Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
80 வயது முதியவர் – மதிய வங்கி ஆளுனரா..? – மங்கள கேள்வி
80 வயது முதியவர் – மதிய வங்கி ஆளுனரா..? – மங்கள கேள்வி
இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம் செய்யப்பட்டார் ,இவருக்கு சுமார் 80 வயதாகிறதாம் .
80 வயது முதியவர் ஒருவர் மத்திய வங்கிக்கு ஆளுநராக நியமிக்க வேண்டுமா என மங்கள சமரவீர சரமாரி கேள்வியை எழுப்பியுள்ளளார் .
இந்த 80 வயது முதியவர் பல்கலைக்கழக பேராசிரியராக பணி புரிந்தவரும் ,அதை விட கோட்டாவுக்கு மிக நெருங்கியவர் என்ற வகையில் அவரை இந்த பகுதிக்கு கோட்டா நியமித்துள்ளாராம்
இடுகுவே தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது .
ஒரு லட்சம் ஈழ அகதிகள் -இலங்கை கடத்த முயற்சி
இந்தியாவில் ஒரு லட்சம் ஈழ அகதிகள் -இலங்கை கடத்த முயற்சி
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு யுத்தம் காரணமாக உயிர் பாதுகாப்பபு தேடி அண்டை நாடான இந்தியாவுக்கு சென்றனர் ,
அங்கு சென்ற ஒரு லட்சம் ஈழ அகதிகளுக்கு தமிழக அரசு உரிய கவனம் செலுத்தாமை உள்ளதும் அவர்களை கேவலமாக நடத்துவதும் தொடர்ந்த வண்னம் உள்ளது .
,பலத்த கெடுபிடிகள் மத்தியில் அந்த ஈழ மக்கள் வாழ்வு நாள்தோறும் கழிகிறது ,
அங்கு பிறந்த சிறுவர்களுக்கு கூட அந்த நாட்டு குடியுரிமை வழங்க படுவதில்லை.
இவ்வாறான சூழல் இந்தியாவில் வசிக்கும் ஒரு லட்சம் ஈழ அகதிகளை இலங்கைக்கு அழைத்து வரும் நகர்வில் தமிழின கொலையாளி ஆளும் கோட்டா அரசு முனைப்பு காட்டி வருகிறது .
இந்தியாவில் ஒரு லட்சம் ஈழ அகதிகள் இலங்கைக்கு அழைத்து வரும் தொடர் நகர்வில் இந்திய மத்திய அரசுடன் இலங்கை சுற்று பேச்சுக்களை மேற்கொண்டு வருகிறது .
இந்த ஒருலட்சம் பேரில் பலரை புலிகள் என இலங்கை அரசு முத்திரை குதியுள்ளமை குறிப்பிட தக்கது
வாள் வெட்டு குழுக்கள் யாழில் ஒழிக்க படும் -பொலிஸ்
வாள் வெட்டுக் குழுக்கள்ஒழிக்க படும் -பொலிஸ்
வாள் வெட்டு குழுக்கள்- யாழில் இயங்கும் ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டு குழுக்கள் செயற்படுகின்றன.
அவற்றை அடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். புதிய ஆண்டிற்குள் அவர்கள் அனைவரையும் எம்மால் ஒழிக்க முடியும்.
யாழில் வாள்வெட்டு குழுக்களை முற்றாக அழிப்பதற்கான விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மகேஸ் சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் நெருக்கடி ஏற்படும் இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் நெருக்கடி ஏற்படும் இலங்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையின் 43 ஆவது கூட்ட தொடரில் இலங்கை பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டி வரும் என அரசு அறிவித்துள்ளது .
இறுதி போரில் போர்குற்றங்களி புரிந்து ஆட்சியில் அமர்ந்துள்ள அரசு முதன் முறையாக நேரடியாக இந்த எதிர்ப்பை சந்திக்க உள்ளது ,
அதனை அடுத்தே இம்முறை பெரும் நெருக்கடி நிறைந்த ஒன்றாக இது அமையும் எனவும் ,
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் மேலும் கால அவகாசம் வழங்கும் நிகழ்வுகள் அங்கு இடம்பெறுவது கடினம் என இலங்கை முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் கடந்த ஆட்சியில் பொறுப்பு கூறலுக்கு பதில் கூற தவறியதன் விளைவே இந்த நெருக்கடி ஏற்பட காரணமாக அமைந்துள்ளது
இராணுவ சிப்பாய்க்கு வாள்வெட்டு
இராணுவ சிப்பாய்க்கு வாள்வெட்டு
இலங்கை இராணுவ சிப்பாய் ஒருவர் தான் பணி புரியும் காவலரணில் பணிபுரிந்து விட்டு திரும்பி கொண்டிருந்த பொழுது சில நபர்களினால் வாள்வெட்டுக்கு உள்ளாக்க பட்டுளளார் .
பலத்தகாயமடைந்த இராணுவ சிப்பாய் தற்போது அமருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
இராணுவ சிப்பாய் மீது தாக்குதல் மேற்கொள்ள படத்தை குரல்தரவல்ல இராணுவ அதிகாரி ஒப்புக்கொண்டுள்ளார்
இராணுவ சிப்பாயிடம் துப்பாக்கி பறித்து சென்ற திருடர்கள்
இராணுவ சிப்பாய் ஒருவரிடம் இருந்து பறித்துச் செல்லப்பட்ட துப்பாக்கி கெக்கிராவையில் இருந்து பொலிஸாரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
போகஸ்வெவ இராணுவ முகாமின் காவலரணில் கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ சிப்பாய் ஒருவர் .
இன்று (25) அதிகாலை பணி முடிந்து சென்றுக் கொண்டிருந்த போது இனந்தெரியாத நபர் ஒருவரால் தாக்கப்பட்டுள்ளதோடு அவரின் துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்டிருந்தது.
சம்பவத்தில் காயமடைந்த இராணுவ சிப்பாய் சிகிச்சைக்காக அனுராதபுரம் இராணுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
நத்தார் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன
நத்தார் கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றுள்ளன
உலகம் முழுவதும் பரவி வாழும் கிறித்தவர்கள் தமது நத்தார் பாண்டியை இன்று கொண்டாடி வருகின்றனர் .பாலன் பிறந்த நாளான நத்தார் வெகு சிறப்பாக இடம்பெறுகிறது .
தமிழர்கள் வாழும் பகுதிகளிலும் இந்த நத்தார் பண்டிகை சிறப்பாக இடம்பெற்றுள்ளது .
இந்த நத்தார் பண்டிகையை குழப்பிடவே பிக்குகள் முயற்சிகளை மேற்கொண்டு வந்தமையும் அவை மோதலாக உருவெடுத்து விளங்கியதும் குறிப்பிட தக்கது
தப்பி ஓட முயன்ற கைதி மீது துப்பாக்கி சூடு
தப்பி ஓட முயன்ற கைதி மீது துப்பாக்கி சூடு
இலங்கை – மகசீன் சிறையில் இருந்து தப்பி ஓட முயன்ற கைதி ஒருவர் மீது போலீசார் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
தப்பி ஓடமுயன்ற கைதி பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுளளார் .
இந்த கைதி உண்மையில் தப்பி ஓட முயன்றாரா அல்லது போலீசார் திட்டமிட்டு சுட்டனரா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது
அரிசியை அதிக விலைக்கு விற்ற 500 கடைக்கு ஆப்பு
அரிசியை அதிக விலைக்கு விற்ற 500 கடைக்கு ஆப்பு
சிங்கையில் புதிய அரசினால் அரசியின் இறக்குமதி வரி குறைக்க பட்ட நிலையில் தற்பொழுது
அதனை மீறி அரிசியை அதிக விலைக்கு விற்பனை புரிந்த 500 வர்த்தக நிறுவனர் மீது வழக்கு தொடுக்க பட்டுள்ளது
அரிசியை அதிக விலைக்கு வாங்கி சென்ற மக்கள் அளித்த புகாரில் இந்த நடவடிகை மேற்கொள்ள பட்டுள்ளது .
அரிசியை அதிக விலைக்கு விற்பனை புரிந்த கடைகளுக்கு விரைந்த நுகர்வோர் அமைச்சு அவர்களுக்கு தண்டம் அறவிட்டுள்ளதுடன் வழக்கு தாக்கலும் செய்துள்ளமை குறிப்பிட தக்கது
கஞ்சா கடத்தல் முறியடிப்பு
இலங்கைக்கு கடத்த இருந்த 65 லட்சம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுளது .
கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த மாவட்ட காவல் தனிப்படை தலைமறைவான முக்கிய கஞ்சா குற்றவாளி செல்வகுமாரை பிடிக்க தனிப்படை அமைத்து காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடல் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து காவல் கண்காணிப்பாளரின்
சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர்கள் திபாகர், குகனேஸ்வரன், நவநீதன் ஆகியோர் ராமேஸ்வரம் நகர் காவல்துறையின் உதவியுடன்,
கஞ்சாவை கடல் வழியாக கடத்த முற்பட்ட ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த துப்பாக்கி ராஜா, ரமேஷ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு பதவி உயர்வு-இராணுவ மாயாமாகும் இலங்கை
பொலிசாருக்கு பதவி உயர்வு– இராணுவ மாயாமாகும் இலங்கை
இலங்கையில் -10 வருட சேவையை பூர்த்தி செய்ய பொலிசாருக்கு பதவி உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வுகள் இலங்கை ஒரு பரந்து விரிந்த இராணுவ மயமாக்களுக்கு உள்ளானதை காண்பிக்கிறது
.
இலங்கை ஒரு பவுத்த தேச நாடு எனவும் இங்கு வாழும் முதலாவது குடிகளின் பாதுகாப்பே முதன்மையானது என ஆளும் இனவாத அதிபர் கோட்டா முழங்கி வருகிறார் .
இராணுவத்தில் பதவி உயர்வுகள் வழங்க பட்ட நிலையில் ,தற்பொழுது பொலிசாருக்கு பதவி உயர்வு வழங்கும் செயற் பாடுகள் இதனை தெளிவாக காண்பிப்பதை அவதானிக்க முடிகிறது
பூனையை வெட்டி கொன்ற வாலிபன்- அதிரடி கைது .
இலங்கையில் – பூனையை வெட்டி கொன்ற வாலிபன்- அதிரடி கைது .
இலங்கை – பண்டாரகம பகுதியில் அயல் வீட்டாரின் பூனை ஒன்று தமது வீட்டுக்குள் வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் பதினாறு வயது பாடசாலை மாணவன் அந்த பூனையினை அடித்து கத்தியால் வெட்டி கொன்றுள்ளார்
அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூனையை வெட்டி கொன்ற வாலிபன் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளான் .
பூனையை வெட்டி கொன்ற செயல் விலங்கு பிரியர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது
அதிக விலையில் அரிசி விற்பனை – கடைகள் முற்றுகை
அதிக விலையில் அரிசி விற்பனை – கடைகள் முற்றுகை
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாவின் ஆட்சியில் அரசியின் வருக்குறைப்பு விகிதம் அறிவிக்க பட்ட நிலையில் ,அதிக விலையில் அரசி விற்பனை செய்யப்பட்டு வருகிறது .
இவ்வாறு அதிக விலையில் அரிசி விற்பனை செய்யும் கடைகள் தொடர்ந்து நுகர்வோர் அதிகார சபை திடீர் முற்றுகை நடத்தி தண்டம் அறவிட்டு வருகின்றனர் .
மக்களினால் வழங்க படும் தகவல்களை அடுத்து அதிக விலையில் அரசி விற்கும் வர்த்தக நிலையங்கள் திடீரென முற்றுகைக்கு உள்ளாக்க பட்டு வருகிறது
சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை
சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை
முன்னாள் அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க கைது செய்யப்பட்டு சிறைப் படுத்த பட்ட நிலையில் தற்பொழுது பிணையில் விடுதலை செய்யப் பட்டுள்ளார்
சம்பிக்க ரணவக்கவின் விடுதலைக்கு தாம் பாடு படுவோம் என சஜித் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
மத்தியவங்கி ஆளுனராக wd லக்ஷ்மன் நியமனம்
இலங்கையில் மத்தியவங்கி ஆளுனராக wd லக்ஷ்மன் நியமனம்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக கோட்டாவின் நெருக்கத்திற்கு உள்ளான wd லக்ஷ்மன் நியமிக்க பட்டுள்ளார் . மத்திய வாங்கி ஆளுனராக wd லக்ஷ்மன் நியமனத்தை அடுத்து இலங்கையின் பொருளாதாரம் மேல்நோக்கி செல்ல கூடும் என நம்ப படுகிறது .
திறமையான இவரது தெரிவு இதனை காண்பிப்பதாக நோக்க படுகிறது ,மத்திய வங்கியின் ஆளுனராக இவரை கோட்டா தெரிவு செய்ததன் நோக்கம் வேறாகும் என தெரிவிக்கப்படுகிறது
சம்பிக்கவின் சாரதி கைது – பழிவாங்கும் அரசியல்
இன்று சம்பிக்கவின் சாரதி கைது – பழிவாங்கும் அரசியல்
இலங்கையில் கோட்டபாய அதிகாரத்தில் அமர்ந்த பின்னர் தற்பொழுது பழிவாங்கும் அரசியல் ஆரம்பிக்க பட்டுள்ளது ,அந்தவகையில் பாட்டாளி சம்பிக்க கைது செய்யப்பட்டு சிறை படுத்த பட்ட நிலையில் தற்போது சம்பிக்கவின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் .
பாரளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் இடம்பெறும் இந்த தொடர் அரசியல் பழிவாங்கல்கள் கோட்டாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது .
சம்பிக்கவின் சாரதி கைது தொடர்ந்த நிலையில் ஏனைய முக்கியத்ஸ்தர்கள் பீதியில் உறைந்துள்ளனர்
சாரதி செய்த வேலையால் – 4 பேர் பலி-
இலங்கையில் –சாரதி செய்த வேலையால் – 4 பேர் பலி-சாரதி கைது
இலங்கை – வெலிப்பன்ன பகுதியில் வேகமாக வந்த வான் ஒன்று சாரதி செய்த வேலை யால் கட்டு பட்டை இழந்துவிபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த சுமார் நால்வர் பலியாகினர் .
சாரதி செய்த இந்த விபரீத வண்டி ஓட்டத்தினால் இந்த அப்பாவிகள் பலியாகியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர் .
சாரதி செய்த இந்த படுகொலை செயலினால் மக்கள் கொதிப்படைந்துள்ளனர் , .

கட்டுநாயக்க விமான நிலையம் செல்பவர்கள் -யாக்கிரதை
கட்டுநாயக்க ச விமான நிலையம் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த புதிய போக்குவரத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து இந்த புதிய போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
கட்டுநாயக்க விமான நிலையம் முகாமைத்துவ தலைவர் எச்.எஸ். ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார்.
இந்த போக்குவரத்து திட்டத்திற்கு அமைய கொழும்பு, நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வருகைத்தரும் வாகனங்கள் எதிர்க்கொள்ளும் முதலாவது நுழைவாயிலை பயன்படுத்த முடியும்.
அதேபோல் கொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மினுவாங்கொட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பிரதான நுழைவாயில் ஊடாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முடியும்.
அவ்வாறு வருகை தரும் வாகனங்கள் வெளிச்செல்வதற்கான அறிவுறுத்தல்கள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பாதை வழிக்காட்டிகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தில் மக்கள் ஓட -வீடு புகும் திருடர்கள்
திருடர்கள் கைவரிசை – வெள்ளத்தில் மக்கள் அவதி
இலங்கை தழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பருவமழை சீற்றத்தினால் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது ,
வீடுகளை இழந்து மக்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் ,இவ்வேளை மேட்டு நில பகுதிகளில் வெள்ளத்தில் வெள்ளத்தில் மக்கள் ஓட ஒதுங்கிய கால்நடைகள்
,மற்றும் கோழிகளை திருடர்கள் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது ,
வாகனங்களில் வரும் திருடர்கள் இந்த வெள்ளத்தில் சிக்கிய கால்நடைகளை அதில் ஏற்றி இறைச்சிக்கு விற்பனை செய்வவதாக மக்கள் தெரிவிக்கின்றனர் ,
தற்போது இலங்கையில் கால்நடைகளுக்கு காப்புறுதி – இன்சூரன்ஸ் உள்ளமை குறிப்பிட தக்கது

வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு 17 மில்லியன் நிதி ஒதுக்கீடு
வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு 17 மில்லியன் நிதி ஒதுக்கீடு
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்க பட்ட மக்களுக்கு சுமார் 17 மில்லியன் நிதி ஒதுக்க பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது ,
மக்களின் அவசர தேவை கருதி இந்த நிதிகள் ஒதுக்க பட்டுள்ளன ,வெள்ள நிதி ஒதுக்குவதில் அமைச்சர்கள் ,அரச அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் ,
,பாதிக்க பட்ட மக்களோ தமக்கு உதவிகள் வந்து சேரவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்து வருகின்றனர்








