டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.

Spread the love

டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.

சுற்றுச்சூழலுக்கு மேலும் உகந்த, எளிதில் மட்கும் நாப்கின்கள், மட்கும் பைகளை கண்டுபிடிக்க வேண்டும் என டாப்ஸி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கண்ணுக்கு தெரியாத பிளாஸ்டிக்கால் இவ்வளவு பிரச்சனையா? -டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ
டாப்ஸி

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகின் முன்னணி நடிகையான டாப்ஸி, சமூக பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது தனது

கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவ்வகையில், பிளாஸ்டிக் தீமைகள் குறித்து அவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பிளாஸ்டிக் மற்றும் அதன் விளைவுகள் பற்றி நிறைய கூறப்பட்டு, அதுபற்றி விவாதிக்கப்பட்டுள்ளன. பசுமை இல்ல விளைவு, பிளாஸ்டிக் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களாக மாறுவது,

பருவநிலை மாற்றம் மற்றும் பல விஷயங்கள் பேசப்பட்டுள்ளன. நமக்கு நேரடியாகத் தெரியும் ஒரு வகையான பிளாஸ்டிக் உள்ளது. அதை நாம் எளிதில் தவிர்க்கலாம்.

ஆனால், கண்ணுக்கு தெரியாமல் மறைந்துள்ள பிளாஸ்டிக்கை சரியான முறையில் அப்புறப்படுத்தாவிட்டால், அதை

பயன்படுத்துவோருக்கு மட்டுமல்லாமல், உலகத்திற்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது.

உதாரணமாக பெண்கள் பயன்படுத்தும் சானிட்டரி நாப்கின்களை கூறலாம். ஒரு சானிட்டரி நாப்கின் பேடில் எவ்வளவு பிளாஸ்டிக் இருக்கிறது தெரியுமா? 4 கிராம். இந்தியாவில் ஒவ்வொரு மாதமும்

120 மில்லியன் பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 12.3 பில்லியன் பேடுகளை அப்புறப்படுத்துகிறார்கள்.

இப்போது உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக் அளவை கற்பனை செய்து பாருங்கள். நம்மில் பலர் இதைப் பற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அதைப் பற்றி நமக்கு அவ்வளவாகத் தெரியாது.

இந்த நாப்கின் பேடுகளை எவ்வாறு அப்புறப்படுத்தப்படுகின்றன என்பது தெரியுமா? குப்பைத் தொட்டிகளில் இருந்து நிலப்பரப்புகளுக்கு சென்று பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை

நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? குப்பைகளை சேகரிக்கும் நபர்கள் மிகவும் கவனக்குறைவாக அவற்றை அப்புறப்படுத்திய பின்னர் என்ன நடக்கும் என்று நீங்கள் நினைத்தீர்களா?

அதிக சதவீத பிளாஸ்டிக் மற்றும் ரசாயனங்கள் உள்ள சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவது, கருப்பை புற்றுநோய் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது என்ற உண்மையைப் பற்றி சிந்தியுங்கள்.

தயவுசெய்து சுற்றுச்சூழலுக்கு மேலும் உகந்த, எளிதில் மட்கும் நாப்கின்கள், மட்கும் பைகளை கண்டுபிடிப்பதில் முன்னேற முடியுமா? என பாருங்கள்.

நண்பர்களே… அறிவுரை வழங்குவது மிகவும் எளிதானது, அதைச் செயல்படுத்துவது தான் கடினம். அடிமட்டத்தில் அதை செய்வதும் கடினம். இந்த கடினமான பணியை செய்ய வேண்டும் என்றுதான் நான் சொல்கிறேன். நாம் பார்க்க விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வரலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Home » Welcome to ethiri .com » டாப்ஸி வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ.

Leave a Reply