Category: எதிரி செய்திகள் எதிரி நியூஸ்
எதிரி செய்திகள் எதிரி நியூஸ்,எதிரி இன்றைய செய்திகள் ,
யாவும் உடனுக்குடன் இங்கே பிரசுரிக்க படுகிறது பார்த்து மகிழுங்கள்
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வௌியான அறிவிப்பு
2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக தற்போது சுமார் 95 பில்லியன் ரூபா செலவிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனவரி மாதம் முதல் இந்த பணம் மேலும் 7 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கும் எனவும், ஏப்ரல் மாதம் முதல் 10,000 ரூபா சம்பள அதிகரிப்புக்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதன் பின்னர் அரசாங்கம் 14 பில்லியன் ரூபாவை மேலதிகமாக செலவிடவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பணம் அச்சிடுவதும் கடன் வாங்குவதும் நிறுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில், செலவு மேலாண்மை மூலம் மட்டுமே குறித்த தொகையை சேமிக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இஸ்ரேல் போர் வண்டிகள் அழிப்பு இஸ்ரேல் காசா கடும் போர்
இஸ்ரேல் போர் வண்டிகள் அழிப்பு இஸ்ரேல் காசா கடும் போர்
இஸ்ரேல் போர் வண்டிகள் காசா மத்திய பகுதியில் வழிமறித்து அழிப்பு.
இஸ்ரேல் காசா படைகளுக்கு இடையில் கடும் போர் ,வெடித்து
பறக்கும் ஏவுகணைகள் ,தீவிரம் பெற்ற மோதல் ,
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் ஏவுகணை தாக்குதல் அலறும் எதிரி கோட்டைகள்
ஈரான் இராணுவம் ஏவுகணை தாக்குதல் .
ஆரம்பம் ,ஈரான் இந்த திடீர் ஏவுகணை போர்
அரங்க திறப்பால் அலறும் எதிரி கோட்டைகள் ,
எவ்வேளையும் போர் வெடிக்கலாம் .
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் காசா போர் படை அறிவிப்பு
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் காசா போர் படை அறிவிப்பு
இஸ்ரேல் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தல் காசா போர் படை அறிவிப்பு .
அதி உச்சம் பெறும் இஸ்ரேல் காசா போர் ,இரு தரப்பும் கடும் மோதல் ,
வெடித்து பாயும் ஏவுகணைகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை பரப்பி மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து ஜனாதிபதி எடை போட்டு வருகிறார். சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டும் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர் என்றார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68 ஆவது கட்டமாக,அனுராதபுரம் ஸ்ரீ துடுகெமுனு மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (17) இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்பாடசாலையில் நடனம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம் மற்றும் அரங்கேற்றங்களுக்குத் தேவையான ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியுதவியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
மோசடியில் ஈடுபட்ட வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு சிறை தண்டனை, மோசடியில் ஈடுபட்ட இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு வரப்பிரசாதம்!
மோசடி கும்பலொன்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட ஏராளமான மருந்துகளில் மோசடி செய்துள்ளனர்.மனித இம்யூனோகுளோபுலின் என்ற மருந்துடன் நீர் கலக்கப்பட்டுள்ளது.ஆளும் தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திருடும்போது கூட ஜனாதிபதி இந்த அமைச்சர்களை வெளியேற்றாது அவர்களை பாதுகாத்துக் கொண்டே வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மருந்துப்பொருள் மோசடி செய்த சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது ஜனாதிபதி,மொட்டுக் கட்சியின் 113 பேரை பயன்படுத்தி சுகாதார அமைச்சரைப் பாதுகாத்தாலும்,சமீபத்தில், வியட்நாமில் கூடிய விலையில் கோவிட் பரிசோதனை உபகரண தொகுதிகளை
கொள்வனவு செய்யும் விடயத்தில் நிதி முறைகேடு காரணமாக,22 இலட்சம் அமெரிக்க டொலர் திருடிய குற்றத்துக்காக வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு 18
வருடங்களும்,அமைச்சருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 29 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.வியட்நாமில் இவ்வாறு நடக்கும்
போது, இந்நாட்டில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சரை பாதுகாக்க ஜனாதிபதி முதல் ராஜபக்ச,மொட்டுக் குழுவின் கையாட்கள் சகலரும் கை தூக்கி உதவினார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வியட்நாம் இலங்கையைப் போல் வங்குரோத்தல்லாத வேகமாக அபிவிருத்தி கண்டு வரும் நாடு.இந்த அபிவிருத்தியடைந்து வரும் நாட்டிலும் திருட்டுக்கு தண்டனை வழங்கப்படும் போது,வங்குரோத்தான நாட்டில்,மக்கள் மீது பெரும் வரிச்சுமை சுமத்தப்பட்டு,திருட்டு,கடத்தல் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின்
கல்வி,சுகாதாரம்,விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளில் குடிநீர் துண்டிக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பஞ்சமில்லை.
ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்
நாட்டில் 18% VAT வரியை அதிகரித்து ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்கள் செல்வது போலவே 250 மில்லியன் ரூபா செலவழித்து செங்கடலைப் பாதுகாக்க கடற்படையை அனுப்பினாலும்,
பாடசாலைகளால் குடிநீர் கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும்,வியட்நாமில் தண்டிக்கப்பட்டதைப் போல,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வெளிப்படத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறை கட்டமைப்பு மூலம் திருடர்கள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
கமிஷன் இல்லாமல் நேர்மையாகவும் தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்யும் திறன் தனக்கு இருப்பதாகவும்,இதற்காக தம்மை சுற்றி பெரும் நன்கொடையாளர்கள் இருக்கின்றனர் என்றும்,இங்கு பணம் எதுவும் தனக்கு கிடைக்கப்பெறுவதில்லை என்றும், உரிய உபகரணங்களை மாத்திரமே தாம் பெற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையும் மக்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு முன்வைக்கப்படும்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளை முன்வைக்காமல் தொடர்புடைய தகவல்களை அணுக ஒரு நேரடித் திட்டம் வகுக்கப்படும். ஒவ்வொரு கொள்முதல் திட்டத்திற்கும் பல்தரப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
அமெரிக்காவின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு
அமெரிக்காவின் விசேட பிரதிநிதியுடன் ஜனாதிபதி சந்திப்பு
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் காலநிலை மாற்றம்
தொடர்பான அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஜோன் கெரிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவும் இதன் போது உடனிருந்தார்
ஐ.எம்.எப். அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
ஐ.எம்.எப். அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு
சுவிற்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் சர்வதேச நாணய
நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஷ்டலினா ஜோர்ஜியாவா மற்றும் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கீதா கோபிநாத் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்னாயக்கவும் உடனிருந்தார்
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப்படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்தும் கைது
செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத்
துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால்
தமிழ்நாடு மீனவர்களும் அவர்களது மீன்பிடிப் படகுகளும் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவது குறித்து தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 13.01.2024 அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 மீனவர்களையும், அவர்களின் விசைப்படகையும் இலங்கைக் கடற்படையினர் 15.01.2024 அன்று சிறைபிடித்தனர் என்றும்,
மற்றொரு சம்பவத்தில், ராமநாதபுரம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 18 மீனவர்களையும், அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் 16.01.2024 அன்று
இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர் என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று நாள்களில் இலங்கை கடற்படையினர் தமிழ்நாடு மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்துள்ளனர் என்று தெரிவித்துள்ள முதலமைச்சர்,
இத்தகைய கைது நடவடிக்கைகள் மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக நம்பியுள்ள மீனவ சமூதாயத்தினரிடையே பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கியுள்ளது என்று தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருப்பதாகத் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை
தடுத்திட இலங்கை அரசுக்கு வலியுறுத்திட வேண்டுமென்றும் இலங்கை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
காலநிலை செழுமைத் திட்டங்கள் என்பது காலநிலைப் பாதுகாப்பற்ற உலகில் செழிப்பிற்கான ஒரு மூலோபாயம் மாத்திரமல்ல, பூஜ்ஜிய காபன் உலகில் வெற்றியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சி நிரலாகவும் மாறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
சுவிட்சர்லாந்தில் காலநிலை பாதிப்புக்குள்ளாக்கக் கூடியோரின் மன்றம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் 16 ஆம் திகதி உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
அண்மையில் டுபாயில் நடைபெற்ற COP-28 மாநாட்டில், காலநிலை பாதிப்புக்குள்ளாகும் வளர்ந்து வரும் 20 நாடுகள் தங்களின் காலநிலை மீள்திறன் திட்டங்களை வெளியிட்டன.
காலநிலை மாற்றத்தின் தாக்கங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் நிதி நிலை தொடர்ந்து அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, உலகப் பொருளாதார நிலை மற்றும் அதிகரித்து வரும் கடன் சுமை காரணமாக நிதி வசதிகள் அதிகம் தேவைப்படும் நாடுகளுக்கு அதனை அடைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
எனவே, காலநிலை செழுமைத் திட்டத்தில் பங்குதாரர்களாகி, நியாயமான, நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கு அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு ஆதரவளிக்குமாறு முன்னேற்றகரமான பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளிடமும், தனியார் துறையினர், சர்வதேச நிதிச் சமூகம் ஆகியவற்றிடமும் ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
இங்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,
காலநிலை பாதிப்புக்குள்ளாகக் கூடியோரின் மன்றம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு தற்போதைய பொதுச் செயலாளராகப் பதவியேற்றுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நஷீத் எனக்கு அழைப்பு விடுத்தார்.அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
காலநிலை செயற்பாடுகள் மூலம் வளமான முன்னேற்றத்தை அடைவதற்கான எங்கள் கூட்டு வேண்டுகோள், புத்தாக்க தீர்வுகள், நிலையான உலகத்திற்கான நோக்காக உள்ளது.
காலநிலை மாற்றங்களில் ஏற்படும் சிக்கலான ஏற்றத்தாழ்வுகளை நாம் அனைவரும் அறிவோம். உலகளாவிய காபன் வெளியேற்றத்திற்கு சிறிதளவு கூட பங்களிக்காத உலகளாவிய தெற்கில் பாதிக்கப்படக்கூடிய வளர்ந்து வரும் நாடுகள், காலநிலை மாற்றத்தின் மோசமான தாக்கங்களை எதிர்கொள்கின்றன.
இதைக் கருத்தில் கொண்டு, சமநிலையை மீட்டெடுப்பதற்கான பலதரப்பு முயற்சிகளின் அர்ப்பணிப்பு அதிகமாக உள்ள போதும் அதன் பெறுபேறுகள் குறைவாக உள்ளன.
டுபாயில் நடைபெற்ற COP28 மாநாட்டில், காலநிலை நீதி தொடர்பான பிரச்சினையின் அடிப்படையில் தான் இலங்கையினால் வறண்ட வலய முன்முயற்சி முன்வைக்கப்பட்டது. இந்த முன்முயற்சியானது வறண்ட வலயத்தில் முக்கியமான காலநிலை வளங்களை நிலைநிறுத்துவதில் தனியார் முதலீட்டிற்கு ஒரு உத்வேகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் நமது காடுகள், சதுப்புநிலங்கள், சமுத்திரங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்கள் என்பன உள்ளடங்குகின்றன. அத்தகைய முதலீட்டுக்கான வழிகளை அடையாளம் காண, வளர்ந்து வரும் நாடுகள் வலுவான திட்டங்களையும் மூலதனத்தையும் வழங்குவதற்காக முதலீட்டாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய திட்டங்களை அடையாளம் காண வேண்டும்.
காலநிலை செழுமைத் திட்டத்தை உருவாக்குவதற்கு இலங்கை சவாலான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் ஊடாக நமது காலநிலை மற்றும் பல்லுயிர் இலக்குகளை அடைய முடிவதோடு இலங்கையர்களுக்கு நிலையான செழிப்பை அடைய முடியும்.
இலங்கை காலநிலை திட்டத்தின் ஊடாக தொழில்துறை மற்றும் விநியோக வலயமைப்பை பாதுகாப்பதற்கான வளங்களை அடிப்படையாக கொண்ட பிரிவுகள் உள்ளிட்ட தீர்மானமிக்க துறைகளின் முதலீடுகளுக்கு அவசியமான திட்டங்களை உருவாக்கி வருகின்றது.
திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொள்ள ஒத்துழைப்பு தாருங்கள்
காலநிலை செழுமைத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட இலக்குகளை நோக்கிய தலையீடுகள், தேசிய சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அதேநேரம் 2025 ஆம் ஆண்டுக்குள் வலுசக்தி ஏற்றுமதியாளராக மாறுவதோடு புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலம் உள்நாட்டு வலுசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
மேலும், காலநிலை செழுமைத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட முதலீட்டு வாய்ப்புக்களைப் பூர்த்தி செய்ததன் பின்னர், இலங்கையின் வலுசக்தி உற்பத்தியை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதோடு, 2040 ஆம் ஆண்டளவில் உள்நாட்டு தேவை 100% ஐ விடவும் அதிகரிக்க கூடுமென கருதப்படுகிறது. அத்தோடு, திட்டங்களில் குறைந்த கார்பன்-செறிவும் அதிக உற்பத்தியும் எதிர்பார்க்கப்படுவதோடு விவசாய திட்டங்கள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின் திட்டங்கள் ஆகியவை அடங்கும். இதனூடாக கிராமிய பொருளாதாரம் மற்றும் பெறுமதியான உள்நாட்டு உற்பத்தி வலையமைப்பொன்றை இணைக்கும் முதலீடுகள் உறுதி செய்யப்படும்.
மேற்படி காலநிலை செழுமைத் திட்டத்தின் முதலீட்டு வாய்ப்புக்களை அடைந்துகொள்ள நாம் அர்பணிப்புடன் செயற்படுவதோடு, நிதி வசதிகளை ஏற்படுத்தி முதலீடு செய்யக்கூடிய திட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரல்களை தயாரித்தல் உள்ளிட்ட தீர்மானமிக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
எவ்வாறாயினும், எதிர்பார்ப்புடன் கூடிய இந்த திட்டத்தின் வாயிலாக தொழில் உருவாக்கத்திற்கான பயிற்சிகள், திறன், டிஜிட்டல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளுக்கான முதலீடுகளை கோருகிறோம். நிலையானதும் காலநிலை பாதுகாப்புக்கான மாற்றத்திற்குள் அதிகளவான பிரதிபலன்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இலங்கைக்கு இதனூடாக கிடைக்கும்.
பாதிக்கப்படக்கூடிய 20 தரப்புக்களின் குழுவினால் முன்மொழியப்பட்டிருக்கும் (V20) காலநிலை செழுமைத் திட்டம், பாதுகாப்பற்ற உலகில் செழிப்புடன் வாழ்வதற்கான மூலோபாய வழிமுறையாக மாத்திரமின்றி, பூஜ்ஜிய காபன் உலகின் வெற்றியாளர்களாக எம்மை அடையாளப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலாகும்.
எமது செல்வந்த மற்றும் பிரதான பொருளாதார உரிமையாளர்கள் வசமாக காணப்படும் வளங்கள் எம்மிடத்தில் இல்லை. காலநிலை அனர்த்தங்களின் தாக்கம் காரணமாக அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் நிதி வாய்ப்புக்கள் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. அதனால் உலக பொருளாதார பின்னணியில் உயர்வடைந்து செல்லும் கடன் சுமைக்கு மத்தியில் அதிகமான நிதி தேவை உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.
அதன்படி காலநிலை செழுமைத் திட்டங்களின் பங்குதாரர்களாக முன்வந்து, நிலையானதும், செழிப்பானதுமான எதிர்காலத்தை உருவாக்கிகொள்ள எமக்கு உதவுமாறு அபிவிருத்தி பங்குதாரர்கள், தனியார் துறையினர் மற்றும் சர்வதேச நிதிச் சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறோம். என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கியது சரித்திர தீர்ப்பு எம்.ஏ.சுமந்திரன்
பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கியது சரித்திர தீர்ப்பு எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்துக்கு பொதுமக்களின் காணி விடயம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றிற்காக எம்.ஏ. சுமந்திரன், புதன்கிழமை (17) வந்திருந்தார். அவரிம், மேற்படி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அது தவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்துள்ளது.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. மனுதாரர்களில் ஒருவரான ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி வாதாடி இருக்கின்றேன் .
பொது மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கியது சரித்திர தீர்ப்பு எம்.ஏ.சுமந்திரன்
ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம், வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன.
விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில் ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கொடுத்த பொது மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என மேலும் தெரிவித்தார்.
ஹவுதி விமானங்கள் தாக்குதல் செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்
ஹவுதி விமானங்கள் தாக்குதல் செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்
ஹவுதி தாக்குதல் விமானங்கள் தாக்குதல் ,செங்கடலில் எரியும் சரக்கு கப்பல்
முடக்க படும் கப்பல் போக்குவரத்து ,தடுக்க முடியா திணறும் சர்வதேசம் ,
தாக்குதலை தீவிர படுத்தும் ஏமன் படைகள்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இஸ்ரேல் காசா கடும் போர் இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட்
இஸ்ரேல் காசா கடும் போர் இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
செங்கடலில் பதற்றம் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த நன்மை
செங்கடலில் பதற்றம் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த நன்மை
செங்கடல் வழியாக செல்லும் வணிகக் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்துவதால், உலகச் சந்தை கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரிக்கைகள் வந்துகொண்டு இருக்கின்றன.
எனினும், இதன்மூலம் இலங்கைக்கு ஒரு நன்மை கிடைத்துள்ளது என்றே கூறலாம்.
அதாவது, தெற்கு செங்கடலில் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில், கப்பல்கள் வசதியான போக்குவரத்துப் புள்ளியாக இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை கண்டறிந்ததால், சமீபத்திய வாரங்களில் இலங்கைக்கு வரும் கொள்கலன் அளவுகளில் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.
செங்கடலில் பதற்றம் கொழும்பு துறைமுகத்திற்கு கிடைத்த நன்மை
ஏமன் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நவம்பர் முதல் செங்கடலில் கப்பல்களைத் தாக்கியுள்ளனர், இது உலகின் கப்பல் போக்குவரத்தில் சுமார் 12% பகுதி ஆகும்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக, சில கப்பல் நிறுவனங்கள் இப்போது தென் ஆப்பிரிக்காவின் ‘கேப் ஆஃப் குட் ஹோப்’-ஐச் சுற்றிகொண்டு ஒரு நீண்ட பாதையில் செல்கின்றன.
இதனால் பயணம் சுமார் 10 நாட்கள் நீளும். இதற்கு பல மில்லியன் டாலர்கள் அதிகமாகச் செலவாகும்.
“கப்பல்கள் தென்னாப்பிரிக்காவைக் கடந்து வரும்போது, அவர்கள் சந்திக்கும் முதல் மையம் கொழும்புதான்… சிங்கப்பூர் தொலைவில் உள்ளது. எனவே அணுகுவதற்கு இதுவே எளிதான துறைமுகம்” என வீரசிங்க தெரிவித்தார்.
கொழும்பு துறைமுகம் மூலோபாய இடம் காரணமாக உள்ளதால், மத்திய கிழக்கு, தெற்காசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு கப்பல்களுக்கு வசதியான அணுகலை இது வழங்குகிறதாக இலங்கை துறைமுக அதிகாரசபையின் (SLPA) மூத்த அதிகாரி லால் வீரசிங்க தெரிவித்தார்.
மேலும், கொழும்பு துறைமுகமானது ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு இடையே உள்ள முக்கிய துறைமுகமாகும் என்றார்
முதலையிடம் சிக்கின சிறுவன்
முதலையிடம் சிக்கின சிறுவன்
களனி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) கடுவெல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி வீதியை சேர்ந்த ஒன்பது வயதுடைய டிஸ்ன பெரேரா என்ற சிறுவனையே இவ்வாறு முதலை இழுத்துச் சென்றுள்ளது.
குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு வந்துள்ளதாகவும் பாட்டி துணி துவைக்கும்வரை சிறுவன் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென முதலை வந்து சிறுவனை கௌவ்விக்கொண்டு போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கடுவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த போது சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருப்பதையும் பலமுறை அந்த முதலை ஆற்றில் மேல் பரப்பிற்கு வந்து சென்றுள்ளதையும் கண்டுள்ளனர்.
அதிகரித்த காய்கறி விலைகள்
அதிகரித்த காய்கறி விலைகள்
பண்டிகைக் காலத்தின் பின்னர் மரக்கறிகளின் விலை குறைவடையும் என முன்னறிவிக்கப்பட்ட போதிலும், உண்மையில் விலைகள் இன்னும் உயர்வாகவே காணப்படுகின்றன. பெரும்பாலான காய்கறி வகைகளின் விலை இப்போது ஒரு கிலோகிராம் ரூ.1,000ஆக இருப்பதுடன், கரட் மற்றும் பீன்ஸ் அதிகபட்ச அளவை எட்டி கிலோ ரூ.1,200 ஆக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம், நாட்டில் அதிக விலையில் பதிவு செய்யப்பட்ட காய்கறி விலையாக பேலியகொடையில் உள்ள புதிய மெனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் ரூ. 1,400 ஆக பதிவாகியது.
அதிகரித்த காய்கறி விலைகள்
அதிகரித்து வரும் விலைகள் காய்கறி நுகர்வு குறைவதற்கு வழிவகுத்துள்ளது, பல நுகர்வோர் இந்த விலையில் அவற்றை கொள்வனவு செய்வதற்கான இயலாமையை வெளிப்படுத்துகின்றனர்.
ஏறக்குறைய அனைத்து காய்கறி வகைகளின் விலைகளும் அதிகரித்து, நிதி சவால்களை உருவாக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய சந்தை விலையில் பீன்ஸ் விலை ரூ. கிலோ 1,000. ஆனால், மற்ற காய்கறிகளின் விலையில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு, பச்சை மிளகாய், தக்காளி போன்றவை முறையே கிலோ ரூ. 800 மற்றும் ரூ.350 ஆக குறைந்துள்ளது.மறுபுறம், எலுமிச்சை விலை கிலோ 500 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் ரத்து செய்வோம்
ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் ரத்து செய்வோம்
உண்மையான நிகழ்நிலை பாதுகாப்பிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். எனவே சிறுவர் ஆபாச மற்றும் பிற தீவிரமான ஒன்லைன் குற்றங்கள் போன்ற பிரச்சனைகளை முக்கிய தளங்களின் ஒத்துழைப்புடன் நாங்கள் அறிமுகப்படுத்துவோம்.
இது இலங்கை சமூகத்தின் நல்வாழ்வுக்கு முக்கியமானது. அவசர முடிவுகளை விட பயனுள்ள தீர்வுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்.” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கூறினார்.
ஒன்லைன் பாதுகாப்பு சட்டத்தை நாங்கள் ரத்து செய்வோம்
“ஒன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை அமல்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். நிறைவேற்றப்பட்டால், எதிர்கால SJB தலைமையிலான அரசாங்கம் இந்த சர்ச்சைக்குரிய சட்டமூலத்தை விரைவில் ரத்து செய்யும் என்று நான் உறுதியளிக்கிறேன்.
மேட்டா, கூகுள் மற்றும் யூடியூப் போன்ற முக்கிய தளங்களுடனான எங்கள் உறவுகளை நாங்கள் பாதிக்க மாட்டோம். அவை பொருளாதார வளர்ச்சிக்கு மிக அவசியமானவை” என அவர் தனது சமீபத்திய ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
கோட்டாவின் பொதுமன்னிப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
கோட்டாவின் பொதுமன்னிப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துமிந்த சில்வாவுக்கு வழங்கிய ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முடிவு தன்னிச்சையானது மற்றும் சட்டத்தில் செல்லுபடியாகாது என்று இலங்கையின் உயர் நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.
இதன்படி, அரசியலமைப்பு விதிகளை பின்பற்றாததற்காக துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொது மன்னிப்பை ரத்து செய்யுமாறு உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.
கோட்டாவின் பொதுமன்னிப்பு உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
இதேவேளை, துமிந்த சில்வா தொடர்பில் உயர் நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த நாட்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உட்பட நால்வரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட ஐந்து குற்றவாளிகளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
2021 ஆம் ஆண்டு துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பை உயர் நீதிமன்றம் இன்று வழங்கியது.
இறங்கி தாக்கும் இரான் மொசாட் இரண்டாவது முகாம் எரிகிறது
இறங்கி தாக்கும் இரான் மொசாட் இரண்டாவது முகாம் எரிகிறது
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
இராக்கில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
இராக்கில் இருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
கடும் மோதல் பறக்கும் ஏவுகணைகள்
ளவு வீடியோ
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
பொறியில் சிக்கிய அண்ணாக்கள் வைத்து விளையாடும் ஈரான்
பொறியில் சிக்கிய அண்ணாக்கள் வைத்து விளையாடும் ஈரான்
ஹவுதிகள் பொறியில் சிக்கிய அமெரிக்கா ,பிரிட்டன் வைத்து விளையாடும் இரான்
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி




































