Tag: தீ வைத்து எரிப்பு
யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
யாழ்ப்பாணத்தில் பேரூந்து தீ வைத்து எரிப்பு
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ளது.
இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
- இலங்கையில் எட்டுமாதத்தில் வீதி விபத்தில் 1654 பேர் பலி
by நிருபர் காவலன் - டிக்டாக் அமெரிக்காவிற்கு 400 மில்லியன் டாலர் தண்டம் செலுத்த உள்ளது.
by நிருபர் காவலன் - கிழக்கு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழை
by நிருபர் காவலன் - மருந்து தட்டுப்பாடு திணறும் இலங்கை
by நிருபர் காவலன் - அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்
by நிருபர் காவலன்
பரீட்சையில் 9 A பெற்ற மாணவன் தீ வைத்து எரிப்பு
பரீட்சையில் 9 A பெற்ற மாணவன் தீ வைத்து எரிப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கண்டி, அம்பிட்டிய – பல்லேகம பிரதேசத்தைச் சேர்ந்த மாணவரொருவரே இதில் பலத்த தீக்காயங்களுக்குள்ளாகி கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தான் பரீட்சையில் 9 விசேட சித்திகள் பெற்றதை தமது பாட்டியிடம் கூறிவிட்டு, தந்தையுடன் நேற்று முன்தினம் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, இனந்தெரியாத சிலர் குறித்த மாணவனின் உடல்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பிட்டிய பிரதேசத்தில் பல்வேறு குற்றச்செயல்களை மேற்கொள்ளும் நபர்களே இந்தச் செயலைச் செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.














