Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்
என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்
என்ஜாய் எஞ்சாமி பாடலில் இடம்பெற்ற ஒப்பாரி பாடும் பாட்டி பாக்கியம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
என்ஜாய் எஞ்சாமி பாடலை பாடிய பாட்டி காலமானார்
பாடகி பாக்கியம்மா
அறிவு மற்றும் பாடகி தீ கூட்டணியில் வெளியான என்ஜாய் எஞ்சாமி என்ற பாடல் பலருடைய கவனத்தை ஈர்த்து வைரலானது. இந்த பாடலில் ‘என்னக் குறை என்னக் குறை என் செல்லப்
பேராண்டிக்கு என்னக் குறை’ என்ற வரிகளை பாடகி பாக்கியம்மா பாடி இருந்தார். இந்நிலையில் இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
பாக்கியம்மா
இவரது மறைவிற்கு பாடகர் அறிவு, பல இறந்த உயிர்களுக்காக ஒப்பாரி பாடிய நீங்க இவ்வளவு சீக்கிரமா போவீங்கன்னு எதிர்பார்க்கல பாட்டி. பாக்கியம்மா ஒரு அற்புதமான பாடகி. ஒப்பாரி
பாடல்களை பாடுவதில் தனிச் சிறப்பு கொண்டவர். அவரது இந்த எதிர்பாராத மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
சங்கர் மீது தொடரப்பட்ட வழக்கு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இயக்குனர் சங்கர்
சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகும் திரைப்படம் இந்தியன் 2. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்து வந்தது.
இப்படத்தின் படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதன் பிறகு இதன் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.
இதனிடையே, இயக்குனர் சங்கர், தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் ஒரு படத்தையும், ‘அந்நியன்’ படத்தின் இந்தி ரீமேக்கையும் இயக்க ஒப்பந்தம் ஆனார்.
இதனால் ‘இந்தியன் 2’ படத்தை முழுமையாக முடித்து கொடுக்காமல் பிற படங்களை இயக்க, இயக்குனர் சங்கருக்கு தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சார்பில் வழக்குத்
தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இயக்குனர் சங்கர்
ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி எடுக்கும் முடிவை அறிக்கையாக தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனக்கூறி நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது. இந்நிலையில் ‘இந்தியன் 2’
பட விவகாரம் தொடர்பாக இயக்குனர் சங்கருக்கு எதிராக லைகா தொடர்ந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்
அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங்
சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும் என நடிகை ரகுல் பிரீத் சிங் தெரிவித்துள்ளார்.
ஓ.டி.டி. தளங்களால் அதிக வாய்ப்புகள் வருகிறது -நடிகை ரகுல் பிரீத் சிங் சொல்கிறார்
ரகுல் பிரீத் சிங்
நடிகை ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு: “ஓ.டி.டி. தளத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. இதன்
மூலம் நடிகர் – நடிகைகள், இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. கொரோனா காலத்தில் தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது இயலாத காரியம்.
இதனால் ரசிகர்கள் பார்வை ஓ.டி.டி. பக்கம் திரும்பி இருக்கிறது. இதன் மூலம் படங்களை உலக அளவில் ரசிகர்கள் எல்லோரும் பார்க்கிறார்கள். நல்ல கதையம்சம் இருந்தால் அதை பாராட்டவும்
செய்கிறார்கள். பெரிய திரையில் படங்களை பார்த்து சந்தோஷப்படும் ரசிகர்கள் நிறைய பேர் உள்ளனர். அதேபோல் இப்போது ஓ.டி.டி.யில் வரும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருகிறார்கள்.
ரகுல் பிரீத் சிங்
பொழுது போக்கு தளங்கள் எத்தனை இருந்தாலும் தியேட்டரில் பெரிய திரையில் படம் பாக்கும் மேஜிக் மட்டும் அப்படியேதான் இருக்கும். ஆனால் சினிமாவோடு ஓ.டி.டி. தளமும் படிப்படியாக
முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும். ஓ.டி.டி. தளங்களை நான் ஆதரிக்கிறேன்.’’ இவ்வாறு ரகுல் பிரீத் சிங் கூறினார்.
அதிக படங்களில் நடிக்காதது ஏன்
அதிக படங்களில் நடிக்காதது ஏன்
அருவி படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது.
அதிக படங்களில் நடிக்காதது ஏன்? அதிதி பாலன் விளக்கம்
அதிதி பாலன்
அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் கடந்த 2017 ஆண்டு வெளியான திரைப்படம் ‘அருவி’. இப்படத்தில் நடித்த அதிதி பாலன் தன் நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன்
பக்கம் ஈர்த்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த நடிகைக்கான சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.
இப்படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படத்திலும் அதிதி பாலன் நடிக்கவில்லை. இடையில், ஒரு ஆந்தாலஜி படத்தில் மட்டும் நடித்தார்.
இந்நிலையில், பிருத்திவிராஜ் நடிப்பில் உருவான ‘கோல்டு கேஸ்’ மலையாள படத்தில் அதிதி நடித்திருக்கிறார். இந்தப் படம் இன்று வெளியாகி இருக்கிறது.
நான்கு வருடங்களாக தமிழ் சினிமாவில் ஏன் நடிக்கவில்லை என்ற கேள்விக்கு சமீபத்தில் அளித்த பேட்டியில், “அருவி படத்துக்குக்குப் பிறகு நான் எடுத்துக்கொண்ட இந்த இடைவெளி நிறைய
பேருக்கு மிக நீண்டதாகத் தோன்றலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது சினிமாவைப் புரிந்துகொள்வதற்காக நான் தேர்ந்தெடுத்த ஒரு வழி.
அதிதி பாலன்
கடந்த சில ஆண்டுகளாக இந்த இடைவெளியில் நன்றாகவே திரைத்துறையைப் புரிந்துகொண்டேன். சினிமாவில் நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதைக் கண்டுபிடிக்கவும்
, சினிமா தொடர்பான விஷயங்களைக் கற்றுக்கொள்வதற்கும் இடைப்பட்ட இந்த நேரத்தை நான் பயன்படுத்திக்கொண்டேன்” என்றார்.
அதிதி பாலன் நடிப்பில் அடுத்ததாக `நவரசா’ என்ற வெப் தொடர் வெளியாக இருக்கிறது. இதனை 9 இயக்குநர்கள் இயக்க, கொரோனாவால் உருக்குலைந்த தமிழ் சினிமா தொழிலார்களுக்கு உதவும் வகையில் மணிரத்னம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
பிரபல கவர்ச்சி நடிகை ஒருவர், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
போதை விருந்தில் கலந்துகொண்ட கவர்ச்சி நடிகை கைது
ஹீனா பாஞ்சல்
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் இகத்புரி மலை அருகே உள்ள சொகுசு பங்களாவில் ரகசியமாக போதை விருந்து நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து அந்த பங்களாவில் அதிரடியாக சோதனை நடத்தினர். அங்கு அனுமதியின்றி
பார்ட்டி நடத்தப்பட்டதும், போதைப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அதில் கலந்து கொண்ட 22 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் நடிகை ஹீனா பாஞ்சலும் ஒருவர். பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் யாகாவாராயினும் நாகாக்க, கன்னட படமான லொட்டு, தெலுங்கில்
மல்லிபு போன்ற படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். இதுதவிர பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பிரபலமானார்.
நடிகை ஹீனா பாஞ்சல் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கஸ்தூரியின் கேள்விக்கு ரஜினி தரப்பில் விளக்கம்.
கஸ்தூரியின் கேள்விக்கு ரஜினி தரப்பில் விளக்கம்.
ரஜினிக்கு மட்டும் அமெரிக்கா செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? என நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியதற்கு பதில் கிடைத்துள்ளது.
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது… கஸ்தூரியின் கேள்விக்கு ரஜினி தரப்பில் விளக்கம்
ரஜினி, கஸ்தூரி
‛அண்ணாத்த’ படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினி, உடல்நல பரிசோதனைக்காக கடந்தவாரம் அமெரிக்கா சென்றார். இதற்காக மத்திய அரசிடம் அவர் சிறப்பு அனுமதி பெற்று சென்றதாக
. இதனிடையே ரஜினியின் அமெரிக்க பயணம் குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை முன்வைத்திருந்தார்.
அதாவது, இந்தியாவிலிருந்து யாரும் அமெரிக்க வர அந்நாடு தடை செய்துள்ள நிலையில் ரஜினி மட்டும் எப்படி அங்கு சென்றார். உடல் நலப் பரிசோதனை என்றால் இந்தியாவில் சிறந்த சிகிச்சை
இல்லையா, ரஜினிக்கு அப்படி என்ன உடல்நலக் கோளாறு” என அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார் நடிகை கஸ்தூரி.
இந்நிலையில் கஸ்தூரி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‛‛அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி. நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன
கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி, நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் தலைவரை வரவேற்க தயாராகட்டும் தமிழகம்! ரஜினிகாந்த், அண்ணாத்த” என பதிவிட்டுள்ளார்
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மஹா’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை ஹன்சிகா நடித்து இருக்கிறார்.
சிம்பு – ஹன்சிகா நடிக்கும் படத்தின் புதிய அறிவிப்பு
சிம்பு, ஹன்சிகா
நடிகை ஹன்சிகாவின் 50-வது படம் ‘மஹா’. யு.ஆர்.ஜமீல் இயக்கத்தில் உருவாகி இருக்கும்
இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்திலும், ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்கள்.
மஹா
ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை ஜூலை 2ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்.
பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்.
தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் பிரீத் சிங், பிரபல ஹாலிவுட் நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் ரகுல் பிரீத் சிங்
ரகுல் பிரீத் சிங்
விஷ்ணு விஷால் நடித்து கடந்த 2018-ம் ஆண்டு திரைக்கு வந்த திரைப்படம் ராட்சசன். இப்படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ராம்குமார் இயக்கி இருந்த இப்படத்தில், விஷ்ணு விஷால் ஜோடியாக அமலாபால் நடித்து இருந்தார்.
அக்ஷய் குமார்
அக்ஷய் குமார் – ரகுல் ப்ரீத் சிங்
இப்படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இப்படத்தை தயாரித்து
நடிக்க இருக்கிறார். இதில் இவருக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
பிறந்தநாள் கொண்டாடிய கிருத்திகா உதயநிதி
பிறந்தநாள் கொண்டாடிய கிருத்திகா உதயநிதி
வணக்கம் சென்னை, காளி படங்களை தொடர்ந்து மூன்றாவதாக புதிய படத்தை இயக்கி வருகிறார் கிருத்திகா உதயநிதி.
படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய கிருத்திகா உதயநிதி
கிருத்திகா உதயநிதி
கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. இதை தொடர்ந்து இவர் விஜய் ஆண்டனியின் காளி
திரைப்படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் மூன்றாவது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராம் கதாநாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் பூர்ணிமா பாக்கியராஜ், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
கிருத்திகா உதயநிதி
இந்நிலையில் இன்று இயக்குனர் கிருத்திகா தனது பிறந்த நாளை காளிதாஸ் ஜெயராம், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் இணைந்து கேக் வெட்டி மகிழ்ச்சியாக
கொண்டாடியுள்ளார். இந்த கொண்டாட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள்
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள்
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகரான அசோக் செல்வன், அடுத்ததாக நடிக்கும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்கும் விக்ரம், சூர்யா பட நடிகைகள்
அசோக் செல்வன்
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செல்வன் கடந்த ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் வெற்றி படமான ஓ மை கடவுளே மூலம் முன்னணி நடிகராகி விட்டார். இதையடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், அசோக் செல்வன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தை அறிமுக இயக்குனர் ஆர்.கார்த்திக் இயக்குகிறார்.
பெயரிடப்படாத இப்படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, சிவாத்மிகா ஆகிய மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இவர்களில் ரீத்து வர்மா விக்ரமுக்கு
ஜோடியாக ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், அபர்ணா பாலமுரளி சூர்யாவுக்கு ஜோடியாக ‘சூரரைப் போற்று’ படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்ஜி சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். இப்படத்தை வயகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மெண்ட்
நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி
நடிகர் ரஜினிகாந்த் கடந்த ஜூன் 19-ந் தேதி மருத்துவ பரிசோதனைக்காக தனி விமானத்தில் அமெரிக்கா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா செல்ல ரஜினிகாந்துக்கு மட்டும் எப்படி அனுமதி கிடைத்தது? – நடிகை கஸ்தூரி கேள்வி
கஸ்தூரி, ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: “மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் கொரோனா காரணமாக
இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை.
பிறகு எப்படி, ஏன் இந்த நேரத்தில் ரஜினிகாந்த் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து விலகியது, இப்போது இது என எதுவும் சரியாகப் படவில்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.
தெளிவுபடுத்த வேண்டும் என்று கேட்க காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்களுக்கு மட்டுமே அமெரிக்காவுக்குத் திரும்ப
அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும். ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள். இது இன்னும் கவலை அளிக்கிறது
. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல் நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? அவர்கள் வழக்கமான பரிசோதனை என்று சொன்னார்கள்?
மயோ கிளினிக் இருதய பராமரிப்புக்கு பெயர் பெற்றது. நான் இதைப் பற்றி அதிகம் நினைக்க நினைக்க இது இன்னும் மோசமானதாக தோன்றுகிறது. மேலும் ரசிகர்களே, தயவுசெய்து ‘ரஜினிகாந்திற்கு விதிகள் பொருந்தாது’ போன்ற விஷயங்களைச் சொல்ல வேண்டாம்.
அப்படி ஏதேனும் இருந்தால், அத்தகைய மிகப்பெரிய ஐகான்கள் சட்டத்தை மதிக்கும் குடிமகனாக வருவதற்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்”. இவ்வாறு நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை 6 ஆண்டுகளாக காதலித்து வருகிறார்.
நயன்தாரா குறித்த ரசிகர்களின் அடுக்கடுக்கான கேள்விகளும்… விக்னேஷ் சிவனின் பதில்களும்
விக்னேஷ் சிவன், நயன்தாரா
சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து விஜய் சேதுபதியின் ‘நானும் ரவுடிதான்’, சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’ போன்ற
படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானார். இவர் இயக்கத்தில் தற்போது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வருகின்றனர்.
இதனிடையே இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள், நயன்தாரா குறித்து ஏராளமான
கேள்விகளை எழுப்பினர். அவை அனைத்திற்கும் விக்னேஷ் சிவன் பதிலளித்தார். அதன் தொகுப்பை காணலாம்.
கேள்வி: நயன்தாராவுக்காக உங்களின் முதல் கிப்ட் என்ன?
பதில்: தங்கமே… பாடல்
கேள்வி: நயன்தாராவுக்கு எந்த லுக் பொருத்தமாக இருக்கும், வெஸ்டர்ன், டிரெடிஷனல் உங்கள் விருப்பம் எது?
பதில்: அவர் புடவையில் இருப்பது ரொம்ப பிடிக்கும்.
கேள்வி: நயன்தாரா அழகின் ரகசியம் என்ன?
பதில்: பிரார்த்தனைகள்
விக்னேஷ் சிவன், நயன்தாரா
கேள்வி: நயன்தாராவுடன் உங்களது விருப்பமான இடம்?
பதில்: அவருடன் எங்கு சென்றாலும் அது உடனடியாக விருப்பமான இடமாகிவிடும்.
கேள்வி: நயன்தாரா நடிச்சதுல உங்க அபிமான திரைப்படம் எது?
பதில்: ராஜா ராணி
கேள்வி: நயன்தாரா, உங்களைப் பற்றிய சில ரகசியம்
பதில்: டின்னர் முடிந்ததும் வீட்டில் அனைத்து பாத்திரங்களையும் அவரே கழுவுவார்.
கேள்வி: நயன்தாரா கூட நடிக்க ஏன் முயற்சி பண்ணல?
பதில்: முயற்சி பண்றேன். ஆனா, அவங்க கண்டுபிடிச்சிடுறாங்க.
கேள்வி: நயன் சமைக்கிறதுல பிடிச்சது?
பதில்: கீ ரைஸ், சிக்கன் கறி
கேள்வி: ஒரு நாள் திடீரென, நீங்கள் நயன்தாராவாக மாறிவிட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்: ஷுட்டிங் போக வேண்டியதுதான்.
கேள்வி: நயன்தாரா பத்திதான் எல்லாரும் கேக்குறாங்க, என்ன பீல் பண்றீங்க?
பதில்: பெருமையா இருக்கு
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.
இயக்குனர் ஷங்கர் மகள் திருமணம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து
ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் திருமணத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. இளம் கிரிக்கெட் வீரரும், டி.என்.பி.எல்-லில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி
உரிமையாளரின் மகனுமான ரோகித்தை, ஐஸ்வர்யா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மணமகள் மற்றும் மணமகனின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் ஒரு சில முக்கிய பிரபலங்கள் மட்டும் இதில் கலந்துகொண்டனர். குறிப்பாக தமிழக
முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினார்.
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
பெற்றோருடன் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோகித் தம்பதி
அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் மற்றும் நடிகரும், திமுக எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தனர்.
கொரோனா பரவல் குறைந்த பின்னர் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
இலங்கை தமிழர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
கார்த்திக் சுப்புராஜ்
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி என
அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற அவர், ரஜினியின் பேட்ட, தனுஷின் ஜகமே தந்திரம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி
இயக்குனரானார். தற்போது விக்ரம் – துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார்.
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்ட போது எடுத்த புகைப்படம்
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள சுமார் 800 இலங்கை தமிழர்களுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் கொடுத்து உதவி
உள்ளார். அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை கார்த்திக் சுப்புராஜ் சார்பில் அவரது நண்பர்கள் வழங்கினர்.
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படத்தில் 11 பாடல்கள் உள்ளதாம்.
11 பாடல்களுடன் தயாராகும் நயன்தாரா படம்
நயன்தாரா
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாரா, அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில், அவர் அடுத்ததாக ‘பாட்டு’ எனும் மலையாள படத்தில் நடிக்க உள்ளார்.
பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தை இயக்குகிறார். பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், இப்படத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
காதல் கதையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தான் இசையமைக்க உள்ளார். அவர் இசையமைக்கும் முதல் படம் இதுவாகும்.
இதன் தலைப்புக்கு ஏற்ப, படத்திலும் பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம். இந்தப்
படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது. பாட்டு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து
ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
மருத்துவ பரிசோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார் ரஜினி – வைரமுத்து டுவிட்
வைரமுத்து, ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த வாரம் அமெரிக்கா சென்றார். அங்கு அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள்
ஐஸ்வர்யா ஆகியோர் அமெரிக்காவின் மாயோ மருத்துவமனையில் பரிசோதனை முடிந்து
வெளியேறுவதைக் கண்ட ரசிகர் ஒருவர், கடந்த சில தினங்களுக்கு முன் புகைப்படம் எடுத்து வெளியிட்டார். அந்த புகைப்படம் வைரலானது.
இந்நிலையில், ரஜினியின் நெருங்கிய நண்பரும், கவிஞருமான வைரமுத்துவிடம், மருத்துவச் சோதனைக்கு பின் நலமுடன் இருப்பதாக ரஜினி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “அமெரிக்காவிலிருந்து ரஜினி அழைத்தார். மருத்துவச் சோதனை நல்ல வண்ணம் நடந்தது என்றார்; மகிழ்ந்தேன்.
அவர் குரலில் ஆரோக்கியம் – நம்பிக்கை இரண்டும் இழையோடக் கண்டேன். அவரன்பர்களின் மகிழ்ச்சிக்காகவே இதைப் பதிவிட்டுப் பகிர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்திற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார்.
விஜய்யுடன் நடனம் ஆட சிறப்பு பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
பூஜா ஹெக்டே
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பீஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக இதன் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.
இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்து தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருவதால் ஜூலை மாதம் முதல் ஷூட்டிங்கைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
பூஜா ஹெக்டே
பயிற்சி பெறும் பூஜா ஹெக்டே
இப்படத்திற்காக சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் செட் அமைக்கும் வேலைகள் நடந்து முடிந்துள்ளன. இங்கு பாடல் காட்சிகளை படமாக்க இருக்கிறார்கள். இந்நிலையில் விஜய்யுடன்
நடனம் ஆடுவதற்காக நடிகை பூஜா ஹெக்டே சிறப்பு பயிற்சி எடுத்து வருவதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்
கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் வருகிற ஜூன் 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம்.
கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
மகள் ஐஸ்வர்யா, மனைவி ஈஸ்வரியுடன் இயக்குனர் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.
இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின்
கேப்டனான ரோகித்தை தான் ஐஸ்வர்யா மணக்க இருக்கிறாராம். 29 வயதாகும் ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன் ஆவார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார்.
ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வருகிற ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளதாம். கொரோனா
ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா
6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, ரசிகர்களுக்கு ஆறு மொழியில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா
ரம்பா
தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் நன்றி கூறியிருக்கிறார்.
மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து அதில் கிடைத்த மாம்பழங்களை விற்பனை செய்து இருக்கிறார்.
மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
மாம்பழம் விற்கும் நடிகர் நரேஷ்
தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் நரேஷ். தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல நடிகர்கள்
வைத்துள்ளதைப் போன்று இவரும் விவசாயப் பண்ணை வைத்துள்ளார். கடந்த வருட லாக்டவுனின் போதே விவசாயம் செய்வதில் இறங்கினார். இந்த லாக்டவுனில் மாம்பழம், நாவல்பழம் விற்பதிலும் இறங்கியுள்ளார்.
நரேஷ்
நடிகர் நரேஷ்
இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், “நரேஷ் என்கிற விவசாயி அவரது கையால் பறிக்கப்பட்ட மாம்பழம், நாவல் பழங்கள் ஆகியவற்றை, கிலோ 50 ரூபாய்க்கு விற்றார். அதன்
மூலம் 3600 ரூபாய் சம்பாதித்தார். ஒரு நடிகராக அதிகபட்ச சம்பளம் வாங்கியதை விட இது மகிழ்ச்சியானது. விவசாயம் செய்து உண்மையான மகிழ்ச்சியை உணருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.






