Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இரண்டு சடலங்கள் மீட்பு
இரண்டு சடலங்கள் மீட்பு
இரண்டு சடலங்கள் மீட்பு .தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் கைவிடப்பட்ட வீட்டில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நடத்தப்பட்ட சோதனை
அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் (படிக
மெத்தம்பேட்டமைன்) என்ற போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 10 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் திடீரென நோய்வாய்ப்பட்டு தங்காலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.
பொலிஸார் முழு அளவிலான விசாரணை
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் முழு அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளனர்,
அதே நேரத்தில் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய அரசு பகுப்பாய்வாளர் துறை பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய்
விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள் விஜய் ,நெல் கொள்முதல் நிலையங்களில், டெல்டா மாவட்ட விவசாயிகளிடம் இருந்து மூட்டை ஒன்றுக்கு 40 இந்திய ரூபா என பல கோடி ரூபாய் கொமிஷனாகப் பெறப்படுகிறது.
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும்
இதற்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என்று த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேற்று மதியம் நாகப்பட்டினத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அதன்பின், மாலை 5 மணி அளவில் திருவாரூர் தெற்கு வீதியில் நகராட்சி அலுவலகம் அருகே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இதன்போது அவர் உரையாற்றுகையில்,
டெல்டா பகுதியில இருக்கற விவசாயிங்க ஒரு கொடுமைய அனுபவச்சிகிட்டு இருக்காங்க. அதுபற்றி புகார் ஒன்று வந்தது.
அது என்னன்னா, இந்த மாவட்டத்துல இருக்கிற நெல் கொள்முதல் மையங்கள்ல ஒரு மூட்டைக்கு 10 ரூபா கொடுக்கறாங்க. ஆனா, அதுக்கு மேல 40 ரூபா கொமிஷன் வாங்கறாங்க.
ஒரு டன்னுக்கு 1,000 ரூபா கொமிஷன். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்கனா, கடந்த நான்கரை வருடங்கள்ல இந்த டெல்டா பகுதி விவசாயிங்க கிட்ட இருந்து கொமிஷனா பல கோடி புடுங்கி இருக்காங்க.
இதை வேற யாராவது சொல்லி இருந்தாகூட நான் நம்பி இருக்க மாட்டேன். ஆனா, எங்கிட்ட சொன்னதே விவசாயிங்கதான். விவசாயிங்க பொய் சொல்ல மாட்டாங்க.
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க
கேள்வி மேல் கேள்வி கேட்கிறேனே என யாரும் நினைக்காதீங்க. தீர்வைத் தேடி தீர்வை நோக்கி போவதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் லட்சியமே.
எங்கள் தேர்தல் அறிக்கையில் இதை விளக்கமாக தெரிவிப்போம். இந்த பொய்யான தேர்தல் அறிக்கையை நாங்கள் கொடுக்கவே மாட்டோம்.
எது நடப்பதற்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டுமே சொல்லுவோம், அதை செய்வோம் என்றார்
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து ,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று அதிகாலை
பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம்
இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி
பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி
வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில்
குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ்ஸில் நடத்துனர் படுகாயமடைந்தார்.
அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் பஸ்ஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.மற்றும் சொகுசு பஸ் ஆட்டோ என்பது பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை
ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை
ரோபோ சங்கர் மரணம் சர்ச்சை ,நடிகர் ரோபோ சங்கர் உடல்நல குறைவால் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். ஏற்கனவே அதிகமாக மது குடித்ததால்
மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர்
மரணத்தின் விளிம்புவரை சென்று உயிர் பிழைத்த அவர் இப்போது மரணத்தை தழுவியிருப்பது பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் நடிகரும், சங்கரின் நெருங்கிய நண்பருமான காதல் சுகுமார் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த
பேட்டியில் பேசியிருக்கும் விஷயங்கள் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டார். அதிக அளவு அவர் மதுவை தொடர்ந்து குடித்ததால் நோய் வந்து நண்பர்கள், மருத்துவர்கள், குடும்பத்தினர் உதவியோடு அதிலிருந்து
மீண்டார். அப்படி மீண்ட அவர் அறவே குடியை நிறுத்தி தனது கரியரில் முழுக்க முழுக்க கவனம் செலுத்தினார்.
மேலும் மது ஏற்படுத்தும் தீங்கு குறித்து தொடர்ந்து பேசிவந்த அவர்; அதுதொடர்பான விளம்பரங்களிலும் நடித்தார்.
ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்
அவரது உடல்நிலை திடீரென சில நாட்களுக்கு முன்பு குன்றியது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது ரத்த வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அவர்; பெருங்குடியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது. எப்படியாவது அவரை உயிர் பிழைக்க வைத்துவிட வேண்டும் என்பதில் மருத்துவர்களுக்கு போராடினார்கள்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையிலேயே உயிரிழந்தார்.
சங்கரின் இந்த உயிரிழப்பு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு பெருத்த இடியாகத்தான் இந்த மரணம் அமைந்திருக்கிறது.
திரைத்துறையினர், ரசிகர்கள் என பலரும் சங்கரின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி; குடும்பத்தினருக்கு தங்களது ஆறுதலை தெரிவித்தார்கள்.
சங்கரின் இறுதி ஊர்வலத்தின்போது அவரது மனைவி பிரியங்கா நடனமாடி அஞ்சலி செலுத்தி சங்கரை வழியனுப்பி வைத்தார். இதனை பார்த்த ஒருதரப்பினர் வழக்கம்போல் அவரை விமர்சிக்க தொடங்கினார்கள்.
ஆனால் மரண வீட்டில் நடனமாடுவது ஒன்று பெரிய குற்றம் இல்லை; இதற்கு முன்னரும் பல மரண நிகழ்வுகளில் இது நடந்திருக்கும் சூழலில்; பிரியங்காவை
ஏன் தேவையில்லாமல் விமர்சிக்க வேண்டும் என்று சப்போர்ட் செய்து; விமர்சிப்பவர்களுக்கு மனசாட்சியே இல்லையா என்று கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
இந்நிலையில் ரோபோ சங்கரின் நெருங்கிய நண்பரும், நடிகருமான காதல் சுகுமார் வாவ் தமிழா என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார்.
அந்தப் பேட்டியில் அவர், “சங்கர் திறமை வாய்ந்த கலைஞன். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் ஏற்கனவே உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.
பிறகு மீண்டு வந்தார். பிரியங்காவிடம் சங்கரின் பழக்கவழக்கங்கள் குறித்து கேட்டால்; எவ்வளவுதான் சொல்வது என்று சோர்வுடன் கேட்பார்.
சங்கர் அதிலிருந்து வெளியே வர வேண்டுமென்று பிரியங்கா பேசாமல் இருந்து பார்த்தார், சாப்பிடாமல் இருந்து பார்த்தார்.
சங்கருக்கு இலங்கை எப்போதுமே சொந்த ஊர் போல்தான். நிகழ்ச்சிகளும் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அடிக்கடி செல்வார். சமீபத்தில்கூட அவர் அங்கு சென்றிருந்தார்.
அப்போது விருந்து ஒன்று நடந்ததாகவும், மீண்டும் சில பழக்கங்களை சங்கர் தொடர்ந்தார் என்றும் சொல்கிறார்கள்.
மதுவுக்கு அடிமையாகி சந்திரபாபு, என்.எஸ்.கே, கலாபவன் மணி, ரோபோ சங்கர் என பலர் 50 வயதை கடக்காமலேயே சென்றுவிட்டார்கள்” என்றார்.
இன்ஜின் ஆயில்குடித்து உயிர்வாழும் ஆயில்குமார்
இன்ஜின் ஆயில்குடித்து உயிர்வாழும் ஆயில்குமார்
இன்ஜின் ஆயில்குடித்து உயிர்வாழும் ஆயில்குமார் ,கர்நாடகாவில் ஆயில் குமார் என்பவர் தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயில் குடித்து உயிர் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. உடலுக்கு தீங்கான
ஆயிலை குடித்து வரும் இவர்
ஆயிலை குடித்து வரும் இவர் இதுவரை மருத்துவமனைக்கே சென்றதில்லை என கூறுவது வியப்பின் உச்சிக்கு அழைத்து செல்கிறது.
அண்மையில் சமூக வலைதளங்களில் ஆயில் குமார் குறித்த வீடியோ ஒன்று வைரலானது. அதில், ஐயப்ப சுவாமி பக்தர் ஒருவர் வாகனங்களுக்கு பயன்படுத்
வீடியோவை கண்ட லட்சக்கணக்கான பார்வையாளர்கள்
தப்படும் இன்ஜின் ஆயிலை குடித்துக்கொண்டே பேசுகிறார். இந்த வீடியோவை கண்ட லட்சக்கணக்கான பார்வையாளர்கள் ஆச்சரியத்தோடு பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ள 45 வயது மதிக்கத்தக்க நபரின் பெயர் குமார். கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தினமும் ஏழெட்டு லிட்டர் இன்ஜின் ஆயிலை குடிப்பதால் மக்களால் ‘ஆயில் குமார்’ என அழைக்கப்படுகிறார்.
காலை, மதிய உணவை உண்ணாமல் மூன்று வேளையும் ஆயிலே குடித்து வருகிறார். ஆனாலும் இதுவரை உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதே இல்லை.
வருடந்தோறும் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு பாத யாத்திரையாக செல்வதால் தனக்கு எந்த தீங்கும் நேரவில்லை என ஊடகங்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறும்போது, ‘‘பயன்படுத்தப்பட்ட இன்ஜின் ஆயில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. அதிலுள்ள பாலிசைக்ளிக் ஹைட்ரோ கார்பன் புற்றுநோயை உருவாக்கும்.
ஆயிலில் கலக்கப்பட்டுள்ள இரும்பு, அலுமினியம், தாமிரம், ஈயம் போன்ற தனிமங்கள் நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், நரம்பு மண்டலம் ஆகியற்றை கடுமையாக பாதிக்கும்.
இதை குடித்தாலோ, தொடர்ந்து சுவாசித்தாலோ சுவாச மண்டல பாதிப்பும் வயிற்று போக்கும் ஏற்படும்’’ என தெரிவிக்கின்றனர்.
ஆனால் ஆயில் குமார் எந்த பாதிப்பும் இல்லாமல் இன்ஜின் ஆயில் குடித்தவாறே பாத யாத்திரை மேற்கொள்வது வியப்பை ஏற்படுத்துகிறது.ஆயில் குமார்
தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு
தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு
தூக்கில்தொங்கியபடி பெண்ணின் சடலம் மீட்பு ,வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குயில்வத்த பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று காலை
தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில்
தோட்டத்தில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 62 வயதுடைய பெண்ணின் சடலத்தை பொலிஸ் மீட்டுள்ளனர்.
இறந்த பெண் கண்ணன் மணிராணி என அடையாளம் காணப்பட்டதாக வட்டவளை பொலிஸ் தலைமைஆய்வாளர் சந்தன கமகே தெரிவித்துள்ளார்.
குறித்த பெண் தனது சேலையுடன் மரத்தில் தொங்கிய நிலையில் காணப்படுவதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவித்ததை அடுத்து, சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா
இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பதை தீர்மானிக்க வட்டவளை பொலிஸார், ஹட்டன் பொலிஸ் பிரிவு புலனாய்வுக் குழுவுடன் இணைந்து விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது
இலங்கை இராணுவ சிப்பாய் கைது ,ஒரு பாடசாலையில் படிக்கும் 10, 12 மற்றும் 13 வயதுடைய மூன்று சிறுவர்களை கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அத்தகைய மற்றொரு குழந்தையை பாலியல் .
பாடசாலையின் நிர்வாகக் குழு
துஷ்பிரயோகம் செய்ததாக பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராக இருந்த ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக பொலிஸ் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் 62 வயதுடைய மாற்றுத்திறனாளி.
பாடசாலையில் செவித்திறன் குறைபாடுள்ள மாணவனை அவருடைய தாயார் அழைத்துச் செல்ல வந்தபோது
குழந்தையை காணவில்லை, பின்னர் அவர் பாடசாலையில் கிணற்று இருக்கும் பக்கத்தில் இருந்து ஓடிவந்துள்ளார்.
அதுதொடர்பில் மகனிடம் தாயார் வினவியுள்ளார்.
அதன்பின்னர், அந்த தாயார் அளித்த புகாரில் சந்தேக நபர் பல கடுமையான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ள இந்தக் குழந்தைகளிடமிருந்து வாக்குமூலங்களை எடுக்கும்போது,
சைகை மொழிபெயர்ப்பாளரின் உதவியுடன் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்ததாகவும், பாடசாலையின் நிர்வாகக் குழுவின் பொருளாளராகச்
செயல்படும் நபர் இந்த மைனர் சிறுவர்கள் மீது பல சந்தர்ப்பங்களில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பொலிஸ் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் அடிக்கடி பாடசாலைக்கு வருவார், இருட்டிய பிறகு திரும்புவார், கூடுதலாக, அவர் தங்குமிடங்களுக்கு வந்து,
கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடிவிட்டு விளக்குகளை அணைப்பார் என்று வாக்குமூலங்கள் மேலும் கூறுகின்றன.
ஹட்டனில் வீடுபுகுந்து கைவரிசை யுவதிசிக்கினார்
ஹட்டனில் வீடுபுகுந்து கைவரிசை யுவதிசிக்கினார்
ஹட்டனில் வீடுபுகுந்து கைவரிசை யுவதிசிக்கினார் ,ஹட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எபோட்சிலி மாஸ்க் டிவிசனில் வீடொன்றுக்குள் புகுந்து
களவாடிய ஒரு தொகை பணம்
களவாடிய ஒரு தொகை பணத்துடன் 21 வயது யுவதியை ஹட்டன் பொலிஸார் சந்தேகத்தின் பேரில் வியாழக்கிழமை(18) மாலை கைது செய்துள்ளனர்.
வீட்டுக்குள் புகுந்த பக்கத்து வீட்டு யுவதி, அங்கு அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு பெட்டகத்தை எடுத்துள்ளார்.
அதிலிருந்த 95 ஆயிரம் ரூபாய் பணம் , வங்கி தானியங்கி பணம் பெறும் அட்டை ( ATM CARD)
ஆள் அடையாள அட்டை
மற்றும் ஆள் அடையாள அட்டை என்பன அந்த யுவதியால் திருடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து பணத்தை எடுத்துக்கொண்டதன் பின்னர், அந்த பெட்டியை தேயிலை செடிகளுக்குள் வீசிவிட்டுள்ளார்.
அதன் பின்னர் குறித்த ATM அட்டையை பயன்படுத்தி ஹட்டனில் உள்ள வங்கி ஒன்றில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். விசாரணைகளின் பின்னர், அந்த பாதுகாப்பு பெட்டகமும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து வங்கியில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் உதவியுடன் சந்தேக நபரான 21 வயதுடைய யுவதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த யுவதியிடமிருந்து 195,000 ரூபாய் பணத்தையும் மீட்டுள்ளனர். அந்த யுவதி, ஹட்டனில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவர் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபரான அந்த யுவதியை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் எம்பி கனகசபை காலமானார்
முன்னாள் எம்பி கனகசபை காலமானார்
முன்னாள் எம்பி கனகசபை காலமானார் ,மட்டக்களப்பு களுதாவளையை சேர்ந்ந தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் .
பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை
பாராளுமன்ற உறுப்பினர் தன்மன்பிள்ளை கனகசபை, தனது 86 ஆவது வயதில் நேற்று (19) வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.
1939.03.20 அன்று பிறந்த ஓய்வுநிலை அரச உத்தியோகத்தரான இவர் 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டி
தேசியக் கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்தேசியத்தின் தீவிர பற்றாளராய் இருந்து தமிழ்த் தேசியப் பரப்பில் பயணித்த அன்னாரது இழப்பு பலரையும் கவலைகொள்ளச் செய்துள்ளது.
பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
பூசகர் மயங்கி விழுந்து உயிரிழப்பு ,யாழ். ஏழாலை மயிலங்காடு ஞான வைரவர் ஆலய நித்திய பூசகர் ஆலய அர்த்த மண்டபத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன்
இவ்வாறு உயிரிழந்தவர் கோவில் வீதி, சுதுமலை தெற்கு, மானிப்பாயைச் சேர்ந்த பிரபாகரன் சாருஜன் (வயது 29) என்பவராவார்.
குறித்த, பூசகர் இருமல் சளி காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை மானிப்பாயில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் மறுநாள் சளிக்கு ஆவியும் பிடித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்துக்கு பூசைக்கு சென்ற நிலையில், அர்த்தமண்டபத்தில் மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது.
யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் விசாரணைகளை
மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.
உடற்கூற்று பரிசோதனையில் நுரையிரலில் இரத்த அடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது.
வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு
வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு
வேலைநிறுத்தப் போராட்டம் நீடிப்பு மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தப் போராட்டத்தை நாளை (21) நள்ளிரவு வரை தொடர மின்சார தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை
அதேநேரம், மின்சார சபையை மறுசீரமைக்கும் மசோதாவை எதிர்த்து மின்சார தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி
முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மின்சார சபை ஊழியர்கள் குழுக்களாக இணைந்து மின்சார சபை தலைமையகத்தின் முன் இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
புதிய மின்சார சபை
புதிய மின்சார சபைச் சட்டத்தின் பாதகமான விளைவுகளை எதிர்த்து தொடர்ந்தும் போராடுவோம் என மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்
சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள்
சட்டத்தரணியின் வீட்டில் துப்பாக்கிகள் ,இரத்தினபுரி, கொலுவாவிலவத்தையில் உள்ள வீட்டிலிருந்து இலங்கையிலும்
துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்
வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாக்கிகளை இரத்தினபுரி பொலிஸார் அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
குறித்த வீட்டில் தனியாக வசித்து வந்தபோது திடீரென மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவர் இருந்துள்ளார்.
இரத்தினபுரி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கடந்த 17ஆம் திகதி ரோந்து பணியில் இருந்த அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, சட்டத்தரணி உயிரிழந்த வீட்டை சோதனை செய்தபோது பல துப்பாக்கி பாகங்கள் மற்றும் தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதில், போர 12 ரக துப்பாக்கி ஒன்று, ரிப்பீட்டர் வகை துப்பாக்கி ஒன்று, போர 12 ரக துப்பாக்கிகளின் 6 அசல் பாகங்கள், 11 பீப்பாய்கள், 2 சிறிய துப்பாக்கிகள்,
போர 12 மற்றும் 16 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் 440 புதிய தோட்டாக்கள் உட்பட பல துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் பாகங்கள் அடங்கியுள்ளதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிகள் சில குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா
இந்தத் துப்பாக்கிகள் சில குற்றச் செயல்களுக்காக வழங்கப்பட்டதா என்பதையும், இவற்றுடன் மேலதிக துப்பாக்கிகள் சில குழுக்களுக்கு
வழங்கப்பட்டதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடைபெறுவதாக இரத்தினபுரி தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன சுமனசிறி கூறினார்.
இத்துப்பாக்கிகளில் பல இலங்கையில் தயாரிக்கப்பட்டவை என்று சந்தேகிக்கப்படுவதால், அவை குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா
மஹிந்தவின் வீட்டுக்கு வந்த கோட்டா ,இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வந்த சிறப்புரிமைகளை
முன்னாள் ஜனாதிபதிகள்
ரத்து செய்யும் சட்ட சரத்துக்களுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதிகள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கொழும்பிலுள்ள விஜேராம இல்லத்தில் இருந்து வெளியேறி தங்காலை கார்ல்டன் இல்லத்தில் இருக்கின்றார்.
அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர்
இந்த நிலையில் அரசியல் பிரபலங்கள் மஹிந்தவை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் முன்னாள் ஜனாதிபதியும், மஹிந்தவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஸ மஹிந்தவை கார்ல்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார்.
சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு
சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு
சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் விளக்கமறியல் கொழும்பு மேலதிக
நீதவான் லஹிரு சில்வா உத்தரவினால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு வெள்ளிக்கிழமை (19) பிறப்பிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட கிரிப்பன்வெவ மகாவலி அதிகாரசபை சொத்துக்களுக்கு இழப்பீடு பெற
அரசாங்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது
வழக்கை விசாரிக்கும் நிரந்தர பிரதான நீதவான் விடுமுறையில் இருந்ததால் மேலதிக நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
சந்தேக நபருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்த உத்தரவு அன்றைய தினம் பிறப்பிக்கப்படும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு
எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு
எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு ,எல்ல விபத்து ஜீப்பின் பாதுகாப்பு எல்ல-வெல்லவாய பிரதான சாலையில் உள்ள 15வது மைல்கல்ஸ்ர பகுதியில் 1,000 அடி பள்ளத்தில் பாறையில் விழுந்து 16 பேர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்த சுற்றுலாப் பேருந்துடன் மோதிய
சொகுசு ஜீப்பின் பாதுகாப்பு கெமரா
சுமார் 800 மில்லியன் ரூபாய் (80 மில்லியன் ரூபாய்) மதிப்புள்ள சொகுசு ஜீப்பின் பாதுகாப்பு கெமரா அமைப்பில் பதிவு செய்யும் வசதிகள் இல்லை
என்பது தெரியவந்துள்ளதாக எல்ல பொலிஸார் வியாழக்கிழமை (18) தெரிவித்துள்ளனர்.
ஜீப்பை விற்ற நிறுவனம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையிலேயே பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.
இந்த சொகுசு ஜீப் பொரலஸ்கமுவ பகுதியில் உள்ள ஒரு வாகன விற்பனையாளரிடமிருந்து 2023 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது என்றும், சொகுசு
ஜீப்பில் நான்கு நேரடி பாதுகாப்பு கெமராக்கள் உள்ளன என்றும், வாகனம் ஓட்டும் ஓட்டுநரின் வசதிக்காக கெமராக்கள் இயக்கப்படுகின்றன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்த சொகுசு ஜீப்களின் பாதுகாப்பு கெமராக்களின் பதிவு வசதிகளைப் பெறுவதற்கு, வாகன உரிமையாளர்கள் நிறுவனங்களிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும், அத்தகைய கோரிக்கை
விடுக்கப்பட்டால் மட்டுமே, சொகுசு ஜீப்களின் கெமராக்களில் பதிவு செய்யும் மென்பொருள் நிறுவப்படும் என்று நிறுவனம் தங்களுக்குத் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சொகுசு ஜீப்களை வாங்கும் பல வாகன உரிமையாளர்கள்
இதுபோன்ற சொகுசு ஜீப்களை வாங்கும் பல வாகன உரிமையாளர்கள் வாகனத்தின் கெமராக்களில் பதிவு செய்யும் மென்பொருளை நிறுவக்
கோருவதில்லை என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்கள் குழு ஒன்று நுவரெலியாவிலிருந்து தங்கள் குடும்பத்தினருடன் சுற்றுலாப் பயணமாக தங்காலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
4 ஆம் திகதி இரவு, சுற்றுலாப் பேருந்து, எல்லா-வெல்லவாய பிரதான சாலையில் 15வது மைல்கல் பகுதியில் அந்த பேருந்துக்கு முன்னால் வந்து
கொண்டிருந்த சொகுசு ஜீப்பில் மோதி, பின்னர் சாலையின் இருபுறமும் கட்டப்பட்ட பாதுகாப்பு இரும்பு வேலியில் மோதி, ராவணன் எல்லா பளளத்தில் விழுந்தது.
இந்த விபத்தில் தங்காலை நகராட்சி மன்றத்தின் செயலாளர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நகராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட 16 பேர் கொல்லப்பட்டனர்.
சம்பந்தப்பட்ட மோட்டார் வாகன விற்பனை நிறுவனம் மூலம் பண்டாரவளை நீதிமன்றம் பெற்ற நீதிமன்ற உத்தரவின் பேரில் எல்ல பொலிஸார் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார்
விஜய் வீட்டின் மொட்டை மாடியில் பதுங்கியிருந்த இளைஞர் யார் ,தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வீட்டில் இளைஞர் ஒருவர் நுழைந்தது
பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள்
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவலாளிகள் அந்த இளைஞரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை – நீலாங்கரை கேசினோ டிரைவ் பகுதியில் நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் வீடு அமைந்துள்ளது. அவரது வீட்டுக்கு எப்போதும் பாதுகாப்பு பணியில் காவல் துறையினர்,
தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ‘ஒய்’ செக்யூரிட்டி பிரிவினரும் ஈடுபவது வழக்கம்.
இந்த நிலையில் பலத்த பாதுகாப்பையும் மீறி இளைஞர் ஒருவர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
விஜய்யின் வீட்டு வளாகத்தில் நுழைந்த அந்த இளைஞர், மொட்டை மாடிக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் அமர்ந்திருந்ததை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டவர்கள் கவனித்துள்ளனர்.
அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
பின்னர் அவரை பிடித்து நீலாங்கரை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பிடிபட்ட அந்த இளைஞரிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அவர் மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (24) என்பதும், நான்கு ஆண்டுகளாக மனநலம்
பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் சித்தி வீட்டில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் நீலாங்கரை பொலிஸார் சேர்த்தனர்.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பலத்த பாதுகாப்பை மீறி அந்த இளைஞர் விஜய் வீட்டுக்குள் நுழைந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது
கொலையில் முடிந்த குடும்பப் பகை
கொலையில் முடிந்த குடும்பப் பகை
கொலையில் முடிந்த குடும்பப் பகை மீரிகம ரெந்தபொல பகுதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டு பெண் கொலை செய்யப்பட்டார்.
நேற்று (18) அந்தப் பெண் அவரது கணவரால் கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இறந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பெண்ணுடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பெண்ணின் சடலம் வத்துபிட்டிவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மீரிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்
பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்
பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல் | கொண்டாடும் பெண்கள் ஈழப் பெண்ணே ஈழப்பெண்ணே.
பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள்
வீழ்ந்து போன பெண்களை தட்டி எழுப்பிய வீர பாடல் ,இந்த பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள் .
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே என்ற பாட்டு பெண்ணினம் கொண்டாடும் நிலைக்கு ஏற்ற பாட்டாக எழுச்சி பாடலாக வெளிவந்துள்ளது .
யாழ்ப்பாணம் பாடல்களின் வரிசையில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 63 வது பாடலாக வெளிவருகிறது .
அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு
அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு அவரது முதலாவது பாடலாக உள்ளது .
பாடலின் பெயர் – ஈழப் பெண்ணே
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா இந்தியா
பாடல் வரிகள் – அகல்யா – லண்டன்
பாடலின் வரிகள்
பல்லவி
ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
எழுந்து வா நீ எழுந்து வா
தடைகள் உடைக்க
படைகள் நகர்த்த
தளராமல் நீ எழுந்து வா
அடக்கவா உன்னை முடக்கவா
அகிலம் விழிக்க எழுந்து வா
அங்கையற் கன்னியாய் வெடித்து வா – நீ
அங்கையற் கன்னியாய் வெடித்து வா
( சரணம் 1 )
இழிவா உனக்கு தலை குனிவா
விடை காண நீ எழுந்து வா
துணிவு காட்டு வீரம் நாட்டு
உன்னை யார் என உலகிற்கு காட்டு
தீண்டாமை உன்னை தீண்டவா – இந்த
தீயிலே நீ பொசுங்கி போகவா
தங்கமே நீ எழுந்து வா – இந்த
தரணி ஆள எழுந்து வா
( சரணம் 2 )
தவறுகளை தட்டி கேட்க கலங்காதே
துரோகத்தை துடைத்தெறிய தயங்காதே
தேச கொடியை நாட்ட எழுந்து வா
தேச புதல்வியே துணிந்து வா
வீர மங்கைகள் பிறந்த தேசமே
வீறு கொண்டு எழுந்து வா
பூமா தேவியாய் இருந்தவளே- இனி
பூகம்பமாய் வெடித்து வா
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர்
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர்
திலீபனுக்கு அஞ்சலி செலுத்திய மீனவஅமைச்சர் ,தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த சென்ற கடற்தொழில் அமைச்சரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர்
அந்நிலையில் நேற்று (17) மாலை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் மற்றும் தேசிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்கள் தியாக தீபத்திற்கு அஞ்சலி செலுத்த சென்று இருந்தனர்.
அதன் போது, அங்கிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அமைச்சரை அஞ்சலி செலுத்த அனுமதிக்க மாட்டோம் என தடுத்து நிறுத்தி முரண்பட்டனர்
ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார்
ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார்
ஆம்புலன்ஸ் விபத்து பீர்கேன்களை மீட்டபொலிஸார் ,தெனியாய பிரதேசத்தில் இருந்து மாத்தறை நோக்கி, இரண்டு நோயாளிகளை ஏற்றிச் சென்ற .
இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிப்பு

ஆம்புலன்ஸ் , விபத்துக்குள்ளான நிலையில் அதிலிருந்து இரண்டு பீர் கேன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக மொரவக்க பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெனியாய அடிப்படை வைத்தியசாலைக்கு சொந்தமான குறித்த ஆம்புலன்ஸ் மாத்தறை பொது மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற போது
மொரவக்க அது எல பகுதியில் வைத்து வீதியை விட்டு விலகி ஒரு வீட்டின் நுழைவாயிலில் மோதியுள்ளது.
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்
விபத்து இடம்பெற்ற நேரத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் பின்னர் பொலிஸில் சரணடைந்த நிலையில் அவர் விபத்தின்
போது குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பான விசாரணைக்காக மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆம்புலன்ஸில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட பீர் கேன்கள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.









































