வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்
Posted in இலங்கை செய்திகள்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம்

வீதிவிபத்துகளில் அழிக்கப்படும் தமிழினம் சம்பவங்கள் தமிழர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.கண்ணுக்கு தெரியாமல் நடத்த படும் இன அழிப்பாக இது காணப்படுகிறது .Tamils ​​destroyed in road accidents

வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி

நாள்தோறும் இலங்கையில் இடம்பெற்று வருகிற வீதி விபத்துகளில் பெரும்பான்மையாக ,தமிழ் மக்களே பலி யாகியும், காயமடைந்தும் வருகிறார்கள்.

இறுதி யுத்தம் முடிவிற்று 16 வருடங்கள் ஆகும் இவ்வேளையில், வீதி விபத்துகளில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலியாகி உள்ளது, மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை

இது இலங்கை அரச பயங்கரவாதத்தால் ,திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் ஒரு இனப்படுகொலை என்பதை காண்பிக்கிறது .

தமிழர் பகுதிகளில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறுவதும், விபத்துகளில் தமிழர்களே அதிகமாக பலியாகி வருகிற சம்பவம் ,மேற்படி ஐயப்பாட்டை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆகவே இன வெறியுடன் அலையும் ஆட்சியாளர்களும் ,இராணுவ கட்டமைப்பும் தமிழர்களை வாழ விடாது அழிக்கும் நடவடிக்கை ஈடுபட்டுள்ளதையே மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகிறது.

எனவே தமிழ் மக்கள் இது தொடர்பாக விழித்தெழ வேண்டும் , உடன் இந்த விடயங்கள் தொடர்பாக ஊடகங்கள் ,சமூக ஊடகங்கள் வாயிலாக ,பேச வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் கருத்தாக உள்ளது.

அவ்வாறு இதை பேசு பொருளாக மாற்றினால் தொடர்ந்தும்பேசவேண்டும் அவ்வாறு பேச மறுத்தால் ,இவ்விதம் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதை, யாராலும் தடுக்க முடியாது என்பதே இன்றைய கள நிலவரமாக உள்ளது.

ரணில் கைது நாடகம் முடிந்தது
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கைது நாடகம் முடிந்தது

ரணில் கைது நாடகம் முடிந்தது

ரணில் கைது நாடகம் முடிந்தது , இப்பொழுது ரணில் நிம்மதியாக உலாவி வருகிறார். அனுரா அரசின் அரசியல் கபட நாடகமாக இது வெளிப்பட்டுள்ளதுஎன்பதே அப்பட்டமாக தெரிகிறது .Ranil’s arrest drama is over

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்கா

இலங்கையின் பத்தாவது ஜனாதிபதியாக அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் அனுரா குமார திசநாயக்காவின் ஆட்சியில் ,லஞ்ச ஊழல்களை ஒழிக்க வந்ததாக கூறுகிறது.

அவிதம் கூறியே முன்னாள் ஜனாதிபதி ரணில் ரனில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டார்.

ரணில் விக்கிரமசிங்கா கைது

ரணில் விக்கிரமசிங்கா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு 72 மணித்தியாலத்தில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மிகப்பெரும் லஞ்ச ஊழல் குற்றச்செயலை புரிந்தவர் எவ்வாறு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார் என்கின்ற கேள்வி மட்டும் எழுப்பப்பட்டுள்ளது.

ஆகவே இது ஓட்டு அரசியலாக மாற்றி மக்களை தமது ஆதரவாளர்களை குஷிப்படுத்துகிற நடவடிக்கையின், அரசியல் கபட நாடகமாக காணப்படுகிறது.

ஆக மொத்தம் அனுரா அரசு மீளவும் இலங்கை வாழ் மக்களை ஏமாற்றுகிற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

முன்னாள் அரசியல்வாதிகளுடன் கூட்டிணைந்து நாடகமாடி வருகிறது என்பதை, இந்த கைது நடவடிக்கையும் ,ரணில் விக்கிரமசிங்காவின் விடுதலை நடவடிக்கையும் காண்பிக்கிறது .

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு
Posted in இலங்கை செய்திகள்

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு

குறட்டை விடும் இலங்கையின் சுகாதாரப்பிரிவு செயல்பாடுகள் மக்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.உணவகங்களில் சுகாதார சீர்கேடுகள் அதிகம் காணப்படுகின்றன .Sri Lanka’s health department snoring

உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை

இலங்கையின் கடைகளில் உணவகங்களில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதும் ,

உணவு முறைகள் உரிய முறையில் சுகாதார பொறி முறைகளை பின்பற்றி செய்யாத நிலையும் காணப்படுகிறது.

வெளிநாட்டிலிருந்து செல்கின்ற உல்லாச பயணிகள் .யூ டூப் காணொளி காணொளி பிடித்து இலங்கையின் மானத்தை வாங்கி விற்று விடுகிறார்கள் .

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்கு

ஆனால் இது தொடர்பாக கவனம் செலுத்துவது தொடர்பாக இலங்கையினுடைய சுகாதாரப்பிரிவு ,பிரதேச சபைகள் ,

உள்ளூராட்சி சபை மன்றங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பன அலட்சியப் போக்குகள் செயப்படுவதை காணப்படுகிறது.

தமது சுய நலங்களுக்காகவே அரசியல்வாதிகள் வாழ்கிறவர்கள் ,மக்களில் எவ்வாறு அக்கறை காண்பார்கள் என்பதை இது காண்பிக்கிறது .

உணவுகளுக்குள் பிளேட் ,பிளாஸ்டர் .மற்றும் ஊசிகள் ,பல்லி ,பூச்சிகள் ,என்பனவும் சமீப காலங்களாக கண்டெடுக்கப்படுகிற செய்திகள் வெளிவந்திருந்தன.

வீதியோர கடைகள் மற்றும் பிரபல உணவகங்கள் உள்ளிட்டவைகளும் ,சுகாதார முறைமையற்று காணப்படுகிறது .

இதற்கு பிரதேச சபை ஏன் உரிய முறை நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இவற்றை ஒழுங்கு படுத்த வேண்டுமாக இருந்தால் ,அரசியல்வாதிகளையே மக்கள் கேள்விகளால் துளைத்து எடுக்க வேண்டும் என்பதே ,வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பேசப்பட்ட விடயமாக காணப்படுகிறது .

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம்

பொத்துவில் பேருந்துவிபத்து 57பேர் காயம் அடைந்துள்ளனர் ,மேலும் ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.57 injured in bus accident in Pottuvil

காயம் அடைந்தவர்கள் யாவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .

விபத்தில் சிக்கிய பேருந்து

விபத்தில் சிக்கிய பேருந்து பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இந்தப் பேருந்து விபத்து எப்படி ஏற்பட்டது என்பது தொடர்பில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள்.

சாரதியின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கு காரணமா இருக்கலாம் என நம்பப்படுகிறது.

பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலி

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்து வரும் இந்த பேருந்து விபத்துக்களினால் பல நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

இந்தப் பேருந்து விபத்துக்களை தடுக்க மறுத்து இலங்கை காவல்துறைகள் குறட்டை விடுவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த வீதி விபத்துக்கள் என்பன திட்டமிடப்பட்ட ஒரு தமிழின அழிப்பு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ்

யாழ்ப்பாணம் கொழும்பு குளிரூட்டப்பட்ட சொகுசு பஸ் ,யாழ்ப்பாணம், கொழும்பு பொது போக்குவரத்து சேவைக்காக குளிரூட்டப்பட்ட இரு சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த பட்டுள்ளது .Jaffna Colombo Air-conditioned Luxury Bus

யாழ், கொழும்பு போக்குவரத்து


யாழ், கொழும்பு போக்குவரத்தில் இதுவரைகாலமும் தனியார் தரப்பினரே இவ்வாறான பஸ் சேவையை வழங்கி வந்த

நிலையில், இனி அரச தரப்பாலும் சிறப்பு சேவையை வழங்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்த ஆடம்பர பேரூந்துகள் இலங்கை போக்குவரத்து யாழ் டிப்போவிடம் நேற்று கையளிக்கப்பட்டன.

பொதுநலவாய மாநாடு


இலங்கையில் நடந்த பொதுநலவாய மாநாட்டுக்காக கொண்டுவரப்பட்ட சொகுசு பஸ்கள், சில நாட்கள் பாவனையின் பின்னர் அப்படியே கைவிடப்பட்டன.


குறித்த பஸ்கள் திருத்தப்பட்டு – நவீனமயப்படுத்தப்பட்டு எமது ஆட்சியில் மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் ஓர் அங்கமாகவே இரு பஸ்கள் யாழ். டிப்போவுக்கு வழங்கப்பட்டுள்ளது.


எதிர்காலத்தில் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சிக்கும் பஸ்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார் .

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன்

மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா இராமநாதன் ,மக்களினால் தூக்கி வீசப்பட்ட அர்ச்சனா இராமநாதன் மக்கள் ஆதரவின்றி தற்பொழுது தவித்து வருகிற அவருக்கு உயிர் கொடுக்க முகவர்கள் முயற்சி .Arjuna Ramanathan, who was abandoned by the people

பல சமூக ஊடகங்களை வலிந்து , சீண்டி ,அவதூறுகளை பரப்பி ,அதன் ஊடாக பேசுபொருளாக தன்னை ஆக்கி வந்த ,அர்ச்சனா ராமநாதன்,

வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா

இன்று வீணாப்போன அரசியல் வாதியாக அருச்சுனா காணப்படுகிறார்.

சிங்கள கூலிகளுக்கு விலை போனவராகவும் சிங்கள பௌத்த பீடாதிபத்தின் வழிகாட்டில் செயல்படுகிற ஒருவராகவும்,

இவர் காணப்படுவதாக மக்கள் தமது கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும் கொச்சை படுத்திய அர்ச்சுனா

தமிழீழ விடுதலைப் புலிகளையும் மக்களையும், உதவி புரிந்தவர்களையும் ஆதரித்த ஊடகங்களை ,மிக இழிவாக பேசி வெறுப்பை சம்பாதித்து,

ஒட்டுக் குழுவில் ஒருவராக இவர் காணப்படுவதாக மக்கள் கருத்துக்களை வைத்து வருகின்றனர் .

அவ்விதமான செயற்பாட்டில் உள்ள அர்ச்சுனா ராமநாதன், மக்கள் ஆதரவற்று நிக்கிற இந்த நிலையில் ,அவருக்கு மீளவும் உயிர் கொடுக்கும் நடவடிக்கையில் அவரது முகவர்கள் இப்பொழுது ஈடுபட்டுள்ளார்கள்.

மக்கள் முன் முகங்களை காட்ட மறுத்து திரை மறைவில் இருந்து அனுராவின் சித்து விளையாட்டுக்காக இயங்கி வருகிற இவர்கள், இப்பொழுது மீளவும்

செத்துப்போன அர்ஜுனா இராமநாதனின் அரசியல் வாழ்வுக்கு உயிர் கொடுக்க முனைவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி இருக்கிற.து

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்
Posted in இலங்கை செய்திகள்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல்

வெடித்துக் கிளம்பினார் மஹிந்தமகன் நாமல் ,வெடித்து கிளம்பி இருக்கிறார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மகன் நாமல் ராஜபக்ஸ்சா .Namal Rajapaksa, son of former President Mahinda Rajapaksa, has exploded.

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்கா

இலங்கையில் ஆளும் அனுர குமர திச நாயக்காவின் ஆட்சி அதிகாரம், போர் வீரர்களை வேட்டையாடுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் நாம ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டையும் மக்களையும் நல்வழிப்படுத்த போராடிய போர் வீரர்களை .இக்கால ஆளும் அனுர அரசு வேட்டையாடுவதாக வேட்டை மன்னன் நாமல் ராஜபக்ஷ அடித்து விட்டுள்ளார்.

திடீரென வெடித்துக் கிளம்பிய நாமல் ராஜபக்சாவின் இந்த கருத்து தேர்தலை நோக்கி அலை வீசுவதை அவதானிக்க முடிகிறது.

தேர்தல் வந்தால் வீதி இறங்கும் இவ்வாறு வெடித்துக் கிளம்பும் அரசியல் வாதிகள் இவ்வாறு பிரச்சாரங்களில் மேற்கொள்வது இயல்புதான் .

தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம்

ஆக மக்களினால் விரட்டியடிக்கப்பட்டு தேர்தலில் தோற்கடிக்க பட்டு காணமல் போன மஹிந்த ராஜபக்ச குடும்பம் மீளவும் அரியணை ஏற முடியாத நிலையில் தவிக்கிறது .

அவ்வாறு இருந்து தெரு நாய் குலைப்பது போல ,நாமல் குலைப்பதாக எதிர்பாளர்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

மக்களினால் விரட்டியடிக்கப்பட்ட நாமல் மீளவும்வீதியிறங்கி , நம்மால் ராஜபக்ச இவ்விதம் பேசுவது சிரிப்பலைகளை ஏற்படுத்தி உள்ளதாக மக்கள் கருதுகிறார்கள்.

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு

களுத்துறை கடலில் மனிதசடலம் மீட்பு ,களுத்துறை கடல் கரையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மனித சடலத்தை மீட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும்

கடற்கரையில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தந்தையும் மகளும் குறித்த சடலத்தை கண்ணுற்று அவசர காவல்துறை இலக்கத்திற்கு

தெரியப்படுத்தியதை அடுத்து ,சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மனித சடலத்தை மீட்டுனர்.

இறந்தவர் ஏறத்தாழ 60 வயதுக்கு உள்ளிட்ட நபராக இருக்க கூடும் என கருதப்படுகிறது.

இவ்விதம் இறந்தவர் கருப்பு நிற காய்ச்சட்டை ,பெல்ட் ,மற்றும் வெள்ளை டீசேர்ட் என்பன அணிந்திருந்ததாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

குற்ற பிரிவின் விசாரணைகளை ஆரம்பம்

இந்த மரண சம்பவம் தொடர்பாக தற்போது குற்ற பிரிவினர் தமது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கையில் நாள்தோறும் நீர்ஏரிகள் , பற்றை காடுகள், பாழடைந்த வீடுகள், மரங்கள் ஆறுகள், என்பனவற்றில் இவ்வாறு மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருவது ,தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இது படுகொலையா, தற்கொலையா, அல்லது விபத்து மரணமா என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

கடல் கரையில் மீட்க பட்ட மனித சடலத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் களுத்துறை காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி

இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலி ,இலங்கையில் வீதி விபத்தில் 200 பேர் பலியாகி வருவதாக புதிய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்கள்

நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகிற நாள்தோறும் இடம்பெறும் விபத்துக்களில், நாளொன்றுக்கு மூன்றில் இருந்து ஏழு பேர் பலியாகி வருவதாக அந்த குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதன் அடிப்படையில் மாதந்தோறும் 200-க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள். வீதி விபத்துக்கள் சிக்கி பலியாகி வருகின்ற அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி இருக்கிறது.

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவது

சாரதிகள் பொறுப்பின்றி வாகனங்களை செலுத்துவதும் பாதசாரிகளும் அவ்விதம் பயணிப்பதுமே, இந்த விபத்துக்கள் இடம்பெறுவதற்கு காரணம் என சமூக நல ஆர்வகள் தமது வருத்தத்தை தெரிவித்துள்ளார்கள்.

ஆளும் அரசும் காவல்துறையினர் இதில் கவனம் செலுத்தாத நிலைமையும் ,லஞ்ச ஒழியர்கள் சிக்கித் தவிப்பதால் இந்த விபத்துக்கள் அதிகம் ஏற்படுவதை தடுக்க முடியாத திணறுவதாக தெரிய வருகிறது.

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது

பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் கைது

பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது பெக்கோசமனின் மனைவி குழந்தையுடன் கைது

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை,

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்

அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விமான நிலையப் பிரிவு அவர்களைக் காவலில் எடுத்து, வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர், மேலதிக

கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு

விசாரணைகளுக்காக கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்கள தலைமையகத்திற்கு அவர்களை ஒப்படைத்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்..

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிலிருந்து UL-365 விமானத்தில் நேற்று மாலை 5:50 மணியளவில் அவர்கள் இலங்கை வந்தடைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

கெஹல்பத்தர பத்மே மற்றும் அவரது குற்றக் கும்பல் உறுப்பினர்கள் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தப் பெண்ணும் குழந்தையும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும், பெண் மீது கடுமையான குற்றவியல் குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படாததால், இந்தோனேசிய அதிகாரிகள் அவரை இலங்கைக்கு நாடு கடத்தியதாகக் கூறப்படுகிறது.

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்
Posted in இலங்கை செய்திகள்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

போக்குவரத்து சட்டங்களை மீறிய மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல் விதிகளை மீறியவர்களின் மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றல்

பலரது மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்

பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார் சைக்கிள்கள்

கைப்பற்றப்பட்டுள்ளதாக கல்முனை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்முனை கடற்கரை பள்ளிவாசல் உட்பட புறநகர் பகுதிகளில் நேற்று (29) மாலை விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை

இதன்போது மோட்டார் சைக்கிள் ஆவணம் காப்புறுதி எதுவும் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியமை சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியமை, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள்

பயணித்தமை, அதிவேகமாக செலுத்தியமை, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள், தலைக்கவசம் இன்றியும் சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட

முக்கிய ஆவணங்கள் இன்றி பயணித்தமை உள்ளிட்ட பொது போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட

மோட்டார் சைக்கிள்கள் உட்பட அதனை செலுத்தியவர்கள் சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இச்சோதனை நடவடிக்கையானது கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர ஆலோசனையில் அம்பாறை

மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வெதமுல்ல வழிகாட்டலில் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.பி.எச். கலனசிறி

நெறிப்படுத்தலில் அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ்

பரிசோதகருமான பி.ரி நஸீர் உள்ளிட்ட பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைய பொது போக்குவரத்து சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரது மோட்டார்

சைக்கிள்கள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சட்ட நடவடிக்கைக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டன.

மேலும் நேற்றைய தினம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் சுமார் 05 வீதி விபத்துக்கள் இடம்பெற்றிருந்ததுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் விபத்துக்களை குறைப்பதற்கு நடைபாதையை ஆக்கிரமித்துள்ள வர்த்தகர்கள் உடனடியாக அதனை அகற்றுமாறும், அதற்கான விசேட வேலைத்திட்டம்

முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கல்முனை தலைமையக மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான பி.ரி.நஸீர் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி

செம்மணியில் கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதி செம்மணி மனித புதைகுழியில் ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன்,

அணைக்கப்பட்டவாறு , ஒப்பீட்டளவில் சிறிய எலும்பு கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதனை சுற்றப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முற்றாக அகழ்ந்து எடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியின்

எலும்பு கூடுகள்

அறிக்கையின் பிரகாரமே குறித்த எலும்பு கூடுகள் தொடர்பில் உறுதியாக கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் கடந்த திங்கட்கிழமை முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சிறியவர்கள்

மற்றும் சிசுக்களின் எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

அத்துடன் ஒன்றுடன் ஒன்று அருகருகே புதைக்கப்பட்ட கால்கள் மடிந்த நிலையிலும், எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவை அசாதாரணமாகவே புதைக்கப்பட்டுள்ளன என்பது கண்களுக்கு

மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதி

புலனாகின்ற போதிலும், மீட்கப்படும் எலும்பு கூட்டு தொகுதிகளை சட்ட வைத்திய அதிகாரி ஆய்வுகளுக்கு உட்படுத்தி சட்ட வைத்திய அதிகாரியின்

அறிக்கையின் பிரகாரமே மேலதிக தகவல்களை கூற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு பணிகள் நேற்றைய தினம் வரையில் கட்டம் கட்டமாக 46 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 174 எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள

அதேவேளை இதுவரையில் 187 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு 39வயது சந்தேகநபர் கைது மஹரகம, நாவின்ன சந்திக்கு அருகிலுள்ள ஹைலெவல் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச்

சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக, 39 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள்

மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகள், கிடைத்த தகவலின் அடிப்படையில் கொட்டாவை பகுதியில்

மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, இந்தச் சந்தேக நபரை கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2025 ஓகஸ்ட் 6 ஆம் திகதி நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என பொலிஸார் உறுதி செய்தனர்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி

விசாரணையின்போது, சந்தேக நபரின் வீட்டில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றும், போர் 12 ரக தோட்டாக்கள் மூன்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கிரிவத்துடுவையைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

யாழில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்

யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில்

ஆக்கப்பட்டவர்களின் உறவினர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கிட்டுப்பூங்கா முன்றலில் இருந்து செம்மணி நோக்கி பேரணி ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கிறோம், தமிழின அழிப்புக்கும் வலிந்து காணாமல் ஆக்கப்படுதலுக்கும், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதப்

புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணை

புதைகுழிகள் குறித்தும் சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோரி வட கிழக்கில் இன்றைய தினம் ஆர்ப்பாட்ட பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள ஒட்டுமொத்த தமிழ்க் கட்சிகளும் இப்போராட்டத்திற்கு தமது முழுமையான ஆதரவை வழங்கி கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ராஜித விளக்கமறியிலில்
Posted in இலங்கை செய்திகள்

ராஜித விளக்கமறியிலில்

ராஜித விளக்கமறியிலில்

ராஜித விளக்கமறியிலில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நீதிபதியின் உத்தரவின்படி

நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர்

பொலிஸ் அதிகாரி காயம் தாக்கிய நபர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ​​பொலிஸ் அதிகாரி ஒருவரை

காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம்

கடந்த 26 ஆம் திகதி பணியில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை போத்தலால் தாக்கி காயம் ஏற்படுத்தி பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு

இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் சந்தேகநபர் களுத்துறையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நேற்று (27) கைது செய்யப்பட்டு கொம்பனித் தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் நாகொடை

கைது செய்யப்பட்ட நபர் நாகொடை, களுத்துறை பகுதியைச் சேர்ந்த 52 வயதான முன்னாள் நகர சபை உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் இன்று (28) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொம்பனித் தெரு பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக்குழு தலைவர்கள்

இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் ,இந்தோனேசியாவில் சிக்கிய பாதாள உலகக் குழு தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின்

தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள்,

இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால்

இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் விசேட குழுவால் கூட்டாக முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.

பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த, பாணந்துரை நிலங்க, பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி ஹிரு ஆகியோர் இதன்போது கைது செய்யப்பட்டனர்.

அவர்களுடன் இருந்த பெக்கோ சமனின் மனைவியும் கைது செய்யப்பட்டதாகவும், மூன்று வயது குழந்தை பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தின் கூண்டில் பாதாள உலகக் குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவா

என்ற சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் கெஹல்பத்தர பத்மே மீது குற்றம் சாட்டப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்

விசாரணையில் குற்ற கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் அவிஷ்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் கணேமுல்ல சஞ்சீவாவை கொலை செய்ததாக துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கூறியிருந்தார்.

மேலும், கெஹெல்பத்தர பத்மே உள்ளிட் இந்தக் குழு மீது பல்வேறு குற்றச் செயல்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இதுபோன்ற பின்னணியில், கெஹெல்பத்தர பத்மேவுக்கு நெருக்கமான பாதாள உலகக் குழு கும்பல்களைச் சேர்ந்த பலர் கடந்த காலங்களில் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

அதன்படி, ஓகஸ்ட் மாதம் 03 ஆம் திகதி, கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என்று கூறப்படும் ‘பஸ் தேவா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

போதைப்பொருள் வலையமைப்பு சிக்கியது

அவரிடம் முன்னெடுத்த விசாரணைக்கு அமைய, ​​கெஹெல்பத்தர பத்மேவின் போதைப்பொருள் வலையமைப்பை நாட்டில் நடத்தி வரும் வலஸ் கட்டா என்ற

திலின சம்பத்தும் ஓகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளான பெக்கோ சமன் மற்றும் தெம்பிலி லஹிரு, கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கஜ்ஜா என்ற அனுர

விதானகமகே மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததற்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்
Posted in இலங்கை செய்திகள்

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்

பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல் தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன

உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு

எடுப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி

வைக்க இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரிய

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை

போதிலும், உத்தரவைப் பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதியான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை மாத்திரம் விடுப்பதாக தெரிவித்துள்ளது.

சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள

அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் அந்த நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.

பின்னர் மனுவை செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டது.

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை

விமான விபத்து விமானப்படை எச்சரிக்கை இந்த நாட்களில் பிரபலமாக இருக்கும் பட்டம் விடும் செயற்பாட்டால் ஏற்படக்கூடிய விமான விபத்துகள் குறித்து விமானப்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை விரும்பும் பட்டம் விடும் இக்காலப்பகுதியில், ஓடுபாதைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் பட்டம்

ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை

விடுவது மிகவும் ஆபத்தான செயலாகும் என விமானப்படை அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

உலகளவில் விமான விபத்துகளுக்கு ஓடுபாதைகளுக்கு அருகில் பட்டம் பறப்பது முக்கிய காரணங்களில் ஒன்றாகும் என்பதையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடை

விமானங்கள் பறப்பதற்கு நேரடித் தடையாக பட்டம் பறப்பது இருப்பதாகவும், கட்டுநாயக்க, இரத்மலானை, ஹிங்குராக்கொட, சீனகுடா, பலாலி, கட்டுகுருந்த, கொக்கல, வவுனியா, வீரவில மற்றும் மத்தள போன்ற பகுதிகளில்

ஓடுபாதைகளுக்கு அருகில் அடிக்கடி பட்டங்கள் பறப்பது மிகவும் ஆபத்தான பிரச்சினை என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்

இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர் ,இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பணியாளர்கள் வேலைநிறுத்தம்.

இலங்கை போக்குவரத்து சபை

நான்கு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பல தொழிற்சங்கங்கள் நேற்று (27) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

தனியார் பேருந்துகளுடன் கூட்டு நேர அட்டவணையில் பேருந்துகளை இயக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வேறு சில கோரிக்கைகளை

முன்வைத்தும் இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் ஐக்கிய சேவை சங்கத்தின் தலைவர் நிரோஷன் சம்பத் பிரேமரத்ன தெரிவித்தார்.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்

அறிமுகப்படுத்தப்பட்ட கூட்டு நேர அட்டவணையில் பல சிக்கல்கள் இருப்பதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்னவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களின் அடிப்படையிலேயே கூட்டு நேர அட்டவணை தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பி.ஏ. சந்திரபால தெரிவித்தார்.

தொழிற்சங்கங்கள் முன்வைத்த பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதால், வேலைநிறுத்தம் நியாயமற்றது என்று போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குமார குணசேன குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை போக்குவரத்து சபையுடன் இணைந்த தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை செயல்படுத்துவதாக அறிவித்த போதிலும், நேற்று

நள்ளிரவு முதல் கொழும்பு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் இயங்குவதாக “அத தெரண” செய்தியாளர்கள் தெரிவித்தனர்.