20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் ஆரம்பம்

Spread the love

20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் தற்போது பாராளுமன்றத்தில் ஆரம்பம்

அரசியல் அமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் 2 ஆம் வாசிப்பு மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது நடைப்பெறுகின்றது.

இந்த விவாதம் நாளை வரை இடம்பெறவுள்ளது. 20 ஆவது அரசியல்

யாப்பு திருத்த விவாதத்தை ஆரம்பித்த நீதி அமைச்சர் அலி சப்ரி உரையாற்றிக் கொண்டிருக்கின்றார்.

இன்றைய தினம் பாராளுமன்ற அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்ட போது சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, குழுநிலையின்

போது 20 ஆவது அரசியல் யாப்பு சட்ட மூலத்திற்காக சமர்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ள திருத்தங்களை இன்று மாலை 6.00 மணிக்கு

முன்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று சபையில் அறிவித்தார்.

நீதி அமைச்சர் தனது உறையின் போது அரசியல் யாப்பு திருத்தத்திற்கு இன்று சேர்க்க எதிர்பார்க்கப்பட்டுள்ள திருத்தங்களின் சாரம்சங்களை தெளிவுப்படுத்தினார். அரசியல்

யாப்புக்கு பொருத்தமற்ற எந்த திருத்தங்களும் குழுநிலையின் போது தாம் சமர்ப்பிக்கப் போவதில்லை என அமைச்சர் கூறினார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டோர் இதற்கு எதிர்ப்பு

தெரிவித்து சபையில் செயல்பட்டு வருகின்றனர். 20 ஆவது அரசியல் யாப்பு திருத்தம் நிறைவேற்றப்படுவதை தடுப்பதற்காக இன்றும்

எதிர்க்கட்சி ஆகக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியல் யாப்பு திருத்தத்தில் உள்ளடங்கியுள்ள 05 மற்றும் 22 ஆவது சரத்துக்களை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இதற்கமைவாக ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யாதிருப்பதற்கான சரத்து மற்றும் தேர்தல் காலப்பகுதியில்

பணிகளை மேற்கொள்வதற்கு அமைவான சரத்து நீக்கப்படுவதாக நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Leave a Reply