எலிக்காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதவேளை, குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளது

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்

சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்

மயிலத்தமடுவில் பெளத்த மதகுரு தலைமையில் சர்வமத குருமார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கொலை அச்சுறுத்தல் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிப்பது,

இலங்கை அரசின் பேராதரவுடன் புத்த பிக்குகளும், சிங்களக் காடையர்களும் மீண்டுமொருமுறை அரங்கேற்றியுள்ள அடாவடித்தனத்தை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

கடந்த 23 ஆம் திகதியன்று மயிலத்தனை மடு மக்களின் கோரிக்கைக்கு இணங்க அங்கு சென்றிருந்த சர்வமத குருமார்கள், ஊடகவியலாளர்கள் அடங்கிய குழு மக்களை சந்தித்து விட்டு திரும்பி வரும் வழியில் பெளத்த பிக்கு உள்ளிட்ட காடையர்களால் வழிமறிக்கப்பட்டு மிலேச்சத்தனமாக நடாத்தப்பட்டுள்ளனர். கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

சர்வமத குருமார்கள் மீது கொலை அச்சுறுத்தல்

அதை அடக்க உதவிக்கு அழைக்கப்பட்ட போலிஸாரும் வந்து, நடந்தேறிய காடைத்தனத்தின் காரணகர்த்தாவான பிக்குவின் காலில் விழுந்து வணங்கிய பின்பே நிலைமைகளை ஆராய்கின்றனர்.

இப்படியான பண்புகள், கலாசாரப் பிறழ்வுகள் கொண்ட பிக்குகளை வளர்த்துவிடும் அல்லது முன்னிலைப்படுத்தும் அரசும் மக்களும் இனத்துவேசத்துக்கு நெய்யூற்றி வளர்ப்பவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இப்படியான சம்பவங்கள் தமிழ் மக்களுக்கு ஒன்றும் புதியதல்ல. தொடரான இவ்வாறான சம்பவங்கள் தமிழ் மக்களிடையே உயிர் பயத்தையும் அச்ச நிலையும் உருவாக்கி வருகின்றது.

காலத்திற்கு காலம் இப்படியான நிகழ்வுகளுக்கு கண்டனத்தை தெரிவிப்பதுடன் நிறுத்தப்போகிறோமா?

இந்த சம்பவங்களை அறியும் சர்வதேச ராஜதந்திரிகள், இலங்கையில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழவில்லை, இனிமேல் சேர்ந்து வாழவும் முடியாது என்ற உண்மையை உணர்ந்து எமது மக்களுக்கு பாதுகாப்பான சூழல் ஏற்படக்கூடிய வாய்ப்புக்களை உருவாக்கிட நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கேட்டு நிற்கின்றோம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் 36 லட்சம் நகைகள் கொள்ளை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை

யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை

யாழ்ப்பாணம் – பலாலி, தெற்கு வசாவிளான் பகுதியில் வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் 25 பவுண் நகைகளையும், 40,000 ருபாய் பணத்தையும் திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (24) காலை இடம் பெற்றுள்ளது.

காலை 10 மணிக்கு 11 மணிக்கு இடையில் வீட்டிலிருந்து வீட்டின் உரிமையாளர்கள் வெளியில் சென்ற போது வீட்டினுள் நுழைந்த திருடர்கள் வீட்டின் கதவினை உடைத்து உள்ளே சென்று மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 பவுண் நகைகளையும் 40,000 ரூபா பணமும் திருடிச் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் வீடொன்றினுள் நுழைந்து கொள்ளை

சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுக்கு வந்த தடவியல் பொலிஸார், கைரேகை நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டது சந்தேக நபர்களின் கைவிரல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை திருட்டு நபர்கள் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் பிடுங்கி எடுத்து சென்றுள்ளனர்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது

மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது

மது போதையில் குழப்பம் விளைவித்த 6 புலம்பெயர் தமிழர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் இருந்த நான்கு பெண்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து தாயகம் திரும்பியவர்கள், வவுனியா பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா கடற்கரைக்கு சென்று 24 ஆம் திகதி பொழுதை கழித்துள்ளனர்.

அதன் போது, அவர்களில் ஒருவரின் மோதிரத்தை காணவில்லை என, கடற்கரையில் கடமையில் இருந்த உயிர்காப்பு பிரிவை சேர்ந்த பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டு, அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

மது போதையில் இருந்த 6 புலம்பெயர் தமிழர்கள் கைது

அது தொடர்பில் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, கடற்கரைக்கு விரைந்த பொலிஸார் 6 ஆண்களையும் 4 பெண்களையுமாக 10 பேரையும் கைது செய்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை 4 பெண்களையும் பிணையில் செல்ல அனுமதித்த மன்று, 6 ஆண்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் கனேடியன் பிரஜைகள் எனவும், ஒருவர் இலண்டன் பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி

நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி

வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.

இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.

நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி

உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.

சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

கொலைகள் உட்பட பல குற்றங்களுக்காகத் தேடப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெங்களூரு யெலஹங்கா பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த போது, ​​இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினரால் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“கொத அசங்க” என அழைக்கப்படும் அமில நுவன், “சுட்டா” என்றழைக்கப்படும் ரங்க பிரசாத் மற்றும் கசுன் குமார சங்க ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு அடைக்கலம் வழங்கியதற்காக விவேக் நகரில் வசிக்கும் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரங்கபிரசாத் மீது இரண்டு தாக்குதல் குற்றச்சாட்டுக்களும், அமில நுவன் மீது 05 கொலைகள் மற்றும் கசுன் குமார சங்க மீது 04 கொலைகள் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் சிக்கிய இலங்கையர்கள்

இலங்கையில் கைது செய்யப்படுவதை தவிர்க்கவே அவர்கள் இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக இந்திய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் சுமார் 15 நாட்களுக்கு முன்பு கடல் வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்கு வந்துள்ளனர், மேலும் அவர்களிடமிருந்து 13 கைப்பேசிகளை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இவர்கள் இந்தியாவிற்கு வர உதவிய பிரதான சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை இந்திய மத்திய குற்றப்பிரிவு பிரிவினர் ஆரம்பித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்
Posted in இலங்கை செய்திகள்

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்

எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டையும் சுற்றிவளைக்க எவருக்கும் இடமளிக்க
முடியாது என்றும் கஜேந்திரகுமார் எம்.பியின் வீட்டுக்கு தேவையான பாதுகாப்பை வழங்க
உடனடியாக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுயாதீன எதிரணி எம்.பியான
டிலான் பெரேரா சபையில் கோரிக்கை விடுத்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) இலங்கை கிரிக்கெட் தொடர்பான சபை ஒத்திவைப்பு
வேளை விவாதம் இடம்பெற்றது.

அதன் போது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலத்தின் வீட்டை சுற்றிவளைக்கவுள்ளதாக குழுவொன்று அறிவித்துள்ளமை
தொடர்பில் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே டிலான் பெரேரா இவ்வாறு
கோரிக்கை விடுத்தார்.

கஜேந்திரனின் வீட்டுக்கு பாதுகாப்பு கோரினார் டிலான்

மேலும் தெரிவிக்கையில், “கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, நாளை (இன்று) பாராளுமன்ற
தெரிவுக்குழுவுக்கு வர வேண்டும் என்ற போதும், அவரால் வர முடியாது என்று கூறியுள்ளார்.

அதற்கு காரணம் அவரின் கொழும்பிலுள்ள வீட்டை குழுவொன்று சுற்றி வளைக்கவுள்ளதாக
தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருடன் சென்றே
இவ்வாறு சுற்றிவளைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பாரதூரமான விடயமே.

கஜேந்திரகுமார் எம்.பியின் தாயார் மிகவும் நோய்வாய்ப்பட்டவராக இருக்கின்றார். இது
தொடர்பில் பாதுகாப்பு தரப்புக்கு அறிவிக்க வேண்டும். ஒவ்வொருக்கும் வேண்டியவாறு
எம்.பிக்களின் வீடுகளை சுற்றிவளைக்க இடமளிக்க முடியாது.

இதனால் தயவு செய்து அவருக்கும், அவரின் வீட்டுக்கும் தேவையான பாதுகாப்பை உடனடியாக
அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.

இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய உறுப்பினர் சமன் பிரிய ஹேரத், இந்த விடயம்
தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை

பச்சை குத்தியவர்களுக்கு எச்சரிக்கை

இதன் காரணமாக பச்சை குத்தியவர்களிடம் இருந்து இனி இரத்த தானம் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேசிய இரத்த மாற்று சேவையின் பணிப்பாளர் வைத்தியர் லக்ஸ்மன் எதிரிசிங்க கூறியுள்ளார்.

இந்த நாட்டில் உள்ள பெரும்பாலான பச்சை குத்தும் மையங்கள் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை பின்பற்றாததால் ஆபத்து மேலும் தீவிரமடைவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இரத்த தானம் செய்பவரின் இரத்தம் கூறுகளாக பிரிக்கப்படுவதால், இரத்தம் பெறுபவர்களின் உயிருக்கு தேவையற்ற ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேசிய இரத்தமாற்ற சேவை தீர்மானித்துள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, பச்சை குத்துதல், தோல் குத்துதல் போன்ற செயல்களைச் செய்பவர்கள், ஒரு வருடத்திற்கு இரத்த தானம் செய்பவர்களாகத் தொடர்பு கொள்ளப்பட மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுளள்து

பழிக்கு பழி வாங்கவே வீட்டை எரித்தோம்
Posted in இலங்கை செய்திகள்

பழிக்கு பழி வாங்கவே வீட்டை எரித்தோம்

பழிக்கு பழி வாங்கவே வீட்டை எரித்தோம்

பழிக்கு பழி வாங்கவே சண்டிலிப்பாயில் வீடொன்றினை உடைத்து வீட்டிற்கு தீ வைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக, சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் பொலிஸாருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்த வன்முறை கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததுடன் வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டின் உடைமைகளை சேதமாக்கி, உடமைகளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.

அதில் சுமார் 20 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகின.

பழிக்கு பழி வாங்கவே வீட்டை எரித்தோம்

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவரை புதன்கிழமை (23) கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.

அதன் போது , இதற்கு முதல் நடந்த வன்முறை சம்பவம் ஒன்றிற்கு பழி வாங்கவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் , இரண்டு வாள்கள் , இரும்பு கம்பி ஒன்று என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 06 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள் , வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு, யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனவிரத்தின் வழிகாட்டலில் , யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் கீழ் குறித்த மூன்று சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை

9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது

இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.

அம்பாறையில் ஐஸ் மழை
Posted in இலங்கை செய்திகள்

அம்பாறையில் ஐஸ் மழை

அம்பாறையில் ஐஸ் மழை

அம்பாறை, பதியதலாவ பிரதேசத்தில் ஐஸ் கட்டியுடன் வீசிய பலத்த காற்றினால் பாரிய மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் வீட்டின் கூரைகளும் தூக்கி வீசப்பட்டுள்ளன.

எதிர்பாராத விதமாக திடீரென்று ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பதியத்தலாவ முழு பிரதேச மக்களும் பலவிதமான இன்னல்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அம்பாறை- பதியத்தலாவ வீதி, மட்டக்களப்பு- பதுளை வீதி, கண்டி வீதி போன்ற இடங்களில் பாரிய மரங்கள் வீழ்ந்ததால் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டது, தூர இடங்களுக்கு அவசரமாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்று பாதைகளை பயன்படுத்தியதாக பதியத்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறையில் ஐஸ் மழை

பதியத்தலாவ கனிஷ்ட வித்தியாலய இரண்டு மாடிக்கட்டடத்தில் மரமொன்று முறிந்து விழுந்ததால் கட்டிடம் பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் அருகிலிருந்த தற்காலிக வகுப்பறை தொகுதியின் கூரை பலத்த காற்றினால் தூர வீசப்பட்டுள்ளது.

இதே வேளையில் மின்சாரமும் தடைப்பட்டிருந்ததால் பிரதேசமெங்கும் இருளில் மூழ்கியிருந்ததாகவும் மகா ஓயா இலங்கை மின்சாரசபை ஊழியர்கள் அம்பாறையிலிருந்து மேலதிக ஊழியர்களை வரவழைத்து மின்சார வினியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக தங்குவதற்கான தற்காலிக ஏற்பாடுகளை பதியத்தலாவ பிரதேச செயலகம் மேற்கொண்டிருந்ததாக பிரதேச செயலக நிர்வாக உத்தியோஸ்தர் தெரிவித்தார்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

இரத்மலானை கொலை சந்தேக நபர் கைது

இரத்மலானை கொலை சந்தேக நபர் கைது

இரத்மலானை ரயில் நிலையத்திற்கு அருகில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் குற்றத்திற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ரத்மலானையைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபரிடம் இருந்து 10 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21ஆம் திகதி இரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக உள்ள கடையொன்றில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்
Posted in இலங்கை செய்திகள்

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்

இந்தியாவின் அத்திப்பட்டி போன்று காணாமல் போன கிராமமாக வயலூர் கிராமம் அமைந்துள்ளதாகவும் 38 வருடங்கள் பூர்த்தியாவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) நடைபெற்ற இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குவிதி கட்டுப்பாடுகள் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“ஏற்றுமதி இறக்குமதி தொடர்பாகவும் வெளிநாட்டு கடன்கள் தொடர்பாகவும் இங்கே பேசப்படுகின்றது. இது வளமான எழில் மிக்க நாடாகும். ஆனால் பொருத்தமான நிகழ்ச்சி நிரல் இன்றி வெளிநாட்டவர்களிடம் கையேந்தும் நிலையிலேயே நாடு இருக்கின்றது.

அத்திப்பட்டி போல வயலூர் கிராமம்

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தங்களின் அரசியல் அதிகாரங்களை முன்னிருத்தி அவர்களுக்கு தேவையான வேலைகளையே செய்தார்களே தவிர மக்களுக்காக எதனையும் செய்யவில்லை என்பது தற்போதைய பொருளாதார பின்னடைவு எடுத்துக் காட்டுகின்றது.

எவ்வாறாயினும் இனவாத, மதவாத சிந்தனை கொண்ட அரசாட்சி நடப்பதும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாகும். இந்த நாட்டு மக்களை தெளிவான சிந்தனையோடு ஆட்சியாளர்கள் அனுகவில்லை.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர் போராட்டம் முதன் முதலில் இடம்பெற்ற, இந்தியாவில் அத்திப்பட்டி கிராமம் போன்று அழிக்கப்பட்டு காணாமல் போன கிராமமாக திருக்கோவில் பிரதேசத்தில் வயலூர் கிராமம் அமைந்துள்ளது.

இதற்கு 38 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அம்பாறை மாவட்டத்தில் பல தமிழ் கிராமங்கள் சிங்க ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்டு தமிழ் மக்கள் வாழ்ந்த இடமே இல்லாமல் போன கிராமமாக இது இருக்கின்றது.

1985 ஓகஸ்ட் 25ஆம் திகதி யுத்த நிறுத்த சமாதான திம்பு பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் அப்பாவி விவசாயிகள் கொல்லப்பட்டு கிராமமே அழிக்கப்பட்ட கிராமமாக இது உள்ளது.

இனிமேலும் இன ரீதியிலான அடக்குமுறை இருக்கக் கூடாது என்று கோருவதுடன், குறித்த சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்காக நான் இந்த சபையில் அஞ்சலியை செலுத்திக்கொள்கின்றேன்” என்றார்.

சார்ல்ஸை சந்தித்தார் ஜூலி சங்
Posted in இலங்கை செய்திகள்

சார்ல்ஸை சந்தித்தார் ஜூலி சங்

சார்ல்ஸை சந்தித்தார் ஜூலி சங்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் வடக்கு ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ல்ஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, புதன்கிழமை (23) இடம்பெற்றது.

சமூகப் பொருளாதார சவால்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் வடக்கு மாகாணத்துக்கான அவரது முன்னுரிமைகள் மற்றும் வடக்கின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு நாம் எவ்வாறு மேலும் ஆதரவளிக்க முடியும் என்பது குறித்து ஆளுனரிடம் கேட்டறிந்ததாக டுவிட்டரில் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

சார்ல்ஸை சந்தித்தார் ஜூலி சங்

பிராந்தியத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளை நேரடியாகப் புரிந்துகொள்வதற்கும், அமெரிக்க உதவி மற்றும் ஒத்துழைப்புக்கான கூடுதல் வாய்ப்புகளை ஆராய்வதற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பலாலி விமான நிலையத்தின் ஊடாக யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஐயம் ஒன்றை மேற்கொண்ட அவர் பல்வேறு இடங்களிற்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

மரக்கறிகளின் விலை திடீர் வீழ்ச்சி
Posted in இலங்கை செய்திகள்

விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்

விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்

யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்களில் விற்கப்படும் உணவு பண்டங்களின் விலை தொடர்பில் உரிய தரப்பினர்கள் அறிவுறுத்தல்களை செவி சாய்க்காவிட்டால் மேலதிக நடவடிக்கைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவ பாலசுந்தரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலைகளை ஒழுங்குபடுத்துமாறு சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியும் இதுவரை எழுத்து மூலமான உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் நல்லூரில் ஒரு கப் பால் தேனீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவது தொடர்பில் அரசாங்க அதிபரை செவ்வாய்க்கிழமை (22) தொடர்பு கொண்டு வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

விலைகள் மேலதிக நடவடிக்கை வேண்டும்

அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சிற்றுண்டி உரிமையாளர்கள் வர்த்தக சங்கத்தினர் உணவகத்தினர் மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்கள் சார்ந்தவர்களுடனான உயர் மட்ட கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் உணவு பண்டங்களின் மாறுபட்ட விலைகள் தொடர்பில் பேசப்பட்ட நிலையில் உணவக உரிமையாளர்கள் தமக்குள்ளே ஒரு சங்கமாக இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி விலைகள் தொடர்பில் மாவட்ட செயலகத்திற்கு அறியத் தருமாறு கூறினேன். அதற்கான கால எல்லையும் முடிவடைந்த நிலையில் பதில் தரவில்லை.

நல்லூர் சம்பவம் தொடர்பில் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரை சம்பவம் தொடர்பில் நேரில் சென்று பார்வையிடுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளேன்” என்றார்.

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை

சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ஒரு மனநோயாளி என்று கூறி அவரை சாடிய சரத் வீரசேகர எம்.பிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட எம்.பி.யும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு வலியுறுத்திய சுமந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்,

“முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியை சரத் வீரசேகர எம்.பி. இந்த பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை கடுமையாக விமர்சித்துள்ளார். நீதிபதியின் மனைவி என்று அவர்களது தனிப்பட்ட விடயங்களை பாராளுமன்றத்தில் குறிப்பிட்டதுடன் நீதிபதியை ஒரு மனநோயாளி என்று முறையற்ற வகையில் விமர்சித்துள்ளார்.

சரத் வீரசேகரவுக்கு எதிராக நடவடிக்கை

பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் 83 ஆவது பிரிவுக்கு அமைய நீதிபதிகளையும், நீதிமன்ற நடவடிக்கைகளையும் பாராளுமன்றத்தில் சவாலுக்குட்படுத்த முடியாது. ஆனால் சரத் வீரசேகர தனது உரையின் போது நீதிபதியின் பெயரை சுட்டிக்காட்டி அவரை விமர்சித்துள்ளார் .இவை பாரதூரமானது. நிலையியற்கட்டளை 83 ஐ அப்பட்டமாக மீறும் செயல்.

சரத் வீரசேகர எம்.பி. இதற்கு முன்னரும் பாராளுமன்ற சிறப்புரிமை ஊடாக நீதிபதியை கடுமையாக விமர்சித்தார். இவரது கருத்துக்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிக்கை வெளியிட்டதுடன், நீதிபதிகள், சட்டத்தரணிகள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

அவர் மீண்டும் இவ்வாறு நீதிபதியை விமர்சித்துள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து சரத் வீரசேகர எம்.பி. மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.

அத்துடன் அவர் ஒரு முறை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு எழுதிய கடிதத்தில் எனது பெயரைக்குறிப்பிட்டு நான் நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக குற்றம்சாட்டியிருந்தார். அதனை நான் நிராகரிக்கின்றேன். நான் எந்தவொரு நீதிபதியின் பெயரையும் குறிப்பிடவில்லை” என்றார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழின் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் நேற்று (21) மாலை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் ஐஸ் போதைப் பொருளை அதிகளவில் பாவித்த நிலையில் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழில் பிரபல வர்த்தகரின் மகன் மர்மமான முறையில் உயிரிழப்பு

மீட்கப்பட்ட சடலம் யாழ் போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இன்று சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் பின்னரே உயிரிழப்புக்கான உறுதியான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த குமார்,

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் கல்வி அமைச்சர் என்ற வகையில் கல்வித் துறையின் முன்னேற்றம் குறித்து விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், கல்வித் துறையில் பல்வேறு மறுசீரமைப்புகளை மேற்கொள்வதற்வதற்கான பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் தெரிவித்தார்.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

நவீன உலகுக்கு முகங்கொடுக்கக் கூடியவாறு, எமது மாணவர்களை தயார்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், அதற்காக விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல்,

கலைத்துறை, கணிதவியல் உள்ளிட்ட பாட விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் “STEAM” என்ற தொனிப்பொருளில் எதிர்காலத்தில் கல்வி மறுசீரமைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது தெரவித்தார்.

க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை மாணவர்கள் தமது நேரத்தை வீணாகக் கழிப்பதைத் தவிர்க்கும் வகையில், அவர்களுக்கு ஆங்கிலம், தொழில்நுட்பம் மற்றும் தொழிற்பயிற்சிகளுடன் கூடிய பாடநெறிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இது மாணவர்கள் எதிர்காலத்தில் சிறந்த தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள உதவும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அண்மையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் இருந்து வெளியேறிவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது

பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்கவும் மேலும் இரண்டாம் மொழி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கும் அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை

அந்த வகையில் ஏற்கனவே சுமார் 8000 பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, எதிர்காலத்தில் மேலும் 5500 பட்டதாரிகள், ஆசிரியர்களாக இணைத்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் மேலும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களும் நியமிக்கப்பட உள்ளனர் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், நாடளாவிய ரீதியில் நிலவும் ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த கோரியும், இறந்தவருக்கு நீதி கோரியும் வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (22.08) முன்னெடுக்கப்பட்டது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு சென்றிருந்த இளம் குடும்பஸ்தரை அங்கு மது அருந்திக் கொண்டிருந்த இருவர் அழைத்து கதைத்துள்ளனர்.

இதன்போது, குறித்த இளம் குடும்பஸ்தரை தாக்கி நிலத்தில் தூக்கி போட்டுள்ளனர். இதனால் இளம் குடும்பஸ்தர் படுகாயமடைந்துள்ளார்.

அங்கு நின்றவர்கள் அவரது வீட்டிற்கு தகவல் வழங்கியதையடுத்து, படுகாயமடைந்த குடும்பஸ்தரின் தாயார் வருகை தந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்த போதும் குறித்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார்.

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

இச் சம்பவத்தில், வவுனியா, மகாறம்பைக்குளம் காந்தி வீதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரதீபன் (தீபன்) என்பவரே உயிரிழந்தவராவார். இவரது இறுதிக் கிரியைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று நேற்று (22.08) பூந்தோட்டம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இதன்போது, சடலத்தை எடுத்து வந்த அக் கிராம மக்களும், கிராம பொது அமைப்புக்களும் சடலத்துடன் போதைப் பொருள் பாவனைக்கு எதிராகவும், இறந்தாவருக்கு நீதி கோரியும் பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியாவில் சடலத்துடன் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஐஸ் – கஞ்சா- மாபா- ஹெரோயின் – போதை மாத்திரை என்பவற்றை தடை செய், தொடர்ச்சியாக அடாவடித்தனம் செய்வோரை கைது செய், மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருட்களை தடை செய்’ என எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம்

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம்

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு – திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.

மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள்

காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம்

இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை

முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ்

கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.