Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்-தலைவருக்கு 10.000

லண்டன் ,ஈலிங்கில் பாட்டி வைத்த 72 பேருக்கு 800 படி தண்டம்

லண்டன் ஈலிங் பகுதியில்நேற்று சனிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில்

பாட்டி ஒன்று வைக்க பட்டுள்ளது ,இதில் எழுபத்தி இரண்டு பேர் கலந்து

கொண்டனர் ,அவர்கள் அனைவரையும் மடக்கிய போலீசார்

,ஒவ்வொருவருக்கும் சுமார் 800 படி தண்டம் அறவிட்டுள்ளனர்,மேலும் இதனை ஒழுங்கு செய்தவருக்கு பத்து

ஆயிரம் பவுண்டுகள் தண்டம் வழங்க பட்டுள்ளது ,14 நாட்களுக்கு செலுத்த வேண்டும் தவறின் அது 80 ஆயிரம் வரை அதிகரித்து செல்லும் ,

மக்களை ஒன்று கூடாதீர்கள் என தெரிவிக்க பட்டு சட்ட அமுலாக்கம்

பட்டுள்ள நிலையில் ,அதனை மீறி மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்

லண்டனில் வாலிபன் மீது அசீட் வீசி ,கத்திக் குத்து தாக்குதல்

நேற்று மதியம் மூன்று முப்பது மணியளவில் கிழக்கு லண்டன்

Hackney பகுதியில் பதினாறு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள்

அசீட் வீச்சு தாக்குதலை தொடுத்து அதன் பின்னர் கத்தி குத்து தாக்குதலை நடத்தியுள்ளனர்

ஆபத்தான நிலையில் மீட்க பட்ட வாலிபன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

இதுவரை இந்த குற்ற செயலை புரிந்த எவரும் கைது செய்ய

படவில்லை ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்

இங்கிலாந்தில் கொரானோ தாக்குதலில் 485 பேர் மரணம்

இங்கிலாந்தில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ

நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 485 பேர் கடந்த 24

மணித்தியாலத்தில் பலியாகியுள்ளனர் , மேலும் 21,088 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல அமெரிக்காவில் 1,157 பேர் மரணித்தும் 78,230 பேர்

பாதிக்க பட்டும் உள்ளனர் ,தற்போது மக்களுக்கு தடுப்பூசி போட

பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது

பிரிட்டனில் அகதிகள் முகாமை தீ வைத்து எரித்த ஐவர் கைது

பிரிட்டன் கென்ட் பகுதியில் அகதி முகாம் ஒன்றை தீ வைத்து

எரியூட்டிய குற்ற சாட்டில் ஐவர் போலீசாரால் கைது செய்ய

பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்ய பட்ட அனைவரும் தீவிர விசாரணைகளுக்கு உள்ளாக்க

பட்டுள்ளனர்
இந்த முகமில்சுமார் 400 அகதிகள் இருந்துள்ளனர் ,எனவும்

தெரிவிக்க பட்டுள்ளது ,இது திட்டமிட பட்ட சதியா என்பது

தொடர்பில் தெரியவரவில்லை

கைது
கைது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி

கொரனோ தாக்குதல் இங்கிலாந்தில் 1,200 பேர் பலி

இங்கிலாந்தில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,200 பேர் ,பலியாகியுள்ளனர்

மேலும் 23,275 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதேபோல அமெரிக்காவில் 2,426 பேர் பலியாகியும் 119,808 பேர் பாதிக்க

பட்டும் உள்ளனர் ,
தொடர்ந்து இந்த இழப்பு விகிதம் அதிகரிக்க படும் என எதிர்வு கூறப்டுகிறது

Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி

கியூபா நாட்டின் இராணுவ வானூர்தி ஒன்று இராணுவ தளத்தில் இருந்து

புறப்பட்ட சில நிமிடங்களில் கட்டு பாட்டு அறையுடன்

தொடர்புகளை இழந்து வீழ்ந்து நொறுங்கியுள்ளது

மலைப் பகுதியில் சிதறிய நிலையில் காணப்படும் உலங்கு வானூர்தி

சுட்டு வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது விமானி உட்பட

ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்

இதுகுறித்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்

லண்டன் வேல்ஸில் கண்டு பிடிக்க பட்ட டைனோசர்

பீறிட்டான் வேல்ஸ் பகுதியிலுள்ள கடற்கரை பகுதி ஒன்றில் தந்தையுடன்

சென்று கொண்டிருந்த நான்கு வயது சிறுமி ஒருத்தி அந்த மணல் மேட்டு

பகுதியில் விசித்திரமான கால்தடம் ஒன்றை அவதனித்துள்ளார்

அதனை தந்தைக்கு தெரிய படுத்திய நிலையில் ,சுதாகரித்து

கொண்ட தந்தை பொலிசாருக்கு தகவல் வழங்கினார்

விரைந்து வந்த போலீசார் ,அதனை பார்வையிட்டு ஆராய்ச்சி நிபுணர்களுக்கு

தெரிவிக்க பட்ட நிலையில் அவர்கள் அதனை ஆய்வு செய்த

பொழுது அது டைனோசர் கால் தடம் என கண்டறிய பட்டுள்ளது

இதுவே பிரிட்டனில் கண்டு பிடிக்க பட்டதில் சிறந்ததும்

முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது என்றனர்

டைனோசர்
டைனோசர்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு – கோபத்தில் இந்தியர்கள்

அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு – கோபத்தில் இந்தியர்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின்

மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை

வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த சிலையை, நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தி

எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்

அங்கு வைத்தது. இந்த சிலையை விஷமிகள் தாக்கி, அதன் கணுக்கால்

பகுதி வெட்டப்பட்டு, சிலையின் முகத்தில் பாதி துண்டிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளது.

இதை கடந்த 27-ம் தேதி பூங்காவின் ஊழியர்தான் முதலில்

கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இந்த சிலை டேவிஸ் நகருக்கு இந்திய அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள்

மத்தியில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதையொட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள

அறிக்கையில், அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய சின்னத்துக்கு

எதிரான இந்த தீங்கிழைக்கும், இழிவான செயலை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த விவகாரத்தை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்க

வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. இது

குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.

கடந்த ஆண்டு டிசம்பரில், வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் முன்னால்

அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சேதப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு
அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் பற்றி எரிந்த அகதிகள் முகாம் – நடந்தது என்ன ..?

பிரிட்டனில் பற்றி எரிந்த அகதிகள் முகாம் – நடந்தது என்ன ..?

பிரிட்டன் கென்ட் பகுதியில் அமைந்துள்ள அகதிகள் முகாம்

திடீரென தீ பற்றி எரிந்தது ,இதனால் அங்கிருந்த உடமைகள் தீயில்

எரிந்து நாசமாகின ,

தீயின் பரவலை அறிந்து விரைந்து வந்த பொலிசார் மற்றும்

தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

மேற்படி அனர்த்தம் தெடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

பற்றி எரிந்த அகதிகள் முகாம்
பற்றி எரிந்த அகதிகள் முகாம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் சினோ ,மழை மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் எதிர்வரும் மணித்தியாலங்களில் கடும் பனிமழை

பொலிவு மற்றும் மழை இடம்பெறும் எனவும் இதனால் இயல்பு

வாழ்க்கை முடங்க படும் அபாயம் உள்ளதாகவும் ,இவ்வேளை

மக்களை விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

பிரிட்டனில் சினோ ,மழை
பிரிட்டனில் சினோ ,மழை
Posted in உலக செய்திகள்

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 3,652 மற்றும் பிரிட்டனில் 1,245 பேர் மரணம்

கொரனோ தாக்குதல் அமெரிக்காவில் 3,652 மற்றும் பிரிட்டனில் 1,245 பேர் மரணம்

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி அமெரிக்காவில்

3,652 பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 169,033 ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்


அதேபோல பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 1,345 பேர் மரணமாகியும் 29,079 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

குளிர்காலம் ஆரம்பித்துள்ளதால் மேலும் இதன் பாதிப்பு அதிகரிக்க

படும் என ஏச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

சீனாவுடன் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமெரிக்கா திட்டவட்டம்

அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, சீனாவுடன் மோதல் போக்கு ஏற்படத்தொடங்கியது. அமெரிக்காவின் ரகசியங்களையும், அறிவுசார்சொத்துக்களையும் சீனா திருடுவதாக

குற்றம்சாட்டி, அந்த நாட்டின்மீது வர்த்தக போரை அமெரிக்கா தொடங்கியது. சீன பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதல் வரி

விதித்தது. பதிலடியாக இதேபோன்ற நடவடிக்கையை சீனாவும் மேற்கொண்டது. அமெரிக்க பொருட்கள் மீது சீனா கூடுதல் வரி விதித்தது. இதனால் வர்த்தக போர் தொடர்கிறது.

கொரோனா வைரஸ் தோற்றம், பரவல் பற்றிய உண்மையான தகவல்களை சீனா வெளியிடாமல் மறைத்து விட்டது. இதில் உலக சுகாதார நிறுவனமும் துணை போய் இருக்கிறது என்று

அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து குற்றம் சுமத்தி வந்தது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையேயான உறவு

இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான நிலையில் உள்ளது.

இப்போது பருவநிலை மாற்றம், மிகப்பெரிய பிரச்சினையாக பூதாகரமாகி வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. புதிய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் முன்னாள் வெளியுறவு மந்திரி ஜான் கெர்ரி பருவநிலை மாற்றம் தொடர்பான சிறப்பு

தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் முதன்முதலாக நிருபர்களுக்கு

பேட்டி அளித்தார். அப்போது அவர் சீனாவுடனான உறவு பற்றிய திட்டவட்டமாக கருத்துக்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-

சில முக்கிய விஷயங்களில் சீனாவுடன் அமெரிக்கா கடுமையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது.

அமெரிக்காவின் வெளியுறவு மந்திரியாகவும், செனட் உறுப்பினராகவும் பணியாற்றிய நிலையில், அமெரிக்காவின் அறிவு-சார் சொத்துக்களை சீனா திருடுவதுபற்றியும், தென்

சீனக்கடல் விவகாரம் குறித்தும் நான் தெரிந்து வைத்திருக்கிறேன். நாம் எல்லோருமே இதை அறிந்திருக்கிறோம். பருவநிலை மாற்றம் தொடர்பான எந்த ஒன்றுக்காகவும், இதெல்லாம்

மாற்றப்போவதில்லை. பருவ நிலை மாற்ற பிரச்சினையில் உடன்பாடு ஏற்படுவதற்காக சீனாவுடன் அமெரிக்கா எந்த சமரசமும் செய்து கொள்ளப்போவதில்லை.

ஆனால் பருவநிலை மாற்றம், மிக முக்கியமான பிரச்சினை ஆகும். இதில் உலகின் 30 சதவீத கார்பன் கழிவுகளை சீனா வெளியிடுகிறது. அமெரிக்கா 15 சதவீத கார்பன் கழிவுகளை

மட்டுமே வெளியிடுகிறது. ஐரோப்பிய கூட்டமைப்புடன் சேரும்போது முத்தரப்பும் சேர்த்து 55 சதவீதத்துக்கும் அதிகமான கார்பன் கழிவுகளை வெளியிடுகின்றன.

எனவே நாம் முன்னேறுவதற்கு ஒரு வழியை கண்டுபிடிப்பது அவசரம் ஆகும். நாம் காத்திருந்து பார்ப்போம்.

ஆனால் சீனாவுடனான மற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டியதின் அவசியம் குறித்து ஜோ பைடன் மிக தெளிவாக

இருக்கிறார். இதில் சிலர் கவலைப்பட்டது எனக்கு தெரியும். ஒன்றுக்காக மற்றொன்றை செய்து விட முடியாது.

பருவநிலை மாற்றத்தை பொறுத்தமட்டில் அது உலகுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. பருவநிலை மாற்றத்துக்கான பிரச்சினைகள் இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்க

முடியாது. அது இருந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் இந்த வார்த்தைகளை எளிதாக பயன்படுத்துகிறோம். பின்

விட்டுவிடுகிறோம். ஆனால் உலகளாவிய ஒரு பிரச்சினைக்கு முன்பாக நாம் மிகப்பெரிய செயல் திட்டத்தை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையை ஜோ பைடன் முற்றிலும் அறிந்து

வைத்திருக்கிறார். எனவே பருவநிலை மாற்றத்துக்கான பாரீஸ் உடன்படிக்கையில் நாம் மீண்டும் சேருவதற்கான நிர்வாக

உத்தரவில் அவர் கையெழுத்து போட்டிருக்கிறார். இவ்வளவு விரைவாக அதில் அவர் சேருவதில் காரணம் இருக்கிறது. இது அவசரமான பிரச்சினை ஆகும்.

நவம்பர் மாதம் கிளாஸ்கோவில் நடைபெறுகிற பருவநிலை மாற்ற உச்சி மாநாடுதான், உலகின் மிக மோசமான சுற்றுச்சூழல்

விளைவுகளை முறிடியப்பதற்கு கடைசி சிறந்த வாய்ப்பாக அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Posted in உலக செய்திகள்

பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை

பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக் கொன்று விட்டு, இந்திய டாக்டர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் பெண் டாக்டரை சுட்டுக்கொன்று விட்டு இந்திய டாக்டர் தற்கொலை
டாக்டர் பரத் நெடுமாஞ்சி, டாக்டர் கேதரின் டாட்சன்

அமெரிக்க நாட்டில் டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரமான ஆஸ்டின் நகரில், குழந்தைகள் நல ஆஸ்பத்திரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

அந்த ஆஸ்பத்திரிக்குள் கடந்த 26-ந் தேதி ஒருவர் கைத்துப்பாக்கியுடன் சென்று, அங்கிருந்தவர்களை

பிணைக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக போலீசுக்கு புகார் சென்றது. அதைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

ஆனால் அதற்குள் பிணைக்கைதிகளில் பலர் அங்கிருந்து தப்பிவிட்டனர். எஞ்சியவர்களில் குழந்தைகள் நல மருத்துவரான

பெண் டாக்டர் கேதரின் டாட்சன் என்பவரை தவிர மற்றவர்கள் தப்பிச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டு விட்டனர்.

அத்துடன் துப்பாக்கி வைத்திருந்த நபர், டாக்டர் கேதரின் டாட்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, தானும் துப்பாக்கியால்

சுட்டுக்கொண்டு உயிர் துறந்தார். போலீசார் அங்கு வந்தபோது அவர்கள் இருவரையும் பிணங்களாகத்தான் பார்க்க முடிந்தது.

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், துப்பாக்கியால் சுட்டு பெண் டாக்டரை சுட்டுக் கொன்று விட்டு, தானும்சுட்டு

தற்கொலை செய்து கொண்ட நபர் குழந்தைகள் நல மருத்துவர் என்றும், அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பரத் நெடுமாஞ்சி (வயது 43) என்றும் தெரிய வந்தது.

பரத் நெடுமாஞ்சி, முற்றிய புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார், கடந்த வாரம் இதே ஆஸ்பத்திரிக்கு வந்து, தன்னார்வலராக

சேருவதற்கு விண்ணப்பித்து இருந்தார், ஆனால் அவருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என்று உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

அவருக்கும் சுட்டுக்கொல்லப்பட்ட பெண் டாக்டர் கேதரின் டாட்சனுக்கும் என்ன தொடர்பு, எதற்காக அவரை சுட்டுக் கொன்று விட்டு, பரத் நெடுமாஞ்சி தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

இந்த சம்பவம், ஆஸ்டின் நகரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

Posted in உலக செய்திகள் சினிமா

குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை

குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை

டார்லிங், சார்லி சாப்ளின் 2 படங்களில் நடித்து பிரபலமான நிக்கி கல்ராணி, குரங்கு குட்டிகளுக்கு உணவு கொடுக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நிக்கி கல்ராணி… வைரலாகும் வீடியோ
நிக்கி கல்ராணி


டார்லிங் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்,

மொட்ட சிவா கேட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது இவரது நடிப்பில், வட்டம், ராஜ வம்சம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் இவர் சமூக வலைத்தளத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

நிக்கி கல்ராணி

தற்போது இவர் குரங்களுக்கு உணவு கொடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். குரங்குகளிடம் கொஞ்சி அன்பு காட்டும் இந்த

வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை
குரங்குகளுடன் கொஞ்சி விளையாடும் நடிகை
Posted in உலக செய்திகள்

53 தலீபான்கள் கொன்று குவிப்பு

53 தலீபான்கள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் படைகள் அதிரடி – 53 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு

ஆப்கானிஸ்தான் நாட்டில் நேற்றுமுன்தினம் காந்தஹார் மாகாணத்தின் அர்கண்டாப் மற்றும் டான்ட் மாவட்டங்களில்

பாதுகாப்பு படைகளின் சோதனைச்சாவடிகளை தாக்க தலீபான் பயங்கரவாதிகள் முற்றுகையிட்டனர். ஆனால் பாதுகாப்பு

படையினர் சுதாரித்துக் கொண்டு அவர்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்தினர்.

இதில் 31 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தலீபான்களின் ஆயுதங்களும், வெடிபொருட்களும் அழிக்கப்பட்டன.

Posted in உலக செய்திகள்

விரைவில் மக்களை சந்திப்பேன் கொள்ளைராணி

விரைவில் மக்களை சந்திப்பேன் கொள்ளைராணிசசிகலா

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை நிறைவடைந்ததை தொடர்ந்து பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா நேற்று விடுதலை செய்யப்பட்டார். கடந்த 20-ந்தேதி முதல்

அவர் கொரோனா தொற்று மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் சிறை அதிகாரிகள்

மருத்துவமனைக்கு வந்து சசிகலாவிடம் கையெழுத்து பெற்று அவரை விடுதலை செய்ததாக அறிவித்தனர்.

சசிகலா விடுதலையை அ.ம.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். இதனிடையே சசிகலா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும்,

தொடர்ந்து இன்னும் 3, 4 நாட்கள் அவர் விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற உள்ளார். அவர் சிகிச்சை

பெறும் கட்டிடத்தின் முன் பகுதியில் போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து பாதூப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சசிகலா உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது. சசிகலா சீராக உணவு உட்கொள்வதாகவும், உதவியுடன்

நடப்பதாகவும் மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது. சசிகலா சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார் என்றும், அவரது உடல்நிலை

தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், விக்டோரியா மருத்துவமனையை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருகிற 30-ந்தேதி சசிகலாவுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அதில் பாதிப்பு இல்லை என்றால் அன்றே அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிகிறது. மருத்துவமனையில்

இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், அவர் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தான் தமிழகத்திற்கு வர திட்டமிட்டுள்ளார். பிப்ரவரி 3-ந்தேதி அவர் சென்னை திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு

வருகின்றன. இதை தொடர்ந்து சசிகலாவுக்கு தமிழக எல்லையில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கர்நாடக-தமிழக

எல்லையான அத்திப்பள்ளியில் இருந்து சென்னை வரையில் வழி நெடுகிலும் சிறப்பான வரவேற்பு அளிக்க அவரது ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி தங்கள் பலத்தை நிரூபிக்கும் வகையில் 1000-க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுக்க ஊர்வலமாக சென்னைக்கு அவரை அழைத்து வர சசிகலா ஆதரவாளர்கள்

மற்றும் அ.ம.மு.க.வினர் திட்டமிட்டுள்ளனர். அவர் செல்லும் வழியில் சசிகலாவின் 66 வயதை குறிக்கும் விதமாக 66 இடங்களில் அவருக்கு வரவேற்பு அளிக்கவும் ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும்

சென்னை செல்லும் வழியில் உள்ள முக்கிய கோவில்களில் வழிபாடு நடத்தவும் கட்சியினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

இது சம்பந்தமாக சசிகலாவின் வக்கீல் ராஜாசெந்தூர் பாண்டியன் கூறியதாவது:-

சசிகலாவிடம் சிறை அதிகாரிகள் கையெழுத்து வாங்கி முறைப்படி விடுவித்து இருக்கிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவதால் அது சம்பந்தமான அனைத்து நடைமுறைகளையும் அவர் பின்பற்றுகிறார்.

சசிகலா என்னிடம் ஒரு தகவலை தெரிவித்தார். விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று அவர் கூறினார். இந்த தகவலை மக்களிடம் சொல்லும்படியும் தெரிவித்தார்.

இவ்வாறு செந்தூர் பாண்டியன் கூறினார்.

Posted in உலக செய்திகள்

கடலில் மூழ்கிய 200 அகதிகள் – பறிபோன உயிர்கள்

கடலில் மூழ்கிய 200 அகதிகள் – பறிபோன உயிர்கள்

ஐரோப்பிய நாட்டுக்குள் நுளையும் முகமாக ஆபத்தான கடல் வழியைதாண்டி

படகுகள் ,மூலம் நுளைய முற்பட்ட இருநூறு அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது

இதனால் அதில் பயணித்தவர்களில் இருநூறு பேர் பலியாகினர் ,
இத்தாலிய

கடற்பரப்பில் இடம்பெற்ற இந்த சம்பவம் ,அந்த நாட்டின் கடல்வழி பாதுகாப்பு

பொறிமுறைகளில் ஏற்பட்ட இடைவெளியே இந்த மனித உயிர்கள் பலியாக

காரணம் என மனித உரைமை மையம் குற்றம் சுமத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

லண்டனில் பங்குனி இறுதியில் பாடசாலைகள் திறக்க நடவடிக்கை

லண்டனில் பங்குனி இறுதியில் பாடசாலைகள் திறக்க நடவடிக்கை

பிருத்தானில் பரவி வரும் நோயின் தாக்குதல் அதிகரிப்பால் பாடசாலைகள்

மேலே அடித்து பூட்ட பட்டுள்ளது ,தற்பொழுது மீளவும் பங்குனி மாத இறுதியில்

சித்திரை ஆரம்பத்தில் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள படலாம் என தெரிவிக்க படுகிது

இது தொடர்பான விசேட அறிவித்தலை ஆளும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்

,மீள வேகமாக பாடசாலைகள் ஆரம்பிக்க படுவது மக்கள் மத்தியில்

பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

கொரனோ வெறியாட்டம் -பிரிட்டனில் 1,725 பேர் இன்று மரணம்

கொரனோ வெறியாட்டம் -பிரிட்டனில் 1,725 பேர் இன்று மரணம்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

இன்று மட்டும் 1,725 பேர் மரணமாகியுள்ளனர் மேலும் 25,308 பேர்

பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல அமரிக்காவில் 2,933 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும்

117,034 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,தொடந்து வரும் நாட்களில் இதன்

உயிரிழப்பு விகிதம் இரட்டிப்பாக கூடும் என எதிர் பார்க்க படுகிறது

Posted in உலக செய்திகள்

டிக்டாக்’ நிறுவனம் இந்தியாவில் அடித்து பூட்டு

டிக்டாக்’ நிறுவனம் இந்தியாவில் அடித்து பூட்டு

டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.

அரசு தடை எதிரொலி : ‘டிக்டாக்’ நிறுவனம் இந்திய பிரிவை மூடியது

பாதுகாப்பு காரணங்களைக் கூறி, சீனாவின் டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தடைவிதித்தது.

இந்நிலையில், டிக்டாக், ஹலோ செயலிகளை உருவாக்கிய சீன சமூக ஊடக நிறுவனமான பைட்டான்ஸ், அதன் இந்திய தொழில் பிரிவை மூடுவதாக அறிவித்துள்ளது.

மத்திய அரசின் தொடர் கட்டுப்பாடுகள்தான் இந்த முடிவுக்குக் காரணம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. நேற்று நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக டிக்டாக்கின் உலக இடைக்காலத் தலைவர் வனேஸா பாப்பாஸ், துணைத் தலைவர் பிளேக் சாண்ட்லீ ஆகியோர் கூட்டாக தமது ஊழியர்களுக்கு ஒரு மின்னஞ்சலை

அனுப்பியுள்ளனர். அதில், இந்திய பிரிவை மூடுவதை ஒட்டி இந்தியாவில் உள்ள 2 ஆயிரம் ஊழியர்களில் குறிப்பிடத்தக்க

எண்ணிக்கையிலானவர்களை குறைப்பதாகவும், அது இங்குள்ள தமது அனைத்து ஊழியர்களையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.

உள்நாட்டு சட்டங்கள், விதிகளுக்கு உள்பட்டு தங்கள் நிறுவனம் நடந்தபோதும், அரசின் கட்டுப்பாடு தொடரும் நிலையில் தமது

இந்தியப் பிரிவை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை. தற்போது நிலையற்ற தன்மை நிலவினாலும், எதிர்காலத்தில் இந்தியாவில்

தங்கள் தொழிலை மீண்டும் தொடர்வோம் என்ற நம்பிக்கை இருப்பதாக அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப்பட்டுள்ளது