Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோ தாக்குதல் இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி

கொரனோ தாக்குதல் இத்தாலியில் ஒரே நாளில் 133 பேர் பலி

இத்தாலியில் ஒரே நாளில் சுமார் 133 பேர் கொரனோ வைரஸ் தாக்குதலுக்கு சிக்கி பலியாகியுள்ளனர் .இதுவரை சுமார் 366 பேர்

பலியாகியுள்ளனர் மேலும் எட்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளனர் .

16 மில்லியன் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாத வண்ணம் தடை செய்ய பட்டுள்ளனர் .


அதாவது வீடுகளுக்குள் சிறை வைக்க பட்டுள்ளனர் .

வீதிகளில் இராணுவ போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்

மீறி வெளியில் சென்றால் கைது செய்ய படுகின்றனர் ,மேலும் இத்தாலிய இராணுவ தளபதியும் இந்த வைரஸால் நோயால் பாதிக்க பட்டு

தனி அறையில் தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .

இத்தாலிக்கு ஐரோப்பா உள்ளிட்ட பல நாட்து விமான சேவைகள் ,கப்பல்,சேவைகள் என்பன இரத்து செய்ய பட்டுள்ளன .

இத்தாலிய மக்கள் சில நாடுகளுக்குள் நுழையவும் தடை விதிக்க பட்டுள்ளது

கொரனோ தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

புதிய கட்சிகள் உருவான காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் எம்.பி சாள்ஸ்

புதிய கட்சிகள் உருவான காரணத்தை வெளிப்படுத்திய முன்னாள் எம்.பி சாள்ஸ்

புதிய கட்சிகள் உருவாகியமைக்கான காரணத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கண்டு பிடித்துள்ளார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அந்த கண்டு பிடிப்பை வெளிப்படுத்தினார். அவர் தெரிவித்ததாவது,

மாற்றுத்தலைமை என இன்று பலர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வருவார்கள். அவர்கள் தமிழ்த் தேசிய நலன் சார்ந்த விடயங்களுக்காக கட்சிகளை உருவாக்கவில்லை. மக்கள் நலனுக்காகவும் கட்சிகளை உருவாக்கவில்லை. அவர்கள் கதிரைகள் மீது உள்ள பற்றின் காரணமாகவே கட்சிகளை உருவாக்கினார்கள். இன்று எம் மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.

அந்த குற்றச்சாட்டுகளுக்கு பிரதேசவாரியாக மக்களுக்கு விளக்கத்தினை வழங்க தயாராகவே இருக்கின்றேன். யாரையும் பெயர் குறிப்பிட நான் விரும்பாவிட்டாலும், யாராவது இவ்வாறு தெரிவித்தனர் என்றால் அவர்களைப்பற்றி கூற நானும் தயாராக இருக்கின்றேன். அவர்களைப்பற்றி முழு விபரமும் என்னிடம் இருக்கின்றது. யார் யார் எவருடன் தொடர்பினை வைத்திருந்தனர். யாருடைய நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டார்கள் என்ற முழு ஆதாரமும் என்னிடம் உள்ளது.

இதேவேளை தமிழர்களின் நிரந்தரமான தீர்வுக்கு அரசியல் அமைப்பு மாற்றம் என்பது அவசியமானதாகும். அதன் மூலம்தான் தமிழர்கள் முன் உள்ள பிரச்சனைகளுக்கு 80 வீதமான தீர்வு கிடைக்கும். வடக்கு கிழக்கு தமிழர்கள் செறிந்து வாழ்ந்த பிரதேசமாக இருந்தது. ஆனால் இன்று தமிழர்களது இனவிகிதாசாரத்தினை குறைக்கும் அளவிற்கு சிங்கள குடியேற்றங்கள் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கு அவர்கள் கையாளும் தந்திரம் மகாவலி திட்டமாகும்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு அல்லது தமிழரசுக்கட்சி 100 வீதம் சரியாக செயற்பட்டது என்று நான் கூறவில்லை. ஆனால் மக்களுக்கு உண்மையாக இருக்கின்றது. தமிழ் இனத்தின் அடையாளத்திற்காக கொள்கை ரீதியாக தனித்துவமாக பயணிக்கின்றோம். மக்கள் நலன்சார்ந்த முடிவுகளை நாங்கள் சிந்தித்து கட்சியாக எடுத்திருக்கின்றோம். இதனால் விலைபேச முடியாத சக்தியாக இருக்கின்றோம் என்பதனை தெரிவிக்கின்றேன்.

கூட்டமைப்பின் வேட்பாளர்களை பலப்படுத்துவதனால் எமக்கு எதிராக உள்ள சர்வதேச விடயங்களானாலும் சரி சிங்கள குடியேற்றமானாலும் அபிவிருத்தி விடயங்களிலும் கையாளக்கூடிய நிலை ஏற்படும். எனவே எம்மில் பலரது கருத்துக்கள் மக்களுக்கு கவலையை ஏற்படுத்துவதாக இருந்தாலும் அது அவர்களது தனிப்பட்ட கருத்துக்களேயாகும். அது கூட்டமைப்பின் கருத்துக்கள் இல்லை என்பதனை பகிரங்கமாக கூறுகின்றேன். அவர்களின் கருத்துக்களை வைத்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர்களை ஒதுக்கிவிடகூடாது என தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கேணல் ரட்ணபிரியவும் வன்னியில் தேர்தலில் குதிக்கிறார்!

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் கேணல் ரட்ணபிரியவும் வன்னியில் தேர்தலில் குதிக்கிறார்!

வன்னி மக்களுக்கும், தெற்குக்கும் உறவுப்பாலமாக இருந்து வன்னி மக்களுடன் சேர்ந்து தொடர்ந்து பயணிப்பேன் என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளரும், பொதுஜன பெரமுனவின் வன்னி மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான கேணல் ரட்ணபிரிய பந்து தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் உள்ள கந்தசாமி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

வன்னி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே எனது முக்கிய நோக்கம். வன்னி மக்களோடு கடந்த ஆறு வருடங்களாக பயணித்திருக்கிறேன். அதன் காரணமாக வன்னி மக்களின் மனோநிலையும், வாழ்வாதார நிலையும் எனக்கு நன்கு தெரியும். நான் வன்னி மக்களுடன் பயணித்த காலத்தில் என்னால் முடிந்த வாழ்வாதார உதவிகளையும், வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

இதனை தொடர்ந்து செய்து மக்களின் வாழ்வாதாரங்களையும், வேலை வாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் உயர்த்துவேன். அத்துடன் வன்னி மக்களுக்கும், தெற்குக்கும் உறவுப்பாலமாக இருந்து வன்னி மக்களுடன் சேர்ந்து தொடர்ந்து பயணிப்பேன் என தெரிவித்தார்.

இதேவேளை, கந்தசாமி ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாட்டைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களால் மாலை அணிவித்தும், பொன்னாடை போர்த்தியும் மதிப்பளிக்கப்பட்டதுடன் தொடர்ந்து வவுனியா பௌத்த விகாரை மற்றும் பள்ளிவாசலுக்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டார்.

Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்

கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்

எகிப்துக்கு சுற்றுலா சென்ற கோவை கிணத்துக்கடவை சேர்ந்த வனிதா ரங்கராஜ் உள்பட கொங்கு மண்டலத்தை சேர்ந்த 17 பேர் நைல் நதியில் கப்பலில் தவித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ்- எகிப்து கப்பலில் உணவு இல்லாமல் தவிக்கும் தமிழர்கள்
எகிப்து கப்பலில் தவிக்கும் வனிதா

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவில் சரணாலயம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்தி வருபவர்

வனிதா ரங்கராஜ். இவரது கணவர் ரங்கராஜ். இவர்கள் வருடந்தோறும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த மாதம் வனிதா ரங்கராஜ் தனது கணவர் ரங்கராஜ் மற்றும் சென்னை, சேலத்தை சேர்ந்தவர்கள் என மொத்தம் 17 பேர்

சேலத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மூலம் 10 நாள் சுற்றுலாவாக கடந்த மாதம் 27-ந் தேதி எகிப்து நாட்டுக்கு சென்றனர்.

இந்நிலையில் எகிப்துக்கு சுற்றுலா சென்ற 17 பேர் நைல் நதியில் கப்பலில் தவித்து வருகிறார்கள்.

அங்கிருந்து வனிதா ரங்கராஜ் போனில் கூறியதாவது:

எகிப்து நாட்டில் உள்ள பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு கடந்த 5-ந்தேதி நைல் நதியில் கப்பலில் சென்றோம். அந்த கப்பலில்

2 நாட்கள் தங்கிவிட்டு 7-ந்தேதி காலையில் வெளியே வர வேண்டும். அப்போது 6-ந்தேதி காலையில் திடீரென கப்பலில் இருந்த

தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருந்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவ குழுவினர் கப்பலில் பயணித்த அனைவரையும் பரிசோதனை செய்தனர். இதில் எங்களுடன் வந்த

என்ஜினீயர் உள்பட 33 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ்

இதையடுத்து அவர்கள் அனைவரும் எகிப்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்

. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாங்கள் சென்ற கப்பலை நைல் நதியிலேயே நிறுத்தி வைக்க எகிப்து அரசு உத்தரவிட்டது.

அத்துடன் அதில் இருந்து யாரும் வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு கொரோனா வைரஸ் இல்லையே,

ஏன் எங்களை உள்ளே வைத்து இருக்கிறீர்கள் என்ற கேட்டபோது சரியான பதில் அளிக்கவில்லை. மேலும் நாங்கள் இருக்கும்

கப்பலில் உணவு சமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே இருந்து வரும் உணவை மட்டுமே சாப்பிட

அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிரட்தான் காலை உணவாக கொடுக்கப்படுகிறது. நாங்கள் அனைவருமே வயதானவர்கள்

என்பதால் அவர்கள் கொடுக்கும் உணவு எங்களுக்கு போதுமானதாக இல்லை. மேலும் குறிப்பிட்ட நேரத்தில் உணவு கிடைக்காமல் தவித்து வருகிறோம்.

தற்போது நைல் நதி கரையில் உள்ள லக்சர் என்ற நகரத்தின் அருகே கப்பலில் தவித்து வருகிறோம். 15 நாட்கள் கப்பலிலேயே இருக்க

வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர். இதனால் எங்களுக்கும், கொரோனா வைரஸ் தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்திய

அரசும், தமிழக அரசும் எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ்
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

இத்தாலிய இராணுவ தளபதிக்கு கொரனோ – வெளியானது திடுக்கிடும் தகவல்

இத்தாலிய இராணுவ தளபதிக்கு கொரனோ – வெளியானது திடுக்கிடும் தகவல்

இத்தாலியில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இத்தாலியின் இராணுவ தளபதி Chief of Staff of the Italian Army Salvatore Farina  க்கு தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இதனை அடுத்து அவர் தனிமை படுத்த பட்டு விசேட சிகிச்சை அறையில் வைக்க பிட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது ,

இஸ்ரேல் இராணுவத்தை அடுத்து தற்பொழுது இத்தாலிய இராணுவத்துக்கும் இந்த நோய் பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டு அறிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

இதுவரை இத்தாலியில் 366 பெ ரஃலையாகியும் சுமார் கிட்ட தட்ட எட்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டுள்ளமையும் ,.16 மில்லியன் மக்கள் வீடுகளில் அடைத்து வைக்க பட்டுள்ளதும் குறிப்பிட தக்கது

இத்தாலிய இராணுவ தளபதிக்கு
Posted in இலங்கை செய்திகள் கொரனோ வைரஸ்

கொரனோவால் 3825 பலி 110,034 பேர் பாதிப்பு

கொரனோவால் 3825 பலி 110,034 பேர் பாதிப்பு

சீனாவை தாயகமாக கொண்டு பரவிய உய்ரள்கொல்லி நோய் கொரனோ வைரசின் தாக்குதலில் சிக்கி சுமார்

3825 பேர் சாவடைந்துள்ளனர் மேலும் . உலகெங்கும் 110,034 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

மேலும் இந்த நோயானது அதிவேகமாக பரவி வருவதால இதன் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது

சீனாவை அடுத்து தற்பொழுது இரண்டாவதாக இத்தாலி கடுமையாக பாதிக்க பட்டுள்ளது ,அதனை அடுத்து ஈரான்

,பிரான்ஸ் என்பன மூன்று நான்காவது இடங்களை பிடித்துள்ளன என்பது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

உறங்கிய சாரதி -மோதிய பேரூந்து 18 பேர் காயம்

உறங்கிய சாரதி -மோதிய பேரூந்து 18 பேர் காயம்

சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்று வீடு திரும்பி கொண்டிருந்த பயணிகள் பேரூந்து ஒன்று கண்டி A9 வீதியின்

திருப்பனே பகுதியில் விபத்தில் சிக்கியததில் 18 பேர் படுகாயமடைந்தனர் .

இந்திய விபத்து சாரதி உறங்கியதால் ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது ,

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

உறங்கிய சாரதி
Posted in இலங்கை செய்திகள்

ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரானார் விக்கி

ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவரானார் விக்கி

சுரேஸ் பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எப் கட்சியி தலைவராக சி.வி.விக்கினேஸ்வரன் தொழிற்படவுள்ளார்.

சுரேஸ் பிறேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எப் கட்சி தனது பெயரை தமிழ் மக்கள் தேசியக் கூட்டனியாக மாற்றியது. குறித்த கட்சியிலேயே முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோர் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர்.

இந்நிலையில் பெயர் மாற்றப்பட்ட ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவராக விக்கினேஸ்வரன் செயற்படவுள்ளதுடன், செயலாளராக சிவசக்தி ஆனந்தன் செயற்படவுள்ளார். உப தலைவர்களாக சுரேஸ்பிறேமச்சந்திரன், பேராசிரியர் சிவநாதன், அனந்தி சசிதரன், சிறிகாந்தா ஆகியோர் செயற்படவுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

இரு பிள்ளைகளை கடத்தி கொன்று தற்கொலை செய்த தந்தை

இரு பிள்ளைகளை கடத்தி கொன்று தற்கொலை செய்த தந்தை

இலங்கை கோகெரில்லா பகுதியில் தந்தை ஒருவர் தனது ஆறுவயது மகன் மற்றும் மூன்று வயது மகளை கடத்தி கொலை செய்து விட்டு

தான் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார்
இந்த தற்கொலை குடும்ப தகராறு காரணமாக இடம்பெற்று இருக்கலாம் என நம்ப படுகிறது .

எனினும் காவல்துறை தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை அந்த கிராம மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

அப்பாவி சிறுவர்களை ஏன் இவ்வாறு கொலை செய்ய வேண்டும் என்பதே மக்களின் மன குமுறலாக உள்ளது ,பெற்றவர்கள் இறந்து

போங்கள் இந்த் பிஞ்சுகளை கொலை செய்திட எப்படி மனம் வந்தது என்பதே மக்களின் கேள்வியாகவும் கவலையாகவும் உள்ளது

இரு பிள்ளைகளை கடத்தி
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் மாபெரும் புத்தக கண்காட்சி

லண்டனில் மாபெரும் புத்தக கண்காட்சி

லண்டனில் எதிர்வரும் புதன்/வியாழன் பகல் 12.00 முதல் இரவு 9.00வரை மாபெரும் புத்தக கண்காட்சி இடம்பெறவுள்ளது


இவ்வேளை அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வேண்டி கொள்கின்றனர்

முன்னூறுக்கு மேற்பட்ட தலைப்புக்களில் ஒரே மேடையில் இங்கே அந்த புத்தகங்கள் கிடைக்க பெறவுள்ளது ,


புத்தக நலன் விரும்பிகள் படையெடுத்து வருக ,பயன் பெற்று செல்க

தகவல் -சிவா

லண்டனில் மாபெரும்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரால் 77 பேர் அதிரடி கைது

பொலிஸாரால் 77 பேர் அதிரடி கைது

இலங்கை பண்ணப்பிட்டிய பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது சுமார் 77 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்களில் அறுபது ஆண்கள் மற்றும் 17 பெண்கள் எனவும் இவர்கள் அனைவரும் பேஸ்புக் மூலம் தொடர்பு கொண்டு

போதைவஸ்து களியாட்ட நிகழ்வில் கலந்து கொண்ட பொழுதே காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது

பொலிஸாரால் 77 பேர்
Posted in இலங்கை செய்திகள்

கொரனோவால் – பிரிட்டனில்273 பேர் பாதிப்பு – 23,240 சோதனை

கொரனோவால் – பிரிட்டனில்273 பேர் பாதிப்பு – 23,240 சோதனை

பிரிட்டனில் இன்று வெளியாகியுள்ள கொரனோ வைரஸ் தாக்குதல் எண்ணிக்கை சுமார் 273 ஆக அதிகரித்துள்ளது ,மேலும் சுமார் 23,240 பேருக்கு இந்த் சோதனை இடம்பெற்றுள்ளது .

இதுவரை பிரிட்டனில் இருவர் பலியாகியுள்ளனர் .

மேலும் இதன் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் செல்கிறது ,தொடர்ந்து பொருட்களின் விலை அதிகரித்துள்ளது ,55 சதம் விற்ற

சோப்பு கட்டி தற்பொழுது 1.30 ஆக விற்பனையாகிறது ,இன்று வழமை போல நாம் கடைக்கு சென்று பொருட்களை வாங்கிய

பொழுது பொருட்களின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது கண்டு அதிர்ச்சியடைந்தோம்

டெட்ரோல் ,டெட்ரோல் சோப் ,மற்றும் சன ரைசர் ,வெட் நாப் ,என்பன வற்றின் விலை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது

அரிசி மூடை ஒன்றின் விலை மூன்று பவுண்டுகளினால் அதிகரிக்க பட்டுள்ளது ,ஐந்து நாளாக மா வாங்க அலைகிறோம் இதுவரை கிடைக்கவிலை ,இது நமக்கு ஏற்பட்ட நேரடி அனுபவ பகிர்வு

மக்களே உஷாராகுங்கள் ,எதுவும் எவ்வேளையும் நடக்கலாம்

கொரனோவால் - பிரிட்டனில்
Posted in இலங்கை செய்திகள்

வன்னியில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்க தகுதி

வன்னியில் 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்க தகுதி

வன்னியில் 6 உறுப்பினர்களை தெரிவு செய்ய 2 இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடாளவிய ரீதியில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது 2019 ஆம் ஆண்டு வாக்களர் பதிவுக்கமைய நடைபெறவுள்ளது.

அதற்கமைவாக வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதியில்

விகிதாசார தேர்தலின் மூலம் 6 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள். இதற்காக ஒவ்வொரு கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 9 பேர் வீதம் போட்டியிடுவர்.

இவர்களில் 6 பேரை தெரிவு செய்ய வன்னி தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்டத்திலிருந்து 88 ஆயிரத்து 842 பேரும், வவுனியா

மாவட்டத்திலிருந்து ஒரு இலட்சத்து 19 ஆயிரத்து 811 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 78 ஆயிரத்து 360 பேருமாக 2

இலட்சத்து 87 ஆயிரத்து 13 பேர் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கனகராயன் குளத்தில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து: வீதி எங்கும் சிதறி கிடக்கும் பொருட்கள்

கனகராயன் குளத்தில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து: வீதி எங்கும் சிதறி கிடக்கும் பொருட்கள்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு குறுக்காக கனகரக வாகனம் தடம்புரண்டு இன்று (08) விபத்துக்குள்ளானதன் காரணமாக அப்பகுதியில் வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற கனகரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சிறு காயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இவ்விபத்தின் காரணமாக கனகரக வாகனத்திலிருந்து பொருட்கள் வீதியெங்கும் சிதறியதால் சில மணிநேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. இவ்விபத்து தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் எட்டு பேர் கைது

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் எட்டு பேர் கைது

இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருனநாயக்க மற்றும் அவருடன் எட்டு பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .


கிரிமினல் குற்றதடுப்பு பிரிவினரால் மேற்கொள்ள பட்ட தேடுதலின் பின்னர் இவர் கைது செய்ய பட்டுள்ளார் .

மதியவங்கி பிணை முறிவு மோசடியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது ,கைதானவர்கள் எதிர்வரும் 18 ம் திகதி வரை

விளமறியலில் வைக்கும் படி உத்தரவிட பட்டுள்ளது ,கோட்டபாய ஆட்சியில் அரசியல் பழிவாங்கும் நகர்வுகள் தொடர்ச்சியாக

இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,ரணிலின் வேண்டுதலின் படியே இந்த கைது இடம்பெற்று வருவதாக தெரிவிக்க படுகிறது

முன்னாள் அமைச்சர் ரவி
Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் விபத்தில் பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் மகள் விபத்தில் பலி

இலங்கை நாத்தாண்டிய பகுதிஜியில் வீதி விபத்தில் சிக்கி தாயும் மக்களும் பலியாகியுள்ளனர் ,


54 வயது தாயும் ,21 வயது மக்களுமே இவ்வாறு வீதி விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர்

சடலங்கள் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்ட பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க பட்டுளள்து

இலங்கையில் நாள்தோறும் வீதி விபத்துக்களில் 30 பேர் பலியாகி வருவதாக புள்ளி விபரம் உள்ளமை குறிப்பிட தக்கது

ஒரே குடும்பத்தை சேர்ந்
Posted in இலங்கை செய்திகள்

வீட்டை எரித்து தற்கொலை செய்த பெண்

வீட்டை எரித்து தற்கொலை செய்த பெண்

இலங்கை வவுனியா செட்டிகுளம் பகுதியில் பெண் ஒருவர் தான் வசித்து வந்த வீட்டினை தீ வைத்து எரித்த பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்துளளர் .

இவரது இந்த தற்கொலைக்கான காரணம் குடும்ப பிரச்சனை காரணமாக இடம்பெற்றுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்

வீட்டை எரித்து தற்கொலை


மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுளளது

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் – மடக்கி பிடிப்பு

இலங்கையில் சிறுவர்களை கடத்தும் மர்ம கும்பல் – மடக்கி பிடிப்பு

இலங்கை கட்டுகோஷ பகுதியில் டியூசன் விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்த பன்னிரெண்டு வயது சிறுவனை ஆறு பேர் கொண்ட குழுவினர் கடத்தியுள்ளனர் .

இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களில் நான்கு பங்களாதேஸ் நாட்டவர்கள் என கண்டறிய பட்டுள்ளது ,

தற்பொழுது சிறுவன் பத்திரமாக மீட்க பட்டுள்ளான் .

தொடர்ந்து இந்த மனித கடத்தலில் ஈடுபட்டவர்கள் தொடர் விசாரனைக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .


இலங்கையில் இருந்து சிறுவர்களை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்று வருவது அம்பலமாகியுளளது

தமிழர்களே உசார் ,இலங்கையில் அகல கால் ஊன்றியுள்ள வெளிநாட்டு மனித கடத்தல் கும்பல் ,


நபர்களிடம் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்றி கொள்ளுங்கள் மக்களே

இலங்கையில் சிறுவர்களை கடத்தும்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் தேர்தலுக்கு 7000 மில்லியன் நீதி ஒதுக்கல்

இலங்கையில் தேர்தலுக்கு 7000 மில்லியன் நீதி ஒதுக்கல்

இலங்கையில் இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு சுமார் ஏழாயிரம் மில்லியன் ரூபாய்கள் செலவு செய்ய படவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது


என்றும் இல்லாதவாறு இவவாறான பெரும் தொகையில் இந்த தேர்தல் செலவு உள்ளடக்க பட்டுள்ளது

கொள்ளையடி மன்னர்கள் நாட்டை ஆட்சி செய்யும் பொழுது இவ்வாறன பெரும் தொகையில் நிதியை ஒதுக்கி இந்த தேர்தல்

இடம்பெறுகிறது ,மக்கள் வரிப்பணம் இவ்விதம் வீண் செலவு செய்ய படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் தேர்தலுக்கு
Posted in இலங்கை செய்திகள்

லண்டன் தமிழர் கடைகளில் மலிவு விலை இரத்து – குவியும் தமிழர்கள்

லண்டன் தமிழர் கடைகளில் மலிவு விலை இரத்து – குவியும் தமிழர்கள்

பிரிட்டன் லண்டன் பகுதியில் அதிகம் தமிழர்கள் வசித்து வருகின்றனர் ,தற்போது உலகம் தழுவிய நிலையில் கொரனோ

வைரஸ் பரவி வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டு பாடு நிலவுகிறது .

பிரபல சூப்பர் மார்க்கட்டுக்களில் கழிவறை பேப்பருக்கு ,பெண்கள் சண்டை போடும் காட்சிகள் தொடராக வெளியாகிய வண்னம் உள்ளன ,

பிரிட்டன் லக் டவுன் ஆகும் நிலை ஏற்படலாம் என்ற நிலையிலும் வரும் நாட்களில் இதன் நோய் பரவல் தீவிரமாக இருக்கும் என்ற நிலையிலும் தமிழர்கள் மத்தியிலும் கடும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

இதனை அடுத்து தூள்,அரிசி,மா,பிஸ்கட் ,கடலுணவுகள் ,போன்றவை பல கடைகளில் விற்று தீர்ந்துள்ளன .


இதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவென்றால் ,எம்மவர் தமிழர் கடைகளில் மலிவு விலைகள் இடம்பெறுவது .

வழமை , அருகில் உள்ள தமிழ் கடையை வீழ்த்தும் நோக்குடன் போட்டி போட்டு மலிவு விலைகளை இவர்கள் இடுவது வழமை ,

இதனை பயன் டுத்தி தமிழர்கள் படை எடுத்து வருவது வழமை .

இதற்கு சில கடைகளில் இலவசமாக சோடாக்கள் ,கருவேப்பிலை ,மற்றும் பிஸ்கட்கள் என்பனவும் வழங்க படுவது வழமையான ஒன்று

இது போக விலை குறைப்பும் இடம் பெறும் .ஆனால் தற்பொழுது மலிவு விலைகளை காணவிலை எனவும் விலைகள் அதிகரிக்க

பட்டுள்ளதாக நேரில் கடைகளுக்கு சென்றவர்களும் ,அதனை அவ தானித்தவர்களும் கருத்துரைத்து வருகின்றனர்

ஒரு வேளை லக் டவுன் ஆகினால் துண்டை போட்டு கொண்டு இவர்கள் வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால்

இப்பொழுதே இரட்டிப்பு விலைக்கு விற்பதாக ஒரு கருத்து நிலவுகிறது ,அது மட்டுமல்ல களவாக விலையும் பொருட்கள் வாங்காது அடிக்க படுகிறதாம் .

தயவு செய்து இப்படி யாரவது பாதிக்க பட்டால் அந்த பற்று சீட்டுடன் கடையில்வாங்கிய பொருள்களை அதே கடையில் வைத்தே உடனே காணொளி பிடித்து வெளியிடுங்கள்

மக்கள் துன்பறும் ,பீதியுற்றுள்ள நிலையில் இவ்வாறு தமிழர்கள் செயல் படுவது வேதனைக்குரியது ,இதில் சீனா தயாரிப்பு மீன்

டின்கள் ,நூடில்ஸ் ,,சூப்,போன்றவற்றை மக்கள் வாங்க மறுத்து வருகின்றனராம்


,அதனை சில கடைகளில் மலிவு விலையில் விற்பனைக்கு விட பட்டுள்ளதாம் ,ஆனாலும் மக்கள் அதனை வாங்குவதாக இல்லை

எனவும் அவ்வாறானவற்றை இலவசமாக கொடுத்தாலும் மக்கள் வாங்க மறுத்து செல்லும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளனவாம்

தமிழர் என்ன சும்மாவா …. இல்லை இருப்பான் …..விழிப்பாயிரு .

லண்டன் தமிழர் கடைகளில்