Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
காணாமல் போன 76 குழந்தைகளை மீட்ட பெண் போலீஸ் பற்றிய வெப் தொடர் உருவாகிறது
காணாமல் போன 76 குழந்தைகளை மீட்ட பெண் போலீஸ் பற்றிய வெப் தொடர் உருவாகிறது
டெல்லியின் சமயபூர் பத்லி காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை கான்ஸ்டபிளான சீமா தாகா, கடந்த வருடம், காணாமல் போன 76 குழந்தைகளை மூன்று மாதத்திற்குள் மீட்டார். இதனால் அவருக்கு துணை ஆய்வாளராக பதவி உயர்வு கிடைத்தது.
சீமா தாகா, மீட்ட 76 குழந்தைகளில் 56 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள். டெல்லி மட்டுமல்லாது பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் சீமா குழந்தைகளை மீட்டார். 20 வயதில் இருந்து காவல்துறையில் பணிபுரிய ஆரம்பித்த
சீமா, அவரது கல்லூரியிலிருந்து தேர்வாகி, நேர்காணலின் மூலம் போலீஸ் வேலை கிடைத்த ஒரே நபராவார். சீமாவின் கணவரும் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
சீமா தாகா
இந்நிலையில், தற்போது சீமாவின் இந்தச் சாதனை பற்றிய புதிய வெப் தொடர் உருவாகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி உள்ளது. தற்போது இந்த வெப் தொடருக்கான முதற்கட்ட
பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதில் சீமா தாகா வேடத்தில் நடிக்கப்போவது யார் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டைக்காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்
சண்டைக்காட்சிகளில் சாகசங்கள் செய்த கார்த்திக்
மனிதன் சினி ஆர்ட்ஸ் சார்பில் நிர்மலா தேவி ஜெயமுருகன் தயாரிக்கும் படம் ‘தீ இவன்’. இந்த படத்தை ரோஜா மலரே, அடடா என்ன அழகு படங்களை இயக்கியவரும், சிந்துபாத் படத்தை
தயாரித்தவருமான டி.எம்.ஜெயமுருகன் இயக்குகிறார். அவரே இசையமைத்து இருப்பதோடு கதை, திரைக்கதை, வசனம் பாடல்களையும் எழுதி அசத்தியுள்ளார்.
இந்த படத்தில் கார்த்திக் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் சுகன்யா, ஐஸ்வர்யா
லட்சுமி, அர்த்திகா, சேது அபிதா, ஜான் விஜய், சிங்கம்புலி, இளவரசு, மஸ்காரா அஸ்மிதா, ஹேமந்த் மேனன், இயக்குனர் சரவண சக்தி, ராஜேஸ்வரி, ஸ்ரீதர் ஆகியோர் நடிக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குனர் டி.எம்.ஜெயமுருகன் கூறியதாவது: இன்றைய நவீன காலத்தில் நம் கிராமத்து பண்பாடும், நாகரீகமும், உறவுகளும் மறைந்து வருகிறது. அதனை இந்த தலைமுறைக்கு
தரும் படமாக இது உருவாகி உள்ளது. அண்ணன், தங்கை பாசத்தை சொல்ல நிறைய படங்கள் வந்திருந்தபோதும் இதில் ரத்தமும்,
சதையுமான அந்த உறவை சொல்கிறோம். உயிரை விட மானம் பெரிது என்பதுதான தமிழர்களின் உச்சபட்ட நாகரீகம் என்பதை உணர்த்தும் படமாக இது இருக்கும்.
சுகன்யா – கார்த்திக்
படப்பிடிப்பு 70 சதவீதம் முடிவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஒரு பாடல் காட்சி பிரபல பாலிவுட் நடிகையை வைத்து மும்பையில் பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்க இருக்கிறோம்.
இந்த படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஹார்லி டேவிட்சன் பைக்கில் டூப் போடாமல் சண்டைக் காட்சிகளில் பல சாகசங்களை செய்துள்ளார். இன்றைக்கு நடிக்க வரும் இளம் நடிகர்களே இந்த
காட்சிகளை நடிக்க தயங்குவார்கள் அப்படியான காட்சிகளில் நடித்து அசத்தியுள்ளார். அந்த சண்டைகாட்சிகள் படத்தில் பிரமாண்டமாக இருக்கும் என்றார்.
நடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுத்தந்த அஜித்
நடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுத்தந்த அஜித்
அஜித் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் கொடுத்தார், அவர் சொன்னபடி பைக் ஓட்டி கைதட்டல்களை வாங்கினேன் என நடிகை ஹூமா குரேஷி தெரிவித்துள்ளார்.
நடிகை ஹூமா குரேஷிக்கு பைக் ஓட்ட கற்றுத்தந்த அஜித்
ஹூமா குரேஷி, அஜித்
அஜித்-எச்.வினோத் கூட்டணியில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து
வருகிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில்
ஏற்கனவே ரஜினி உடன் ‘காலா’ படத்தில் நடித்துள்ளார். வலிமை படத்திற்காக இவர் பெரிய ரக பைக் ஓட்டுவதற்குக் கற்றுக் கொண்டார்.
ஹூமா குரேஷி
சமீபத்திய பேட்டியில், வலிமை படம் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார். அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்ற கேள்விக்கு “நான் படத்தில் நடிப்பதற்காக
மட்டுமே பைக் ஓட்டக் கற்றுக் கொண்டேன். அஜித் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள்
சொல்லிக்கொடுத்தார். அவர் சொல்லிக்கொடுத்தது போல் பைக் ஓட்டி கைதட்டல்களை வாங்கினேன்” என்று தெரிவித்துள்ளார்
.100 கோடி வசூல் – சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்
.100 கோடி வசூல் – சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்
தெலுங்கில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்த விஜய் சேதுபதி படம்
விஜய் சேதுபதி
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி,
தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்.12-ந் தேதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா.
அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார்.
அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர், இந்தப் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.
டுவிட்டர் பதிவு
இந்நிலையில், உப்பென்னா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், உலகளாவிய மொத்த வசூலில் ‘உப்பென்னா
’ திரைப்படம் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.
டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.
டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.
சுற்றுச்சூழலுக்கு மேலும் உகந்த, எளிதில் மட்கும் நாப்கின்கள், மட்கும் பைகளை கண்டுபிடிக்க வேண்டும் என டாப்ஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக்கால் இவ்வளவு பிரச்சனையா? -டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ
டாப்ஸி
தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான டாப்ஸி, சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது தனது
கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவ்வகையில், பிளாஸ்டிக் தீமைகள் குறித்து அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிளாஸ்டிக் மற்றும் அதன் விளைவுகள் பற்றி நிறைய கூறப்பட்டு, அதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளன. பசுமை இல்ல விளைவு, பிளாஸ்டிக் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களாக மாறுவது,
பருவநிலை மாற்றம் மற்றும் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. நமக்கு நேரடியாகத் தெரியும் ஒரு வகையான பிளாஸ்டிக் உள்ளது. அதை நாம் எளிதில் தவிர்க்கலாம்.
ஆனால், கண்ணுக்கு தெரியாமல் மறைந்துள்ள பிளாஸ்டிக்கை சரியான முறையில் அப்புறப்படுத்தாவிட்டால், அதை
பயன்படுத்துவோருக்கு மட்டுமல்லாமல், உலகத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
உதாரணமாக பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கூறலாம். ஒரு சானிட்டரி நாப்கின் பேடில் எவ்வளவு பிளாஸ்டிக் இருக்கிறது தெரியுமா? 4 கிராம். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும்
120 மில்லியன் பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 12.3 பில்லியன் பேடுகளை அப்புறப்படுத்துகிறார்கள்.
இப்போது உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் அளவை கற்பனை செய்து பாருங்கள். நம்மில் பலர் இதைப் பற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அதைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாது.
இந்த நாப்கின் பேடுகளை எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகின்றன என்பது தெரியுமா? குப்பைத் தொட்டிகளில் இருந்து நிலப்பரப்புகளுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை
நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் மிகவும் கவனக்குறைவாக அவற்றை அப்புறப்படுத்திய பின்னர் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களா?
அதிக சதவீத பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் உள்ள சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவது, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்ற உண்மையைப் பற்றி சிந்தியுங்கள்.
தயவுசெய்து சுற்றுச்சூழலுக்கு மேலும் உகந்த, எளிதில் மட்கும் நாப்கின்கள், மட்கும் பைகளை கண்டுபிடிப்பதில் முன்னேற முடியுமா? என பாருங்கள்.
நண்பர்களே… அறிவுரை வழங்குவது மிகவும் எளிதானது, அதைச் செயல்படுத்துவது தான் கடினம். அடிமட்டத்தில் அதை செய்வதும் கடினம். இந்த கடினமான பணியை செய்ய வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். நாம் பார்க்க விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வரலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வேதிகாவிற்கு திருமணமா?
வேதிகாவிற்கு திருமணமா?
தமிழில் பரதேசி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை வேதிகா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான “பரதேசி” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வேதிகா.
இப்படத்தில் இவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.
ஆனால் அதற்கு பின்பு தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு, மலையாளம், இந்தி எனப் பல மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வேதிகா திருமண கோலத்தில் வெள்ளை கவுன் அணிந்த புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
ஆனால் கூடவே கேப்ஷனில் “நல்ல வேளை நீங்கள் நினைப்பது போல எதுவும் இல்லை.
இது விளம்பர படத்திற்காக எடுக்கும் புகைப்படம்” எனப் பதிவிட்டு உள்ளார்.
இதன் மூலம் இந்தப் பதிவு தன்னுடைய திருமணத்தை பற்றியது இல்லை என்பதையும் அவர் தெளிவுப்படுத்தி உள்ளார்
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
பிரபல நடிகையின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்தியதால் நீக்க கோரி கோர்ட்டு உத்தரவிட்டுதுள்ளது.
நடிகை புகைப்படத்தை நீக்க கோர்ட்டு உத்தரவு
சாக்ஷி மாலிக்
நானி, அதிதிராவ், நிவேதா தாமஸ் ஆகியோர் நடித்து வி என்ற
பெயரில் தயாரான தெலுங்கு படம் நேரடியாக ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. இந்த படத்தில் தனது புகைப்படத்தை அனுமதி
இல்லாமல் பயன்படுத்தி உள்ளதாக இந்தி நடிகை சாக்ஷி மாலிக் எதிர்ப்பு தெரிவித்தார்.
ஒரு போட்டோ ஷூட்டில் எடுத்த படங்களை சாக்ஷி மாலிக் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். அந்த
புகைப்படங்கள் வி படத்தில் இடம்பெற்று இருந்தன. அத்துடன் படத்தில் பாலியல் தொழிலாளி சம்பந்தமான வசனத்திலும் சாக்ஷி மாலிக் படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.
சாக்ஷி மாலிக் – நானி
இதை எதிர்த்து சாக்ஷி மாலிக் கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். தனது அனுமதி இல்லாமல் புகைப்படங்களை
பயன்படுத்தியது தவறு என்றும், இதற்காக ரூ.30 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு சாக்ஷியின் புகைப்படத்தை நீக்கும்படி ஓ.டி.டி. தளத்துக்கு உத்தரவிட்டது. புகைப்படத்தை
நீக்கும்வரை வி படத்தை எந்த தளத்திலும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவிட்டது.
நிரஞ்சனி தம்பதியினருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
நிரஞ்சனி தம்பதியினருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
சமீபத்தில் திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர் தேசிங் பெரியசாமி – நிரஞ்சனி தம்பதியினருக்கு தயாரிப்பாளர் ஒருவர் விலையுயர்ந்த கார் பரிசளித்து இருக்கிறார்.
தேசிங் பெரியசாமி – நிரஞ்சனி தம்பதியினருக்கு கார் பரிசளித்த தயாரிப்பாளர்
தேசிங் பெரியசாமி – நிரஞ்சனி
கடந்த வருடம் துல்கர் சல்மான், ரீது வர்மா, இயக்குனர் கௌதம் மேனன், ரக்ஷன், நிரஞ்சனி ஆகியோர் நடிப்பில் வெளியான படம்
‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’. இந்த படத்தை அறிமுக இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்த நிரஞ்சனி தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார்.
நிரஞ்சனிக்கும் தேசிங்கு பெரியசாமிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தார்கள்.
கார் பரிசளித்த தயாரிப்பாளர்
திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியிருக்கும் நிலையில், புதுமணத் தம்பதிக்கு, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் தயாரிப்பாளர்
ஆன்டோ ஜோசப் ஒரு காரை திருமண பரிசாக அளித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அஜித்தை புகழும் பிரபல நடிகை
அஜித்தை புகழும் பிரபல நடிகை
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார்.
இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அஜித்
இந்த நிலையில், வலிமை படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷியிடம் சமீபத்தில் சில கேள்விகள் கேட்டகப்பட்டது.
அப்போது ஒருவர் வலிமை படத்தில் அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்று கேட்டதற்கு, “நான் படத்தில் நடிப்பதற்காக கற்றுக்கொண்டேன். “
அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார் என்று கூறியுள்ளார்.
சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி
சினிமாவில் தொடர்ந்து நடிக்க திட்டமிட்டிருக்கும் நடிகர் ரஜினி
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது.
அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மெட்டும் வெளியில் வந்தார்.
இந்நிலையில் ‘அண்ணாத்த‘ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க ரஜினி கூறிவிட்டதாகவும் வரும் 8ந்தேதி படப்பிடிப்பு
தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மார்ச் இறுதிவரை படப்பிடிப்புக்கு தேதிகள் கொடுத்துள்ள ரஜினி
தேர்தலுக்கு முதல் நாள் தான் சென்னைக்கு திரும்பி வாக்களிப்பார் என்கிறார்கள்.
ரஜினிகாந்த்
ரஜினி தொடர்ந்து நடிக்கும் விருப்பத்தில் இருக்கிறார். அடுத்தடுத்து கதைகளை கேட்டு வந்தவர் 2 கதைகளுக்கு சம்மதம் சொல்லி
இருக்கிறார் என்றும் இளம் இயக்குனர்களுடன் இணையும் அந்த படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது – மாளவிகா மோகனன்
இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது – மாளவிகா மோகனன்
மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்த மாளவிகா மோகனன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது என்று பதிவு செய்திருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மாஸ்டர்’. இப்படத்தின் விஜய்யுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், மகேந்திரன் உள்ளிட்ட பலர்
நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் 50 நாட்களை கடந்தும் வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் நடிகை மாளவிகா மோகனன் மாஸ்டர் படம் 50வது நாள் பற்றி உருக்கமான பதிவு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.
அதில், “50 நாட்கள் கடந்துவிட்டது மாஸ்டர். இந்த படம் எனக்கு நிறையவே கொடுத்திருக்கிறது. பெரும் ஆளுமைகளுடன்
பணிபுரியும் வாய்ப்பு, மிகச்சிறந்த வாழ்நாள் கால நண்பர்கள், இனிவரும்
எனது வாழ்நாள் முழுவதும் அசைபோடவைக்கும் நிறைய நினைவுகள்..” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்
போதைப்பொருள் விற்பனை-நடிகைகள் ராகிணி, சஞ்சனா மீது 2900 பக்க குற்றப்பத்திரிகை
போதைப்பொருள் விற்பனை-நடிகைகள் ராகிணி, சஞ்சனா மீது 2900 பக்க குற்றப்பத்திரிகை
பெங்களூருவில் நடந்த போதைப்பொருள் விற்பனை மற்றும் கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். இந்த வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர். ராகிணி, சஞ்சனா ஆகியோர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.
இந்த நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பான வழக்கில் 2900 பக்க குற்றப்பத்திரிக்கை தயார் செய்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி
திவேதி ஆகியோர் சேர்த்திருக்கும் சொத்துக்கள் மற்றும் சட்ட விரோதமாக பணம் சம்பாதித்து இருப்பது தொடர்பாக போலீசார்
தகவல்களை திரட்டி அந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி
அதன்படி நடிகை ராகிணிதிவேதி கடந்த 2 ஆண்டுகளில் ரூ.6 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும், நடிகை சஞ்சனா கல்ராணி ரூ.14 கோடி சொத்து சேர்த்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் கடந்த 2 ஆண்டுகளில் நடிகைகள் ராகிணி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் பெரிய பட்ஜெட் படங்களில்
எதுவும் நடிக்கவில்லை என்றும், சினிமா மூலம் அவர்களுக்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கவில்லை என்றும் தெரிகிறது.
மேலும் கடந்த 2 ஆண்டுகளில் போதைப்பொருள் விற்பனை, விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டது மற்றும் அதில் கலந்து கொள்பவர்களிடம் பணம் வசூலித்தது உள்பட சட்டவிரோதமாக
பணம் சம்பாதித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சட்டவிரோத வருமானம் தற்போது நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா
கல்ராணி ஆகியோருக்கு பெரும் பின்னடைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இந்த குற்றப்பத்திரிகையில் 180 சாட்சிகள் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
தளபதி 65’ படத்தில் நடிக்க பூஜா ஹெக்டேவுக்கு இத்தனை கோடி சம்பளமா?
தமிழில் மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்து முன்னணி
நடிகையானார். தற்போது பிரபாஸுடன் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
முகமூடி படத்திற்கு பின் தமிழ் படங்களில் நடிக்காமல் இருந்த பூஜா ஹெக்டே, தற்போது ‘தளபதி 65’ படம் மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க
உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிக்க நடிகை பூஜா ஹெக்டேவுக்கு 3.5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பூஜா ஹெக்டே
‘தளபதி 65’ படத்தை நெல்சன் இயக்க உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடத்த
திட்டமிட்டுள்ளனர். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா
கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா
கர்ப்பமாக இருக்கிறேன் – பாடகி ஸ்ரேயா கோஷல் அறிவிப்பு
ஸ்ரேயா கோஷல்
பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், இந்திய மொழி
அனைத்திலும் பாடி வருகிறார். அவருடைய மயக்கும் குரலுக்கு அனைத்து மொழிகளிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் காதலரான
ஷிலாதித்யாவைத் திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பின்னரும் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் செம பிசியாகப் பாடிக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா கோஷல்.
கணவருடன் ஸ்ரேயா கோஷல்
தமிழில் இளையராஜா, அனிருத், ஏ.ஆர்.ரகுமான், டி.இமான் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ள ஸ்ரேயா
கோஷல் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக குறிப்பிட்டு அழகிய
புகைப்படம் ஒன்றையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி
தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி
சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி அக்ஷயா விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.
தேர்தலில் போட்டியிட நடிகர் விமலின் மனைவி விருப்ப மனு தாக்கல்
அக்ஷயா, விமல்
களவாணி, வாகை சூட வா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மஞ்சப்பை, கலகலப்பு போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல். இவர் கடந்த 2010-ம் ஆண்டு அக்ஷயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். விமலின் மனைவி அக்ஷயா மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், வருகிற சட்டசபை தேர்தலில் மணப்பாறை தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார் விமலின் மனைவி அக்ஷயா.
உதயநிதி ஸ்டாலின், விமல், அக்ஷயா
விமலும் அவரது மனைவி அக்ஷயாவும் நடிகரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து
விருப்ப மனுவை அளித்துள்ளனர். அக்ஷயாவுக்கு திமுக சார்பில் சீட் தரப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
புடவையை கிழித்து அதை நடத்திய சின்னத்திரை நடிகை
புடவையை கிழித்து அதை நடத்திய சின்னத்திரை நடிகை
புடவையை கிழித்து போட்டோஷூட் நடத்திய சின்னத்திரை பிரபலத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது.
இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.
இந்நிலையில் தற்போது பவித்ரா லட்சுமி போட்டோஷூட் ஒன்றை எடுத்துள்ளார். அதில் பட்டு புடவை கட்டியிருக்கும் அவர் தொடை
தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போஸ் கொடுத்துள்ளார்.
பவித்ரா லட்சுமி
ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி
மாமனிதன்’ படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட சீனு ராமசாமி
சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி
ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன்
சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது.
விஜய் சேதுபதி, காயத்ரி
இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “மாமனிதன் தலைப்பு ஏற்கனவே
தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே
மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் வெளியாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்லும் விஜய்
வெளிநாடு செல்லும் விஜய்
கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற படங்களை இயக்கிய நெல்சன், அடுத்ததாக விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தை இயக்க
உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக
நடிக்க ராஷ்மிகா மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
விஜய், நெல்சன்
இந்நிலையில், இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ரஷியாவில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் மாதம்
முதல் வாரத்தில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, கிட்டத்தட்ட ஒரு மாதம் ரஷியாவில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இது அரசியல் கதையம்சம் கொண்ட பொழுதுபோக்கு படமாக உருவாக உள்ளதாம். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்
நடிகர் அமிதாப்பச்சனுக்கு ஆபரேசன்
இந்தி சினிமா உலகில் மெகா ஸ்டாராக வலம் வருபவர் அமிதாப்பச்சன். தற்போது 78 வயதாகும் அவருக்கு ஏற்கனவே உடல்நிலையில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. 1
982-ம் ஆண்டு கூலி திரைப்படத்தின் படப்பிடிப் பின் போது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். இதனால் அவருடய உள் உறுப்புகள்
பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்பில் இருந்து முழுமையாக மீளவில்லை.
சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் எனது உள் உறுப்புகள் 25 சதவீதம் மட்டுமே செயல்படுகின்றன என்று கூறி
இருந்தார். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் திடீரென அவரை கொரோனா தாக்கியது. மும்பை ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர்பிழைத்தார்.
அமிதாப்பச்சன்
ஆனால் இப்போது திடீரென அவருக்கு ஆபரேஷன் செய்யப்படுகிறது. இதுபற்றிய தகவலை அமிதாப்பச்சனே
அவருடை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஒற்றை வரியில் அந்த செய்தி உள்ளது. அதில், ‘மருத்துவ சூழ்நிலை, ஆபரேசன்.
இதற்கு மேல் விவரிக்க முடியாது’ என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
அவருக்கு உடல்நிலையில் என்ன செய்கிறது. எந்த வகையான ஆபரேசன் நடக்கிறது? ஆபரேசன் நடந்துவிட்டதா? அல்லது
நடக்கப்போகிறதா? எந்த ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடக்கிறது போன்ற எந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை.
உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் வின்னர்
உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்கும் பிக்பாஸ் வின்னர்
தடையற தாக்க, மீகாமன், தடம் போன்ற படங்களை இயக்கிய மகிழ்திருமேனி அடுத்ததாக உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக
நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்தை உதயநிதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ்
தயாரிக்கிறது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு திருச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று வருகிறதாம்.
ஆரவ்
இந்நிலையில், இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஆரவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிக்பாஸ் முதல்
சீசனில் டைட்டில் ஜெயித்த ஆரவ், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், ராஜபீமா போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






