Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அம்பலாங்கொடை, குளீகொட, மீட்டியகொட வீதியில் கொன்னதுவ பிரதேசத்தில் இன்று (28) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பாகம, உஸ்முதுல்லாவ பகுதியைச் சேர்ந்த 42 வயதான சுதத் சிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் தனது மனைவியை அவர் பணிபுரியும் அலுவலகத்தில் இறக்கிவிட்டு வீடு திரும்பும் போதே துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்தோ, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வந்த வாகனம் குறித்தோ இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |நெல்லியடிப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் வீழ்ந்து வயோதிபர் ஒருவர் நேற்றைய தினம் (27) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த வேலுப்பிள்ளை பொன்னையாபிள்ளை (வயது- 65) என்பவராவார்.
மேற்படி நபர் பாதுகாப்பற்ற வயல் கிணற்றில் சடலமாக காணப்பட்டமை தொடர்பில் நெல்லியடி பொலிசருக்கு தெரிவிக்கப்பட்டது.
தோட்டக் கிணற்றில் வீழ்ந்து ஒருவர் பலி | இலங்கை செய்திகள்
சம்பவ இடத்திற்கு இன்று (27) மாலை சென்ற கரவெட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணை மேற்கொண்டு சடலத்தை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை அறிக்கை சமர்ப்பிக்குமாறு நெல்லியடி பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
மேலும் அப்பகுதியில் பாதுகாப்பற்ற கிணறுகள் காணப்படுவதாகவும் அவற்றை காணி உரிமையாளர்கள்
பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பானதாக செய்ய வேண்டும் எனவும் மரண விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
அழுது புலம்பிய முன்னாள் போராளிகளின் தாய் | பசியில் துடிக்கும் இரு பிள்ளைகள் | Jt View|இலங்கை செய்திகள்
அழுது புலம்பிய முன்னாள் போராளிகளின் தாய் | பசியில் துடிக்கும் இரு பிள்ளைகள் | Jt View|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | இலங்கை கிளிநொச்சி பகுதியில் பசியால் வாடிய போராளிகள் குடும்பம் .
இதை கண்ணுற்ற யூடியூப் பிரபலங்கள் இந்த குடும்பத்திற்கு செய்த உதவிகள் .
இவர்களை செல்வந்தராக்கும் விடா முயற்சியில் செலாற்றி வருகின்றனர் .
அந்த காணொளியை நீங்களும் பாருங்கள்ள.இவர்களை போல உங்களுக்கும் இவர்கள் உதவிட காத்துள்ளனர் .
Whatsapp number – 009476 160 5288
போராளி குடும்பத்திற்கு தீபா செய்த அதிரடி வேலை | Jt View | Jt View| Jt View |CLICK HERE FULL VIDEO
கண்ணீர் மட்டும் வரேல்ல | இனிமேல் நான் சுயதொழில் செய்வேன் | Jt View| Jt View |CLICK HERE FULL VIDEO
குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
இலங்கை பெண்| பெண் ஒருவர் தனது கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 2 குழந்தைகளை பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு ஆற்றில் குதித்ததாக அளுத்கம தெரிவித்துள்ளார்.
பலாங்கொடை பிரதேசத்தில் வசிக்கும் பெண் எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்தி பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்துள்ள நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று பிற்பகல், 9 வயது மகனையும், 1 வயது மற்றும் 6 மாதங்களேயான பெண் குழந்தையையும் அழைத்துச் சென்று பெந்தர பாலத்தில் விட்டுவிட்டு, குறித்த பெண் சுமார் 40 அடி உயரத்தில் இருந்து நீரில் குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தைகளை விட்டுவிட்டு பாலத்திலிருந்து குதித்த பெண்| இலங்கை பெண்
நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்த பெண்ணை அருகில் நின்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றியதாக கூறப்படுகிறது.
குறித்த பெண் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இரண்டு குழந்தைகளையும் அளுத்கம பொலிசார் அழைத்து வந்துள்ளதுடன்
அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் பானங்களையும் பொலிஸார் வழங்கியுள்ளனர்.
10 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாகியின் கணவர் கைது| இலங்கை செய்திகள்
10 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்: நிர்வாகியின் கணவர் கைது| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | ரக்வானை சிறுவர் இல்லத்திலுள்ள யுவதிகள் மற்றும் சிறுவர்களை அவ்வப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகியின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 25 ஆம் திகதி ரக்வானை பொலிஸாரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக கூறப்படும் யுவதிகள், மற்றும் சிறுவர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
சிறுவர் இல்லத்திலுள்ள சிறுவர்கள், சிறுமிகள் வயது பூர்த்தியடைந்தவுட நிர்வாகியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று பாடசாலைக்கு அனுப்பப்படுபவர்களே இவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்தின் நிர்வாகி வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்திலேயே
அவரது கணவரால் இவ்வாறு பாலியல் துன்புறுத்தல்கள் இடம்பெற்றுள்ளன.
உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்
உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள சின்ன ஊறணி பேச்சியமன் ஆலய உண்டியலை உடைத்து திருட முற்பட்ட இளைஞன் ஒருவரை பொதுமக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் சனிக்கிழமை (25) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சனிக்கிழமை இரவு 11 மணியளவில் சின்ன ஊறணி பேச்சியமன் கோயிலில் சத்தம் கேட்ட நிலையில், அருகில் இருந்தவர்கள் உடனடியாக அந்த பகுதி
மக்களை ஒன்றிணைத்து வந்த போது, உண்டியலை கல்லால் அடித்து உடைக்க முயற்சித்த ஒருவரை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
உண்டியலை உடைக்கும் போது வசமாக சிக்கிய திருடன்| இலங்கை செய்திகள்
கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞன் எனவும், இவருக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற பிணையில் வெளிவந்தவர் எனவும் இவரை ஞாயிற்றுக்கிழமை (26)
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்
ஆஜர்படுத்திய போது இவரை எதிர்வரும் 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
பெண் உட்பட மூவர் கொலை| இலங்கை செய்திகள்
பெண் உட்பட மூவர் கொலை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் | நாட்டின் பல்வேறு பகுதிகளில் மூன்று கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓவகந்த பகுதியில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
காதல் உறவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நேற்று (26) இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பெண் தனது வீட்டில் இருந்தபோது, அவரது தாயாரின் இளைய சகோதரர் வீட்டிற்கு வந்து இறந்தவரையும் அவரது தாயாரையும் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
ரத்கம பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர் பெண்ணின் தாய் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பெண் உட்பட மூவர் கொலை| இலங்கை செய்திகள்
சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ரத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லந்தோட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள வீதியில் சென்று கொண்டிருந்த போது, அங்கு வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது.
இதேவேளை, திவுலபிட்டிய மரதகஹமுல சந்திக்கு அருகில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மரதகஹமுல சந்திக்கு அருகில், வீதியில் பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தடுத்து நிறுத்தி, கார் சாரதியை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன், காரில் இருந்த நபர் ஒருவரையும் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நேற்று (26) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 49 வயதான வித்தினாபஹா என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உதவி கேட்டவர்களுக்கு இந்த பெண் செய்த வேலை – வைரலாகும் வீடியோ
உதவி கேட்டவர்களுக்கு இந்த பெண் செய்த வேலை – வைரலாகும் வீடியோ
தமிழர் வடக்கு பகுதியில் வறுமையில் வடிய குடும்பம் ஒன்று .இந்த யூடியூப்
பிரபலங்கள் கண்களில் சிக்கினர் .
பதறி போன இவர்கள் அந்த குடும்பம் தொடர்பான விடயத்தை
அறிந்தனர் .
அவர்களின் உள்ள குறை ,அவர்களு எது தேவை என்பதை கண்டறிந்து ,
அதை நிவர்த்தி செய்திட ஒரு திட்டம் வகுத்தனர் .
உதவி என்றால் எப்படி இருக்க வேண்டும் ,அதனால் அவர்கள் என்ன
பலனை பெற வேண்டும் என்பதற்கு .
இந்த பெண் செய்த வேலையை பாருங்கள் .
உதவி கேட்டவர்களுக்கு இந்த பெண் செய்த வேலை – வைரலாகும் வீடியோ
எந்த யூடியூப் நபர்களும் செய்திடாத புதிய முறையில் ,
அறிவு பூரவமாக சிந்தித்து இவர்கள செயல் படுவதையும் ,
அவர்கல் முன்னேற எவ்வாறு ஊந்தி தள்ளினர் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.
இவர்களை எதிரி இணையமும் வாழ்க வாழ்கவென வாழ்த்தி மகிழ்கிறது .
உதவி என்றால் இவ்ரகள் கையாளும் இந்த உத்தியை யாவரும் கையாண்டால் ,முன்னேற்றகரமான சமூகத்தை உருவாக்க முடியும் .
ஓசி பணம் என வேண்டி குறட்டை விடுபவர்களுக்கு, இவர்கள் வைத்த செக்மேட் நடவடிவகை வெளி நாட்டு தமிழர்களை கவர்ந்துள்ளது.
உக்கிரைனுக்கு லிதுவேனியா ராடார்கள் அன்பளிப்பு| உலக செய்திகள்
உக்கிரைனுக்கு லிதுவேனியா ராடார்கள் அன்பளிப்பு| உலக செய்திகள்
உலக செய்திகள் |லிதுவேனியா நாடானாது உக்கிரைன் இராணுவத்தினருக்கு ,14 மில்லியன் யூரோ பெறுமதியிலான
ராடரை கொள்வனவு செய்து அன்பளிப்பாக வழங்கியுள்ளது .
ரஷ்ய அகோரமான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,
ஏவுகணைகள் மற்றும் விமான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ,
இந்த நவீன ராடார் கருவிகளை கொள்வனவு
செய்து வழங்கியுள்ளது ,
உக்கிரைன் போரில் வெல்ல முப்பதுக்கு மேற்பட்ட நாடுகள் ,
தொடர்ந்து உதவிகளை புரிந்த வண்ணம் உள்ளன .
உக்கிரைனுக்கு லிதுவேனியா ராடார்கள் அன்பளிப்பு| உலக செய்திகள்
இந்த ஆண்டும் உக்கிரனை ரஸ்யாவினால் வெல்ல முடியாது ,
என ஜெலன்ஸி சூளுரைத்துள்ளார் .
மேலும் உக்கிரைன் ரசியாவிடம் வீழ்ந்தால் தமக்கு ,
மிக பெரும் ஆபத்து என்பதால் ,போலந்து நாடும் ,
தற்போது உக்கிரைனுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளது .
அவர்களும் ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றனர் .
முப்பது நாடுகளின் கூட்டு படையெடுப்பு,
ரஸ்யாவை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
யாழில் கருகிய நிலையில் பெண்கள் சடலம் மீட்பு|இலங்கை செய்திகள்
யாழில் கருகிய நிலையில் பெண்கள் சடலம் மீட்பு|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள
வீடொன்றில் இருந்து தீயில் கருகிய நிலையில் இரண்டு பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
சகோதரிகளான 72 மற்றும் 74 வயதான இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் மனுவேற்பிள்ளை அசலின் பௌலினா, யேசுதாசன் விக்ரோரியா என காணப்பட்டுள்ளனர்.
குறித்த சகோதரிகளில் ஒருவர் திருமணமானவர் எனவும் அவரது கணவரும்,
மகனும் உயிரிழந்துள்ளதுடன், மற்றவர் திருமணமாகாத நிலையில், இருவரும் தனிமையில் வாழ்ந்துவந்துள்ளனர்.
இந்த நிலையில், வீட்டின் பின்புறம் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.
திடீரென முளைத்து திடீரென மாயமான புத்தர்|இலங்கை செய்திகள்
திடீரென முளைத்து திடீரென மாயமான புத்தர்|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணம், நிலாவரையில் இராணுவத்தினரால் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட பௌத்த வழிபாட்டு இடமும் புத்தர் சிலையும் வலிகாமம்
கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்டவர்களின் தலையீட்டினை அடுதது உடனடியாக அகற்றப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிலாவரை கிணறு அமைந்துள்ள பகுதியில் அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலையொன்று அமைக்கப்பட்டுள்ளது.
திடீரென முளைத்து திடீரென மாயமான புத்தர்|இலங்கை செய்திகள்
இதனை அவதானித்த மக்கள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருக்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து, தவிசாளர் மற்றும் உப தவிசாளர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர்.
இதேவேளை, ஊர் மக்களால் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து குறித்த சிலை இராணுவத்தினரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.
மேலும் குறித்த இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன்,
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்டவர்களும் நேரில் நிலைமைகளை ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சந்தேக நபர் தப்பியோட்டம் – 4 பொலிஸ் அதிகாரிகள் கைது|இலங்கை செய்திகள்
சந்தேக நபர் தப்பியோட்டம் – 4 பொலிஸ் அதிகாரிகள் கைது|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி, சார்ஜன்ட் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
போலியான பெயரில் டுபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த சந்தேக நபர், பொலிஸ் அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சந்தேக நபர் கொலை உள்ளிட்ட பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதுடன்,
அவருக்கு எதிராக விமானப் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை|இலங்கை செய்திகள்
கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ். பல்கலைகழக கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை மற்றும் பல்கலைகழக வளாகத்திற்குள் நுழைவதற்கான தடை விதிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த 22 ஆம், 23 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலை வார நிகழ்வுகளின் போது, 3 ஆம் வருட மாணவர்களால், 2 ஆம் வருட மாணவர்கள் தாக்கப்பட்டமை தொடர்பில் சுதந்திரமான மற்றும் முறை சார்ந்த விசாரணையை
மேற்கொள்வதற்கு ஏதுவாக 4 பேருக்கும் உள்நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு கலைப் பீடாதிபதி பேராசிரியர் சி. ரகுராம் அறிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான விதிமுறைகளுக்கு அமையக் கடந்த 23 ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை விடுதி உட்பட பல்கலைக்கழக வளாகத்தினுள் பிரவேசிப்பதற்கும், கல்விச் செயற்பாடுகளில்
ஈடுபடுவதற்கும், பல்கலைக்கழகம் தொடர்புபட்ட எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதியின் உள்நுழைவுத் தடைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் கலைவார நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மூன்றாம் வருட மாணவர்களுக்கும், இரண்டாம் வருட மாணவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் முற்றி, கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் கைக்கலப்பாக மாறியுள்ளது.
கலைப்பீட மாணவர்கள் 4 பேருக்கு வகுப்புத் தடை|இலங்கை செய்திகள்
இந்தச் சம்பவத்தின் போது தலை மற்றும் தோள் பட்டைப் பகுதியில் உபாதைக்குள்ளான இரண்டாம் வருட மாணவன் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
சம்பவம் தொடர்பில், பல்கலைக்கழக மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் 4 மாணவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாகக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், பல்கலைக்கழக மாணவர் வதிவிடம், ஒழுக்கம் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதிமுறைகளுக்கு
அமைவாகக் கலைப் பீடாதிபதியினால் இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்
விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது|இலங்கை செய்திகள்
விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலியில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரினால் இந்த விபச்சார விடுதி நிர்வகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெனேகம வில்லிம்புல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண், ஹோமாகம, பிடிபன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண், தெஹியத்தகண்டியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் மற்றும் தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பாக எந்தவிதத் தயக்கமும் இன்றி முறைப்பாடு செய்ய முடியும்.
அவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஞ்சுள செனரத்ன தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நகர பசார் வீதி வர்த்தகர்களுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
யாழ். நகரப் பகுதியில் உள்ள பசார் வீதியில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தச் சந்திப்பில் யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் அதிகாரிகள் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
பசார் வீதியில் ஒரு வழிப் பாதை காரணமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடம் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் முக்கியமாக ஆராயப்பட்டது.
வீதியில் இருமருங்கும் ஒவ்வொரு தினமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வாகனத் தரிப்பிட வசதியில் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
வாகனங்கள் தரிக்க விடப்படும்போது வர்த்தக நிலையங்களுக்குச் மக்கள் செல்லக்கூடியவாறு வர்த்தக நிலையங்கள் முன்பாக இடைவெளி விட்டு வாகனங்களைத் தரிக்க வசதிகள் செய்யப்பட வேண்டும் என்று வர்த்தகர்களால் கோரப்பட்டது.
அதை ஏற்றுக்கொண்ட பொலிஸார், இது தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோரல்| இலங்கை செய்திகள்
வெளிமாவட்டங்களில் இருந்து யாசகம் பெற வருவோரும், சாம்பிராணி விற்க வருவோரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொள்கின்றமை தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
அவர்கள் மக்களை கட்டாயப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதால் மக்கள் வர்த்தக நிலையங்களுக்கு வராது அங்கிருந்து விலகிச் செல்லும் நிலைமை காணப்படுகின்றது.
அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வர்த்தகர்களால் கோரப்பட்டது.
இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
சந்திப்பில் கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம் மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர், வர்த்தகர்களிடம் கப்பம் கோருதல் அல்லது வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் தொடர்பான முறைப்பாடுகள் இருப்பின் எந்தவிதத் தயக்கமும் இன்றி முறையிடலாம் என்று தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கோ, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கோ அல்லது பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்துக்கோ முறையிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முறைப்பாடுகள் கிடைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வர்த்தகர்கள் முறைப்பாடு செய்வதற்கு எந்தவிதத் தயக்கமும் கொள்ளத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்குரிய
அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச | இலங்கை செய்திகள்
மீண்டும் பிரதமராக மஹிந்த ராஜபக்ச | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தினேஷ் குணவர்தனவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அதற்கு ஆளுங்கட்சி நண்பர்கள் ஆதரவு கோரியதாக பாராளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண குறிப்பிடுகின்றார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், தலையணையை மாற்றினால் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கவில்லை. அரசாங்கம் வீட்டுக்குப் போக வேண்டும். பிரதமர் பதவியை மாற்றுவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு விடை காண முடியாது.
இந்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ச இப்போது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும்.
அவர் நாட்டுக்காக ஏதாவது செய்திருந்தால் அது அந்த நற்பெயரைக் காக்க காரணமாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
முட்டைக் கப்பல் இன்று வருகிறது| இலங்கை செய்திகள்
முட்டைக் கப்பல் இன்று வருகிறது| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 20 இலட்சம் முட்டைகளை தாங்கிய கப்பல் இன்று நாட்டை வந்தடையுள்ளது.
நாட்டில் முட்டையின் விலை அதிகரித்துள்ளமைக்கு தீர்வு காணும் விதமாக இந்தியாவில் இருந்து முட்டையை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று காலை இந்தியாவில் இருந்து புறப்பட உள்ள குறித்த கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடைய உள்ளது.
இராணுவ சிப்பாய் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்| இலங்கை செய்திகள்
இராணுவ சிப்பாய் மரணம்; விசாரணைகள் ஆரம்பம்| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| பனாகொட இராணுவ முகாமில் நேற்று (24) இராணுவ வீரர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டமை தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும் குறித்த மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த இராணுவ வீரர் தனது உத்தியோகபூர்வ ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட இராணுவ வீரர் 32 வயதுடையவர் எனவும், இவர் மாத்தளை – நாவுல பிரதேசத்தில் வசிப்பவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவலுக்குச் சென்றவருக்கு எமனாக வந்த யானை| இலங்கை செய்திகள்
காவலுக்குச் சென்றவருக்கு எமனாக வந்த யானை| இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |அறுவடை நெல்லை பாதுகாப்பதற்காக யானை காவலுக்கு சென்று யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவமானது அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கொக்கனாரை வட்டை பகுதியில் வெள்ளிக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்றிருந்ததுடன் மாலை யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளை யானை காவலுக்காக நின்ற ஒருவர் பலியாகியதுடன் இருவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவலுக்குச் சென்றவருக்கு எமனாக வந்த யானை| இலங்கை செய்திகள்
சம்பவ இடத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான 55 வயது மதிக்கத்தக்க முஹமட் அலியார் சுபையிர் மட்டக்களப்பு தரவை 1 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்த குடும்பஸ்தரே சம்பவ இடத்தில் உயிரிழந்தவராவார்.
மேலும் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம் பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணை மேற்கொண்ட பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்தாக்குதலில் காயமடைந்துள்ள 29 வயதையுடையவர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருவதுடன் 52 வயதையுடைய மலையடி கிராமம் 2 கிராம சேவையாளர் பிரிவைச் சேர்ந்தவர் சிகிச்சைக்காக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்க பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் சம்மாந்துறை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பலர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது வயல் அறுவடை காலம் என்பதால் யானை நடமாட்டமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி
உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி
உக்கிரனுக்கு மீளவும் அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா
டொலர் பெறுமதியான ஆயுதங்களை
வழங்கிட அதயாராகி வருகிறது .
உக்கிரைன் சென்று வந்ததன் பின்னர் .இந்த ஆயுத உதவியினை
உக்கிரனுக்கு வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .
இந்த ஆயுத தொகுதியில் பீரங்கி குண்டுகள் ,
ஏவுகணை செலுத்திகள் ,ராடார்கள் ,
டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகின்றன .
ரஷ்யாவை உக்கிரைன் வென்றதோ இல்லையோ ,
அமெரிக்கா பிரிட்டன் நாடுகளின் ஆயுத
வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .
உதவி என்கின்ற போர்வையில் ,
பல பில்லியனுக்கு இரு நாடுகளும் ஆயுதங்களை விற்று தள்ளியுள்ளன .





































