Posted in சினிமா வினோத வீடுப்பு

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – நடிகை – படிக்க இதில் அழுத்துங்க

பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் தன்னிடம் கேட்டதாக நடிகை வரலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி பகீர் புகார்
வரலட்சுமி சரத்குமார்


பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல்

கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ மூலம் நடிகைகள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தமிழில் பல படங்களில் பிசியாக

நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இதுபோன்ற பிரச்சினையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

வரலட்சுமி சரத்குமார்

அதில், ‘’தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம்

கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார்

தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு
Posted in சினிமா

வரி பாக்கி – ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ்

வரி பாக்கி – ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ்

சேவை வரி செலுத்த வேண்டும் என்று ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

வரி பாக்கி – ஜி.வி.பிரகாஷுக்கு நோட்டீஸ்
ஜிவி பிரகாஷ்
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தனது படைப்புகளின் காப்புரிமையை நிரந்தரமாக பட

தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதற்காக, ஒரு கோடியே 84 லட்சம் ரூபாயை சேவை வரியாக செலுத்த வேண்டும் என, ஜி.எஸ்.டி., இணை இயக்குனர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

ஜிவி பிரகாஷ்

இந்த நோட்டீசை எதிர்த்து ஜி.வி.பிரகாஷ் குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த

நீதிபதி அனிதா சுமந்த், மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஜி.எஸ்.டி., துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Posted in சினிமா

என்னை காதலித்தவர்கள் நிறைய பேர் – நடிகை போட்ட குண்டு

என்னை காதலித்தவர்கள் நிறைய பேர் – நடிகை போட்ட குண்டு

ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரைக்கு வந்திருக்கும் வாணி போஜன், லவ் யூ சொன்னவங்க நிறையப்பேர் என்று பேட்டியளித்திருக்கிறார்.

லவ் யூ சொன்னவங்க நிறையப் பேர் – வாணி போஜன்
வாணி போஜன்
தொலைக்காட்சி மூலம் வரவேற்பு பெற்ற வாணி போஜன் ‘ஓ மை கடவுளே’ படம் மூலமாக சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

நடிப்புக்காக ஏர் ஹோஸ்டஸ் வேலையை உதறிவிட்டு வந்தவர். ‘ஓ மை கடவுளே’ படத்தில் அவருடைய கேரக்டருக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் வாணி போஜன் அளித்த பேட்டியில்

கூறியிருப்பதாவது: ‘சினிமாவுக்கு வந்ததுமே 5 படங்கள் நடிக்கிறேன். அடுத்து வைபவ்வுடன் ‘லாக்கப்’, விதார்த்துடன் ஒரு படம் வெளியாகவுள்ளது.

சினிமாவில் எனக்கான வரவேற்பு நன்றாக உள்ளது. ஏராளமான பட வாய்ப்பு வருகிறது. அதில் சில பயோபிக் கதைகள் கூட வந்தது.

பெரிய திரையில் என் பயணத்தை தொடங்கிய பிறகு மிகவும் கவனமாக, தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து

வருகிறேன். அதனால் அவசரம் காண்பிக்காமல் நிதானத்தைக் கடைப்பிடிக்கிறேன்.

வாணி போஜன்

காதல் அனுபவம் பற்றி கேட்கிறார்கள். சின்ன வயதில் ‘லவ் யூ’ சொன்ன பசங்க நிறையப் பேர் இருக்கிறார்கள். எல்லாமே அறியாத பருவத்தில் நடந்தவை என்பதால் சீரியசாக

எடுத்துக்கொள்ளவில்லை. காதலர் தினமும் கொண்டாடியதில்லை. ஆனால் இந்த காதலர் தினம் எனக்கு ஸ்பெஷல். ஏனெனில், நான் நடித்த ‘ஓ மை கடவுளே’ ரிலீசாகியுள்ளது.

இந்த வருடம்தான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்துள்ளேன். அதனால் 2020 காதலர் தினத்தை வாழ்க்கையில்

மறக்கமாட்டேன். எனது சினிமா பயணத்தில் என் பெற்றோர் குறுக்கீடு செய்வதில்லை. நாம் சரியான முடிவுகளை எடுத்தால்,

அவங்க நிச்சயம் சந்தோஷப்படுவாங்க. அவங்களை பெருமைப்படுத்தும் விதமாகவே நான் நடந்து கொள்வேன்’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

என்னை காதலித்தவர்கள்

என்னை காதலித்தவர்கள்

Posted in சினிமா

திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்கள் – கேத்ரின் தெரசா

திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்கள் – கேத்ரின் தெரசா

தமிழில் மெட்ராஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை கேத்ரின் தெரசா, திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துவதாக கூறியிருக்கிறார்.

திருமணம் செய்துக் கொள்ள வற்புறுத்துகிறார்கள் – கேத்ரின் தெரசா
கேத்ரின் தெரசா
தமிழில் மெட்ராஸ், கதக்களி, கடம்பன் உள்ளிட்ட படங்களில்

கதாநாயகியாக நடித்தவர் கேத்ரின் தெரசா. தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“என்னை சந்திக்கிறவர்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். மணமகன் கிடைத்ததும் திருமணம் செய்து

கொள்வேன். பொருத்தமான மணமகனுக்காக காத்து இருக்கிறேன். திருமணத்துக்கு முன்கூட்டியே திட்டமிடுவது எனக்கு பிடிக்காது.

எனது வீட்டிலும் சீக்கிரம் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துகிறார்கள்.

கேத்ரின் தெரசா

காதல் மீது எனக்கு வெறுப்பு இல்லை. அதே நேரம் காதலிக்க ஏற்ற மாதிரியான ஆணை எனது வாழ்க்கையில் இதுவரை

சந்திக்கவில்லை. காதல் என்பது மனதோடு சம்பந்தப்பட்டது. அதை விளக்குவது கஷ்டம். நான் காதல் திருமணம் செய்து கொள்வேனா?

அல்லது பெற்றோர்கள் பார்க்கும் மாப்பிள்ளையை மணப்பேனா? என்பதை இப்போதே சொல்ல முடியாது.

இரண்டு மூன்று கதாநாயகிகளுடன் இணைந்து நடிப்பதில் எனக்கு பிரச்சினை இல்லை. இந்தியில் நிறைய கதாநாயகர்கள்,

கதாநாயகிகள் ஒரே படத்தில் சேர்ந்து நடிக்கின்றனர். அதுபோல் தென்னிந்திய படங்களிலும் நடித்தால் என்ன பிரச்சினை வந்து

விடப்போகிறது. எத்தனை பேர் நடித்தாலும் அவரவருக்குள்ள தனித்துவம் குறைந்து போய் விடாது.”

இவ்வாறு கேத்ரின் தெரசா கூறினார்.

திருமணம் செய்துக் கொள்ள
Posted in சினிமா

அவருடன் மீண்டும் நடிக்க ஆசை – தமன்னா

அவருடன் மீண்டும் நடிக்க ஆசை – தமன்னா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, அவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை என்று ரசிகர்களுக்கு பதிலளித்துள்ளார்.

அவர்களுடன் மீண்டும் நடிக்க ஆசை – தமன்னா
தமன்னா
சமீபத்தில் ஆஸ்க் தமன்னா என்ற ஹேஷ்டேக்கின் மூலம் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்திருக்கிறார். அதில் ஒரு ரசிகர், ‘எங்க தலயுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடிப்பீர்களா?’ என்று

கேட்டிருக்கிறார். அதேபோல் சூர்யா ரசிகர் ஒருவரும் மீண்டும் சூர்யாவுடன் இணைவது எப்போது என்று கேட்டார்.

சூர்யா – அஜித்

அதற்கு பதில் அளிக்கும் விதமாக அஜித்துடன் வீரம் படத்தில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட தமன்னா, ‘ஞாபகம் வருதே ஞாபகம் வருதே…’ என்று பாடி மீண்டும் வாய்ப்பு

வந்தால் யார் வேண்டாம் என்பார்கள் என்பது போன்ற பதிலும் அளித்திருக்கிறார். அதேபோல் ‘சூர்யாவுடன் நடிப்பது என்பது எனது

கனவு’ என குறிப்பிட்டிருக்கிறார். சூர்யாவுடன் ஏற்கனவே அயன் படத்தில் தமன்னா ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

அவருடன் மீண்டும் நடிக்க
Posted in சினிமா

விளையாட்டை தள்ளிப்போட்ட திரிஷா

விளையாட்டை தள்ளிப்போட்ட திரிஷா

திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பரமபதம் விளையாட்டு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.

பரமபதம் விளையாட்டை தள்ளிப்போட்ட திரிஷா
திரிஷா
திரிஷா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தை

திருஞானம் இயக்கி இருக்கிறார். நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

திரிஷா

இப்படம் பிப்ரவரி 28ம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவாக

கிடைத்ததால் தற்போது இப்படத்தை மார்ச் மாதம் மாதம் வெளியிட இருப்பதாக இயக்குனர் திருஞானம் தெரிவித்திருக்கிறார்.

விளையாட்டை தள்ளிப்போட்ட
Posted in சினிமா

காதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை

காதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை

சிம்பு பட நடிகை ஒருவர் காதலித்துதான் திருமணம் செய்து கொள்வேன் என சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

காதல் திருமணம் தான் செய்வேன் – சிம்பு பட நடிகை பேட்டி
கல்யாணி பிரியதர்ஷன், சிம்பு


பிரபல டைரக்டர் பிரியதர்ஷன் – நடிகை லிசியின் மகளான கல்யாணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஹலோ என்ற தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழில்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ‘ஹீரோ’ படத்தில் நடித்தார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்

உருவாகி வரும் மாநாடு படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

கல்யாணி பிரியதர்ஷன்

இவர் அளித்த சமீபத்திய பேட்டியில், எனது வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்க, ‘மணமகன் தேவை’ என்று பத்திரிகைகளில்

விளம்பரம் தேவைப்படாது. நான் காதலித்துதான் திருமணம் செய்துகொள்வேன். காதலிக்கும் விஷயத்தில் நான் அதிக

சினிமாத்தனத்தை எதிர்பார்க்கிறேன். எனக்கான ஆளைபார்க்கும்போது என் இதயத்தில் தீப்பொறி பறக்கும் என்று நான் நம்புகிறேன் என கூறினார்.

காதல் திருமணம் தான்
Posted in சினிமா

தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை

தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் ‘தலைவி’ படத்தில் பிரபல நடிகை ஒருவர் இணைந்திருக்கிறார்.

தலைவி படத்தில் இணைந்த பிரபல நடிகை
தலைவி படத்தில் கங்கனா ரனாவத்


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி ’தலைவி’ என்ற திரைப்படம் உருவாகி

வருகிறது. ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி

ஆகிய 3 மொழிகளில் தயாராகும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

கங்கனா ரனாவத், அரவிந்த்சாமி ஆகியோரின் முதல் தோற்றங்களை படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டனர்.

அரவிந்த்சாமியின் தோற்றம் எம்.ஜி.ஆர் போலவே இருப்பதாக பாராட்டுகள் கிடைத்தன. ஜெயலலிதாவின் பிறந்தநாளை

முன்னிட்டு தலைவி படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டனர். இது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

பூர்ணா

இந்நிலையில், இப்படத்தில் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக அவர் அறிவித்திருக்கிறார். பூர்ணா நடிப்பது சசிகலாவின் கதாபாத்திரம் என்று கூறப்படுகிறது.

Posted in சினிமா

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் அளித்த பேட்டியில் தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என்று கூறியுள்ளார்.

தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை – ராஷ்மிகா
ராஷ்மிகா


நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த ஒரு வருட காலத்தில் கிடுகிடுவென முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார். தெலுங்கு மற்றும் தமிழில் பிசியாக வலம் வரும் இவர்,

தற்போது தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடிக்கிறார். விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் கூட இவர் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்று சொல்லப்பட்ட

நிலையில் அந்த வாய்ப்பு திடீரென பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனனுக்கு சென்று விட்டது.

தற்போது தெலுங்கில் பீஷ்மா என்கிற படத்தில் நடித்துள்ள ராஷ்மிகா, அந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில்

கலந்து கொண்டு வருகிறார். அப்போது அவரிடம் உங்களது நண்பர், பாய்பிரண்ட் மற்றும் உங்களுக்கு கணவராக

வரப்போகிறவர் என எந்தெந்த நடிகர்களை கூறுவீர்கள் என்கிற கேள்வி முன்வைக்கப்பட்டது..

ராஷ்மிகா

அதில் தெலுங்கு நடிகர் நிதின் எனக்கு நண்பராக இருக்க வேண்டும் எனக் கூறியவர், எனக்கு பாய் பிரண்டாக இருக்க

வேண்டும் என நான் விரும்புவது நடிகர் விஜய்யை தான் என கூறியுள்ளார் ராஷ்மிகா. ஆனால் தனக்கு கணவனாக

வரப்போகும் நபர் என எந்த நடிகரையும் குறிப்பிட்டுச் சொல்லாதவர், தமிழ் நடிகரை திருமணம் செய்ய ஆசை என கூறியுள்ளார்.

தமிழ் நடிகரை திருமணம்
தமிழ் நடிகரை திருமணம்
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்

என்னை ஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்

பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான தர்ஷன், என்னை ஒழிக்கமுயன்றார் என்று நடிகை சனம் ஷெட்டி மீது புகார் கூறியிருக்கிறார்.

என்னைஒழிக்க முயன்றார் – சனம் ஷெட்டி மீது தர்ஷன் புகார்
சனம் ஷெட்டி – தர்ஷன்
தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை திருமணம் செய்ய மறுக்கிறார் எனவும்

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள்

காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார்.

இதனை சனம் ஷெட்டி மறுத்தார். தர்ஷனும், நானும் இரண்டரை வருடம் கணவன்-மனைவி போலவே

வாழ்ந்தோம். திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டோம். ஆனால் அவர் மாறி விட்டார். முன்னாள் காதலருடன் நான் இருந்ததாக கூறி இருப்பதில் உண்மை இல்லை என்றார்.

இந்த நிலையில் சனம் ஷெட்டியை பிரிந்த காரணத்தை தர்ஷன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சனம் ஷெட்டி – தர்ஷன்

“சில உறவுகள் தோல்வி அடைவதற்கு என்ன காரணமாக இருந்தாலும், அது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவருக்கு அல்லது இருவருக்கு மகிழ்ச்சி இல்லை என்றால்

பிரச்சினை சிக்கலாவதற்குள் சுமுகமாக பிரிவதுதான் தீர்வாக இருக்கும். மகிழ்ச்சியில்லாத உறவை தொடர்வது சரியல்ல.

அந்த நபர் மீது மரியாதை வைத்திருந்தேன். ஆனால் எங்கள் உறவு ஆரோக்கியமானதாக இல்லை. அவர் என்னை ஒழிக்க முயன்றார். நான் காயப்பட்டேன். அவரது

குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. எனது எதிர்காலம் மீது முன்பை விட அதிக கவனம் செலுத்தி வருகிறேன். எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி.”

இவ்வாறு தர்ஷன் கூறியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

ரசிகர்களை பதற வைத்த அந்த நடிகை

நடிகை சிம்ரன், தான் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரசிகர்களை பதற வைத்த சிம்ரன்
சிம்ரன்
நேருக்கு நேர், அவள் வருவாளா, நட்புக்காக, துள்ளாத

மனமும் துள்ளும், பம்மல் கே.சம்பந்தம் என்று பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகை சிம்ரன், புகழின் உச்சியில்

இருந்த போதே 2003ம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துக் கொண்டு திரையுலகை விட்டு விலகியே இருந்தார்.

அதன் பின்னர், நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தீவிரமாக திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயனின் சீமராஜா திரைப்படத்தில் வில்லியாக மிரட்டிய சிம்ரனுக்கு ரஜினியுடன் ஜோடியாக நடித்த பேட்ட

படம் வரவேற்பை கொடுத்தது. மீண்டும் பழைய சிம்ரனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவரது ரசிகர்களும் கொண்டாடினார்கள்.

சிம்ரன்

இந்நிலையில், அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் படத்தின் படப்பிடிப்பின் போது

எடுக்கப்பட்டது என்று கூறி நெத்தி, கை, கால்களில் எல்லாம் ரத்த காயங்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை

வெளியிட்டு ரசிகர்களை பதற வைத்து விட்டார். இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உண்மையிலேயே

நடிகை சிம்ரனுக்கு அடிப்பட்டுவிட்டதோ என்று கலங்கி, ஆறுதல் சொல்லி வருகிறார்கள். பின்னர், இது படப்பிடிப்பு

தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று தெரிந்த பிறகு தான் நிம்மதி அடைந்தனர்.

ரசிகர்களை பதற வைத்த
ரசிகர்களை பதற வைத்த
https://www.youtube.com/watch?v=Y6Uc68tIwx4
Posted in சினிமா

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் கியாரா அத்வானியின் சமீபத்திய கவர்ச்சி போட்டோஷூட்டுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டோனி பட நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு
கியாரா அத்வானி


கிரிக்கெட் வீரர் டோனியின் வாழ்க்கை படத்தில் நடித்தவர் கியாரா அத்வானி. அடுத்து மெஷின், லஸ்ட் ஸ்டோரிஸ் போன்ற இந்தி படங்களில் நடித்ததுடன் தமிழ், தெலுங்கில்

உருவான பரத் எனும் நான் படத்தில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்திருந்தார். முன்னணி ஹீரோயின்கள் ஒருபக்கம்

திரைப்படத்தில் நடித்தாலும் வெப் தொடரிலும் நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் கியாராவும் வெப் தொடரில் நடிக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கியாரா நடத்திய போட்டோஷூட் சர்ச்சையாகி இருக்கிறது. அரை நிர்வாண தோற்றத்தில்

நிற்கும் அவர் தோட்டத்தில் இருக்கும் ஒரு செடியின் இலையை கொண்டு தனது உடலை இலைமறை காய்போல் மறைத்தும் காட்டியும் போஸ் தந்திருக்கிறார்.

கியாரா அத்வானி

இதுபற்றி அவர் கூறும்போது, ‘இது கலையின் ஒரு பகுதி. இப்படத்தில் ஆபாசம் கிடையாது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் ஒரு சிலர், ‘இந்திய கலாச்சாரத்தையும், மதிப்பையும் குலைக்கும் வகையில் கியாரா போஸ் அளித்திருக்கிறார்’ என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு

Posted in சினிமா

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வரதட்சணை கொடுமையால் சினிமா பாடகி தற்கொலை
சுஷ்மிதா


கன்னட சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்தவர் சுஷ்மிதா ராஜன் (26). எம்.பி.ஏ பட்டதாரியான இவர் கன்னட திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடியுள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சாப்ட்வேர் என்ஜினியரான சரத்குமார் என்பவரை சுஷ்மிதா திருமணம்

செய்து கொண்டார். இருவரும் குமாரசாமி லே அவுட்டில் வசித்து வந்தனர்.

இவர்களுடன் சரத்குமாரின் பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு

வந்தது. குறிப்பாக சரத் மற்றும் அவரது குடும்பத்தினர் தரப்பில் வரதட்சணை கேட்டு அதிகளவு

கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால் மனதளவிலும், உடல் அளவிலும் சுஷ்மிதா மிகவும் பாதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கணவனிடம் கோபித்துக் கொண்டு,

அன்னபூர் னேஸ்வரிநகர் மாலகாலாவில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று தூக்கம் வருவதாக

கூறிவிட்டு அறைக்கு சென்றவர் அதிகாலை வெகுநேரமாகியும் வெளியே வரவில்லை. வழக்கமாக

சுஷ்மிதா தாமதமாகத்தான் எழுந்திருப்பார் என்று நினைத்து தாய் மற்றும் சகோதரன் இருந்துவிட்டனர்.

பின்னர் தங்கள் மொபைல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அதில் சுஷ்மிதா அனுப்பியிருந்த

தற்கொலை கடிதம் இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கதவை உடைத்து பார்த்தபோது, சுஷ்மிதா தூக்கில்

பிணமாக தொங்கிக்கொண்டு இருந்தார். இது குறித்து தாய் மற்றும் சகோதரரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள்

தங்கள் வாட்ஸ் அப்பிற்கு வந்த தற்கொலை கடிதம் தொடர்பான மெசேஜை எடுத்து காட்டினர்.

கணவருடன் சுஷ்மிதா

அதில் சுஷ்மிதா கூறியிருப்பதாவது:- அம்மா என்னை மன்னித்துவிடு. நான் செய்த தவறுக்கு நானே தண்டனை அனுபவித்து விட்டேன். எனது கணவர் அவரது பெரியம்மா

வைதேகியின் பேச்சை கேட்டு தொடர்ந்து வரதட்சணை தொல்லை கொடுத்து வந்தார். இதற்கு கணவனின் சகோதரி

கீதாவும் காரணம். அனை வரும் ஒன்று சேர்ந்து என்னை மனதளவிலும், உடல் அளவிலும் வேதனைப்படுத்தி விட்டனர்.

பல முறை நான் அவர்களின் காலில் விழுந்தும் என்னை விடவில்லை. இந்த கொடுமை தாங்காமல் அவர்கள் வீட்டில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தேன். ஆனால்

முடியவில்லை. பிறந்த வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டால் தான், முறையான ஆதாரங்கள் கிடைக்கும் என்று கருதி நான் நமது வீட்டில் தற்கொலை செய்து

கொண்டேன். இந்த விபரீத முடிவால் நான் உனது அன்பை பெற முடியாதவளாகி விட்டேன்.

என்னுடைய இந்த தற்கொலைக்கு காரணமான அவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள். அவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுங்கள். அப்போதுதான் எனது ஆத்மா

சாந்தியடையும். இறுதியாக உங்களை சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னை நமது சொந்த ஊரிலேயே

புதைத்து விடுங்கள். இல்லையென்றால் எரித்து விடுங்கள். ஆனால் என்னை வேதனைபடுத்தியவர்களை சும்மா விட்டுவிடாதீர்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

சுஷ்மிதாவின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கணவன் சரத், அவரது பெரியம்மா வைதேகி, சகோதரி கீதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். போலீசார்

அவர்களை தேடியபோது, 3 பேரும் மாயமாகி விட்டனர். தனிப்படை போலீசார் அவர்களை தேடிவருகின்றனர்.

வரதட்சணை கொடுமையால் சினிமா
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in சினிமா

சைவத்துக்கு மாறிய ரகுல் பிரீத் சிங்

சைவத்துக்கு மாறிய ரகுல் பிரீத் சிங்

இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், சைவத்துக்கு மாறியுள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சைவத்துக்கு மாறிய ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்


என்ஜிகே படத்தை அடுத்து இந்தியன்-2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் இந்தியிலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், தீவிர அசைவ உணவு

பிரியையான ரகுல் பிரீத் சிங் திடீரென்று முழு சைவத்திற்கு தான் மாறியிருப்பதாக ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

அதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், நான் திடீரென்றுதான் சைவத்துக்கு மாறினேன். அந்த

மாற்றத்திற்கு பிறகு எனக்குள் ஆற்றல் அதிகரித்திருப்பதாக உணர்கிறேன். மேலும், மும்பையில் படப்பிடிப்பு

நடக்கும்போது வீட்டில் இருந்தே பழங்களை எடுத்து செல்கிறேன்.

ரகுல் பிரீத் சிங்

அதேசமயம் வெளிநாடுகளுக்கு படப்பிடிப்புக்கு செல்லும்போது அரிசியுடன் காய்கறி, பருப்பை கலந்து

சமைக்கிறார்கள். ஆனால் நான் அதில் சுவைக்காக சைவ நெய்யை கலந்து சாப்பிடுகிறேன் என்று ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.

சைவத்துக்கு மாறிய ரகுல்
https://www.youtube.com/watch?v=Qhjx0fB5mZA
Posted in சினிமா

இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்

இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்

தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜ் கபூர் அவர்களின் மகன் இன்று மரணமடைந்துள்ளார்.

இயக்குனர் ராஜ்கபூரின் மகன் மரணம்
ராஜ் கபூரின் மகன்


தாலாட்டு கேட்குதம்மா, அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராஜ் கபூர். தொடர்ந்து தமிழ் படங்களிலும் சீரியலிலும் நடித்து

வருகிறார். இவருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும் ஷாருக் கபூர் என்ற மகனும் ஷமீமா, ஷானியா என இரண்டு மகள்களும் உள்ளனர்.

ராஜ் கபூரின் மகன்

ஷாருக் கபூர் சில மாதங்களுக்கு புட் பாய்சன் காரணமாக உடல் நலம் சரியில்லாமல் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

அவருக்கு உடல்நலம் சரியானால் மெக்காவுக்கு வருவதாக குடும்பத்தினர் வேண்டி இருந்தனர். அதன்படி மெக்காவுக்கு சென்றனர். ஆனால் அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை

காரணமாக ஷாருக்குக்கு மீண்டும் உடல் நிலை மோசமாகி இன்று காலை மரணம் அடைந்துள்ளார். அவருக்கு வயது 23.

இயக்குனர் ராஜ்கபூரின் மகன்
Posted in சினிமா

டப்பிங் யூனியன் தேர்தல் – ராதாரவி அணி வெற்றி

டப்பிங் யூனியன் தேர்தல் – ராதாரவி அணி வெற்றி

திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.

டப்பிங் யூனியன் தேர்தல் – ராதாரவி அணி வெற்றி
ராதாரவி
திரைப்பட பின்னணி குரல் கலைஞர்கள் சங்க தேர்தல் பிப்.,15 ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி, மாலை 5 மணி

வரை நடைபெற்றது. மொத்தம் உள்ள 1360 உறுப்பினர்களில் 931 பேர் மட்டுமே ஓட்டளித்தனர். அதனை தொடர்ந்து மாலை

7.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஓட்டு எண்ணிக்கை முடிந்து நேற்று வெற்றி பெற்றவர்கள் விபரம்

அறிவிக்கப்பட்டது. இதில் ராதாரவியின் அணியை சேர்ந்த அனைவரும் வெற்றி பெற்றனர்.

முன்னதாக தலைவர் பதவிக்கு ராதா ரவியும் பின்னணி பாடகி சின்மயியும் போட்டியிட்டனர். ஆனால், சின்மயியின்

வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ராதா ரவி போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் ராதாரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

ராதாரவி, சின்மயி

அப்போது அவர் கூறியதாவது: ’டப்பிங் யூனியன் தலைவராக போட்டியின்றி நான் தேர்வு செய்யப்பட்டு உள்ளேன்.

யூனியன் நலனுக்காக, பல நலத்திட்ட உதவிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். பாடகரும், டப்பிங் யூனியன்

கலைஞருமான பாடகி சின்மயி, மன்னிப்பு கேட்டால் மீண்டும் சங்கத்தில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

எங்கள் மீது தவறான குற்றச்சாட்டைத் தெரிவித்ததால், சின்மயி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளோம்.

சின்மயி விளம்பரப் பிரியராக இருக்கும் காரணத்தால், தொடர்ந்து அவதூறு பேசி வருகிறார்’. இவ்வாறு அவர் கூறினார்.

டப்பிங் யூனியன் தேர்தல்
https://www.youtube.com/watch?v=qdROL0BmCwU
Posted in சினிமா

அந்த நடிகை மீது கோபத்தில் இருக்கும் சமந்தா

அந்த நடிகை மீது கோபத்தில் இருக்கும் சமந்தா

தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக இருக்கும் நடிகை சமந்தா, காற்று வெளியிடை, சைக்கோ படங்களில் நடித்த அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கிறார்.

அதிதி ராவ் மீது கோபத்தில் இருக்கும் சமந்தா
அதிதி ராவ் – சமந்தா


தெலுங்கில் பிசியான நடிகையாகி விட்ட சமந்தா, டைரக்டர் அஜய் பூபதி இயக்கத்தில் சர்வானந்திற்கு ஜோடியாக நடிக்க

ஒப்பந்தமாகி இருந்தார். இப்படத்திற்கு மகா சமுத்திரம் என பெயரிடப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின்

படப்பிடிப்பு துவங்க உள்ளதாகவும், இந்த ஆண்டு இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் கூறி இருந்தனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் சமந்தாவை நீக்கி விட்டு, அவருக்கு பதில் அதிதி ராவை ஒப்பந்தம்

செய்துள்ளார்கள். ஏற்கனவே இந்த படத்திற்காக அதிதி ராவிடம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அவர் சமீபத்தில் தான்

சம்மதம் சொன்னாராம். அதனால் கடைசி நிமிடத்தில் சமந்தாவை மாற்றி விட்டு, அதிதி ராவை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

அதிதி ராவ் – சமந்தா

ஏற்கனவே ஜானு படத்தில் சர்வானந்துடன் நடித்துள்ளதாலும், மகா சமுத்திரம் படத்தின் கதை மிகவும்

பிடித்திருந்ததாலும் இதில் நடிக்க சமந்தா மிகுந்த ஆர்வமாக இருந்ததாகவும் அதிதிராவ் குறுக்கே புகுந்து படத்தை

கைப்பற்றியதால் அவர் மீது கடும் கோபத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

அந்த நடிகை மீது கோபத்தில்
https://www.youtube.com/watch?v=qdROL0BmCwU
Posted in சினிமா

கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்

கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது.

கிரிக்கெட் வீரருடன் அனுஷ்கா டேட்டிங்
அனுஷ்கா ஷெட்டி
பாகுபலி ஜோடியான பிரபாஸ், அனுஷ்கா இருவரும்

காதலிக்கின்றனர் திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த 2 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் கிசுகிசு உலவி

வருகிறது. நாங்கள் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் பலமுறை கூறிவிட்டாலும் ரசிகர்கள் அதை கண்டு கொள்ளவில்லை.

அவர்கள் ஒருபடிமேலே சென்று இருவர் பெயரையும் இணைத்து. ‘பிரனுஷக்கா’ என குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்களை

அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய தகவல் பரவி வருகிறது. அதாவது அனுஷ்கா வட இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட்

வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங்கில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது.

அனுஷ்கா ஷெட்டி

அவரைத்தான் அனுஷ்கா மணக்க இருப்பதாகவும் திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர் ஒருவரை

நடிகை மணப்பதென்பது ஏற்கனவே நடந்திருக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த காதல் கிசுகிசு உண்மையாக

இருக்குமா என்று கேட்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் அனுஷ்கா இதுபற்றி பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றார்.

https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in சினிமா

காதலர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி

காதலர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி

நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, காதலர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

காதலர்களுக்கு அட்வைஸ் சொன்ன விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி


நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு

பேசியுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழா காதலர் தினத்தில் நடந்ததால், காதலர் தின வாழ்த்துக்களை

தெரிவித்து கொண்ட விஜய் சேதுபதி, லவ் யூ என்று முத்தங்களையும் கொடுத்திருந்தார்.

அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, போஸ் வெங்கட் மிகவும் நல்ல மனிதர். சிலரின் முகங்களை

பார்த்தாலே தெரிந்து விடும். அவர்கள் எப்படிபட்ட மனதை கொண்டவர்கள் என்று, அப்படி நான் அவர் முகத்தை

பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறினார்.விஜய் சேதுபதி

மேலும் போசை மெட்டி ஒலி நாடகத்தில் இருந்து நான் பார்த்து ரசித்து வருகிறேன் என கூறினார். விஜய் சேதுபதி

பேசி முடிக்கும் போது காதலர் தின வாழ்த்துக்களை கூறிவிட்டு சட்டென்று ஜாக்கிரதையாக காதலியுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்தார்.

கன்னி மாடம் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சயா தேவி மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

விஜய் சேதுபதி
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in சினிமா

மன்னிப்பு கேட்க முடியாது – ராதாரவிக்கு சின்மயி பதிலடி

மன்னிப்பு கேட்க முடியாது – ராதாரவிக்கு சின்மயி பதிலடி

டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

மன்னிப்பு கேட்க முடியாது – ராதாரவிக்கு சின்மயி பதிலடி
ராதாரவி, சின்மயி


டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ராதாரவி தலைவராக இருந்து

வருகிறார். சங்க நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் முடிவதால் விருகம்பாக்கத்தில் உள்ள திருமன மண்டபத்தில்

தேர்தல் நடந்தது. ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

ராதாரவி, சின்மயி

தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்து பேட்டியளித்த ராதாரவி ‘சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும்

சேர்த்துக்கொள்வோம்’ என்று கூறினார். ராதாரவியின் இந்த கருத்துக்கு சின்மயி ‘ராதாரவி காலில் விழுந்தோ அல்லது

வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்வேன்’ என்று கூறினார்

மன்னிப்பு கேட்க முடியாது
https://www.youtube.com/watch?v=L1DQcwTbkmo