மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

முந்தல் பகுதியில் உள்ள மூன்று பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , சுமார் 8 இலட்சம் பெறுமதியான பணம் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் கீழ் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், கைது செய்யப்பட்ட மாணவர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் மடிக் கணினி, மைக், வைபை ரவுட்டர், புரஜெக்டர் (Projector) உள்ளிட்ட உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முந்தல் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை உள்ளிட்ட இரண்டு ஆரம்ப பாடசாலைகளில் உபகரணங்களை சேதப்படுத்தி , உபகரணங்களையும் பணத்தையும் திருடியுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று பாடசாலைகளில் திருடிய மாணவர்கள் இருவர் கைது

மேற்படி பாடசாலைகளில் நிர்வாக காரியாலயத்தில் இருந்த உபகரணங்களை சேதப்படுத்தி மாணவர்கள், 30 ஆயிரத்திற்கும் அதிக பணத்தை திருடி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறு இரண்டு தடவைகள் குறித்த பாடசாலைகளுக்குள் புகுந்து பணத்தை திருடிய மாணவர்கள், பணம் கிடைக்காத போது அந்த பாடசாலைகளில் இருந்த உபகரணங்களை திருடிச் சென்றுள்ளனர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மீண்டும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி

மீண்டும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி

நாட்டில் ஸ்திரமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதும், இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் எனவும் எந்தக் கட்சியைப்

பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்கும் அதேவேளையில், நல்லிணக்கம் தொடர்பான தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்க எதிர்பார்ப்பதாகத்

தெரிவித்த ஜனாதிபதி, எதிர்வரும் மார்ச் மாதம் அது தொடர்பான விசேட அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

பதுளை குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் இன்று (27) கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஒரேயொரு முஸ்லிம் தேசிய பாடசாலையான குருத்தலாவ முஸ்லிம் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை பாடசாலை மாணவர்கள் அன்புடன் வரவேற்றனர்.

நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட கல்லூரியின் புதிய இணையத்தளமும் ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

மீண்டும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி

கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வெளியிடப்பட்ட நினைவு சஞ்சிகையை பாடசாலை அதிபர் ஏ.ஏ சமூனினால் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது.

க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சிறந்த பெறுபெறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதக்கங்களையும் வழங்கி வைத்தார்.

கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு விழாவுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி, நினைவுப் புத்தகத்தில் ஒரு குறிப்பொன்றை பதிவிட்டதோடு, கல்லூரி ஆசிரியர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியதாவது:

நாட்டின் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும் வகையில், அரசாங்கம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டத்தை வலுவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அதற்கு உலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுள்ளோம்.

இந்த வேலைத்திட்டத்துடன் நாம் முன்னோக்கிச் சென்றால், நிச்சயமாக நாட்டில் நிலையான பொருளாதாரத்தை உருவாக்க முடியும். அதேநேரம் நாட்டின் ஏனைய பிரச்சினைகளும் தீர்க்கப்படும்.

எனவே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரும் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்தேன். ஆனால் நாங்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை.

இந்த நாட்டில் இன்று தீர்க்கப்பட வேண்டிய இரு பிரதான பிரச்சினைகள் உள்ளன. அவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு எம்முடன் இணைந்து செயற்படுமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.

நாட்டில் நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது முதல் விடயமாகும். இரண்டாவது விடயம் நாட்டின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாகும்.

ஒரு நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல, நாட்டில் நல்ல பொருளாதாரம் மற்றும் மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அத்துடன் இலங்கையர் என்ற அடையாளம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மீண்டும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி

சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என எந்த இனத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அனைத்து மக்களும் இலங்கையர்களே.

இன்று எமது நாட்டில் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சிங்கள அடையாளத்தையும், மதத்தையும், கலாசாரத்தையும் பாதுகாத்து முன்னோக்கிச் செல்ல நாம் செயற்படுகின்றோம்.

ஏனைய இனத்தினரையோ, மதத்தினரையோ ஒருபோதும் சிறுமைப்படுத்தக்கூடாது. நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அனைவரும் இலங்கையர்களாக முன்னோக்கிச் சென்றால் மட்டுமே வளமான நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

சிங்கள மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தீர்வுகளை வழங்கியுள்ளோம், ஏனைய பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை வழங்கி வருகின்றோம். அத்துடன், ஏனைய இனத்தவர்களின் பிரச்சினைகளிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்த போதிலும், ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்னும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் உள்ளன. அரசாங்கம் என்ற வகையில் அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறோம்..

சிலர் தமது கிராமங்களை இழந்துள்ளனர். எனவே, 1985 ஆம் ஆண்டு வரைபடத்தின் பிரகாரம் செயல்பட முடிவு செய்துள்ளேன்.

அந்த வரைபடத்தின்படி, தற்போது எதாவது கிராமம் காடுகளால் மூடப்பட்டிருந்தால், அந்த கிராமங்களில் உள்ள மக்கள் குடியேற அனுமதிக்க வேண்டும். அதன் உரிமையை அந்த மக்களுக்கு வழங்க வேண்டும்.

அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் ஏற்கனவே அந்த உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

இன்னும் சிலருக்கு அந்தப் பிரதேசங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கவில்லை. நாங்கள் அந்த பிரச்சினைகள் தொடர்பில் தனித்தனியாக பணியாற்றி வருகிறோம்.

அத்துடன், காணாமற்போனோர் பிரச்சினை, இழப்பீடுகள் உட்பட இதுவரையில் தீர்க்கப்படாத சகல பிரச்சினைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தி வருகின்றோம்.

அத்துடன் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். எல்லாப் பிரச்னைகளும் தீர்ந்தாலும், வலுவான பொருளாதாரம் இல்லை என்றால், மீண்டும் அதே பிரச்சினைகள் தலைதூக்கும்.

மலையக தமிழ் மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, செயல்பட்டு வருகிறோம். அவர்களுக்கு காணி, கல்வி மேம்பாடு உள்ளிட்ட உரிமைகளை வழங்க விசேட திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம்.

அத்துடன் முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அமைச்சரவையில் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கொவிட் காலத்தில் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினை எழுந்தது.

அதற்கான வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கவில்லை. ஏனைய நாடுகள் அது பற்றிய முடிவுகளை பிற்காலத்தில் மாற்றிக்கொண்டாலும், இலங்கையில் அந்த முடிவுகளை மாற்ற நீண்ட காலம் எடுத்தது.

அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அத்தகைய நிலைமை மீண்டும் ஏற்படாமல் இருக்க சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இறுதிச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது அந்தந்த மதத்தின்படி முடிவு செய்யப்பட வேண்டும்.

இது குறித்து எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதமளவில் அறிக்கையொன்றை வெளியிட எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி தெரிவித்தார்.

வாகனங்கள் மீது முறிந்து விழுந்த மரம்
Posted in இலங்கை செய்திகள்

வாகனங்கள் மீது முறிந்து விழுந்த மரம்

வாகனங்கள் மீது முறிந்து விழுந்த மரம்

கண்டி அஸ்கிரிய திலக் ரத்நாயக்க மாவத்தையில் வளர்ந்திருந்த அரச மரம் மற்றும் மனோரஞ்சிதம் மரம் ஆகிய இரண்டு மரங்களும் முறிந்து விழுந்தமையால், அந்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி உள்ளிட்ட எட்டு வாகனங்கள்

சேதமடைந்துள்ளன. கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கண்டி மாநகரில் புதன்கிழமை (27) முற்பகல் 11 மணியளவில் பெய்த கடும் மழையினால், பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக, பொலிஸ் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திரும்பும் முற்சந்தியில் இருந்த இவ்விரு மரங்களும் ஒரே நேரத்தில் வீதியில் சரிந்துவிட்டுள்ளது.

வாகனங்கள் மீது முறிந்து விழுந்த மரம்

அப்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி, கண்டி தேசிய வைத்திசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏனைய ஏழு வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.

இந்த மரங்களின் வேர்கள் செத்துவிட்டதாக அதிகாரிகளின் கவனத்துக்கு தாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்திருந்தோம் என அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

வீடியோ

இலங்கையில் மீண்டும் மகிந்த ராஜபக்ச பிரதமராகிறார் .
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் நாங்கள் வெல்வோம் மகிந்தா ஆசையை பாரு

தேர்தலில் நாங்கள் வெல்வோம் மகிந்தா ஆசையை பாரு

அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தை அரசாங்கம் பெறுவது உறுதியாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் ஆட்சியைப் பிடிக்கும் வரை எதிர்க்கட்சிக்கு செல்வதோ அல்லது பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமையைப் பெறுவதோ தமது எதிர்பார்ப்பு இல்லை என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேர்தலில் நாங்கள் வெல்வோம் மகிந்தா ஆசையை பாரு

“கிரிந்திவெல மகிழ்ச்சியான குடும்பம்” கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியின் இரண்டாம் நாள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்,

கேள்வி:- அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு. கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பீர்களா?

பதில்: அப்படி எதுவும் இல்லை. அமைப்பாளர்களின் தவறில்லை. தேர்தலும் உண்டு.

கேள்வி:-கட்சியை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?

பதில்:- கட்சியில் இருந்து விலகியவர்களுக்கு பதிலாக புதியவர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த விஷயங்கள் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன என்று நினைக்கிறேன்.

கேள்வி:- இந்த நாட்களில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

பதில்- இந்த அரசாங்கம் செய்த சிறந்த பணியாக நான் கருதுகிறேன். போதைப்பொருளால் இந்த நாடு அழிந்து வருகிறது.

கேள்வி:- எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்க நீங்கள் தயாராகி வருவதாகப் பேசப்படுகிறது. அது உண்மையா?

பதில்: இதுவரை அப்படி ஒரு கதை இல்லை. அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பது எங்கள் நம்பிக்கை. எதிர்க்கட்சிக்கு செல்லும் எதிர்பார்ப்ப இல்லை.

கேள்வி: எதிர்காலத்தில் வரி குறைக்கப்படுமா? அதிகரிக்குமா?

பதில்:- வரிகளை நீக்க முடியாது.வரிகள் இருக்கும். அதாவது மக்கள் நியாயமான வரி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார்.

வீடியோ

ரயில் மோதி வாலிபன் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

வடக்கிற்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயமாக்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஜனவரி 07 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மஹவ தொடக்கம் அனுராதபுரம் வரையான வடக்கு ரயில் மார்க்கம் அன்றைய தினம் முதல் 06 மாத காலத்திற்கு மூடப்படும் என அதன் பிரதி முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே குறிப்பிட்டார்.

இந்த காலப்பகுதியில் கொழும்பில் இருந்து மஹவ மற்றும் அனுராதபுரத்திலிருந்து காங்கசன்துறை வரை மட்டுமே ரயில் சேவைகள் இடம்பெறும்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை பகுதியில் உள்ள ரயில்வே திணைக்களத்திற்கு சொந்தமான தொழிற்சாலையில் சொத்துக்களை கொள்ளையிட வந்த மூவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று (26) காலை சந்தேகநபர்கள் மூவரும் சொத்துக்களை கொள்ளையிட முற்பட்ட போது, ​​அதனை தடுக்க சென்ற ரயில்வே பாதுகாப்பு அதிகாரி ஒருவரை சந்தேகநபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்க முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரி, சந்தேக நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

கொள்ளையிட வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், மற்றைய இரு சந்தேகநபர்களும் தப்பிச் சென்றுள்ளனர்.

காயமடைந்தவர் மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவர் தற்போது பொலிஸ் பாதுகாப்பில் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் அறிக்கை கோரல்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் அறிக்கை கோரல்

யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் அறிக்கை கோரல்

யாழ்ப்பாண பல்கலை மாணவியின் மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி, மருந்தின் ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் அறிக்கை கோரல்

உயிரிழந்த பெண்ணுக்கு எவ்விதமான ஒவ்வாமையும் இல்லை எனவும் செலுத்தப்பட்ட ஊசி மருந்து என்னவென்பது தமக்கு தெரிவிக்கப்படவில்லை என பொலிஸாருக்கான முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்ற குணரத்தினம் சுபீனா என்ற 25 வயதான மாணவி கடந்த 23ம் திகதி உயிரிழந்தார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதன்போது டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குறித்த மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவியின் உடற்கூறு பகுதி மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் மாணவியின் மரணம் தொடர்பில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிடம் அறிக்கை கோரியுள்ளார்.

வீடியோ

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்

விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்

பெண் ஒருவருடன் விடுதி ஒன்றிற்கு சென்ற நபரொருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பொரலஸ்கமுவிலிருந்து பதிவாகியுள்ளது.

சம்பவத்தின் பின்னர் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளதாக பொரலஸ்கமுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரலஸ்கமுவ தெஹிவளை வீதியில் உள்ள சமூபகார மாவத்தையில் உள்ள விடுதிக்கு பெண் ஒருவருடன் சென்ற நபரே திடீரென உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர், பொரலஸ்கமுவ வெரஹெர போதிராஜபுர பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவயந்துள்ளது.

விடுதிக்கு பெண்ணுடன் சென்றவர் மர்ம மரணம்

உயிரிழந்த நபர் நேற்று (25) மதியம் குறித்த பெண்ணுடன் விடுதிக்கு வந்துள்ளார், சில மணித்தியாலங்களின் பின்னர் குறித்த பெண் அறையிலிருந்து அலறியடித்தவாறு வெளியே வந்துள்ளார்.

பின்னர், அந்த நபர் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக விடுதி முகாமையாளரிடம் தெரிவித்தார்.

முகாமையாளர் அறைக்குச் சென்று பார்த்தபோது, ​​அவரது வாயிலிருந்து சளி வெளியேறியதைக் கண்ட அவர், உடனடியாக நடவடிக்கை எடுத்து முச்சக்கரவண்டியைக் கொண்டு வந்து அந்த நபரை வைத்தியசாலையில் அனுமதித்தார்.

அப்போது அந்த பெண் அங்கிருந்த தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.

தப்பியோடிய பெண்ணை தேடி விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெல்வது கடினம் விக்னேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெல்வது கடினம் விக்னேஸ்வரன்

மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரணிலுக்கு சாதகமாக களமிறங்கினாலே அன்றி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்தரிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் 2024 ம் ஆண்டு எந்த தேர்தல் எப்போது நடக்கும் என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது முதலில் பாராளுமன்றத் தேர்தல் நடாத்துவதற்கு வாய்ப்பு இல்லை ஏனென்றால் பாராளுமன்ற தேர்தல்

நடைபெற்று அதில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்கள் தற்போதைய ஜனாதிபதியை தொடர்ந்து இருக்க அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டினால் ஜனாதிபதி தேர்தல் தான் முதலில் நடக்கும் என எதிர்வு கூறப்படுகின்றது அப்படி நடந்தால் கூட நான்கு பிரதான கட்சிகளிலும்

ஜனாதிபதி தேர்தலில் ரணில் வெல்வது கடினம் விக்னேஸ்வரன்

முக்கியமானவர்கள் வேட்பாளர்களாக களமிறங்க கூடும் அவ்வாறு களமிறங்கினால் தனி ஒருவரினால் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்கினை பெற்றுக்கொள்ள முடியாது போய்விடும் அவ்வாறு இருக்கும்போது ரணில்

விக்கிரமசிங்க மீண்டும் ஜனாதிபதியாக வருவாரா என்ற கேள்வி எழுகின்றது? ரணில் ஜனாதிபதியாக வரவேண்டுமாக இருந்தால் மொட்டு கட்சியின்

வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு சாதகமாக அமைந்தால் மாத்திரமே ரணில் விக்ரமசிங்கவினால் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் எனவும் தெரிவித்தார்.

வீடியோ

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

நானுஓயா பிரதான நகரில் அமைந்துள்ள மாடு அறுக்கும் தொழுவத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அக்கிராம மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

நானுஓயாவில் முறைசாரா மற்றும் சட்டவிரோத பசுக்கொலை மற்றும் மாட்டிறைச்சி வியாபாரம் நடைபெறுவதாக உரிய ஆதாரங்களுடன் கூடிய புகைப்படங்கள் நானுஓயா பிரதேசவாசிகள் குழுவொன்றும் இதில் அதிகம்

மாடு அறுக்கும் தொழுவம் குறித்து முறைப்பாடு

பாதிக்கப்பட்ட தரப்பினர்கள் இணைந்து எழுத்து மூலம் அடங்கிய கையொப்பங்கள் மற்றும் உரிய தீர்வை வழங்குமாறு கோரி ஜனாதிபதி

சுகாதார அதிகாரிகள், பௌத்த விவகார அமைச்சர், நீதி அமைச்சர், மத்திய மாகாண ஆளுநர் மற்றும் தலைமை மாநகர சுகாதார பரிசோதகர் உட்பட 19 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், அடிக்கடி இப்பகுதியில் சட்டவிரோத மாடு வெட்டும் செயற்பாடுகள் இடம்பெற்றுவரும் நிலையில், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரியுள்ளனர்.

வீடியோ

கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

கடலில் மூழ்கி பொலிஸ் கான்ஸ்டபிள் மரணம்

கடற்கரையில் தனது நண்பர்கள் குழுவுடன் நீராடச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட பிரதேசத்தில் வசித்து வந்த 22 வயதான தெஷாஞ்சன தரிந்த என்ற கான்ஸ்டபிளே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வீடியோ

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கி பயணிகளுடன் அதி வேகமாக பயணித்த தனியார் பேருந்து நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

குறித்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு பல மாடுகள் பலத்த காயமடைந்துள்ளன.

மன்னார் சென்ற பேருந்து விபத்து 8 உயிர்கள் பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாடுகளை அடைக்கும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது குறித்த விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதி வேகமாக வந்த தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து குறித்த மாடுகளின் மீது மோதிய நிலையில் குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த தனியார் பேருந்து சாரதியின் கவனயீனமே குறித்த விபத்திற்கு காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை
Posted in இலங்கை செய்திகள்

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை

தாமரைக் கோபுரத்திற்கு 14 மில்லியன் பேர் வருகை

தாமரை கோபுரத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (24)மாத்திரம் சுமார் 7,522 பார்வையாளர்கள் வருகை தந்ததாக கொழும்பு தாமரைக் கோபுர நிர்வாகம் (தனியார்) தெரிவித்துள்ளது.

அதன்படி, 7,285 உள்ளூர் பார்வையாளர்களும், 237 வெளிநாட்டு பார்வையாளர்களும் கோபுரத்தை பார்வையிட்டனர்.

2022 செப்டம்பர் 15, முதல் மொத்தம் 1,400,444 உள்ளூர் பார்வையாளர்களும் 42,297
வெளிநாட்டவர்களும் கோபுரத்தைப் பார்வையிட்டுள்ளதாக நிர்வாகம் மேலும் தெரிவித்தது.

வீடியோ

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவடைந்துள்ளது. முத்தையன்கட்டுக்குளம், மதவாளர்சிங்கம்குளம், முறிப்புக்குளம் என்பன நந்திக் கடலில் கலந்ததன் காரணமாக வற்றாப்பளையின் வடக்கு வெளி,

அம்மன் கோவில் வெளி ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டிருந்த நெற்பயிர்ச் செய்கை பெரும் அழிவுகளை எதிர்கொண்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

நந்திக் கடலினை முழுமையாக நிரம்ப விடாமல் நேரத்துடன் பெருங்கடலுடன் கலக்கும் பகுதியில் வெட்டி விடுவதன் மூலம் வற்றாப்பளை பகுதியில்

விவசாயத்தினை பாதுகாக்க முடியும் என விவசாயிகள் தெரிவிக்கும் நிலையில் அவ்வாறு நேரத்துடன் நந்திக் கடல் வெள்ளத்தினை வேகமாக பெருங்கடலுடன் கலக்க வைக்க முடியாது.

முல்லைத்தீவு வற்றாப்பளையில் 240 ஏக்கர் நெற்பயிர் அழிவு

ஏனெனில் நந்திக் கடலின் கடல் உணவுப் பெருக்கம் பாதிக்கப்படும் என கடற்றொழிலாளர்களும் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில் இதற்கான நிரந்தர தீர்வாக வட்டுவாகல் பாலத்தில் இருந்து வட்டுவாகல் பக்கமாக

குறைந்தது 600 மீற்றர் துரமாவது நந்திக் கடலில் காணப்படுகின்ற சேற்றினை அகற்ற வேண்டும் என்பதே அனைவரதும் கோரிக்கையாக உள்ளது.

வீடியோ

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு

இந்தியாவில் உருமாற்றம் அடைந்த ஜேஎன் 1 வகை கொரோனா வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் திங்கட்கிழமை (25) கொரோனா தொற்று 628 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,054ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் 128 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

4000 யை தாண்டியது ஜேஎன் 1 பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 4,50,09,248 (4.50 கோடி) ஆக உள்ளது. தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,71,860 (4.44 கோடி) ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே, கொரோனா தொற்றுப் பரவலால் கேரள மக்கள் அச்சமடைய தேவையில்லையென அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியுள்ளார்.

வீடியோ

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை

கெஹலியவிடம் சி ஐ டி விசாரணை

இலங்கைக்கு தரமற்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் இல்லத்திற்குச் சென்று இன்று (26) பிற்பகல் அவரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

ரம்புக்வெல்லவுக்காக சட்டத்தரணிகள் குழுவொன்றும் ஆஜராகியிருந்தது.

தரமற்ற மருந்துகளை இறக்குமதி செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, மேற்படி அமைச்சின்

மருத்துவ வழங்கல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் டொக்டர் கபில விக்ரமநாயக்க மற்றும் சிலர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வீடியோ

பதுங்கு குழியில் நெதன்யாகு வெடித்து பாயும் ஏவுகணை
Posted in இலங்கை செய்திகள்

பதுங்கு குழியில் நெதன்யாகு வெடித்து பாயும் ஏவுகணை


பதுங்கு குழியில் நெதன்யாகு வெடித்து பாயும் ஏவுகணை

பதுங்கு குழியில் நெதன்யாகு அதன் அமைச்சர் பாதுகாப்பு தேடி மறைவு ,
வெடித்து பாயும் ஏவுகணைகளினால் பெரும் அழிவு ,
சொன்னபடி வெடிக்கும் ஹமாஸ் ,ஏவுகணை

வீடியோ

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர்.

அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், 2 பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை

, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று (25) இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இன்று திகதி விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்

பிரபல தொழிலதிபரின் துப்பாக்கியை திருடிய திருடன்

பிரபல வர்த்தக நிறுவனம் ஒன்றின் பிரதானி ஒருவரின் துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த வர்த்தகர் தனது உரிமம் பெற்ற தனிப்பட்ட துப்பாக்கி திருடப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் தூங்கும் போது படுக்கையில் வைத்திருந்த துப்பாக்கியை யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

சந்தேக நபர் துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்பட்ட 12 தோட்டாக்களை திருடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியன்று காணாமல் போயிருந்த மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் இன்று காலை மாத்தறை உயன்வத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும் ஒக்டோபர் 1 ஆம் திகதி டியூஷன் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

மாத்தறை, உயன்வத்தையில் தாம் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர்கள் பணிபுரியும் கடைக்குச் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் காணப்பட்ட இருவரும் இன்று காலை மாத்தறை பொலிஸாரால் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த இருவரின் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு யுவதிகளும் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

வீடியோ