Tag: அலி சப்ரி
அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்
அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்
இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி ஏன் இலங்கையை இந்திய கனடா மோதலிற்குள் இழுக்கின்றார் என எமது சகோதர ஊடகமான டெய்லிமிரர் கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து டெய்லிமிரர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசியல்வாதிகள் ஆச்சரியமளிப்பவர்கள். பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து நாடு அரசியல்நெருக்கடியில் சிக்குண்டிருந்த வேளை நாடு பணம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட போது இலங்கையின் அரச தலைவர்கள், சர்வதேச சமூகம் உதவவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.
நல்லெண்ண நடவடிக்கையாக பல நாடுகள் உதவ முன் வந்தன-சில நாடுகள் தங்கள் சொந்த நலன் அடிப்படையில் உதவ முன்வந்தன- சில நாடுகள் நட்புறவின் அடிப்படையில் உதவ முன்வந்தன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தான் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை பேண விரும்புவதாகவும் பக்கம் சாய விரும்பவில்லை எனவும்
தெரிவித்துவரும் அதேவேளை , எதிர்பாராத நடவடிக்கையாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு தொடர்பற்ற இந்திய – கனடா முறுகல் நிலை குறித்து சர்வதேச ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளமை ஆச்சரியமளித்துள்ளது.
அலி சப்ரி ஏன் இலங்கையை இழுத்து விடுகிறார்
இலங்கையின் நிலைப்பாடு என்பதை விட கோபத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்து போலதோன்றும் அந்த கருத்தில் அலிசப்ரி இந்தியாவிற்கு எதிரான கனடா பிரதமரின் கருத்திற்காக கனடா பிரதமருக்கு எதிராக கடும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்- இது இலங்கைக்கு தொடர்பற்ற விடயம்.
சில பயங்கரவாதிகள் கனடாவில் புகலிடம் பெற்றுள்ளனர்
கனடா-இந்திய இராஜதந்திர முறுகல் நிலை குறித்து அலிசப்ரி கருத்து தெரிவிக்கையில் , உறுதியான ஆதாரங்கள் இன்றி இந்தியாவிற்கு எதிரான குற்றச்சாட்டுகளை முன்வைத்தமைக்காக கனடா பிரதமரை கடுமையாக சாடியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ ஆதாரமற்ற பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைப்பவர் என்பதால் அவரது கருத்துக்கள் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
சில பயங்கரவாதிகள் கனடாவில் அடைக்கலம் பெற்றுள்ளனர் என குறிப்பிட்டுள்ளதுடன் ஆதாரங்களற்ற கடும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சுபாவம் கனடா பிரதமருக்குள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரத்திலும் கனடா பிரதமர் அவ்வாறு நடந்துகொண்டார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றதாக பெரும் பொய்யை சொன்னார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இலங்கை விவகாரங்களில் அலி சப்ரி கனடா பிரதமருக்கு எதிராக போர்கொடி தூக்குவதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் இந்திய- கனடா விவகாரங்களில் இந்த தருணத்தில் தலையிடுவது அர்த்தமற்றது போல தோன்றுகின்றது.
மேலும் இலங்கைக்கு தொடர்பற்ற விடயத்தில் தலையிட்டு உறவுகளை மேலும் சீர்குலைப்பது போலவும் தோன்றுகின்றது.
இலங்கை அரசாங்கத்துடன் சம்பந்ததமற்ற மோதல் குறித்து அலிசப்ரி வெளியிட்டுள்ள கருத்துகளை, இலங்கை ஜனாதிபதியும் ஏற்றுக்கொள்கின்றாரா அல்லது இலங்கை நாடானது இந்தியாவின் பக்கமோ அல்லது கனடாவின் பக்கமோ சாயாது என தெரிவிக்கும் படி அலிசப்ரியை கேட்டுக்கொள்கின்றாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
இலங்கை தான் தீர்வுகாண வேண்டிய சொந்த மோதல்கள் பல உள்ளன. தனக்கு தேவையற்ற சம்பந்தமில்லாத மோதலில்களில் தலையிடாமல் இலங்கை அதனை செய்யலாம் என டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.
- யுரேனியம் கையிருப்பை ஒப்படைக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது என டிரம்ப்
by நிருபர் காவலன் - அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
by நிருபர் காவலன் - புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
by நிருபர் காவலன் - தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி
by நிருபர் காவலன் - இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்
by நிருபர் காவலன்
அமெரிக்கா பயணமானார் அலி சப்ரி
அமெரிக்கா பயணமானார் அலி சப்ரி
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமெரிக்க இராஜாங்கச் செயலர் அந்தனி பிளிங்கனின் அழைப்பின் பேரில் இன்று (29) அதிகாலை அமெரிக்கா பயணமாகியுள்ளார்.
இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சின் மூன்று சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, தூதுக்குழுவினர் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாட உள்ளார்
Featured
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு, குழு 77 மற்றும் சீன உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின்
கூட்டம், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். மேலும் அவர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்திப்பார்.
இலங்கைத் தூதுக்குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான்
பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமர்வின் உயர்மட்ட அமர்வு 2022 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,














