Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து தனது ஆதரவு வழங்கி வரும் என இந்தியா வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
அயல் நாடான இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொழுது ,அதனை அவ்விதமே விட்டு வேடிக்கை பார்க்க முடியாது .
தமது ஆதரவை மேலும் வழங்கி வருவோம் என வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார் .
இவரது கூற்று சீனாவை சீண்டும் நோக்கம் கொண்டது என நோக்கர்கள் தெரிவிக்கின்றனர் .
மனைவியை வெட்டி கொன்று கணவர் தற்கொலை
மனைவியை வெட்டி கொன்று கணவர் தற்கொலை
இலங்கை வேகம பகுதியில் மனைவியை அரிவாளினால் வெட்டி கொன்ற கணவர் ,தானும் தற்கொலை புரிந்துள்ளார் .
மகனின் மரண வீட்டு நிகழ்விற்கு வெளிநாடு ஒன்றில் இருந்து வருகை தந்த தந்தையே தனது 46 வயதுடைய மனைவியை வெட்டி கொன்றுள்ளார் .
மனைவி மீதான தவறான நடவடிக்கை காரணமாக இந்த கொலை இடம்பெற்று இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
காவல்துறை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
வாளிக்குள் வீழ்ந்து சிசு மரணம் யாழில் நடந்த சோகம்
வாளிக்குள் வீழ்ந்து சிசு மரணம் யாழில் நடந்த சோகம்
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் குளியலறை வாளிக்குள் வீழ்ந்து ஒன்றரை வயது சிசு ஒன்று மரணமாகியுள்ளது .
பெற்றவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த பொழுது சிசுவை காணாது தேடியுள்ளனர் .அப்பொழுது தண்ணி வாளிக்குள் சிசு வீழ்ந்து கிடந்துள்ளது .
சிசுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிசு ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளது ,
மேற்படி சம்பவம் குறித்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
பாதுகாப்புத்தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களின் கைவேலைகளைப் பாராட்டி சான்றிதழ்
பாதுகாப்புத்தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களின் கைவேலைகளைப் பாராட்டி சான்றிதழ்
பாதுகாப்புத் தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களின் கைவேலைகளைப் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்கி வைப்பு!
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் கீழ் இயங்கி வருகின்ற திருகோணமலை பாதுகாப்பு தொழில் பயிற்சி நிலையத்தில், பாதுகாப்புத் தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற
சிறுவர்களுக்கு 4 மாதகால தையல் மற்றும் கைவேலை பயிற்சி நெறியை பூர்த்தி செய்த சிறுவர்களை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (06) குறித்த நிலையத்தில் இடம்பெற்றது.
பாதுகாப்புத்தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களின் கைவேலைகளைப் பாராட்டி சான்றிதழ்
கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் மாகாண ஆணையாளர் (திருமதி) றிஸ்வானி றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ,
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சமூக நலன்புரி சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கைவேலைப் பொருட்களின் கண்காட்சிக்கூடத்ததை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு திணைக்களத்தின் நிருவாக உத்தியோகத்தர் (திருமதி) என்.எஸ்.திரவியநாதன்,
நிலையத்தின் பொறுப்பதிகாரி (திருமதி) ஏ.சுதர்ஷனி, தையல் பயிற்சி ஆசிரியர் (திருமதி) துஷ்யந் சஞ்ஜா உள்ளிட்ட திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பாதுகாப்புத் தேவை கருதி பராமரிக்கப்பட்டு வருகின்ற சிறுவர்களுக்கு குறித்த நிலையத்தில்
இப்பயிற்சி தொடராக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பித்தக்கது.
அபு அலா –
குச்சவெளி பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது
குச்சவெளி பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறியது
குச்சவெளி பிரதேச சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாசிப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
தவிசாளர் ஏ.முபாறக் தலைமையில் கடந்த (05) காலை 10 மணியளவில் சபை ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட வாசிப்புக்கு ஆதரவாக 15 வாக்குகளும், எதிராக 01 வாக்கும் அளிக்கப்பட்டு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேறியது.
வரவுசெலவுத்திட்டப் பாதீட்டின் பின்னர் தவிசாளரின் விசேட உரையின்போது, நடப்பாண்டில் முன்மொழியப்பட்ட முடிவுறுத்தப்படாத அனைத்து வேலைத்திட்டங்களையும் விரைவாக இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர்
முடிவுருத்தப்பட வேண்டும். அதற்குத் தேவையான அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு அனைத்து உறுப்பினர்களையும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் பிரதேச மக்களின் பாதுகாப்பு மற்றும் பிரதேச காணி அபகரிப்பு உட்பட மக்களின் வாழ்வாதாரம், விவசாயம், மீன்பிடி, சுயதொழில் மேம்பாடுகள், அடிப்படை தேவைகள் மீது சபை மிகுந்த கரிசனையுடன் தொடர்ந்தும் செயற்பட்டு வரும் என்றும் அவர் தெரிவித்தார்.
சதிகார சக்திகளின் முகங்கள் ஓடி ஒழியும் வரை பிரதேச மக்களின் நலனுக்காகவும், அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுக்கும் மக்கள் தொண்டனாக நான் என்றும் செயற்படுவேன் என்றும் குறிப்பிட்டார்.
விசேடமாக, 2023 ஆம் ஆண்டின் வரவுசெலவுத்திட்ட வாசிப்புக்கு
ஆதரவாக வாக்களித்த உதவி தவிசாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும்,
எனது வெற்றிக்கு வித்திட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம்,
கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய எம்.எஸ்.தௌபீக் ஆகியோர்களுக்கு நன்றிளைத் தெரிவித்தார்.
அபு அலா –
13 ஆவது திருத்தத்தினை திருத்தி தீர்வை தாங்க – டக்கிளஸ் கூவல்
13 ஆவது திருத்தத்தினை திருத்தி தீர்வை தாங்க – டக்கிளஸ் கூவல்
அதிகாரப் பகிர்வினை மேற்கொள்ளுமாறு இனவாதிகளும் சொல்வதற்குரிய சூழலை ஏற்படுத்த வேண்டுமே தவிர, இனவாத சக்திகளுக்கு மெல்வதற்கு அவலை கொடுக்க கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06.12.2022) இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சு தொடர்பான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த விவாதத்தில், கடற்றொழில் அமைச்சின் செயற்பாடுகள், கடந்த கால அடைவுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
“கௌரவ ஜனாதிபதி அவர்கள், தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு விடுத்திருக்கின்ற அழைப்பினை ஏற்று அதனை எமது மக்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு தமிழ் அரசியல் தரப்பினர் முன்வர வேண்டும்.
எம்மைப் பொறுத்தவரையில், தற்போது இந்த நாட்டின் அரசியல் யாப்பில் நடைமுறையில இருக்கின்ற எமது அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தத்தினை பலப்படுத்தி அதனை முன்னெடுப்பதையே எமது மக்களின் அரசியல் ரீதியான பிரச்சினைக்கு ஓர் ஆரம்பத் தீர்வாகக் கருதுகிறோம்.
13 ஆவது திருத்தத்தினை திருத்தி தீர்வை தாங்க – டக்கிளஸ் கூவல்
இல்லாததைப் பற்றிக் கதைத்து இருப்பதையும் கைவிட்டு விடக்கூடாது என்பதை நாம் வலியுறுத்துகிறோம்.
தமிழ் மக்களது பிரச்சினை தொடர்பில், கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக இப்போதே சில நாடகங்கள் அரசியல் அரங்கில் மேடையேற்றப்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை ,பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமைச்சர் ,கடற்றொழில் அமைச்சரென்ற வகையில் மீனவர்களின் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கான முழு அதிகாரத்தையும் ஜனாதிபதி
எனக்கு வழங்கியுள்ளார்.இலங்கை- – இந்திய மீனவர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இருதரப்பு இராஜதந்திர பேச்சு வார்த்தைகளை நாம் கைவிடவில்லை
கைப்பற்றப்பட்ட பழுதடைந்த இந்திய இழுவை மடி வலைப் படகுகளை பல்வேறு அழுத்தங்கள் எதிர்ப்புகள் மத்தியிலும் நாம் ஏலம் விட்டிருந்தோம். அந்நிதியை, மேற்படி இந்திய இழுவை மடி வலைப் படகுகள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள எமது
கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடாக வழங்குவதற்கு தீர்மாளித்துள்ளோம்.
அரசுடைமையாக்கப்படுகின்ற இந்திய இழுவை மடி வலைப் படகுகளைத் திருத்தியமைத்து
பயன்பாட்டில் ஈடுபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது அரசு
அரிசி இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது அரசு
பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது . நாளான நேற்றைய (06) தினம் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பிக்கப்பட்டது. எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்பட மாட்டாது.
சோள உற்பத்தியாளர்களுக்கும் உரம் வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு 20 ஆயிரம் ரூபா பெறுமதியான சேதனப் பசளையும் விநியோகிக்கப்படுகிறது. ஒரு ஹெக்டெயரை விட குறைந்த நிலங்களுக்கான உர விநியோகம் இலவசமாகும்.
அறுவடைக் காலப்பகுதியில் எரிபொருள் இலவசமாக வழங்கப்படவிருக்கிறது. நெல்லின் விலை தொடர்பில் சிக்கல்கள் காணப்படுவதாகவும் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன்
எங்கள் மாவட்டத்தில் இந்தாண்டு பெரும்போக பயிர்ச்செய்கை வழமைபோல நடக்கவில்லை. சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு, காய்கறி எதுவும் இம்முறை வழமைபோல பயிரிடப்படவில்லை. யாழ்ப்பாணத்தின் விவசாய நிலங்கள் புற்களும் புதர்களுமாக நிரம்பிக்கிடக்கிறது.
யாழ். மாவட்ட கமக்கார அமைப்புகளின் அதிகார சபை எனக்கு வழங்கியுள்ள கோரிக்கை கடிதத்தை நான் சபையில் சமர்ப்பிக்கிறேன்.
தற்போது மீனவர்களுக்கு மண்ணெண்ணை விநியோகம் இடம்பெற்றாலும், விவசாயிகளுக்கான விநியோகம் போதாது. இந்த வருட தொடக்கத்தில் 87 ரூபாய் விற்ற மண்ணெண்ணைகூட இப்போது பெற்றோலின் விலைக்கு கிட்ட வந்துவிட்டது. அதுவும் விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே அதற்கான மானிய பொறிமுறையை விரைவாக உருவாக்க வேண்டும்.
ஏனென்றால் யாழ்ப்பாணத்தில் கிணறுகளில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் இறைக்க வேண்டிய நிலமைதான் உள்ளது. ஒரே நாளில் டீசல் அல்லது சோலர் அல்லது மின்சார பம்ப் இயந்திரங்களாக மாற்றக்கூடிய வல்லமை எங்களிடம் இல்லை. இதை நாங்கள் பல தடவைகள் எடுத்துக்கூறியும் ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்?
மேட்டுநில மரக்கறி விவசாயிகளுக்கு நியாய விலையில் உரம் வழங்க வேண்டும்.
கிருமிநாசினி, பங்கஸ்நாசினி, களைநாசினிகளின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும்
- விவசாயிகளுக்கு நியாய விலையில் அவற்றை வழங்க வேண்டும்
எப்போதும் விவசாயத்தை வாழ்க்கையாக கொண்டிருந்த எங்கள் மக்கள் இப்போது விவசாயமே போதும் என்ற விரக்தி நிலைக்கு வந்திருக்கிறார்கள். இந்த சபைக்கே தெரியும், எங்கள் மாவட்டத்தின் விவசாய புரட்சியினுடைய வரலாறு. தன்னிறைவு பொருளாதாரத்தை விவசாயத்தால் கட்டியெழுப்பியவர்கள் எங்கள் மக்கள். அவர்கள் இப்போதும் விவசாயத்தை கட்டியெழுப்ப தயாராக உள்ளார்கள். அவர்களுக்கு அரசாங்கம் ஆதரவாக இருக்குமா என்பதே இங்கு கேள்வி.
அரசாங்கத்தின் தவறான செயற்பாடுகளினால், நாட்டின் நெல் உற்பத்தி 45 சதவீதம் வரை குறைவடைந்துள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
உணவு பாதுகாப்பும் குறைந்த மட்டத்தில் காணப்படுகிறது. உரம், கிருமிநாசினிகள் என்பனவற்றின் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளார்கள். சோளச் செய்கையும் அழிவுக்குள்ளாகியிருக்கிறது. முட்டை உற்பத்தி குறைவடைந்துள்ளமையினால், மந்த போஷணையும் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.
கஞ்சா செய்கையை சட்டபூர்வமாக்க அரசாங்கம் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி கூறினார். ஆயுர்வேத சட்டத்திற்கு அமைய, மூலிகை என்ற அடிப்படையில் மாத்திரம் கஞ்சா பயிரிடப்படவிருப்பதாக அவர் கூறினார்.
மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காவிட்டால் அடுத்த வருடம் மின்வெட்டு நீடிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்
நாளொன்றுக்கு 6 – 8 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு நீடிக்கப்படலாம் .கடந்த கால நட்டங்களை ஈட்டிக் கொள்ளும் வகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கத் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையை மறுசீரமைக்கும் வேலைத்திட்டத்தின் மூலம் கூடுதலான வினைத்திறனை எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
பாராளுமன்ற உறுப்பினர்வேலுசாமி இராதாகிருஷ்ணன் :
மலையக மக்களுக்கு வீடுகள் இல்லை. வீடுகளை நிர்மாணிப்பதற்காக காணிகளும் இல்லை. தோட்ட மக்களின் காணிகளை தோட்ட கம்பெனிகள் அபகரிக்கும் நிலையே தற்போது உருவாகியுள்ளது. இத்தகைய அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
2021 மே 06 ஆம் திகதி இரசாயன உரத்திற்கு தடை செய்து வெளியிடப்பட்ட அமைச்சரவைப்பத்திரத்தால்இ நாட்டுக்கு பெரும்பாதிப்பு ஏற்பட்டது.நீண்ட காலமாக நாட்டில் தொடரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கிறார்.
இது வரவேற்கக் கூடிய விடயம். எனினும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும்.
பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுடனேயே மலையக மக்கள் வாழ்கின்றனர். தற்போது அவர்களுக்கு விவசாயம் செய்வதற்கான வசதிகளும் இல்லை.
நெல் மற்றும் ஏனைய பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் உரம் மற்றும் கிருமி நாசினிகள் மலையகத்தில் உற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
இதனால் பெரும்பாலான மக்கள் தற்போது விவசாய நடவடிக்கைகளை கைவிடும் நிலை உருவாகியுள்ளது.
ஒருவர் குழாய்களால் அடித்து கொலை
ஒருவர் குழாய்களால் அடித்து கொலை
இலங்கை மாளிகாவத்தை பகுதியில் நபர் ஒருவர் இரும்பு குழாய்கள் மூலம் அடித்து கொலை செய்ய பட்டுள்ளார் .
கொலையானவர் சடலம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
இந்த கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.
டொலர்களில் வீடுகளை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள
டொலர்களில் வீடுகளை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள
நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு டொலர்களுக்கு விற்பனை செய்யும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் 6 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
டுபாய், அமெரிக்கா, கனடா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இந்த வீடுகளை வாங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இந்தக் கொள்வனவுக்காக கடந்த இரண்டு மாதங்களில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் வெளிநாட்டு நாணயக் கணக்கில் 276,650 அமெரிக்க டொலர்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
மேலும், குறிப்பிட்ட டொலர் தொகையை ஒரே நேரத்தில் செலுத்தினால் 10 சதவீதம் விலைக்கழிவும் பெறுவார்கள்.
பன்னிபிட்டிய, வீரமாவத்தையில் அமைந்துள்ள வியத்புர வீடமைப்புத் தொகுதியிலிருந்து இந்த வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இன்னும் பத்து வீடுகளை வாங்க வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, டொலர்களுக்கு வீடுகளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வருட இறுதிக்குள் சுமார் 352,800 அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்படும் எனவும் அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டார்.
டொலர்களில் வீடுகளை பெற்றுக்கொள்ள தொடர்புகொள்ள
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, கடந்த செப்டெம்பர் மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்பட்ட நடுத்தர வருமான வீடுகளை வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்கள் மூலம் கொள்வனவு செய்வதற்கு முடியுமானளவு ஏற்பாடுகளைச் செய்தார்.
இதன்படி டொலர்களுக்கு வீடுகளை கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்ட முதலாவது வீடு கடந்த செப்டெம்பர் மாதம் டுபாயில் வசிக்கும் இலங்கை ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடு வியத்புர வீடமைப்புத் தொகுதியில் அமைந்துள்ளது.
டொலருக்கு வீடுகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் அடுத்த வருடம் 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டுவதற்கு ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.uda.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் மேலதிக தகவல்கள் மற்றும் தேவையான விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் 077-7794016 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமும் மேலதிக தகவல்களை
பெற்றுக்கொள்ள முடியும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேடுகள்
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேடுகள்
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார தலைமையில் நேற்று (06) கூடியபோது ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் பிரச்சினைகள் பல அடையாளம் காணப்பட்டன.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை தொடர்பில் கணக்காய்வாளர் நாயகத்தினால் 5 வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்காய்வு மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த கணக்காய்வு அறிக்கையை
அடிப்படையாகக் கொண்டு கோப் குழு கூடியது. இதில் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விடயங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
குறிப்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலைச் சட்டம், அதன் நோக்கம், பணி, நோக்கம், இதனை அடைவதற்கான செயற்பட்ட விதம் குறித்து கலந்துரையாடப்பட்டது, மேலும், இந்தச் சட்டத்தின் பிரகாரம் நிர்வாக சபைக்கு
உறுப்பினர்களை நியமிக்கும்போது வைத்தியசாலை பணியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் நியமனங்கள் மேற்கொள்வது ஆர்வத்திற்கு முரண்பாடானதாக இருந்தால் அது குறித்தும் கவனத்தில் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட நிர்வாகக் குறைபாடுகள் குறித்தும் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது. நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டம் சரியான முறையில் இன்மையால் திட்டமிடுதலில் கடுமையான பலவீனம் உள்ளது என்பதும் இங்கு புலப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலையின் நிர்வாக சீர்கேடுகள்
இதன்படி, இந்த நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையின்படி, 2030ஆம் ஆண்டுக்குள் தெற்காசியாவிலேயே சிறந்த மருத்துவமனையாக மாறுவதற்கான இலக்கை எட்டுவதற்கு 2 மாதங்களுக்குள் பொருத்தமான மூலோபாயத் திட்டங்களைச் சமர்ப்பிக்கவும் இங்கு முன்மொழியப்பட்டது.
நிதி முகாமைத்துவம், மனித வள முகாமைத்துவம், கொள்வனவு முகாமைத்துவம், விற்பனை மற்றும் வர்த்தக அபிவிருத்தித் திட்டங்கள், கணக்காய்வாளர் நாயகத்தினால் சுட்டிக்காட்டப்பட்ட நிர்வாகச் சிக்கல்களை
எவ்வாறு கையாள்வது போன்ற விடயங்கள் இத்திட்டத்தில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்படும் திட்டத்தை கோப் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை வளாகத்திற்கு சொந்தமான காணியின் பரப்பளவு அடையாளம் காணப்பட வேண்டும் எனவும், அங்கீகாரமற்ற ஆக்கிரமிப்புகள் இருப்பின் அவற்றை அகற்ற சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் கோப் குழு பரிந்துரைத்துள்ளது.
கணக்காய்வாளர் நாயகத்தின் கணக்காய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, பல்வேறு ஆலோசனைச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்குப் பணம் செலுத்தப்பட்டுள்ளபோதும் சேவை
பூரணப்படுத்தப்படாத கொடுக்கல் வாங்கல்களுக்கான பணத்தை மீண்டும் அறவிட நடவடிக்கை எடுக்குமாறும் கோப் குழு பரிந்துரைத்தது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் பெருமளவிலான நிர்வாகப் பிரச்சினைகள் காணப்படுவதாக கோப் குழு கண்டறிந்துள்ளது. அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும் இங்கு ஆலோசிக்கப்பட்டதுடன், அதனைக் கையாள்வதற்கு
கோப் குழுவின் உப குழுவொன்றை நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இந்த உபகுழு மருத்துவமனைக்குச் சென்று கண்காணிப்புக்களை மேற்கொள்வதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் அனைத்து முக்கிய அம்சங்களையும் உள்ளடக்கியதாக விசேட கணக்காய்வு அறிக்கையை தயாரிக்குமாறு கோப் குழு, கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்தது.
பணிப்பாளர் குழுவில் மருத்துவமனையின் அனைத்து ஊழியர்களும் இருக்க வேண்டும் என்றும், அதன் செயல்திறனை மேம்படுத்த பல துணைக் குழுக்களை நியமித்து அவை ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் கோப் குழு சுட்டிக்காட்டியது.
2015 ஆம் ஆண்டில் நில அளவையாளர் நாயகத்தினால் வைத்தியசாலையின் நிலப்பரப்பு நில அளைவை செய்யப்பட்டிருந்தபோதும், மீண்டும் தனியார் நில அளவையாளரினால் வைத்தியசாலையின் மருத்துவமனை மீண்டும் அளவை செய்யப்பட்டுள்ளது.
ஏன் இவ்வாறு மீண்டும் நில அளவை மேற்கொள்ளப்பட்டது என்றும், இதனுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் பெயர் விபரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை கோப் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் சட்ட அதிகாரிக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
நரம்பியல் சத்திரசிகிச்சை பிரிவுக்காக 4.2 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்ட சத்திரசிகிச்சைப் பொருட்களில் 80% காலாவதியான விடயத்தில், பொறுப்பான அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் கோப் குழு கேட்டறிந்தது.
சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அறிக்கை சில நாட்களுக்கு முன்னர் வைத்தியசாலைக்கு கிடைத்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி 2 வாரங்களுக்குள் குழுவுக்கு அறிக்கையிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு கோப் குழு பரிந்துரைத்தது.
2019 ஆம் ஆண்டில் ஒரு மென்பொருளுக்கு 1.8 மில்லியன் ரூபாவும், ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்வதற்கு 19.7 மில்லியன் ரூபாவும் செலவிடப்பட்டமை குறித்து கணக்காய்வாளர் நாயகத்தின்
கணக்காய்வு தொடர்பில் விசாரணை நடத்தி இரண்டு வாரங்களுக்கு கோப் குழுவிடம் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, வைத்தியசாலையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை உள்ளிட்ட நிர்வாகத்துக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கு மூன்று மாதங்களில் மீண்டும் அழைப்பதற்கும் கோப் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான கௌரவ இந்திக்க அனுருத்த ஹேரத், கௌரவ சாந்த பண்டார, பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ அனுர திஸாநாயக்க, கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க, கௌரவ இரான்
விக்கிரமரத்ன, கௌரவ நிமல் லான்சா, கௌரவ எஸ். எம்.எம்.முஷாரப், கெளரவ ஜகத் குமார சுமித்ராராச்சி, கௌரவ (மேஜர்) சுதர்சன் தெனிபிட்டிய, கௌரவ உபுல் மகேந்திர ராஜபக்ஷ, கௌரவ சட்டத்தரணி மதுர விதானகே ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
அத்துடன், கணக்காய்வாளர் நாயகம், சுகாதார அமைச்சின் செயலாளர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், ஜயவர்தனபுர வைத்தியசாலையின் தலைவர் மற்றும் பணிப்பாளர்
மற்றும் ஏனைய நிர்வாக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் வழங்கவேண்டும் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்
பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் வழங்கவேண்டும் – கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர்
பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் வழங்க வேண்டும்.
மாணவர்களுக்கு பாடசாலைக் கல்வியுடன், ஒழுக்கக் கல்வியையும் சேர்த்து வழங்குகின்றபோதுதான் அவர்களின் எதிர்காலம் சிறந்ததாக அமையும் என்று கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எ.மன்சூர் தெரிவித்தார்.
இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் அனுசரனை மற்றும் ஏற்பாட்டின் கீழ் திருகோணமலை அம்பாள் பாடசாலையில் கல்விகற்கும் தரம் 5 – 11 வரையாயான மாணவர்களில் தெரிவு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு
கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு காப்போம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.ருக்ஸாலி ரொனிக்கா தலைமையில் (06) குறித்த பாடசாலையின் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) எ.மன்சூர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வியில் கிடைக்கப்பெறும் நன்மைகள், நல்ல மனிதர்களை உருவாக்குவது மட்டுமல்லாமல் அவர்களை நல்ல முறையில் செயலாற்றவும் உதவுகின்றது. மாணவர்கள் மனதில்
சிறப்பான விழுமியக் கல்வியைப் போதிக்கின்றபோது, அம்மாணவர்கள் அறிவுத்திறனான மனப்பாங்கை வளர்த்துக்கொண்டு சிறந்த ஆளுமையையும்
பெறுகின்றார்கள். அதுமாத்திரமன்றி நிறைந்த விழுமியக் கல்வியையும் பெற்று அதன் மூலம் இவ்வுலகை ஆளுகின்றவர்களாகவும் திகழ்வார்கள்.
ஒரு மாணவனுக்கு எந்தளவிற்கு அனுபவக் கல்வி அவசியமோ, அதேயளவிற்கு விழுமியக் கல்வி அவசியம் என்பதனை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து கொள்ளவேண்டும்.
மாணவர்களிடையே விழுமியத்தை ஏற்படுத்துவது தொடர்பாக ஆசிரியர்கள் விசேட கவனம் செலுத்துதல் வேண்டும். அப்போதுதான் மாணவர்களிடையே சிறந்த விழுமியக் கல்வியை போதிக்க முடியும்.
பாடசாலையில் நல்ல மாணவர்களை உருவாக்காவிட்டால், நாட்டில் நல்ல பிரஜைகள் இல்லமால் போய்விடும். அதனால் கலாச்சார சீரழிவு, சமூக
ஒற்றுமை, சமூக நீதி என்பன இல்லாதுபோவதுடன், எதிர்கால சவாலுக்கு முகம் கொடுக்ககூடிய ஒரு சமூகத்தை உருவாக்க முடியாது போய்விடும்.
இன்றைய நவீன உலகிற்கு ஏற்ற வகையில் சிறந்த விழுமியத்துடன் கூடிய நற்பிரஜைகளை உருவாக்க வேண்டியது ஒவ்வொறு பெற்றோர், ஆசிரியர்
சமூகம் போன்ற அனைவரது கடைமையாகும். அதற்கான பல உதவிகளை காப்போம் தொண்டு நிறுவனம் செய்து வருகின்றது.
குறிப்பாக, வறிய மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை மேம்படுத்தவும், அவர்களுக்கு தேவையான பாடசாலை உபகரணங்கள் உள்ளிட்ட பல உதவிகளை வழங்கி வருகின்ற இந்நிறுவனம், இன்னுமின்னும் பல உதவிகளை
வழங்கவும் தயாராக இருக்கின்றது. அந்நிறுவனத்தின் உதவிகளையும், வளங்களையும் பயன்படுத்தி மாணவச் செல்வங்களின் கல்வியுடன் ஒழுக்கக் கல்வியையும் மேம்படுத்த ஆசிரியர் சமூகம் முன்வரவேண்டும் என்றார்.
மாதுமை அம்பாள் வித்தியாலயத்தின் ஆசிரியர் திருமதி எஸ்.ஆர். ரோஸ்மேரி இலங்கை காப்போம் தொண்டு நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப்
பணிப்பாளர் கு.பிரதீப்கரனிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைவாக அப்பாடசாலையில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கு இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், குறித்த பாடசாலையின் அதிபர் என்.இலங்கேஸ்வரன் உள்ளிட்ட
பாடசாலையின் ஆசிரியர்கள், காப்போம் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர்,
செயலாளர், பொருளாளர் மற்றும் நிறுவாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
அபு அலா –
இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு
இந்தியா மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு
இலங்கை கடல் பரப்புக்குள் அத்து மீறி மீன்பிடியில் இந்திய மீனவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்த, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அனுமதி வழங்கியுள்ளார் .
இவ்வாறு மீன்பிடி துறை அமைச்சர் டக்கிளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் .
கொலை வழக்கில் இந்தியா அரசால் தேட படும் டக்கிளஸ் இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்பட மாட்டாது
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது
புகையிரத திணைக்களம் ஒருபோதும் தனியார் மயப்படுத்தப்படமாட்டாது என்று போக்குவரத்து மற்றும் நெடுங்சாலைகள்இ வெகுஜன ஊடக அமைச்சர் மற்றும் அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
புகையிரத சேவையை நட்டம் ஏற்படாதவகையில் எவ்வாறு முன்னெடுப்பது தொடர்பில் புகையிரத ஊழியர்களுடன் கலந்துரையாடப்படுகிறது. அத்துடன், திணைக்களம் என்ற ரீதியில் தீர்மானங்களை மேற்கொள்வதில் உள்ள சிரமங்களினால் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளன.
எனவே புகையிரத அதிகாரசபை சபை உருவாக்கப்பட்டு புகையிரத சேவை மீண்டும் சீர் செய்யப்படும்.
இதனூடாக நிருவாகமும் சீர் செய்யப்படும். தற்போது இதற்கான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த காலங்களில் புகையிரத திணைக்களத்திற்கு வருடாந்தம் 10 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.
கடந்த வருடத்தில் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக, எரிபொருளுக்கான செலவை ஈடுசெய்வதில் சிரமம் ஏற்பட்டது.
இதனால், புகையிரத திணைக்களத்திற்கு மாதாந்தம் 300 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.
புகையிரத திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், அண்மையில் புகையிரத கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதனால், தற்போது மாதாந்தம் சுமார் ஒரு பில்லியன் வருமானம் கிடைக்கின்றது.
ஆனால் இந்த வருமானம் புகையிரதங்களுக்கான எரிபொருளுக்கே பயன்படுத்தப்படுகின்றது.
எனவே, உயர் முகாமைத்துவ நுட்பங்களை பின்பற்றி எதிர்காலத்தில் இந்த வருமானத்தை மேலும் அதிகரிப்பதற்கு
நடவடிக்கை எடுப்போம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவத்தார்.
மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள்- சாணக்கியன்
மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள்- சாணக்கியன்
மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பு மத்திய வீதியில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை இனம் தெரியாத விசமிகளால் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அங்கு பொறுத்தப்பட்டிருந்த சோளார் மின்விளக்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
குறித்த மக்கள் சந்திப்பு காரியாலயத்தில் கடந்த 2 வருடங்களாக மக்கள் சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் இது குறித்து கருத்து வெளியிடும் போதே இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்கள் தற்போது ஓரளவிற்கேனும் நிம்மதியாக வாழ்ந்து வருகின்ற நிலையில், மட்டக்களப்பில் மீண்டும் ஒட்டுக்குழுக்களின் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஊழல் மோசடிகளுக்கு எதிராக தான் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வரும் வகையில், தன்னை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த செயற்பாடு அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மீண்டும் மட்டக்களப்பில் ஒட்டுக்குழுக்கள் தங்களது ஆராஜக செயற்பாடுகளை
ஆரம்பித்துள்ளனரா எனவும் இரா. சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
பேரூந்து கட்டணம் குறையாது அதிரடி அறிவிப்பு
பேரூந்து கட்டணம் குறையாது அதிரடி அறிவிப்பு
இலங்கையில் எரிபொருள் விலை குறைக்க பட்டாலும் பேருந்துகளின் விலைகள் குறைக்க பட மாட்டாது என பேரூந்து சங்கம் அறிவித்துள்ளது .
நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரித்து செல்லும் நிலையில் ,அதன் விலை வாசிகள் குறைக்க படும் நாள் வருமா என மக்கள் ஏங்கி தவித்து வரும் நிலையில் ,இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிட தக்கது .
சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
சிறுநீரக கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
இலங்கையின் முக்கிய பகுதிகளில் வசிக்கும் வறுமையியல் வாடும் குடும்பங்களுக்கு ஆசை வார்த்தை காண்பித்து ,சிறுநீரகத்தை பெற்று ,கள்ள சந்தையில் விற்று வந்த முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
150 லட்சம் அவரைக்கு ஒரு சிறுநீரகம் விற்பனை செய்யப்பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவமனைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மேற்படி விடயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கிழக்கு மாகாணத்தில் மழை மக்கள் அவதி
கிழக்கு மாகாணத்தில் மழை மக்கள் அவதி
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் வட அந்தமான் தீவுகளுக்கு அண்மையாக ஒரு கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை விருத்தியடைந்துள்ளது.
அது ஒருகுறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இத் தொகுதி மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்குப் பகுதியை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இத் தொகுதியின் தாக்கம் காரணமாக வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளையும் , நாளை மறுதினம் (08 ஆம் திகதி) மழை நிலைமையும் காற்றும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கிழக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில
இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பம்
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நாளை ஆரம்பம்
நாளை இடம்பெறும்உத்துவப் முழுநோன்மதி தினத்திற்கு அமைவாக பௌத்த சம்பிரதாயங்களுக்கு அமைவான யாத்திரை சம்பிரதாய நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கமைவாக பெல்மடுல, கல்பொத்தாவல, சிறிபாத ரஜமஹா விகாரையில் வைக்கப்பட்டுள்ள புனிதப்பொருள், சமன்தேவ உருவச்சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் நான்கு பாதைகள் ஊடாக சிவனொளிபாத மலைக்கு இன்று எடுத்துச் செல்லப்படும்.
குருவிற்ற எரந்த பாதை, இரத்தினபுரி பலாபத்தல பாதை, பலாங்கொட பாதை, ஹட்டன் நல்லதண்ணி பாதை ஆகிய வழிகள் ஊடாக இவை எடுத்துச் செல்லப்படும்.
இன்று மாலை சிவனொளிபாத மலை வரை எடுத்துச் செல்லப்படும் இந்த புனித பொருட்கள் நாளை
அதிகாலை சிவனொளிபாத மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்படும்.
உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு
உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு
இம்முறை பெரும் போகத்திற்குத் தேவையான மொத்த உரத்தொகையும் (MOP – Muriate of Potash) கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்டுள்ள உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
பசளையை ஏற்றி வந்த இரண்டு கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன. இதற்கு முன்னர் நாட்டை வந்தடைந்த கப்பலிலிருந்து பசளையை தரையிறக்கும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது.
உரத்தை விரைவில் விவசாயிகளுக்கு வழங்குவதாக விவசாய அமைச்சு அறிவிப்பு
அமெரிக்கா, இலங்கைக்கு ஒன்பதாயிரத்து 300 மெற்றிக் தொன் பசளையை வழங்கியுள்ளது.
சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரகம் வழங்கியுள்ள இந்தப் பசளை அந்த நிறுவனம் நாட்டுக்கு வழங்கும் உதவியின் முதல் தொகுதியாகும்.
அமைச்சர் மஹிந்த அமரவீர இந்தப் பசளையை நேற்று (05)கொழும்பு துறைமுகத்தில் பொறுப்பேற்றார்.
அங்கு கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், இலங்கையின் விவசாயிகளுக்கு உதவ தமது நாடு விருப்புத்துடன் இருப்பதாக குறிப்பிட்டார்.
உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் நாட்டுக்கு கிடைத்துள்ள யூரியா
பசளையின் அளவு 85 ஆயிரம் மெற்றிக் தொன்களாகும்.
கிளிநொச்சியில் பேருந்து விபத்து: 23 பேர் காயம்
கிளிநொச்சியில் பேருந்து விபத்து: 23 பேர் காயம்
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற அதி சொகுசு பேருந்து ஒன்று கிளிநொச்சி பகுதியில் இன்று (5) அதிகாலை விபத்துக்குள்ளானதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
வீதியில் இருந்த மாடுகளுடன் குறித்த பேருந்து மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.




























