Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி
ஜனாதிபதி வேட்பாளராக மைத்திரி
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட உள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இதனைத் தெரிவித்துள்ளார்
கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
கிளிநொச்சியில் வைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் அசானிக்கு பொண்ணாடைகள் போர்த்தி சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கி ஹவுரவிக்க பட்டுள்ளார்
தமிழகம் ஜீ தமிழ் தலைக்காட்சியில் கலந்து கொண்டு சரிகமபா நிகழ்வில் பாடி அசத்தி வந்தார் .
அசானி மீது ஏற்பட்ட மக்கள் அனுதாப அலை காரணமாக உலகம் முழுவதும் அவர் அதிக மக்களினால் இரசித்து பார்க்க பட்டார் .
அவரது பாட்டு திறமைக்கு அப்பால் அவர் மீது கொண்ட அனுதாப அலையாகும் .
தமது பிள்ளை மீளவும் இலக்கை வந்தடைந்த நிலையில் அவருக்குரிய நிகழ்வுகளை தற்போது பல காட்சிகள் ,சமுக ஆர்வலர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

வீடியோ
மாத்தறை சிறைச்சாலையில் இரண்டாவது உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலையில் இரண்டாவது உயிரிழப்பு
மாத்தறை சிறைச்சாலையில் பரவி வரும் காய்ச்சலால் மாத்தறை பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றுமொரு கைதி உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
மர்மமான முறையில் நால்வர் உயிரிழப்பு
மர்மமான முறையில் நால்வர் உயிரிழப்பு
மாலம்பே, கஹந்தோட்ட வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தாய், மகன்மார் இருவர் மற்றும் மகள் ஒருவரின் சடலங்கள் இன்று (31) அதிகாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலங்கள் மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடும்பத்தின் தந்தை கடந்த 28ஆம் திகதி உயிரிழந்துள்ளதாகவும், இறுதிச் சடங்குகள் நேற்று (30) இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன. இது தற்கொலையா என பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி பலி
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சோதனை நடவடிக்கையின் போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
வெலிகம – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (31) அதிகாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், துப்பாக்கிச் சூடு நடத்திய வேனை வெலிகம பொலிஸார் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது இடம்பெற்ற பதில் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் அதிகாரி கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் இன்று (31) விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாலை 5 மணி
முதல் இந்த போக்குவரத்து திட்டம் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
கோர விபத்தில் 9 பேர் படுகாயம்
கோர விபத்தில் 9 பேர் படுகாயம்
புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் முந்தல் பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற காரும், நீர்கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த மற்றுமொரு காரும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் இரு கார்களிலும் பயணித்த மூன்று சிறுவர்கள் உட்பட 09 பேர் காயமடைந்த நிலையில் முந்தல் மாவட்ட வைத்தியசாலையில்
கோர விபத்தில் 9 பேர் படுகாயம்
அனுமதிக்கப்பட்டதுடன், அதில் எட்டு பேர் மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு
இந்திய உயர்ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு
பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று அலரிமாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் உத்தேச கூட்டுத் திட்டங்களை விரைவுப்படுத்துவதற்கான வழி வகைகள் குறித்தும் ஆராயப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி துறையில் இந்திய முதலீடுகளை அதிகரிப்பதற்கான ஏற்பாடுகள், திருகோணமலை எண்ணெய் தாங்கிகள், துறைமுகம், ரயில் பாதைகள்
தொடர்பான கூட்டுத் திட்டங்கள் மற்றும் விவசாயம் மற்றும் கடற்றொழில் அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பிலும் அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது
போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்
போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்
முல்லைத்தீவு – உடுப்புக்குளம் தூண்டாய் கிராமத்தில் மின்சார சபையின் மின் இணைப்பை துண்டிப்பவர்கள் என தங்களை அறிமுகம் செய்த நபர்கள் பல மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக தெரிவித்து ஒருதொகை பணத்தினை அபகரித்துச் சென்றுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த கிராமத்திற்கு கடந்த 27ஆம் திகதி சென்ற இருவர் மின்சார கட்டணம் செலுத்தாத மக்களின் வீடுகளுக்கு சென்று மின்சாரத்தினை துண்டிக்கப்போவதாக கூறியுள்ளார்கள் இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண்கள் மின்சாரத்தினை வெட்டாதேங்கோ என்று சொல்லியுள்ளார்கள்.
இல்லாவிடின் கட்டும் பணத்தில் ஒருதொகுதியினை தாருங்கள் நாங்கள் செல்கின்றோம் என கேட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் பல குடும்பங்கள் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பணத்தினை கொடுத்துள்ளார்கள்
போலி மின்சாரசபை ஊழியர்களால் பதற்றம்
இதையடுத்து, 28ஆம் திகதி மின்சார பட்டியல் கொடுக்கும் நபர் வீடுகளுக்கு வந்து மின்சார பட்டியலை கொடுத்துள்ளார். இதன் போது சம்பவத்தினை மக்கள் தெரியப்படுத்தியுள்ளார்கள்.
இதையடுத்து தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாக உணர்ந்த மக்கள் முல்லைத்தீவில் உள்ள மின்சார சபையிடம் வந்து முறையிட்டுள்ளார்கள். அவர்கள் ஒன்றும்
செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளதுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெயர் விபரங்கள், மின்கட்டண விபரங்கள் எல்லாம் எவ்வாறு அவர்களுக்கு தெரியும் என்ற கேள்வியினை எழுப்பியுள்ளார்கள்.
மின்சார சபை நடவடிக்கை எடுக்கமுடியாத நிலையில் முல்லைத்தீவு பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாட்டினை பதிவுசெய்துள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் மின்சார பட்டியல் வழங்குபவர் ஒருவரை கேட்டபோது தற்போது மின்சாரம் துண்டிப்பு என்பது நிறுத்தப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை காரணமாக மின்சார நிலுவையினை செலுத்தாவர்களின் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தூண்டாய் கிராமத்தில் சுமார் பத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புச் சபை மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த தேசபந்து தென்னகோன் தனது கடமைகளை மீறியிருந்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்
அத்துடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் செயற்பட்ட காலத்தில், காலி முகத்திடலில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதையும் இந்த மனுக்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இதனால், நாட்டின் சட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முக்கிய துறையை கையாளும் பொறுப்பு, மனித நேயமுள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு முரணாக செயற்பட்ட ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்குவது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
முகநூலில் பெண் போல பேசி ஏமாற்றி நபரொருவரிடம் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருக்கு நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார்.
இதனை நம்பி நெல்லியடிக்கு வந்த திருகோணமலை வாசியை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம் உடைமைகள் என்பன இருவரால் கொள்ளையடிக்கப்பட்டது.
முகநூல் ஊடாக மோசடி இருவர் கைது
சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டை பதிவு செய்தார்.
விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இருவரை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
இலங்கையில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.
மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவாசக் கோளாறு காரணமாக மதவாச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைகளுக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது
சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது
கடந்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்று (29) அதிகாலை 12.30 வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ சுற்றிவளைப்பில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 06 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 118 கிலோ 50 கிராம் மாவா, 35 கிலோகிராம் ஏஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுற்றிவளைப்பில் இதுவரை 17 837 பேர் கைது
850 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,மேலும் 186 சந்தேகநபர்களிடம் சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
போதைக்கு அடிமையான 1187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் விசேட பணியகம் பட்டியலிட்டுள்ள சந்தேகநபர்களின் பட்டியலில் 4,665 பேரில் 1,375 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
கில்மிசாவை நேரில் சென்று சந்தித்தார் சிறீதரன் எம் பி
கில்மிசாவை நேரில் சென்று சந்தித்தார் சிறீதரன் எம் பி
இந்தியத் தொலைக்காட்சியின் சரிகமப இசைநிகழ்வில் வெற்றியாளராக முடிசூடி, நேற்றையதினம் நாடுதிரும்னார் .
“ஈழத்தின் இசைக்குயில்” கில்மிஷாவை, பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று, நேரில்சென்று வாழ்த்தியுள்ளார்.


கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடிச்சாறு றூபஸ் காட்டுப்பகுதியில் விறகு எடுக்கச் சென்ற போது கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
கஞ்சிகுடிச்சாறு ரூபஸ்குளம் காட்டு பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) காலை இச்சம்பவம் இடம்பெற்றதுடன், கரடி தாக்கியதில் தலை, காலில் பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கரடி தாக்கியதில் தந்தையும் மகனும் படுகாயம்
இதனைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக திருக்கோவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
திருக்கோவில் 04 காயத்திரி கிராமத்தைச் சேர்ந்த தந்தையும் மகனுமே இவ்வாறு கரடி தாக்குதலுக்கு உள்ளானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது அத்தோடு இதுவரையில் திருக்கோவில் பிரதேசத்தில் 04 பேர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
இந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த நாட்டில் 700 க்கும் மேற்பட்ட தட்டம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதில் கொழும்பு, கம்பஹா மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர களுத்துறை, காலி, மாத்தறை, கண்டி, குருநாகல் மாவட்டங்கள் மற்றும் கல்முனை பிரதேசங்களில் இருந்தும் அம்மை நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
தட்டம்மை என்பது மோபிலி வைரஸ் இனத்தைச் சேர்ந்த பெராமிக்ஸோ வைரஸால் மிகவும் வேகமாக பரவும் நோயாகும்.
சுவாசக்குழாய் வழியாக உடலினுள் நுழையும் வைரஸ் நோயின் அறிகுறிகள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு தென்படும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் வேகமாக பரவும் தட்டம்மை நோய்
இதன் பிரதான அறிகுறிகள் காய்ச்சல், தடிமன், மூக்கு ஒழுகுதல் மற்றும் கண்கள் சிவத்தல்.
வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் பின்னர் 2019 ஆம் ஆண்டில் இலங்கை அம்மை நோயில் இருந்து விடுபட்டிருந்தது.
தெற்காசியாவில் அம்மை நோயை ஒழித்த ஐந்து நாடுகளில் இலங்கையும் ஒன்றாக காணப்பட்டது.
எவ்வாறாயினும், நான்கு வருடங்களின் பின்னர் இலங்கையில் இருந்து தட்டம்மை நோயாளர்கள் பதிவாகின்றமை கவலையளிக்கின்றது.
இலங்கையில் மீண்டும் பதிவாகும் தட்டம்மை நோய் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனமும் அவதானம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, தட்டம்மை நோயை ஒழிக்க உலக சுகாதார அமைப்பின் தெற்காசிய மண்டலம் மற்றும் தேசிய ஆலோசனைக் குழுவிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (28) பிற்பகல் சுகயீனமுற்றிருந்த குறித்த நபர், வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட பின்னர் மீண்டும் சுகயீனமடைந்துள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் ஹெரோயின் போதைப்பொருளுக்காக சிறைச்சாலையில் இருந்தவர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் நிமோனியா காய்ச்சலால் உயிரிழந்தார்.
களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு
இதேவேளை, மாத்தறை சிறைச்சாலையில் மூளைக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோயொன்றும் பரவி வரும் நிலையில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் காலி சிறைச்சாலையில் இரு கைதிகள் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தனர்.
தற்போதைய சூழ்நிலை காரணமாக மாத்தறை சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டுள்ள கைதிகள் அகுனகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், மூளைக் காய்ச்சலுக்கான நோயெதிர்ப்பு மருந்துகளை அவதான நிலையில் உள்ள மற்ற சிறைச்சாலைகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மதுபானங்களில் விலை அதிகரிப்பு
மதுபானங்களில் விலை அதிகரிப்பு
DCSL தனது மதுபானங்களில் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 90 ரூபாவாலும், 375 மில்லிலீற்றர் மதுபான போத்தல் 50 ரூபாவாலும் மற்றும் 180 மில்லி லீற்றர் மதுபான போத்தல் 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அரசாங்கத்தின் வெட் வரி அதிகரிப்பிற்கு அமைவாக இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது
கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்
கேப்டனுக்கு அஞ்சலி செலுத்திய செந்தில் தொண்டமான்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்களின் உடலுக்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
கேப்டனுடன் பழகிய நாட்களை நினைவு கூர்ந்ததுடன், விஜயகாந்தின் இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு
வெலிபன்ன, பல்லேகொட வீதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வெலிப்பன்ன பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.
நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் களுத்துறை நாகொட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



































