Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நத்தாருக்கு வீழ்ந்த லொத்தரி 8.4 மில்லியயன் – பல குடும்பங்கள் மகிழ்ச்சி

பிரிட்டனில் நத்தாருக்கு வீழ்ந்த லொத்தரி 8.4 மில்லியயன் – பல குடும்பங்கள் மகிழ்ச்சி

பிரிட்டனில் போஸ்கோர்ட் லொத்தரி குழுக்கள் இடம்பெற்று வருகிறது ,அவ்விதம் எதிர்வரவுள்ள

நத்தார் பண்டிகையை முன்னிட்டு இடம்பெற்ற குழுக்களில் ஒரே போஸ்க்கோர்ட் ME3 7QL

பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்கள் சிலருக்கு பெரும் தொகை பண பரிசு கிடைத்துள்ளது

,இதன் மொத்த தொகை 8.4 மில்லியன் ஆகும் , இதில் குறித்த தம்பதிகள் இந்த பரிசினை தட்டி சென்றுள்ளனர்

இதில் ஒருவரேனும் வெளிநாட்டவர் அல்ல என்பதும் ,அவர்கள் வயது அதிகமானவர்கள் என்பதையும் கவனிக்க

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

    பிரிட்டனில் 10 ஆயிரம் பேருக்கு புதிய கொரனோ தொற்று

    பிரிட்டனில் மூன்றாம் அலையாக பரவி வரும் புதிய ஓமிக்ரோன் கொரானா நோயின் தாக்குதலில்

    சிக்கி பத்து ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர் ,மேலும் ஒரே நாளில் 91 ஆயிரத்திற்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்

    தொடர்ந்து மேற்படி நோயானது அதிகரித்து வருவதாலும் மரண எண்னிக்கை 125 க்கு மேல்

    அதிகரித்து செல்வதாலும் விரைவில் நாடு முடக்க படும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

      Posted in உலக செய்திகள்

      இளவரசர் கார் கண்ணாடியை தட்டிய பெண் கைது

      இளவரசர் கார் கண்ணாடியை தட்டிய பெண் கைது

      பிரிட்டன் இளவரசர் குடும்பத்தை சார்ந்த இளவரசார் ஒருவர் தனது வண்டியில் பயணித்து

      கொண்டிருந்த பொழுது அவ் வழியே சென்ற பெண் ஒருவர் அவரது கார் கண்ணாடியை தட்டி சத்தமிட்டுள்ளார்

      இவரது இந்த செயலினால் அவர் கைது செய்ய பட்டு பட்டுள்ளார்


      அறுபது வயதுடைய இளவரசார் சென்ற கார் கண்ணாடியை மேற்படி பெண் தட்டியுள்ளமை கவனிக்க தக்கது

        Posted in Uncategorized உலக செய்திகள்

        பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

        பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா

        ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன் என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

        பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட ஐ.நா. செய்தி தொடர்பாளருக்கு கொரோனா
        செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக்

        ஐ.நா.சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் ஆவார். இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

        இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நான் ஐ.நா.மருத்துவ பணிகள் அமைப்பினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளேன்.

        நான் மருத்துவ வழிகாட்டுதல்கள்படி தனிமைப்படுத்திக்கொள்கிறேன்.
        நான் ஏற்கனவே 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளேன். பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும்

        செலுத்தி உள்ளேன். லேசான அறிகுறிகள் உள்ளன. வீட்டில் இருந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்” என்று அதில் ஸ்டீபன் துஜாரிக் குறிப்பிட்டுள்ளார்

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு

          லண்டனில் சிறார் பாடசாலையில் 50 பேருக்கு கொரனோ அடித்து பூட்டு

          லண்டன் St Stephen’s Junior School in Canterbury பாடசாலையில் கல்வி பயின்று வரும் 45 சிறார்கள்

          மற்றும் ஐந்து ஊழியர்களுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ள நிலையில் குறித்த

          பாடசாலை மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது

          இதுபல வேறு சில பாடசலைகளிலும் சில மாணவர்களுக்கு தொற்று உள்ள பொழுதும் அந்த

          பாடசாலைகள் இயங்கிவருவதாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

          A primary school is facing calls to shut for Christmas early after recording

          almost 50 confirmed Covid cases.St Stephen’s Junior School in

          Canterbury has revealed 45 pupils and four staff members have tested positive for the virus.

            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது

            விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது

            லண்டன் கென்ட் Folkestone பகுதியில் வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம்

            முற்றுகையிட பட்டது ,குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பெண் ஒருவர் அந்த

            வீட்டுக்குள் சென்று மேற்படி விடயத்தை உறுதி படுத்தி பொலிசாருக்கு தகவல் தெரிவித்த

            நிலையில் மேற்படி வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் நடத்த பட்டது

            அப்போதது அங்கிருந்து பெருமளவு பணமும் மீட்க பட்டுள்ளது ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய

            60 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் இந்த வீட்டுக்கு வந்தவர்கள் வந்தவர்கள்

            தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் மக்கள் உதவியும் கோர பட்டுள்ளது

              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

              அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த

              அமேசான் டிலிவரி சாரதி -திருட்டை காட்டி கொடுத்த

              பிரிட்டன் Canterbury கிராமத்தில் உள்ள வீடொன்றுக்கு ஆசிய நாட்டவர் ஒருவர் அமேசான் பாசல் டிலிவரி செய்துள்ளார் ,அவரது வீட்டுக்கு சென்ற அவர் அந்த வீட்டின் கதவினை தட்டவில்லை

              ,மாறாக அங்கு பாசல் டிலிவரி செய்ய பட்டுள்ளதாக குறும் தகவல் அனுப்பி விட்டு மேற்படி பாசலை வீட்டுக்கு திருடி சென்றுள்ளார்

              மேற்படி காட்சிகள் யாவும் அங்கு பொறுத்த பட்டிருந்த இரகசிய கமராவில் பதிவாகியுள்ளது ,மேற்படி பாசலின்

              பெறுமதி முப்பது பவுண்டுகள் எனவும் அதற்கும் குழந்தைகளுக்கு உரிய பேனாக்கள் ,கொள்வனவு செய்ய பட்டதாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார் .

              மேற்படி திருடு சம்பவம் தொடர்பில் அமேசானுக்கு தெரிவித்த நிலையில் ,உரிய காணொளியும் வழங்க பட்ட நிலையில்

              குறித்த சாரதி மீள நிறுவனத்திற்கு அழைக்க பட்டு ,இவரது திருட்டு காண்பிக்க பட்டதுடன் ,அவர் பணியில் இருந்து நிறுத்த பட்டுளளார்

              ஒரு திருட்டினால் அவரது வேலை பறிபோனதுடன் ,இவரது திருட்டு ஊடகங்களில் வெளியாகி அவரது மானத்தை வாங்கியுள்ளது

              இப்படியும் சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்

                Posted in Uncategorized உலக செய்திகள்

                அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

                அமோசான் நிறுவனத்தை உடைத்தெறிந்த சூறாவளி – 6 பேர் மரணம்

                அமெரிக்காவில் உள்ள முக்கிய அமோசான் நிறுவனம் ஒன்றினை அங்கு பலமாக வீசிய சூறாவளி அடித்து நொறுக்கியது


                இதில் பல நூறு ஏக்கர் பரப்பளவில் அமைய பெற்ற அந்த நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன்

                அங்கு பணிபுரிந்த ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

                நத்தார் தினத்தை முன்னிட்டு பர பரப்பாக இயங்கி கொண்டிருந்த நிறுவனம் மீதே சூறாவளி

                தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,மீளவும் குறித்த மையம் புனரமைப்பு செய்திட

                பலமாதங்கள் ஆகும் என தெரிவிக்க படுகிறது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                லண்டனில் காட்டுக்குள் பெண்ணை கற்பழித்த நபர்

                லண்டனில் காட்டுக்குள் பெண்ணை கற்பழித்த நபர்

                நேற்று முன்தினம் லண்டன் Fallowfield, Sittingbourne பகுதியில் உள்ள காடு சார்ந்த பகுதியில் வைத்து

                பெண் ஒருவரை நபர் ஒருவர் கற்பழித்துள்ளார்

                மேற்படி பாலியல் நிலைக்கு தள்ள பட்ட பெண் வீடு வந்து காவல்துறைக்கு வழங்கிய தகவலில் 21

                வயது சந்தேகநபர் கைது செய்ய பட்டுள்ள்ளார்

                இது கற்பழிப்பு தானா என்ற நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  லண்டனில் கத்தி குத்து ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

                  லண்டனில் கத்தி குத்து ஒருவர் மரணம் – ஒருவர் காயம்

                  லண்டன் வடமேற்கு பகுதியில் உள்ள Battenberg Road வீதியில் வித்து நடத்த பட்ட கத்தி குத்து

                  தாக்குதலில் சிக்கி ஒருவர் மரணமானார் ,மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர்

                  காயமடைந்தவர தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் ,மேற்படி கொலை செயலில்

                  ஈடுபட்டவர்களில் ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    Posted in உலக செய்திகள்

                    இரு போலீசார் சுட்டுக்கொலை

                    இரு போலீசார் சுட்டுக்கொலை

                    பாகிஸ்தானில் ஆயுததாரிகளினால் இரு காவல்துறையினர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர் ,


                    சமீப காலங்களாக அரச இயந்திரத்தை மைய படுத்தி தாக்குதல்கள் விரிவு படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in உலக செய்திகள்

                      மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா

                      மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா

                      பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சிறிது நேரத்திலேயே மீட்கப்பட்டது.

                      பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு
                      பிரதமர் மோடி

                      பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கம் PM @narendramodi என்ற பெயரில் உள்ளது. இதில் பல

                      மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக்- அதிர்ச்சியில் ஐயா

                      மில்லியன் பேர் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர்.

                      இந்நிலையில், இன்று அதிகாலை பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு

                      ஹேக்கர்களால் சிறிது நேரம் முடக்கப்பட்டது. பிரதமர் மோடியின் டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

                      இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடியின் டுவிட்டர்

                      கணக்கு சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டது. பிட்காயினை இந்தியாவில் சட்டப்பூர்வமாக்குவதாக

                      ஹேக்கர்கள் குறிப்பிட்டு இருந்தனர் ஹேக் செய்யப்பட்ட நேரத்தில் வெளியான பதிவுகளை கருத்தில் கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளது.


                        .

                        பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
                        Posted in உலக செய்திகள்

                        பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

                        பினாகா ஏவுகணை சோதனை வெற்றி

                        பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) உருவாக்கிய மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

                        மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை சோதனை வெற்றி
                        பினாகா ஏவுகணை

                        இந்திய ராணுவத்துக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன (டி.ஆர்.டி.ஓ.) தொழில்நுட்ப உதவியுடன் தனியார் நிறுவனத்தில் பினாகா ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

                        பினாகா ஏவுகணைகள் 40 கி.மீ. முதல் பல்வேறு தூர அளவுகளில் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் திறன் கொண்டவை.

                        இந்நிலையில், மேம்படுத்தப்பட்ட பினாகா ஏவுகணை துல்லியமாக இலக்கை தாக்கின என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

                        இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தாக்குதல்

                        தூரம் அதிகரிக்கப்பட்ட பினாகா ஏவுகணைகளின் சோதனை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் நடைபெற்றது.

                        பல்வேறு தூர அளவுகளுக்குச் செல்லும் வேறுபட்ட தாக்குதல் திறன் கொண்ட 24 பினாகா

                        ராக்கெட்டுகள் கடந்த 3 நாட்களில் பரிசோதிக்கப்பட்டன. அவை துல்லியமாக இலக்குகளைத் தாக்கின என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                          Posted in உலக செய்திகள்

                          இந்தியாவில் 26 பேருக்கு ஒமைக்ரான்

                          இந்தியாவில் 26 பேருக்கு ஒமைக்ரான்

                          இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு ஒமைக்ரான் வைரசு தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் அனைவருக்குமே மிதமான அறிகுறிகளே இருப்பதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சக இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

                          டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
                          டிசம்பர் 1 ஆம் தேதி முதல் வெளிநாடுகளில் இருந்து வந்த 93 பயணிகளுக்கு கரோனா தொற்று உறுதியானது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 83 பேர் ஹை ரிஸ்க் நாடுகளில் இருந்து

                          வந்தவர்கள் 13 பேர் வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள்.இதுவரை உலகம் முழுவதும் 59 நாடுகளில் கரோனா பரவியுள்ளது.

                          உலகம் முழுவதும் மொத்தம் 2936 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இதுதவிர 78,054 பேருக்கு ஒமைக்ரான் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மரபணு சோதனைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.

                          இந்தியாவில் இதுவரை 26 பேருக்கு ஒமைக்ரான் உறுதியாகியுள்ளது. இந்த வேளையில் நாட்டில்

                          மக்கள் மத்தியில் முகக்கவசம் அணியும் பழக்கம் வெகுவாகக் குறைந்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும் கவலை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

                          நாம் இப்போது மிகவும் ஆபத்தான ஏற்புடையது அல்லாத வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். நமக்கு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதற்குப் பின்னரும் முகக்கவசம் முக்கியம்.

                          ஒமைக்ரானுக்கென்று தனிப்பட்ட சிகிச்சை ஏதுமில்லை. கரோனாவின் மற்ற உருமாறிய வைரஸ் பாதிப்புக்கான அதே சிகிச்சை தான் அளிக்கப்படுகிறது. நாட்டில் வாராந்திர பாசிட்டிவிட்டி ரேட்

                          என்பது 0.73% க்கும் கீழ் உள்ளது. கடந்த 14 நாட்களாக அன்றாட பாதிப்பு 10,000க்கும் கீழ் இருக்கிறது.

                          கேரளா, மகாராஷ்டிராவில் மட்டுமே ஒட்டுமொத்த பாதிப்பில் 43% பதிவாகிறது. நாளொன்றுக்கு சராசரியாக 80 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்படுகின்றன.
                          என்று தெரிவித்தார்.

                          நிதி ஆயோக் அமைப்பின் சுகாதாரப் பிரிவு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் பேசுகையில், “பிரிட்டனிலும், பிரான்ஸிலும் ஒமைக்ரானால் அடுத்த அலை உருவாகியுள்ளது. இந்த புது

                          உருமாறிய வைரஸ் ஆச்சர்யங்கள் நிறைந்ததாக, புதிய திருப்பங்களைத் தருவதாக உள்ளது.

                          ஆகையால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மாஸ்க் அணிவிதில் ஒருபோதும் சுணக்கம் காட்டக் கூடாது” என்றும் கூறினார்

                            Posted in உலக செய்திகள்

                            ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்

                            ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்

                            வேலை நிறுத்தத்தையொட்டி சகாயிங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கருப்பு உடை அணிந்து அணிவகுத்து சென்றனர்.

                            மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
                            ஸ்டிரைக் காரணமாக வெறிச்சோடிய சாலை

                            மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம்

                            நடைபெற்றது. மனித உரிமை தினத்தையொட்டி நடைபெற்ற இந்த போராட்டத்தால் அங்குள்ள முக்கிய கடைவீதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

                            மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அந்நாட்டு அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல்

                            கொடுத்து வந்த ஆங் சான் சூகி மீது தேசவிரோதப் பேச்சு உள்பட 4 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

                            ஆங் சான் சூகி

                            இந்நிலையில் மனித உரிமை தினமான இன்று ராணுவ ஆட்சி எதிர்ப்பாளர்கள் நாடு தழுவிய அளவில் அமைதியான முறையில் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். இந்த

                            போராட்டத்திற்கு மியான்மர் மக்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். அதன்படி அந்நாட்டின்

                            அனைத்து நகரங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கடைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. மக்கள் நெருக்கம் மிகுந்த சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

                            இந்த போராட்டம் தற்போதைய சூழலில் எந்த குறிப்பிடத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய யாங்கூன் மாணவர் சங்க செய்தித் தொடர்பாளர் மின்ஹான் ஹெட் , எனினும் மியான்மர்

                            மக்கள் தங்கள் ஒற்றுமையை காட்டி, ராணுவ அதிகாரத்திற்கு எதிராக உளவியல் ரீதியான போரை நடத்தினர் என்றார். இது வேலை நிறுத்தத்திற்கு கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.

                            முன்னதாக உரிய காரணமின்றி மூடப்படும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் எச்சரிக்கப்பட்டதாகவும், ஆனால் நாங்கள் கவலைப்படவில்லை என்றும்

                            மியூஸ் நகரத்தை சேர்ந்த கடை விற்பனையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

                            வேலை நிறுத்தத்தையொட்டி சகாயிங் பகுதியில் ராணுவ ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பாளர்கள் கருப்பு உடை அணிந்து அணிவகுத்து சென்றனர். வீடுகளில் இருந்தவர்களும் கறுப்பு உடை

                            அணிந்து, சிறிய போஸ்டர்களைப் கையில் பிடித்தபடி செல்பி எடுத்துக்கொண்டனர். எங்கள் ஊர்

                            எங்களுக்குச் சொந்தமானது என்றும், புரட்சி மூலம் மனித உரிமையை திரும்பப் பெறுங்கள் என்றும் அந்த போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தது.

                              Posted in உலக செய்திகள்

                              பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்

                              பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
                              பாகிஸ்தான் அரசு ஒப்பந்தத்தை மீறிவிட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

                              முடிவுக்கு வந்தது போர் நிறுத்தம்… பாகிஸ்தானில் மீண்டும் தாக்குதலுக்கு தயாராகும் தலிபான்கள்
                              தலிபான்கள்
                              இஸ்லாமாபாத்:

                              பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானின் தலிபான் என அழைக்கப்படுகிறது. கடந்த 14 ஆண்டுகளாக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர்

                              மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2014ம் ஆண்டு பெஷாவர் நகரில் உள்ள ராணுவ

                              பள்ளியில் அந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 150 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள்.

                              இந்நிலையில் தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்புடன் இம்ரான்கான் அரசு கடந்த அக்டோபர் 25ம் தேதி ஆறு அம்ச ஒப்பந்தம் மேற்கொண்டது.

                              இம்ரான் கான் தலைமையிலான அமைச்சரவை

                              இதன்படி கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை இரு தரப்பும் போர் நிறுத்தம் செய்வது, சிறையில் உள்ள 102 தலிபான் படையினரை விடுதலை செய்வது உள்பட 6

                              அம்சங்கள் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றன. இரு தரப்பினருக்கும் மத்தியஸ்தராக ஆப்கானிஸ்தானின் தலிபான் அமைப்பு செயல்பட்டு வந்தது.

                              இந்நிலையில் பாகிஸ்தான் அரசு அந்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாகவும் தங்கள் அமைப்பினரை கைது செய்யும் நடவடிக்கையில் பாகிஸ்தான் படையினர் ஈடுபடுவதாகவும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

                              அத்துடன், ஒரு மாத கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அந்த அமைப்பின் தலைவர் முப்தி நூர் அறிவித்துள்ளார்.

                              முன்னதாக அவர் வெளியிட்டுள்ள ஆடியோ செய்தியில், தனது போராளிகளை நள்ளிரவு 12 மணிக்கு மேல் தாக்குதல்களை மீண்டும் தொடங்குமாறு கேட்டுக் கொண்டார்.

                              மத்தியஸ்தர்களிடம் இருந்தோ அல்லது அரசாங்கத்திடம் இருந்தோ பதில் வராத நிலையில், தங்கள் போராளிகள் எங்கிருந்தாலும் தாக்குதல்களை மீண்டும் தொடங்க உரிமை உண்டு என்றும் அவர் கூறியிருக்கிறார்.

                              இதனை அடுத்து பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் மற்றும் அந்நாட்டு பொதுமக்கள் மீது மீண்டும் தெஹ்ரீக்-இ-தலிபான்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்துவார்கள்

                              என அஞ்சப்படுகிறது. பாகிஸ்தான் தாலிபான்களின் அறிவிப்பு, பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

                              மேலும், தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்வதற்கான அரசின் முயற்சிகளுக்கும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

                              Posted in உலக செய்திகள்

                              அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து தீர்ப்பு

                              அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து தீர்ப்பு

                              அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

                              அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தலாம்: இங்கிலாந்து கோர்ட்டு தீர்ப்பு

                              அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளின் போர் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பான ரகசிய ஆவணங்களை ‘ஹேக்’

                              செய்து விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டு உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்சே.

                              இந்த விவகாரத்தில் அமெரிக்கா கொடுத்த நெருக்கடிகளின் காரணமாக கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் பதுங்கியிருந்த அசாஞ்சே கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டார்.

                              பின்னர் அவர் தென்கிழக்கு லண்டனில் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி அமெரிக்கா இங்கிலாந்திடம் கோரிக்கை விடுத்தது.

                              உளவு குற்றச்சாட்டில் ஜூலியன் அசாஞ்சேவுக்கு அதிகபட்சமாக 175 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க அமெரிக்கா விரும்புகிறது.

                              ஆனால் அமெரிக்காவிடம் தன்னை ஒப்படைக்கக் கூடாது என்று கூறி லண்டன் கோர்ட்டில் அசாஞ்சே வழக்கு தொடர்ந்தார்.

                              கடந்த ஜனவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த லண்டன் கோர்ட்டு, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்தினால் அவரது உயிருக்கு ஆபத்து

                              ஏற்படலாம் எனவும், மன ரீதியில் பிரச்சினைகள் ஏற்பட்டு சிறையில் அவர் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு உள்ளதாகவும் கூறி அவரை நாடு கடத்த

                              அனுமதிக்க முடியாது என தீர்ப்பளித்தது. கீழ்கோர்ட்டு வழங்கிய இந்த தீர்ப்பை எதிர்த்து லண்டன் மேல்முறையீட்டு கோர்ட்டில் அமெரிக்கா மேல்முறையீடு செய்தது.

                              இந்த வழக்கை நேற்று விசாரித்த மேல்முறையீட்டு கோர்ட்டு அசாஞ்சேவை நாடுகடத்த அனுமதிக்க முடியாது என கூறி கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

                              இதன் மூலம் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான கதவு திறந்துள்ளது.

                              Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                              பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

                              பிரிட்டனில் கொரனோ அதிகபரவல் – மருத்துவமனைகள் அவதி

                              பிரிட்டனில் ,குறிப்பாக லண்டனில் மட்டும் இந்தவாரம் மட்டும் சுமார் 44,600 பேர் கொரனோ

                              நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் ,கடந்த தினம் மட்டும் ஏழாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                              நோயாளர் அதிகரிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன


                              இவ்வாறு நோயின் அதிகரிப்பு தொடரும் எனின் மூன்றாவது தடவையாக லொக்கடவுன் நிலை

                              ஏற்படுத்த படும் அபாயம் உள்ளது ,நத்தார் தினத்தை அண்மித்து அடித்து பூட்டும் நிகழ்வுகள்

                              பிரிட்டனில் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in உலக செய்திகள்

                                ஒரே நாளில் குழந்தைபிரசவித்துள்ள இரட்டை சகோதரிகள்

                                ஒரே நாளில் குழந்தைபிரசவித்துள்ள இரட்டை சகோதரிகள்

                                ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.

                                இந்த சம்பவம் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

                                கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் இராணுவ வீரர் சந்திரசேகர் நாயர். இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதியின் மகள்கள்

                                ஸ்ரீபிரியா, ஸ்ரீலட்சுமி. இருவரும் இரட்டை சகோதரிகள். இருவரும் இணை பிரியாமல் ஒன்றாகவே வளர்ந்தனர்.

                                இந்தநிலையில் இருவரும் வளர்ந்து திருமண வயதை எட்டிய நிலையில், மகள்களின் விருப்பப்படி, மாப்பிள்ளை பார்த்து இருவருக்கும் ஒரே நாளில், ஒரே மேடையில் திருமணத்தை நடத்தினர்.

                                அதாவது கடந்த 2020 ஆம் ஆண்டு டிசெம்பர் 11ஆம் திகதி ஒரே மேடையில் கோட்டயத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடந்தது.

                                கர்ப்பமாக இருந்த இருவரும் தாங்கள் பிறந்த மருத்துவமனையிலேயே குழந்தைகளை பெற்று

                                கொள்ள விரும்பினர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஸ்ரீபிரியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

                                அன்றிரவு ஸ்ரீலெட்சுமிக்கும் பிரசவ வலி ஏற்பட்டு, அவரும் அதே மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார்.

                                இந்தநிலையில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 2.20 மணியளவில் ஸ்ரீபிரியா ஒரு பெண்

                                குழந்தையை பெற்றெடுத்தார். மாலை 6.45 மணிக்கு ஸ்ரீ லெட்சுமிக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

                                இரட்டை சகோதரிகள் ஒரே நாளில் குழந்தைகளை பெற்றெடுத்தது பெரும் ஆச்சரியத்தை

                                ஏற்படுத்தியது. அதேநேரம் பிறந்த குழந்தைகள் 2 பேருக்கும் ஒரே இரத்தப்பிரிவு என இந்தியச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

                                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  லண்டனில் மாணவிக்கு செக்ஸ் செய்தி அணுபிய டீச்சர்

                                  லண்டனில் மாணவிக்கு செக்ஸ் செய்தி அணுபிய டீச்சர்

                                  லண்டன் பகுதியில் முன்னாள் கல்வி கற்பித்த வரலாற்று ஆசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு

                                  சமூக வலைத்தளம் ஊடாக செக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார்

                                  மேற்படி விடயம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தற்போது நீதி விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளார்

                                  மேற்படி விடயம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,குற்றம்

                                  நிரூபிக்க பட்டால் பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது