இந்தியாவின் கட்டுப்பாட்டில் அனுரா சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்

வரலாற்றில் கல்விக்காக அதிக தொகையை ஒதுக்கிய பட்ஜெட்

நாட்டில் திங்கட்கிழமை (17) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில், வரலாற்றில் முதன்முறையாக கல்விக்கு என்று அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி நிலையை உயர்த்துவதற்காக ஒதுக்கப்பட்ட ஒதுக்கீடுகள் பின்வருமாறு:

  • முன்பள்ளி சிறார்களின் போசனையை அதிகரிக்க, காலை உணவு வழங்குவதற்காக ஒரு வேலை உணவுக்கு வழங்கப்படும் 60 ரூபாவினை 100 ரூபாவாக அதிகரிக்க முன்மொழியப்பட்டது. அதற்காக 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
  • தெரிவுசெய்யப்பட்ட ஆரம்பகால சிறு பராய அபிவிருத்தி நிலையங்களின் அபிவிருத்திக்காக ரூ.80 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
  • முன்பள்ளி ஆசிரியர்களின் சேவைகளுக்காக தற்போது வழங்கப்படும் கொடுப்பனவை 1000 ரூபாவினால் அதிகரிக்க 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
  • பாடசாலை உட்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாயும் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக 135 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கும் முன்மொழியப்பட்டது.
  • தற்போதுள்ள பாடசாலை முறைமையை மீளாய்வு செய்து தேசிய திட்டமொன்றை தயாரிப்பதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
  • தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை 750 ரூபாயில் இருந்து 1500 ரூபா வரையில் அதிகரிக்க 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
  • விளையாட்டுத் துறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு மேலதிக உணவு உதவித்தொகை 5,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தவும், தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கான உதவித்தொகையை 4,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாக அதிகரிக்கவும் ரூ. 200 மில்லியன் ரூபா முன்மொழியப்பட்டது.
  • பல்கலைக்கழக மாணவர்களுக்கான மஹாபொல உதவித்தொகையை ரூபா 5,000 இலிருந்து ரூபா 7,500 ஆக அதிகரிக்கவும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாணவர் உதவித் தொகையை ரூபா 4,000 இலிருந்து ரூபா 6,500 ஆக அதிகரிக்கவும் 4,600 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
  • உயர்தர பல்கலைக்கழகத்தில் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக திறமையானவர்களுக்கு வெளிநாடுகளில் கல்வி கற்கத் தேவையான ஏற்பாடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க 200 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
  • யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய பிரதேசங்களில் உள்ள நூலகங்களை மேம்படுத்த 100 மில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டது.
  • ஐந்து மாகாணங்களில் விசேட விளையாட்டுப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கு 500 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு முன்மொழியப்பட்டது
உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடல்
Posted in இலங்கை செய்திகள்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடல்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடல்

உள்ளூராட்சித் தேர்தல் குறித்து கலந்துரையாடல் வரவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாட, பாராளுமன்றத்தில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல் ஆணைக்குழுவை சந்தித்துள்ளனர்.

சந்திப்பின் போது எதிர்க்கட்சி பிரதிநிதிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கடமைகளை, குறிப்பாக பட்ஜெட் விவாதத்தின் போது, ​​அதை இடையூறு இல்லாமல் நிறைவேற்ற அனுமதிக்கும் வகையில், உள்ளூராட்சித்

தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவை வலியுறுத்தியதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்கல் மற்றும் பிரச்சார செயல்முறை தங்கள் பாராளுமன்றப் பொறுப்புகளில் தலையிடக்கூடும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கவலைப்படுவதாக தேர்தல் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“அரசாங்கத்தின் புகழ் குறைவதற்கு முன்பு தேர்தலை நடத்த அரசாங்கம் ஆர்வமாக உள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏப்ரல் மாதத்தில் அரசு ஊழியர்களுக்கான சம்பளம் வழங்கப்படும் நேரம் குறித்த பிரச்சினையை அரசாங்கம் எதிர்கொள்ள வாய்ப்புள்ளது.

இது தேர்தலுக்கு முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் அரசாங்கத்தின் தோல்வியை அம்பலப்படுத்தக்கூடும், இது அதன் வாக்காளர் தளத்தில் பெரும் பகுதியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.

அரசாங்கத்தின் அழுத்தத்திற்கு செவிசாய்க்காமல், தேர்தல் ஆணைக்குழு அதன் சுதந்திரத்தையும் நம்பகத்தன்மையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியதாக எம்.பி. சாணக்கியன் மேலும் கூறினார்.

பாண் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாண் விலை குறைந்தது

பாண் விலை குறைந்தது

பாண் விலை குறைந்தது கோதுமை மாவின் விலை கிலோகிராமுக்கு ரூ.10 குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, 450 கிராம் பாணின் விலையை ரூ.10 குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பச்சை மிளகாய் கசந்தது
Posted in இலங்கை செய்திகள்

பச்சை மிளகாய் கசந்தது

பச்சை மிளகாய் கசந்தது

பச்சை மிளகாய் கசந்தது அண்மைக்காலமாக பச்சை மிளகாயின் விலை விஷம் போல் ஏறி வருகிறது . கல்முனை பிரதான சந்தையில் ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் விலை 2,000 ரூபாவிற்கு செவ்வாய்க்கிழமை (19) விற்கப்பட்டது.

சந்தையில் இந்த விலை என்றால் கிராமங்களில் உள்ள சில்லறை கடைகளில் நிலைமை வேறு. கிலோ கிராம் 2,400 ரூபாய் வரைக்கும் விற்கப்படுகிறது.

அதேவேளை, ஏனைய மரக்கறிகளின் விலைகளும் என்று மில்லாதவாறு அதிகரித்து வருகின்றன.

பிரதான சந்தையில், திங்கட்கிழமை (17) சில மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் விலைகள் இவை.

மிளகாய் -2,000

பெ.வெங்காயம்-240 ரூபாய்

சி.வெங்காயம்-400 ரூபாய்

உ.கிழங்கு(வெ)-250 ரூபாய்

உ.கிழங்கு (சி)(நூரளை)-550 ரூபாய்

லீக்ஸ்-700 ரூபாய்

கரட் (நூரளை)-1,000 ரூபாய்

கரட் – 900 ரூபாய்

தக்காளி – 200 ரூபாய்

கோவா- 700 ரூபாய்

இஞ்சி -2,000 ரூபாய்

வெ.பூண்டு- 700 ரூபாய்

போஞ்சி-300 ரூபாய்

தேசிக்காய்-150 ரூபாய்

பீட்ரூட்-600 ரூபாய்

சுரைக்காய் -200 ரூபாய்

கத்தரிக்காய்- 800 ரூபாய்

வெண்டைக்காய்-600 ரூபாய்

பயற்றங்காய் – 600 ரூபாய்

பழப்புளி- 1,400 ரூபாய்

இவ்வாறு பரவலாக விலைகள் உயர்ந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் திருப்தியாக உண்டு வாழ்வதற்கு முடியாமல் திண்டாடுகின்றனர்.

லஞ்சம் பெற்ற PHI கைது
Posted in இலங்கை செய்திகள்

கனடா செல்ல முயன்ற ஜோடி கைது

கனடா செல்ல முயன்ற ஜோடி கைது

கனடா செல்ல முயன்ற ஜோடி கைது ,போலியான கனேடிய விசாக்களைப் பயன்படுத்தி ஜப்பான் வழியாக கனடாவுக்குத் தப்பிச் செல்ல முயன்ற இலங்கைத் தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இருவரும் யாழ்ப்பாணப் பகுதியில் வசிக்கும் திருமணமான தம்பதிகள். கணவருக்கு 40 வயது, மனைவிக்கு 34 வயது.

ஜப்பானின் நரிட்டாவிற்கு திங்கட்கிழமை (17) இரவு 8.35 மணிக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-454 இல் ஏறுவதற்காக அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இருவரும் விமான நிலையத்தை வந்தடைந்தபோது, ​​அவர்கள் விமான அனுமதிக்காக சமர்ப்பித்த ஆவணங்களில் கனேடிய விசாக்கள் இருந்ததாக சந்தேகித்த விமானப் போக்குவரத்து அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் எல்லை கண்காணிப்புப் பிரிவின் அதிகாரிகளிடம் அவற்றை ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.

முகம் காட்டி அருச்சுனாவுக்கு வன்னி மைந்தன் சவால் | எப்படி வசதி இப்ப சார் |Vanni mainthan
Posted in இலங்கை செய்திகள்

முகம் காட்டி அருச்சுனாவுக்கு வன்னி மைந்தன் சவால் | எப்படி வசதி இப்ப சார் |Vanni mainthan

முகம் காட்டி அருச்சுனாவுக்கு வன்னி மைந்தன் சவால் | எப்படி வசதி இப்ப சார் |Vanni mainthan

video

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ,இந்திய கடற்பரப்பிற்குள் யாரும் அத்துமீறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனையே நாங்களும் செய்கிறோம்.

தொப்புள் கொடி ஊறவுகளாக இருக்கிற தமிழக மீனவர்களை நாங்கள் திட்டமிட்டு கைது செய்யவில்லை என இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“ இலங்கை கடற்பரப்பில் இலங்கை மீனவர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது இந்திய மீனவர்கள் தான். அதாவது இந்திய மீனவர்களின் தொடரும் அத்துமீறல்களினால் தான் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உண்மையான நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது இந்தியாவில் எமக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்துகின்றனர்.அந்தப் பேரணியில் தமிழகத்தின் கனிமொழி உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகையால் கனிமொழி உள்ளிட்டவர்களிடம் நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது, உங்களுடைய நாட்டு படகுகள் உங்கள் எல்லையை மீற வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள்.

மேலும் கனிமொழிக்கும் அமைச்சருக்கும் நாங்கள் சொல்ல வேண்டியது வேறேதுமில்லை. நாங்கள் தொப்புள் கொடி உறவுகள் தான். எனினும் தொப்புள் கொடியாக இருந்தாலும் எங்கள் கடலுக்கு வந்து எங்கள் மீன்களை பிடிக்க வேண்டாம். எங்கள் வளத்தை அழிக்க வேண்டாம் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

அதே நேரத்தில் இந்திய மீனவர்கள் யாரும் இங்கு வெறுமனே கைது செய்யப்படவில்லை. உங்கள் கடல் எல்லையை தாண்டி எமது கடல் எல்லைக்கு வருகிற போதே நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கடல் எல்லைக்குள் யாரும் வருகின்ற போது நீங்கள் எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்குறீர்களோ அதேபோல் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகிற போது நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம்.

அதாவது எமது கடல் எல்லைக்குள் யாரும் நுழைகிற போது கடற்படையினர் கைது செய்கின்றனர். இவ்வாறு கைது செய்பவர்களை நீதிமன்றத்தில் கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து நீதிமன்றில் பாரப்படுத்துகிற போது நீதி மன்றமே தீர்ப்பை வழங்குகிறது.

குறிப்பாக யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்கள் இப்போது தான் ஓரளவிற்கு தலைதூக்கி கொண்டு வருகின்றனர்.

ஆனால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உங்களது ஆயிரக்கணக்கான படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி எமது கடல்வளத்தை நாசமாக்கி செல்கின்றனர்.

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது. எனவே எமது கடல் பரப்பிற்குள் அத்துமீற வேண்டாம் ” என தெரிவித்துள்ளதுடன் இந்திய மீனவர்களுக்கு முதலில் கூறி அத்துமீறுவதை தடுத்து நிறுத்துங்கள் எனவும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதாரத்துக்கு 604 பில்லியன் ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

சுகாதாரத்துக்கு 604 பில்லியன் ரூபாய்

சுகாதாரத்துக்கு 604 பில்லியன் ரூபாய்

சுகாதாரத்துக்கு 604 பில்லியன் ரூபாய் ,2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரத்துக்காக 604 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் ஊடக மருத்துவமனையின் மருத்துவ செலவுகள் சமண செய்யப்படும் என எதிர்வு கூற படுகிறது ,ஆனால் அரச மருத்துவ துறையில் ,மருந்து பொருட்களை மக்கள் வெளியில் வாங்கி செல்கிறார்கள் .

இந்த விடயம் நிவர்த்தி செய்யப்படுமா என்பதே கேள்வியாக உள்ளது .

இது ஒரு திட்டமிட்டபட்ட தேர்தல் வாக்கு கண்துடைப்பு விடயமாக பார்க்க படுகிறது .

ஓய்வுபெற்றவர்களின் சம்பளம் ஜனவரி முதல் 2500 ரூபாய்
Posted in இலங்கை செய்திகள்

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு

தனியார் துறையினரின் சம்பளம் அதிகரிப்பு ,2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தனியார் துறை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதாந்திர சம்பளத்தை

21,000/- இலிருந்து ரூ. 27,000/- ஆகவும், 2026 முதல். 30,000/- ஆகவும் உயர்த்த முதலாளிகள் சங்கங்கள் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

வரவுசெலவுத்திட்டத்தை முன்வைத்து இன்றைய தினம் உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார்.

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது
Posted in இலங்கை செய்திகள்

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது

நெல் அறுவடை செய்யும் இயந்திரம் குடைசாய்ந்தது ,நெல் அறுவடை செய்யும் இயந்திரமொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கல்முனை

அம்பாறை பிரதான வீதியில் சம்மாந்துறை தென்கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்திற்கு அருகாமையில் திங்கட்கிழமை (17) இடம்பெற்றது.

இவ்விபத்தில் உழவு இயந்திரம் மற்றும் நெல் அறுவடை செய்யும் இயந்திரம் சேதமடைந்துள்ள நிலையில் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
Posted in இலங்கை செய்திகள்

புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியது

புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியது

புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியது புலமைப் பரிசில் உதவித்தொகை இரட்டிப்பாகியதுஅனுரகுமார ஆட்சியில் வெளியிட பட்டுள்ள வரைவது செல்வது அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது .

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான உதவித்தொகையானது 750 ரூபாயிலிருந்து 1,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சரான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு

அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு ,அரச ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக .ஆளும் அனுரகுமார ஆட்சியில் வெளியிட பட்டுள்ள வரைவது செல்வது அறிக்கையில் தெரிவிக்க பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் இந்த விடயம் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அறிவிக்க பட்டுள்ளது .

எனினும் சம்பள உயர்வு அதிகரிக்க படும் அதேவேளையில் வரி வீதமும் அதிகரிக்க படுகிறது .

பொருளாதர நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை எப்படி ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அதிகரிக்கும் என்பதில் பலத்த சந்தேகங்களை இந்த வரவு செலவு அறிக்கை எழுப்பியுள்ளமை குறிப்பிட தக்கது

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்
Posted in இலங்கை செய்திகள்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர்

இளங்குமரன் எம்.பியை பார்வையிட்டார் பிரதமர் ,விபத்தில் சிக்கிக் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட

பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனை பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்று (15) நேரில் சென்று பார்வையிட்டார்.

பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனின் உடல் நிலை தொடர்பிலும் வைத்தியர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் பயணித்த வாகனம் சாவகச்சேரி தளங்கிளப்பு பகுதியில் நேற்று மாலை விபத்துக்குள்ளானதில் அவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்தனர்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள்

இலங்கை வரும் சீனா அதிகாரிகள் ,ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நல்லிணக்கம் மற்றும் இன விவகாரங்களுக்கான சீன

அமைச்சர் பான் யூ தலைமையிலான உயர் மட்ட குழுவினர் எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்டவர்களை சந்திக்க உள்ளதுடன், கண்டி மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீன அமைச்சர் பான் யூ, இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், இன நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

Imf குழு இன்று எரிசக்தி அமைச்சகம் மற்றும் CEB அதிகாரிகளை சந்திக்க உள்ளது
Posted in இலங்கை செய்திகள்

IMF வுடன் நாளை பேச்சு

IMF வுடன் நாளை பேச்சு

IMF வுடன் நாளை பேச்சு ,இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை தனியார்மயப்படுத்தும் விடயத்தை மாற்றியமைக்க சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள அரசாங்கம்,

அரச நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் வரவு – செலவுத் திட்டம் திங்கட்கிழமை (17) சமர்பிக்கவுள்ளது

இதன் பின்னர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைக்கு சர்வதேச நாணய நிதியம், இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட உள்ளதுடன், மார்ச் மாதம் 21ஆம் திகதி வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.

குறித்த வரவு – செலவுத் திட்டமானது மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் முன்வைக்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் இந்த வரவு – செலவுத் திட்டமானது சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் என நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் திகதி இலங்கையில், சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் விரிவாக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வு குறித்து பணியாளர் மட்ட ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது.

இதன் பிரகாரம், நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட சுமார் 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

இந்த நிதியுதவிக்கான மேலதிக உறுதிப்பாடல்களுக்கான கலந்துரையாடல்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெற உள்ளது.

கடந்த 2024ஆம் ஆண்டின் நான்காவது – மூன்றாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதுடன், அதே ஆண்டின் நான்காவது காலாண்டில் சராசரி பணவீக்கம் இலக்கை விட மிகவும் குறைவாகவே உள்ளது.

அத்துடன், 2024ஆம் ஆண்டின் இறுதியில் சர்வதேச இருப்புக்கள் 6.1 பில்லியனாக அதிகரித்துள்ளது.

எவ்வாறாயினும், 2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை கருத்தில் கொள்ளும் போது, கடந்த நவம்பரில் எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்துடன் தொடர்புப்படுகிறது.

அடுத்த வரும் வாரங்களில் இடம்பெற கூடிய கலந்துரையாடல்களின் போது நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக நாணய நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில் ,யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த எம்.பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது

சீமான் விக்கிரவாண்டி விற்பனைக்கு
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு

பிரபாகரனின் படத்தை பயன்படுத்த சீமானுக்கு தடை கோரி வழக்கு ,தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரன் படத்தை பொதுவெளியில் பயன்படுத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை

ஒருங்கிணைப்பாளரான சீமானுக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த சட்டத்தரணி எல்.கே.சார்லஸ் அலெக்ஸாண்டர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் கடந்த 2010ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.

கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையிலான சண்டையின் போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரான பிரபாகரனை, சீமான் போர் முனையில் சந்தி்த்து பேசியதாகவும், அதன் பிறகு ஏ.கே.47 ரக துப்பாக்கியால் போர் பயிற்சி எடுத்ததாகவும் சீமான் தமிழகத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழகத்தில் படுகொலை செய்யப்பட்டபிறகு, விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் இலங்கை போர் தொடர்பான மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு சீமான் வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

குறிப்பாக தடை செய்யப்பட்ட இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் படத்தை தனது அரசியல் ஆதாயங்களுக்காக தேர்தல் பிரசாரங்களில் பயன்படுத்தி வருகிறார்.

அவர் மார்பிங் செய்யப்பட்ட படங்களை பொது வெளியில் பயன்படுத்தி வருவதாக சங்ககிரி ராஜ்குமார் உள்ளிட்டோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது ராஜீவ் காந்தியை நாங்கள் தான் கொலை செய்தோம் என சீமான் பகிரங்கமாக பேசியுள்ளார்.

எனவே, தடை செய்யப்பட்ட பிரபாகரன் படத்தை பொது வெளியில் பயன்படுத்த சீமானுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை
Posted in இலங்கை செய்திகள்

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை

மியன்மாரில் சிக்கியிருந்த இலங்கையர்களின் தற்போதைய நிலை ,மியன்மாரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 13 இலங்கையர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 வயதுக்குற்பட்ட 11 ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்கியுள்ளனர்.

அவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் தாய்லாந்து எல்லையிலிருந்து பாங்கொக்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.

பின்னர் அவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

இதற்கிடையில், ஏனைய நால்வரும் மின்மாரில் தனித்தனி சைபர் கிரைம் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை விரைவில் மீட்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன

பேருந்து விபத்து பலர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம்

பேருந்து விபத்து பலர் படுகாயம் ,பாணந்துறை மேம்பாலத்திற்கு அருகில் இன்று (15) அதிகாலை 4 மணியளவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் காயமடைந்து பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லுணுகம்வெஹெரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

விபத்து நடந்த போது பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

பேருந்தின் சக்கரங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி பாணந்துறை தெற்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி

அர்ச்சுனா தாக்கிய சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரை தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து இரு தரப்பினரதும் சம்மதத்துடன் சமரசமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு (12) பாராளுமன்ற உறுப்பினரும் , சட்டத்தரணி கௌசல்யாவும் உணவருத்திக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு வந்த இருவர், அவர்களுடன் கதைக்க முற்பட்ட நிலையில், தர்க்கமாக மாறி கைக்கலப்பில் முடிந்தது.

கைக்கலப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நபர் ஒருவரின் தலையில் பீங்கானால் அடித்தமையால், அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, தனது உயிருக்கு ஆபத்து என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

அதேவேளை, காயமடைந்த நபரும் தன் மீதான தாக்குதலுக்கு முறைப்பாட்டை வழங்கி இருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (14) இரவு இரு தரப்பினரையும் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, யாழ்ப்பாண உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்வதாகவும், முறைப்பாடுகளை மீள பெற்றுக்கொள்வதாகவும் கூறி சமரசமாக செல்வதற்கு உடன்பட்டதை அடுத்து, இரு தரப்பினருக்கும் இடையிலான பிரச்சினை பொலிஸ் நிலையத்தில் வைத்து தீர்த்து வைக்கப்பட்டது