Tag: கவிழ்ந்த பஸ்
Posted in இலங்கை செய்திகள்
கவிழ்ந்த பஸ் – 49 பேர் காயம் – photo
Author: நலன் விரும்பி Published Date: 02/10/2020 Leave a Comment on கவிழ்ந்த பஸ் – 49 பேர் காயம் – photo
டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிப் பயணித்த
தனியார் பஸ்ஸொன்று வீதியை விட்டு விலகி, 20 அடி பள்ளத்தில்
பாய்ந்து விபத்துக்குள்ளானமையால், 49 பேர் படுகாயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (02) காலை 7 மணியளவில், டயகம- ஹட்டன் பிரதான வீதியில்
பணித்துக்கொண்டிருந்த பஸ், போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் வைத்தே, பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியின் கவனயீனமே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த 49 பேரில், ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்
என்றும் மற்றையவர்கள், டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில், 24 பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரியவருகின்றது.







