Category: மருத்துவம்
மருத்துவம் உடலில் ஏற்படும் நோய்கள் எவ்வாறு பரவுகிறது ,அதனை எவ்விதம் தடுப்பது என்பது தொடர்பான குறிப்புக்கள் இந்த மருத்துவம் பகுதியில் பகிர படுகிறது
மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்
மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்
மார்பக புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். காலதாமதமாக திருமணம்
செய்வது, குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போடுவது போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் குணப்படுத்திவிடலாம். இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இவர்களில் 4 லட்சம் பேர் உயிரிழந்தனர். ஆனால், தற்போது ஆண்டுக்கு 10 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.
மார்பக புற்றுநோய் வருவதற்கு இவை தான் காரணம்
இவர்களில் 5.5 லட்சம் பேர் பெண்கள், 4.5 லட்சம் பேர் ஆண்களாகும்.
பாதிக்கப்பட்டவர்களில் 5 முதல் 6 லட்சம் பேர் இறக்கின்றனர். புற்றுநோயால் குறிப்பாக மார்பகப் புற்றுநோயால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவதற்கு வாழ்க்கை முறை மாற்றமே முக்கிய காரணம்.
மார்பக பகுதியில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால், பெண்கள் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
இதே போல ஆண்கள் தொண்டை மற்றும் நுரையீரல்
புற்றுநோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு புகைபிடிப்பதே முக்கிய காரணமாக
உள்ளது. தொண்டை புற்றுநோய் வருவதற்கு முன்பு குரலில் மாற்றம் ஏற்படுவது முக்கிய அறிகுறி என்கிறார்கள், மருத்துவர்கள்.
கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?
கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எவ்வாறு? என்பது குறித்து குமரி மாவட்ட காசநோய் தடுப்பு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறியதாவது:-
ஒரு நோயாளிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டவுடன் காய்ச்சல் ஏற்படும். சிலருக்கு இருமல், உடல்வலி போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
கொரோனா கிருமி நமது உடலுக்குள் சென்றவுடன்
அதை எதிர்த்து நமது உடலிலுள்ள வெள்ளை அணுக்கள் போராடும். அப்போது நமது உடல் வெற்றி பெற்றால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு விடும்.
ஆனால் தற்போது உள்ள கொரோனாவை எதிர்த்து வெள்ளை அணுக்கள் தூண்டப்படும்போது சைட்டோகெய்ன்ஸ் எனப்படும் திரவங்கள் சுரக்கும். அது எதற்காக என்றால் வைரசை
கொல்வதற்காகத்தான். ஆனால் இந்தத் திரவம் வைரஸை மட்டும் கொல்லாது. நமது நுரையீரலில் இருந்து ரத்தத்துக்கு பிராணவாயு செல்லும் இடத்தையும் சேதப்படுத்தும். இது கொரோனா பாதிப்பு
ஏற்பட்ட நபருக்கு 5-வது நாள் அல்லது 6-வது நாளில் நடக்கும். நமது உடலில் கொரோனா வைரஸ் இந்த சேதத்தை ஏற்படுத்த வில்லை. அந்த வைரசை எதிர்த்துப் போராடும் நமது உடலில் உள்ள
வெள்ளை அணுக்கள் அளவுக்கதிகமாக செயல்பட்டு சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை சுரப்பதினால் நுரையீரலின் மாற்றம் நடைபெறும் பகுதி சேதம் ஏற்படுகிறது.
சேதத்தை பொறுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு ஆக்சிஜன் அளவு குறைய தொடங்கும்.
அதனால் தான் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க டாக்டர்களால் சீராய்டு மருந்து கொடுக்கப்படுகிறது.
கொரோனா நோயாளிக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படுவது எப்படி?
இந்த சீராய்டு மருந்து வெள்ளை அணுக்களால் அதிகமாக சுரக்கப்படும் சைட்டோகெய்ன்ஸ் திரவத்தை கட்டுப்படுத்துகிறது.
கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு காய்ச்சல் வந்தால் இரண்டு நாள் அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும்.
சம்பந்தப்பட்ட நபர் காய்ச்சல் ஏற்பட்டதும் மாத்திரைகளை மருந்து
கடைகளில் வாங்கி சாப்பிடுவார். அதன் மூலம் குணமாகிவிடும். ஐந்து அல்லது ஆறாவது நாளில் மூச்சுத்திணறல் தொடங்கும்.
அப்படி தொடங்கினாலே கொரோனா வைரஸ் நுரையீரல் பகுதியில் வலுவாக இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே முதலிலேயே நோயாளிகள் சிகிச்சைக்கு வந்துவிட்டால் எளிதாக அவர்களது உயிரைக் காப்பாற்றி விடலாம்.
இவ்வாறு துணை இயக்குனர் டாக்டர் துரை கூறினார்.
வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் என்ன பிரச்சனை
வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் என்ன பிரச்சனை
வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது.
கோடையில் உஷ்ணமும், வறட்சியும் உடலை கஷ்டப்படுத்தும். சுற்றுப்புறமும் சூடாக இருப்பதால் உடலில் ஈரப்பதம் குறைந்துவிடும்.
இதனால் சோர்வு, உடல்வலி, தலை, கால் வலி, கொப்புளங்கள் போன்ற பாதிப்புகள் தோன்றலாம். வெயில் காலத்தில் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை
குளிர்ச்சியாக வைத்துக் கொள்ள தினமும் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதில் 4 டம்ளர் தண்ணீர் தவிர்த்து, மற்றவை திரவ பானங்களாக இருந்தால் மிகவும் நல்லது. வெயிலால் உடலில்
பொட்டாசியம் சத்து குறைந்து விடும். இதுதான் சோர்வு, வறட்சிக்கு காரணமாகிறது. இளநீர், மோர் மற்றும் பானகம், கரும்புச்சாறு போன்றவற்றை பருகுவதால் பொட்டாசியம் இழப்பை ஈடுகட்டலாம்.
தமிழகத்தில் கோடைகாலத்தில் நீர்மோர், பானகம் போன்றவை முக்கியமாக பருகப்படுகின்றன. பானகத்தில் புளி, பனை வெல்லம், சுக்கு எல்லாம் கலந்து தருவார்கள். இது தாது உப்புகளை
துரிதமாக சீர்செய்யும் சக்தி கொண்டது. மோரில் கொழுப்பு சத்து குறைவாக இருக்கும். அதில் பொட்டாசியம், கால்சியம், லேக்டிக் அமிலம் இருப்பதால் வெயில் காலத்தில் ஏற்படும் தாதுகளை ஈடுகட்டும்.
வெயில் காலத்தில் குளிர்ச்சிக்காக ‘கூல்டிரிங்ஸ்’ குடிப்பது நல்லதல்ல. அவை ஜீரண சக்தியை குறைக்கும் தன்மை கொண்டவை. குடித்த உடன் குளிர்ச்சி கிடைப்பதுபோல இருந்தாலும் அஜீரணத்துக்கு வழிவகுக்கும்.
வெயில் காலத்தில் குளிர்பானங்கள் குடிப்பதால் என்ன பிரச்சனை
கோடையில் கண்நோய்களும் அதிகமாக வர வாய்ப்பிருக்கிறது. எனவே வெளியில் சென்று வந்தவுடன் முகம் மற்றும் கை, கால்களை சுத்தமாக கழுவ வேண்டும். கோடைகாலத்தில் பகல்
பொழுது நீண்டும், இரவுப் பொழுது குறைவாகவும் இருக்கும். எனவே பகலிலும் கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்தால் தப்பில்லை. வெயில் காலத்தில் அதிக உடற்பயிற்சியை தவிர்க்க வேண்டும்.
மண்பானைத் தண்ணீரில் நன்னாரி, விலாமிச்சை வேர், வெட்டிவேர், சந்தனத்தூள் கலந்து பருகி வந்தால் உஷ்ணம் உடலில் ஏறாது. சிலருக்கு வெப்பம் தாங்காமல் பித்தம் அதிகரிக்கும்.
இந்த உஷ்ண பித்தத்தை தணிக்க தர்ப்பூசணி, வெள்ளரி, கொத்தமல்லி, புதினா போன்றவற்றை சாப்பிடலாம்.
சிலருக்கு இந்தக் காலத்தில் சிறுநீர் கடுத்துப்போகும். இந்த சிறுநீர் சுருக்கத்திற்கு கொத்தமல்லி மற்றும் சீரகத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகலாம். குளிக்கும்போது
குளிர்ச்சிக்காக சந்தனாதி தைலம் தேய்த்து குளிக்கலாம். பூலாங்கிழங்கு, வெட்டிவேர், கார்போக அரிசி, பொடாமஞ்சள், சந்தனம், ரோஜா இதழ், காய்ந்த எலுமிச்சைப்பழத் தோல், பச்சைப்பயிறு
ஆகியவற்றை அரைத்து அந்த மாவை தேய்த்து குளித்தால் சருமத்தில் வறட்சி ஏற்படாது. குழம்புகளில் பூசணிக்காய், சுரைக்காய், வெள்ளரிக்காய் போன்றவற்றை தினமும்
சேர்த்துக்கொள்ளலாம். காரத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உப்பு குறைவாக சேர்த்து சாப்பிட வேண்டும்.
சுறுசுறுப்பாக இருக்கனுமா? அப்ப இதை சாப்பிடுங்க…
சுறுசுறுப்பாக இருக்கனுமா? அப்ப இதை சாப்பிடுங்க…
உருண்டு திரண்ட முட்டைக்கோஸ், சத்துக்கள் நிறைந்தது. சீனர்களின் சுறுசுறுப்புக்கு அவர்கள் தங்கள் உணவில் முட்டைக்கோஸை முக்கிய உணவுப் பொருளாக சேர்ப்பது ஒரு காரணம் எனலாம். உலகம் முழுவதும் விளையும் காய்கறிகளில் ஒன்றான முட்டைக்கோஸ் தன்னிடத்தில் அடக்கியுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்…
பல அடுக்கு இதழ்களைக் கொண்டது முட்டைக்கோஸ். பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.
பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. சுறுசுறுப்பை கூட்டக்கூடியது. கொழுப்பு குறைந்தது. 100 கிராம் முட்டைக்கோஸில் 25 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
முக்கியமான நோய் எதிர்ப்பு பொருளான ‘வைட்டமின் சி’, முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. 100 கிராம் கோஸில் 36.6 மில்லிகிராம் ‘வைட்டமின் சி’ கிடைக்கிறது. தொடர்ச்சியாக ‘வைட்டமின் சி’ உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
‘வைட்டமின் பி-5’, ‘வைட்டமின் பி-6’, ‘வைட்டமின் பி-1’ போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற் செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாது உப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. பொட்டாசியம் உடற்செல்கள் மற்றும் சருமம் வளவளப்புடன் இருக்க துணை செய்யும். இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். மாங்கனீசு, நோய் எதிர்ப்பு நொதிகள் செயல்பட துணைக் காரணியாக விளங்கும். இரும்புத் தாது, சிவப்பு ரத்த செல்கள் உருவாக்கத்தில் பங்கெடுக்கிறது.
முட்டைக்கோஸில் ‘வைட்டமின் கே’, நிறைய அளவில் உள்ளது. எலும்பு வளர்சிதை மாற்றத்தில் இது பங்கெடுக்கும். அல்சீமர் மற்றும் நரம்பு வியாதிகளின் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் ஆற்றலும் ‘வைட்டமின் கே’ விற்கு உண்டு.
பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்
பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்
குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம்.
குழந்தைகள் வளர்ப்பில் ஒவ்வொரு விஷயத்தையும கூர்ந்து கவனிப்பது அவசியம். குறிப்பாக அவர்களது பல்லில சொத்தை ஏற்பட்டு விட்டால் அதை குணப்படுத்துவது சிக்கலான விஷயம்.
கவனிக்காமல் விடப்பட்ட பல் சொத்தை காரணமாக குழந்தைகள் பற்களை இழக்கும் அபாயமும் உள்ளது. அதனால் பற்களில் சொத்தை உருவாகாமல் தடுகக வேண்டும்.
பால் பற்களில் சொத்தை ஏற்படுவதற்கான காரணம்
பெற்றோர் பலர் இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு புட்டியில் பால் ஊட்டுவதுடன் அப்படியே
அவர்களை உறங்க வைத்து விடுகிறார்கள். அதனால் பாலில் இருக்கும் இனிப்பு பாக்டீரியாக்களுடன் வினை புரிந்து பற்களை பாதிக்கின்றன.
சிறு குழந்தைகள் இனிப்பு கலந்த உணவுகளை சாப்பிட்ட பின்னா தண்ணீரால் வாயை கொப்பளிக்கும் பழக்கத்தை பயிற்றுவிக்க வேண்டும். அதனால் இனிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள்
தவிர்க்கப்படும். பிஸ்கட், சாக்லேட், கேக் போன்றவறை அடிக்கடி உண்பது. சர்க்கரை அதிகமுள்ள பால், குளிர்பானங்கள் ஆகியவற்றை அருந்துவதன் மூலம் குழந்தைகளின் பற்களில் சொத்தை ஏற்படுகிறது.
சொத்தை காரணமாக ஏற்படும் பல் வலியால் குழந்தைகள் சரியாக உணவு உண்பது சிரமமாகி அவர்களது உடல் எடை குறையும். ஒன்றுக்கும் மேற்ப்பட்ட பற்கள் சொத்தையாக இருந்தால் இதய
நோய், சளி, காய்ச்சல், தோல் அரிப்பு, தடிப்பு, முகம் வீங்குதல், கண் பிரச்சனை ஆகியவை ஏற்படக்கூடும்.
பல் சொத்தை ஏற்டாமல் பாதுகாக்க சில டிப்ஸ்…
குழந்தை பால் குடித்து முடித்த பின்னர் ஒவ்வொரு முறையும் தாயார் தன் விரலில் சுத்தமன துணியை சுற்றிக்கொண்டு குழந்தைகளின் ஈறுகளை சுத்தம் செய்ய வேண்டும்.
பற்கள் முளைக்கும் போது அவர்களுக்கென உள்ள பிரத்யோமான பிரஷ் மற்றும் பேஸ்ட் மூலம் காலை இரவு ஆகிய இரு நேரங்களிலும் பற்களையும் நாக்கையும் சுத்தம் செய்ய பழக்க வேண்டும்.
7 வயதில் பால் பற்கள் விழுந்து நிரந்தர பற்கள் முளைப்பதில் பிரச்சனை இருந்தால் உடனடியாக
பல் மருந்துவரை அணுக வேண்டும். பால் பற்களின் தன்மையை பொறுத்தே நிரந்தர பற்கள் முளைக்கின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கவனிக்காமல் விடப்படும் பல் சொத்தை மற்ற பற்களையும் எளிதாக பாதித்து விடும். எப்போதும் இனிப்பு சாப்பிட்ட பின்னர் நார்ச்சத்து உள்ள பழங்களை சாப்பிடுவதன் மூலம் பல் சொத்தை உருவாகாமல் தவிர்க்கலாம்.
குழந்தைகள் சரியாக பேசவும், சாப்பிடவும், ஆரோக்கியமான பற்கள் அவசியம். அதனால் தொடக்க கால பால் பற்களின் அமைப்பையும் ஆரோக்கியத்தையும் கவனித்து பிரச்சனைகளை
ஆரம்பத்திலேயே குணப்படுத்துவது நல்லது. அதன் மூலம்ஆரோக்கியமான பற்கள் வெளிப்படுத்தும் மழலையின் புன்னகையை பெற்றோர் ரசிக்க இயலும்.
கருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய உணவு
கருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய உணவு
கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும்.
தாய்மையடையும் பெண்கள் கருவில் வளரும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதற்கு அதிக சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் சில நேரங்களில் கருச்சிதைவு
ஏற்பட்டு விடுகிறது. துரதிருஷ்டவசமாக நடக்கும் அந்த நிகழ்வில் இருந்து தாய்மார்கள் மீண்டு
வருவது கடினம். கரு கலைவது அந்த பெண்ணின் உடலையும், மனதையும் கடுமையாக பாதிக்கும். கருப்பையும் பாதிப்பிற்குள்ளாகலாம்.
மீண்டும் கருவை சுமப்பதற்கான வலிமையை பெறுவதற்கு உடல் அளவிலும், மனதளவிலும் அந்த பெண் தயாராக வேண்டியிருக்கும். அவர்கள் ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்களை
கருக்கலைப்புக்கு பின் கடைபிடிக்க வேண்டிய உணவு
பின்பற்ற வேண்டியது அவசியமானது. முட்டை, பாலாடைக்கட்டி, பழம், பச்சை காய்கறிகள் போன்றவற்றை தவறாமல் சாப்பிட வேண்டும். அவை உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்த
உதவுவதோடு மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும். செர்ரி, பிளம்ஸ், சிவப்பு ராஸ்பெர்ரி போன்ற பழ வகைகளையும் சாப்பிடலாம். அவற்றுள் இரும்பு, கால்சியம் போன்ற
ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஹார்மோன்களை சமப்படுத்தவும், மனச்சோர்வை கட்டுப்படுத்தவும் உதவும். கருப்பைக்கும் வலுசேர்க்கும்.
நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சூடான சூப் உள்ளிட்ட திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதேவேளையில் காபி, தேநீர் வகைகளை தவிர்க்க
வேண்டும். தண்ணீர் நிறைய பருக வேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு ரத்தம் சீராக
சென்றடைவதற்கு மசாஜ் செய்வது சிறந்த வழிமுறையாகும். ரத்த ஓட்டம் தூண்டப்பட்டால் கருப்பை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி
கர்ப்ப காலத்தில் தடுப்பூசி போடுவது மிகவும் அவசியமானது
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி கர்ப்ப கால தடுப்பூசி பல தொற்றுகளில் இருந்து தாயையும், குழந்தையையும் காப்பாற்றும். கர்ப்ப காலத்தில்
தாய்மார்களிடம் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி கருவில் வளரும் குழந்தைக்கு போகும். கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு போடப்படும் தடுப்பூசி குழந்தை பிறந்த சில நாட்களுக்கு நோய்கள்
எதுவும் வராமல் காக்க உதவும். குழந்தை பிறந்தவுடன் மிகவும் மென்மையாக இருப்பதால் உடனே எல்லா தடுப்பூசிகளும் போட முடியாது.
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி:
கர்ப்பம் தரிப்பதற்கு முன் ஒரு சில நோய்களுக்கான தடுப்பூசிகளை பெண்கள் போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்.
- ரூபெல்லா ஒரு வைரஸ் நோய். ரூபெல்லா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தடிப்பு மற்றும் காய்ச்சல் ஏற்படும். பொதுவாக இது சாதாரணமான காய்ச்சல்.
- ஆனால் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டால், கருவிலிருக்கும் குழந்தையை பாதிக்கும்.
- கருக்கலைவு மற்றும் குழந்தை முன்னதாக பிறப்பதற்கான வாய்ப்புகளும் இருக்கும். ரூபெல்லா நோய் எதிர்ப்பு சக்தியை இரத்தப் பரிசோதனை மூலமாக
- மதிப்பிடலாம். நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்றால் ரூபெல்லா தடுப்பூசி போட வேண்டும். ரூபெல்லா தடுப்பூசி போட்ட 1 மாதத்திற்கு கருத்தரிக்கக்கூடாது.
- கர்ப்பிணி பெண்ணுக்கு சிக்கன்பாக்ஸ் தொற்று ஏற்பட்டால் அது கருவில் இருக்கும் குழந்தையை மிகவும் பாதிக்கும். குழந்தைப் பருவத்தில் ஒருபோதும் சிக்கன்
- பாக்ஸ் வராத மற்றும் அதற்கு தடுப்பூசி போடாத பெண்கள் சிக்கன் பாக்ஸ் தடுப்பூசி குறித்து தங்கள் மருத்துவரிடம் கண்டிப்பாக பேச வேண்டும்.
- ஹெபடைடிஸ் பி – இந்த வைரஸ் நோய் ஒரு தாயிடமிருந்து தனது குழந்தைக்கு செல்லக்கூடும்.
- கர்ப்பமாவது குறித்து திட்டமிடுபவர்கள் ஹெபடைடிஸ் பிக்கு தடுப்பூசி போடுவது குறித்து தங்கள் மருத்துவரிடம் பேச வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
பொதுவாக, செயலிழந்த வைரஸ்கள் அல்லது பாக்டீரியாக்களைக் கொண்ட தடுப்பூசிகளை கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கலாம். நேரடி வைரஸ்கள் கொண்ட தடுப்பூசிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்க பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள்:
- டெட்டனஸ் டோக்ஸாய்டு (டி.டி) – இந்த தடுப்பூசி தாய் மற்றும் குழந்தையை டெட்டனஸுக்கு எதிராக பாதுகாக்கிறது மற்றும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம், பொதுவாக இது நான்காவது மாதத்திற்குப் பிறகு இரண்டு முறை வழங்கப்படுகிறது.
- TdaP- டெட்டனஸ் டோக்ஸாய்டு, குறைக்கப்பட்ட டிப்தீரியா டோக்ஸாய்டு மற்றும் அசெல்லுலர் பெர்டுசிஸ் தடுப்பூசி. இந்த தடுப்பூசியின் ஒரு டோஸ் ஒவ்வொரு கர்ப்ப காலத்திலும் பரிந்துரைக்கப்படுகிறது, இது கர்ப்பத்தின் 27 முதல் 36 வாரங்களுக்கு இடையில்
கர்ப்பம் தரிக்கும் முன்பு போடப்படும் தடுப்பூசி
- வழங்கப்படுகிறது. மூன்று தீவிர நோய்களிலிருந்து தாய் மற்றும் குழந்தை இருவரையும் இது பாதுகாக்கிறது.
- ரியா மற்றும் ஹூப்பிங் இருமல் (பெர்டுசிஸ்) தடுப்பூசி போடப்படும். எனவே முதல் 6 வாரங்களில் குழந்தையைப் பாதுகாக்க இந்த தடுப்பூசி முக்கியமானது.
- காய்ச்சல் தடுப்பூசி / ஷாட் – செயலற்ற காய்ச்சல் வைரஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் பாதுகாப்பானது.
- இது கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கப்படலாம், ஆனால் பொதுவாக காய்ச்சல் காலத்தில் நவம்பர் முதல் மார்ச் வரை கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு வழங்கப்படுகிறது.
கர்ப்ப காலத்தில் தவிர்க்கப்பட வேண்டிய தடுப்பூசிகள்:
கர்ப்ப காலத்தில் சிக்கன் பாக்ஸ் (வெரிசெல்லா), எம்.எம்.ஆர் தடுப்பூசி (தட்டம்மை மற்றும் ரூபெல்லா), இன்ஃப்ளூயன்ஸா நேசல் ஸ்ப்ரே போன்ற தடுப்பூசிகள் தவிர்க்கப்பட வேண்டும்.
பாதுகாப்பு மற்றும் பக்க விளைவுகள்:
கர்ப்ப காலத்தில் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகள் பாதுகாப்பிற்காக உன்னிப்பாக கண்காணிக்கப்படுகின்றன. தடுப்பூசிக்கும் கருச்சிதைவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
தடுப்பூசிகளின் பக்க விளைவுகள்:
மற்ற மருந்துகளைப் போலவே தடுப்பூசிகளும் வலி, சிவத்தல், தடுப்பூசி போட்ட இடத்தில் வீக்கம், லேசான காய்ச்சல், தசை வலி, சோர்வு போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த பக்க விளைவுகளில் பெரும்பாலானவை லேசானவை. அவை தானாகவே போய்விடும்.
பயணம் மற்றும் கர்ப்பம்:
ஒரு கர்ப்பிணிப் பெண் வெளிநாடுகளுக்குச் சென்றாலோ அல்லது நோய்த்தொற்றுகள் அடிக்கடி ஏற்படும் பகுதிக்குச் சென்றாலோ, ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஹெபடைடிஸ் பி போன்ற கூடுதல்
தடுப்பூசிகளை மருத்துவர் பரிந்துரைக்கலாம். நோய்த்தொற்று ஆபத்து அதிகம் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கும் இந்த தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
அதில் திருப்தி இல்லையென்றால் அவதியுறும் பெண்கள்
அதில் திருப்தி இல்லையென்றால் அவதியுறும் பெண்கள்
பெண்களிடம் பாலியல் விழிப்புணர்வு அதிகமாக ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவர்களது பாலியல் செயல்பாட்டிற்கு தற்போதைய இயந்திரமய வாழ்க்கைமுறை எதிராக அமைந் திருக்கிறது.
அதனால் பெண்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவது குறைந்து வருகிறது. குழந்தைகள் பற்றியோ, பண நெருக்கடி பற்றியோ, வேலைபார்க்கும் இடங்களில் உள்ள சிக்கல் பற்றியோ
, கணவரால் ஏற்படும் பொதுவான குறைபாடுகள் பற்றிய சிந்தனையிலோ பெண்கள் சிக்கிக்கொள்வதால் அவர்கள் முழுமனதோடு உறவில் ஈடுபடுவதில்லை.
அதனால் தம்பதிகள் இருவருக்குமே அதில் திருப்தி ஏற்படாமல் போய் விடுகிறது. திருப்தியின்மையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். திருப்தியடையாத பெண்கள்
கணவரிடம் எரிச்சல்படுகிறார்கள். அது கோபமாகவும், சில நேரங்களில் பகையாகவும் மாறுகிறது. இந்த நிலையை மாற்ற பெண்கள் முன்வரவேண்டும். அதற்கு கணவரின் பங்களிப்பு மிக முக்கியம்.
அதில் திருப்தி இல்லையென்றால் அவதியுறும் பெண்கள்
பெண்கள் பாலுறவில் திருப்தியடைய அவர்கள் அந்த நேரத்தில் தங்கள் சிந்தனையை ஒருமுகப்படுத்தவேண்டும். அப்போது வேறு எதையும் பற்றி சிந்திக்கக்கூடாது. பொதுவாக இரவு
நேர உறவின்போது, ‘நாளை என்ன சமையல் செய்வது?’ என்ற யோசனையில் பெரும்பாலான பெண்கள் ஆழ்ந்துபோகிறார்கள். ‘இந்த நேரம் பார்த்து குழந்தை விழித்துவிட்டால் என்ன செய்வது?’
என்ற கவலையும் அவர்களை வாட்டுகிறது. இதை எல்லாம் புரிந்துகொண்டு கணவனும்- மனைவியும் திட்டமிட்டு மனஅமைதியோடு தாம்பத்யத்தில் ஈடுபடவேண்டும். மனைவியின்
அன்றாட வேலைகளை கணவரும் பங்கிட்டு, மனைவி சுமைதாங்கியாக ஆகாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும்.
தாம்பத்ய உறவு மனதுக்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு ஆரோக்கியத்தையும் தரும். திருப்தியான உறவுக்கு பின்பு தம்பதி களிடையே அதுவரை இருந்த மனக் கசப்புகள் அனைத்தும் அடியோடு
நீங்கி, புதிதாய் இணைந்த ஜோடிபோல் குதூகல மாய் வாழ்க்கையை நகர்த்துவார்கள். அடுத்த முறை இணை வதையும் ஆவலோடு எதிர்பார்ப்பார்கள். தாம்பத்யத்திற்கு பின்பு உடல்வலியும்,
தலைவலியும் நீங்கும். உடல் நெகிழ்ச்சி யாகி அதில் சுறுசுறுப்புடன் தங்கள் பணிகளை செய்வார்கள். தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டவர்கள், நன்றாக தூங்கவும் செய்வார்கள்.
திருப்தியான உறவு தம்பதிகளுக்குள் புதிய நம்பிக்கையை உருவாக்கி, அவர்களை வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லும்” என்றும் சொல்கிறார்கள்.
மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு
மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு
பல்வேறு காய்ச்சல்கள் பற்றிய விழிப்புணர்வு ஓரளவுக்கு இருந்தாலும், அதிக விழிப்புணர்வு இல்லாத நோய் மூளைக்காய்ச்சல். இது உயிரை பறிக்கும் ஆபத்து கொண்டது.
குறிப்பாக, குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் அதிகம் பாதிக்கக்கூடியது. ஏழை நாடுகளில் மூளை காய்ச்சலின் பாதிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவில், மூளை காய்ச்சல், ஜப்பானிய மூளை காய்ச்சல் நோய்களால் பாதிப்புக்கு ஆளாகும் 15 வயதுக்கு உட்பட்ட 50 ஆயிரம் குழந்தைகளில் 10 ஆயிரம் பேர்
இறந்துவிடுவதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதிலிருந்தே அதன் தீவிரத்தை புரிந்துகொள்ளலாம்.
இது கடுமையான மூளை தொற்று நோய். இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை மூளை காய்ச்சல் என்றும், இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வரும் நோயை
‘ஜப்பானிய மூளை காய்ச்சல்’ எனவும் மருத்துவ அறிவியல் சொல்கிறது. மூளை காய்ச்சலை ‘மெனிஞ்சைடிஸ்’ என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள். தமிழில் மூளைச்சவ்வு அழற்சி என்று பெயர்.
இந்த நோய் வர வேறு சில நோய்களும்கூட காரணமாக இருக்கலாம். தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, கக்குவான், இருமல், மலேரியா அல்லது காது தொற்று போன்ற நோய்கள் வந்தால்,
கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நோய்கள் மூளைச்சவ்வு அழற்சியில் கொண்டுபோய் விட்டுவிடலாம்.
குழந்தைகளுக்கு காசநோய் இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். குழந்தைகளுக்கு காசநோய் கிருமியால் சில நேரம் மூளைச்சவ்வு அழற்சி ஏற்படலாம். தாய்க்கு காசநோய் இருந்தால்
பிறக்கும் குழந்தைக்கு சில மாதங்களில் காசநோய் தொடர்பான மூளைச்சவ்வு அழற்சி சில நேரம் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார்கள், மருத்துவர்கள்.
அது மட்டுமல்லாமல் மூளை காய்ச்சல் ஒரே நாளில் வந்துவிடுவதில்லை. இரண்டு முதல் 15 நாட்கள் வரை அதன் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். உடனே எச்சரிக்கை அடைந்து பாதிக்கப்பட்டவரை
மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட வேண்டும். காய்ச்சல், கடுமையான தலைவலி, கழுத்து விறைப்பு, குழந்தை மிகவும் நோயுற்றுக் காணப்படுவது, கழுத்தையும் தலையையும் பின்னோக்கி
வளைத்துப் படுத்திருப்பது, தலையை கால் முட்டிகளுக்கு கொண்டு போக முடியாதபடி முதுகு விறைப்பாக இருப்பது, ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தலை உச்சியின் மென்பகுதி மேல் நோக்கி புடைத்திருப்பது ஆகியவை மூளை காய்ச்சலின் அறிகுறிகள்.
மூளைக்காய்ச்சலால் வரும் பாதிப்பு
இவை மட்டுமல்லாமல் பொதுவாக வாந்தியும் இருக்கும். பாதிக்கப்பட்ட குழந்தை எப்போதும் தூங்கிக்கொண்டே இருக்கும் அல்லது எரிச்சலுற்றதாக காணப்படும். எதையும் சாப்பிடாது. சில நேரம் வலிப்பு ஏற்படலாம். வழக்கத்துக்கு மாறான அசைவுகளும் உடலில் காணப்படும்.
பெரும்பாலும் நினைவு இழக்கும்வரை குழந்தையின் நிலைமை மோசமடைந்து கொண்டே போகும். இதில் காசநோய் கிருமியால் ஏற்படும் மூளை காய்ச்சல் மெதுவாக பல நாட்கள் அல்லது
சில வாரங்களுக்கு பிறகுதான் அறிகுறிகளை காட்டும். மற்றப் பாதிப்புகளால் வரும் மூளை காய்ச்சல் மிக விரைவாக வெளிப்படும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
இவையன்றி, நோய் வராமல் தடுப்பது நம் கையிலும் உள்ளது. முதலில் வீட்டுக்குள்ளும், வீட்டுக்கு வெளியேயும் சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். குப்பையகளை சேர்க்கக்கூடாது. தண்ணீர்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் வெங்காய தேநீர்
வெங்காய தேநீர்
தேநீர் பிரியர்களை வசப்படுத்துவதற்காக பலவகையான தேநீர்கள் புழக்கத்தில் இருக்கின்றன. அவற்றுள் வெங்காய தேநீரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வெங்காயத்தில் தயாரிக்கப்பட்ட தேநீர்
பருகுவது வழக்கத்திற்கு மாறானது என்றாலும் இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு வரப்பிரசாதமாகவும் அமையும்.
உயர் ரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்துவதிலும் வெங்காய தேநீர் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் வெங்காயத்தில் இருக்கும் குர்செடின் மற்றும் பிளாவனோல் ரத்த அழுத்தத்தைக்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த இதை சாப்பிடுங்க
கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. மேலும் வெங்காயத்தில் உள்ள குர்செடின் கெட்ட கொழுப்பை குறைக்க துணைபுரியும்.
வெங்காயத்தில் இருக்கும் கந்தகம் ரத்த உறைவை தடுக்கவும் உதவும். வெங்காய தேநீர் பருகினால் இதய நோய்களில் இருந்து தற்காத்து கொள்ளலாம் என்று ஆய்வுகளும்
குறிப்பிடுகின்றன. வெங்காய தேநீர் தயாரிப்பது எளி தானது. வயதானவர்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க தினமும் ஒரு கப் வெங்காய தேநீர் குடிப்பது நல்லது.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும்
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும்
பெண்களை அதிகம் பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
பெண்களுக்கு வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்பட காரணமும், தடுக்கும் வழிமுறையும்
வெள்ளைப்படுதல் பிரச்சினை
இன்றைய சூழலில் 15 வயது முதல் 45 வயது வரையிலான பெண்கள் அதிகமாக சந்திக்கும் பிரச்சனை வெள்ளைப்படுதல் ஆகும். பருவம் அடைந்த பெண்களின் மாதவிலக்கு நாட்களுக்கு முன்னதாகவும், கருவுற்றிருக்கும் சமயத்திலும் வெள்ளைப்படுதல் பிரச்சனை ஏற்படுகிறது.
இது பெரும் நோயாக இல்லாவிட்டாலும் சரிவரக்கவனிக்காவிட்டால் கர்ப்பப்பையை இழக்கும் அபாயம் கூட ஏற்படக்கூடும்.
எனவே இந்த பிரச்சினை ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
தவறான உணவுப்பழக்கங்கள், கெட்டுப்போன உணவு பொருட்களை உண்ணுதல், சுகாதாரமற்ற உள்ளாடைகள் அணிதல், சுயஇன்பம் பழக்கம், மாதவிடாயை தூண்டும் மருந்துகளை உண்ணுதல், ஊசைச்சதை, ரத்தசோகை, அதிக உடல் சூடு, உடலுறவில் அடிக்கடி ஈடுபடுதல் ஆகியவற்றால் இந்த பிரச்சனை ஏற்படலாம்.
மேலும் கோபம், வருத்தம், வெறுப்பு, மன உளைச்சல், தூக்கமின்மை போன்றவையும் காரணமாக இருக்கக்கூடும்.
சுகாதாரமற்ற இடங்களில் சிறுநீர் கழிப்பது, பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்காதது ஆகியவையும் முக்கிய காரணங்கள்.
இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
- மாதவிடாய் காலத்திலும், உடலுறவுக்கு பின்பும் பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிப்பது முக்கியம்.
- பருத்தி துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது சிறந்தது.
- நீண்ட நாட்களாக கருத்தடை சிகிச்சை பெறுபவர்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம். கருத்தடை சாதனங்கள் பயன்படுத்துபவர்கள் மருந்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.
வீட்டு வைத்தியம் உண்டா?
- கீழா நெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து 7 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.
- உளுந்து, பார்லி இரண்டையும் தலா 100 கிராம் எடுத்து கொண்டு மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தலா 10 கிராம் அளவு சேர்த்து பொடியாக அரைத்து கஞ்சி காய்ச்சி தினமும் ஒருமுறை குடித்து வரலாம்.
- தினமும் எலுமிச்சை சாத்துக்குடி, ஆரஞ்சு ஆகிய ஏதேனும் ஒன்றின் ஜூஸ் அருந்தலாம். அவற்றில் உள்ள வைட்டமின் டி, ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை பாக்டீரியா வளர்ச்சியை தடுப்பதுடன், அந்தரங்க உறுப்பில் ஏற்படும் துர்நாற்றதையும் அகற்றி விடும்.
பிள்ளை இல்லையா ..? அப்படின்னா இது தான் காரணம்
பிள்ளை இல்லையா ..? அப்படின்னா இது தான் காரணம்
உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப்பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம்
என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை.
ஆனால், நீர் அதிகமாகச் சேர்க்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடை 10 கிலோ
அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல்
பிள்ளை இல்லையா ..? அப்படின்னா இது தான் காரணம்
எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு
பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர்
அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது உறுதியானால் அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அந்த பெண் தாய்மை அடையவும் முடியும். இதற்கு
மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும்.
இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
பெண்களுக்கு மார்பு வலிக்க இது தான் காரணமாம்
பெண்களுக்கு மார்பு வலிக்க இது தான் காரணமாம்
மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின்
போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.
பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம்.
சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.
பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள்.
இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.
உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.மனஅழுத்தம்
பெண்களுக்கு மார்பு வலிக்க இது தான் காரணமாம்
உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக்
டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும். இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.
நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும்.
அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது
போன்றவற்றையும் தவிருங்கள். சீரற்ற சாலைகளில் அதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.
மார்பக வலியில் எச்சரிக்சை அடைய வேண்டிய சில அறிகுறிகளும் இருக்கின்றன. மார்பக காம்புகள் உள் இழுத்த நிலையில்
இருந்தால் ரத்தமோ அல்லது வேறுவித திரவமோ அதில் இருந்து சுரந்தால் மார்பகங்கள் சிவந்து காணப்பட்டால் உடனே டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.
சிலருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஹார்மோன் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் போன்றவைகளால் மார்பக வலிக்கான காரணத்தை கண்டறியலாம்.
மார்பக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். தரமான பொருத்தமான பிரா அணியுங்கள்.
நெஞ்சுப் பகுதிக்கான எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஆவி பிடிக்கலாம்.
சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்
சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்
பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
பெண்கள் தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்பட்டால் எலும்புகள் பலவீனடைந்து ‘ஆஸ்ட்ரோபோரோசிஸ்’ எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படும் என்று ஆய்வில்
கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து போதுமான நேரம் தூங்காமல் குறைந்த நேரமே தூங்கி எழுந்தால் எலும்பு அடர்த்தி பாதிப்பு அதிகமாகி எலும்புகள் பலவீனமாகும் என்பதை அமெரிக்காவைச் சேர்ந்த பப்பெல்லோ பல்கலைக் கழகம் கண்டறிந்துள்ளது.
மாதவிடாய் நிறைவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை எதிர்நோக்கி இருக்கும் 11 ஆயிரத்து 84 பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் தூங்கும் நேரத்தை
கணக்கிட்டு ஆய்வு முடிவை வெளியிட்டிருக்கிறார்கள். ஆய்வில் பங்கேற்ற இந்த பெண்கள் அனைவரும் தினமும் இரவில் ஐந்து மணிக்கும் குறைவான நேரமே தூங்கி இருக்கிறார்கள்.
சரியாக தூங்காவிட்டால் எலும்பு பாதிப்படையும்
அவர்களின் முதுகுத்தண்டுவடம், இடுப்பு, கழுத்து உள்பட எலும்புகள் சார்ந்த உடற்பகுதிகளை பரிசோதனை செய்ததில் 63 சதவீத எலும்புகள் தேய்மானம் அடைந்திருந்தது தெரியவந்துள்ளது.
அத்துடன் நிறைய பேருக்கு எலும்பு அடர்த்தி குறைபாடும் ஏற்பட்டிருக்கிறது. அதேவேளையில் தினமும் 9 மணி நேரம் தூங்கும் பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் அவர்களின் எலும்புகள் ஆரோக்கியமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பால்கோம் குறிப்பிடுகையில், “பெண்கள் தூங்கும் விஷயத்தில் அலட்சியம் கொள்ளக்கூடாது. தூங்கும் நேரத்தில் எந்த சிந்தனைக்கும் இடம்
கொடுக்காமல் ஆழ்ந்து தூங்க வேண்டும். தினமும் நன்றாக தூங்கி எழுந்தால் உடல் அளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்கலாம்” என்கிறார்.
கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் கரு தரிக்காதா
கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் கரு தரிக்காதா
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.
பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.
இன்றைய காலத்தில் தாமதமாக குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் பிறப்புக் கட்டுப்பாட்டு முறையைப்
பின்பற்றுகின்றனர். நிறைய பெண்களுக்கு இதை பயன்படுத்திய பிறகு கர்ப்பம் தரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணம் எழுகிறது என்று கூறியுள்ளனர்.
உண்மையில் பல வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய கருத்தடை சாதனங்கள் (IUD கள்) சில நேரங்களில் இடுப்பு அழற்சி நோயை ஏற்படுத்தி கருவுறாமைக்கு காரணமாகிறது. ஆனால் தற்போதுள்ள கருத்தடை மருந்துகள் அப்படி இருப்பதில்லை.
கருத்தடை மாத்திரை உட்க்கொண்டால் கரு தரிக்காதா
நீங்கள் தற்போது மாத்திரை, கருத்தடை சாதனங்கள் என்று எதை பயன்படுத்தினாலும் தற்காலிகமாக கருவுறுதலை தடுப்பதோடு மீண்டும் கருவுறுதலை நிலைநிறுத்த உதவுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பொதுவாக பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், முதன் 3-4 மாதங்களுக்கு
முறையற்ற மாதவிடாய் சுழற்சியானது ஏற்படும். ஆனால் 4 மாதங்களுக்கு பின்னரும் இந்த நிலை நீடித்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
இருப்பினும் உங்க உடல் இதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். எந்தவொரு ஹார்மோன் சிகிச்சையையும் எடுப்பதற்கு முன் உங்க மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.
கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்
கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்
மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை.
மாறிவரும் வாழ்க்கை முறையில் நம் உணவுப்பழக்கமும் மாறிவிட்டது. நம் தேவைக்கேற்ப உணவின் அளவையும், நேரத்தையும் மாற்றிக்கொண்டு விட்டோம்.
அவை என்ன விளைவை ஏற்படுத்தும் என்றும் யோசிப்பதில்லை. முறையற்ற உணவுப்பழக்கத்தால் உடலில் கொழுப்பின் அளவு அதிகரிக்கலாம், ஹார்மோன்களிலும் ஏற்றத்தாழ்வு ஏற்படலாம்.
கண்டதையும் ம் உணடால் இந்த நோய்கள் வரும்
அதனால் சிறிய இடைவேளைகளில் குறைவான உணவை எடுத்துக் கொள்வது நல்லது. காலை 6 மணிக்கு காபி அல்லது டீ, 8 மணிக்கு இரண்டு இட்லி, 10 மணிக்கு சூப், மதியம் கீரை, கூட்டு, தயிர்
இவற்றுடன் அளவான சாப்பாடு, 4 மணிக்கு கொழுப்பு குறைவான நொறுக்குத்தீனி, மாலை 6 மணிக்கு ஏதாவது திரவ உணவு, இரவு 8 மணிக்கு மிதமான சிற்றுண்டி.
இதுதான் சரியான உணவுப் பழக்கம். சிலர் வாரத்தில் 5 நாட்கள் இப்படி சாப்பிட்டுவிட்டு வார இறுதியில் தங்களுக்கு பிடித்த உணவகங்களுக்குச் சென்று அளவில்லாமல் சாப்பிடுவார்கள்.
இதனால் வார நாட்களில் சோர்வும், மனதில் ஒரு ஏக்கமும் இருக்குமே தவிர உடல் எடை குறையாது. சிறு வயதிலேயே பலருக்கு சர்க்கரை நோய் வர, உணவுப்பழக்கமும் ஒரு காரணம்.
பொதுவாக 30 வயதைக் கடந்துவிட்டாலே உணவு பிரமிடை பின்பற்ற வேண்டும். அதாவது கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்த உணவுகளைக் குறைவாகவும், புரதமும்,
விட்டமின்களும் நிறைந்த உணவுகளை அதிகமாகவும் சாப்பிட வேண்டும். நம் உடலை உள்ளும், புறமும் சுத்தப்படுத்துவதில் தண்ணீருக்கு முக்கிய பங்கு உண்டு.
தினமும் காலை வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதுடன் விடிகிற பொழுது, நல்லதாகவே முடியும். பிறகு குறிப்பிட்ட இடைவேளைகளில் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு அடிக்கடி தண்ணீர்
குடிக்க முடியாது. அல்லது பிடிக்காது. இவர்கள் நீர்மோர், எலுமிச்சை சாறு, தர்பூசணி சாறு போன்றவற்றைக் குடிக்கலாம்.
இப்படி தண்ணீர் குடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும் நாளடைவில் அதுவே பழகிவிடும். ஆரோக்கிய வாழ்வுக்கு அடிப்படை, சரிவிகித உணவுதான் என்பதைப் புரிந்துகொண்டால் உடலுக்கும் வருத்தம் இல்லை, பணத்துக்கும் செலவு இல்லை
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை
தாய்ப்பால் ஊட்டுவது, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது.
கருவுற்ற 24 வாரத்திலேயே தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து பிரசவத்துக்கு, பிறகு தாய்ப்பால் சுரக்கத் தொடங்கும். ஆனால் தாய்ப்பால் ஊட்டுவது
, மார்பகம், மார்பகத்தில் பால் கட்டுவது, குழந்தைக்கு போதுமான அளவு பால் என நிறைய விஷயங்களைப் பற்றி இளம் தாய்மார்களுக்கு தெரியாது. அவர்களுக்கான டிப்ஸ்தான் இந்தப் பதிவு.
குழந்தையின் முகம் தாயின் மார்ப்பை நோக்கி இருந்தலும் குழந்தையின் வாய் காம்பை பற்றி இருந்தால், குழந்தை தாய்ப்பால் குடிக்க உதவியாக இருக்கும். ஒரு கையால் குழந்தையின்
கழுத்தை பிடித்திருக்கவும் இன்னொரு கையால் குழந்தையின் இடுப்புக்கு கீழ் பகுதியைப் பிடித்து தாய்ப்பால் கொடுக்கலாம்.
குழந்தையின் மூக்கு மார்பில் பட்டு அழுத்திவிடாமல், குழந்தையின் தலையை லேசாகத் தூக்கி பால் கொடுத்தல் வேண்டும்.
குழந்தைக்கும் மார்புக்குமான உயரத்தை மெல்லிய தலையணை வைத்து சரி செய்யலாம். குழந்தையின் கீழ் உதடு, நாக்கு, முகவாய் அனைத்தும் தாயின் மார்பகத்தில் இருந்தால் குழந்தை மிக எளிதாகப் பால் கொடுக்க முடியும்.
குழந்தை பால் குடிக்கும்போது, தாயின் மார்புக் காம்பு வலித்தால் தாயின் சுண்டு விரலால் குழந்தை மற்றும் மார்பக காம்பையும் சற்று பிரித்து விடுங்கள். இல்லையெனில் காம்பு வியர்த்து,
ஒட்டி புண் உண்டாகலாம். காம்பு வலிக்கும் போது கவனமாகப் பிரித்து விட்டால் மார்பின் புண் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
முதலில் குழந்தை வேக வேகமாகப் பால் குடிக்கும். பின்னர் அப்படியே தூங்கிவிடும். பிறகு பசி என அழும். இவற்றைத் தடுக்க, குழந்தை தூங்கிவிட்டால் தாய் தன் மார்புக் காம்பை லேசாக இழுத்து விட குழந்தை மீண்டும் தாய்ப்பால் குடிக்க ஆரம்பிக்கும்.
மார்பைக் கடிக்க முயற்சித்தால், குழந்தை வாயிலிருந்து நகர்த்திக் கொள்ள வேண்டும். காம்பைக் கடிக்கத் தொடங்கும் போதெல்லாம், குழந்தையுடன் அன்பாக பேசி,
சிரித்தபடியே முதுகில் செல்லமாக தட்டிக் கொடுத்து கடிக்க கூடாது எனத் தலையை ஆட்டி சொன்னால் குழந்தைக்கு புரியும்
குழந்தை வயிறு நிரம்பி இருந்தால், பசியில்லாமல் இருந்தால் வலுகட்டாயமாகப் பால் கொடுக்க கூடாது. குழந்தைக்கு பல் முளைக்கும் போது லேசான வீக்கம் ஏற்படும்.
இதனால் குழந்தை மார்பைக் கடித்து விடும். இதனால் குழந்தையின் ஈறுகளில் வெள்ளைத் துணி சுற்றிய விரலால் லேசாக அழுத்தி மசாஜ் செய்திட ஈறு வீக்கம் சரியாகிவிடும்.
குழந்தை பால் குடித்தவுடன், குழந்தையைத் தோளில் லேசாக சாய்த்து, முதுகில் தட்டி விட வேண்டும். குழந்தைக்கு ஏப்பம் வந்தப்பின் படுக்க வைக்கலாம். இல்லையெனில் குழந்தை
தாய்ப்பாலை எக்களித்து விடும். தோள்ப்பட்டை ஸ்ட்ராப் கனமானதாக, அகலமானதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மார்பின் எடையை பிராவால் தாங்க முடியும்.
பிராவின் முன் பக்கம் மார்பு பகுதியில் திறப்பு உள்ள பருத்தி ஆடை பிராவை பயன்படுத்தலாம்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் மறக்கக்கூடாதவை
சுத்தமான வெந்நீரால் ஒவ்வொரு முறையும் தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் சுத்தம் செய்யலாம். குளிக்கும் போது வாசனை இல்லாத, தரமான சோப்பை மென்மையாகத் தேய்த்துக் கழுவலாம்.
மார்பக அழகு போய்விடும் என தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பது தவறு. பெண்ணின் கர்ப்பக் காலத்திலே மார்பில் மாற்றங்கள் வந்துவிடும். உங்கள் மார்ப்பை, மற்றவருடன் ஒப்பிட வேண்டாம்
. கருவுற்ற 16 வாரங்களுக்குப் பிறகு மார்பக காம்பு லேசாக வெளிவந்து, அதனை சுற்றி கறுப்பு நிறம் உண்டாகும். மார்பகத்தில், ரத்த நாளங்களில் பச்சை நிற அடையாளமாகத் தெரியும்.
பிரசவ காலத்தில் வெளிர் மஞ்சள் நிறம் அல்லது இளமஞ்சள் நிற திரவம் காம்பு வழியாக வரும். அதைப் பலரும் வழித்துத் தூக்கி எறிந்து விடுவார்கள். அப்படி செய்ய கூடாது. இந்த பாலை
‘கொலஸ்ட்ரம்’ என்பார்கள். இது பிறந்த குழந்தைக்கு மிக மிக நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. விட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் மார்பகத் தோல் வறட்சியாவதுத் தடுக்கப்படும்.
மஞ்சள் காமாலை, சளி, மார்பு புண், காச நோய் இருந்தால் தாய்ப்பால் கொடுப்பதைத் தவிர்க்கலாம். ரத்த ஓட்டம், தாய்ப்பால் மார்பில் கட்டாமல் இருக்க, மார்பக வலி ஏற்படாமல் இருக்க வெந்நீர் ஒத்தடம் நல்லது.
அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்
அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்
எப்போதாவது சாப்பிடுகிற விருந்தாக இருந்த பிரியாணி, இப்போது அடிக்கடி சாப்பிடும் உணவாகிவிட்டது. எங்கேயாவது தென்பட்ட பிரியாணி கடைகள், இப்போது தெருவெங்கும் நிரம்பிக் கிடக்கின்றன.
பிரியாணி… அதன் நிறம், மணம், சுவை பார்த்தவுடனே நாவில் எச்சில் ஊறும் என்பதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிரியாணிக்கு அடிமையாகாதவர்கள் இருக்கவே
முடியாது. பர்த்டே பார்ட்டி முதல், இறப்பு சம்பவம் வரை ‘பிரியாணி விருந்து’ போடுவது நம் கலாச்சாரத்தில் பின்னிப்பிணைந்துவிட்டது. இப்போதெல்லாம் ‘பிரியாணி’ இல்லாத கொண்டாட்டமே இல்லை.
தரமற்ற உணவுகளைச் சாப்பிட்டால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைதான் முதலில் ஏற்படும். அதற்குப் பிரியாணியும் விதிவிலக்கல்ல.
ஆனால், பிரியாணி, இறைச்சியுடன் தொடர்புடையதாக இருப்பதால் கூடுதலாக சில உடல்நலப் பாதிப்புகளும் உண்டாகும்.
பிரியாணி சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் அதை தினசரி, அதிகளவு எடுத்துக்கொள்வதால் சில உடல்நல பிரச்னைகள் ஏற்படுவதையும் நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். பிரியாணியால் ஏற்படும் விளைவுகள் பற்றி பார்ப்போம்
அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படும்
வயிற்று எரிச்சல் : வயிறுபுடைக்க சாப்பிடுதல், சரியாக மென்று சாப்பிடாமல் வேகமாக அவசர கதியில் சாப்பிடுதல் போன்றவற்றால் வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது.
மேலும் சரி வர சமைக்காத, வேகாத உணவுகளை உண்பதும் இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாகிறது.
அடிக்கடி பிரியாணி சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வருமா?
உடல்பருமன் : அதிகமாக சாப்பிடுவதால் சிலருக்கு உடல்பருமன், கொலஸ்ட்ரால், 30 முதல் 35 சதவிகிதம் வரை கல்லீரலில் கொழுப்பு, அடிவயிற்றுவலி, மார்புவலி, சோர்வு, இரைப்பை அழற்சி, நெஞ்செரிச்சல், அமிலத்தன்மை உண்டாதல் போன்ற சில பக்க விளைவுகள் ஏற்படுகிறது.
சர்க்கரை அளவு : நீங்கள் பிரியாணியுடன் இனிப்பு டிஷ் அல்லது ஐஸ்க்ரீம் என்று சாப்பிட்டால் கூடுதல் கார்போஹைட்ரேட் சேரும். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.
இதய நோய் : பிரியாணி தயாரிக்கும் போது அதிகப்படியான எண்ணெய்யை பயன்படுத்தினால், அது உங்களுக்கு இதய நோய் வரக் காரணமாக அமைகிறது.
இதில் சேர்க்கப்படும் உப்பு மற்றும் மசாலா பொருட்கள் அதிகமாகும் போது உடல் நல அபாயத்தை அதிகரிக்கக்கூடும்.
வயிற்றுப் புண் : பிரியாணி சாப்பிடும்போது குளிர்பானங்களைச் சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக உடையவர்களுக்கு வயிற்றுப் புண் போன்ற பிற உடல்நல பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க
மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க
மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால், மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு க்ளாஸ் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது உங்கள் சருமத்தில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.
பருப்புகள்:
பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய அனைத்தும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களைக் கொண்டிருக்கின்றன.
அவை ஆரோக்கியமான கொழுப்புகளாகும். எனவே அது தோல் அடுக்குகளில் தேங்கியுள்ள ஆரோக்கியமற்ற எண்ணெய்களை அகற்றுவத்தால் உங்களை சூடாக வைத்திருக்கும்.
பச்சை காய்கறிகள்:
கீரை, முட்டைக்கோஸ், வெந்தயம், கடுகு போன்றவற்றை தினசரி உணவில் சேர்த்துகொள்ளுங்கள். பின்பு உங்கள் சருமத்தில் ஏற்படும் அதீத மாற்றங்கள் உங்களுக்கே வியப்பை ஏற்படுத்தும்.
பீன்ஸ்:
துத்தநாகம் பெரும்பாலும் முகப்பருவிற்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் சருமத்திற்கு இயற்கையாகவே இது பயனளிக்கிறது.
உருளைக்கிழங்கு மற்றும் கேரட்:
இவற்றில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளதால் வியர்வை சுரப்பிகளை சுருக்கவும், துளை அளவைக் குறைக்கவும், பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்கவும் உதவுகின்றன.
கொழுப்பு, அயோடின், புரோமைடு போன்ற சத்துக்கள் அதிகம் கலந்த உணவுப் பொருள்களை அளவோடு சாப்பிட வேண்டும். மேலும் எண்ணெய் பொருள்கள் , எண்ணெயில் பொறித்த உணவுப் பொருள்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும்.
மலச்சிக்கல் முகப்பருக்கள் வராமல் தடுக்க இதை சாப்பிடுங்க
கொழுப்பு மிகுந்த பொருள்கள் சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நல்லது.
இரவு படுக்கைக்குப் போகும் போது,வெந்நீர் பருக வேண்டும். காலையில் எழுந்ததும்,பல் துலக்கி குளிர்ந்த நீரைப் பருகவும். இவ்வாறு செய்வதால் உடல் உஷ்ணம் குறைந்து முகப்பருவை வராமல் தடுக்கலாம்.
காரம், உப்பு, புளி, மாமிச உணவுகள், மசாலாப் பொருள்கள் முதலியவற்றை அளவோடு சேர்த்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல் முகப்பருக்கள் தோன்ற முக்கியக் காரணம் என்பதால்,
மலச்சிக்கல் வராமல் தடுக்க கொய்யா, கீரைகள், தக்காளி, கேரட், வெண்டைக்காய் முதலியவை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக நார்ச்சத்து அதிகமுள்ள பொருளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
தழும்புகள் மறைய சுலபமான வழிகள்
தழும்புகள் மறைய சுலபமான வழிகள்
ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம்.
ஆடைகளை இறுக்கமாக அணிவதால் ஏற்படும் தழும்புகள், அம்மை தழும்புகள், பிரசவ தழும்புகள், முகப்பரு தழும்புகள், அறுவை சிகிச்சை தழும்புகள், தீக்காயத்தழும்புகள் என
சருமத்தின் மேற்பரப்பில் மறையாத அடையாளமாக ஒரு சிலருக்கு இருக்கலாம். அவற்றை பக்க விளைவுகள் இல்லாமல் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி அகற்ற பல தீர்வுகள் உள்ளன. அவை பற்றிய தொகுப்பு..
தழும்புகள் மறைய சுலபமான வழிகள்
தினமும் முகத்தில் ஆலிவ் எண்ணெய்யை தேய்த்து நீராவியை முகத்தில் சிறிது நேரம் படிய விடலாம். நாளடைவில் முகத்தில் உள்ள துளைகளும், தழும்புகளும் மறையத்தொடங்கும்.
சந்தன பவுடரை ரோஸ்வாட்டர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் பூசி ஒரு மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம்.
பால் அல்லது நீரில் பாதாம் பருப்பை 12 மணிநேரம் ஊறவைத்து அதன் தோலை அகற்றி விட்டு ரோஸ்வாட்டர் விட்டு அரைத்து தழும்புகளின் மீது தடவி வரலாம்
எலுமிச்சை சாற்றில் பஞ்சை நன்றாக ஊறவைத்து மெதுவாக முகத்தில் ஒற்றி எடுக்க வேண்டும்.
தோலில் மேற்பரப்பில் சாறு நன்றாக படியும் வகையில் சிறிது நேரம் உலர வைத்து விட்டு பின்னர்
முகத்தை கழுவிக்கொள்ளலாம். எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, தழும்புகளை மறைய செய்வதுடன் தோலின் இயற்கை நிறத்தை பாதுகாக்கவும் உதவும்.
தீக்காயம் நன்றாக ஆறிய பிறகு இந்த வழிமுறையை பின்பற்ற வேண்டும். எலுமிசை சாற்றை தினமும், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்யவேண்டும். பாதாம் ஆயில்
, ஆலிவ் ஆயில் இவற்றுள் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தியும் தினமும் இருமுறை தடவி மசாஜ் செய்து வரலாம். அதனால் தழும்புகள் படிப்படியாக மறையத்தொடங்கும்.
கசகசா, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் மூன்றையும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து காயம் காரணமாக ஏற்பட்ட தழும்புகள் மீது தேய்த்து குளித்து வரலாம். நாளடைவில் தழும்புகள் மறையும்.
தக்காளியை தோல் உரித்து மிக்சியில் இட்டு அரைத்து எடுத்து தினமும் இரவு நேரத்தில் பிரசவ தழும்புகள் உள்ள பகுதியில் தடவ வேண்டும்.
காலையில் குளிர்ந்த நீரில் கழுவ விடலாம். மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக இந்த முறையை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.
சோற்று கற்றாழையின் மேல் தோலை நீக்கி அதில் உள்ள ஜெல் போன்ற பகுதியை எடுத்து அறுவை சிகிச்சை தழும்புக்கு மேல் நன்றாக தடவவும்.
தினமும் இரவில் தடவி காலை குளிர்ந்த நீரில் கழுவி வந்தால் நாளடைவில் தழும்பு மறைந்து விடும்






