Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்
நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை பெருந்தோட்டத்துறையை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து ஆவன செய்ய வேண்டும்
- ஜனாதிபதிக்கு மனோ அவசர கடிதம்
மத்திய மாகாண நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாண பதுளை, மொனராகலை, சப்ரகமுவ இரத்தினபுரி, கேகாலை, மேல் மாகாண களுத்துறை, தென் மாகாண காலி, மாத்தறை மற்றும் கொழும்பு மாவட்ட
அவிசாவளை வரை படர்ந்துள்ள பெருந்தோட்டத்துறை குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில்
விக்கிரமசிங்கவுக்கு எழுதியுள்ள அவசர கடிதம் எழுதியுள்ளேன். இது தொடர்பான விசேட வாழ்வாதார உதவிகளை இலங்கை அரசுக்கு வழங்கி உதவுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும், தமிழக
நுவரெலியா முதல் கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை அதை செய்க -ஜனாதிபதிக்கு மனோ கடிதம்
முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களையும், கொழும்பிலுள்ள இந்திய தூதுவரின் ஊடாக கோருகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்நடவடிக்கை அவசர நிலையாக கருதி முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.
இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இலங்கையில் “வறுமை” பற்றிய கணக்கெடுப்பு அறிக்கையில் உலக வங்கி, இலங்கையின் தேசிய வறுமை மட்டம் 26 விகிதமாக உயர்ந்துள்ள வேளையில் பெருந்தோட்ட துறையில் வறுமை 53 விகிதமாக அதீதமாக உயர்ந்து இருக்கின்றது.
அதேவேளை, ஐநா உலக உணவு நிறுவனத்தின் இலங்கை பற்றிய அறிக்கையில் “உணவின்மை”, நகர துறையில் 43% என்றும், கிராமிய துறையில் 34% என்றும், பெருந்தோட்ட துறையில் 51%, என்றும் கூறுகிறது.
ஆகவேதான், மத்திய, ஊவா, சப்ரகமுவ, தென் முதல், மேல் மாகாண களுத்துறை, கொழும்பு மாவட்ட அவிசாவளை வரை படர்ந்துள்ள
பெருந்தோட்டத்துறை மக்கள் வாழும் குடியிருப்புக்களை “நலிவுற்ற” பிரிவாக அறிவித்து, அதற்கான விசேட ஒதுக்கீட்டு வளர்ச்சி திட்டங்கள் அமுல் படுத்த வேண்டும்.
நம் நாட்டில் இன்று நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள, உணவின்மை பிரச்சினையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள
இந்திய வம்சாவளி மலையக பெருந்தோட்ட மக்களுக்கு விசேட உதவிகளை வழங்கிட இந்திய மத்திய அரசும், தமிழக மாநில அரசும் முன்வர வேண்டும்.
இலங்கை முழு நாட்டுக்கும் இந்திய மத்திய அரசு
வழங்கிடும் உதவிகள், மிகவும் நலிவுற்ற நிலையில் வாடும் இந்திய வம்சாவளி
பெருந்தோட்ட மக்களுக்கு முறையாக கிடைப்பதில்லை என்பதை மிகவும் பொறுப்புடன்
இந்திய அரசின் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன்.
பெருந்தோட்ட துறையில் நிலைமை மோசமடைந்து பட்டினி சாவு ஏற்பட முன் இனியும் தாமதிக்காமல் இந்திய வம்சாவளி
பெருந்தோட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி கோருகிறது.
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
இலங்கை ஹொரண மில்லனிய பகுதி காவல்துறை ஓ ஐ சி ஒருவர் திடீர் இடமாற்றம் செய்ய பட்டுளளார் .
இவர் தொடர்பான சர்ச்சைக்குரிய ஒலி நாடா ஒன்று ,சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் ,இவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்க படுகிறது .
இலங்கை காவல்துறையின் தலைமை அதிகாரிகள் ,அதிகார துஸ்பிரயோகம் செய்து வருவதாக ஒன்பதாயிரம் முறைப்பாடுகள் பாதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது .
ரயில் மோதி வாலிபன் மரணம்
ரயில் மோதி வாலிபன் மரணம்
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி வாலிபர் ஒருவர் பரிதாபகரமாக பலியாகியுள்ளார் .
முறைக்கொட்டான் சேனை பகுதியில் இடம்பற்ற விபத்திலே வாலிபர் மரணமாகியுள்ளார் .
சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு வடபடுத்த பட்டுள்ளது .
ஆண்டு தோறும் ரயில் விபத்துக்களில் சிக்கி , பல டசின் மக்கள் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது .
மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு
மலிவு விலையில் வாகனங்கள் விற்பனவு
இலங்கையில் வாகன இறக்குமதிக்கு இடைக்கால டதை விதிக்க பட்டுள்ள பொழுதும் ,வாகனங்கள் மலிந்த விலையில் விற்க பட்டு வருகின்றன .
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த அவல நிலை இலங்கையில் ஏற்பட்டுள்ளது .
தொடர்ந்து இவ்வாறு எரிபொருள் தட்டுப்பாடு நீடிக்க படுமாக இருந்தால் ,நாடு மிக மோசமான நெருக்கடியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் அவதி
எரிபொருள் விலை அதிகரிப்பு மக்கள் அவதி
இலங்கையில் இன்று அதிகாலை முதல் ஏரி பொருட்களின் விலை அதிகரிக்க பட்டுள்ளது .
நாள் தோறும் பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் பெரும் நெருக்கடியில் மக்கள் சிக்கியுள்ளனர் .
தொடர்ந்து நீடிக்கும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கி தவித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
தீபாவளி உண்மையும் புரட்டும்
தீபாவளி உண்மையும் புரட்டும்!
ஆரியர்கள் சமண, புத்த ஆலயங்களை இந்துக் கடவுள் ஆலயங்களாக மாற்றியது போல, அவர்களின் விழாக்களையும் இந்துப் பண்டிகைகளாக மாற்றினர். அதற்கேற்ப புராணக் கதைகளைப் புனைந்தனர்.
இதை நாம் மட்டும் சொல்லவில்லை, அறிஞர் பெருமக்களே அழுத்திக் கூறியுள்ளனர்.
சமண சமயப் பண்டிகையே தீபாவளி
தீபாவளி சமணரிடமிருந்து இந்துக்கள் பெற்றுக் கொண்ட பண்டிகை. கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரிலே அவ்வூர் அரசனுடைய அரண் மனையிலே தங்கி இருந்தபோது அங்குக் குழுமி இருந்த மக்களுக்கு அறிவுரை செய்தருளினார்.
இரவு முழுவதும் நடைபெற்ற இந்தச் சொற்பொழிவு விடியற்காலையில் முடிவடைந்தது.
வைகறைப் பொழுது ஆனபடியினாலே சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்த மக்கள் அனைவரும் தத்தம் இல்லம் செல்லாமல் அவரவர் இருந்த இடத்திலேயே உறங்கி விட்டனர்.
வர்த்தமான மகாவீரரும் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே இயற்கை எய்தினார். பொழுது விடிந்து எல்லோரும் விழித்தெழுந்து பார்த்தபோது மகாவீரர் இயற்கை எய்தி இருப்பதைக் கண்டு அரசனுக்கு அறிவித்தனர்.
அவ்வரசன் மற்ற அரசர்களை வரவழைத்து அவர்களோடு யோசனை செய்து உலகத்திற்கு அறிவொளியாகத் திகழ்ந்த மகாவீரரை மக்கள் நினைவு கூர்ந்து வழிபடும் பொருட்டு அவர் இயற்கை எய்திய நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.
அது முதல் இந்த விழா (தீபம் = விளக்கு, ஆவலி = வரிசை; தீபாவலி) மகாவீரர் விடியற்காலையில் இயற்கை எய்தியபடியால் தீபாவளி என்ற பெயரில் விடியற்காலையில் கொண்டாடப் படுகிறது.
தீபாவளி உண்மையும் புரட்டும்
விடியற்காலையில் நீராடிய பின்னர் திருவிளக்கு ஏற்றித் தீபாவளிப் பண்டிகை கொண்டாடுவது வழக்கமாக இருக்கிறதன்றோ!
சமண சமயம் வீழ்ச்சி அடைந்த பிறகு சமணர்கள் பெருவாரியாக இந்து மதத்தில் சேர்ந்தனர். சேர்ந்த பிறகும் அவர்கள் வழக்கமாக இந்தப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனர்.
இந்த வழக்கத்தை நீக்க முடியாத ஆரியர்கள் இதைத் தாமும் ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால் பொருத்தமற்ற புராணக் கதைகளைக் கற்பித்துக் கொண்டார்கள்.
திருமால் நரகாசுரனைக் கொன்றார் என்றும், அவன் இறந்த நாளைக் கொண்டாடுவதுதான் தீபாவளி என்றும் கூறப்படும் புராணக் கதை பொருத்தமானது அன்று.
அன்றியும் இரவில் போர் புரிவது பண்டைக்காலத்து இந்தியப் போர் வீரர்களின் முறையும் அன்று. சூரியன் புறப்பட்ட பிறகுதான் போரைத் தொடங்குவது பண்டைக் காலத்துப் போர் வீரர்கள் நடைமுறையில் கொண்டிருந்த பழக்கம்.
சமணர் கொண்டாடி வந்த மகாவீரர் இயற்கை எய்திய நினைவு நாள் தீபாவளி என்பதில் அய்யமில்லை.
ஆனால், இந்தப் பண்டிகையை ஏற்றுக் கொள்ளும் மனம் இல்லாமல் புதிதாகக் கற்பித்துக் கொண்ட கதைதான் நரகாசுரன் கதை.
ஆசிரியர்: கல்வெட்டாராய்ச்சி அறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமி, நூல்: “சமணமும் தமிழும்’’
பக்கம் 79, 80
அறிவுக்குப் பொருத்தமற்ற கதை
வர்த்தமான மகாவீரர் கடைசி சமண தீர்த்தங்கரர். அவர் பாவாபுரி அரசன் அரண்மனையில் தங்கி அங்குக் கூடியிருந்த மக்களுக்கு-இரவு முழுவதும் அறிவுரைகள் செய்தார்.
நெடுநேரம் விழித்த காரணத்தால் மக்கள் அவ்விடத்திலேயே உறங்கி-விட்டனர். மகாவீரரும் தான் இருந்த இடத்திலேயே வீடு பேறு அடைந்தார். பொழுது விடிந்தது. எல்லோரும் விழித்து எழுந்தனர்.
மகாவீரர் வாழ்வு நீத்ததைக் கண்டனர். அரசன் சான்றோருடன் கூடி யோசித்தான்.
மகாவீரரை மக்கள் ஆண்டுதோறும் நினைத்து வழிபடுவதற்காக அவர் வீடு பெற்ற நாளில் ஒவ்வொரு வீட்டிலும் விளக்குகள் ஏற்றி வைத்து விழாக் கொண்டாடும்படி ஏற்பாடு செய்தான்.
(தீபம் = விளக்கு; ஆவலி = வரிசை, தீபாவலி = விளக்கு வரிசை) மகாவீரர் விடியற்காலையில் வீடுபேறு அடைந்தார். ஆதலால், தீபாவளி விடியற்காலையில் மக்களால் கொண்டாடப்-படுகிறது.
இந்த உண்மை நிகழ்ச்சி மறைக்கப்பட்டு அறிவுக்குப் பொருத்த-மற்ற நரகாசுரன் கதை பிற்காலத்தில் இந்துக்களால் கட்டி விடப்பட்டது என்பது அறிஞர் கருத்து.
சமண சமயம் செல்வாக்கு இழந்த காலத்தில் சமணர்கள் சைவ வைணவங்-களைத் தழுவினர். அந்நிலையிலும் தீபாவளியைக் கொண்டாடினர்.
அப்பழக்கம் பிற சமயத்தாரிடையேயும் நாளடைவில் புகுந்து விட்டது. சமண சமயத்தைச் சேர்ந்த மார்வாரிகள், குஜராத்திகள் முதலியோர் இன்றும் தீபாவளியை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருவதற்கு இது ஏற்ற சான்றாகும்.
ஆசிரியர்: டாக்டர் மா.இராசமாணிக்கனார், நூல்: “தமிழர் நாகரிகமும், பண்பாடும்’’, பக்கம்: 33, 34
பார்ப்பனர் சூழ்ச்சியே தீபாவளி!
வடநாட்டில் அக்காலத்திலிருந்த தமிழ் மேன்மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர்.
அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று.
தீபாவளி உண்மையும் புரட்டும்
கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படு வதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்டதொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர்.
தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும்.
தீபாவளி என்பது தீப+ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும்.. ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள், நூல்: “தமிழர் மதம்’’, பக்கம்: 200-201
தீபாவளி தமிழர்க்கு உரியதன்று!
தீபாவளிப் பண்டிகை தமிழர்க்கு உரியதாகத் தோன்றவில்லை. நரகாசுரன் என்ற ஓர் அசுரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண்டிகை வழக்கத்தில் கொண்டாடப்படுகிறது.
அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும் சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப்பட்டார் என்பர்.
ஆரியர் பகைவருள் ஆதியில் திராவிடர்களும் அடங்குவர். ஆதலின் அசரர் கொலைக்காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.
ஆசிரியர்: கா.சுப்பிரமணியன் (பிள்ளை),
நூல்: “தமிழ் சமயம்’’, பக்கம் : 62
தீபாவளி விஷ்ணுவுக்குரியது அல்ல!
நரகாசுரன் என்பவனைக் கொன்ற நாள்-தான் தீபாவளி என்கிறார்கள். அறிவுக்குப் பொருத்தமில்லாத பல கதைகளைக் கூறி தீபாவளி கொண்டாடுகிறார்கள். அவற்றை-யெல்லாம் மறைந்த திருமுருக கிருபானந்த வாரியார் மறுக்கிறார்.
தீபாவளி சிவனுக்குரிய திருநாள் என்கிறார். இதன்மூலம் கிருஷ்ணனுக்கு உரியது (வைணவர்-களுக்கு உரியது) என்பது மறுக்கப்படுகிறது.
தீபாவளி என்னும் நன்னாளைப் பொன்னாளாக யாண்டுங் கொண்டாடு-கின்றார்கள்.
ஆனால் அதன் உண்மை யறிந்தவர்கள் ஒரு சிலரே யாவார்கள். அதனைச் சிறிது இங்கு விளக்குவோம்.
பெரும்பாலோர், நரகாசுரனைக் கண்ணபிரான் சங்கரித்தார். அந்த அரக்கனை யழித்த நாளே தீபாவளி என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.
நரகாசுரனைச் சங்கரித்த நாள் அதுவாக இருக்கட்டும். ஆனால் கேவலம் ஒரு கொடியவனைக் கொன்ற நாளுக்கு, ஒரு கொண்டாட்டம் நிகழ்வது, யாண்டும் எக்காலத்தும் இருந்ததில்லை.
அப்படி யிருக்குமாயின், இரணியனைக் கொன்ற நாள், இராவணனைக் கொன்ற நாள், கம்சனைக் கொன்ற நாள், இடும்பனைப் _ பகனைக் கொன்ற நாள், துரியோதனனைக் கொன்ற நாள், அவ்வாறே, அந்தகாசுரன்,
சலந்தராசுரன், இரண்யாட்சன், திருவணாவர்த்தன், இப்படி புகழ் படைத்த அரக்கர்கள் ஒவ்வொருவரையுங் கொன்ற நாட்களையெல்லாம் கொண்டாடு வதாயின், ஆயுளே அதற்குச் சரியாகிவிடும்.
ஆகவே நரகாசுரனைக் கொன்றதற்காக தீபாவளி ஏற்பட்டதன்று.
தீபம் _ விளக்கு; ஆவலி _ வரிசை.
தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெரு-மானை வழிபடுவதற்கு உரிய நாள். தீபாவளி எனவுணர்க.
தீபமங்கள ஜோதியாக விளங்கும் பெருமானை, நிரம்பவும் விளக்கேற்றி வணங்கினார்கள் நமது முன்னோர்கள். திருக்கார்த்திகையில் விளக்கேற்றி வணங்கு-கின்றார்களன்றோ?
“விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்’’
என்பது ஞானசம்பந்தர் திருவாக்கு.
(நூல்: வாரியார் விரிவுரை விருந்து)
அகராதிக் குறிப்பில் நரகாசுரன் கதை
இரண்யாட்சதன்: இவன் கதாபாணியாக இந்திராதி தேவர்கள், இருடிகள் முதலியோரை வருத்தி ஒருமுறை பூமியைப் பாய்போற் சுருட்டிக் கொண்டு கடலில் ஒளிக்க, விஷ்ணுமூர்த்தி சுவேதவராக (பன்றி)வுருக் கொண்டு கொம்பினால் இவன் மார்பைப் பிளந்து பூமியைப் பழைமை போல் நிறுத்தினார்.
(இந்தக் கருத்து பூமி உருண்டை என்னும் அறிவியல் உண்மையை மறுத்து தட்டை என்னும் மதவாதத்தை வற்புறுத்துகிறது) (169)
நரகாசுரன்: வராக (பன்றி) உருக்கொண்ட விஷ்ணுவிற்கும், பூமி தேவிக்கும் பிறந்த அசுரன் (934)
சுரர்: பிரமன் சொற்படி மது உண்டதால் இப்பெயர் அடைந்த தேவர் (705)
அசுரர்: சுரராகிய தேவர்க்கு (அதாவது மது அருந்தும் ஆரியப் பார்ப்பனர்க்கு) விரோதிகள் (அதாவது தென் நாட்டைச் சேர்ந்த திராவிடத் தமிழர்கள்) (24)
– நூல்: அபிதான சிந்தாமணி, ஆசிரியர்: சைவப் பேரறிஞர் ஆ.சிங்காரவேலு முதலியார்
மிகவும் புகழ்பெற்ற தமிழ் அகராதியான ‘அபிதான சிந்தாமணி’ கூறியுள்ள மேற்கண்ட கதை ஆரியர்களால் புனையப்பட்டது.
தீபாவலி என்பதே தீபாவளி ஆனது. தீபம் +ஆவலி = தீபாவலி. தீப வரிசை என்பது அதன் பொருள். அது சமணப் பண்டிகைக்கே பொருந்தும். நரகாசுரன் கதைக்குப் பொருந்தாது.
இந்த மண்ணின் மைந்தன் நரகாசுரன். எனவே, பூமியை பாதுகாத்தவன். ஆரியர் கைப்பற்றாமல் நம் மண்ணை பாதுகாத்தவன் என்பதால் அவனை ஆரியர்கள் வெறுத்தனர்.
அந்த வெறுப்பின் வெளிப்பாடே மேற்கண்ட புராணம்.
சமணப் பண்டிகையை, விஷ்ணு பண்டிகையாக மாற்றி, இந்துப் பண்டிகை என்று கொண்டாடுவது மோசடியாகும்.
வாரியார் வைஷ்ணவ பண்டிகை என்பதை மறுக்கிறார். மற்ற அறிஞர்கள் தீபாவளி சமணப் பண்டிகை என்று உறுதி செய்துள்ளனர்.
எனவே, ஆரியப் புரட்டான இத் தீபாவளிப் பண்டிகையை நாம் புறக்கணிப்போம்.
நம்மை இழிவுபடுத்தும் பண்டிகையை நாம் கொண்டாடக் கூடாது என்று முடிவு எடுப்போம்! அதுவே அறிவுக்கும், மானத்திற்கும் உகந்த செயல் ஆகும்.
மஞ்சை வசந்தன்
மாணவி மண்டை உடைத்த டீச்சர் – சிறையில் அடைத்த பொலிஸ்
மாணவி மண்டை உடைத்த டீச்சர் – சிறையில் அடைத்த பொலிஸ்
இலங்கை Hungama காவல்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்று வந்து 10 வயது மாணவியை டீச்சர் கோரமாக தாக்கியுள்ளார் .
டீச்சரின் கோர தாக்குதலில் முதுகு மற்றும் தலையில், பலத்த காயங்களுக்கு உள்ளான மாணவி, தங்காலை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் .
மாணவியின் தயார் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, காவல்துறையினரால் டீச்சர் கைது செய்யப் பட்டார் .
மாணவி மண்டை உடைத்த டீச்சர் – சிறையில் அடைத்த பொலிஸ்
கைதனை 49 வயது டீச்சர், எதிர்வரும் 14 தம் திகதி வரை சிறையில் அடைக்க பட்டுளளார் .
இலங்கையில் மாணவர்களை தகாத வார்த்தைகள் கொன்டு பேசுவதும் ,பாலியல் துன்புறுத்தல் மற்றும் ,இவ்வாறான வன்கொடுமை தாக்குதல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன .
ஐரோப்பா மற்றும் கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில், ஆசிரியர் மார்கள் மாணவர்களை தாக்கிட முடியாது .
அவ்விதம் தாக்கினாலோ அன்றி கடும் சொற்களை பயன்படுத்தினாலோ அவர்கள் சிறையில் அடைக்க படுவார்கள் .
அரசு ஒழுங்கமுள்ளதாக இருக்கும் பொழுதே , பாடசாலைகளும் தரமானதாக அமையும் .
பல பாடசாலைகளின் அதிபர்கள் ,ஆசிரியர்கள் கோர நடவடிக்கைகள் வெளியில் வருவதில்லை என்பது, பாதிக்க பட்ட மாணவர்கள் கருத்துக்களாக உள்ளன .
வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தாதிகள் – தள்ளாடும் இலங்கை மருத்துவமனைகள்
வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தாதிகள் – தள்ளாடும் இலங்கை மருத்துவமனைகள்
இலங்கை மருத்துவமனைகளில் பணி புரிந்த தாதிகள் வெளி நாடுகளுக்கு தப்பி ஓடியதால் ,தாதிகள் இன்றி, இலங்கை மருத்துவமனைகள் தள்ளாடி வருகின்றன .
லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்பை பெற்று தாதிகள் சென்றுள்ளதல் ,இலங்கையில் பணிபுரிந்த எழுபதாயிரம் தாதிகள் ,47,000 பேர் மட்டுமே வருகை தருகின்றனர் .
கிட்ட தட்ட அரைவாசிக்கு மேலானவர்கள் தப்பி ஓடியுள்ளதன் விளைவே இதற்க்கு காரணமாகும் .
இலங்கையிலே ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த அவலம் ஏற்பட்டுள்ளது .
அரச ஊழியர்களுக்கு சம்பள பணத்தை செலுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தின் அச்சத்தினால் ,தாதிகள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
தந்தையை அடித்து கொன்ற மகன் கைது
இலங்கை குளியாப்பிட்டி காவல்துறைக்குஉட் பட்ட பகுதியில் ,தந்தையை அடித்து கொன்ற மகன் கைது செய்யப் பட்டுள்ளார் .
வீட்டின் மண்டப பகுதியில் ,உறக்கத்தில் இருந்த தந்தையினை, தடிகளை கொண்டு கோரமாக மகன் தாக்கியுள்ளார் .
மகனின் தாக்குதலில் பலத்த காயமடைந்த தந்தை , சம்பவ இடத்தில துடி துடித்து பலியானார் .
தாக்குதலை மேற்கொண்ட மகன், மனநிலை பாதிக்க பட்டவர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
நளினி உள்ளிட்ட ஆறுபேர் விடுதலை – இலங்கைக்கு ஆப்பு
நளினி உள்ளிட்ட ஆறுபேர் விடுதலை – இலங்கைக்கு ஆப்பு
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி, முருகன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 7 பேரில் ஒருவரான பேரறிவாளனை கடந்த மே மாதம் 18ஆம் திகதி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது.
உச்ச நீதிமன்றம் தனது தனிப்பட்ட அதிகாரமான சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது.
நளினி உள்ளிட்ட ஆறுபேர் விடுதலை – இலங்கைக்கு ஆப்பு
பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் மற்ற 6 பேரும் விடுதலை கோர சட்ட வழிவகை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து, பரோலில் வெளிவந்தபோதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது.
தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.
மேலும்,இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் சிறையில் இருந்துவரும், 6 பேரின் நன்னடத்தை குறித்து தமிழக அரசும், மனுதாரர்கள் தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப்
பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளன.
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
யாழ்ப்பாணம் பஅரியாலை தபால் கடை சந்திக்கு அருகில் வாலிபர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
குடைக்குள் வாளினை மறைத்து ,எடுத்து வந்த நபர்கள் இந்த திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினார் .
பலத்த காயங்களுக்கு உள்ளான வாலிபர், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
யாழில் கிணற்றில் தாய் சிசு சடலமாக மீட்பு
யாழில் கிணற்றில் தாய் சிசு சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து தாயும் , கைக்குழந்தை ஒன்றும் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மிருசுவில் தெற்கை சேர்ந்த பிரகாஷ் சந்திரமதி (வயது 40) மற்றும் அவரின் 7 மாத குழந்தையான பிரகாஷ் காருண்யா ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கணவன் மனைவிக்கு இடையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் , அதன் பின்னர் அதிகாலை 2 மணியளவில் மனைவியையும் பிள்ளையையும் காணவில்லை என கணவன் தேடிய நிலையில் காலை இருவரும் கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அதேவேளை சவாகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதவான் அ. ஜுட்சன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்து , சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.
பொலிஸாரின் விசாரணைகளின் அடிப்படையில் உயிரிழந்த பெண்ணின் கணவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு,
கொடிகாம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்
வெளிநாட்டில் உள்ள முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு
வெளிநாட்டில் உள்ள முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு
சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து விலகிச் சென்றவர்களுக்காக 2022.11.15 ஆம் திகதி முதல் 2022.12.31 ஆம் திகதி வரை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்புக் காலத்தை வெளிநாடுகளில் உள்ள முப்படை வீரர்களும் பயன்படுத்தலாம் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, 2022.10.25 ஆம் திகதி அன்று அல்லது அதற்கு முன்னர் உரிய முறையில் விடுமுறை பெறாத முப்படை வீரர்கள் தங்களது சேவையில் இருந்து உரிய முறையில் விடுவிப்பு பெற்றுக் கொள்ள முடியும்.
வெளிநாட்டில் உள்ள முப்படை வீரர்களுக்கான பொது மன்னிப்பு
இவ்வாறு விடுவிப்பு பெரும் வீரர் ஒருவர் ஏதேனும் தொகை செலுத்த நிலுவை இருப்பின் மாத்திரம் அவற்றை உரிய முறையில் செலுத்திவிட்டு தனக்கான விடுவிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாரு சட்ட ரீதியில் விலகிச் செல்பவர்களுக்கு எதிராக வேறு எந்தவொரு ஒழுக்காற்று விசாரணைகள் நிலுவையில் இருக்கக் கூடாது.
மேலும், இவர்கள் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்குச் செல்லவில்லை அல்லது வெளிநாடு செல்வதற்கான கடவுச்சீட்டு மற்றும் பிற ஆவணங்களை மோசடியாகத்
தயாரிக்கவில்லை என்பது குடிவரவுத் திணைக்களத்தினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை
இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.
அடுத்த 24 மணித்தியாலத்துக்கான, நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு
2022நவம்பர் 11ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.
நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் காணப்படுகின்ற குறைந்த அழுத்தப் பிரதேசம் பெரும்பாலும் வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக இலங்கையின் வடக்கு கரையை அண்மித்ததாக தமிழ்நாடு பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
எனவே திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
மழை நிலைமை:
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் வானிலை மற்றும் கடல் நிலை,தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது.ய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.
கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எச்சரிக்கை
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடல் நிலை:
திருகோணமலையிலிருந்து காங்கேசந்துறை மற்றும் மன்னார் ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.
நாட்டைச் சூழவுள்ளஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.
திருகோணமலையிலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறைவரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில்கரையோரத்தை அண்டிய பகுதிகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக் கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான
காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும்காணப்படும்.
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
நாடு முழுவதும் இன்று (11) 2 மணி நேரம் வரை மின் துண்டிப்பு இடம்பெறும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று பி.ப. 3.00 முதல் இரவு 9.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்களுக்கு மின் துண்டிப்பை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டை 20 வலயங்களாக (A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W) பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள்
ABCDEFGHIJKL | PQRSTUVW :
- பி.ப. 3.00 – பி.ப. 6.00 இடையில் 1 மணித்தியாலம்
- பி.ப. 6.00 – பி.ப. 9.00 இடையில் 1 மணித்தியாலம்
போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்
துண்டிப்புக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்வோருக்கு தடை
சுற்றுலா விசாவில் வெளிநாடு செல்வோருக்கு தடை
சுற்றுலா வீசா மூலம், வீட்டு வேலை மற்றும் திறன்சாரா துறைகளில் தொழிலுக்காக, பெண்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்தத் தீர்மானம் நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளது.
இதேவேளை, சுற்றுலா வீசா மூலம், தொழில்வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
இந்த ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி, அவர்கள் வெளிநாட்டு
தொழில்வாய்ப்புக்கு செல்ல முயற்சித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
அமெரிக்காவில் இலங்கையை சேர்ந்த முஸ்லீம் ஒருவர் வணிகத்தை மேற்கொண்டு வந்துள்ளார் .
இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
இவர் துருக்கி ,வளைகுடா இலங்கை மற்றும் சில நாடுகளில் வணிகம் நடத்தி வந்துள்ளார் .
இவருடன் துருக்கி நாட்டை சேர்ந்த முஸ்லீம் செல்வந்தர் ஒருவரும் இணைந்து செயல் பட்டுள்ளனர் .
இவர்கள் தாலிபான்களுக்கு நிதி சேகரிக்கும் செல்வந்தர்களாகவும் ,அவர்க்ளின் வணிகர்களாகவும் உலகம் முழுவதில் செயல்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது
இதனை அடுத்து அமெரிக்காவினால் இவருக்கு தடை விதிக்க பட்டுள்ளதுடன் ,இவரது சொத்துக்கள் முடக்க .பட்டுள்ளன
மேலும் இவரது தொடர்பில் இருந்து வந்த பல இலங்கை முஸ்லீம் செல்வந்தர்கள் ,நாடுகள் தழுவிய நிலையில் கண்காணிக்க பட்டு வருகின்றனர் .
இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்
இலங்கை காவல்துறைக்கு எதிராக 9000 முறைப்பாடுகள்
இலங்கை காவல்துறைக்கு எதிராக மக்களினால் 9000 முறைப் பாடுகள் வழங்க பட்டுள்ளன .
தவறான கைது ,லஞ்சம் ,மிரடடல் ,துன்புறுத்தல் மற்றும் துஸ்பிரயோகம் போன்ற குற்ற சாட்டுக்கள் முதண்மையாக முன் வைக்க பட்டுள்ளது .
காவல்துறை என்ற மமதையில் அதிகார துஸ்பிரயோகம் செய்துள்ளது நிரூபணமாகியுள்ளது .
ஒரு வருடத்தில் இலங்கை காவல்துறைக்கு எதிராக, பெருமளவு
முறைப்பாடுகள் பதிவாகியுள்ள சம்பவம் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர்களுக்கு தீர்வு பேச்சுக்கு அழைக்கும் ரணில் விக்கிரமசிங்கா
தமிழர்களுக்கு தீர்வு பேச்சுக்கு அழைக்கும் ரணில் விக்கிரமசிங்கா
இலங்கையில் தமிழர் தரப்பு பிரச்சனைக்கு தீர்வு காண்பது தொடர்பில் பேசிட தமிழர் காட்சிகளை அழைக்கிறார் ரணில் விக்கிரமசிங்கா .
தமிழர்களை அழித்திட முக்கிய காரணமாக விளங்கிய ரணில் ,தனது அரசியல் எதிர் காலத்தை கருதி இந்த பேச்சுக்கு அழைக்கிறார் .
தேர்தலில் வென்றிட தமிழர்கள் ஆதரவு தேவையாக உள்ள நிலையில் ,கண்துடைப்பு நாடகம் ஒன்றை ஆட ரணில் முனைகிறார் .
சிங்கள மக்களினால் வெறுக்க பட்டுள்ள ரணில் ,தமிழர்கள் வாக்கு வங்கிகள் ஊடக தேர்தலில் வெல்வதற்கு இந்த நரி தந்திர வேலையை ஆரம்பித்துள்ளார் .
பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்
பேரூந்துகள் நேரெதிர் மோதல் 10 பேர் காயம்
இரத்தனபுரி நோக்கி பயணித்த தனியார் பேரூந்து ஒன்று மறு பேரூந்துடன் நேரெதிர் மோதியது .
இந்த மோதலில் சிக்கி 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
பேரூந்துகள் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன .




































