந்திப்பு video

              சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய இன்றைய ஊடக சந்திப்பு video

              பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களுடைய ஊடக சந்திப்பு


              இன்றைய தினம்(10/09/21) பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகமான அறிவகத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

              full video

              Posted in Uncategorized

              தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

              தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

              சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை செய்தனர்.

              எல்லை அருகே இறங்குதளம்… தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை
              அவசரகால இறங்குதளத்தில் தரையிறங்கும் போர் விமானம்

              அவசர காலங்களில் இந்திய விமானப் படையின் போர் விமானங்கள் மற்றும் இதர விமானங்களை தரையிறக்கும் வகையில், ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை

              மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலை-925ல் சத்தா-காந்தவ் இடையிலான 3 கிமீ பகுதியை அவசர காலங்களில் விமானங்களை தரையிறக்கும் பகுதியாக மாற்றி உள்ளது.

              பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள இந்த இறங்குதளத்தை மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின்

              கட்கரி ஆகியோர் இன்று திறந்து வைத்தனர். அதன்பின்னர், மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் ஆகியோரை விமானப்படை

              விமானத்தில் அமர வைத்து, விமானத்தை அவசரகால இறங்குதளத்தில் தரையிறக்கி ஒத்திகை பார்த்தனர்.

              நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஜ்நாத் சிங்

              சுகோய்-30எம்கேஐ போர் விமானம், ஏஎன்-32 ராணுவ போக்குவரத்து விமானம், எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர் ஆகியவற்றையும் நெடுஞ்சாலையில் வெற்றிகரமாக தரையிறக்கி சோதனை

              செய்தனர். இதன்மூலம், அந்த நெடுஞ்சாலையானது, துணை ராணுவ விமான தளமாக செயல்படுவதற்கு தயார் நிலையில் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விமானப்படை

              விமானங்களை அவசரமாக தரையிறக்க பயன்படுத்தப்படும், முதல் தேசிய நெடுஞ்சாலை இது என்பது குறிப்பிடத்தக்கது..

              இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பார்மரில் உள்ளதைப் போன்று மொத்தம் 20 அவசரகால தரையிறக்கும் வசதிகள் நாடு முழுவதும் உருவாக்கப்படுகின்றன

              என்றார். மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் உதவியுடன் பல ஹெலிபேடுகளும் உருவாக்கப்படுவதாக கூறிய ராஜ்நாத் சிங், நமது பாதுகாப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த இது ஒரு முக்கியமான படியாகும் என்றார்.

              ‘சர்வதேச எல்லைக்கு அருகில் இதுபோன்ற அவசரகால இறங்கு தளங்களை உருவாக்குவதன் மூலம், நமது நாட்டின் ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, என்ன

              விலை கொடுத்தாலும் துணிந்து நிற்போம் என்ற செய்தியை வழங்கியுள்ளோம். அவசரகாலத்தில் விமானங்களை தரையிறக்கும் வசதியை உருவாக்குவது மிகுந்த நம்பிக்கையை உருவாக்குகிறது.

              போர்க் காலங்களில் மட்டுமல்லாமல் இயற்கை பேரிடர் காலங்களிலும் இது உதவியாக இருக்கும்’ என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.

              Posted in Uncategorized இலங்கை செய்திகள்

              உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு

              உடுப்பிட்டி கிராமத்தில் பதற்றம் – இராணுவம் குவிப்பு

              உடுப்பிட்டி கிராமத்தில் இரண்டு பகுதியினருக்கு இடையே இடம்பெற்று வந்த மோதல் ஊர்ப் பிரச்சினையாக மாறியதையடுத்து பொலிஸாரால் கோரப்பட்டதற்கு அமைய இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

              அதனால் அந்தக் கிராமத்தில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

              உடுப்பிட்டி இலகடி மற்றும் வன்னிச்சி அம்மன் கோவில் வேலிந்ந தோட்டம் பகுதியைச் சேர்ந்த இருதரப்பினர் இடையே இடம்பெற்று வந்த மோதல் கடந்த சில நாள்களாக ஊர்ப் பிரச்சினையாக மாறியது.

              இந்த மோதலில் சிலர் தலைமறைவாகிய நிலையில் வல்வெட்டித்துறை பொலிஸாரின் அழைப்பின் பேரின் இன்றிரவு இராணுவத்தினர் சுற்றிவளைத்து பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

              அதனால் அந்தக் கிராமத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

              Posted in Uncategorized

              யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா

              யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்-2 நாள் சிசுவுக்கு கொரோனா

              யாழ்.பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிறந்து இரண்டு நாட்களேயான சிசுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

              பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் கொரோனா தனிமைப்படுத்தல் விடுதியில் பராமரிக்கப்பட்டுவரும் சிசுவுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

              யாழ்.போதனா வைத்தியசாலை கொரோனா ஆய்வுகூடத்தில் நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அச்சிசுவுக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

              Posted in Uncategorized

              புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம்

              புலிகளுக்கு எதிராக விசாரணை: ’தமிழரசு கடிதம்

              தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.

              அதை மட்டும் தன்னால் உறுதியாக கூற முடியுமெனவும் அவ்வாறு எழுதினால் தான் அதனை வெளிப்படுத்துவதாகவும், அவர் கூறினார்.

              யாழ்ப்பாணத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

              அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவனெனவும் சேம் சைட் கோலடிக்கும் தேவை தனக்கு கிடையாதெனவும் கூறினார்.

              எது நியாயமோ, எது சரியோ, அதை யார் செய்தாலும் சரி என்பேன் எனத் தெரிவித்த அவர், அதே பிழை என்றால், பிழை என்று கூறுவதே, தன்னுடைய பொறுப்பெனவும் கூறினார்.

              இனி தான் பயப்படமாட்டேன் எனத் தெரிவித்த அவர், இதுவரை தான் அடக்கி வாசித்ததாகவும் இதனால், தன் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள் எனவும் கூறினார்.

              ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர் எனத் தெரிவித்த சிவஞானம், ‘தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால், அவர்கள் அவ்வாறான முடிவொன்றை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்’ என்றும் கூறினார்.

              இதைத் தொடர்ந்து, தமிழரசுக்கட்சி மனித உரிமை ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக, ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, ‘என்னை பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது, சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது’ என பதிலளித்தார்.

              இந்தக் கேள்விக்கு தொடர்ந்து பதிலளித்த சிவஞானம் கூறியதாவது,

              ‘தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

              கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே, அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்பமாட்டேன்’ என்றார்.

              Posted in Uncategorized

              நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் வாசுதேவ

              நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது – அமைச்சர் வாசுதேவ

              சுபீட்சத்தின் தொலைநோக்கு’ கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக 2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீரை வழங்கும் நோக்கில் பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

              நீர் கட்டணம் அதிகரிக்கப்படமாட்டாது.தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள காலத்தில் நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றும் அமைச்சர் கூறினார்

              2025 ஆம் ஆண்டளவில் அனைவருக்கும் தூய குடிநீர் என்ற தொனிப்பொருளில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த வியத்தை குறிப்பிட்டார்.

              நீர் விநியோகிக்கும் விடயத்தை அரசியலாக்க எவருக்கும் இடமளிக்க போவதில்லை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

              ‘நீரையும், நீர் மூலங்களையும்’ பாதுகாக்கும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் பரிட்சார்த்த செயற்திட்டம் குருவிட்ட பிரதேச செயலக பிரிவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

              Posted in Uncategorized

              கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

              கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் கைது

              வீட்டில் கசிப்பு உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் (06) யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

              கோப்பாயைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரிடமிருந்து 2 லீற்றர் கசிப்பு, 5 லீற்றர் கோடா என்பன கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

              இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

              Posted in Uncategorized

              ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

              ஆப்கானிஸ்தானில் கணவர், குழந்தைகள் கண் முன் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை

              ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின்

              முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

              ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை‌ பெண்களுக்கு உரிய

              மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என தெரிவித்துள்ளனர்.

              இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

              கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில்

              நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர்.

              ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.