Posted in இலங்கை செய்திகள்

புலிகள் தங்கம் தோண்டிய ஐவர் கைதாம் – புலி பீதியை கிளப்பும் சிங்களம்

புலிகள் தங்கம் தோண்டிய ஐவர் கைதாம் – புலி பீதியை கிளப்பும் சிங்களம்

இலங்கை வட்டகச்சி மாயவனூர் பகுதியில் புலிகளினால் மறைத்து வைக்க பட்ட தங்கத்தை தேடி குழிகள் வெட்டிய ஐந்து நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

புதையல் தோண்டுகிறார்கள் என கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

ஐநாவில் இலங்கை அரச இனப்படுகொலை இறுக்கம் பெற்று வரும் நிலையில் இவ்விதமான புலி

பீதியை ஆளும் அசிங்கள பவுத்த இனவாதம் கட்டவிழ்த்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    கொழும்பில் தூண்கள் மேல் ஓடும் ரயில் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

    கொழும்பில் தூண்கள் மேல் ஓடும் ரயில் சேவைகள் ஆரம்பிக்க நடவடிக்கை

    கொழும்பு நகரில், தூண்கள் மேல் ஓடும் புதிய ரயில் கட்டமைப்புகளை நிர்மாணிக்க, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

    கொழும்பு நகரை மையப்படுத்தி, அரச மற்றும் தனியார்த் துறையினர் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக

    4 ரயில் பாதைகள் நிர்மாணிக்கப்பட உள்ளதாக, அமைச்சரவையின் இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

    சிவப்பு, பச்சை, நீலம், நாவல் ஆகிய நான்கு வர்ணங்களில் இந்த நான்கு ரயில் பாதைகளும் பெயரிடப்பட்டுள்ளன

    என்றும் தெரிவித்த அவர், 42 கிலோ மீற்றர் நீளமுடைய சிவப்பு ரயில் பாதை, ராகம முதல் புறக்கோட்டை ஊடாக கொட்டாவை வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

    28 கிலோ மீற்றர் நீளமான பச்சை ரயில் பாதை, மொரட்டுவை முதல் நாரஹேன்பிட்டி ஊடாக களனி வரையில் நிர்மாணிக்கப்படவுள்ளது.

    23 கிலோமீற்றர் நீளமான நீல ரயில் பாதை, கொட்டாவை முதல் இசுறுபாய ஊடாக ஹுனுபிட்டிய வரை நிர்மாணிக்கப்படவுள்ளது.

    நான்காவது நாவல் ரயில் பாதை, துறைமுக நகர் முதல் பொரளை ஊடாக அத்துருகிரிய வரையில் நிர்மாணிக்கப்படும் என்றும், அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

    Posted in இலங்கை செய்திகள்

    ஜெனீவா விவகாரம் தேசிய பிரச்சினை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

    ஜெனீவா விவகாரத்தை தேசிய பிரச்சினை-அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

    ஜெனீவா விவகாரத்தை, அனைத்து அரசியல் கட்சிகளும் தேசிய பிரச்சினையாகக் கருத வேண்டும் எனத் தெரிவித்த கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அரசியல் நோக்கங்களை விடுத்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குத் தீர்வுகாண அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    கட்சியின் தலைமையகத்தில் நேற்று (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    அங்கு தொடர்ந்துரைத்த அவர், இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண காரியமல்ல என்றும் நிறைவேற்றப்பட்டுள்ள 46/1 பிரேரணையைச் செயற்படுத்த, ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு அதிகாரம் கிடையாது எனத் தெரிவித்தார்.

    உள்ளகப் பொறிமுறை ஊடாக ஒரு சில விடயங்களை செயற்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்ட அமைச்சர், ஜெனீவா விவகாரத்தை, எதிர்த் தரப்பினர் தங்களின் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும் இலங்கை இராணுவத்தினரை சர்வதேச நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது சாதாரண விடயமல்ல என்றும் கூறினார்.

    சர்வதேச நீதிமன்றக் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டுள்ள ரோம் ஒப்பந்தத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை என்றும், ஆகவே இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்றும் கூறினார்.

    இலங்கை விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லும் அதிகாரம், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு கிடையாது என்றும் பாதுகாப்புச் சபைக்கே இவ்வதிகாரம் காணப்படுகிறது என்றும் குறிப்பிட்ட அவர், பாதுகாப்புச் சபையில், சீனா, ரஸ்யா ஆகிய நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படும் என்பதால், சர்வதேச நீதிமன்ற விவகாரம் சாத்தியமற்றது என்றார்.

    Posted in இலங்கை செய்திகள்

    ரவுடி போலீஸ் அதிகாரி கைது – கோட்டா ஆட்சியில் நடந்தேறும் அசிங்கம்

    ரவுடி போலீஸ் அதிகாரி கைது – கோட்டா ஆட்சியில் நடந்தேறும் அசிங்கம்

    நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கி, கீழே தள்ளிவிட்டு ஏறி குதித்து மிதித்த குற்றச்சாட்டின் கீழ் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரி

    கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

    நடுவீதியில், பொதுமகன் ஒருவரை கடுமையாக தாக்கும் காட்களின் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.

    பன்னிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      பழிவாங்கும் கோட்டா முன்னாள் நிதி அமைச்சர் சிறையில்

      பழிவாங்கும் கோட்டா முன்னாள் நிதி அமைச்சர் சிறையில்

      முன்னாள் அமைச்சர் ரவி கருநாயாக்கவும் ,ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய நபராக விளங்கிய

      ரவி கருணாநாயக்காவை தொடர்ந்து விளக்க மறியலில் வைக்குமாறுநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

      இவருடன் எட்டு பேரது பிணை முறிவு விவரம் தொடர்பாக இடம்பெற்ற விசாரணையில் இந்த உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in இலங்கை செய்திகள்

      மனைவியை அடித்து கொன்று கடலில் வீசிய கணவன்

      மனைவியை அடித்து கொன்று கடலில் வீசிய கணவன்

      தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தலைவாக்கலை மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் கடந்த 25 ஆம் திகதி மீட்கப்பட்ட குடும்ப பெண்ணின் சடலம் தற்கொலை அல்ல, கொலை என அக்கரபத்தனை பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண், அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டொரிடன் தோட்டத்தைச் சேர்ந்த வனராஜா

      சித்தரவள்ளி (28 வயது) எனவும், அவர் 2 பிள்ளைகளின் தாய் எனவும் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.இதனை தொடர்ந்து தலவாக்கலை மற்றும் அக்கரபத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.இந்நிலையில் கைரேகை அடையாளப் பரிவினர் விசாரணை

      மேற்கொள்வதற்காக வீட்டுக்கு செல்லும் போது குறித்த சந்தேக நபரான கணவன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். அதனை தொடர்ந்து கணவன் மீது சந்தேகம் கொண்ட பொலிஸார் நேற்று அவரை கைது செய்து புலன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.அதன் போது கூலி வாகன சாரதியாக வேலை செய்யும் குறித்த நபர் வேலை செய்து விட்டு கடந்த 23 ஆம் திகதி வீட்டுக்கு சென்றதாகவும்

      அதன் போது தனக்கு தன்னுடைய மனைவிக்கும் சண்டை ஏற்பட்டதாகவும், மனைவி ஒருவருடன் உள்ள தொடர்பு காரணமாகவே குறித்த சண்டை ஏற்பட்டதாகவும், அதனால் தான் தாக்கியதில்

      மனைவி மரணம் அடைந்ததாகவும் அதனை தொடர்ந்து மனைவியை வீட்டில் பூட்டி வைத்து விட்டு இரண்டு பிள்ளைகளையும் தனது தாய் தந்தையர்களிடம் ஒப்படைத்து விட்டு வழமை போன்று

      வாகனம் ஓடியதாகவும் கணவன் தெரிவித்துள்ளார்.மேலும் தான் இதில் இருந்து தப்ப வேண்டும் என்பதற்காக இரவு 11 மணி அளவில் மனைவியின் சடலத்தினை ஏற்றிக்கொண்டு மேல்

      கொத்மலை நீர்த்தேக்கத்தில் போட்டதாகவும், தான் கொலை செய்ய வேண்டும் என்று தாக்கவில்லை என்றும் இது தற்செயலாக நடந்தது என்றும் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது- மனோ கணேசன்

      பன்மைதன்மையை ஏற்காமல், ஒருபோதும் இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது

      • ஆனந்தா கல்லூரி பழைய மாணவர்களிடம் மனோ கணேசன் எம்பி

      இலங்கையின் பன்மொழி, பல்லின, பன்மத, பன்மைத்தன்மையை புரிந்துக்கொண்டு இலங்கையை ஒரு பன்மைத்தன்மை கொண்ட நாடாக ஏற்காமல் இலங்கை தேசத்தை ஒருபோதும் கட்டியெழுப்ப முடியாது. சிங்களம் மட்டும், பெளத்தம் மட்டும் என்ற அடிப்படைகளில், தம்மை

      இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நிலைநிறுத்தும் நிலைமையை தமிழர்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

      இங்கிலாந்தில் வாழும், கொழும்பு ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர்களின், “ஜனநாயகத்துக்கான ஆனந்தியர்கள்” என்ற அமைப்பு நேற்றிரவு நடத்திய இணையரங்கத்தில் கலந்துக்கொண்டு சிங்கள மொழியில் உரை நிகழ்த்திய மனோ எம்பி மேலும் கூறியதாவது,

      ஆனந்த கல்லூரி இலங்கையின் புகழ் பெற்ற சிங்கள பெளத்த கல்வி நிறுவனம். இலங்கையின் பிரபல சிங்கள அரசியல் நண்பர்களை உருவாக்கிய கல்லூரி இதுவாகும். ஆகவே இதன் பழைய மாணவர்களாகிய நீங்கள், “இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவோம்” என்ற நிகழ்வை நடத்துவது சாலப்பொருத்தமானது.

      இலங்கையில் சிங்கள மொழி பேசுகின்றவர்கள், பெளத்த மதத்தை பேணுகின்றவர்கள் எண்ணிக்கையில் பெரும்பான்மை. அதில் எமக்கு பிரச்சினை இல்லை. அதுபற்றி உண்மையில்

      நான் மகிழ்கிறேன். ஆனால், இந்த சிங்கள, பெளத்தம் மட்டும் இலங்கை அல்ல. எழுபத்தி ஐந்து என்பது நூறு அல்ல. தொண்ணூற்று ஒன்பது கூட நூறு அல்ல. எழுபத்தி ஐந்துடன் இன்னொரு இருபத்து ஐந்து சேர வேண்டும். அதுதான் நூறு. அதுதான் இலங்கை.

      ஆகவே இலங்கை நாட்டின் தேசியத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால், நம் நாட்டின் பன்மை தன்மையை முதலில் நீங்கள் ஏற்க வேண்டும். இதுதான் ஐக்கிய இலங்கைக்கான முதல் நிபந்தனை.

      தமிழர்களுக்கு அதிகாரம் பிரித்து கொடுத்தால், அவர்கள் தனியொரு நாட்டை அமைத்துக்கொண்டு போய் விடுவார்கள் என்ற பயம் சிங்கள மக்களுக்கு இருக்கிறது. தமிழர் மத்தியில் ஆயுத போராட்டம் மீண்டும் தலையெடுக்கும் என்ற பயமும் இருக்கிறது.

      மிக நியாயமான பயங்கள் இவை. சிங்களவர் ஏன் இப்படி நினைக்கிறார்களே என சில தமிழ் அரசியல்வாதிகள் கூறுவதுண்டு. நான் அவர்களிடம், இல்லை, அவர்களின் இந்த பயம் நியாயமானது. அதை நாம் நிவர்த்திப்போம் என்று கூறுகிறேன்.

      அதேபோல் தமிழர் மத்தியிலும் பயங்கள் உண்டு. இந்த நாட்டை சிங்கள மட்டும், பெளத்தம் மட்டும் என படிப்படியாக மாற்றியமைக்க சிங்கள அரசியல்வாதிகள் முயல்கிறார்கள், என்று தமிழர்கள்

      நினைக்கிறார்கள். தமிழரை, முஸ்லிம்களை இரண்டாம், மூன்றாம் பிரஜைகளாக நடத்த சிங்கள அரசியல் தலைமை முயல்கிறது என்ற அச்சம் தமிழர் மத்தியில் உள்ளது. இதுவும் மிக, மிக நியாயமான பயம். இதை சிங்கள மக்கள் நிவர்த்தி செய்ய வேண்டும்.

      அப்புறம் இந்த அதிகார பகிர்வு என்ற விடயத்தை பாருங்கள். அதிகார பகிர்வு என்றால், சிங்கள மக்களின் அதிகாரத்தை பிடுங்கி எடுத்து, தமிழ் அரசியல்வாதிகளிடம் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள். முஸ்லிம் அரசியல்வாதிகளிடமும் கையளிப்பது என சிங்கள மக்கள் நினைக்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

      இது அப்பட்டமான பிழை. அதிகார பகிர்வு என்றால் சிங்கள அதிகாரத்தை தமிழ், முஸ்லிம்களிடம் கையளிப்பது என்பதல்ல. அது ஒரு ஜனநாயக சித்தாந்தம். கொழும்பில் குவிந்துள்ள

      அதிகாரங்களை மாகாணங்களுக்கு, மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்ப வேண்டும் என்றால், அவை வடக்கு, கிழக்குக்கு மட்டுமல்ல, மஹியங்கனை, மொனராகலை, காலி, மாத்தறை, எம்பிலிபிடிய ஆகிய சிங்கள பிரதேசங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.

      உங்களுக்கு ஒரு உண்மை தெரியுமா? கொழும்பு தலைநகரில் ஒரு கும்பல் இருக்கிறது. அது ஒரு வகுப்பு. கொழும்பில் எந்த அரசாங்கம் நிலைபெற்றாலும், அந்த கும்பல் அந்த அரசாங்கத்தை பிடித்து கொள்கிறது. வாக்களித்து அரசாங்கங்களை உருவாக்கும் மக்களை விட இந்த கும்பல் அரசாங்கங்களுக்கு உள்ளே செல்வாக்கு மிக்கது.

      இது எல்லா அரசாங்கங்களையும் பிடிக்கும். இப்போதைய அரசாங்கத்தையும் இது பிடித்து வைத்துள்ளது. சேனநாயக்க, பண்டாரநாயக்க, விக்கிரமசிங்க, ராஜபக்ச அரசுகள் மட்டுமல்ல, நாளை சஜித் ஆட்சி வந்தாலும், அந்த அரசாங்கத்தை இது பிடிக்கும்.

      அந்தளவு செல்வாக்கு இந்த கும்பலுக்கு உள்ளது. இதற்கு இன, மத அடையாளங்கள் இல்லை. ஆகவேதான், அதிகாரங்களை பிரித்து எல்லா மாகாணங்களுக்கும் அனுப்ப வேண்டும் என நான் கூறுகிறேன். ஆகவே அதிகார பகிர்வை இந்த அடிப்படையில் பாருங்கள்.

      மேலும் இது என்ன, மன்னராட்சியா? இங்கு அரண்மனை உள்ளதா? கொழும்பில் ராஜா, ராணி, யுவராஜா, யுவராணி இருக்கிறார்களா? ராஜகுடும்பம் உள்ளதா? ஆகவே கொழும்பில் குவிந்துள்ள

      அதிகாரங்களை பிரித்து எல்லா தமிழ், சிங்கள, முஸ்லிம் பிராந்தியங்களுக்கு அனுப்ப வேண்டும். இவற்றையெல்லாம் புரிந்துக்கொள்ளுங்கள். இலங்கை தேசத்தை கட்டியெழுப்பலாம். நான் இரண்டு கைகளையும் உயர்த்தி யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தருகிறேன்.

        Posted in இலங்கை செய்திகள்

        சுவிட்சர்லாந்தில் எழுத தமிழ் சஞ்சிகை வெளியீடு

        சுவிட்சர்லாந்தில் எழுத தமிழ் சஞ்சிகை வெளியீடு

        சுவிட்சர்லாந்தில் 27/03/ 2021. அன்று எழுத தமிழ் சஞ்சிகை அருட் தந்தை நா.பிரபாகர் தலைமையில் சஞ்சிகை குடும்பத்தினால், வெளியீடு செய்யப்பட்டது.

        இன அழிப்பில் இருந்து தமிழ் மக்கள் தன் இனத்தை பாதுகாக்கவும் விழிப்புணர்வு பெற்றுக் கொள்வதற்கும்


        உரித்துடையதாக பரப்புரை தளத்தை மைய படுத்தியும் சர்வதேச ஆதரவு தளத்தை விரிவு படுத்தும் நோக்கினை கொண்டு இந்த வெளியீடு இடம்பெற்றுள்ளது

        போரின் பின்னர் தமிழர்கள் சந்திக்கும் இன அழிப்பு தொடர்பாகவும் இந்த சஞ்சிகை முன்னெடுத்து செல்லவுள்ளது குறிப்பிட தக்கது

        எழுத தமிழ் சஞ்சிகை
        எழுத தமிழ் சஞ்சிகை
        எழுத தமிழ் சஞ்சிகை
          Posted in இலங்கை செய்திகள்

          கொரனோ அதிகரிப்பு -யாழில் பாடசாலைகள் அடித்து பூட்டு

          கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், யாழ். மாவட்டத்தில் மிக வேகமாக அதிகரித்து

          வருவதால், யாழ். கல்வி வலையத்திலுள்ள சகல பாடசாலைகளும் ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

          இன்று (29) முதல் ஒரு வாரத்துக்கு, பாடசாலைகள் மூடப்படும். அதுதொடர்பிலான தீர்மானம் நேற்று (28) மாலை எட்டப்பட்டுள்ளது .

          .வடமாகாண ஆளுநர், வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே மேற்கண்ட தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

          இதேவேளை, மேல் மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளிலும் முதலாம் தரத்தைத் தவிர, ஏனைய அனைத்துத் தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (29) ஆரம்பமாகுமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

          மாணவர்களை குழுக்களாகப் பிரித்து கற்றல் செயற்பாடுகளை முன்னெடுப்பதனூடாக கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கலாம்

          என அறிவுறுத்தி, கல்வி அமைச்சின் செயலாளரால், ஒழுங்கு விதிகள் அடங்கிய சுற்றறிக்கையும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

            Posted in இலங்கை செய்திகள்

            திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது

            திடீர் சுற்றிவளைப்பில் 1,120 பேர் கைது

            மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 1,120 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

            நேற்று (28) காலை 07 மணிமுதல் பிற்பகல் 05 மணிவரையான காலப்பகுதியில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

            கைதுசெய்யப்பட்டவர்களில், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 47 பேரும், நீதிமன்றத்துக்கு

            சமூகமளிக்காமல் இருந்த 418 பேரும், இலஞ்ச குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 549 சந்கே நபர்களும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதிமன்றில் இன்று(29) முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              சவூதி -இலங்கைக்கு 75 மெ.தொன் பேரீச்சம் பழங்கள் அன்பளிப்பு

              ரமழானை முன்னிட்டு சவூதி அரேபிய அரசால் இலங்கைக்கு 75 மெ.தொன் பேரீத்தம் பழங்கள் அன்பளிப்பு

              எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு இம்முறை (2021) இலங்கை முஸ்லிம்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 75 மெற்றிக்தொன் பேரீத்தம் பழங்கள் சவூதி அரேபிய அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளது.

              இந்த பேரீத்தம் பழங்களைக் கையளிக்கும் நிகழ்வு பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் (16) இடம்பெற்றது.

              இதன்போது இலங்கையில் உள்ள சவூதி அரேபிய தூதரக பிரதித் தூதுவர் றியாப் அல் ஷரீப், பிரதமரும் புத்தசாசனம், கலாசார மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவிடம் இந்த பேரீத்தம் பழங்களைக் கையளித்தார்.

              அவற்றை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரபிடம்
              கையளித்தார்.

              இப் பேரீத்தம் பழங்கள் மிக விரைவில் நாடு பூராகவும் உள்ள பதிவு செய்யப்பட்ட பள்ளிவாசல்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட
              திணைக்களத்தினால்


              ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக திணைக்களப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.

                Posted in இலங்கை செய்திகள்

                வவுனியாவில் குளத்தில் மூழ்கி வாத்தியார் மரணம் – நடந்தது என்ன ..?

                வவுனியாவில் குளத்தில் மூழ்கி வாத்தியார் மரணம் – நடந்தது என்ன ..?

                வவுனியாவில் கருமாரி அம்மன் ஆலய தேர் திருவிழாவிற்கு தாமரைப் பூ பறிப்பதற்காக வைரவபுளியங்குளம் குளத்தில் இறங்கிய அசிரியர் ஒருவர் நீரில் முழ்கி மரணமடைந்துள்ளார்.

                இன்று (27) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

                வவுனியா, குட்செட் வீதி, கருமாரி அம்மன் ஆலயத்தின் தேர்திருவிழாவிற்கு தாமரைப்பூ மற்றும்

                தாமரை இலை என்பவற்றை பறிப்பதற்காக ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளத்திற்குள் சென்றுள்ளார்.

                குறித்த குளத்தில் தாமரை இலை மற்றும் தாமரை பூவைப் பறித்துக் கொண்டிருந்த போது தாமரைக் கொடியில் சிக்கி நீரில் முழ்கியுள்ளார்.

                வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இரசாயனவியல் பாடத்தைக் கற்பிக்கும் ஆசிரியரான எஸ்.பரந்தாமன் என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  சிறிதரன் எம்பியின் மகன் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

                  சிறிதரன் எம்பியின் மகன் மீது வாள்வெட்டு குழு தாக்குதல்

                  யாழ்ப்பாணம் இந்து கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ள சிறிதரனின் மூத்த மகன் மீது எட்டு பேர் அடங்கிய மர்ம கும்பல் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது

                  இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் ,அரசியல் வாதிகளின் சீண்டுதல் மூலம்

                  இந்த வன்முறை தாக்குதல் இடம்பெற்றுள்ளது ,மாவையின் மகன் மீதும் இவ்வாறு தாக்குதல் நடத்த பட்ட நிலையில்

                  தற்பொழுது கூட்டமைப்பின் முக்கிய தூணாக விளங்கும் சிறிதரன் எம்பியின் மீது தமது

                  கவனத்தை திசை திருப்பி இந்த அரசியல் பழிவாங்குதல் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                  இவர்களது வீட்டில் உள்ள கமராவில் இந்த குழுக்கள் நடத்தும் தாக்குதல் பதிவாகியுள்ளது,இந்த தாக்குதலை மேற்கொண்ட எட்டு ரவுடிகளும் கைது செய்ய படுவார்களா என்பதே நமது கேள்வியாகும்

                  இந்த விடயம் ஐநாவில் முன்னுதாரணமாக எதிரொலிக்க போகும் என்பதை இங்கே அடித்து கூறலாம்

                    Posted in இலங்கை செய்திகள்

                    புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo

                    புஸ்ஸல்லாவ , புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் photo

                    புஸ்ஸல்லாவ சிவபுரத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள்

                    நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது.

                    இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள். புஸ்ஸல்லாவ சிவபுரத்தில்

                    புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன்(தாயுமானவர்) ஆலயத்தில் தொடர்ந்து 48 நாட்கள் நடைபெற்ற மண்டலாபிஷேகத்தை

                    தொடர்ந்துபால்குட பவனியும் சங்காபிஷேகமும் தேர் திருவிழாவும் நேற்று (25) நடைபெற்றது. இந்த தெய்வீகநிகழ்வில் நாடளாவிய ரீதியில் இருந்து பக்தர்கள் கலந்துக் கொண்டார்கள்

                      Posted in இலங்கை செய்திகள்

                      சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும் zoom

                      சனிக்கிழமை ஊடகவியலாளர்கள் சந்திப்பு – “ஐ.நா தீர்மானமும், தமிழீழ மக்களின் எதிர்காலமும் zoom

                      காலம் : 27/03/2021சனிக்கிழமை*

                      நேரம்

                      தமிழீழம் இரவு 20:30

                      ஐரோப்பா 16:00

                      பிரித்தானியா 15:00

                      கனடா காலை 11:00

                      தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் பன்னாட்டு இராசதந்திர அரங்குகளிலும், குறிப்பாக ஐ.நா மனித உரிமைகள் சபையின் 46வது கூட்டத்தொடரில் மேற்கொண்ட செயற்பாடுகள்

                      தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்க வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் தெளிவூட்டப்படும் இணையவழி ஊடான இவ் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள

                      விரும்புவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம் :

                      https://us02web.zoom.us/j/84476843064?pwd=clZYdnduL1Vvc2V1cTEwVE5WK3czdz09

                      Meeting ID: 844 7684 3064
                      Passcode : 213141

                      நன்றி
                      தமிழர் இயக்கம்

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழ் தீவுகளுக்கு புதிய பஸ் சேவைகள்

                      வடக்கிலுள்ள தீவுகளுக்கான போக்குவரத்து சேவையை மேம்படுத்த விரைவில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்த

                      பயணிகள் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தீவகங்களில் தற்போது மிகப்பழைய பஸ்களே போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றார்.

                      புதிய பஸ்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவை கிடைத்தவுடன் அவற்றைத் தீவுகளில் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

                      இதேவேளை, வடக்கில் போக்குவரத்துக்கான குழுவை விரைவில் ஸ்தாபித்து, அதற்குத் தேவையான வசதிகளையும்

                      ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
                      வட மாகாணத்தில் பாடசாலை போக்குவரத்து சேவையில் பற்றாக்குறை நிலவுவதாகவும் கஷ்டப்

                      பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கான போக்குவரத்து சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்..

                        Posted in இலங்கை செய்திகள்

                        இலங்கை விடயம் ஆராய -சட்ட ஆலோசகர்கள் புலனாய்வாளர்கள் நியமனம்

                        இலங்கை தொடர்பாக ஆராய, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால், சட்ட ஆலோசகர்களும் புலனாய்வாளர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

                        இலங்கை தொடர்பான தீர்மானம், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிக

                        ர் அலுவலகம், இலங்கையைக் கண்காணிக்கும் பணியைத் தொடங்கும் என்றும் அதன்படி, இலங்கையில் பணிபுரிவதற்காக, 12 புதிய ஊழியர்களை நியமிக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

                        அவர்களில், சர்வதேச குற்றவியல் நீதி – குற்றவியல் விசாரணைகள் மற்றும் அணியை ஒருங்கிணைத்து, தகவல்

                        மற்றும் சான்றுகள் சேகரிக்கும் உத்தியுடைய ஆய்வாளர்கள், இரண்டு புலனாய்வாளர்கள், மனித உரிமை அதிகாரிகள் மற்றும்

                        பாதிக்கப்பட்ட தரப்பின் ஆதரவு அதிகாரிகள், இவ்வனைவரையும் மேற்பார்வை செய்வதற்கான அனுபவமுள்ள சட்ட ஆலோசகர்கள் ஆகியோரையே நியமிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          ஆற்றில் இருந்து பெண் சடலமாக மீட்பு

                          தலவாக்கலை மேல் கொத்மலையில் நீர்தேக்கத்தில் இருந்து பெண்ணின் சடலமொன்றை தலவாக்கலை பொலிஸார் மீட்டுள்ளனர்.

                          பிரதேசவாசிகளினால் வழங்கிய தகவலுக்கமைய தலவாக்கலை சுமண சிங்கள

                          வித்தியாலயத்திற்கு அருகிலே இவ்வாறு அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலத்தை இன்று (25) காலை பொலிஸார் மீட்டனர்.

                          சடலம் பிரேத பரிசோதனைக்கு நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி

                          வைக்கப்படவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்ததுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

                          கச நோயினால் 600 பேர் ஆண்டு தோறும் இறப்பு

                          இன்று உலக காசநோய் தினமாகும். இலங்கையில் காசநோயினால் ஒரு வருடத்திற்கு 500 க்கும் 600 க்கும் இடைப்பட்டவர்கள் உயிரிழப்பதாக சுகாதார அறிக்கைகளில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

                          உலக சுகாதார அமைப்பின் அறிக்கைகளின்படி இந்நாட்டினுள் இனங்காணப்படாத காச நோயாளர்கள் கிட்டத்தட்ட 4000 க்கும் 5000 க்கும் இடைப்பட்டவர்கள் சமூகத்தில் இருப்பதாக காச

                          நோய் ஒழிப்பு மற்றும் மார்பு நோய் சம்பந்தப்பட்ட தேசிய வேலைத்திட்டத்தின் சமூகம் மருத்துவர் சுவனி தசநாயக்க தெரிவித்துள்ளார்.

                          மேலும், சுகாதார அறிக்கைகளின்படி குழந்தைகளுக்கு காச நோய் உருவாகும் அபாயம் அதிகம் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


                          இந்த நோயானது பல பெயர்களால் அழைக்கப்படுகின்றது. ஆதிகாலம் முதல் இந்நோய் இருந்து வந்திருப்பதாக ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                          அத்துடன் இங்கிலாந்தைச் சேர்ந்த ரிச்சர்ட் மோட்டன், பிரான்சைச் சேர்ந்த ஜின் என்டன் விலமின் பாஸ்டர் ஆகிய விஞ்ஞானிகள் காசநோய் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

                          பலதரப்பட்ட பரிசோதனை முடிவுகளின்படி காச நோய்க்கு எதிராக உள்ள ஒரேயொரு தடுப்பூசி டீ.ஊ.பு என்று தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தற்போது காச நோயை குணப்படுத்துமளவிற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு

                            இலங்கை ஐநாவில் தப்பியதா – வைக்க பட்ட ஆப்பு

                            இலங்கை புரிந்த தமிழ் இன படுகொலை தொடர்பாக அந்த ஆட்சியர்களை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி ,

                            நீதி காணப்பட வேண்டும் என தமிழர் தரப்பு தொடர்ந்து கூறி வருகிறது ,ஆனால் மேற்குலகமும் இந்தியாவும் தமது நலனை முன் நிறுத்தி சதுரங்க ஆட்டத்தை நடத்தி வருகின்றனர்

                            ஆளும் இலங்கை பவுத்த பேரினவாதிகளே தமிழர்களுக்கு தீர்வினை வழங்க வேண்டும் என்பதாக இந்த மொழிவில் கூற பட்டுள்ளது ,இது இலங்கைக்கு வழங்க பட்டுள்ள மேலும் ஒரு கால

                            அவகாசமாக மாறியுள்ளது ,இவர்கள் நீதி வழங்கா விடின் ,கலப்பு நீதிமன்றம் ,அல்லது சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என சுட்டி காட்ட படுகிறது

                            அப்படி என்றால் மீளவும் பந்தை அடித்து இலங்கையின் காலில் வழங்கியுள்ளது ஐநா,இப்பொழுது ஆடுகளத்தை இலங்கையே திறந்துள்ளது ,

                            ஆட்டம் முறையாக ஆட தவறின் அது பெரும் நெருக்கடியில் இலங்கையை அழைத்து செல்லும் ,அதாவது விளங்க

                            சொல்லின் ,மைதானம் இன்றி விளையாட்டுக்கு இலங்கை செல்வது போன்ற நிலை ஏற்படும் வாய்ப்புக்கள் என்பதே இந்த விளையாட்டின் மறுபக்க பார்வையாகும்

                            ஏமாற்ற பட்டது தமிழர்கள் தான் ,ஆனால் தொடர்ந்து அந்த மக்களை ஏமாற்ற முடியாத நிலைக்கு செல்லும் நிலை ஏற்படும் ,

                            அதற்கான அறவழி போராட்டங்கள் தொடர வேண்டிய நிலையில் தமிழர் தேசம் தள்ள பட்டுள்ளது என்பதே நிகழ்வின் நிகழ்வுகளாக உருமாற்றம் பெற்றுள்ளது