Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
சீனாவின் புதிய விமான தாங்கி கப்பலை படம்பிடித்து வெளியிட்ட அமெரிக்கா – முறுகல் உச்சம்
சீனாவின் புதிய விமான தாங்கி கப்பலை படம்பிடித்து வெளியிட்ட அமெரிக்கா – முறுகல் உச்சம்
உலக வல்லாதிக்க அரசாக உருவெடுத்து வரும் சீனா தனது இராணுவ பலத்தை அதிகரித்து செல்கிறது ,உலக அரசியல் ஒழுங்கில் ஏற்பட்டு வரும் திடீர் எதிர்மறை மாற்றங்கள் மூன்றாம் உலக போரை தோற்றுவிக்கும் அபாயம் நெருங்கி வரும் நிலையில் உலக சண்டியர்கள் வேகமாக தமது இராணுவ தளபாட தயாரிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருவதுடன் ,நாடுகளை உடைக்கும் முயற்சிகளில் அதி தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர் .
அந்த வகையில் சீனா தற்போது புதிதாக நிர்மாணித்து வெள்ளோட்ட சோதனைகள் விட்டுள்ள புதியவகை Type 001A விமான தங்கி கப்பல் தற்போது சீனாவின் Yulin Naval தளத்தில் தரித்துள்ளது ,இது Sanya நகரின் அருகில் உள்ளதாகும் .குறித்த விமான தாங்கி கப்பலில் J-15 Flying Shark multirole விமானங்கள் மற்றும் Z-18 உலங்குவானூர்திகள் என்பன நிறுத்த பட்டுள்ளன ,மேற்படி கப்பலையே அமெரிக்கா தனத்து செய்மதி ஊடக படம் பிடித்து வெளியிட்டுள்ளது .
இந்த செயலானது நாங்கள் உங்களை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருக்கிறோம் எமது கழுகு பார்வையில் இருந்து தப்பித்து கொள்ள முடியாது என்ற செய்தியை மிரட்டும் தொனியில் அமெரிக்கா வெளியிட்டுள்ளது .
கொங்கொங் கலவரம் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் இந்த விடயம் முதன்மை பெற்று செல்வது விரைவில் மூன்றாம் உலக யுத்தம் ஆசிய பகுதியில் இருந்து வெடிக்கும் என்றே அவதானிக்க முடிகிறது .- வன்னி மைந்தன் –
லிபியாவில் சுட்டு வீழ்த்த பட்ட இத்தாலி போர் விமானம்-அதிர்ச்சியில் இராணுவம்
லிபியாவில் சுட்டு வீழ்த்த பட்ட இத்தாலி போர் விமானம்
இத்தாலி நாட்டு படைகள் பயன் படுத்திய உளவுரக டிரோன் விமானம் ஒன்று லிபியா பகுதியில் வைத்து மர்ம நபர்களினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது ,
தமது கட்டுப்பாட்டை இழந்த விமானத்தை காணவில்லை என தெரிவித்திருந்த இராணுவம் தற்போது விபத்தில் சிக்கி வீழ்ந்துள்ளதாக கதை விட்டுள்ளது ,
உண்மையில் மர்ம ஆயுத குழு ஒன்றினால் இந்த விமானம் மக்கள் நாடமாட்டம் கூடிய பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்த பட்டுள்ளது . குறித்த பகுதியில் லிபிய இராணுவம் மற்றும் விடுதலை போராளிளை கண்காணிப்பதில் ஈடுபட்டு கொண்டிருந்த விமானமீ சுட்டு வீழ்த்த பட்டுள்ளது
தமிழ்நாட்டு புலிகள் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் – கோட்டா சீற்றம்
தமிழ்நாட்டு புலிகள் கட்சிகள் வாயை மூடிக்கொண்டு இருக்கவும் – கோட்டா சீற்றம்
இலங்கையின் ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள இரத்த காட்டேரி கோத்தபாய தமிழ் நாட்டில் உள்ள புலி கட்சிகள் தமது வாய்களை மூடி கொண்டு அமைதியாக இருக்கவும் என கடுமையாக சாடியுள்ளார் ,உணர்வு பூர்வமாக பேசுவதாயின் பேசுங்கள் அது தவிர்த்து பேச நினைப்பின் வாயை மூடி கொண்டு இருங்கள் என சாடியுள்ளார் ,இது நாம் தமிழர் சீமானை மையமாக வைத்தே கோட்டபாய இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அவதானிக்க முடிகிறது
தமிழ் தளபதி இரத்தம் குடித்த – சிங்களத்தி
தமிழ் தளபதி இரத்தம் குடித்த – சிங்களத்தி
துட்டகைமுனு எனும் கோட்டாபய ஆகிய நான்…!
ருவான் வெலிசாய…! ஒட்டுமொத்த இலங்கையின் – இலங்கையரின் கவனத்தையும் நேற்று முன்தினம் தன்பக்கம் ஈர்த்துக் கொண்ட இடம். ஆம்…! இங்குதான் மக்களால் தெரிவு செய்யப்பட்ட நிறைவேற்று அதிகாரம்மிக்க ஏழாவது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவிப் பிரமாணம் செய்த இடம்.
ஜனாதிபதியாகப் பதவியேற்பவர் தனக்குப் பிடித்தமான இடத்தில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள முடியும். அதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், கோட்டாபய ராஜபக்ச ருவான் வெலிசாயவில் பதவி ஏற்றுக்கொண்டதற்குப் பின்னால், ஓர் ஆழமான வரலாற்றுக் காரணம் உள்ளது. இதை அவருடைய முதல் பேச்சும் ஆழமாக உணர்த்திச் சென்றுள்ளது.
அவரின் இந்த வியாக்கியானங்களை நாம் விளங்கிக் கொள்ள – கோட்டாபய சொல்லும் வரலாற்றுச் செய்தியை உணர நாம் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்னோக்கிப் பயணிக்க வேண்டும்.
நம் கண்முன்,
ஒரு சிறுவன் பஞ்சணையில் படுத்திருக்கிறான். ராஜ களை ததும்பும் அவன் முகம் சோகத்திலும் கோபத்திலும் சிவந்து கிடக்கிறது. கைகளையும் கால்களையும் குறுக்கிக் கிடக்கிறான். அவனின் தாய் அவனைத் தேற்றிக் கொண்டே கேட்கிறாள்.
“காமினி ஏன் இவ்வாறு கஷ்டப்பட்டுப் படுத்திருக்கிறாய்…! கை, கால்களை நீட்டித் தாராளமாகப் படுத்துக் கொள்”, என்கிறாள் தாய்.
கோபத்தில் எள்ளும்கொள்ளுமாய் வெடித்த மகன் சொல்கிறான், “மகா கங்கைக்கு அப்பால் (வடக்கே) தமிழர்கள். கீழே (தெற்கே) சமுத்திரம். கை, கால்களை நீட்டி தாராளமாக நான் படுப்பது எங்ஙனம்…?”
இவ்வாறு கேட்பவனுக்கு என்ன பதில் சொல்வது? தேற்றுவதுதான் எப்படி? ஏனெனில் அவனுள் இந்தக் குரோதமும் விரோதமும் வளரக் காரணமானவள் அவளல்லவா…? தன் மசக்கை ஆசைகளில் ஒன்றாக “தமிழ் (எல்லாளனின்) தளபதி ஒருவனின் தலையை வெட்டிய – குருதி படிந்த வாளைக் கழுவி, அந்த இரத்த நீரை குடிக்கக் கேட்டவள் அல்லவா அவள்…? அவளுக்குப் பிறந்தவளின் – அவள் அதைக் குடிக்கும்போது கருவில் இருந்த பிள்ளைக்கு தமிழனை விரோதிக்கவும் – பகைக்கவும் சொல்லித்தான் கொடுக்க வேண்டுமா… என்ன?
நீங்கள் நினைப்பது சரிதான்… அந்தச் சிறுவன் வேறு யாருமல்லன். மகாவம்சம் கூறும் இலங்கை வரலாற்றின கதாநாயகன் – சிங்கள – பௌத்தர்கள் இன்றும் – என்றும் போற்றிப் புகழும் வீரநாயகன் துட்ட கைமுனு அல்லது துட்ட காமினி என அறியப்பட்ட “காமினி அபய”தான். நீதிநெறி வழுவாத மன்னவன் – எதிரிகளும் எதிர்நிற்க அஞ்சும் வீரனான எல்லாளனை சூழ்ச்சியால் வெற்றி கொன்றானே அதே வீர(?)நாயகன் துட்ட கைமுனுதான். பல இட்டுக்கட்டிய கதைகளைச் சொல்லும் – தமிழர்களுக்கும் – சிங்களவர்களுக்கும் இனவாதத் தீயை முதலில் பற்ற வைத்த மகாவம்சம் நூலின் நாயகன்தான்.
அந்தத் துட்ட கைமுனு, சூழ்ச்சியால் எல்லாளனை போரில் வென்ற பின்னர், தனது வெற்றியைப் பறைசாற்றவும் பௌத்த மதத்தின் மீது தான் கொண்ட பற்றை வெளிப்படுத்தவும் அமைத்ததுதான் ருவான் வெலிசாய.
இந்த விகாரையை துட்டகைமுனு கட்டியபோது, நவரத்தினங்களையும் தங்கக் கட்டிகளையும், வெள்ளிக்கட்டிகளையும் கொட்டிக் கட்டினான் என்கிறது மகாவம்சம். ஆனால், சூழ்ச்சியாலும் சதியாலும் வென்ற போரில் சூறையாடப்பட்ட தமிழர்களின் சொத்துக்களையும், அவர்களைக் கசக்கிப் பிழிந்து பெற்ற வரிகளை வசூலித்தும், போர் கைதிகளாக பிடிபட்ட தமிழர்களை அடிமைகளாக்கி அவர்களை துன்புறுத்தி – வருத்தி அவர்கள் சிந்திய இரத்தத்திலும் – வியர்வையிலும் கட்டப்பட்டதுதான் இந்த விகாரை.
தமிழர்களை வெற்றி கொண்டதன் அடையாளச் சின்னமாக – அன்றைய போரில் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பல ஆயிரம் தமிழர்களின் நினைவுச் சின்னமாக – பல்வேறு துன்பங்களையும் – சித்ரவதைகளையும் – அடக்குமுறைகளையும் தமிழர்கள் எதிர்கொண்டதற்கான சாட்சியமாகவும் நிமிர்ந்து நின்றதுதான் இந்த ருவான் வெலிசாய. இவ்வாறு தமிழின அழிப்பின் – தமிழர்கள் மீதான அடக்குமுறையின் அடையாளமாக நிற்கும் ருவான் வெலிசாயவில்தான் கோட்டாபயவின் அரசியல் பயணம் தொடங்கியது.
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய இனவழிப்பு உலகமே வர்ணிக்கும் “முள்ளிவாய்க்கால் இனவழிப்பை” வழிநடத்தியவர்களில் ஒருவர்தான் இந்த கோட்டாபய ராஜபக்ச. 2005 இல் தமிழ் மக்கள் வாக்களிப்பை புறக்கணித்தபோது – சிங்கள -பௌத்த தீவிர சக்திகளின் தெரிவாக இருந்தவர் இவருடைய மூத்த சகோதரர் மஹிந்த ராஜபக்ச. இவர், பதவியேற்றதும் இலங்கை வந்த முன்னாள் இராணுவத்தினனான கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவியேற்றார். தமிழர்களுக்கு எதிரான போரை – தனது சகோதரனின் நிறைவேற்று அதிகார ஆசியுடன் முன்னின்று நடத்தினார். இராணுவத் தளபதிகள் குற்றங்கள் இழைக்கவும் – அவர்கள் கட்டுக்கடங்காத போர் மீறல்களை மேற்கொள்ளவும் – சர்வதேச போர் விதிகளை காலில் போட்டு மிதித்து தமிழர்களுக்கு எதிராக அழிப்பைக் கட்டவிழ்த்து விட்டார்.
தமிழரின் தாயகத்தை – தமிழருக்கே உரித்தான அரசை மீளக் கேட்ட – அமைக்க முயன்ற விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கச் செய்யப்பட்டது. சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் இந்தப் போரில் கொல்லப்பட்டார்கள். மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். அங்கு பல இன்னல்களையும் அடக்குமுறைகளையும் எதிர்கொண்டார்கள் தமிழ் மக்கள். இவ்வாறு தமிழர்களை வெற்றிகொண்ட ராஜபக்ச சகோதரர்களில் ஆட்சியாளரான மஹிந்த ராஜபக்ச 2010 தேர்தலில் போட்டியிட்டபோது, இலங்கையை முதன்முதலில் ஒருங்கிணைத்த – தமிழர்களை அழித்து – அடக்கிய – துட்டகைமுனு மன்னனுக்கு நிகராகக் கொண்டாடப்பட்டார் – போற்றப்பட்டார்.
2015 ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார். ராஜபக்ச சகோதரர்களின் ஆட்சிக்கு தடை ஏற்பட்டது. எனவே 2019 தேர்தலில் அவர்களுக்குப் பெருவெற்றி ஒன்று தேவைப்பட்டது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையைப் பறிகொடுத்த அவர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அப்போதைய தலைவர் பண்டாரநாயக்க என்ன நோக்கில் தொடங்கினாரோ அதே இலட்சியப் பாதையில் – அதே சிந்தனையை முன்வைத்தே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் தொடங்கப்பட்டது. சிங்கள – பௌத்த மக்கள் பெரும்பான்மையாக வாழும் இந்த நாட்டில் ஆட்சிப்பீடம் ஏற அவர்களின் ஆசி மட்டுமே போதும் என்பதை மீண்டும் பறை சாற்றியது கோட்டாபயவின் வெற்றி.
துட்டகைமுனுவின் ஊரான திஸ்ஸமகரகமவை (அம்பாந்தோட்டை) சேர்ந்த கோட்டாபயவும், தனது அண்ணன் வழியிலேயே, சிங்கள – பௌத்தர்கள் போற்றும் நவீன துட்டகைமுனுவான கோட்டாபய ராஜபக்ச, துட்டகைமுனு மன்னன் தமிழர்களை வெற்றி கொண்டு அவர்களிடம் இருந்து கைப்பற்றிய செல்வங்களைக் கொண்டு கட்டிய விகாரையான ருவான் வெலிசாயவில் தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து. அங்கேயே பதவிப் பிரமாணத்தையும் செய்து சிங்கள – பௌத்தன் என்ற பெருமிதத்துடன் நவீன துட்டகைமுனுவாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.
ஈராயிரம் வருடங்களுக்கு முன்னர் வகைதொகையின்றி தமிழர்கள் அழிக்கப்பட்ட – தமிழர்களை அழித்தும் – வருத்தியும் பெறப்பட்ட செல்வங்களைக் கொண்டு கட்டப்பட்ட ருவான் வெலிசாயவில், “கோட்டாபய எனும் நான் இந்த நாட்டின் சகல மக்களையும் இன, மத, சாதி பேதமின்றி அனைவருக்கும் சேவையாற்றுவேன் என உறுதி ஏற்றிருக்கிறார்.
இலட்சக்கணக்கான தமிழர்களை கொன்றொழித்து விட்டேனே என துட்டகைமுனு கலங்கியபோது, “நமது மார்க்கத்தை நம்பாதவர்கள் தீய வாழ்வை மேற்கொண்டவர்கள் – மிருகங்களை விட உயர்வாக மதிக்கப்படக்கூடாதவர்கள்”, என உபதேசமளித்தனர் பிக்குகள். இதனால் துட்டகைமுனு மனம் மாறினான் என்கிறது மகாவம்சம்.
நவீன துட்டகைமுனுவான கோட்டபய ராஜபக்சவும் இதைப் பின்பற்றி துட்டகைமுனுவாகவே வாழ்வாரா? அல்லது கோட்டாபய என்ற “சிங்கள – பௌத்த ஆதிக்கராக சிறுபான்மை மக்களின் மனதில் இருக்கும் விம்பத்தை அழித்து முன்மாதிரியான தலைவராக மாறுவாரா? என்பதை இனிவரும் காலங்கள்தான் பதில் சொல்லும்.
-செங்கையான்
மூன்று மாதத்தில் – கோத்தாவுக்கு ஆபத்து
மூன்று மாதத்தில் – கோத்தாவுக்கு ஆபத்து
இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள தமிழின கொலையாளியும் இலங்கை கிட்லருமான கோட்டபாய தொடர்ந்து முடி சூடா மன்னனாக நாட்டில் விளங்கிடவும் நேரிய முறையில் ஆட்சியை கொண்டு நடத்தவும் தனது பாராளுமன்ற ஆசனங்களை தக்க வைத்து கொள்ள வேண்டிய நிலையில் தள்ள பட்டுளளார் ,
அதற்கு அமைவாக சித்திரை மாதம் நிறைவடையும் முன்னர் பாரளுமன்ற தேர்தலை நடத்திட வேண்டிய சூழல் உள்ளார் , இதில் யானை கட்சியினர் பலத்த வெற்றியை பெற்றுக்கொண்டால் தொங்கு பால ஆட்சி ஒன்றே அமையும் நிலை உருவாகும் நிலை ஏற்படும் ,
தன்னை கூட இருந்து படுதோல்விக்கு தள்ளியது ரணில் என நம்பும் சஜித் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடக தேர்தலில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வரும் சூழல் ரணிலை தாம் பாரளுமன்ற தேர்தலிலும் நம்பிட தயாரில்லை என்பதை கோடிட்டு காட்டுகிறது
.இந்த வெற்றியை உறுதி படுத்த கோட்டபாய பாரளுமன்ற தேர்தலில் அதிக ஆசனத்தை தனித்து கூட்டணி இன்றி ஆட்சியமைக்கும் நிலைக்கு முன்னேறிட வேண்டும் ,அது தவறின் அது பெரும் இன்னலுக்கும் மீள் ஒரு தேர்தலை நடத்தும் நிலைக்கு செல்ல கூடும் .
எனவே இதில் இருந்து தப்பிட அணைத்து மக்களையும் குஷி படுத்த வேண்டிய நிலையில் உளளார் ,அதற்குள்ளாக நூறு நாள் வேலைத்திட்டத்தின் வாயிலாக மக்களை குஷி படுத்தும் நிலையில் ஈடுபடுவார் ,
அதன் பின்னரே தனது இனவாத செயல் பாடுகளை தீவிர படுத்துவார் என அடித்து கூறலாம் ,அவரு தவறின் இன்று முதலே இனவாத அதிகாரத்தில் மிதப்பார் எனின் அது சிங்கள மக்களை முற்றாக நம்பிய செயலாகவே அமையும் ,அதனை வரும் பாராளுமன்ற தேர்தல் தெளிவு படுத்தும் என்பதே கள நிலவரமாக விரிந்து கிடக்கிறது – வன்னி மைந்தன் –
மகிந்த குடும்ப பெண் எதிரி இணையத்திற்கு அனுப்பிய டுவிட்
மகிந்த குடும்ப பெண் எதிரி இணையத்திற்கு அனுப்பிய டுவிட்
இலங்கையில் இனமான தமிழர்களை கொன்று குவித்த இரத்த காடடேறி கோட்டபாய மீளவும் இலங்கையின் அதிகாரத்தில் அமர்ந்துள்ள நிலையில் தமிழர்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,இவ்வாறான நபர் ஒருவர் நிலை தொடர்பாக அமெரிக்கா முக்கிய அதிகாரிகள் வெளியிடட டுவீட் கீழ் நாம் எமது பதிலை வெளியிட்டு இருந்தோம் ,அதற்கு மகிந்த குடும்ப சார்பு பெண் ஒருவர் நமக்கு அனுப்பிய டுவிடடை இங்கே தருகிறோம் பாருங்க , .. அவர் குறிப்பிடுவது ,,நாம் இலங்கையர்கள் ஒன்றாக வாழ்கிறோம் ,ஆம் அவர் பயங்கரவாதிகளை கொன்றார் ,அதனால் அணைத்து பயங்கர வாதிகளே கவனமாக இருங்கள் என்கின்ற மிரட்டலை இங்கே பதிவிட்டுள்ளார்
கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்
கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்
இலங்கையில் பெரிய வெள்ளி தாக்குதலை நடத்தி ஆட்சி கட்டில் ஏறி அமர்ந்திருக்கும் இரத்த கறை படிந்த ,கொலையாளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு தீர்வை வழங்குவார் ..?

நல்லாட்சிக்கு வித்திடுவார் என இந்திய முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பி நிற்கிறது .இந்தியாவின் எச்சரிக்கையை செவிமடுக்காது ஏழு குண்டு தாக்குதல்களை தேவாலயங்கள் மீது நடாத்தி 269 அப்பாவி உயிர்களை கொன்ற கோட்டபாய எவ்விதம் நல்லாட்சி புரிவார் என மறைத்து கேள்வி எழுப்பி நிற்கிறது .

வெள்ளைவான் ,கடத்தல் ,கொலை ,கப்பம் ,கொள்ளை ,என நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார் என மக்கள் மனங்களின் உள்ளுணர்வுகளை அபப்டியே படம் பிடித்து கேள்வி எழுப்பி நிற்கிறது . ஆம் தனக்கு எதிராக தமிழர்கள் செயல் பட்டுள்ளதும் ,வாக்குகள் இன்றி வீட்டுக்கு அனுப்பிட ஒன்று பட்டு நின்றது இந்த கொலையாளிகளுக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது ,
பெற்றவர்களை கொன்று விட்டு பிள்ளைகளிடம் உங்கள் வாக்குகளை தாருங்கள் என கேட்டு வந்த இவர்களுக்கு எப்படி அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதை கூட இந்த முட்டாள் கூட்டம் எண்ணி பார்க்கவில்லை .
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் இலங்கையில் பெரும் நெருடல்களை எதிர்மறை விளைவுகளை சிறுபான்மையினம் சந்திக்க போகிறது என்பதே வலியோடு படர்ந்த இருளாக மாறப்போகிறது என்பதே வெளிச்சம் – வன்னி மைந்தன் –
தமிழின கொலையாளி கோட்டபாயவுக்கு தமிழர் பகுதியில் செருப்படி
தமிழின கொலையாளி கோட்டபாயவுக்கு தமிழர் பகுதியில் செருப்படி
தமிழின கொலையாளியும் இனப்படுகொலையாளியும் ஆன கோட்டபாய வெட்கமற்று தமிழர் கால்களில் விழுந்து வணங்கி பிச்சை கேட்டு வந்தான் ,அவனுக்கு தமிழர் தேசம் தகுந்த செருப்படியை வழங்கியுள்ளது ,எனினும் மானம் கெட்ட வால்பிடிகள் ஆயிரம் வாக்குகளிற்கு மேல் வழங்கியுள்ளனர் ,பலத்த பணத்தை வாரியிறைத்து பிரச்சாரம் செய்த்த பொழுதும் அவர்களினால் தமிழர் மனங்களை வெல்ல முடியவில்லை ,அரசியல் தெரியாத கோமாளிகள் தமிழர் மனங்களை எப்படி வெல்வது என்று தெரியாது திணறுகிறது இந்த இரத்த காட் டேரிகள்
facebook அதிரடி வேட்டை -3.2 பில்லியன் போலி கணக்குகளை அகற்றியது
facbook அதிரடி வேட்டை -3.2 பில்லியன் போலி கணக்குகளை அகற்றியது
உலகமக்களை ஆட்டி படைத்தது வரும் facebook போலியாக இயங்கி வந்த சுமார் 3,2 பில்லியன் கணக்குகளை கடந்த இரு மாதத்தில் மட்டும் அகற்றியுள்ளதாக அதன் மையம் அறிவித்துள்ளது ,தனிநபர்கள் ,மற்றும் அரசியல் நலன் கருதி இந்த கணக்குகள் இயங்கி வந்துள்ளமை கண்டு பிடிக்க பட்டு இவை அகற்ற பட்டுள்ளதாம்
விடுதலை புலிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டு இந்தியாவில் தடை
இலங்கையில் விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளுக்கு எதிராக மேலும் ஐந்து ஆண்டுகள் தடை விதித்து அந்த அரசு அறிவித்துள்ளது ,இல்லாத புலிகளினால் தமது நாட்டுக்கு ஆபத்து வரும் என கோரி இந்த தடையை இந்தியா அறிவித்துள்ளது ,மேலும் தாம் தடையை நீக்கின் வெளி நாடுகளுக்கு தமது தடையை நீக்கும் என்ற காரணத்தால் இந்த தடையை இந்தியா தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
தயார் நிலையில் உள்ள கோட்டாவின் நெருக்கமான – நிழல் டிவிஷன் -பரபரப்பில் கொழும்பு
இலங்கையில் எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை அடுத்து பிரதான வேட்பாளர்கள் தமது கடும் பரப்புரையை புரிந்து வருகின்றனர் ,வாக்குறுதிகள் என்பன காற்றில் வீழ்ந்து பறக்கிறது ,இவ்வேளை உளவுத்துறை மூலம் கிடைக்க பெற்ற தகவல் கோட்டபாய தோல்வி நிலையை பெறுவார் என்ற நிலை தோற்றம் பெற்றுள்ள நிலையில் ,இராணுவத்தின் மூலம் கலவரங்ககளை ஏற்படுத்தி இராணுவ ஆட்சி மூலம் பதவிக்கு வந்திட கோட்டபாய முயல கூடும் என்பதால் இந்த பரபரப்பு கொழும்பை சுற்றிய வண்ணம் உள்ளது .
கோட்டாவின் நெருங்கிய சகாவாக விளங்கும் சவேந்திர சில்வா இராணுவ தளபதியாக உள்ளதும் அதன் மூலம் இராணுவ ஆட்சியை ஏற்படுத்த கோட்டபாய முயல கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,
சவேந்திர சில்வாவின் மிக நெருங்கிய சாகாக்கள் பதவி உயர்வு வழங்க பட்டு குஷி படுத்த பட்டு தயார் நிலையில் உள்ளதாக செய்திகள் கசிகின்றன . தேர்தல் முடிவுகள் வெளியாகும் வேளை எதுவும் நடக்கலாம் என்பதே அச்சத்தை உருவாக்காகியுள்ளது . சஜித் ,சந்திரிக்கா உள்ளிட்டவர்கள் கைது செய்ய படும் நிலையும் இவ்வேளை படுகொலைகள் நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்க படுகிறது
நெட்டில்- வைரலான சஜித் தமிழ் வெற்றி பாடல் – video
வைரலான சஜித் தமிழ் வெற்றி பாடல் – video
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் ஏற்பாட்டில் இடம்பெற்ற தேர்தல் கூட்டத்தின் பொழுது அங்கு சஜித் வெற்றி பாடல் இடம்பெற்றது ,குறித்த வாலிபர் பாடிய அழகு கம்பீர குரல் மற்றும் வரிகள் மக்கள் மனதை கொள்ளை கொண்டுவிடவே குறித்த பாடல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
போதையில் உளறிய கருணா
மக்கள் முன் -போதையில் உளறிய எட்டப்பன் கருணா
போதையில் உளறிய கருணா-இலங்கை – தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் தமிழர்களை கொன்று குவித்து அந்த விடுதலை போரை
காட்டி கொடுத்த எட்டப்பன் கருணா பலத்த கறுப்பு படை இராணுவ பாதுகாப்பில் மக்கள் முன் பேசினான் ,
நிறை போதையில் காண பட்ட இவர் தமது தேசிய தலைவர் கோட்டபாயா எனவும் அவர் ஜனாதிபதியாக வந்தால் மட்டுமே தமிழர்களுக்கு விடுதலை கிடைக்கும் என கூவியுள்ளார் .
மேலும் அங்கு வருகை தந்த மக்கள் அனைவரும் கடும் சோதனைக்கு உள்ளாக்க பட பின்னரே உள்ளே அனுமதிக்க பட்டு அங்கு இவரது அதிக போதையில் சொற்பழிவை கேட்க வைத்தாராம் .
சுதந்திர தேசத்தில் போதையில் கருணா அம்மான் தனிமையில் உலவா வேண்டியது தானே ,
ஏன் இதனை இரும்பு கரம் கொண்ட பாதுகாப்பு என மக்கள் மன்றம் கேள்விகளை முன் வைத்துள்ளது .
தன்னை கொன்று விடுவார்கள் என பீதியில் உலவும் கருணா இவ்வாறு போதையில் உளறித்திரிகின்றமை வழமையான ஒன்றாக மாறிப்போயுள்ளது
கொழும்பில் முகாமிட்டுள்ள மூன்று நாட்டு உளவுத்துறைகள்
கொழும்பில் முகாமிட்டுள்ள மூன்று நாட்டு உளவுத்துறைகள்
இலங்கை தலைநகர் கொழும்பை மைய படுத்தி மூன்று நாட்டு உளவுத்துறைகள் முகாமிட்டுள்ளன ,இவர்கள் அணைவரும் சந்திரிக்காவுடன் நேரடி தொடர்பில் அசைவுகளை நகர்த்திய வண்ணம் செல்கின்றனர் ,
யனை கட்சியினரை ஆட்சியில் அமர்த்துவதே குறியாக உள்ளது ,அதனை எவ்வாறு சாத்திய ப்படுத்தலாம் என்ற வகையில் நிகழ்ச்சி நிரலின் அடைப்படையில் மூன்று முக்கிய மாற்று திட்டங்களுடன் விடயங்கள் அரங்கேற்ற படுகின்றன .
அமெரிக்கா ,இந்திய கோட்டபாய அணி வருவதை கடுமையாக எதிர்க்கின்றன ,ஆனால் சீன ரசியா அதனை ஆதரிக்கின்றன ,ஆக இங்கே பலத்த போட்டிகள் உள்ளக பேச்சுக்கள் என்பன இடம்பெறுகின்றன ,
இராணுவத்தின் ஊடாக ஆட்சியில் கோட்டபாய அமரலாம் என்ற ஒரு தோற்றம் உள்ளக ரீதியாக பரவி வெடித்து வருகிறது ,அவ்வாறு ஒன்றை இவர்கள் புரிந்தால் அது இலங்கை வரலாற்றின் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவதுடன் முக்கிய நாடு ஒன்று உள்ளே நுழைந்து அரேபிய தேசம் போல இலங்கையை மாற்றி அமைக்கும் சத்தியம் உள்ளது ,
இப்போது இந்த விடயங்களுக்கான திறவுகோலாக கோத்தாவின் காலில் பந்து உள்ளது , அவர் வெளியே அடிப்பாரா கோலை போடுவாரா என்பதே வரும் நாட்களில் தெரிய வரும் . அசைவுகள் வேறொன்றை கோடிட்டு காட்டுகின்றன .இந்த சந்தர்ப்பத்தில் பெரும் அரசியல் கொலை ஒன்று நிகழும் சாத்தியம் அதிகரித்து காணப்படுகிறது ,அத்துடன் குண்டுகள் வெடிக்கும் நிலையும் உள்ளது என உள்ளிருந்து கசியும் தகவல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்துகின்றன . மக்களே அவதானம் குண்டுகள் உங்களை துளைக்கலாம் .
ரஸ்சியாவிடம் S-400 ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் இந்தியா
இந்தியா கஸ்மீரை ஆக்கிரமித்துள்ள நிலையில் இந்தியா பாகிஸ்தான் போர் வெடிக்கும் என்ற அச்சம் உருவெடுத்து வரும் இதே வேளையில் ரஸ்சியாவிடம் S-400 ஏவுகணைகளை விரைவாக தமக்கு வழங்குபடி இந்தியா கோரி வருகிறது .
இந்த ஏவுகணைகள் இந்தியாவிடம் கிடைக்க பெற்றால் அது பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்தியா விரைவாக வழங்க கோருவது ஏன் என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வியாகவும் சந்தேகமாகவும் வெடித்து பறக்கிறது ,
ஒருவேளை பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கும் நிலையில் உள்ளது போல் இதன் அசைவுகள் வட்டமிடுகின்றன
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு
இராணுவ ஆட்சி இலங்கையில் ஏற்படலாம் – கொழும்பு அரசியலில் பரபரப்பு,- இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் மிகுந்த பரபரப்பையும் ,பீதியையும் ஏற்படுத்திய வண்ணம் நாட்கள் நகர்கிறது ,என்றுமில்லாதவாறு மகிந்த குடும்பத்தின் நெருக்கமானவர்கள் பல்வேறு மட்டங்களில் அதிகாரத்தில் அமர்த்தபட்டுள்ளனர் ,
அதற்கு மைத்திரி தாராள வழிகளை திறந்து விரித்தார்,இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்க பட்டுளளார் ,அதுபோலவே கடல்படையும் ,இந்த தேர்தலில் தாம் வெற்றி பெறா விட்டால் இராணுவத்தின் இரும்பு கரம் கொண்டு ஆட்சியை கைப்பற்றும் நகர்வில் மகிந்த அண்ட் கோ நிறுவனம் தீவிர கவனம் செலுத்தி வருகிறது ,
தேர்தல் ஆணையரின் போக்கும் ,அவ்வாறே காணப்படுகிறது ,பெரும் மேசடிகள் மத்தியில் இந்த தேர்தல் இடம்பெறவுள்ளது ,அத்துடன் வாக்கு சிதறல்களை மேற்கொள்ளும் முகமாக ஒருபோதும் இல்லாதவாறு 41 பேர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றனர் ,இதில் மூன்றாவது பெரும் சக் தியாக யார் உள்ளனர் என்பதையும் ,மக்கள் ஏதுவாக உள்ளனர் எனபதை படம் பிடிக்கவும் இந்த தேர்தல் வரலாற்று களமுனையாக வீழ்ந்து கிடக்கிறது ,
மக்கள் குறிப்பாக தமிழர் வாக்குகள் இந்த வெற்றியை தீர்மானிக்க போகின்றன ,அவர்கள் ஆதரவு யானை கட்சிக்கு உள்ளது ,ஆகவே அதனை தடுக்கும் நோக்குடன் ,வெளிநாட்டு சிங்களவர்கள் இலங்கை அழைக்க படுகின்றனர் ,இந்த வாக்குகளை சரி செய்யவே இந்த உள்ளக விளையாடல்கள் நடக்கின்றன .செயலும் நகர்வும் மகிந்த அண்ட் கோவே ஆட்சியில் அமர்வார்கள் என்பது நிழலாக தெரிகிறது









