Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த்தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த்தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிப்பு
மகாத்மா காந்தியின் 151 ஆவது பிறந்த்தினம் யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதுதொடர்பான நிகழ்வு யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக அமைந்துள்ள காத்தியடிகள் நினைவு தூபியில் நேற்று 02.10.2020 காலை நடைபெற்றது.
யாழிலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாடடில் நடைபெற்ற இந் நிகழ்வில்
காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன் போது இந்திய துணைத் தூதுவர் கே. பாலசந்திரன்இ மலர் மாலை
அணிவித்து மலரஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த
அரசியல் பிரமுகர்கள் கல்விமான்கள் மத்த் தலைவர்கள் என பலரும் மலர் மாலை அணிவித்து மலரஞ்ஞலி செலுத்தினர்.
இதன் போது மாணவி ஒருவருவர் கௌரவிக்கப்பட்டு துணைதூதுவரால் பாரிசிலும் வழங்கப்பட்டன.
காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்க உத்தரவு
காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்க உத்தரவு
மொரகஹகந்த நீர்த் தேக்கத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது காணிகளை இழந்தவர்களுக்கு பொருத்தமான இடங்களில் காணிகளை வழங்கி தனக்கு
உடனடியாக தெரியப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அனைத்து அதிகாரிகளையும் ஒரே இடத்திற்கு அழைத்து, ஏனைய காணிப் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகளை வழங்குமாறு
ஜனாதிபதி அவர்கள் மாவட்டத்தின் அரசியல் அதிகாரம் பெற்றுள்ளவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாத்தளை மாவட்டத்தில் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள ஹிம்பிலியாகட கிராம சேவகர் பிரிவின் நாகவனாராம
விகாரை வளாகத்தில் இன்று (02) முற்பகல் இடம்பெற்ற “ஜனாதிபதி கிராமத்துடன் உறவாடல்” நிகழ்ச்சித்திட்டத்தில் பங்குபற்றி ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
காணிகளை இழந்தவர்களுக்கு காணிகளை வழங்கி உடனடியாக எனக்கு தெரியப்படுத்துங்கள்…
காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அனைத்து அதிகாரிகளும் ஒரே இடத்தில்…
பால் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் குறித்து விசேட கவனம்…
வில்கமுவவிற்கு சிறுநீர் – இரத்த சுத்திகரிப்பு பிரிவு…
ஆசிரியர் – தாதியர் பற்றாக்குறைக்கு தீர்வு..ஹிம்பிலியாகட “கிராமத்துடன் உறவாடலின்” போது ஜனாதிபதி பணிப்பு..
ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றிய “கிராமத்துடனான உறவாடல்” இரண்டாவது நிகழ்ச்சித்திட்டம் இதுவாகும்.
முதலாவது நிகழ்ச்சித்திட்டம் கடந்த வாரம் பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்லை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெலங்விட்ட கிராமத்தில் இடம்பெற்றது. நீண்டகாலமாக தீர்க்கப்படாது உள்ள
கிராமிய மக்களின் பிரச்சினைகள் குறித்து அவர்களுடன் கலந்துரையாடி அவற்றை அதிகாரிகளுக்கு முன்வைத்து உடனடித் தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாகும்.
நாட்டின் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களை சந்திப்பதுவும் ஜனாதிபதி அவர்களின் மற்றுமொரு நோக்கமாகும். வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கெம்புருஓய,
லேடியங்கல, அலியாவல, வெஹெரகல, ஹிம்பிலியாகட மற்றும் அதனை சூழவுள்ள பல கிராமவாசிகள் ஜனாதிபதி அவர்களை
சந்தித்து தங்களது மனக் குறைகளை ஜனாதிபதி அவர்களிடம் தெரிவிப்பதற்காக நாகவனாராம விகாரைக்கு வருகை தந்திருந்தனர்.
வருகை தந்திருந்த பெரும்பாலானவர்களின் காணி சம்பந்தமான பிரச்சினைகள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைக்கப்பட்டன. நீண்டகாலமாக தீர்க்கப்படாது உள்ள ஹெட்டிபொல நகரில்
பெரும்பாலானவர்களுக்கு பிரச்சினையாக உள்ள காணி உறுதிகள் தொடர்பான பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்க
வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சுயதொழிலாக பால் பண்ணைக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி அவர்கள் விசேட கவனம் செலுத்தினார். அவர்களை
தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதற்கு உதவ வேண்டுமென குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், தேசிய பண்ணை வள அபிவிருத்தி சபையுடன் கலந்துரையாடி அவர்களின் உற்பத்திகளை
கொள்வனவு செய்வதற்கும் வசதிகளை செய்து கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டார். குறைந்த
தொகைக்கு பசுக்களை வழங்குவதற்கு குறித்த நிறுவனங்களுக்கு அறிவிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
பண்ணை விவசாயிகள் கடன் கோரிக்கைகளை முன் வைக்கும்போது அதற்கான பிணை நிபந்தனைகளை இலகுபடுத்துவதற்கு வங்கிகளுடன் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. அவர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளாக பகுதியளவு நிறைவு
செய்யப்பட்டுள்ள ஹெட்டிபொல சிறுநீரக, இரத்த சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்து, அதற்கு தேவையான உபகரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி அவர்கள்
பணிப்புரை விடுத்தார். தம்புல்ல, கண்டி, குருணாகலை மற்றும் மஹியங்கனை வைத்தியசாலைகளுக்கு சென்று சிறுநீர்
சுத்திகரிப்பு சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோயாளிகளுக்கு இதன் மூலம் பெரும் நன்மை கிடைக்குமென பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நிலவும் தாதியர் பற்றாக்குறையை நிவர்த்திப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
வெஹெரகலைவுக்கும் பெட்டிப்பொல நகரத்திற்கும் இடையிலான 2.8 கிலோமீற்றர் மற்றும் ஹிம்பிலியாகட கிராமத்திற்கு செல்லும் வீதிகளை உடனடியாக அபிவிருத்தி செய்யுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
ஹிம்பிலியாகட ஆரம்ப பாடசாலைக்கு மூன்று வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் ஒன்றையும் ஆசிரியர்களுக்கான வீடு ஒன்றையும் நிர்மாணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. லக்கல
பிரதேச செயலாளர் பிரிவில் பல்லேகம மற்றும் வில்கமுவ நாமினி ஓய மகாவித்தியாலயத்தை அனைத்து வசதிகளையும் கொண்ட தேசிய பாடசாலையாக மாற்றுவதற்கும் பணிப்புரை
வழங்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள பல பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு உடனடித் தீர்வுகளை வழங்க
வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
பாடசாலை கல்வியை நிறைவு செய்த பிரதேசத்தில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழிற் பயிற்சி சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி அதிகளவில் அவர்களை அதன் மூலம் பயிற்றப்பட்ட
ஊழியர்களாக உருவாக்க வேண்டியது காலத்தின் தேவையாகுமென்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அதில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் இளைஞர்களை ஊக்குவித்தார்.
நீர்ப்பாசன வசதிகள் இல்லாமை வில்கமுவ மற்றும் அதனை சுற்றியுள்ள பல பிரதேசங்களின் விவசாயத் துறைக்கு பெரும் பாதிப்பாகும். அதற்குத் தீர்வாக வத்தேகெதர, வெஹெரகல,
தொடங்கொல்ல மற்றும் வெருவிகஹா குளங்களை புனரமைப்பது பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறுகியகால, இடைக்கால மற்றும் நீண்டகால தீர்வுகள் வழங்கும் வகையில்
இரண்டு வருடத்தினுள் குளங்களை அபிவிருத்தி செய்யவும், அதுவரையில் விவசாயத்திற்கு தேவையான கிணற்று நீரை
வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
ஹிம்பிலியாகட குளத்தை விரைவாக புனரமைப்பு செய்யும் பணிகள் இராணுவத்திடம் வழங்கப்பட்டது.
கிராமத்துடன் உறவாடல் நிகழ்ச்சித்திட்டத்திற்குப் பின்னர் கிராமத்தில் உள்ள சில வீடுகள் மற்றும் விவசாய நிலங்களையும் ஜனாதிபதி அவர்கள் பார்வையிட்டார்.
அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான ரோஹன திசாநாயக்க, நாலக்க கோட்டேகொட, ரங்க பண்டார தென்னகோன், ஆளுநர் லலித் யு கமகே,
ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க ஆகியோரும் பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகளும் அரசாங்க அதிகாரிகளும் இங்கு வருகை தந்திருந்தனர்.
வீடு சுற்றிவளைப்பு – வெடிகுண்டுகள் மீட்பு
வீடு சுற்றிவளைப்பு – வெடிகுண்டுகள் மீட்பு
இலங்கை மில்லனிய பகுதியில் வீடொன்றில் வெடிகுண்டுகள்
மறைத்து வைக்க பட்டுள்ளதாக பொலிசாருக்கு கிடைக்க பெற்ற
இரகசிய தகவலை அடுத்து அந்த வீடு திடீரென சுற்றிவளைக்க பட்டது ,
இதில் அங்கிருந்து கைக்குண்டுகள் மீட்க பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
இலங்கையில் கொரனோ நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஐவர் பாதிப்பு
இலங்கையில் கொரனோ நோயின் தாக்கம் அதிகரிப்பு – ஐவர் பாதிப்பு
இளநகையில் தற்போது மீள கொரனோ நோயானது வேகமாக பரவி வருகிறது
,அவ்விதம் ஐந்து பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
.இவர்களில் மூவர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
கவிழ்ந்த பஸ் – 49 பேர் காயம் – photo
டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த
தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில்
பாய்ந்து விபத்துக்குள்ளானமையால், 49 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (02) காலை 7 மணியளவில், டயகம- ஹட்டன் பிரதான வீதியில்
பணித்துக்கொண்டிருந்த பஸ், போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் வைத்தே, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த 49 பேரில், ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
என்றும் மற்றையவர்கள், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், 24 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.

மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு- இந்கு குளறல்
மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வு
விடயம் 5: ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள்
துறையில் உள்ள பொறிமுறைகள் ஆகியவற்றுடனான ஒத்துழைப்பு தொடர்பான
பொதுச்செயலாளரின் அறிக்கை குறித்த மனித உரிமைகளுக்கான உதவிப் பொதுச் செயலாளருடனான ஊடாடும் உரையாடல்
30 செப்டம்பர் 2020
இலங்கையின் அறிக்கை
தலைவி அவர்களே,
இந்த சபைக்கு வழங்கப்பட்ட ‘ஐக்கிய நாடுகள் சபை, அதன் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் துறையில் உள்ள
பொறிமுறைகள்’ தொடர்பான பொதுச்செயலாளரின் வருடாந்த அறிக்கையில் உள்ள குறிப்பு தொடர்பாக இலங்கை அரசாங்கம் பின்வரும் அவதானிப்புக்களை மேற்கொள்ள விரும்புகின்றது:
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அச்சுறுத்தும் விஜயங்கள்’, ‘கண்காணிப்பு’, ‘துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகள்’ மற்றும் ‘பழிவாங்கல்கள்’ தொடர்பாக, குறித்த சம்பவங்களை
விசாரணை செய்து நடவடிக்கைகளை முன்னெடுக்கும் முகமாக, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கு அல்லது
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அல்லது தேசிய பொலிஸ் ஆணைக்குழு போன்ற சுயாதீனமான தேசிய நிறுவனங்களுக்கு முறையான முறைப்பாடுகளை
மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அழைப்பு விடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் விரும்புகின்றது.
அரசாங்கம் ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுக்களை பகிரங்கமாக மறுத்துள்ளதுடன், கருத்துச் சுதந்திரம் மற்றும் சிவில் சமூக இடைவெளியைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும்
உறுதிபூண்டுள்ள அதே வேளை, ஊடகவியலாளர்கள், மனித உரிமைகளின் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூகத்திற்கு
எதிரான தாக்குதல்கள் குறித்து பெற்றுக்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை விசாரணை செய்து, வழக்குத் தொடருவதனை உறுதி செய்கின்றது.
தேசிய பாதுகாப்பின் நலனுக்காக வழக்கமான பாதுகாப்பு வலையமைப்புக்களை செயற்படுத்துவதனைத் தவிர, குறிப்பாக பேரழிவுகளை ஏற்படுத்திய ஈஸ்டர் ஞாயிறு தின பயங்கரவாதத்
தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வு அமைப்புக்கள் நாட்டில் எந்தவொரு குறிப்பிட்ட
குழுவினரையும் கண்காணிப்பதில் ஈடுபடவில்லை என்பதும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது.
உலகெங்கிலுமுள்ள அடிப்படைவாத மற்றும் தீவிரமான கூறுகளின் நுட்பங்களுக்கிடையில் தேசிய பாதுகாப்பு நலன்களை இணங்கச் செய்யும் எந்தவொரு நாடும் வருந்தத்தக்க விளைவுகளை
எதிர்கொள்ளும் என நாங்கள் நம்புகின்றோம். எனவே, இந்த சூழலில் அத்தகைய யதார்த்தத்தை கவனத்தில் கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றது
வடமாகாண விவசாய கண்காட்சி
வடமாகாண விவசாய கண்காட்சி
வடமாகாண விவசாய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ள விவசாய கண்காட்சி நேற்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.
இந்தக் கண்காட்சியை அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆரம்பித்து
வைத்தார். விவசாய உற்பத்தியில் தன்னிறைவு அடைவது கண்காட்சியின்
நோக்கம் என வடமாகாண விவசாய திணைக்கள பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
வட்டக்கட்சி விவசாய பண்ணையில் நடைபெறும் இந்தக் கண்காட்சி
இன்று நிறைவடையவுள்ளது. கண்காட்சியில் விவசாய உற்பத்தி, சேதனப்
பசளை பயன்பாடு, சந்தைப்படுத்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி தெளிவுபடுத்தப்படுகின்றன.
இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo
இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் திலீபன் முன்வைத்திருக்கும் இரு செய்தி : பிரதமர் வி.உருத்திரகுமாரன் !photo
அரசியல் இராஜதந்திர வழியில் தற்போது முன்னகர்ந்து வரும் தமிழீழ விடுதலைப் போராட்ட நிலையில், தியாகதீபம் திலீபன்
மக்கள் எழுச்சியின் குறியீடாக இருப்பதோடு, இன்றைய தலைமுறைக்கு இரண்டு செய்திகளை அவனுடைய நினைவு
அறைகூவியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தியாகதீபம் திலீபனின் 33ம் நினைவேந்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட உலகளாவிய
நினைவேந்தல் கூட்டத்தில் உரையாற்றும் போது இதனை பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் போராட்;டம் பெரும் நெருக்கடியினை சந்தித்திருந்த காலகட்டத்தில், இலங்கை-இந்திய ஒப்பந்தத்தினை பயன்படுத்தி சிறிலங்கா அரசு, தமிழீழ
விடுதலைப் போராட்டத்தினை நீர்த்துப் போகச் செய்ய எடுத்த முயற்சிகளை, லெப் கேணல் திலீபன் அகிம்சபை; போராட்டத்தின்
உச்சவடித்தினால் , தமிழீழ போராட்டத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியவனாக வரலாற்றில் இடம்பிடித்துள்ளான்.
உயிரைக் கொடுத்து போராடும் வரலாறு விடுதலைப் புலிகளுக்கு உரியதாக இருந்தது. 2009,மேக்கு பின்னரான இக்காலத்தில்
உயிர்த்தியாகம் நிறைந்த போராடும் நிலை இல்லாது போயுள்ளது.இருப்பினும்
திலீபன் காட்டிய வழியில்
1 – மக்கள் மீது முன்வைத்து போராடுங்கள்
2 – எந்தப் போராட்டமாக இருந்தாலும், அதிஉச்ச கட்ட அர்ப்பணிப்பு நிறைந்த போராட்டத்து தயாராக இருங்கள்
என்ற இரண்டு செய்தியானது, மக்கள் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்துக்கு விசுவாசமாக, உண்மையாக இருந்து
போராடுமாறு, தியாக திலீபனின் வாழ்வும் ஈகமும் இன்றைய தலைமுறைக்கு அறைகூவல் விடுக்கின்றது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய இந்நிகழ்வில் தமிழ்நாட்டில் இருந்து நாம் தமிழர்கட்சி செந்தமிழன் சீமான், கனேடிய பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி, (கனடா) ரொரண்ரோ நகரசபை முன்னாள்
உறுப்பினர் நீதன் சான் உட்பட வட அயலர்லாந்து கட்சித் தலைவர் மற்றும் அமைப்பு பிரதிநிதி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அமெரிக்காவின் நியு யோர்க்கில் மைய வணக்க நிகழ்வு இடம்பெற்றிருக்க, அமெரிக்காவின் நியு ஜெர்சி, பிரான்ஸ்,
பிரித்தானியா, ஜேர்மனி உட்பட பல இடங்களில் இருந்து வணக்க நிகழ்வுகள் இணைக்கப்பட்டிருந்தன.
கவிதைகள், பாடல்கள் இடம்பெற்றிருந்ததோடு, தியாகதீபன் திலீபன் உண்ணாவிரதகளத்தில் பங்காற்றியிருந்த முன்னாள் போராளி சிறி அவர்கள் அக்கால நினைவுகளை மீட்டிருந்தார்.

இன்றைய தலைமுறைக்கு தியாகதீபம் 

நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வு photo
நெடுந்தீவின் உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊரும் உறவும் நிகழ்வின் பெருமளவானோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
நெடுந்தீவின் உறவுகளாய் ஒன்றிணைந்து ஆரோக்கியமான சமூகம் ஒன்றை உருவாக்குவோம்; என்ற தொனிப்பொருளில் ஊரும் உறவும் நெடுந்தீவு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு
நேற்று நெடுந்தீவு கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றுள்ளது பகல் 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் நெடுந்தீவில் இருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில்
வாழும் உறவுகளும் அதேபோல நெடுந்தீவு மண்சார்ந்து வெளிமாவட்டங்களில் தங்கியுள்ள நெடுந்தீவின் உறவுகளும் ஒன்றிணைந்து தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்
குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தின் கல்வி கல்வி பொருளாதாரம் போக்குவரத்து ஆவணப்படுத்தல் குடிநீர் தொடர்பிலும் ஏனைய
பல்வேறு தேவைகள் தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்தின் பல பகுதிகளிலும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான உறவுகள் நேற்றைய தினம் இந்த நிகழ்வில் ஒன்று கூடி தமது ஆக்கபூர்வமான கருத்துக்களையும்
ஆதரவுகளையும் வழங்கியிருந்தனர் இதில் அரசியல் கட்சி வேதங்கள் இன்றி பலர் கலந்துகொண்டிருந்தனர் நெடுந்தீவு பிரதேச செயலாளர் மதத்தலைவர்கள் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும்
பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தவநாதன் மற்றும் பிரதேச சபை
உறுப்பினர்கள் தவிசாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று காலை பல்வேறு பிரதேசங்களில் இருந்து நெடுந்தொகை மற்றும் தனியார் படகுகள் மூலம் நெடுந்தீவு நோக்கி பயணித்த உறவுகள் தமது கருத்துக்களை முன்வைத்தனர் எதிர்காலத்தில்
இந்த பிரதேசத்தின் அபிவிருத்திகள் தொடர்பிலும் அதிகளாவிலானோர் தமது கருத்துக்களை முன் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

நெடுந்தீவின் உறவுகளை 



பிரபாகரனின் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற நூல்
தெல்தோட்டையில் வெளியீடு
தெல்தோட்டையில் வெளியீடு
குறிஞ்சி வெளியீட்டில் தெல்தோட்டை கலாநிதி க.பிரபாகரனின் “அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற உயர்தர புதிய
பாடத்திட்டத்திற்கு அமைவான நூல் வெளியீடு தெல்தோட்டையில் நடைபெற்றது.
இந் நூல் வெளியீட்டு விழாவில் சமைய தவைவர்கள் அரசியல்வாதிகள் பல்கலைகழக விரிவுரையாளர்கள்
பாடசாலைகளின் அதிபர்கள் அசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட புத்திஜீவிகளும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் உயர்தர வகுப்பில் பல்கலைகழக மட்டங்களில் அரசறிவியல் ஒரு பாடமாக
கற்பொரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மனிதன் ஒரு அரசியல் பிராணி என்ற வகையில் கல்விக்கு மாத்திரம் அன்றி நடைமுறை வாழக்கைக்கும் அரசியல் அறிவு அவசியப்படுகின்றது
இலங்கையை பொருத்த வரையில் தமிழ்மொழி மூலமான அரசியல் நூல்கள் மிக அறிதாகவே காணப்படுகின்றது சில நூல்கள் கடினமானமொழி நடையிலும் மிகைப்படுதப்பட்டதாகவும்
காணப்படுகின்றன. பெரும்பாலனோர் இவற்றை வாசித்து பொருளறிந்துக் கொள்ள சிரமபடுகின்றனர். இவ்வாறான நிலையில்
அரசியல் கற்பவர்கள் இலகுவில் கற்றுக் கொள்ள இந்த நூல் வெளியீடு செய்யப்ட்டுள்ளது
அரசறிவியலில் 20 வருட அனுபவம் கொண்ட கலாநிதி க.பிரபாகரின் வண்ணத்தின் வெளியீடு செய்த இந்த புத்தகம்
உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைகழக வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் சட்ட மாணவர்களுக்கும்
முதுமாணி மாணவர்களுக்கும் அரசறிவியலை கற்ற விரும்பும் அனைவக்கும் உதவியாக இருக்கும்.
பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது
பஸ்ஸில் பாலியல் சில்மிஷம்: 24 வயது இளைஞன் கைது
களுத்துறையில் இருந்து அளுத்கம பகுதிக்கு, பொதுப் போக்குவரத்து
பஸ்ஸில் பயணம் செய்த, அரச நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் 49 வயதுடைய
பெண் ஒருவரிடம், பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட இளைஞனை, அளுத்கம பொலிஸார் இன்று (30) கைதுசெய்துள்ளனர்.
பஸ்லில் பயணம் செய்யவாறே, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸ் நிலையத்துக்கு
அறிவித்துள்ளார். இதனையடுத்து, அளுத்கம பொலிஸார் பஸ்ஸை இடைநிறுத்தி,
பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட 24 வயதுடைய இளைஞனை கைதுசெய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர், கித்துல்கல பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன்,
சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் அவர் பணியாற்றி வருவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை
கடத்தல் மன்னர்கள் 25 பேர் வெளிநாடுகளில் – இலங்கை
பிரபல பாதாள குழுக்களைச் சேர்ந்த 25 பேர் வெளிநாடுகளில் வசித்து
வருவதாக, மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்
பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
மேற்படி 25 பேரில் 19 பேருக்கு, சர்வதேச சிவப்பு அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மோசம்
இலங்கையில் மனித உரிமைகள் மோசம்
இலங்கையில் மனித உரிமைகள் மோசமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ
குட்டேரஸ், இலங்கை தொடர்பான கடுமையான கவலைகளையும் முன்வைத்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின், 45ஆவது அமர்வு நடைபெற்று வருகின்றது. அதில், ஐ.நா செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ், அறிக்கையொன்றை சமர்ப்பித்துள்ளார்.
இலங்கை மற்றும் ஜெனீவாவில், இலங்கை சிவில் சமூக அமைப்புகள், மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் பிறர் மீதான
இலங்கையின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, இலங்கையிலிருந்து
சென்றவர்கள், தமது பயணத்துக்கு முன்னரும் அதற்குப் பின்பும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாண்டு நடைபெறும் மனித உரிமை கூட்டத்தொடரின் கிளைக் கூட்டங்களின்போது இலங்கை மற்றும் ஜெனீவாவைத்
தளமாகக்கொண்டு இயங்கும் பல அமைப்புகள் இவ்வாறான சவால்கள் குறித்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதாகவும் தனது அறிக்கையின் ஊடாக அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் உதவிச் செயலாளர் நாயகம், இலங்கையில் நிலவும் அச்சுறுத்தல் மற்றும் பழிவாங்கல் முறைமை தொடர்பாக எழுத்துமூல அறிக்கையை இலங்கை
அரசாங்கத்துக்கு 2019ஆம் ஆண்டு சமர்ப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டியதுடன், இவ்வாறான விடயங்கள் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் முன்வைத்திருந்தார். குறித்த விடயங்களுக்கான பதிலை இலங்கை அரசாங்கம்
உடனடியாக வழங்குமென எதிர்பார்ப்பதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை விவகாரம் தொடர்பாக, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் கருத்து வெளியிட்டிருந்த அண்டோனியோ குட்டரஸ், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் 2019ஆம் ஆண்டு காலப்பகுதியில்
அதிகரித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், பல முறைப்பாடுகள் மீண்டும் கிடைத்துள்ளனவென, தனது
அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அவர், இந்தச் சூழல் மோசமான காலப்பகுதி என்றார்.
கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் சூரியன் உதிக்கவில்லை-இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்
வானத்தில் மட்டும்தான் சூரியன் கிழக்கிலே உதிக்கின்றது, இருளை போக்குகின்றது ஆனால் கிழக்கு தமிழர்களுடைய வாழ்க்கையில் இன்னும் அந்த சூரியன் உதிக்கவில்லை
இதுதான் உண்மை என தபால் சேவைகள் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட ஆலயங்களை புனரமைப்பு செய்வதற்கான நிதியுதவி வழங்கும் நிகழ்வு நேற்று (30)
புதன்கிழமை நாவற்குடா இந்து சமய கலாசார மத்திய நிலைய கேட்போர் கூட மண்டபத்தில் மாவட்ட இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் கி.குணநாயகம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 46 இந்து ஆலயங்களுக்கு 45 இலட்சத்தி 40 ஆயிரம் ரூபா நிதியை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் இதன்போது வழங்கினார்.
இங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில் ,இந்த அரசியல் நீரோட்டத்தில் தொடர்ச்சியாக நாங்கள் பயணித்துக்
கொண்டிருக்கின்றோம். நான் சர்வதேச அரசியலைப்பற்றி சிந்திக்க முன்பு எனது மாகாணம் எனது மாவட்டத்தைப்பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது. ஒரு வீட்டுக்கு தலைவராக இருக்க தகுதி இல்லாத
ஒருவர் ஒரு சமூகத்திற்கு தலைமை தாங்குவதற்கு தகுதியற்றவர் இதுவே யதார்த்த பூர்வமான உண்மை. அதனாலேதான் எனது
மாகாணம் எனது மாவட்டம் தொடர்பில் அதிகம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.
இந்த மாகாணத்தில் எமது மக்களுடைய இருப்பு என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு கொண்டு போகின்றது, அதற்கு மிக பிரதான காரணகர்த்தாக்களாக அமைந்தவர்கள், அமைந்து கொண்டு இருப்பவர்கள் கடந்த காலம் முதல் தற்காலம் வரை எமது தமிழ் அரசியல் வாதிகள் என்பதை யாரும் மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது இதுதான் யதார்த்த பூர்வமான உண்மை.
58.9 வீதமாக இருந்த தமிழர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் 38.6 வீதமாக குறைந்துள்ளனர். ஒரு கிழமைக்கு 18 தமிழர்கள் இனம் மாற்றப்படுகின்றார்கள். எல்லைப்புறங்களில் உள்ள பல இந்து ஆலயங்கள் உடைக்கப்படுகின்றன,
கடந்த காலத்தில் 13 இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டுள்ளன. கடந்த நான்கரை வருடங்களில் ஆலயங்கள் உடைக்கப்பட்ட இடங்களில் எல்லாம் முன்னின்று போராடியவர்களுள் நானும் ஒருவன்.இதேபோன்று என்னை சார்ந்தவர்களுக் இதில் ஈடுபட்டனர். ஒரு இனத்தினுடைய ஒரு சமயத்தினுடைய கலை, கலாசார பண்பாட்டு அம்சங்கள் மனித விழுமியங்கள் மறுக்கப்படும் பொழுது அதற்கு குரல் கொடுப்பவர்களாக நாங்கள் மாற வேண்டும். அதை பாதுகாப்பவர்களாக நாங்கள் மாறவேண்டும். அதற்காக போராடுபவர்களாக நாங்கள் மாற வேண்டும்.
நாடளாவிய றீதியில் இந்து ஆலயங்களையோ கிறிஸ்தவ ஆலயங்களையோ கட்டுவதற்கு அப்பால் எம் சார்ந்த சமூகத்தின் இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் அவ்வாறு கட்டி எந்த பிரயோசனமும் இல்லை.
அம்பாரை மாவட்டத்தில் பெரிய நீலாவணை தொடக்கம் பொத்துவில் வரை சென்று பார்த்தால் இந்து ஆலயங்கள் மட்டும்தான் இருக்கின்றன, ஆனால் அவற்றை சுற்றி தமிழர்கள் வாழ்ந்ததற்கு எந்த அடையாளங்களும் இல்லை, ஏன் அந்த பகுதியில் இருந்த மக்களின் இருப்பை பற்றி சிந்திக்கவில்லை, சில ஆலய நிருவாகங்கள் அரசியலையே நடத்துகின்றது.
என்னுடைய அரசியல் வாழ்வில் எந்தவொரு இந்து, கிறிஸ்தவ ஆலயத்தையும் எனது அரசியலுக்காக பயன்படுத்தியதே இல்லை, எமது அரசியல் பயணத்தில் எதிர்காலத்திலும் நாம் மதஸ்த்தலங்களை பயன்படுத்தப் போவதுமில்லை காரணம் இந்துவாக இருந்தாலும் கிறிஸ்தவராக இருந்தாலும் தமிழர்கள் என்ற அடிப்படையில் நாம் போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
எமது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் இருப்பு பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.
சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்
சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள்
எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன் விருத்திக்கான
சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சர்வதேச
சிறுவர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார.
வாழ்த்துச் செய்தி
எமது சிறுவர்கள் எமது தேசத்தின் எதிர்காலச் சொத்துக்கள். அவர்களை அறிவு ரீதியாக வளப்படுத்தி திறன்
விருத்திக்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பது முழு சமூகத்தினதும் பொறுப்பாகும். பிள்ளைகளின் உள, உடல்,
ஆரோக்கியத்தை வளப்படுத்துவதற்கு அளிக்கும்
முக்கியத்துவத்தை போன்றே அவர்கள் நற்பண்புள்ளவர்களாக வளர்வதற்கான சூழலை உறுதிப்படுத்துவதும் அவசியமாகும்.
ஒரு நாடு தேசிய ரீதியாகவும் சர்வதேச ரீதியாகவும் எவ்வளவு உயர்ந்த அபிவிருத்திப் படிநிலைகளை அடைந்து கொண்டாலும், சமூகம் அன்பு, அறம் போன்ற அடிப்படை
மானிடப் பண்புகளைப் பெற்றிருக்கவில்லை என்றால் அதனை ஒரு சிறந்த தேசமாக கருத முடியாது என நான் நம்புகிறேன். ஒரு சிறந்த தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு நாம் எமது சிறுவர் தலைமுறையை சிறந்த ஒழுக்கப் பெறுமானங்களுடன் தொழிநுட்ப திறன்கள் மற்றும் மொழி அறிவைப் பெற்றவர்களாக வளப்படுத்த வேண்டும்.
உள, உடல். பலவீனங்களிலிருந்து விடுபட்ட பிரஜைகளைக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதுவே எனது ஒரே எதிர்பார்ப்பாகும். அத்தகையதொரு நாட்டிலேயே சிறுவர்கள் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் மனநிறைவாகவும் வாழ்வதற்கான உறுதியான உத்தரவாதம் இருக்கும். இத்தகையதொரு தேசத்தின் நன்மைகளை அனுபவித்து மகிழும் ஒரு தலைமுறையை கட்டியெழுப்புவதற்கு உங்களது பிள்ளைகளின் சிறு பராயத்தை நீங்கள் மிகுந்த பொறுப்புடன் நெறிப்படுத்துவீர்களென நான் எண்ணுகின்றேன். அப்போதுதான் 'எமது தேசத்தை நாமே கட்டியெழுப்புவோம்' என்ற இவ்வருட உலக சிறுவர் தின கருப்பொருளை யதார்த்தமாக்க முடியும்.
கோட்டாபய ராஜபக்ஷ
பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சாம் கேட்ட கிராமசேவகர் கைது
பெண்ணொருவரிடம் பாலியல் லஞ்சாம் கேட்ட கிராமசேவகர் கைது
ஆவணமொன்றை வழங்குவதற்காக, பெண்ணொருவரிடம் பாலியல்
லஞ்சத்தில், முதலில் முத்தம் கேட்ட, கிராம சேகவர் ஒருவர் கைது செய்ப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரிடமே
அப்பகுதிக்குப் பொறுப்பான கிராமசேகவர், பாலியல் இலஞ்சம் கேட்டுள்ளார்.
‘உங்களை கஷ்டப்படுத்தக் கூடாது. நாளைக்கு அலுவலகத்தில் சனம் நிறைய
இருக்கும். ஆகையால், வீட்டுக்கே கொண்டுவந்து ஆவணத்தை தருகின்றேன்.
ஆவணத்துடன் முத்தமொன்றையும் தருகின்றேன். பதிலுக்கு முதலில்
முத்தம் வேண்டும்” என, அப்பெண்ணிடம் கிராமசேகவர் கேட்டுள்ளார்
என, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதென சிலாவத்துறை பொலிஸார் தெரிவித்தனர்
இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்
இலங்கையில் பசு வதையை தடை செய்ய அரசாங்கம் தீர்மானம்
இலங்கையில் பசு வதையை தடை செய்வதற்கு நேற்று முன்தினம் (28) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், பிரதமர் மஹிந்த
ராஜாக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:
- இலங்கையில் பசு வதையை தடை செய்தல்
விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரம் நிலவும் நாடு என்ற ரீதியில் இலங்கை கிராம மக்களின் ஜீவனோபாய அபிவிருத்திக்காக கால்நடை வளத்தின் மூலம் கிடைக்கும்
பங்களிப்பு பாரியதாகும். பசு வதை அதிகரித்ததன் காரணமாக பாரம்பரிய விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது தேவையான கால்நடை வளம் போதுமானது இல்லை என்பதும்,
இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்காக வெளிநாட்டுக்கு செல்லும் பெரும் தொகையிலான அந்நிய செலாவணியை கட்டுப்படுத்தி கிராம மக்களின் ஜீவனோபாயத்தை
மேம்படுத்தக்கூடிய வகையில் உள்ளூர் பசும் பால் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கு போதுமான பசுக்கள் இல்லாமையால் இந்த தொழிற்துறையின் வளர்ச்சிக்கு தடை
ஏற்பட்டுள்ளது என்று பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு கௌரவ பிரதமர் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட
பரிந்துரையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
• பசு வதை தொடர்பில் தற்பொழுது நாட்டிற்குள் நடைமுறையில் உள்ள 1958 ஆம் ஆண்டு இலக்கம் 29 இன் கீழான கால்நடை சட்டம், 1893 ஆம் ஆண்டு இலக்கம் 9 இன் கீழான அல்லது கொலை
கட்டளைச்சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட (Joint Act) ஏனைய சட்டம் மற்றும் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களினால்
நிறைவேற்றப்பட்டுள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
• பசு இறைச்சியை பயன்படுத்தும் பொது மக்களுக்கு தேவையான இறைச்சியை இறக்குமதி செய்தல் மற்றும் நிவாரண விலைக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
• விவசாய பணிகளுக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத வயதான நிலைமைக்கு உள்ளாகும் பசுக்கள் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
• இந்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு உட்பட்டதாக உடனடியாக நடைமுறைபடுத்தும் வகையில் நாட்டில் பசு வதையை தடை செய்தல்
வயல், குளங்களில் மணல் அகழ்வதற்கு தடை
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல் நிலங்கள் மற்றும் குளங்களிலிருந்து மணல் அகழ்வதற்கான சிபாரிசு வழங்குவதனை
இடை நிறுத்துமாறு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.
கமநல அபிவிருத்தித் திணைக்களம், மாகாண நீர்ப்பாசன திணைக்களம் மற்றும் மத்திய நீர்ப்பாசன திணைக்களங்களுக்கு இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
வயல் நிலங்களை திருத்துவது என்ற போர்வையில் வயல் நிலங்கள் மற்றும் மேட்டு நிலங்களிலிருந்து மணல் அகழும் நடவடிக்கைகள்
இம்மாவட்டத்தில் இடம்பெற்று வருவதாகவும். இதன் காரணமாக வயல் நிலங்கள் பள்ளமாவதுடன் மேட்டு நிலப் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்திற்குரித்தான குளங்களிலிருந்தும் கனிசமான மணல் அகழ்வதனால் இவற்றின்
ஆழம் அளவுக்கதிகமாக அதிகரிப்பதுடன், இங்கு நீர் அருந்தவரும் கால்நடைகள் குளத்தில் மூழ்கி உயிரிழக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் குறிப்பிட்டார்.
இத் திணைக்களங்களுக்குச் சொந்தமான குளங்கள் அத்தியாவசியமாக திருத்தம் செய்யும் தேவைகள் ஏற்படின்
அத்திணைக்களங்கள் ஊடாக மாத்திரம் திருத்த வேலைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது – பிரதமர்
20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது – பிரதமர்
20ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது என்பதில் தான் நம்பிக்கையுடன் இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று 2020.09.29 தெரிவித்தார்.
பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி
மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டார்.
குறித்த சந்திப்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், ஊடவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் பிரதமரின் கருத்து என்ன?
பிரதமர்: அரசாங்கம் எனும் போது, அரசாங்கத்தின் கருத்தே எனது கருத்தாகும். 20ஆவது திருத்தத்திற்கு எவ்வித சிக்கலும் ஏற்படாது.
ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்திற்கு சார்பான கட்சிகளினால் குழு நியமிக்கப்பட்டுள்ளது அல்லவா?
பிரதமர்: அனைத்து கட்சிகளுக்கும் அது தொடர்பில் குழுக்களை நியமிப்பதற்கு அதிகாரம் உள்ளது. 20ஆவது திருத்தம் தொடர்பில்
நாம் அனைவருடனும் அமைச்சரவை கூட்டத்தின்போது கலந்துரையாடினோம். எதிர்க்கட்சியும் குழுவொன்றை நியமித்துள்ளதாக அறிகிறேன்.
ஊடகவியலாளர்: 20ஆவது திருத்தத்தின் பின்னர் பிரதமர் பெயரளவிலானவராக மாறுவாரா?
பிரதமர்: இல்லை. அது பிரதமரின் கைகளிலேயே உள்ளது.
ஊடகவியலாளர்: இந்திய பிரதமருடனான கலந்துரையாடலின்போது 13ஆவது திருத்தத்திற்கு
கட்டாயப்படுத்தப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்து.
பிரதமர்: தற்போதுள்ள அரசியலமைப்பே செயற்படுத்தப்படும். மாகாண சபை தேர்தலை யார் தாமதப்படுத்தியது? தேர்தலை
நடத்தாதிருந்தவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்கள். நாம் உரிய முறையில் தேர்தலை நடத்தியதையே செய்தோம்.
ஆற்றிலிருந்து மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயது பெண் -சடலம் மீட்பு
மர்மமான முறையில் உயிரிழந்த 15 வயதுடைய பாடசாலை மாணவியின் சடலம் நானுஓயா பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து இன்று (29) காலை மீட்கப்பட்டுள்ளது.
நானுஓயா எபஸ்போட் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி டெஸ்போட் தோட்டத்தில் கீழ்பிரிவில் வசித்து வந்த மகேந்திரன் யசோதா என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நேற்று (28) இரவு, 10.30 மணிவரை குறித்த மாணவி கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
எனினும், தாம் நித்திரைக்கு சென்று அதிகாலை 2.30 மணியளவில் எழுந்துபார்க்கும் போது மகளை காணவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
பின்னர், முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையை அடுத்து, மாணவியின் சடலம் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






