Posted in Uncategorized

பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்

பொலிசார் மீது பெற்றோல் குண்டு வீச்சு – 27 போலீசார் காயம்

வட அயர்லாந்தில் காவல் துறையினருக்கும் போராட்ட காரர்களுக்கும் இடையில் இடம்பெற்று வரும் தொடர் ,

போராட்டத்தினால் , போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது பெற்றோல் குண்டுகளை வீசினர் ,இந்த

குண்டு தாக்குதல்களில் சிக்கி 27 காவல்துறையினரை படுகாயமடைந்தனர் ,மேலும் அவர்கள் வாகனங்களும் சேதமடைந்தன ,

இவர்களுடன் எட்டு பொதுமக்களும் காயமடைந்துள்ளனர் ,வன்முறையாக வெடித்து பறக்கும் இந்த போராட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் தீவிர நகர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளன

    Posted in Uncategorized

    லண்டனுக்குள் நுழைய முயன்ற 159 அகதிகளை மீட்ட பிரான்ஸ் இராணுவம்

    லண்டனுக்குள் நுழைய முயன்ற 159 அகதிகளை மீட்ட பிரான்ஸ் இராணுவம்

    பிரான்ஸ் கடல் எல்லை வழியாக பிரிட்டனுக்குள் நுழைய முயன்ற சுமார் 159 அகதிகள் பிரான்ஸ் இராணுவத்தினர் ,மற்றும் காவல்துறையினர் இணைந்து மீட்டுள்ளனர்

    இவ்வாறு நுழைந்தவர்களில் பத்து சிறுவர்கள் மற்றும் ,கர்ப்பிணி பெண்கள் உள்ளடங்கும்

    இவர்கள் ஆங்கில கால்வாயை ஊடறுத்து நுழைய முயன்ற பொழுதே மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்டு கைது செய்தனர்

    இந்த கைதிகள் கைதின் பொழுதுஉலங்குவானூர்திகள் பயன் படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

      பிரான்சில் தாக்குத்தல் நடத்த முனைந்த 5 பெண்கள் கைது – பெரும் தாக்குதல் முறியடிப்பு

      தெற்கு பிரான்ஸ் Montpellier பகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றை ஏற்றுக் கொள்ள முனைந்த ஐந்து பெண்களை பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்

      இதில் 18 வயது மற்றும் அதற்கு குறைவான பெண் ஒருவரும் கைது செய்யப் பட்டுள்ளார்

      இதில் இருவர் சகோதரிகள் என அடையாளம் காண பட்டுள்ளது

      கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Posted in Uncategorized

      தமிழர் உணவு கடை உணவுகளின் மேலே ஓடும் கரப்பான் பூச்சி வீடியோ

      தமிழர் உணவு கடை உணவுகளின் மேலே ஓடும் கரப்பான் பூச்சி வீடியோ

      பிரபல தமிழர் உணவு கடை ஒன்றுக்குள் அறு சுவையாக சமைத்து வைக்க பட்ட உணவுகளின்

      மேலே தனது விருப்ப படி ஓடி விளையாடும் கரப்பான் பூச்சி ஒன்றின் காட்சி அந்த கடைக்கு சென்ற நபர் ஒருவர் படம் பிடித்து வெளியிட்டுள்ளார்
      அந்த காட்சிகள் இவை

      தற்பொழுது சமூக வலைத்தளங்களில் குறித்த காட்சியானது வைரலாகி வருகிறது ,உணவுகளின்

      மேலே கரப்பன் பூச்சி உலாவினால் உயிர் ஆபத்தை விளைவிக்கும் என நம்ப படுகிறது

        https://www.youtube.com/watch?v=cysT-SEeaE0
        Posted in Uncategorized

        போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்

        போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்

        உத்தர பிரதேசத்தில் போன் பேசிய மும்முரத்தில் பெண் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை நர்சு ஒருவர் செலுத்தியுள்ளார்.

        போன் பேசி கொண்டே கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை செலுத்திய நர்ஸ்
        கோப்புபடம்

        உத்தர பிரதேசத்தின் கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் அக்பர்பூர் பகுதியில் அமைந்த அரசின் முதன்மை சுகாதார மையம் ஒன்றில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதற்காக 50 வயது நிறைந்த கமலேஷ் குமாரி என்ற பெண் சென்றுள்ளார்.

        அவருக்கு முதலில் ஒரு டோசுக்கான தடுப்பூசியை போட்டு விட்டு சில வாரங்கள் கழித்து அடுத்த டோஸ் செலுத்தப்பட வேண்டும். எனினும், போன் பேசியபடி அலட்சியமுடன் செயல்பட்ட சுகாதார மைய நர்ஸ் கவன குறைவாக 2 தடுப்பூசிகளை போட்டு உள்ளார்.

        இதுபற்றி அந்த பெண் நர்சிடம் கேட்டுள்ளார். அதற்கு மன்னிப்பு கோருவதற்கு பதிலாக அவரிடம் நர்ஸ் சண்டை போட்டுள்ளார். இதனையறிந்த பெண்ணின் உறவினர்கள் அமளியில் ஈடுபட்டு உள்ளனர்.

        இந்த சம்பவம் பற்றி மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் தலைமை மருத்துவ அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. 2 முறை தடுப்பூசி போட்டதில் பெண்ணின் கையில் லேசான வீக்கம் ஏற்பட்டு உள்ளது. எனினும் வேறு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை.

        இந்த விவகாரம் பற்றி முதன்மை சுகாதார மையத்தின் மூத்த டாக்டரிடம் விசாரணை மேற்கொள்ளும்படி மாவட்ட தலைமை மருத்துவ அதிகாரி உத்தரவிட்டு உள்ளார். அறிக்கை ஒன்றை அளிக்கும்படியும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

          Posted in Uncategorized

          வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு

          வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு

          மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் மீது கோவை காட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

          சுயேட்சை வேட்பாளர் புகார்- கமல் மீது வழக்குப்பதிவு
          கமல்ஹாசன்

          கோவை தெற்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் பழனிகுமார் என்பவர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

          கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராம்நகர், காட்டூர் பகுதிகளில் திறந்த வேனில் பிரசாரம் மேற்கொண்டார்.

          அந்த பிரசாரத்தில் ராமர் மற்றும் அம்மன் வேடமிட்ட 2 பேர் கலந்து கொண்டு கையில் கமல்ஹாசனின் கட்சி பேனர்களை வைத்திருந்தனர்.

          கமல்ஹாசன்

          அப்போது பேசிய கமல்ஹாசன் ராமர் வேடமிட்டவரை நோக்கி இந்த கடவுள், அந்த கடவுள் எல்லாம் நமது கடவுள் தான். இந்த கடவுளை வைத்து சிலர் அரசியல் செய்து கொண்டிருக்கின்றனர் என சொல்லியிருக்கிறார்.

          எனவே இந்து கடவுள்களை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்ட கமல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

          இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

          அதன் பேரில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்பட 3 பேர் மீது மதத்திற்கு இடையே பிரிவினை ஏற்படுத்துதல், தேர்தலை பயன்படுத்தி மக்களிடம் வெறுப்பை ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

            Posted in Uncategorized

            பொலிஸ் அதிகாரி லொறியால் மோதி படுகொலை

            பொலிஸ் அதிகாரி லொறியால் மோதி படுகொலை

            வீதியின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் லொறியொன்று மோதியதில்

            பொலிஸ் சார்ஜென்ட் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

            நேற்று இரவு (04) பழைய கெஸ்பேவ வீதியில் உள்ள கட்டிய சந்தியில் இருந்து தெல்கந்த நோக்கி

            பயணித்த லொறி ஒன்று வீதியின் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

            விபத்தில் உயிரிழந்தவர் மருதானை பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த புளத்சிங்கள

            பகுதியில் வசிக்கும் 47 வயது பொலிஸ் சார்ஜென்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

              Posted in Uncategorized

              கடல்வழியாக தமிழகத்திற்குள் நுழைந்த இரு தமிழர்கள் கைது

              இந்திய- இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக தமிழகத்திற்குள் சட்ட விரோதமாக நுழைந்த இலங்கையின் மன்னாரைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளால் இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை கைது செய்யப்பட்டனர்.

              கைது செய்யப்பட்ட இளைஞர்களிடம் க்யூ பிரிவு மற்றும் மத்திய பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

              இன்று ஞாயிற்றுக்கிழமை (4) காலை தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரைக்கு கண்ணாடி இழை படகு மூலம் இலங்கையைச் சேர்ந்த இருவர் சட்ட விரோதமான முறையில் வந்து இறங்கியதாக இராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ

              இடத்திற்கு சென்ற சுங்கத்துறை அதிகாரிகள் குறித்த இருவரையும் கைது செய்து ராமேஸ்வரம் கடலோர காவல் குழும காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

              விசாரணையில் இவர்கள், மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியைச் சேர்ந்த பிரதாப் மற்றும் நாதேஸ் என தெரிய வந்தது.

              இவர்களுக்கு, திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த ஒருவர் வேலை தருவதாக கூறிய தங்களை தமிழகத்திற்கு வரவழைத்தாக விசாரனைகளின் மூலம் தெரிவித்துள்ளனர்.

              இதனையடுத்து இருவரையும் கைது செய்த மெரைன் பொலிஸார், அவ்விருவருக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

              சர்வதேச கடல் வழியாக தமிழகத்திற்கு சட்ட விரோதமாக நுழைந்த மன்னாரை சேர்ந்த குறித்த இரண்டு இளைஞர்களை சந்தேகத்தின் அடிப்படையில் க்யூ பிரிவு மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

                Posted in Uncategorized

                சுடலைக்கு பிணத்துடன் சென்றவர்களை துரத்தி குற்றிய குளவி – ஆவி அட்டகாசமா ..?

                சுடலைக்கு பிணத்துடன் சென்றவர்களை துரத்தி குற்றிய குளவி – ஆவி அட்டகாசமா ..?

                சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே சடலத்துடன் சென்றிருந்தவர்கள் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

                இந்த சம்பவம், கண்டி, மஹியாவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கண்டி- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                சடலத்தை மயான பூமியில் வைத்துவிட்டு, இறுதி சடங்குகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பட்டாசும் கொளுத்தப்பட்டுள்ளது.

                அந்த சத்தத்துக்கு களைந்த குளவிகள் கடுமையாக கொட்டியுள்ளன. இதேவேளை, அந்த மயானத்தை சுற்றியிருக்கும் மரங்களில் பெருமளவில் குளவி கூடுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

                சடலத்தை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். எனினும், சவப்பெட்டி மூடியிருந்தமையால்

                சடலத்தின் மீது குளவி கொட்டவில்லை. அதேவேளை, இருட்டியதும் மயானத்துக்குச் சென்ற மற்றும் சிலர் சடலத்தை நல்லடக்கம் செய்துள்ளனர்

                  Posted in Uncategorized

                  விமான நிலையத்தில் 17 கிலோ தங்கத்துடன் நபர் கைது

                  விமான நிலையத்தில் 17 கிலோ தங்கத்துடன் நபர் கைது

                  இலங்கை சர்வதேச விமான நிலையமாக விளங்கும் கட்டு நாயாக்க விமான நிலையத்தில் 17

                  கிலோ தங்கத்தை கடத்தில் செல்ல முற்பட்ட நபர் ஒருவர் சுங்க பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்

                  இவர் கடத்த முற்பட்ட தங்கம் பறிமுதல் செய்ய பட்டுள்ளதுடன் ,குறித்த நபரும் கைது செய்ய பட்டுளளார்


                  இந்த ஆண்டில் முறியடிக்க பட்ட மிக பெரும் தங்க கடத்தல் இதுவாக பார்க்க படுகிறது

                    Posted in Uncategorized

                    வெடித்த குண்டு ஒருவர் மரணம் -மூவர் காயம்

                    வெடித்த குண்டு ஒருவர் மரணம் -மூவர் காயம்

                    இலங்கை அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் ஒன்றில் சம்பவ இடத்தில ஒருவர்

                    பலியானார் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர்

                    மேற்படி வெடிப்பு சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்


                    வெடிப்பு இடம்பெற்ற பகுதி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      Posted in Uncategorized

                      தெற்கு வீதி விபத்தில் சிக்கி 20 பேர் காயம்

                      தெற்கு வீதி விபத்தில் சிக்கி 20 பேர் காயம்

                      இலங்கை தெற்கு அதிவேகசாலை ஊடாக மாத்தறை நோக்கி பயணித்த பேரூந்து ஒன்று லொறி ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்

                      பாதிக்க பட்டவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                      மேற்படி விபத்து தொடர்பான தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                        Posted in Uncategorized

                        அமெரிக்காவில் -காவல்துறை சிப்பாயை காரால் இடித்து கொன்ற நபர்

                        அமெரிக்காவில் -காவல்துறை சிப்பாயை காரால் இடித்து கொன்ற நபர்

                        அமெரிக்கா தலைநகரில் அமைக்க பட்டிருந்த காவல்துறை சோதனை அரணுக்குள் வேகமாக காரினை

                        செலுத்தி வந்த நபர் அந்த அரணுக்குள் காரை செலுத்தியுள்ளார் ,இதனால் இரு காவல்துறையினர் படுகாயமடைந்தனர் ,


                        ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்

                        மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,பைடன் ஆட்சியில் அமர்ந்ததன்

                        பின்னர் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          கீர்த்தி சுரேஷ்-நான்கு முறை திருமணம்…. அதுவும் வெவ்வேறு நபருடன்

                          கீர்த்தி சுரேஷ்-நான்கு முறை திருமணம்…. அதுவும் வெவ்வேறு நபருடன்

                          நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

                          நான்கு முறை திருமணம்…. அதுவும் வெவ்வேறு நபருடன் – வதந்திகளால் அதிர்ச்சியடைந்த கீர்த்தி சுரேஷ்
                          கீர்த்தி சுரேஷ்


                          தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ், மறைந்த நடிகை சாவித்திரி வாழ்க்கை கதையான ‘மகாநடி’ படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார்.

                          தற்போது ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். நடிகை கீர்த்தி சுரேசுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன.

                          இசையமைப்பாளர் அனிருத்துடன், கீர்த்தி சுரேஷ் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன.

                          பின்னர் இருவரும் நண்பர்கள்தான், அவர்களிடையே காதல் இல்லை என்று நெருக்கமானவர்கள் மறுத்தார்கள். பின்னர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபருடன், கீர்த்தி சுரேசுக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக தகவல் பரவியது.

                          கீர்த்தி சுரேஷ்

                          இதனையும் மறுத்த கீர்த்தி சுரேஷ், தனக்கு இப்போது திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்றார். இருப்பினும் அவர் குறித்து தொடர்ந்து திருமண வதந்திகள் பரவி வருகின்றன.

                          இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் கீர்த்தி சுரேஷ் கூறியதாவது: “எனக்கு திருமணம் நடக்க உள்ளதாக தொடர்ந்து வதந்திகள் பரவி வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

                          சில இணைய தளங்களில் நான் திருமணம் செய்து கொண்டதாக 3, 4 தடவை செய்திகள் வந்துள்ளன.

                          ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நபருடன் திருமணம் நடந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர். இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் திருமணம் செய்து கொள்ள இன்னும் காலம் இருக்கிறது” என்றார்.

                            Posted in Uncategorized

                            நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா

                            நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா

                            நடிகர் மாதவனுக்கு கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியான நிலையில், தற்போது அவரது குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                            நடிகர் மாதவனின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
                            மாதவன்


                            இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆரம்பக் கட்டத்தில் இருந்ததைப் போலவே பாதிப்பு நாளுக்கு நாள்

                            அதிகரித்து வருகிறது. மும்பையில் வசித்து வரும் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                            அந்த வகையில் நடிகர் மாதவனுக்கும் கடந்த வாரம் கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வருகிறார். மாதவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

                            மாதவன்

                            இந்நிலையில், தனது குடும்பத்தினர் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக, மாதவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                            நடிகர் மாதவன் நடிப்பில் தற்போது ராக்கெட்ரி எனும் படம் உருவாகி உள்ளது. இப்படத்தை அவரே இயக்கியும் உள்ளார்.

                            நேற்று வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

                              Posted in Uncategorized

                              அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் மரண – பலர் காயம்

                              அமெரிக்காவில் துப்பாக்கி சூடு 4 பேர் மரண – பலர் காயம்

                              அமெரிக்கா கலிபோனியா பகுதியில் நபர் ஒருவர் மக்கள் மீது திடீர் துப்பக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார்

                              இதில் சம்பவ இடத்தில நான்கு பேர் பலியாகினர் .,மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர் ,

                              இது திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் உடனடியாக தெரியவரவில்லை

                              ,மேற்படி சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                Posted in Uncategorized

                                இனப்படுகொலையில் ஈட்பட்டுள்ள எத்தியோப்பிய இராணுவம் – வெளியான ஆதாரங்கள்

                                இனப்படுகொலையில் ஈட்பட்டுள்ள எத்தியோப்பிய இராணுவம் – வெளியான ஆதாரங்கள்

                                எத்தியோப்பிய அரச இராணுவத்தினர் அப்பாவி மக்களை கைது செய்து படுகொலை செய்து வருகின்றனர்,

                                இலங்கையில் சிங்களவர்கள் தமிழர்களை அடக்கி கொன்றது போன்ற இந்த படுகொலை ஒன்று அங்கும் அரங்கேறி வருகிறது

                                சிறுபான்மையின மக்களை கொலை புரிந்த இராணுவத்தினர் அவர்களை கொன்று புதைத்த புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன

                                வடக்கு எதியோப்பியாவில் Mahbere Dego பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டு பிடிக்கக் பட்டுள்ளன

                                ,இது தொடர்பான நீதி விசாரணையா கோரி மக்கள் போராடி வருகின்றனர்

                                  Posted in Uncategorized

                                  பாரிய ரயில் விபத்து 36 பேர் மரணம் -72 பேர் காயம்

                                  பாரிய ரயில் விபத்து 36 பேர் மரணம் -72 பேர் காயம்

                                  தாய்வானில் இடம்பெற்ற சுரங்கவழி ரயில் விபத்தில் சிக்கி முப்பத்தி ஆறு பேர் மரணமாகியுள்ளனர்


                                  மேலும் 72 பேர் படுகாயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

                                  தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  இந்த விபத்தில் ரயில் பெட்டிகள் பல பலத்த சேதமடைந்துள்ளன ,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                    Posted in Uncategorized

                                    சீனாவுக்கு பறக்கும் கோட்டா – பேச போவது என்ன

                                    சீனாவுக்கு பறக்கும் கோட்டா – பேச போவது என்ன

                                    இலங்கை ஆளும் இனவாத அதிபர் கோட்டபாய சீனாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு

                                    செல்லவுள்ளார் ,அங்குச செல்லும் இவர் இருநாடுகளும் இடையினாலான பாதுகாப்பு மற்றும்

                                    ,பொருளாதாரம் ,அபிவிருத்தி போன்ற விடயங்களில் பேசுவார் என எதிர்பார்க்க படுகிறது

                                    இவரது இந்த திடீர் பயணம் இந்தியாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது

                                      Posted in Uncategorized

                                      பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்

                                      பொலிஸ் அதிரடி வேட்டை 4511 மோட்ட சைக்கிள் பறிமுதல்

                                      இலங்கையில் ஊந்துருளியினால் அதிக விபத்துக்கள் ஏற்படுவதனால் அதனை செலுத்துபவர்கள் தீவிர

                                      கண்காணிப்புக்கு உட்படுத்த பட்டனர்,விதிமுறைகளை மீறி செலுத்தி சென்ற சுமார் 4511

                                      வண்டிகள் பொலிசாரினால் பறிமுதல் செய்ய பட்டதுடன் அதனை செலுத்தி சென்ற சாரதிகள்

                                      விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்