Tag: எலிக்காய்ச்சல்
நாட்டில் எலிக் காய்ச்சல்
நாட்டில் எலிக் காய்ச்சல்
நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளிகள் அதிகரித்துவருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் பெரும்பாலும் பதிவாகி வருவதாக
சமூக சுகாதார நிபுணர் டொக்டர் துஷானி தபரேரா தெரிவித்தார்.
இந்த நோய் ஒரு பாக்டீரியாவால் பரவுகிறது என்றும், இந்த பாக்டீரியா பொதுவாக பாலூட்டிகளின் சிறுநீர் பாதையில் வாழ்கிறது என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக நீரில் மூழ்கிய நெல் வயல்களுக்குள் செல்லும்போது சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு சுகாதாரத் துறைகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கொவிட் ஒருபக்கம் பரவுவதாகவும் உயிரிழப்புக்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுவரும் இந்நிலையில், தற்போது எலிக் காய்ச்சல் பரவிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது,
யாழில் எலிக்காய்ச்சல் ஓய்ந்தது , யாழ்ப்பாணத்தில் பரவலாக பரவி வந்த எலி காய்ச்சலானது தற்பொழுது கட்டுப்பாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் பருத்துறை , கரவெட்டி , சாவக் கச்சேரி பகுதிகளில் சமீப காலங்களாக பரவலாக பரவி வந்த எலிக்காய்ச்சல் நோய் தற்பொழுது
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ்ப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரர் அவர்கள் தெரிவித்து இருக்கின்றார் .
இந்த நோயானது அதிகரித்து வருவதாகவும் தற்போது அவை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
தற்பொழுது எலிக்காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவது எண்ணிக்கையில் சடுதியாக குறைவடைந்து காணப்படுவதாக மேல் அதிகமாக தெரிவித்தார்.
அதே நேரம் இந்த நோய் தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் ஐயா கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் .
தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கை மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டால் இந்த நோயை மிக வேகமாக கட்டுப்படுத்த முடியும் என அவர் கருத்துக்களை முன் வைத்தார்.
யாழில் எலிக்காய்ச்சல்
யாழில் எலிக்காய்ச்சல்
யாழில் எலிக்காய்ச்சல் ,யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சலால் வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வட்டுக்கோட்டை சங்கரத்தை பகுதியை சேர்ந்த சிறிஸ்கந்தராஜா சிவாஸ்கர் (வயது 34) என்பவரே உயிரிழந்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த 22ஆம் திகதி சங்கானை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கிருந்து யாழ் .
போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழப்புக்கு எலி காய்ச்சலே காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக எலிக் காய்ச்சல் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் வியாழக்கிழமை (24) ஒருவர் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்
வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் எலிக்காய்ச்சல் நோய்க்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதவேளை, குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கூறியுள்ளது
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைதுby நிருபர் காவலன்
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கைby நிருபர் காவலன்
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்by நிருபர் காவலன்
- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்by நிருபர் காவலன்























