Tag: பெண் குழந்தை பலி
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
வவுனியா – நெளுக்குளம் பகுதியில் நீர்த்தொட்டியில் விழுந்து இரண்டு வயது பெண் குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று மாலை வீட்டு முற்றத்தில் குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. எனினும் சிறிது நேரத்தில் குழந்தையை காணாத நிலையில் பெற்றோர் குழந்தையை தேடியுள்ளனர்.
இதன்போது குறித்த குழந்தை கிணற்றிற்கு அருகாமையில் இருந்த நீர்த்தொட்டியில் வீழ்ந்துள்ளமை கண்டறியப்பட்டது.
நீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி
உடனடியாக மீட்கப்பட்ட குழந்தை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. எனினும் முன்னமே குழந்தை மரணமடைந்ததாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் நெளுக்குளம் பகுதியை சேர்ந்த லிங்கராயா திவிக்கா என்ற இரண்டு வயதான குழந்தையே மரணமடைந்தது.
சம்பவம் தொடர்பாக நெளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
- பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டதுby நிருபர் காவலன்
- உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனைby நிருபர் காவலன்
- கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்by நிருபர் காவலன்
- இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடிby நிருபர் காவலன்
- இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்காby நிருபர் காவலன்













