Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம், உரிமம் பெற்ற வங்கிகள் வட்டி வீதங்களை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
மத்திய வங்கியின் நாணய சபை நேற்று முன்தினம் கூடிய போது, கொள்கை வட்டி வீதத்தை 2.5 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.
இதற்கிணங்க, மத்திய வங்கியின் நிலையான வைப்பு வட்டி வீதம் 15 வீதத்திலிருந்து 13 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
வட்டி வீதத்தை குறைக்க தீர்மானம்
துணை நிலை கடன் வழங்கலுக்கான வட்டி வீதத்தை 14 வீதத்திற்கும் 250 அடிப்படை புள்ளிகளால் குறைப்பதற்கும் மத்திய வங்கியின் நாணயசபை தீர்மானித்துள்ளது.
அத்துடன், தற்போது மிகவும் வேகமாக பணவீக்கம் குறைவடைந்து வருவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்
காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு
காலி துறைமுகத்தில் வெளிநாட்டவர் உயிரிழப்பு
காலி துறைமுகத்தில் நீரில் மூழ்கி 61 வயதான லிதுவேனியா நாட்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து அபுதாபி நோக்கி பயணித்த கப்பல் ஒன்று காலி துறைமுகத்திற்கு பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக வந்த போது குறித்த நபர் துறைமுகத்தில் இறங்க முற்பட்ட வேளையில் கடலில் தவறி விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர், கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக 04 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாத்தறை, இரத்தினபுரி, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.
இதன்படி, மாத்தறை மாவட்டம், பிடபெத்தர, குறிப்பாக களுபோவிட்டான பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தின் நாகொட மற்றும் நெலுவ பிரதேச மக்களுக்கும் களுத்துறை மாவட்டத்தின் வளல்லாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம, அகலவத்தை மற்றும் புலத்சிங்கள பிரதேச மக்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
விமலிடம் இழப்பீடு கோரிய சவேந்திர சில்வா
விமலிடம் இழப்பீடு கோரிய சவேந்திர சில்வா
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவிடம் இருந்து பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இழப்பீடு கோரி கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அண்மையில் வெளியான புத்தகத்தின் மூலம் தனக்கும் இராணுவத்தினருக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து இவ்வாறு செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளார்
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
கடந்த 2013 ஆம் ஆண்டு முச்சக்கர வண்டி சாரதியான சதாசிவம் குகானந்தன் என்பவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் பிறிதொரு முச்சக்கர வண்டி
சாரதியான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இன்று தீர்ப்பளித்தார்.
கடந்த 2013 ஆம் ஆண்டு தை மாதம் 28 ஆம் திகதி வவுனியா, மருக்காரம்பளை பகுதியில் உள்ள முச்சக்கர வண்டி சாரதி ஒருவரின் வீட்டில் புதுமனை புகுவிழா இடம் பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு முடிந்ததும் இரவு இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது குறித்த அங்கு கலந்து கொண்டவர்களுக்கிடையில் கைகலப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு அவரவர் தமது வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
மறுநாள் 29 ஆம் திகதி காலை 7 மணியளவில் வவுனியா இலங்கை வங்கியில் இருந்து 100 மீற்றர் தூரத்தில் புகையிரத கடவையில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த சடலம் தடவியல் பொலிசாரின் உதவியுடன் மீட்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டி ஒன்றில் இரத்தக்கறை காணப்படுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.
இதனையடுத்து முதலாம் சந்தேக நபரான வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த முச்சக்கரண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், இரண்டாம் சந்தேக நபரான பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதி சந்தேகத்தில் கைது செய்யப்பட்டார்.
வழக்கு விசாரணைகள் நடைபெற்று தடுப்பு காவலில் இருந்து இருவரும் விடுவிக்கப்பட்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 07 குறித்த கொலைச் சம்பவம் தொடர்பில் முதலாம் மற்றம் இரண்டாம் எதிரிகளுக்கு எதிராக
இளஞ்செழியனின் மற்றுமொரு அதிரடி தீர்ப்பு
சட்டமா அதிபர் திணைக் களத்தால் அரச சட்ட வாதியான தர்சிகா திருக்குமரநாதன் அவர்களின் நெறிப்படுத்தலில் வவுனியா மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த போது முச்சக்கர வண்டியில் பெறப்பட்ட இரத்த மாதிரியும், கொலை செய்யப்பட்ட நபரின் இரத்த மாதிரியும் ஒன்றுடன் ஒன்று ஒத்து போவதை தடவியல் பொலிஸார் சாட்சியத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.
அத்துடன், மொட்டை விசை பாவித்ததன் மூலம் வெளிக்காயம் மற்றும் உட்காயம் ஏற்பட்டு குறித்த மரணம் ஏற்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றில் சாட்சியமளித்தார்.
சந்தர்ப்பம், சூழ்நிலை, சாட்சியம் மூலம் முதலாம் எதிரியான பொதுக்கிணறு வீதி தோணிக்கல்லைச் சேர்ந்த ஜேசுதாசன் இலங்கேஸ்வரன் தான் குறித்த கொலையை நிகழ்த்தியுள்ளார் என்பதை அரச சட்டவாதியால் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூப்பிக்கப்பட்டுள்ளதால், முதலாம் சந்தேகநபருக்கு மரண தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இரண்டாம் எதிரியான சந்தேக நபரை விடுவித்து மேல் நீதிமன்று தீர்ப்பளித்தது
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் மீது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த இருவர் கூரிய ஆயுதத்தினால் வெட்டி காயப்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதன் போது இச்சம்பவத்தில் 41 வயது மதிக்கத்தக்க இஸ்மாலெப்பை சிறாஜ்டீன் என்ற மேசன் வேலை செய்யும் குடும்பஸ்தரே காயமடைந்துள்ள நிலையில் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியுமான பிரதம பொலிஸ் பரிசோதகர் அலியார் றபீக் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சம்பவத்தின் பின்னணி
இரண்டாவது திருமணத்தில் இணைந்த ஒருவர் அவரது மனைவிக்கு தினம் தோறும் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இத்தொந்தரவு செயற்பாடு தொடர்பில் பாதிக்கப்பட்டவர் தனது சகோதர்களிடம் முறையிட்டிருந்தார்.
சகோதரியின் கணவரை நடுவீதியில் வைத்து வெட்டிய சகோதரர்கள்
இந்நிலையில் சகோதரிக்கு தொந்தரவு செய்து வந்த மச்சானை இரு சகோதரர்களும் வீதியில் இடைமறித்து தாக்குதல் மேற்கொண்டிருப்பதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.
மேலும் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தில் இவ்விடயம் தொடர்பில் மனைவி தரப்பிலும் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் தாக்குதலுக்கு இலக்கானவரும் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது இத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்டு தலைமைறைவான மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
பாணந்துறை வெகட பிரதேசத்தில் நேற்றிரவு ஒருவர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாணந்துறையில் உள்ள ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக குறித்த இளைஞன் வாளால் தாக்கப்பட்டதுடன் தாக்குதலுக்குள்ளான இளைஞன் காயங்களுடன் ஆடைத்தொழிற்சாலை வளாகத்திற்கு ஓடியுள்ளார்.
அவரைப் பின்தொடர்ந்து வந்த கொலையாளி அந்த இடத்திற்குள் நுழைந்து அந்த இளைஞனை வாளால் தாக்கிய விதம் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
பாணந்துறை இடம்பெற்ற கொடூரமான கொலை சம்பவம்
இளைஞன் தலையில் பலமுறை அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மொதரவில அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 23 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொலையைச் செய்த சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
காட்டுக்குள் அபாயகரமான ஆயுதங்கள்
அச்சுவேலி – செல்வநாயகபுரம் பகுதியில் காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அபாயகரமான ஆயுதங்கள் கைபெற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த கஜேந்திரா வாள்கள் என கூறப்படும் இந்த வாழ்வில் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
கைப்பெற்றப்பட்ட வாள்கள் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டுள்ளன
கவனயீர்ப்பு போராட்டம்
கவனயீர்ப்பு போராட்டம்
வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடி சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு ஏற்பாடு செய்திருந்த குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் வவுனியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது மத்தியகிழக்கு நாடுகளும் தொழிலுக்காக சென்று நிர்க்கதியான பெண்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்வதுடன் போலி முகவர்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனமெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
நாட்டில் 111 மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இவ்விடயம் தொடர்பில்
அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளதுடன், பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
”மூன்று மாதங்களுக்கு முன்னர் 200 வகையான மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியது.
அது தற்போது 111 ஆக குறைந்துள்ளது. அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அந்த எண்ணிக்கை 70 ஆகக் குறைவடையும்” என அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் மருந்துத் தட்டுப்பாடு
மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்யப் போதுமான நிதி உள்ளதா எனக் கேட்ட போது ” இலங்கை கடந்த வருடத்திலிருந்து கடும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றது என்பது மறுக்க முடியாத விடயம்.
நாம் இப்போது அதை சரிசெய்து கொண்டு இருக்கின்றோம். இந்நிலையில் நிதியை விடுவிப்பதில் சிறு சிக்கல்கள் இருக்கின்றன.
இருந்தாலும் திறைசேரியிலிருந்து மருந்துக் கொள்வனவுக்குப் போதுமான நிதியைப் பெற்று வருகின்றோம்” என அவர் தெரிவித்தார்.
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.
லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஒரு சந்தேகநபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற மூவரும் முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
மேலும், சந்தேக நபர்கள் ஏதோவொரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக அந்த பெண் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக யாழ்ப்பாண பொலிஸாருக்கு நேற்று (30) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விடுதியில் சோதனை நடாத்தி மூவர் கைது செய்துள்ளனர்.
குறித்த விடுதியில் சந்தேகத்திற்கு இடமானவர்களின் நடமாட்டங்கள் காணப்படுவதாகவும், அதன் ஊடாக அங்கு கலாச்சார சீரழிவுகள் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் குறித்த விடுதியினை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் முற்றுகையிட்டு சோதனையிட்ட போது, உரிய பதிவுகள் இன்றி விடுதியில்
சந்தேகத்திற்கு இடமான முறையில் தனி அறைகளில் தங்கி இருந்த தெகிவளை பகுதியை சேர்ந்த இரு பெண்களை கைது செய்துள்ளனர். அத்துடன் விடுதியின் முகாமையாளரையும் கைது செய்துள்ளனர்.
யாழில் கலாச்சார சீரழிவு – இரு பெண்கள் உட்பட மூவர் கைது
கைது செய்யப்பட்ட இரு பெண்களையும் முகாமையாளரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை அப்பகுதி மக்களால் பொலிஸ் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு விடுதி தொடர்பில் ஏற்கனவே பல முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் ,
அவர்கள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காத நிலையில் நேரடியாக குற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு செய்யப்பட்டதனை அடுத்தே நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உடல் வீங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
உடல் வீங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பாணந்துறை சாகர மாவத்தையின் முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள புகையிரத பாலத்தின் கீழ் ஆற்றின் கரையில் அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று (30) காலை சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடல் வீங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க ஆண் எனவும், அவரது அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத அளவுக்கு உயிரிழந்தவரின் உடல் வீங்கியிருப்பதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பாணந்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (31) இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பல சுற்று கலந்துரையாடல்களை ஒகமுரா நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் தீவு நாட்டிற்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, நாணய நிதிய பணியாளர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்த சில நாட்களுக்குப் பின்னர் ஒகாமுரா விஜயம் செய்யவுள்ளார்.
நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையில் இந்த தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்திடம் உதவி கோரிய இலங்கை
ரஜினிகாந்திடம் உதவி கோரிய இலங்கை
இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் (29) அவரது இல்லத்தில் சந்தித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சந்திப்பின் போது, துணை உயர்ஸ்தானிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
அவருடைய வருகை சினிமா, சுற்றுலா மற்றும் ஆன்மீக மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவை மேம்படுத்தும் என்று வெங்டேஸ்வரன் கூறியுள்ளார்.
நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி
நிர்மாணத்துறை பொருட்களின் விலையில் வீழ்ச்சி
உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின்
அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
விலை அதிகரிப்பு வீதத்துடன் ஒப்பிடுகையில் விலை குறைப்பு வீதம் மிகவும் மந்தமாகவே காணப்படுவதாக நிர்மாணத்துறையின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.
கட்டுமானப் பொருட்களின் விலை வீழ்ச்சியை அவதானித்து ஒரு மாதத்தில் கூடி உரிய விலை குறைப்பு சதவீதத்தை சரியாக அறிவிப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
16 நாட்களுக்கு மூடப்படும் மதுபான சாலைகள்
16 நாட்களுக்கு மூடப்படும் மதுபான சாலைகள்
கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளும் 16 நாட்களுக்கு மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுணு கதிர்காமம் ஆலய எசல பெரஹெர திருவிழாவை முன்னிட்டு அப்பகுதியில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
16 நாட்களுக்கு மூடப்படும் மதுபான சாலைகள்
அதன்படி ஜூன் 19ஆம் திகதி முதல் ஜூலை 4ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படவுள்ளன.
இந்த காலப்பகுதியில், திருவிழா நடைபெறும் இடத்தை மதுவற்ற பகுதியாக மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஊவா மாகாண கலால் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மகளின் காதலனை கடத்திய தந்தை,தாய் நண்பன் கைது
மகளின் காதலனை கடத்திய தந்தை,தாய் நண்பன் கைது
தனியார் வகுப்புக்கு நிறைவடைந்ததன் பின்னர், அருகில் இருக்கும் ஆள் நடமாற்றம் இல்லாத வீதியில் காதல் ஜோடி நடந்து சென்றுக்கொண்டிருந்தது.
அப்போது வாகனத்தில் வந்து, காதலனை கடத்திச் சென்று தாக்குதல் நடத்தினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ், காதலியின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பன் ஆகிய மூவரும் கட்டுகஸ்தோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 17 வயதான இளைஞனும், 18 வயதான யுவதியுமே தனியார் வகுப்புக்குச் சென்று அந்த வீதியில் கைக்கோர்த்து நடந்து சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்போது வாகனமொன்றில் வந்த மேற்படி மூவரும் அவ்விளைஞனை பலவந்தமாக ஏற்றிக்கொண்டு, யட்டவல பிரதேசத்தில் உள்ள தங்களுடைய வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
மகளின் காதலனை கடத்திய தந்தை,தாய் நண்பன் கைது
அங்கு வைத்து இளைஞன் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
கடுமையாக அச்சுறுத்தியதன் பின்னர் அதே வாகனத்தில் ஏற்றிவந்த அம்மூவரும், தித்தவல பிரதேசத்தில் உள்ள மாணவனின் வீட்டுக்குச் சென்று அவரை ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளனர்.
தாக்குதல்களுக்கு இலக்கான மாணவன், பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட கட்டுகஸ்தோட்டை பொலிஸார், மாணவின் தந்தை, தாய் மற்றும் தந்தையின் நண்பனை கைது செய்தனர். தந்தை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார் ஏனைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு
இந்தியாவின் 1 பில்லியன் டொலர் கடன் வசதி 2024 மார்ச் வரை நீடிப்பு
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 2022 மார்ச்சில் இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கப்பட்ட 01 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் காலம், இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக இந்திய ஸ்டேட் வங்கியால் நீடிக்கப்பட்டுள்ளது
. இந்நிலையில் இந்த கால நீடிப்புக்கான திருத்த உடன்படிக்கையானது நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ செஹான் சேமசிங்கே, இலங்கை நிதி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகள் முன்னிலையில் 30 மே 2023 இல் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்திய ஸ்டேட் வங்கியின் அதிகாரிகள் இந்நிகழ்வில் மெய்நிகர் மார்க்கமூடாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த உடன்படிக்கை கைச்சத்திடப்பட்டமையின் பிரகாரம் 2024 மார்ச் வரையிலான மற்றொரு வருட காலப்பகுதிக்கு இந்த கடன் வசதியினை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
கடந்தவருடம் முதல் எரிபொருள், மருந்துப்பொருட்கள், உணவுப்பொருட்கள், மற்றும் உற்பத்தி மூலப்பொருட்கள் உள்ளிட்ட பலவிதமான பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் தேவைக்கு அமைவாகவும் முன்னுரிமை அடிப்படையிலும் அவசரமாக இறக்குமதி செய்வதற்கு இந்த கடனுதவி திட்டம் பயன்படுத்தப்பட்டிருந்தமை நினைவில் கொள்ளத்தக்கதாகும். .
இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கையின் கீழ் பல்வேறு கடனுதவி திட்டங்கள் மற்றும் நாணய உதவிகள் ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பல்நோக்கு உதவி கடந்த வருடம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்தது.
இலங்கையின் துரித பொருளாதார மீட்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை மக்களுடனும் அரசாங்கத்துடனும் துணை நிற்கும் எமது நிலையான அர்ப்பணிப்புக்கான ஓர் சாட்சியமே இலங்கைக்கான இந்திய ஆதரவு என்பது குறிப்பிடத்தக்கது
களுத்துறை மாணவியை காணவில்லை
களுத்துறை மாணவியை காணவில்லை
களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவி ஒருவர் நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவியே காணாமல் போயுள்ளார்.
இவர் நேற்று முன்தினம் ஆங்கில வகுப்பிற்கு செல்வதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறியதுடன் மீண்டும் வீட்டிற்கு வருகைத்தரவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாணவியை காணவில்லை
மாணவியின் கையடக்க தொலைபேசியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் மாணவி தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்









































