Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
வாடா பீட்டர் வெளியே – வனிதா கணவன் மனைவி கிழிப்பு video
வாடா பீட்டர் வெளியே – வனிதா கணவன் மனைவி கிழிப்பு video
சபாஷ் .இப்படிதான் தைரியமா பேசணும் எலிசபெத் அம்மா.அந்த வனிதாவ கிழிச்சி தொங்க விடணும்
இந்த அக்காவுக்கு நீதி உடனடியாக கிடைக்கனும் 10 மாதம்
தாமதமானால் வனிதா பீட்டர் பாலுக்கு 4 வது பிள்ளைய
பெத்துடுவா
அஜித் பட நடிகைக்கு கொரோனா
அஜித் பட நடிகைக்கு கொரோனா
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில், அஜித்துடன் நடித்த நடிகைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அஜித் பட நடிகைக்கு கொரோனா
அஜித்
நடிகர், நடிகைகள் பலர் கொரோனாவில் சிக்கி வருகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும்
அவரது மகள் ஆரத்யா ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.
பிரபல சின்னத்திரை நடிகை நவ்யா சாமி, நடிகர் ரவிகிருஷ்ணா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிரபல நடிகை ராச்சல் ஒயிட்டுக்கும் கொரோனா
தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தில் சிறிய வேடத்தில் நடித்து இருந்தார். இம்ரான் ஹாஸ்மி, கங்கனா ரணாவத் ஆகியோர் நடித்துள்ள உங்க்லி
படத்திலும் நடித்து இருக்கிறார். வங்காள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
ராச்சல் ஒயிட்
பிரபல இந்தி இயக்குனர் சஜித் நதியத்வாலா மீது மீ டூ புகார் சொல்லி பரபரப்பாக பேசப்பட்டார். ராச்சல் ஒயிட் தனது டுவிட்டர் பக்கத்தில், “எனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு
உள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்
அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா
அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா
செய்தியாளர்களை சந்தித்த நடிகை வனிதா, அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக பேட்டியளித்துள்ளார்.
அவர்கள் இருவரால் மன உளைச்சலுக்கு ஆளானேன் – வனிதா
வனிதா
நடிகை வனிதா விஜயகுமார் கடந்த மாதம் 27-ம் தேதி பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலின் முதல்
மனைவி எலிசபெத் ஹெலன், பீட்டர் பால் முறையாக விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக போலீசில் புகாரளித்திருந்தார்.
இந்நிலையில், நடிகை வனிதா, சூர்யா தேவி என்பவர் தொடர்ந்து தன் மீது அவதூறு பேசி வீடியோ வெளியிட்டு வருவதாக போரூர்
காவல் நிலையத்தில் சமீபத்தில் புகாரளித்திருந்தார். தற்போது மீண்டும் சூர்யா தேவி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோர் மீது போலீசில் புகாரளித்துள்ளார்.
ரவிந்திரன் – சூர்யா தேவி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “என்னைப் பற்றி சூர்யா தேவி என்பவர் யூடியூப் சேனலில் ஆபாசமாகவும் தவறாகவும்
பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். பணம் சம்பாதிக்க இது போல செய்து வருகிறார். போரூர் போலீசில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தேன். சூர்யா தேவி மற்றும் படத்தயாரிப்பாளர் ரவீந்திரன் சேர்ந்து அவதூறு பரப்பி வருகின்றனர்.
இதனால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. சினிமா தொடர்புடையவர்கள் என்னுடைய விஷயத்தில் தலையிடாதீர்கள். ஆதரவு இல்லாத பெண்களை குறிவைத்து அந்த 2 பேரும் அவதூறு
பரப்புகிறார்கள். இந்த விஷயத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்குப்பதிவு செய்ய வேண்டும்’ என்றார்.

உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!
உழைப்பின் வலி உணர்ந்தவர்” ரஜினிகாந்தை நெகிழ்ந்து பாராட்டிய சேரன்!
இயக்குநர்-நடிகர் சேரன் 1997-ஆம் ஆண்டில் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டபோது நெகிச்சியுடன், சூப்பர் ஸ்டாரை பாராட்டியுள்ளார்.
ரஜினிகாந்தின் சூப்பர்ஹிட் திரைப்படமான அருணாசலத்தின் வெற்றி விழா சந்திப்பின் போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.
அப்போது, இயக்குநர் சேரன் மேடைக்கு அழைக்கப்பட்டு, ‘பொற்காலம்’ போன்ற ஒரு படத்தை இயக்கியதற்காக பாராட்டப்பட்டார்.
ரசிகர் ஒருவரின் இந்த ட்விட்டர் இடுகையைப் பார்த்த இயக்குனர் சேரன், “மறக்க முடியாத நெகிழ்வான தருணம். இன்றுவரை அதே ப்ரியம் வைத்து பேசும் மிகச்சிறந்த மனிதநேயம் கொண்டவர்
சூப்பர்ஸ்டார்.. நல்லவற்றை தேடிப்பிடித்து பாராட்டுவதில் அவருக்கு நிகர் அவரே..C2H முதல் டிவிடி வெளியிட்டபோதும் முதலில் மனமாற
பாராட்டியதும் அவரே. உழைப்பின் வலி உணர்ந்தவர். லவ்யூசார்..” என நெகிழ்ச்சியுடன் புகழ்ந்துள்ளார்.
மேலும் “அவரோடு இணைந்து படம் எடுக்க முடியவில்லையே தவிர.. நேற்றும் இன்றும் என்றும் அவருடனான நட்பும் மரியாதையும்
அப்படியேதான் இருக்கிறது.. சிங்கப்பூரில் அவர் சிகிச்சைக்காக இருந்தபோது மீண்டும் நல்ல ஆரோக்கியத்துடன் வரவேண்டும் என
என்னையறியாமல் என்னுள்ளம் வேண்டியது.. காரணம் அந்த மனிதத்தன்மை..” என்று சேரன் பதிவிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடி கட்டு, பாண்டவர் பூமி, ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, ஆடும் கூத்து போன்ற
வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். தமிழ் சினிமாவில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு பல குடும்பச் சித்திரங்களை
கொடுத்ததில் அவருக்கு பெரிய பங்கு உண்டு. மேலும், சொல்ல மறந்த கதை, யுத்தம் செய், சென்னையில் ஒரு நாள் என
கதாநாயகனாக கிட்டத்தட்ட 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அவர் நடிப்பில் கடைசியாக ‘ராஜாவுக்கு செக்’ என்ற திரைப்படம்
இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதற்கிடையில், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக்பாஸ்-3′ நிகழ்ச்சியிலும் பங்குபெற்றது குறிப்பிடத்தக்க

தந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்
தந்தைக்கு கவி மாலை சூட்டிய ஆதவன் நா. முத்துக்குமார்
நா. முத்துக்குமார், தமிழ் சினிமா இழந்துவிட்ட ஒரு நிகரற்ற எழுத்தாளர் அவர். காஞ்சிபுரத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த
முத்துக்குமார் சிறு வயதில் தாயை இழந்தவர். எழுத்தின் மீது கொண்ட காதலால் பிரபல இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான திரு
. பாலுமகேந்திரா அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார். சத்யராஜ் அவர்களின் நடிப்பில் வெளியான மலபார் போலீஸ் என்ற
திரைப்படத்தின் மூலம் இவர் ஒரு பாடலாசிரியராக அறிமுகமானார்.
உன் பேர் சொல்ல ஆசை தான், எங்கள் வீட்டில் எல்லா நாலும் கார்த்திகை தொடங்கி எந்திரன் 2.0 படத்தில் ரம்யமாய் ஒலித்த
புல்லினங்காள் என்ற பாடல் வரை 200கும் அதிகமான பாடல்களை அவர் எழுதியுள்ளார். 2013ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான
தங்க மீன்கள் திரைப்படத்தில் வெளியான “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற பாடலின் மூலம் இவருக்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
2014ம் ஆண்டு சைவம் என்ற படத்தின் வந்த “அழகே, அழகே” என்ற பாடலுக்கும் இவர் தேசிய விருது பெற்றார். மஞ்சள் காமாலை
நோயினால் பல நாட்கள் அவதிப்பட்டு வந்த முத்துக்குமார் மாரடைப்பு காரணமாக 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி
உயிரிழந்தார். இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் பிறந்தநாளையொட்டி நேற்று அவரின் மகன் ஆதவன் தனது தந்தைக்கு எழுதிய கவிதை பின்வருமாறு…
என் தந்தை.
என் தந்தை பிறந்த இடம் காஞ்சிபுரம்,
அவர் என் தந்தையாக கிடைத்தது எனது வரம்.
என் தந்தையின் பாடல்கள் சொக்கதங்கம்,
அவர் எங்கள் காட்டில் சிங்கம்.
என் தந்தையின் வரிகள் முத்து,
அவர்தான் எங்களின் சொத்து.
என் தந்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்,
அவர் இல்லை என்று நெஞ்சம் சில நேரம் வலிக்கும்.
என் தந்தைக்கு என் அம்மா ஒரு அழகிய ரோஜா,
எப்பொழுதும் அவர் பாடல்களில் அவர் தான் ராஜா.
எனக்கும் என் தங்கைக்கும் நீங்கள் தான் அப்பா,
இன்னும் கொஞ்சம் நாள் உயிரோடு இருந்தால் என்ன தப்பா.
-மழலை கவிஞர் ஆதவன் முத்துக்குமார்…

நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்
கணவர் அபிஷேக் பச்சனை தொடர்ந்து அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமாக ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள்
ஆரத்யா பச்சனுக்கும் தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் கொரோனா வைரஸ்
ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள்
மும்பை :
பிரபல பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொரோனா தொற்றில் இருந்து விரைவில்
குணமடைய வேண்டும் என திரைப்பிரபலங்கள் பலரும் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அபிஷேக் பச்சனின் மனைவி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள்
வெளியாகி உள்ளன. அதன்படி அவர்கள் இருவருக்கும் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.
அதேபோல் அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சனுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.
சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள்
சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர் மக்கள்
பீகாரில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டி அவரை பெருமைப்படுத்தி உள்ளனர்.
சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம்
ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வாரிசு
நடிகர்கள் கொடுத்த மன அழுத்தத்தினால் நடந்துள்ளது என்று சர்ச்சைகள் எழுந்துள்ளன. தற்கொலைக்கான உண்மை காரணத்தை அறிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பீகாரில் அமைந்துள்ள சுஷாந்தின் சொந்த ஊரான புர்னியாவில் இருக்கும் ஒரு சாலைக்கு சுஷாந்த் சிங்கின் பெயர் சூட்டப்பட்டு
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுபானி முதல் மட்டா சவுக் வரை இருக்கும் சாலைக்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் சாலை என
பெயரிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு அமைந்துள்ள போர்டு நிறுவனத்தின் ரவுண்டானாவிற்கு சுஷாந்த் சிங் ராஜ்புட் ரவுண்டானா என பெயர் மாற்றப்பட்டு உள்ளது.
சமீபத்தில் பெயர் மாற்றப்பட்ட சாலையை திறந்து வைத்துள்ளனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்
அனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அனுஷ்கா சர்மாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்கள்
அனுஷ்கா சர்மா
பிரபல இந்தி நடிகையும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா படங்களை தயாரித்தும் வருகிறார். என்.எச்.19, பில்லாயூரி, பாரி ஆகிய இந்தி படங்கள் அவரது தயாரிப்பில் வந்தன. தற்போது வெப் தொடர்கள் தயாரிக்க தொடங்கி உள்ளார்.
இந்நிலையில் இவர் பிரபல நாளிதழ் ஒன்றுக்கு போட்டோஷூட் எடுத்துள்ளார். இதன் புகைப்படங்களை அனுஷ்கா சர்மா தனது
சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். கவர்ச்சியான இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி
வருகிறது. மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட லைக்ஸ்கள் குவிந்து வருகிறது
அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்
அமிதாப்பச்சன் மகன் ,அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா – அதிர்ச்சியில் ரசிகர்கள்
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேபச்சனுக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
அமிதாப்பை தொடர்ந்து அபிஷேக்பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி
அமிதாப்புடன் அபிஷேக்பச்சன்
இந்தியாவில் கொரோனா தொற்று தினமும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கொரோனா தொற்றில் மகாராஷ்டிரா மாநிலம்
முதலிடம் வகித்து வருகிறது. அங்கு இரண்டரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இதற்கிடையே, பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவர்
மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, அமிதாப்பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியி, நான் கொரோனா பரிசோதனை செய்தேன் ..
மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன் .. மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளது .. குடும்பத்தினர் மற்றும் ஊழியர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர், அதற்கான
முடிவுகளுக்காக காத்திருக்கிறோம் .. கடந்த 10 நாட்களில் எனக்கு நெருக்கமாக இருந்த அனைவருமே தயவு செய்து பரிசோதனை
செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் அமிதாப்பச்சனை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக்பச்சன், தனக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்
படம் நடிக்கும் விஜய் மகன் – குஷியில் ரசிகர்கள்
விஜய் மகன் சஞ்சய் அறிமுகமாகும் படத்தை பிரிட்டோ தயாரிக்க இருப்பதாக வந்த செய்திக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விஜய் மகன் படத்தை தயாரிப்பது குறித்து பிரிட்டோ விளக்கம்
சஞ்ஜய் – விஜய்
விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அவரது நெருங்கிய உறவினரான பிரிட்டோ தயாரித்த நிலையில் விஜய் மகன் சஞ்சய்
அறிமுகமாகும் படத்தையும் பிரிட்டோ தான் தயாரிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இதுகுறித்து
ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த பிரிட்டோ விளக்கம் அளித்து உள்ளார்.
விஜய் மகன் சஞ்சய்க்கு இயக்குனராக தான் அதிக ஆர்வம் உள்ளது. அவருக்கு ஹீரோவாக நடிக்கும் ஆர்வம் இருக்கிறதா இல்லையா
என்பது கூட எனக்கு தெரியாது. தற்போது அவர் கனடாவில் படித்து வருகிறார். படித்து முடித்த பிறகு அவர் எந்த துறையை
தேர்ந்தெடுக்கிறார் என்பதை அதன் பின் தான் முடிவு செய்ய முடியும்.
விஜயுடன் தயாரிப்பாளர் பிரிட்டோ
சஞ்சய் படத்தை நான் தயாரிக்கவிருப்பதாக் வெளிவந்த செய்தி முற்றிலும் வதந்தி. இதுகுறித்து நான் விஜய்யிடம் பேசினதே இல்லை’ என்று கூறினார்.

எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா
எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா
தமிழில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கும் ஓவியா எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
எவரையும் பின் தொடர விருப்பம் இல்லை – ஓவியா
ஓவியா
களவாணி படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவார் நடிகை ஓவியா.
அதன்பின் சில படங்களில் நடித்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
ஓவியா டுவிட்
நடிகை ஓவியாவிற்கு இணையத்தில் தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர்.
ட்விட்டரில் ரசிகர்களின் கேள்விக்கு ஓவியா பதிலளிப்பது வழக்கமான
ஒன்று. இந்நிலையில், ரசிகர் ஒருவர் ஏன் டுவிட்டரில் எவரை பின் தொடரவில்லை
என்று கேட்டார். அதற்கு ஓவியா மற்றவர்களின் வாழ்க்கையில் பின் தொடர விருப்பம் இல்லை என்று கூறியுள்ளார்

குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்
குண்டு பூசணிக்காய் என்று நடிகையை கிண்டல் கிண்டல் செய்யம் ரசிகர்கள் -வைரலாகும் படம்
பிரபல நடிகையாக இருக்கும் சாக்ஷி அகர்வால், என்னை குண்டு
பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள் என்று கூறி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
குண்டு பூசணிக்காய் என்று கிண்டல் செய்வார்கள்… வைரலாகும் சாக்ஷியின் புகைப்படம்,சாக்ஷி அகர்வால்
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால்.
இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில்
நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு
ரசிகர்களை கவர்ந்தார். தற்போது சாக்ஷி சின்ட்ரெல்லா, டெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
நடிகை வனிதா, உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்.
என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள் – வனிதா
வனிதா
நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்ற பின் சமீபத்தில் பீட்டர்
பால் என்பவரை 3-வது திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும்
உள்ளனர். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. முதல் மனைவி போலீசிலும் புகார் அளித்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏற்கனவே திருமணமாகி சட்டப்படி விவாகரத்து பெறாதவரை வனிதா எப்படி திருமணம் செய்தார் என்று நடிகை லட்சுமி
ராமகிருஷ்ணன் விமர்சித்தார். நடிகை குட்டி பத்மினியும் குறை கூறினார். விமர்சனங்களுக்கு பதில் அளித்து வனிதா டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
வனிதா – பீட்டர் பால்
“உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாமல் என்னை விமர்சித்து சந்தோஷப்படுகிறார்கள். முதலில் உண்மையை
தெரிந்து கொள்ளுங்கள். ஒருவரை துன்புறுத்துவதும் மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவதும் சட்டத்துக்கு எதிரானது.
இணைய தளத்தில் துன்புறுத்துவது ஒருவரின் வாழ்க்கையை பாதிக்கும். நீங்கள் செய்வதை நான் கடுமையாக எடுத்து இருந்தால்
மன அழுத்தத்தில் விரக்தியாகி என்னையே துன்புறுத்தி இருக்கலாம். அது உங்களை கொலைகாரர்கள் ஆக்கி விடும். இதை
யோசியுங்கள். நான் உண்மையில் குற்றம் செய்து இருந்தால் சட்டம் என்னை சும்மா விடாது. கடவுள் மீது நம்பிக்கை உள்ளது. நான்
கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பதில் சொன்னால் போதும். நான் தவறு செய்யவில்லை.”
இவ்வாறு வனிதா கூறியுள்ளார்.

நான் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி video
நான் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி video
தான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் சார் தான் என நடிகர் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார்.
நான் பேரும், புகழோடும் வாழக் காரணம் கே.பாலசந்தர் – ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
ரஜினிகாந்த், கே.பாலசந்தர்
மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோவில் பேசியுள்ளார். அதில் அவர்
கூறியுள்ளதாவது: இன்று என் குருவான கே.பி சார் அவர்களுடைய 90வது பிறந்தநாள். கே.பாலசந்தர் சார் என்னை
அறிமுகப்படுத்தலேனா கூட நான் நடிகனாயிருப்பேன். கன்னட மொழியில் ஒரு வில்லன் கதாபாத்திரத்திலோ, சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலோ நடித்து சிறிய நடிகராக இருந்திருப்பேன்.
ஆண்டவன் புண்ணியத்தில் மிகப்பெரிய பேரும் புகழோட, நல்ல வசதியோடு வாழ்வதற்கு காரணமே, கே. பாலசந்தர் சார் அவர்கள். என்னை அவர் தேர்ந்தெடுத்து எனக்குப் பெயர் வைத்து, என்னுடைய
மைனஸ் எல்லாவற்றையும் நீக்கி, என்னிடமுள்ள பிளஸ்ஸான விஷயங்களை எனக்கே காட்டிக்கொடுத்து. என்னை ஒரு முழு
நடிகனாக்கி, நாலு படங்களிலும் எனக்கு நல்ல கதாபாத்திரங்கள் கொடுத்து, ஒரு நட்சத்திரமா தான் என்னைத் தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
என் வாழ்க்கையில் என்னுடைய அப்பா, அம்மா, என்னை வளர்த்து ஆளாக்கிய என் அண்ணன், பாலசந்தர் ஆகிய நால்வரும் எனக்கு தெய்வங்கள். அவர் எனக்கு மட்டுமல்ல, எத்தனையோ நடிகர்,
நடிகைகளுக்கு வாழ்க்கை கொடுத்துள்ளார். அவரால் வாழ்ந்தவர்கள் பலர். தன் வாழ்நாளில் படம் இயக்கி, தயாரித்து
சின்னத்திரையிலும் ஈடுபட்டு லட்சக்கணக்கானோருக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்தார்.
எத்தனையோ இயக்குனர்களிடம் வேலை செய்துள்ளேன், ஆனால் கே.பி சார் செட்டுக்குள் வந்தால் நடிகர்கள், தொழில்நுட்பக்
கலைஞர்களை விடுங்கள், செட்டின் மேலே நிற்கும் லைட்மேன் கூட எழுந்து நின்று வணக்கம் சொல்வார். அந்த மாதிரி ஒரு கம்பீரம்
கே.பி சாரிடம் இருந்தது. இதை வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை. மகனாக, தந்தையாக, கணவனாக, இயக்குநராக,
எல்லாவற்றையும் கச்சிதமாக செய்தார். இன்னும் நிறைய நாள்கள் அவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்.
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு கமல் உதவி செய்து வருகிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொன்னம்பலத்திற்கு உதவிய கமல்
பொன்னம்பலம்
ஏராளமான திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பொன்னம்பலம், சிறுநீரக கோளாறு காரணமாக அடையாறில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்கு கமல்ஹாசன் உதவி வருகிறார். மற்றும் பொன்னம்பலம் அவர்களிடம் தினமும் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்து வருகிறார்.
பொன்னம்பலம்
இந்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரின் இரண்டு குழந்தைகளின் படிப்பு செலவினை கமல்ஹாசன்
ஏற்றுக்கொண்டுள்ளார். பொன்னம்பலம் அவர்கள் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும்.

ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
நடிகையும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான ரோஜா, ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
ஆம்புலன்ஸ் ஓட்டி சர்ச்சையில் சிக்கிய நடிகை ரோஜா
நடிகை ரோஜா ஆம்புலன்ஸ் ஓட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம்
தமிழ் திரையுலகில் செம்பருத்தி படத்தில் அறிமுகமாகி 1990-களில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் ரோஜா. சூரியன், உழைப்பாளி, அதிரடி படை, வீரா, ஆயுத பூஜை, உன்னிடத்தில்
என்னை கொடுத்தேன் உள்பட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
டைரக்டர் ஆர்.கே.செல்வமணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் ஆந்திர அரசியலில் குதித்தார்.
தற்போது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஆந்திராவில் அனைத்து மருத்துவ
வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவையை மாநில முதல்- மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தொடங்கி உள்ளார். நகரி தொகுதிக்கு
உட்பட்ட கிராமங்களுக்கான ஆம்புலன்ஸ்களை ஒப்படைக்கும் நிகழ்ச்சி புத்தூரில் நடந்தது. இதில் நடிகை ரோஜா பங்கேற்றார்.
அப்போது திடீரென்று ஆம்புலன்சில் ஏறி இருக்கையில் உட்கார்ந்து ஆம்புலன்சை ஓட்ட தொடங்கினார். நகரி வரை 20 கிலோ மீட்டர்
தூரம் ஆம்புலன்சை ஓட்டி சென்றார். ரோஜாவின் இந்த செயலை விமர்சித்த தெலுங்கு தேசம் கட்சி “ரோஜா சாகசம் செய்வதற்காக
ஆம்புலன்சை ஓட்டி உள்ளார். அவசர கால ஊர்தியை ஓட்ட அவருக்கு லைசென்ஸ் உள்ளதா?” என்று கேள்வி எழுப்பி உள்ளது.

இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
மண்டியா அருகே நடிகர் சுஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
32 வயது இளம் நடிகர் தூக்கிட்டு தற்கொலை…. திரையுலகினர் அதிர்ச்சி
சுஷில்குமார்
கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகராக அறியப்பட்டவர் சுஷில்குமார்(வயது 32). இவர் கன்னடத்தில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலம் ஆனவர்.
இவர் சலகா என்ற கன்னட படத்தில் நடித்து உள்ளார். அந்த படம் இன்னும் வெளியாகவில்லை. மேலும் பெங்களூருவில் ஒரு
உடற்பயிற்சி கூடத்தில் சுஷில்குமார் பணியாற்றி வந்தார். தற்போது கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால்
மண்டியா டவுனில் உள்ள தனது வீட்டில் சுஷில்குமார், குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மண்டியா புறநகர் இந்துவாலு பகுதியில் உள்ள தனது நண்பரின் பண்ணை வீட்டிற்கு சுஷில்குமார் சென்று
இருந்தார். அங்கு ஒரு அறையில் திடீரென சுஷில்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து
அதிர்ச்சி அடைந்த நண்பர் உடனடியாக மண்டியா புறநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
சுஷில்குமார்
கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு எதுவும் இல்லாததால் வருமானம் குறைந்து சுஷில்குமார் தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். ஆனாலும் அவர்
தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து மண்டியா புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னட பிரபல நடிகர் சிரஞ்சீவி சர்ஜா உடல்நலக்குறைவால் இறந்த நிலையில், வளர்ந்து வரும்
கன்னட நடிகரான சுஷில்குமார் தற்கொலை செய்து கொண்டது கன்னட திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்
50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங், 50 சதவீதம் சம்பளத்தை குறைக்க முன்வந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
50 சதவீதம் சம்பளத்தை குறைத்த ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
கொரோனாவால் திரையுலகம் முடங்கி உள்ளது. தயாரிப்பாளர்கள் நஷ்டத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இந்த இழப்பை ஈடுகட்ட நடிகர் நடிகைகள் சம்பளத்தை குறைக்க வேண்டும் என்ற
கோரிக்கைகள் எழுந்துள்ளன. நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்து வரும் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய 3 படங்களின்
சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக ஏற்கனவே அறிவித்தார்.
ஹரிஷ் கல்யாண், “அடுத்து நான் நடிக்க உள்ள படங்களில் எனது வருமானத்தில் ஒரு பகுதியை விட்டுத்தருவேன்” என்று கூறினார். நடிகர் நாசர் கபடதாரி படத்தில் 15 சதவீதம் சம்பளத்தை
குறைத்துள்ளார். நடிகர்கள் உதயா, அருள்தாஸ், மகத், நடிகை ஆர்த்தி, ஆகியோரும் சம்பளத்தை குறைத்துள்ளனர்.
ரகுல் பிரீத் சிங்
இந்த நிலையில் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, என்.ஜி.கே, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ள ரகுல்பிரீத் சிங் தயாரிப்பாளர்களுக்கு உதவும் வகையில் சம்பளத்தை பாதியாக குறைக்க தயாராகி
உள்ளார். ரகுல்பிரீத் சிங் ஒரு படத்தில் நடிக்க ரூ.1.5 கோடி வாங்கி வந்ததாகவும் இனிமேல் ரூ.75 லட்சத்துக்கு நடிக்க முன்வந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ரகுல் பிரீத் சிங்
தற்போது கமல்ஹாசனின் இந்தியன்2, சிவகார்த்திகேயனுடன் அயலான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை
அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை சமிக்ஷா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்ஷா
கணவருடன் நடிகை சமிக்ஷா
2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்ஷா. இப்படத்தை தொடர்ந்து
மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.
இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சமிக்ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.
கணவருடன் நடிகை சமிக்ஷா
2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.

அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
அஜித் படம் வெற்றி அடைந்ததை அடுத்து நடிகர் விஜய் தன்னை வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
அஜித் படத்தின் வெற்றிக்கு விருந்து கொடுத்த விஜய்
அஜித், வெங்கட் பிரபு, விஜய்
கொரோனா ஊரடங்கில் மலேசியா வாசுதேவனின் மகன் யுகேந்திரனுடன் இயக்குனர் வெங்கட் பிரபு நேரலையில்
கலந்துரையாடினார். அப்போது விஜய் பற்றி வெங்கட் பிரபு கூறியதாவது: ‘சிவகாசி’ படத்தில் விஜய்யுடன் சிறிய
கதாபாத்திரத்தில் நடித்தேன். ‘மங்காத்தா’ படம் முடிந்தவுடன், வீட்டிற்கு அழைத்து ஒரு பெரிய விருந்து கொடுத்தார். ஏனென்றால் அவருக்கு மங்காத்தா படம் அவ்வளவு பிடித்திருந்தது.
அப்போது நிறைய பேசினோம். கதை தயாரானவுடன் எப்போது வேண்டுமானாலும் வாருங்கள் என்று சொன்னார்.
சீக்கிரமே அவரை கவரும் வகையில் ஒரு நல்ல கதையுடன் போய் சந்திக்க காத்திருக்கிறேன். அவரோடு விரைவில் வித்தியாசமான ஒரு படம் பண்ணனும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.







