Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் உள்ள நைட்கிளப் ஒன்றில் ,
உதை பந்தாட்ட வீரர் ஒருவர் குற்றி கொலை செய்யப்பட்டார் .
இந்த கொலை சம்பவத்தை அடுத்து ,
அந்த நைட்கிளப் உரிமம் இரத்து செய்யப் பட்டுள்ளது .
உதைபந்தாத்தா வீர்ரர் அந்த நைட்கிளப்பில் நடனம் ஆடும்
பகுதியில் ,நடனம் ஆடி கொண்டிருந்த பொழுது ,
மர்ம நபர்களினால் கோரமாக குத்தி கொலை செய்யப்பட்டார் .
உதைபந்தாட்ட வீரர் குத்தி கொலை நைட்கிளப் உரிமம் இரத்து
குறித்த நைட்கிளப்பில் போதை பொருள் விற்பனை,
என்பனவும் இடம்பெற்று வருவதாகவும் ,
இந்த நைட் கிளப் ஒரு பாதுகாப்பபு அற்றது ,
என காவல்துறையினர் தெரிவித்து அதன் உரிமம்,
அந்த கவுன்சிலனினால் இரத்து செய்யப் பட்டுள்ளது .
நைட் கிளப் பாதுகாப்பு விதிகள் ,சீரற்று காணப்பட்டமையே இந்த கொலைக்கு கரணம் என கண்டறியப்பட்டுள்ளது .
மீள இந்த கிளப் இயக்க பட வேண்டுமா இல்லையா என்பது தொடர்பாக,
மறு பரிசீலனை செய்த பின்னரே தீர்மானிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை
இராணுவ ஆட்சி இடம்பெற்றுவரும் மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மியான்மரின் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தியவர் ஆங் சான் சூகி (77 வயது). இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்.
இவர் தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இந்த தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி ஆங் சாங் சூகியின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறை
அதை தொடர்ந்து ஆங் சான் சூகி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவர் மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, அலுவலக ரீதியான சட்டங்களை மீறியது, ஊழல் முறைகேடுகள் என வழக்குகள் தொடரப்பட்டன. இது தொடர்பான விசாரணை மியான்மர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் கடந்த டிசம்பரில் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம், பிறகு பல்வேறு வழக்குகளில் 17 ஆண்டுகள் வரை தண்டனையை நீட்டித்தது. தொடர்ந்து, தேர்தல் முறைகேடு வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. சூகிக்கு இதுவரை 11 வழக்குகளில் 20 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் மீது மேலும் பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில், இன்னொரு ஊழல் வழக்கில் ஆங் சான் சூகிக்கு மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையை மியான்மர் ராணுவ நீதிமன்றம் விதித்துள்ளது. இதன் மூலம் தற்போது அவரது சிறைத் தண்டனை காலம் 26 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மீதான 18 மாத விசாரணையில் மீதமுள்ள ஐந்து குற்றச்சாட்டுகள் மீதான தீர்ப்பை மியான்மர் இராணுவ நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) வழங்கியுள்ளது.
அதன்படி, அவருக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியான்மார் இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சிறையில் உள்ள ஆங் சான் சூகி நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
இந்திய பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் இன்று அதிகாலை காலமானார் .
காந்திநகரில் உள்ள மயானத்தில் ஹீராபென் உடல் தகனம் செய்யப்பட்டது.
தாயார் மறைவு செய்தி கேட்டதும் உடனடியாக குஜராத் சென்ற பிரதமர் மோடி, தனது தயார் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இறுதிச்சடங்கு நிகழ்வுகள் நடைபெற்றது. இதையடுத்து காந்திநகரில் உள்ள மயானத்தில் பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம் செய்யப்பட்டது.
பிரதமர் மோடியின் தாயார் உடல் தகனம்
தாயின் சிதைக்கு பிரதமர் மோடி தீ மூட்டினார்.
ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என பிரதமர் மோடி தயாரின் மறைவு குறித்து தெரிவித்திருந்தார்.
அகமதாபாத் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் தாயார் இன்று காலை (30) காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 100.என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் Rishabh Pant படுகாயம்
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் Rishabh Pant படுகாயம்
இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப்பண்ட் Rishabh Pant இன்று (30) காலை தில்லியில் இருந்து காரில் உத்தரகாண்ட் மாநிலம் ரூர்க்கியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் விபத்துக்குளள்ளானார்.
காரை அவரே ஓட்டி சென்றார். தில்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மங்க்ரூர் பகுதி அருகே திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து வீதி தடுப்பில் மோதியது.
இந்த விபத்தில் ரிஷப்பண்ட் படுகாயம் அடைந்தார். அவரது தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. வீதி தடுப்பில் மோதிய வேகத்தில் காரில் திடீரென தீப்பிடித்தது. உடனே ரிஷப் பண்ட் காரில் இருந்து வெளியேற முயற்சித்தார்.
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப்பண்ட் Rishabh Pant படுகாயம்
கார் கண்ணாடியை உடைத்து அவர் வெளியே வந்தார். காரில் தீப்பிடித்ததால் முற்றிலும் எரிந்தது.
காரில் இருந்து ரிஷப்பண்ட் உடனே வெளியேறியதால் காயத்துடன் தப்பினார். விபத்து குறித்த தகவலறிந்ததும் ஸ்தலத்திற்கு வநத பொலிசார் ரிஷப் பண்டை மீட்டு அப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் டேராடூனில் உள்ள மேக்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ரிஷப் பண்டுக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரது உடல்நிலை சீராக உள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், ரிஷப் பண்ட் ஓட்டிச்சென்ற கார் விபத்துக்குள்ளான
சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன..
இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
சிரியா கிழக்கு தாரா பகுதியில் அல் நைமா town,
பகுதியில் உள்ள சோதனை சாவடியில் ,பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,
சிரியா இராணுவத்தின் முக்கிய மூன்று உளவுத்துறை அதிகாரிகள் ,
சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மேலும் நால்வர் படு காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது.
இராணுவ புலனாய்வார்கள் அவர்களது கோட்டைக்குள் சுட்டுக்கொலை
துப்பாக்கியை மறைத்த படி வந்த மர்ம நபர் ,
திடீரென துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .
இதில் சம்பவ இதில் மூன்று உளவுத்துறை அதிகாரிகள் பலியாகினர் .
இதே பகுதியில் நடத்த பட்ட இவ்விதமான 535 தாக்குதல்களில் ,
486 மக்கள் மற்றும் இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் .
இவ்விதமான தாக்குதல்கள் நாள்தோறும் அதிகரித்து செல்வதால் ,
இந்த மாநிலத்தில் மிக பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
சிரியா அரச இராணுவத்தினருக்கு எதிரான,
புதிய குழுக்கள் ,இந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்திய கொட்டலில் ரசியா எம்பி யை போட்டு தள்ளிய உளவுத்துறை
இந்திய கொட்டலில் ரசியா எம்பி யை போட்டு தள்ளிய உளவுத்துறை
இந்தியா ஒடிசா பகுதியில் உள்ள கொட்டல் ஒன்றில்,
ரசியா நாட்டின் சட்டமியற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ,
பாவெல் அன்டோவ் மர்மமாக பலியாகியுள்ளார் .
இதே கொட்டலில் இவரது இரு ரசியா நாட்டு நண்பர்கள் ,
பலியாகி இருந்த சில நாட்களில் ,இவரும் பலியாகியுள்ளார் .
இது மேற்குலக உலக நாடுகளின் உளவுத்துறைகளினால்,
மர்மமாக கொலை செய்ய பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது .
இஸ்ரேல் மொசாட் இந்த கொலைகளில் ,உலகில் முதலிடம் வகிக்கிறது .
தமக்கு எதிரானவர்களை தீர்த்து கட்டுவதில் ,இவர்கள் மகா கில்லாடிகள் .
இந்திய கொட்டலில் ரசியா எம்பி யை போட்டு தள்ளிய உளவுத்துறை
அதன் பின்னர் அமெரிக்காவின் வெளியக புலனாய்வு துறையினர் செயல் படுகின்றனர் .
இதில் இவர்களை எந்த உளவுத்துறை போட்டு தள்ளியது என்பதை அறிய,
ரசியா உளவுத்துறை ,தமது புலனாய்வு தேடலை ஆரம்பித்துள்ளது .
ரசியா ஜனாதிபதி புட்டீன் மிக நெருக்கமானவர்களை ,
காட்சிதமாக ,வெளியக எதிரி நாட்டு உளவுத்துறையினர் ,
போட்டு தள்ளிய வண்ணம் உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இந்த படுகொலைகள் பார்க்க முடிகிறது .
இந்த படுகொலைகள் மூலம் ரசியா ஜனாதிபதி புட்டீனுக்கு ,
சொல்ல படும் மிரட்டல் செய்தியின் பினாலாவது ,அவர் அடிபணிவாரா ,
என்பதே கேள்வியாக உள்ளது .
கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்
கடலில் மூழ்கி 26 அகதிகள் மரணம்
பங்காளதேஸ் பகுதியில் இருந்து ஆபத்தான கடல்வழியை கடந்து ,வடமேற்கு
இந்தோனோசியா கடல்பகுதியில் ரோகினிய அகதிகள் வந்து இறங்கினர் .
கடந்த இரு தினங்களில் 58 மற்றும் 178 அகதிகள் கடலில் தத்தளித்த,
பொழுது இந்தோனேசிய மீனவர்கள் மற்றும் ,
அதே கடற்படையால் காப்பாற்ற பட்டு கரை சேர்க்க பட்டனர் .
மேலும் தத்தளித்து கொண்டிருந்த 26 அகதிகள் கடலில் மூழ்கி பலியாகியுள்ளனர்
இவர்களை போன்று மேலும் பல அகதிகள்,
மீன்பிடி கப்பல்கள் கடலில் தத்தளித்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இவர்களுக்கு இதுவரை எவ்வித உதவிகளும் கிடைக்க பெறவில்லை ,
என்கின்ற தகவல் மனித குலத்தை அதிர வைத்துள்ளது .
மியன்மார் அரச இராணுவத்தால் ,
முசுலீம்கள் என்ற காரணத்தால் இந்த மக்கள் கொலை செய்யப்பட்டு
அங்கிருந்து விரட்ட பட்டு வருகின்றனர் .
அதனால் அகதிகளாக இந்த மக்கள், நாடு நாடக அலைந்த வண்னம் உள்ளனர் .
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் எரிவாயு வெடித்து 4 பேர் காயம் வீடுகள் சேதம்
பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் எரிவாயு வெடித்து 4 பேர் காயம் வீடுகள் சேதம்
பிரிட்டன் பேர்மிங்காம் ,வொர் செஸ்டர் ஷையரில் உள்ள ஒரு வீட்டில்,
காஸ் வெடித்து சிதறியதால் ,அந்த வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
வீட்டின் கூரைகள் என்பன இடிந்து வீழ்ந்துள்ளது .
இந்த வெடிப்பு சம்பவத்தில் சிக்கி நான்கு பேர் காயமடைந்தனர் .
பாதிக்க பட்டவர்களில் ஒருவர் பேர்மிங்கம் பகுதியில் உள்ள ,
குயின் எலிசபெத் மருத்துவ மனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளனர் .
ஏனையவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த வெடிப்பு சம்பவத்தால் ,
அருகில் உள்ள ஐந்து வீடுகளும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆளை கொல்லும் உறைபனி குளிர் நிலவும் இவ்வேளையில் ,
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,
துயரை ஏற்படுத்தியுள்ளது .
தொடர்ந்து வெடிப்பு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
ஈரானில் வெடிப்பு 50 பேர் காயம்
ஈரானில் வெடிப்பு 50 பேர் காயம்
ஈரானில் பெயிண்ட் தொழில் சாலையில் இடப்பெற்ற வெடி விபத்தில் சிக்கி
50 பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இந்த வெடி விபத்திற்கான காரணம் தெரிவிக்க படவில்லை .
குறித்த நிறுவனம் பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த வெடிப்பு சம்பவத்தினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேல் உளவாளிகள் நாசகார வேலையாக இவை இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
600 ரசியா இராணுவம் பலி தொடரும் மோதல்
600 ரசியா இராணுவம் பலி தொடரும் மோதல்
உக்கிரேன் ரசியா இராணுவத்தினருக்கு இடையில் இடம்பெற்ற கடும் மோதலில் சிக்கி கடந்த 24
மணித்தியாலத்தில் மட்டும் 600 ரசியா இராணுவம் பலியாகியுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .
இதன் பொழுது டாங்கிகள் ,விமானம் ,பீரங்கிகள் ,கவச வண்டிகள் என்பனவும் அழிக்க பட்டுள்ளதாக உக்கிரேன்
தெரிவித்துள்ளது .
ரஸ்யாவும் பதிலுக்கு ஏவுகணைகளை வீசி வருகின்றது .
இதில் 48 மணித்தியாலத்தில் இருபதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் 149 பேர் காயமடைந்துள்ளனர் .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் ,கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
டிக் டாக் தடை செய்ய அமெரிக்கா திட்டம்
டிக் டாக் தடை செய்ய அமெரிக்கா திட்டம்
உலக மக்களை கட்டி போட்டிருக்கும் சீனா நிறுவனத்தின் டிக் டாக்கை
அமெரிக்காவில் தடை செய்திடும் நடவடிக்கை தயராகி வருகிறது .
டிக் டாக் மக்கள் ,மற்றும் பயனாளர்களின் தரவுகளை பெற்று,
முக்கிய நபர்களை உளவு பார்த்தலில் ஈடுபட்டுள்ளது என்கின்ற குற்ற சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .
இதனை அடுத்து டிக் டாக் அமெரிக்காவில், முற்றாக மக்கள் பயன்படுத்த ,
தடையினை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன .
பேஸ்புக் ,டுவிட்டர் என்பன அமெரிக்கா நிறுவனங்களாகி விளங்கி வருகின்றன .
இவற்றை தூக்கி சாப்பிடும் அளவுக்கு ,டிக் டாக் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது .
டிக் டாக் தடை செய்ய அமெரிக்கா திட்டம்
அரசியல் வர்த்தக பொருளாதரத்தில் சுழன்று வரும் அமெரிக்காவுக்கு ,
டிக் டாக் மிக பெரும் ,சுமையாக உள்ளது .
அதனால் அதனை தீர்த்து காட்டும் நடவடிக்கையில் அமெரிக்கா களம் இறங்கியுள்ளது .
சில நாட்களுக்கு முன்னர், மிக முக்கிய இரு ஊடக நபர்களை ,
உளவு பார்த்ததன் குற்ற சாட்டில் ,டிக் டாக் சிக்கி இருந்தது தெரிந்ததே .
டிக் டாக் என்றால் சர்ச்சையாகவே உள்ளது .
உக்கிரேன் மருத்துவமனைகள் மீது ரசியா தாக்குதல்
உக்கிரேன் மருத்துவமனைகள் மீது ரசியா தாக்குதல்
உக்கிரேன் கேர்சன்மாகாணத்தில் உள்ள ,
கெர்சன் ஒப்லாஸ்ட் மருத்துவ மருத்துவமனை மீது ,ரசியா தாக்குதலை நடத்தியுள்ளது .
இதே பகுதியில் உள்ள இரு மருத்துவ மனைகள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கும் காட்சிகளும் ,
அதனால் அந்த கட்டிடங்கள் உடைந்து விழுவதும் காண்பிக்க படுகிறது .
எனினும் இந்த தாக்குதலில் மக்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தெரியவரவில்லை .
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் உக்கிரேன் மீது ரசியா நடத்திய தாக்குதல் ,
100 க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்தும் .20 பேர் பலியாகியுள்ளனர் என்கிறது தகவல் ஒன்று .
அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்
அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்
அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனி மழை பொழிவினால் ,
50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 10 மில்லியன் மக்கள் ,மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .
அதிக குளிர் நிலவுவதால் ,மேலதிகமாக,
ஐந்து லட்சம் போர்வைகள் வழங்க பட்டுள்ளன .
எனினும் மக்களை காப்பாற்ற முடியா நிலையில்,
அமெரிக்கா சிக்கி தவித்து வருகிறது .
வீடுகள் மேல் மூன்று அடிக்கு மேல் சினோ குவியலாக காணப்படுவதால் ,
அதிக குளிரில் பல வீடுகள் சிக்கியுள்ளன .
வயதானவர் முதல் சிறுவர்கள் வரை ,
இந்த சினோவின் அதிக குளிர் காரணமாக பலியாகி வருகின்றனர் .
கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இவ்வாறே காலநிலை பயணித்தால்,
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா
தமது விமானத்தை தாமே சுட்டு வீழ்த்திய தென்கொரியா
தென்கொரியா தமது போர் விமானம் ஒன்றை தாமே சுட்டு வீழ்த்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வடகொரியாவின் இந்த உளவு விமானங்கள் ,தென்கொரியாவுக்குள் நுளைந்தன .
இதனை கண்ணுற்ற தென் கொரியா இராணுவத்தினர், நூற்றுக்கு மேற்பட்ட குண்டுகளை சப்பி துப்பின .
அவ்வேளை வடகொரியா விமானத்தை தேடி பறந்த தென்கொரியா விமானத்தில் ஒன்றை ,தவறுதலாக எதிரி விமானம் என நினைத்து தென்கொரியா சுட்டு வீழ்த்தியுள்ளது .
எனினும் தமது விமானம் விபத்தில் சிக்கியது என்கின்ற கதை வசனம் எழுதி ,தென்கொரியா செய்தியை வெளியிட்டுள்ளது .
தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் நுழைந்த 71 சீனா விமானங்கள் 7 போர் கப்பல்கள்
தாய்வானுக்குள் சீனாவின் 71 விமானங்கள் மற்றும் ஏழு கப்பல்கள் என்பன நுழைந்து சென்றுள்ளன .
கடந்த 24 மணித்தியாலத்தில் இந்த அத்து மீறல் இடம்பெற்றுள்ளதாக தாய்வான் அறிவித்துள்ளது .
தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தெரிவித்து வரும் நிலையில் ,இந்த அத்து மீறல் மிரட்டல் நடவடிக்கையை ,சீனா மேற்கொண்டுள்ளது .
சீனாவின் இந்த அத்து மீறலினால் ,தாய்வான் ,சீனாவுக்கு இடையில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது .
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
லண்டன் Abbey Wood காவல்துறையினர் நடத்திய திடீர் சோதனை வேட்டையின் பொழுது ஆயுதங்கள் சிக்கின .
மிக பெரும் ஆயுத குழுக்கள் ,ஆயுதங்களை ,ஆயுத தொழில் சாலைகளில் கொள்வனவு செய்து அதனை ,
குழுக்களுக்கு விற்று வந்துள்ளனர் .
இவ்விதமான தகவலை மேப்பம் பிடித்த குற்ற தடுப்பு காவல்துறையினர் ,
சந்தேகத்திற்கிடமான woodland. பகுதியை சுற்றி வளைத்தனர் .
லண்டனில் சிக்கிய கொடிய ஆயுதங்கள் – தொடரும் பொலிஸ் வேட்டை
இந்த முற்றுகையின் பொழுது எட்டு கை துப்பாக்கிகள் ,
மற்றும் அவற்றுக்குரிய தோட்டாக்கள் என்பன ,புதிய பொதிகளுடன் மீட்க பட்டன .
ஆயுதங்கள் மீட்க பட்டதை அடுத்து ,
தொடர் புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இவர்களினால் ஆயுதங்கள் வழங்க பட்ட குழுக்களை,
மடக்கி பிடிக்கும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
குறித்த துப்பாக்கி மீட்பு காட்சிகளை ,
போலீசார் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .

மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
அமெரிக்காவில் நத்தார் தினமான காலை வேளை, தோர்ன்டன், கொலராடோ உள்ள ,யெகோவா தேவாலயத்தில் கணவன் தனது மனைவியை ,
சுட்டுக் கொன்றுவிட்டு ,துப்பாக்கியால் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆயுத போலீசார் ,
சோதனைகளை நடத்தினர் ,
அப்பொழுது அங்கு சில வெடி பொருள் சாதனங்கள் காணப்பட்டன .
மனைவியை சுட்டு கொன்று தற்கொலை புரிந்த கணவன்
இந்த படுகொலை சம்பவத்திற்கான ,
கரணம் தெரிவிக்கப்படவில்லை .
தொடர்ந்து குற்றப்புலனாய்வு துறையினர்
விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .
ஜேசு பாலன் பிறப்பை, குதுகலமாக கொண்டாடி கொண்டிருந்த மக்களுக்கு ,
இந்த் சூட்டு சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
வட மேற்கு ஸ்பெயின் பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள்,
பயணிகள் பேரூந்து வீழ்ந்து நொறுங்கியது .
இந்த விபத்தில் ஆறுபேர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
ஸ்பெயின் நாட்டின் Lugo பகுதியில் இருந்து Vigo பகுதிக்கு
பயணித்து கொண்டிருந்த பேரூந்து ,ஆற்றுக்கு மேலால் அமைக்க பட்ட ,
உயரமான பாலத்தை கடக்க முற்பட்ட வேளை ,
சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து ,பாலத்தின் பாதுகாப்பு கம்பிகளை
உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்து நொறுங்கியது .
பாலத்தை உடைத்து ஆற்றுக்குள் வீழ்ந்த பேரூந்து 6 பேர் பலி
இதன் பொழுது 63 வயதுடைய சாரதி உள்ளிட்ட
நால்வர் நீரில் அடித்து செல்ல பட்ட நிலையில்,
தீயணைப்பு வீரர்களினால் காப்பாற்ற பட்டு ,
மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
விபத்தினை ஏற்படுத்திய சாரதி மீது,
நடத்த பட்ட சோதனையில் ,அவர் மதுவோ ,போதைவஸ்துக்களோ ,
அருந்தி இருக்கவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கண் இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த விபத்து ,
தப்பியவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் இந்த வருடத்தின் 12 மதங்களில் பிரிட்டன் வேல்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் 400 பப் ,சாராய கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .
கொரனோ மற்றும் இந்த சாராய கடைகளினால் குறித்த பகுதிகளில் ,
குற்ற செயல்கள் அதிகரித்து வருகிறது என்கின்ற குற்ற சாட்டாலும் ,
அதன் உரிமங்கள் இரத்து செய்யப்பட்டன .
அவ்விதமாக 400 பப் அடித்து பூட்ட பட்டுள்ளது .
பிரிட்டனில் 400 பப் சாராய கடைகள் அடித்து பூட்டு
பிரிட்டனில் 40,173 சாராய கடைகள் பப் இயங்கி வந்தன ,
அவற்றில் கடந்த ஐந்து வருடத்தில் மட்டும் ,
2,663 அடித்து மூடப்பட்டுள்ளன .
இதனால் பலர் வேலைவாய்ப்பை இழந்தனர் .
மேலும் அதிக வருமானத்தை அரசும் இழந்துள்ளது .
இந்த கடைகள் பூட்டால் குடி மக்கள் பெரிதும் கவலையில் உறைந்துள்ளனர் .
இந்த மக்கள் குடிப்பதனால் தான் அரசுகள் நாட்டை ஒட்டி செல்ல முடிகிறது .
ஒரு நாட்டின் வருமானத்தின் முதுகெலும்பாக சாராய விற்பனை உள்ளது .
அதன் மூலமே அரசுக்கு பெரும் தொகை வரி பணம் கிடைக்கிறது .
அதனையே அரசு இழந்துள்ளது எனலாம் .
இவ்வாறான சாராய கடைகள் தமிழகம் மற்றும் இலங்கையில் அடித்து பூட்ட படவேண்டும் ,
ஆனால் அங்கே இவை நடைபெறுவதில்லை என்பதே
வேதனையான விடயமாகும் மக்கள் நலன் விரும்பிகள் தெரிவிக்கின்றனர்.
பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு
பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு
உக்கிரேன் மீதான போரை விரைவுக்கு
விரைந்து முடிவுக்கு கொண்டுவர நாங்கள் விரும்புகிறோம் .
அதனால் உக்கிரேனை பேச்சுக்கு அழைக்கிறோம் ,ஆனால் அவர்கள்
நமது அழைப்பை தட்டி கழித்து செல்கின்றனர் என
ரசியா அதிபர் தெரிவித்துள்ளார் .
உக்கிரேன் பேச்சுக்கு சம்மதிக்க முயன்றாலும் ,அதனை தடுத்து நிறுத்தி
போரை நீடித்து செல்கிறது மேற்குலக நாடுகள் என ,ரசியா
ஜனாதிபதி புட்டீன் தெரிவித்துள்ளார் .
பேச்சுக்கு நாங்கள் தயார் ரசியா அறிவிப்பு
பொறுப்பு கூறலுக்கு நாங்கள் தயாராக உள்ளோம் என்பதை ,
கண் துடைப்புக்கு ரசியா காண்பித்து வருகிறது எனவும் ,
இவர்கள் உணமையான பேச்சுக்கு எம்மை அழைக்கவில்லை என ,
உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸியின்
ஆலோசகராக விளங்கும் ,மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார் .
மேற்குலக முதுகில் ஏறி சவாரி செய்யும், உக்கிரேன் அதிபர் ஜெலன்ஸி ,
ரசியாவுக்கு நேர்ந்து விட்ட பலியாடு என்கிறது ,புட்டீன் ஆதரவு தரப்புக்கள் .
எனினும் எப்பொழுது உக்கிரேன் ரஷியா போர்,
முடிவுக்கு வரும் என ஆவலுடான் ,
எதிர்பார்த்து காத்துள்ளது ,பொருளாதாரத்தில் பாதிக்க பட்ட நாடுகள் .





































