Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை !!

லண்டனில் விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று புதன்கிழமை !!

https://www.einpresswire.com/article/528834417/decision-of-the-appeal-against-ltte-ban-in-uk-is-tomorrow-wednesday-tgte

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அசராங்கத்தினால் தொடுக்கப்பட்ட

வழக்கின் தீர்ப்பு நாளை புதன்கிழமை வெளிவருகின்றது என நாடுகடந்த தமிழீழ அராசாங்கத்தின் பிரதமர் பணிமனை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய நேரம் காலை 10:30 வழங்கப்பட இருக்கின்ற இர்தீர்ப்பு தொடர்பில், பிரித்தானியா நேரம் மாலை 4:15 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஊடக சந்திப்பொன்றினை நடத்த

இருக்கின்றது. இதனை https://www.facebook.com/tgteofficial மற்றும் tgte.tv ஊடாக நேரடியாக காணமுடியும்.

இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து

மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline

Robinson of Bindmans LLP ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச்சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்டநடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது தமிழர்களின் பேச்சு சுதந்திரத்துக்கும், கருத்து சுதந்திரத்துக்கும் இடையூறாக இருக்கின்றதென வாதிட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை சுதந்திர அரசின் வடிவத்தில் பிரயோகிப்பதற்கு தடையாக உள்ளதோடு, சுதந்திர தமிழீழத்தினை இலக்காக கொண்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

ஜனநாயகரீதியாக செயற்பாடுகளுக்கும் பெருந்தடையாக இது இருக்கின்றதென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாதிட்டிருந்தது.

பிரித்தானியாவின் நியாயமற்ற விதத்திலான தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பயங்கரவாத முத்திரையினை, சிறிலங்கா அரசு

தனது தமிழினஅழிப்பை, பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வைக்குள் மறைத்துக் கொள்ளும் உபாயமாக

கைக்கொள்கின்றது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

கிட்டிய பாதையை திருத்தி தருமாறு மக்கள் கோரிக்கை PHOTO

கிட்டிய பாதையை திருத்தி தருமாறு
மக்கள் கோரிக்கை PHOTO

புஸ்ஸல்லாவ பெரட்டாசி தோட்ட பிரதான பாதையில் சமகிபுர பிரேசத்தில் இருந்து டெல்டா தோட்டம் வமியாக புப்புரஸ்ஸ கலஹா தெல்தோட்டை ஹேவாஹெட்ட போன்ற நகரங்களுக்கு செல்லும்

பிரதான பாதையே இது. இந்த பாதையின் ஒரு பகுதி மிகவும் பாதிக்கப்பட்டு குன்றும் குழியுமாக சேற்றுடன் இருப்பதினால்

இதனை பயன்படுத்தி வரும் பெருந்தோட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த பாதையானது நுவரெலியா புஸ்ஸல்லாவ ஊடாக கலஹா

தெல்தோட்டை ஹேவாஹெட்ட கித்துல்கல ஊடாக கண்டி போன்ற இடங்களுக்கு செல்லும் ஒரு கிட்டடி பாதையாகும். தற்போது மேற்படி பிரதேசங்களுக்கு மக்கள் கம்பளை மற்றும் பேராதனை

கலஹா சந்திக்கு சென்றே செல்கின்றனர். இது இவர்களுக்கு நீண்ட நேரத்தையும் நீண்ட தூரத்தையும் அதிக செலவையும் கொடுக்கின்றது. இவ்வாறான நிலையில் இந்த பாதை திருத்தி

அமைக்கப்படுமானால் இந்த பாதையை நாளாந்தம் பாவித்து வரும் மக்கள் பெரும் நன்மை அடைவர்.

தற்போது இந்த பாதையில் தனியார் வாகனங்கள் முச்சக்கரவண்டி ஆகியனவே சேவையில் ஈடுபட்டு வருகின்றன. அரச போக்குவரத்து

இங்கு இல்லை. இதனால் பாடசாலை மாணவர்களும் பெருந்தோட்ட தொழிலாளர்களும்; பாதித்து வருகின்றனர். குறித்த பாதையில் ஒரு

தொகுதி செப்பனிடப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான பகுதி செப்பனிடப்படவில்லை. இதனை கவனத்தில் கொண்டு

சம்பந்தபட்டவர்கள் இந்த பாதையை திருத்தி அமைத்து கொடுக்க வேண்டியது கட்;டாயமானதாகும்.

Posted in இலங்கை செய்திகள்

தெல்தோட்டையில் மரவெண்டிக்காய் photo

தெல்தோட்டையில் மரவெண்டிக்காய்

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் தெல்தோட்டையில் ஆசிரியர் கலாநிதி கே.பிரபாகரன் அவர்களின் வீட்டுத்தோட்டத்தில்

மரவெண்டிக்காய் பயிரிடப்பட்டு வெற்றிகரமாக விலைச்சல் பெறப்படுகின்றது.

வெண்டிக்காய் என்றும் வெண்டைக்காய் என்றும் அழைக்கப்படும் இந்த மரவெண்டி செய்கை தொடர்பாக செய்கையாளரிடம்

வினவிய போது. நண்பர் ஊடாக கிடைக்கபெற்ற விதையின் மூலம் ஆரம்பிக்கபட்டதாகவும் தற்போது இதன் விளைச்சல்

அதிகரித்துள்ளதாகவும் மாதம் ஒன்றுக்கு ஒரு மரத்தில் இருந்து நான்கு தொடக்கம் 05 கிலோ வரையிலான வெண்டிக்காய்

பெறப்படுவதாகவும் சமைக்கப்படும் கறியானது மிகவும் சுவையாகவும் சத்துள்ளதாக இருக்கின்றது என்று கூறினர்.

வெண்டையின் அறிவியல் பெயர் “எபில்மொஸ்கஸ் எஸ்குலென்டஸ்” செம்பருத்தி தாவர குடும்பத்தை சேர்ந்த

வெண்டை ஆபிரிக்காவை பூர்வீகமாக கொண்டது என நம்படுகின்றது.

வெண்டைக்காய் சாப்பிட்டால் மூளை வளரும் என்று கூறுவர் ஆனால் வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்ச்சிக்கும் நேரடியான

தொடர்பு இருக்கிறதோ இல்லையோ சர்க்கரை அனீமியா ஆஸ்துமா கொலஸ்ட்ரால் மலச்சிக்கல் புற்றுநோய் நீரிழிவு வயிற்றுப் புண்

பார்வைக் குறைபாடு என சகல நோய்களையும் தீர்க்கும் சர்வரோக நிவாரணி என்பதில் சந்தேகம் வேண்டாம்.

என்ன இருக்கிறது? (100 கிராமில்) ஆற்றல் 33 கிலோ கலோரி கார்போஹைட்ரேட் 7.45 கிராம் கொழுப்பு 0.19 கிராம் புரதம் 2

கிராம்வைட்டமின் ஏ 36 மியூஜி வைட்டமின் சி 23 மி.கி. வைட்டமின் இ 0.27 மி.கி. வைட்டமின் கே 31.3 மியூஜி கால்சியம் 82 மி.கி. இரும்பு 0.62 மி.கி.

ஆங்கிலத்தில் ‘லேடிஸ் ஃபிங்கர்ஸ்’ என அழைக்கப்படுகிறது வெண்டைக்காய். கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசிய மான ஃபோலிக் அமிலம் வெண்டைக்காயில் நிறையவே உள்ளது.

கர்ப்பத்தில் உள்ள குழந்தையானது உள்ளே நல்லபடியாக வளரவும் முதல் ட்ரைமெஸ்டரின் போதான குழந்தையின் நரம்புக்

குழாய்களின் வளர்ச்சிக்கும் இந்த ஃபோலிக் அமிலமானது மிகவும் அவசியம்.

வெண்டைக்காயின் சிறப்பே அதன் கொழகொழப்புத் தன்மைதான். ஆனால், அந்தக் கொழகொழப்பு பிடிக்காமலே பலரும் அதை

சேர்த்துக் கொள்வதில்லை. உண்மையில் அந்த வழவழப்புத் தன்மையில்தான் வெண்டைக்காயின் அத்தனை மருத்துவப்

பலன்களும் மறைந்துள்ளன. இந்த வழவழப்பில் உள்ள நார்ச்சத்து அல்சர் பாதித்தவர்களுக்கு அருமருந்து. தவிர, மலச்சிக்கல்,

வயிற்றுப் போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகள் அனைத்தையும் குணப்படுத்தக் கூடியது.

Posted in இலங்கை செய்திகள்

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு : முத்தையா முரளிதரன் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு : முத்தையா முரளிதரன் தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தமிழினப்படுகொலையினை நிராகரிப்பதோடு, தாய்மார்களின் நீதிக்கான போராட்டத்தினையும் இழிவுபடுத்தியவர் சிறிலங்கா

கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக திரைநட்சத்திரம் விஜய் சேதுபதியின் நடிப்பில், தமிழ்நாட்டில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள முத்தையா

முரளிதரனை மையப்படுத்திய திரைப்படம் தொடர்பில், உலகத்தமிழர்களிடையே எழுந்துள்ள கண்டனக்குரல்கள்

தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சமூகவலைத்தளத்தில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கருத்துப்பதிவிட்டுள்ளார்.

சொல்லுக்கும், செயலுக்கும் விளைவுகள் உண்டு என தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், விளையாட்டையும்

அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைமாத்திரை- பெண் கைது

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைமாத்திரை- பெண் கைது

பிரான்ஸிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட ஒரு தொகை போதைமாத்திரைகளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

20 மில்லியன் ரூபாய் பெறுமதியான மெதம்படமைன் எனப்படும் ஒரு வகை போதைப் பொருளை மிகவும் சூட்சுமமான முறையில்

மறைத்து, தபால் மூலம் இலங்கைக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் இதனைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த பெண்ணொருவரே சுங்க திணைக்களத்தின் போதை கட்டுப்பாட்டு பிரிவின்

அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு, பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென, சுங்க

திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் மேலதிக சுங்க பணிப்பாளர் நாயகமுமான சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணொருவரின் பெயருக்கு, 4,048 போதை மாத்திரைகள்

பொதியிடப்பட்டு, தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

49 பேருக்கு கொரோனா-பேலியகொட மீன்சந்தை அடித்து பூட்டு

49 பேருக்கு கொரோனா-பேலியகொட மீன்சந்தை அடித்து பூட்டு

பேலியகொட மீன் சந்தை கட்டடத் தொகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே,

கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதென களனி சுகாதார அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களிலிருந்தும் அதிகமானோர் பேலியகொட மீன்

சந்தைக்கு வருகைத் தருவதால், தொற்று நோய் பிரிவின் அறிவுறுத்தலுக்கமைய,

நேற்று முன்தினம் (19) இங்கு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 100 பேருக்கு பிசிஆர் பரிசோதனை

முன்னெடுக்கப்பட்டதாகவும் இதன்போது, 49 பேருக்கு கொரோனா

தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Posted in இலங்கை செய்திகள்

20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் ஆரம்பம்

20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் ஆரம்பம்

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது நடைப்பெறுகின்றது.

இந்த விவாதம் நாளை வரை இடம்பெறவுள்ளது. 20 ஆவது அரசியல்

யாப்பு திருத்த விவாதத்தை ஆரம்பித்த நீதி அமைச்சர் அலி சப்ரி உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, குழுநிலையின்

போது 20 ஆவது அரசியல் யாப்பு சட்ட மூலத்திற்காக சமர்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள திருத்தங்களை இன்று மாலை 6.00 மணிக்கு

முன்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சபையில் அறிவித்தார்.

நீதி அமைச்சர் தனது உறையின் போது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு இன்று சேர்க்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திருத்தங்களின் சாரம்சங்களை தெளிவுப்படுத்தினார். அரசியல்

யாப்புக்கு பொருத்தமற்ற எந்த திருத்தங்களும் குழுநிலையின் போது தாம் சமர்ப்பிக்கப் போவதில்லை என அமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு

தெரிவித்து சபையில் செயல்பட்டு வருகின்றனர். 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக இன்றும்

எதிர்க்கட்சி ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள 05 மற்றும் 22 ஆவது சரத்துக்களை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கமைவாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாதிருப்பதற்கான சரத்து மற்றும் தேர்தல் காலப்பகுதியில்

பணிகளை மேற்கொள்வதற்கு அமைவான சரத்து நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் – பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வசதி

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் – பரீட்சை எழுதுவதற்கு மாணவர்களுக்கு வசதி

குளியாப்பிட்டிய பொலிஸ் எல்லைப்பகுதிக்குள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் உயர்தர பரீட்சைக்கு

தோற்றும் பரீட்சாத்திகள் தடையின்றி பரீட்சைக்கு தோற்ற முடியும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கு தேவையான ஆலோசணைகள் பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்;பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்தார்.

இருப்பினும் நாளை (22 ஆம் திகதி) ஆரம்பிக்கப்படவிருந்த தரம் 5 புலமைப்பரிசில்

பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் குளியாப்பிட்டிய

மற்றும் கம்பஹாவில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நடை

முறைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் இடம்பெறாது என்றும் பரீட்சைகள் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 125 பேர் கைது

கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை

மீறிய குற்றச்சாட்டில் 125 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, இதுவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை

மீறிய குற்றச்சாட்டில் 513 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா சிகிச்சை நிலையம்; கிருஷ்ணபுரம் மக்கள் அச்சம்

கொரோனா சிகிச்சை நிலையம்; கிருஷ்ணபுரம் மக்கள் அச்சம்

கிளிநொச்சி, கிருஷ்ணபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுவரும் கொரோனா வைரஸ் சிகிச்சை நிலையம் தொடர்பில், பிரதேச

மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன், அது தொடர்பில் கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரிக்கும் இன்று (20) மகஜரும் கையளித்தனர்.

கிருஷ்ணபுரம் பகுதியில் நேற்றுக்காலை ஒன்றுகூடிய பிரதேச மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், தமது நிலைப்பாட்டை

தெரிவிப்பதற்காக கிளிநொச்சி தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி, அதிகாரிகள், ஊடகவியலாளர்களையும் அழைத்திருந்தனர்.

இதன்போது அப்பகுதியில் அமைக்கப்பட்டுவரும் குறித்த சிகிச்சை நிலையத்தால் தாம் அச்சமடைந்துள்ளதாகவும், இவ்விடயம்

தொடர்பில் மீள்பரிசீலணை செய்யுமாறும் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வரும் காணி 14 பேருக்குச் சொந்தமான காணி எனவும், இது இராணுவத்தால் விடுவிக்கப்பட்டு

, அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறு சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டு வருவதாகவும் மக்கள், பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இந்த விடயங்களைக் கேட்டறிந்த பொலிஸ் அதிகாரி, இது தொடர்பில் அரசாங்க அதிபரிடம் கலந்துரையாடுவதாகவும்

மேற்படி வைத்தியசாலையானது இப்பகுதி மக்களுக்காகவே உருவாக்கப்படுவதாகவும் வெளி இடங்களில் இருந்து

அழைத்துவந்து இங்கு யாருக்கும் சிகிச்சை வழங்கப்போவதில்லை எனவும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

20இல் சில பிரிவுகளை திருத்தி நிறைவேற்றலாம்- நீதிமன்றம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் சில

பிரிவுகளை, குழுநிலையில் திருத்தி நிறைவேற்றலா​ம் என

உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதென, சபாநாயகர்

மஹிந்த யாப்பா அபேவர்தன, சற்றுமுன்னர் சபைக்கு அறிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கா முக்கிய அதிகாரி மைக் போம்பியோ- இலங்கை வருகிறார் – மாற்றம் வருமா ?

அமெரிக்கா முக்கிய அதிகாரி மைக் போம்பியோ- இலங்கை வருகிறார் – மாற்றம் வருமா ?

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பியோ, எதிர்வரும் 28 ஆம்

திகதி கொழும்பில் நடைபெறவுள்ள, இருதரப்பு கலந்துரையாடலில் பங்கேற்பாரென, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவுக்கான இரண்டு நாள் விஜயத்தை நிறைவு செய்த

பின்னரே, அவர் இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

புங்குடுதீவு தற்காலிக முடக்கம் நீக்கம்

புங்குடுதீவு தற்காலிக முடக்கம் நீக்கம்

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை (20.10.2020) நீக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில்

அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று

ஏற்படவில்லையென சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியானது இன்று காலையிலிருந்து வழமைக்குத் திரும்பும் எனினும் அப்பகுதி மக்கள் சுகாதார நடைமுறையினை

கட்டாயம் பின்பற்ற வேண்டும், அப்பகுதிக்கு சென்று வரும் பொதுமக்களும் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற

வேண்டும் என்றும் குறித்த பகுதியானது சுகாதாரப் பிரிவினரால் தொடர்ச்சியாக

கண்காணிக்கப்படுமெனவும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நிரந்தர நியமனம்

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நிரந்தர நியமனம்

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நிரந்தர நியமனம்

வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற தொடர்

பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நிரந்தர நியமனம்

தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண

தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் திரு கணபதி கனகராஜ் ஆகியோர் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

Posted in இலங்கை செய்திகள்

ஊரடங்குச் சட்ட பகுதிகளில் உணவு, மருந்து விற்பனை நிலையங்கள் திறப்பு

ஊரடங்குச் சட்ட பகுதிகளில் உணவு, மருந்து விற்பனை நிலையங்கள் திறப்பு

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாகும் இடங்களில் உணவு

மற்றும் மருந்து விற்பனை நிலையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

இவை காலை 8.00 மணி தொடக்கம் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும்

என கொவிட்-19 பரவுவதைத் தடுப்பதற்கான செயற்பாட்டு நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் – அரச வங்கிக்குப் பூட்டு

கொரோனா வைரஸ் – அரச வங்கிக்குப் பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட , மத்துகம-

கொழும்பு சொகுசு பஸ் சாரதி, அகலவத்த பகுதியிலுள்ள அரச ​வங்கி ஒன்றுக்கு,

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளதையடுத்து, அதனை இன்று (19)

முதல் மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, அகலவத்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேற்படி சாரதி அடங்களாக இந்தப் பகுதியில் இதுவரை தொற்றாளர்களாக மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் அகலவத்த ஓமந்த வீதி, வலவ்வத்த மற்றும் பேரகம ஆகிய

பகுதிகளைச் சேர்ந்தவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.

Posted in இலங்கை செய்திகள்

பிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பிள்ளையான் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கு

(பிள்ளையான்) எதிரான வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, சட்டாமா அதிபர் திணைக்கள சட்டத்தரணிகள், நீதிமன்றத்துக்கு

சமூகமளிக்காதமையால், இவ்வழக்கு விசாரணைகள், நவம்பர் மாதம் 2ஆம், 10ஆம் மற்றும் 16ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீதான இந்த வழக்கு விசாரணை, மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி

டி.சூசைதாசன் முன்னிலையில், இன்று (19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, மேற்படி ஒத்திவைக்கப்பட்டன.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி

ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதால், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில்

அவர் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், அதற்கான நீதிமன்ற அனுமதியை, சட்டத்தரணி கோரினார்.

இவ்விடயத்தை, வெள்ளிக்கிழமை (23) பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதென மேல் நீதிமன்ற விசேட நீதிபதி சூசைதாசன்

அறிவித்தாரென, சந்திரகாந்தனின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.

2005.12.25 திகதியன்று, மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு

மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை செய்யப்பட்டார்.

Posted in இலங்கை செய்திகள்

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியூதீன், தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது இடம்பெயர்ந்த வாக்காளர்களை

புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து சென்றமையின் ஊடாக அரச நிதியை

முறைக்கேடாக பயன்படுத்தியதாக தெரிவித்து பதியுதீனை கைது செய்ய சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதையடுத்து கடந்த சில நாட்களாக 6 பொலிஸ் குழுக்கள் அமைத்து

தேடப்பட்டும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் ரிஷாட் பதியுதீன் 6 நாட்களுக்குப்பின் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வெறியாட்டம் -3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரனோ வெறியாட்டம் -3 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டன

மத்துகம பிரதேச செயலக பிரிவில் 3 கிராமங்கள்

தனிமைப்படத்தப்பட்டிருப்பதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளன

மத்துகம பிரதேச செயலக பிரிவில் ஓவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம

நவ ஜனபதய (பதுகம புதிய குடியிருப்பு கிராமம்) ஆகிய கிராமங்கள்

தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக ஊழுஏஐனு

19 வைரசு தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது

Posted in இலங்கை செய்திகள்

உயர்தரப் பரீட்சை மோசடி – விசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை மோசடி – விசாரணை நடைபெறுவதாக அறிவிப்பு

தற்போது நடைபெறும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில்

மோசடியில் ஈடுபட்ட மாணவர்கள் தொடர்பில் விசாரணை

இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பீ.சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வத் திணைக்களம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மோசடிகளைத் தவிர்ப்பதற்கு அனைத்துப் பரீட்சை நிலையங்களுக்கும்

மேலதிக உதவி மண்டப தலைமை அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.